Home Family56. அவ உன்ன மிரட்டுறாளா?

56. அவ உன்ன மிரட்டுறாளா?

by Siragugal Novels
17 views

மறுநாள் காலையில் சூரியக் கதிர்கள் ஜன்னல் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்தன, ஆனால் அதிகாலையில் மட்டுமே தூங்கிய தேனிலவு தம்பதிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஆடையில்லாத அவர்கள் படுக்கையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். கேஷவ் தலையை அவள் மார்பில் புதைத்து, அவன் கைகள் அவளை இறுக்கமாக அணைத்திருந்தன.

மதியம் கண் விழித்த கேஷவ், களைப்பில் மைரா தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். முந்தைய இரவு அவர்கள் செய்த அறையின் அலங்கோலத்தை சுத்தம் செய்துவிட்டு தயாராக பாத்ரூமுக்குள் நுழைந்து மைராவுக்கும் குளியல் தயார் செய்தான். எல்லாவற்றையும் முடித்துவிட்டு உணவை ஆர்டர் செய்தவுடன் மைராவை எழுப்பினான், அவள் ஹெட்போர்டில் சாய்ந்து உட்கார்ந்து தன் மார்பை மறைக்க போர்வைகளை இழுத்தாள்.

“ நீங்க பத்திரிகையில வர மாடல் மாதிரி இருக்கீங்க ஆனா நான் ஒரு அலங்கோலமா இருக்கேன். இது நியாயம் இல்ல கெட்சப் “ என்று மைரா சிணுங்க, “ நீ நான் உருவாக்குன அழகான அலங்கோலம் அம்மு, என் வாழ்நாள் முழுக்க இப்படி செய்ய நான் கொஞ்சம் கூட சோர்வடைய மாட்டேன். சீக்கிரம் ரெடியாகு, நாம சாப்பிடலாம் “ என்று சொன்னான் கேஷவ்.

அவன் போர்வையை இழுக்க, மைரா அவன் செயலுக்கு உதட்டைப் பிதுக்கினாள். அவள் உதட்டில் முத்தமிட்டு அவனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றான்.

“ என்ன பாத்ரூமுக்கு தூக்கிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி ஆனா இதுக்கு அப்புறம் உங்க சேவை எனக்கு வேணாம். இப்போ வெளிய போங்க, நானே ரெடியாகுறேன் “ என்று மைரா சொல்ல, “ நான் உனக்கு உதவி செஞ்சு, உன்ன நல்லா பார்த்துக்குறேன் அம்மு” என்று கூறினான் கேஷவ். ஆனால் மைரா அவனை வெளியே தள்ளிக் கதவைப் பூட்டினாள். குளித்து முடித்துவிட்டு உடம்பில் துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்ததும் கேஷவ் அவளை நெருங்கி துண்டை கழட்டினான்.

“ கெட்சப், நான் இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன் அதனால நீங்க உங்க கைய வெச்சுட்டு சும்மா இருங்க. ஒழுங்கா துண்ட கொடுங்க “ என்று மைரா கேட்க, “ நான் எதுவும் செய்ய மாட்டேன் அம்மு. நீ சோர்வா இருப்ப அதனால நானே உன்ன டிரஸ் பண்றேன் “ என்று கேஷவ் கூறினான்.

அவர்கள் எல்லா செயல்களையும் செய்த பிறகும் மைராவுக்கு வெட்கமாக இருந்தது. அவள் அவனை சட்டை மற்றும் ஷார்ட்ஸை அணிவிக்க அனுமதித்தாள்.

மைராவை வேனிட்டி ஸ்டூலில் உட்கார வைத்து அவள் கூந்தலைத் துடைத்தான். மீதமுள்ள நாள் முழுவதும் அவர்கள் படம் பார்த்து அறையில் உணவு சாப்பிட்டனர். படம் பாதி வரை அவள் தூங்குவதைப் பார்த்தவன், அவளை போர்வையால் போர்த்திவிட்டு  மொபைலை எடுத்துக்கொண்டு பால்கனிக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான். அவன் வருணின் எண்ணை டயல் செய்ததும் , மூன்றாவது ரிங்கில் அவன் அழைப்புக்கு பதில் சொன்னான்.

“ என்னையும் நீங்க கொடுத்த வேலையும் பத்தி மறந்துட்டீங்கனு நெனச்சேன் “ என்று வருண் சொன்னதும், “ வாயை மூடு, இது அவளுக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கனும்னு நான் விரும்புறேன், அவளை என் பக்கத்துல வெச்சுகிட்டு நான் எப்படி உனக்கு போன் பண்ணி பேசுவேன் ? இப்ப சொல்லு, வேலை முடிஞ்சுதா? “ என்று கேட்டான் கேஷவ்.

“ ஏறக்குறைய அவங்க பிறந்த நாளுக்கு முன்னாடியே எல்லாத்தையும் முடிச்சுடுவேன். இப்போ சொல்லுங்க நீங்க எப்போ அவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறீங்க ? “ என்று வருண் கேட்க, “ அவ தயாரா இருக்கா, அவளோட பிறந்த நாளுக்கு இரண்டு நாள் கழிச்சு அவ கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறேன் “ என்று பதில் சொன்னான் கேஷவ்.

“ ஏன் பிறந்த நாள் அன்னைக்கு சொல்லா கூடாதா ? அது இன்னும் ஸ்பெஷலா இருக்கும் “ என்று வருண் யோசனை சொன்னான்.

“ அவ ஒரே நேரத்துல சந்தோஷமாவும், வருத்தமாவும் இருப்பா. அவ பிறந்த நாள் அன்னைக்கு அவ அழறத நான் விரும்பல, அதனால அவளோட பிறந்த நாளை கொண்டாடி முடிச்சிட்டு ஒரு ரெண்டு நாள் கழிச்சு சொல்றேன் “ என்றான் கேஷவ்.

“ இந்த தடவை கண்டிப்பா சொல்லுவீங்களா ? “ என்று வரும் மீண்டும் கேட்க, “ நூறு சதவிகிதம் “ என்றான் கேஷவ்.

நான்கு நாட்களுக்குப் பிறகு கேஷவ் மற்றும் மைரா வீடு திரும்பியபோது பெற்றோர் அவர்களை வரவேற்றனர். தம்பதிகள் சோபாவில் அமர்ந்து அவர்களுக்காக வாங்கிய அனைத்து பரிசுகளையும் கொடுத்தனர். கேஷவ், க்ரிஷை தேடினான், ஆனால் வீட்டில் எங்கும் அவனைக் காணவில்லை என்றதும், “ க்ரிஷ் எங்க ? “ என்று கேட்டான்.

“ அவன் மூணு நாளுக்கு முன்னாடி மும்பைக்கு கிளம்பி போயிட்டான். இந்த வார இறுதியில திரும்பி வருவான் “ என்று அர்ச்சனா கூறினார்.

கேஷவ் அவர்களின் சாமான்களை அறைக்கு இழுத்துச் செல்ல, மைரா அவர்கள் சென்ற இடங்களைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தாள், ஆனால் அர்ச்சனாவும் வசுந்த்ராவும் அவள் முகத்தில் பிரகாசத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

“ உன் முகம் ரொம்ப வித்தியாசமா இருக்கு, உன் முகத்துல இந்த பளபளப்பு பார்க்க எங்களுக்கு சந்தோஷமா இருக்கு “ என்று வசுந்தரா சொன்னதும், “ நான் எப்பவும் போல தான் இருக்கேன், ஒருவேள அங்க இருந்த காலநிலை என் முகத்துல பிரகாசத்த கொடுத்திருக்கலாம் “ என்றாள் மைரா.

வசுந்தராவும், அர்ச்சனாவும் அவளை கிண்டல் செய்யவில்லை மற்றும் அவள் பளபளப்பின் பின்னணியில் சாத்தியமான காரணத்தை அறிந்து அந்த தலைப்பை பற்றி பேசாமல் விட்டுவிட்டனர். மைரா தன் அறைக்குத் திரும்பி சுவரில் மாட்டப்படிருந்த பெரிய தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.

“ இந்த மனுஷன நான் என்ன செய்வேன் ? இப்ப டிவி வாங்கிட்டு வந்திருக்காரா ? கடவுளே “ என்று தனக்குதானே சொன்னவள் பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டாள். கண்ணாடி முன் நின்று கன்னங்களைத் தொட்டாள்.

“ நான் உண்மையிலேயே பிரகாசமா இருக்கேனா ? இதுக்கு காரணம்  எங்களுக்குள்ள எல்லாம் நடந்ததா ? “ என்று நினைத்தவள் உள்ளங்கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அறையில் அங்குமிங்கும் சுழன்று பாட ஆரம்பித்தாள்.

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போலேன் பெண்மை திரண்டு நிற்கிறதே.. நெடுங்காலம் சிப்பிக்குள்ளே
உருண்டு நிற்க்கும் முத்து போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னை
திறந்து கொள்ள சொல்கிறதா…
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே…

கேஷவ் வெளியே வந்து அவள் அங்குமிங்கும் சுழன்று நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அவள் இடுப்பை பிடித்து  அவள் கழுத்தில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.

“ தனியா இப்படி கச்சேரி செய்றது ரொம்ப தப்பு மிசஸ் கேஷவ், எனக்காக வெயிட் பண்ணி இருக்கணும் “ என்று அவன் கூற, மைரா அவன் பிடியிலிருந்து விடுபட்டு அவனை பின்னால் இருந்து அனைத்து இருவரின் உடலை லேசாக அசைத்தாள்.

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா… ஆ ஆ

“ லயாவ நம்ம உலகத்துக்கு கொண்டு வர நாம எல்லா வேலையும் பண்ணி இருக்கோம் ஆனா நீ மறுபடியும் குழந்தையா இருக்க விரும்புரியா ? என் மேல பரிதாபப்படு அம்மு “ என்று கேஷவ் புன்னைகைத்தான்.

“ என்ன கிண்டல் செய்றத நிறுத்துங்க. நீங்க டிவி வாங்க இருக்க  வேண்டியதில்ல கெட்சப், தயவு செஞ்சு என்ன இவ்ளோ கெடுக்காதீங்க.” என்று மைரா கூறியதும், “ உன்ன இல்லாம நான் வேற யாரை இப்படி செல்லம் கொடுத்து கெடுப்பேன்? “ என்று கேட்டான் கேஷவ்.

மைரா புன்னகையுடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டு புத்துணர்ச்சி பெற பாத்ரூமுக்கு விரைந்தாள்.

அடுத்த நாள், நைனா ஒரு கஃபேக்கு அவளுடைய பெற்றோர் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையைச் சந்திக்க சென்றாள். அவள் நீண்ட நேரம் காத்திருந்தும், அவனிடமிருந்து எந்த அழைப்பும், செய்தியும் இல்லாத போது அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தாள். அவள் நுழைவாயிலை அடைந்து தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய இருந்தாள், ஆனால் க்ரிஷ் ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டதும் நிறுத்தினாள். கொஞ்ச நேரம் அவர்கள் சீரியஸாக விவாதிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவள், பரிசுப் பொருட்கள் கொடுக்க அழைத்திருந்ததால் மைராவைச் சந்திக்கக் கிளம்பினாள்.

அவர்கள் வசுந்தராவின் வீட்டில், அவள் அறையில் மைரா ஸ்விஸில் வாங்கிய சாக்லேட்டுகளை சாப்பிட்டு கொண்டிருந்தனர். நைனா சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டதும் மைரா அவள் சாப்பிடுவதை நிறுத்தினாள்.

“ நைனா நீ என்ன யோசிச்சிட்டு இருக்க ? அந்த மாப்பிள வராதத பத்தி யோசிச்சு கவலைப்படுறியா ? “ என்று மைரா கேட்க, “ இல்ல மைரா, நான் ஏன் அவன பத்தி நினைக்க போறேன் ? என் அம்மா அவங்க அண்ணன் பையன கல்யாணம் செய்யணும்னு என்ன வற்புறுத்தப் போறாங்கனு நான் கவலப்படுறேன் “ என்று சொன்ன நைனா பின்னர், “ க்ரிஷ் எங்க ? “ என்று மைராவிடம் கேட்டாள்.

“ மும்பையில இருக்கான், ஞாயிற்றுக்கிழமை வருவான் போல “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ அவன் ஏன் மும்பையில இருக்குறதா எல்லார்கிட்டயும் பொய் சொல்லனும், அந்த பொண்ணு யாரு ? அவன பத்தி மைராகிட்ட  சொல்லட்டுமா ? இல்ல வேணாம், அவ வாழ்க்கையில இப்போ தான் சந்தோஷமா இருக்கா. க்ரிஷ் சம்பந்தப்பட்ட எதையும் சொல்லி அவ வாழ்க்கைய நான் தொந்தரவு செய்ய கூடாது “ என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டாள்.

மைராவின் மொபைல் அறிவிப்புடன் பிங் செய்தது, அது மர்ம பாடகரிடமிருந்து வந்திருப்பதை பார்த்து உடனடியாக அதை பார்த்தாள்.

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

மர்ம பாடகரின் பாடலை கேட்டதும் மைரா அதிர்ச்சியானாள்.

“ நைனா, நேத்து கெட்சப்புக்காக நான் இதே பாட்டு பாடினேன். இது. இது எப்படி சாத்தியமா இருக்க முடியும்? “ என்று மைரா அதிர்ச்சியோடு கேட்க, “ ஒருவேளை அவர் உன்ன ரகசியமா follow பண்றாரா ? “ என்றாள் நைனா.

“ இது தற்செயலா இருக்கணும் இல்ல நான் இவரோட பாட்டுல அதிமகா மூழ்கி போறேன் நினைக்குறேன் “ என்று மைரா சொன்னதும், “ சரி, அத விடு, உன்னோட ஹனிமூன் பத்தி சொல்றியா ? “ என்று கேட்டாள் நைனா.

“ இல்ல “ என்று உடனே மைரா மறுக்க, “ ஓ, உன்னோட பளபளப்பு எனக்கு நிறைய கதை சொல்லுது “ என்று நைனா கிண்டல் செய்தாள்.

“ ஈஸ்வரர் இந்தப் பொண்ணு கிட்ட இருந்து என்ன காப்பாத்து “ என்று மைரா சிணுங்கினாள் அதற்கு நைனா உடனே, “ ஈஸ்வரா இல்ல மைரா, கேஷவா சொல்லு “  என்று சொன்ன நைனா, வெட்கத்தில் இருந்த மைராவை கிச்சுகிச்சு மூட்ட ஆரம்பித்தாள். அவர்கள் தொடர்ந்து அரட்டையடித்தனர், மைரா பாரிஸ் மற்றும் ஸ்விஸில் எடுத்த புகைப்படங்களைக் காட்டினாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மைராவும், கேஷவும் தங்கள் சிறிய தோட்டத்தில் இருந்த களைகளை அகற்றி ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். காரின் ஹாரன் சத்தம் கேட்டு தங்கள் வேலையை முடித்துக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஹாலின் நடுவில் க்ரிஷும் ரோஷினியும் கைகோர்த்தபடி நின்றிருந்தனர். தாடையைக் கடித்துக் கொண்டிருந்த கேஷவைப் பார்த்தாள் மைரா. அவள் பேசுவதற்காக அவன் கையை அழுத்தியதும், அவன் தலையை அசைத்தான்.

“ க்ரிஷ், என்ன நடக்குது இங்க? இவ ஏன் இப்போ திரும்பி வந்துருக்கா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ அண்ணா, நான் எங்க உறவுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புறேன். எல்லாம் சரியா இருந்தா மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்க பிளான் பண்றோம் “ என்று கூறினான் க்ரிஷ்.

“ நாங்க எங்க பிரச்சனைய பத்தி பேசினோம். நான் இப்போ என் வேலைய விட வீட்ல தங்கி எங்க வாழ்க்கையில கவனம் செலுத்த முடிவு பண்ணி இருக்கேன் “ என்று ரோஷினியும் சொன்னதும், அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், ஒருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. எந்நேரமும் தரையையே பார்த்துக் கொண்டிருந்த க்ரிஷின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கேஷவ்.

“ க்ரிஷ், என்கூட வா “ என்று சொல்லிவிட்டு, கேஷவ் மைராவை அர்ச்சனாவுடன் இருக்குமாறு சைகை செய்து விட்டு தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். ரோஷினி க்ரிஷின் கையை அழுத்தி மௌனமாக மிரட்ட, அவன் கேஷவை பின் தொடர்ந்து காரை நோக்கி சென்றான்.

கேஷவ் கடற்கரை சாலையில் காரை நிறுத்தியதும் இருவரும் கரையை நோக்கி நடந்தனர்.

“ நீ என்ன பண்ணிட்டு இருக்க க்ரிஷ் ? முதல்ல நீ அவள லவ் பண்றதா சொன்ன அப்புறம் அவளோட எந்த உறவும் வேணாம்னு சொன்ன. திரும்பவும் அவள கல்யாணம் பண்ணிட்டு உன்கூட மும்பைக்கு வர சொன்னதா கேள்விப்பட்டேன் அதுக்கு அப்புறம் மறுபடியும் ரெண்டு பேரும் பிரிஞ்சி போனீங்க. இன்னைக்கு மறுபடியும் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புறதா அவள கூட்டிட்டு வந்துருக்க. உன் வாழ்க்கையில என்ன நடக்குதுனு நீ வெளிப்படையா என்கிட்ட சொல்றியா ? “ என்று கேஷவ் குரலை உயர்த்தி கேட்டான்.

“ இது நான் மட்டும் சம்பந்தப்பட்டதா இருந்தா நான் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி இருப்பேன் ஆனா இப்போ என்னால ரிஸ்க் எடுக்க முடியாது “ என்று மனதில் நினைத்து க்ரிஷ் அமைதியாக இருந்தான்.

“ வாய திற க்ரிஷ். நான் உன்கிட்ட ரொம்ப பொறுமையா இருக்கேன் ஆனா அத இழக்குற நிலமையில இருக்கேன். எனக்கு உன் மேலையும், நம்ம குடும்பத்து மேலையும் நிறைய அக்கறை இருக்கு. என்கிட்ட வெளிப்படையா சொன்னா தான் என்னால எதையும் சரி செய்ய முடியும். அவ உன்ன மிரட்டுறாளா? “ என்று கேஷவ் இறுதியாக கேட்டான்.

“ இல்லை, எந்த பிரச்சனையும் இல்ல அண்ணா, அவ ஒரு வாய்ப்பு கேட்டா, நானும் ஒத்துக்கிட்டேன். எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தா மட்டும் தான் கல்யாணம் நடக்கும் “ என்று க்ரிஷ் பதில் சொன்னதும், “ நீ காருக்கு போ, நான் கொஞ்ச நேரத்துல வரேன் “ என்றான் கேஷவ்.

க்ரிஷ் தலையை ஆட்டிவிட்டு காரை நோக்கி நடந்தான். கேஷவ் தன் மொபைலை எடுத்து வருணை அழைத்தான்.

“ வேலை எந்த அளவுக்கு முடிஞ்சு இருக்குனு தெரிஞ்சிக்க கூப்பிட்டு இருக்கீங்கனு தெரியும். எல்லா வேலையும் நாளைக்கு முடிஞ்சிடும் “ என்று வருண் பதில் சொல்ல, “ நல்லது, ஆனா நான் வேற ஒரு வேலை விஷயமா உன்ன கூப்பிட்டேன். நான் உனக்கு ரெண்டு மொபைல் நம்பர் அனுப்புறேன். அந்த ரெண்டு நம்பரையும் முழுசா கண்காணிச்சு, எனக்கு எல்லா தகவலும் வேணும் “ என்றான் கேஷவ்.

வருண் சரி என்று சொன்னதும் கேஷவ் அழைப்பை துண்டித்து க்ரிஷ் மற்றும் ரோஷினியின் மொபைல் எண்களை வருணுக்கு அனுப்பினான்.

******************************************

முன்னோட்டம்:

“ நான் இன்னும் அத பத்தி யோசிக்கல, ஆனா உனக்கு நிச்சயம் ஒரு சர்ப்ரைஸா இருக்கும் என் ஆச பொண்டாட்டி. இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட முதல் பிறந்த நாள் அதனால நான் கொஞ்சம் ஸ்பெஷலா ஏதாவது செய்யணும் “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!