கேஷவும், மைராவும் அறையை விட்டு வெளிய வந்த போது க்ரிஷும், நைனாவும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை பார்க்காமல், தொந்தரவு செய்யாமல் வெளியே சென்று வீட்டில் போர்டிகோவில் அமர்ந்தனர். மைரா அவன் தோளில் சாய்ந்தபடி உணவு டெலிவரி வழங்கப்படுவதற்காக காத்திருந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு காலடிச் சத்தம் கேட்டது. க்ருஷும் நைனாவும் வாசலில் நிற்பதைக் கண்டார்கள்.
“ அப்புறம் என்ன ? “ என்று மைரா கேட்க, “ நாங்க பேசினோம் “ என்று நைனா தயங்கியபடி பதில் சொன்னாள்.
“ சரி, அப்புறம் ? “ என்று மைரா மீண்டும் கேட்டதும், “ மைரா தயவு செஞ்சு நான் பண்ணத எனக்கே திருப்பி கொடுக்காத. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன், எங்க உறவ சரி பண்ணி அதுல முன்னேற நாங்க எல்லாத்தையும் ஒன்னா செய்வோம், அவனுக்கு இப்போ உதவி தேவ, நான் அவனுக்காக இருப்பேன் “ என்று நைனா தெளிவாக சொன்னாள்.
“ ஸாரி, நான் உங்க எல்லாரையும் காயப்படுத்திட்டேன். நீங்க என்ன மன்னிக்க நினைக்குற வர எனக்கு தண்டன கொடுங்க ஆனா ப்ளீஸ் என்ன ஒதுக்கி வெச்சுடாதீங்க. நீங்க எல்லாரும் இல்லாம நான் ஒண்ணுமே இல்ல “ என்று க்ரிஷ் வருத்தத்தோடு சொன்னான்.
“ முதல்ல என் மேல தான் தப்பு, நானா எல்லாத்தையும் அனுமானிச்சு ஒரு முடிவு எடுத்துட்டேன். நான் சொன்னத வெச்சு தான் எல்லாரும் நடந்துகிட்டாங்க. என்ன சுத்தி என்ன நடக்குதுனு புரிஞ்சி நான் தெளிவா இருந்திருந்தா, எனக்கும் கெட்சப்புக்கும் எப்போவோ கல்யாணம் நடந்திருக்கும், நைனாவும் அவளோட உணர்வுகள மறைச்சு வெளிய சொல்ல முடியாம பாதிக்கப்பட்டிருக்க மாட்டா” என்று மைரா சொன்னதும் க்ரிஷ் குறுக்கிட்டான்.
“ இல்ல, இது என் தப்பு தான். நான் பக்குவமா நடந்திருக்கணும். அந்த சூனியக்காரிய நம்ம வாழ்க்கையில கொண்டு வந்துருக்க கூடாது. ஆனா அவ இதையெல்லாம் பிளான் பண்ணி பண்ணது எதுவும் எனக்கு தெரியாது, நான் அவளோட வலையில விழுந்துட்டேன் “ என்று க்ரிஷும் கூறினான்.
“ அது என் தப்பும் கூட தான், நான் தான் கொஞ்சம் யோசிச்சு எல்லாத்தையும் சரியா புரிஞ்சி நடந்திருக்கணும் ஆனா நானும் தான் மைரா சொன்னதை எல்லாம் கேட்டு அவளுக்கு சப்போர்ட் பண்ணேன். அதனால நம்ம எல்லார் மேலையும் தான் தப்பு இருக்கு “ என்று நைனா கூறினாள்.
அவர்கள் மூவரும் சொன்னதை கேட்ட கேஷவ், “ இல்ல, நீங்க மூணு பேரும் டீனேஜ் பசங்களா இருந்தீங்க, பெரிய மனுஷங்க மாதிரி பக்குவமா யோசிச்சு செய்ய உங்க கிட்ட எதிர்ப்பார்க்க முடியாது. 26 வயசுல கூட நிறைய பேருக்கு அவங்க மனசுல தோணுற உணர்வுக்கு பெயர் சொல்ல தெரியாம இருக்காங்க, அப்படி இருக்கும் போது நீங்க அப்போ சின்ன பசங்க தான். நீங்க மூணு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணி யாரையும் காயப்படுத்தாம இருக்க முயற்சி பண்ணி இருக்கீங்க ஆனா எல்லாம் தற்செயலா நடந்துடுச்சு அதனால எல்லாத்தையும் மறந்துட்டு உங்க வாழ்க்கையில கவனம் செலுத்துங்க “ என்று கூறினான்.
“ நான் உனக்காக ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நைனா. நீ என்கிட்ட இருந்து எதையாவது மறைக்குறது இதுவே முதலும், கடைசியுமா இருக்கட்டும் இல்ல எதிர்காலத்துல நான் உன்ன உறுதியா தண்ணி தெளிச்சு விட்டுடுவேன். நானும் கெட்சப்பும் எப்போ வேணும்னாலும் உதவி செய்ய தயாரா இருப்போம். நாம ஒரே குடும்பம் அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணனும் “ என்று மைரா சொன்னதும், “ ஆனா தயவு செஞ்சு எதிர்காலத்துல எங்க மொபைல்கள ஹேக் செய்ய வேண்டாம் “ என்று நைனா கேட்டுக்கொண்டாள்.
“ நான் பண்ண மாட்டேன்னு உறுதியளிக்க மாட்டேன். ஏதாவது பிரச்சன இருக்க மாதிரி எனக்கு தோணுச்சுனா நிச்சயமா அத சமாளிக்க நான் செய்ய வேண்டியத செய்வேன் “ என்று கேஷவ் சொன்னான்.
“ ஆனா எதிர்காலத்துல எந்த பிரச்சனையும் இருக்காது. நன்றி அண்ணா, நீங்க எனக்கு பண்ண எல்லாத்துக்கும் நன்றி. உங்க இடத்துல யாராவது இருந்தா என்ன வெறுத்து வாழ்க்கையில இருந்து தூக்கி போட்டு இருப்பாங்க ஆனா நீங்க எப்பவும் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கீங்க. என்ன மன்னிப்பீங்களா அண்ணா ? என்ன மன்னிப்பியா மைரா? “ என்று க்ரிஷ் கேட்டான்.
“ பிளாக்மெயில மறைச்சதுக்கான காரணம் உட்பட, நீ பண்ண எல்லாத்துக்கும் நான் உன்ன மன்னிக்கிறேன், ஆனா நீ என்னையும் மைராவையும் வீட்டை விட்டு அனுப்ப முயற்சி பண்ண விதத்துக்கு நான் உன்ன மன்னிக்க மாட்டேன் “ என்று கேஷவ் தெளிவாக சொல்லிவிட்டான்.
“ கெட்சப் சொல்றது சரி தான். நாம ஒரு குடும்பமா இருப்போம், எல்லாரும் சப்போர்ட் பண்ணி வாழ்வோம் ஆனா முதல்ல மாதிரி நாம இருக்க முடியாது. குறைந்தபட்சம் உடனே எல்லாம் மாறாது “ என்று மைராவும் கூறினாள்.
க்ரிஷும், நைனாவும் அவளுக்கு நேரம் தேவை என்பதைப் புரிந்துகொண்டு, க்ரிஷை முழுமையாக மன்னிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்தனர். க்ரிஷ் சரி என்று தலையை ஆட்டி, எல்லாவற்றையும் தெளிவுபடுத்தியதில் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.
பின்னர் உணவு டெலிவரி செய்யப்பட்டதும் அவர்கள் சாப்பிட்டு முடித்து வீடு திரும்பினர். புன்னகையுடனும் கைகோர்த்தபடியும் தங்கள் குழந்தைகள் நடந்து வருவதை கண்டு மதனும் அர்ச்சனாவும் மகிழ்ச்சியடைந்தனர். கண்ப்படாமல் இருக்க அர்ச்சனா அவர்களுக்கு திர்ஷ்டி எடுத்த பின் அவரவர் அறைகளுக்குச் செல்ல அனுமதித்தார்.
மைராவும், கேஷவும் படுக்கையில் படுத்திருந்த போது கேஷவ் தன் முழங்கையை படுக்கையில் ஊன்றி அவளது காமிசோலின் மெல்லிய பட்டையை தடவினான்.
“ நாம தனியா இருக்கும் போது நீங்கள் ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே, அது என்ன? “ என்று மைரா கேட்டது, “ வேலைய ராஜினாமா செய்ய விரும்புறதா டைரக்டர் கிட்ட பேசி இருக்கேன் “ என்று கேஷவ் சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டதும் மைரா திடுக்கிட்டு அவனை அதிர்ச்சியுடன் பார்த்தபடி அமர்ந்தாள். கேஷவ் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து மைராவை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தான். அவள் தன் உள்ளங்கையை அவன் வெற்று மார்பில் வைத்து கவலையுடன் அவனைப் பார்த்தாள்.
“ ஏன்? இந்த இடத்துக்கு வர நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு இருக்கீங்க. இப்போ ஏன் ராஜினாமா செய்ய விரும்புறீங்க ? “ என்று மைரா அவனிடம் கவலையுடன் கேட்டாள்.
“ அமைதியா நான் சொல்றத கேளு அம்மு. நீ சொல்றது சரி தான், நான் இப்போ இருக்க பதவிக்கு அவ்ளோ சுலபமா வரல. நான் நைட்டு, பகலா ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு இருக்கேன் ஆனா நான் இனி அத செய்ய விரும்பல. என் வேலையில என் முழு நேரத்தையும் செலவிட நான் விரும்பல. நான் உன்கூட இருக்க விரும்புறேன் “ என்று கேஷவ் மெல்ல சொன்னான்.
“ என்னால நீங்க வேலையை விடுறீங்களா ? எனக்காகவா ? “ என்று மைரா மீண்டும் வருத்தமாக கேட்டாள்.
“ இல்ல, நான் இத எனக்காக முடிவு பண்ணி இருக்கேன். நான் இப்போ ரொம்ப சுயநலமாக இருக்கேன். நான் என் சந்தோஷத்துல கவனம் செலுத்துறேன், அது உன் கூட இருக்குறது தான். உன்ன இங்க விட்டுட்டு டெல்லியில தங்கி என் வேலையில கவனம் செலுத்த முடியாது. பல வருஷம் அப்புறம் நான் விரும்புன மாதிரி என் வாழ்க்கைய வாழ வழி கிடைச்சு இருக்கு, அத நான் இழக்க விரும்பல “ என்று கேஷவ் கூறினான்.
“ கெட்சப்..” என்று மைரா ஆரம்பித்தாள் ஆனா கேஷவ் அவளை தடுத்து, “ நான் இன்னும் பேசி முடிக்கல அம்மு. நான் ஒவ்வொரு நொடியும் உன் கூட வாழ விரும்புறேன், நான் என் வேலைய விட்டா மட்டும் தான் அது சாத்தியமாகும். இந்த முடிவுக்காக நான் கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டேன். நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நிறைய நேரம் ஒதுக்குவோம், நாம மிஸ் பண்ண இத்தன வருஷத்துக்கும் சேர்த்து நிறைய லவ் பண்ணுவோம். விலகி இருந்து உன் வாழ்க்கையில, நம்ம வாழ்க்கையில எந்த ஒரு முக்கியமான தருணத்தையும் நான் இழக்க விரும்பல. நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு அடியிலையும் நான் உன் கூட இருக்க விரும்புறேன். உன்ன ஒளிஞ்சி இருந்து பார்த்த மாதிரி இல்லாம ஒவ்வொரு நொடியையும் உன் கூட உணரவும் வாழவும் விரும்புறேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டதும் மைரா அவனை முத்தமிட தொடங்கினாள்.
“ ஐ லவ் யூ கேஷவ். இந்த முடிவு உங்களுக்கு சந்தோஷத்த தரும்னா தாராளமா செய்யுங்க. உங்க எல்லா முடிவுலையும் எனக்கு சம்மதம் தான் “ என்று மைரா சொல்ல, “ ஐ லவ் யூ அம்மு. நான் எல்லாத்தையும் தொடங்கிட்டேன், ஆனா நான் மூணு மாசம் கண்டிப்பா வேலை செய்யணும் அது மட்டும் இல்ல, இப்போ கொடுத்துருக்க கேஸ் பார்க்கணும். என் டீம் கூட சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கு அதனால நான் பெரும்பாலான நேரம் டெல்லியில இருக்க வேண்டியிருக்கும். உன்ன விட்டு நான் எப்படி விலகி இருப்பேன் அம்மு ? “ என்று கேஷவ் பெருமூச்சு விட்டான்.
மைரா அவனை அணைத்துக் கொள்ள, கேஷவ் அவள் கண்ணீரை தன் தோலில் உணர்ந்தான். அவள் இடுப்பை அழுத்தி அவள் கழுத்தை முத்தமிட்டான்.
“ எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழம இல்லனா உங்களுக்கு எப்போ டைம் கிடைச்சாலும் நீங்க என்ன பார்க்க வரணும். நீங்க தினமும் எனக்கு போன் பண்ணனும், அப்புறம் ஒரு நாளைக்கு முறைஞ்சது 10 மெசேஜ் அனுப்பனும். இத நீங்க ஒரு நாள் தவற விட்டா கூட நான் ஒரு நாள் சாப்பிட மாட்டேன் “ என்று மைரா சிணுங்கினாள்.
“ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உன்கிட்ட ஓடி வந்துடுவேன். நீ என் பக்கத்துல இல்லாம ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டதும், “ நான் உங்கள மிஸ் பண்ணுவேன் கேஷவ் “ என்றாள் மைரா.
“ நீ எவ்ளோ மிஸ் பண்றனு சேர்த்து வெச்சு நான் திரும்பி வரும் போது எனக்கு காட்டு. நான் திரும்பி வரும் போது உன்னோட லவ் மொத்தமா எனக்கு கொடு. நான் உன்ன விடாம என் கைக்குள்ள வெச்சுக்குறேன் “ என்று கேஷவ் அவளிடம் சொன்னான்.
மைரா அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன் உதட்டை விளக்காமல் உணர்ச்சிவசபட்டு கொண்டிருந்தாள். கேஷவ் அவள் கன்னத்தை உள்ளங்கையில் பற்றி அவளை முத்தமிட ஆரம்பித்தான்.
“ நீ தான் என் பலமும் பலவீனமும் மைரா. நீ அழுதுட்டே இருந்தா என்னால போக முடியாது. நான் உன்ன என்கூட கூட்டிட்டு போவேன் ஆனா நீ இங்க அகாடமி போகணும், அத நடத்தனும். அது மட்டும் இல்ல நான் வேலைக்கு போன அப்புறம் நீ அங்க தனியா இருப்ப “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க சட்டை இல்லாம வீட்ட விட்டு வெளியே வர மாட்டீங்கன்னு எனக்கு சத்தியம் பண்ணுங்க “ என்று கேட்டாள் மைரா.
“ வெறும் சட்ட மட்டும் தானா ? அப்போ பேன்ட் ? “ என்று கேட்டு கேஷவ் சிரிக்க, “ என்ன கிண்டல் செய்றத நிறுத்துங்க. நீங்க வெறும் பேன்ட் மட்டும் போட்டு நடக்கும் போது ரொம்ப செக்ஸியா இருப்பீங்க அதனால நீங்க வீட்ட விட்டு வெளிய வரும் போது முழுசா டிரஸ் பண்ணி இருக்கணும் “ என்று மைரா கண்டிஷன் போட்டதும், கேஷவ் சிரித்தபடி அவள் மூக்கைக் கிள்ளினான்.
“ நான் என் வேலைய பத்தி எல்லார் கிட்டயும் சொல்றேன் ஆனா அந்த சூனியக்காரிய பத்தி ரிசப்ஷன் முடியுற வர யாருக்கும் தெரிய வேணாம் “ என்று கேஷவ் சொன்னான்.
“ இன்ஸ்பெக்டர் அவள கண்டுபிடிப்பாரா? அவ நமக்கு ஏதாவது தொல்லை கொடுப்பாளா? அவ எப்பவும் என்ன வெறுப்பா அதனால அவ என்ன தேடி வருவானு அர்த்தமா? “ என்று மைரா கேட்க, “ உன்ன யாரும் காயப்படுத்த நான் விடமாட்டேன் அம்மு. நான் டெல்லி போறதுக்கு முன்னாடி அவள புடிச்சிடுவோம். இனி அவள பத்தி கவலைப்பட வேணாம். அத நான் பார்த்துக்குறேன் “ என்று கேஷவ் அவளுக்கு உறுதியளித்து ஆறுதல் சொன்னான். அதன் பின்னர் இருவரும் அமைதியான தூங்கும் வரை தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
காலையில் கேஷவ் அவர்களின் பெற்றோர் இருவரையும் அழைத்ததும், க்ரிஷ் மற்றும் நைனா உட்பட அனைவரும் ஹாலில் ஹாலில் கூடினர்.
“ இதுவர என் வேலைய பத்தி உங்க யாருக்கும் சொல்லாம இருந்தேன். அத பத்தி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். “ என்று சொன்ன கேஷவ் தான் செய்து வரும் ஃப்ரீலான்சர் வேலையோடு சேர்த்து தான் சிபிஐயில் கூடுதல் இயக்குநராக தனது வேலையை பற்றியும் கூறினான்.
கேஷவ் சொன்னதை கேட்டதும் அவனின் பெற்றோருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
“ நீ உன் வேலைய உனக்கு புடிச்ச மாதிரி செலெக்ட் பண்ணி இருக்குறதுல எனக்கு சந்தோஷம் கேஷவ். நீ எங்ககிட்ட சொல்லி இருந்தா நாங்க ஆரம்பத்துல இருந்தே சந்தோஷப்பட்டு இருப்போம் “ என்று மதன் கூறினார்.
“ இப்போ நான் வேலைய ராஜினாமா பண்ணிட்டேன் “ என்று கேஷவ் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
“ ஏன்? “ என்று ராஜன் உடனே கேட்டார்.
“ நான் இனி உங்கள விட்டு விலகி இருக்க விரும்பல. மைராவ டெல்லிக்கு கூட்டிட்டு போக முடியாது, நாங்க ஒன்னா வாழுறது தான் நல்லதுனு நினைக்குறேன். ரிசப்ஷன் முடிச உடனே டெல்லி கிளம்புவேன், ஆனா ஞாயிற்றுக்கிழமையில எல்லாரையும் பார்க்க வருவேன் “ என்று கேஷவ் விளக்கம் சொன்னான்.
“ இது நல்ல முடிவுனு நீ நெனச்சா எங்களுக்கு சந்தோஷம். மூணு மாசம் சீக்கிரம் ஓடிப் போயிடும் “ என்று அர்ச்சனா கூறினார்.
“ மைராவ நெனச்சு கவலைப்படாத, அவள கவனிச்சுக்க நாங்க எல்லாரும் இருக்கோம். அவ நிச்சயமா உன்ன மிஸ் பண்ணுவா ஆனா நாங்க அவ கூட இருப்போம் “ என்று வசுந்தரா அவனுக்கு தைரியம் சொன்னார்.
“ நானும் ஒன்னு யோசிச்சு இருக்கேன் ஆனா அதுக்கு உங்க அனுமதி வேணும் “ என்று மைரா சொன்னதும், “ நீயும் டெல்லி போறியா ? “ என்று நைனா கேட்டாள்.
“ இல்ல, கெட்சப் அவரோட வேலை முடிஞ்சு டெல்லியில இருந்து திரும்பி வந்ததும் நாங்க புது வீட்டுக்கு கொஞ்ச நாள் போய் தங்கலாம்னு நினைக்குறேன். உங்க எல்லாரையும் விட்டுட்டு கெட்சப்ப பிரிச்சு கூட்டிட்டு போறதா அர்த்தம் இல்ல. உங்களுக்கே தெரியும்..” என்று மைரா சொல்லும் போது அர்ச்சனா குறுக்கிட்டு, “ அது உங்களுக்கு சந்தோஷம் தரும்னா நாங்க உங்கள தடுக்க மாட்டோம். அதனால உனக்கு அனுமதி கொடுத்தாச்சு “ என்று சொன்னார்.
“ ரொம்ப நன்றி அச்சு மா, நாங்க எல்லா ஞாயிற்றுக்கிழமையும் வருவோம், நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம். நீங்களும் எங்க கூட தங்க அங்க வரணும்னு நானும் விரும்புறேன் “ என்று மைரா கூறினாள்.
அவள் வார்த்தையை கேட்ட அர்ச்சனா, “ புளுகு மூட்ட, நீ உன் புருஷனோட இருக்கணும்னு ஆசைப்பட்டு சொல்லிட்டு, இப்போ எங்கள கூப்பிடற மாதிரி நடிக்கிறியா ? நாங்க உங்க கூட ஒரு வாரம் இல்ல ஒரு மாசம் தங்க வந்தா என்ன செய்வ ? “ என்று கேட்டார்.
“ இல்ல இல்ல இல்ல.. நான் சொல்ல வந்தது .. ஆமா நீங்க எவ்ளோ நாள் வேணும்னாலும் தங்கலாம் “ என்று மைரா சமாளித்தாள்.
புன்னகையை அடக்கிக் கொண்டிருந்த கேஷவ், அவள் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான். வசுந்தரா மைராவை அணைத்து அவள் கூந்தலை வருடினாள்.
“ நான் சும்மா கிண்டல் பண்ணிட்டு தான் இருந்தேன். இந்த நாள பார்க்க நான் பல வருஷமா கனவு கண்டேன். கேஷவ் தனியா இருக்கான்னு நான் எப்பவும் கவலைப்பட்டேன், ஆனா இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கீங்க, என் பசங்க அவங்களோட வாழ்க்கைய அவங்க விருப்பப்படி வாழ்றத பார்க்குறத தவிர என் வாழ்க்கையில வேற என்ன வேணும் “ என்று அர்ச்சனா உணர்ச்சிவசப்பட்டார்.
“ அம்மா, நானும், நைனாவும் இன்னைக்கு அவங்க அப்பா அம்மாவைப் பார்க்கப் போறோம். கல்யாண ரிசப்ஷனுக்கு முன்னாடி வீட்ல பூஜை பண்ண போறதா சொன்னாங்க. நைட்டு திரும்பி வந்துடுவோம் “ என்று க்ரிஷ் சொல்ல, “ சந்தோஷமா போய்ட்டு வா. இத்தன மாசத்துக்கு அப்புறம் நீ சிரிக்கிறத நான் பார்க்குறேன் “ என்றார் அர்ச்சனா.
க்ரிஷ் புன்னகையுடன் நைனாவை நோக்கி கையை நீட்டினான். அவள் தன் உள்ளங்கையை அவன் உள்ளங்கையில் வைத்ததும் இருவரும் கைகோர்த்து வீட்டை விட்டு புறப்பட்டனர்.
கேஷவ் மைராவை அறைக்கு தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்தான். அவர்கள் அறையை அடைந்ததும் அவன் கதவை மூடி அவளை அணைத்துக் கொண்டான்.
“ நீ இந்த முடிவு எடுப்பனு நான் எதிர்பார்க்கல அம்மு. நீ நம்ம குடும்பத்த எவ்ளோ நேசிக்குற, அவங்க கூட இருக்க எவ்ளோ விரும்புவனு எனக்குத் தெரியும், அப்புறம் ஏன் இந்த முடிவு? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.
“ பல முறை நாம் ஹால் அப்புறம் கிட்சன்ல இருக்கும் போது நிறைய முறை கடிப்புடிக்கனும்னு தோணி இருக்கு, இப்போ கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க என்ன கட்டிப்புடிக்க நெனச்ச மாதிரி சொல்றேன். ஆனா நாம ரூமுக்கு வந்து கதவ மூடுற வர வெயிட் பண்ணனும். நான் அத விரும்பல, நமக்கு என்ன தோணுதோ அப்பவே அத வெளிப்படுத்தணும். நம்ம ரெண்டு பேரையும் சுத்தி யார் இருக்காங்க, யார் பார்க்குறாங்க இந்த பயம், கவலை இல்லாம நாம இருக்க விரும்புறேன். நாம ஏற்கனவே நம்ம வாழ்க்கையோட பல வருஷத்த இழந்துட்டோம் அதனால கொஞ்ச நாள் தனியா இருந்து நம்ம வாழ்க்கைய முழுமையா வாழணும்னு விரும்புறேன். நமக்கு அது தேவ. நாம நாமா இருப்போம், நம்ம கனவுகள வாழ்வோம். எப்போ வேணும்னாலும் இங்க திரும்பி வந்துடலாம். இத கொஞ்ச மாசம் நம்ம வீட்ல தங்கி ஹனிமூன் கொண்டாடுறதா நெனச்சுக்கலாம். நாம ஹால்ல இருக்க சோபாவுல கட்டிப்பிடிக்கலாம், நாம ஒன்னா சமைக்கலாம், நிறைய கிண்டல் செய்யலாம். நான் உங்க சட்டைய போட்டு நம்ம வீட்ல எங்க வேணும்னாலும் சுத்தலாம், நீங்க ஷார்ட்ஸ் மட்டும் போட்டு வீட சுத்தம் பண்ணும் போது நான் உங்க முதுகுல ஏறி கிண்டல் செய்வேன், நம்ம மனசுக்கு தோணுற மாதிரி வாழ்வோம் “ என்று மைரா தன் மனதில் இருந்த ஆசையெல்லாம் கூறினாள்.
“ என் கற்பனையில நான் நெனச்ச வாழ்க்கைய வாழ, என் ஆசையெல்லாம் நிறைவேத்த நீ ரொம்ப ரொமான்டிக் அம்மு. நம்ம வீட்டுல எல்லா இடத்துலயும் நாம ரொமான்ஸ் பண்ணுவோம். நீ என் தயவுல இருக்கும் போது நான் உனக்கு என்னலாம் செய்வேன்னு யூகிச்சிட்டே இரு, அம்மு “ என்று கேஷவ் சொன்னதும் மைரா அவன் உதடுகளின் ஓரத்தில் முத்தமிட்டாள்.
“ நான் என் திட்டத்த மாத்தி உன்ன படுக்கையில் பூட்டுறதுக்கு முன்னாடி நாம் கிளம்பிவிடுவோம் “ என்று கேஷவ் கூறினான்.
இருவரும் அன்றைய நாள் வேலைக்கு புறப்பட்டனர். கேஷவ் மைராவை அகாடமியில் விடுவதற்காக தன்னுடன் வருமாறு அழைத்தான்.
அவர்கள் அகாடமிக்கு சென்ற போது, வாயிலில் இருவர் காத்திருப்பதை மைரா கண்டாள். கேஷவ் காரில் இருந்து இறங்கியதும், அந்த ஆட்கள் இருவரும் அவனுக்கு சல்யூட் அடித்தனர்.
“ மைரா, இவங்க உன் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீஸ்காரங்க, பாதுகாப்பான தூரத்துல உன்ன பின்தொடர்வாங்க. இவங்க இருக்குறத பத்தி கவலையில்லாம நீ வேலைய செய்யலாம் “ என்று கேஷவ் சொல்லும் போது, அவனுடைய மொபைல் ஒலித்தது.
க்ரிஷின் பெயர் பார்த்து அவன் உடனடியாக அதற்கு பதிலளித்தான்.
“ அண்ணா ரெண்டு பேர் எங்கள ஃபாலோ பண்றாங்க. நேத்து நைட்டு இன்ஸ்பெக்டர் கிட்ட நீங்க சொன்ன போலீஸ்காரங்க அவங்க தானா? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ ஆமா, அவங்க உங்க வேலைய தொந்தரவு செய்ய மாட்டாங்க அதனால நீங்க எப்பவும் போல இருங்க “ என்று சொல்லி கேஷவ் அழைப்பை துண்டித்து மைராவிடம் விடைபெற்று காவலர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு காரை ஓட்டிச் சென்றான்.
காரை ஒரு ஹோட்டல் முன் நிறுத்தியவன், வருணும் இன்ஸ்பெக்டரும் அவனுக்காகக் காத்திருப்பதைப் பார்த்தான்.
“ ஸாரி நான் ரெண்டு நிமிஷம் லேட்டா வந்துட்டேன் “ என்று கேஷவ் சொல்ல, இன்ஸ்பெக்டர் அதற்கு “ நோ ப்ராப்ளம், உள்ள போகலாம். நான் மேமேஜர் கிட்ட பேசிட்டேன். நம்ம பிளான்ல மாற்றம் இருந்தா தேவைப்படும்னு கான்ஸ்டபிள் ரெண்டு பேர கூட்டிட்டு வந்துருக்கேன் “ என்றார்.
கேஷவ் இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர்கள் லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடியை அடைந்தனர். வருண் ஒரு அறையின் கதவைத் தட்டியதும் ரோஷினியின் தந்தை அதைத் திறந்து கேஷவ் மற்றும் மற்றவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
“ கேஷவ் ? நீ இங்க என்ன பண்ற ? உன் கூட எத பத்தியும் பேச நான் தயாரா இல்ல, அதனால எங்கள தொந்தரவு செய்யாத, இங்க இருந்து போ. உங்க யாரையும் நாங்க சந்திக்க விரும்பல “ என்று ரோஷினியின் அப்பா சொன்னார் ஆனால் அதை பொருட்படுத்தாமல் வருண் கதவைத் தள்ளித் திறந்ததும், கேஷவ் இன்ஸ்பெக்டருடன் உள்ளே நுழைந்தான். வருண் உடனே கதவை உள்ளிருந்து பூட்டினான்.
“ நான் உங்க கிட்ட வேண்டுகோள் விடுக்கவோ, உங்கள சந்தோஷப்படுத்தவோ இங்க வரல. விசாரணைக்காக வந்துருக்கேன். இவர் தான் இன்ஸ்பெக்டர் ஆனந்த், அவங்க ஸ்டேஷன்ல இருந்து வந்துருக்க போலீஸ்காரங்க “ என்று கேஷவ் சொன்னதும், “ போலீஸா ? இப்ப நாங்க என்ன செஞ்சோம்? எங்களையும், எங்க பொண்ணையும் ஏன் இவ்ளோ கஷ்டப்படுத்துற? “ என்று ரோஷினியின் அப்பா கோவமாக கேட்டார்.
“ உங்க பொண்ணு எங்க ? “ என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “ அவள ஏன் தேடுறீங்க ? “ என்று ரோஷினியின் அம்மா பதிலுக்கு கேட்டார்.
“ உங்க பொண்ணுக்கு என்.பி.டி (NPD ) இருக்கு, அத நீங்க எல்லார் கிட்டயும் மறைச்சு வச்சிருக்கீங்க. அவ நிறைய பிரச்சனைய உண்டு பண்ணி இருக்கா ஆனா இப்போ அவளும், க்ரிஷும் ஒன்னா இருக்க வீடியோ வெச்சு க்ரிஷ பிளாக்மெயில் பண்ணி இருக்கா. அவளுக்கு எதிரா எல்லா ஆதாரங்களும் எங்ககிட்ட இருக்கு அதனால அவ இப்போ இருக்குற இடத்த சொல்லிட்டா உங்களுக்கு நல்லது “ என்று வருண் அவர்களை மிரட்டினான்.
“ எங்களுக்கு தெரியாது, உண்மைய சொல்ல போனா நாங்களும் அவள தேட தான் இங்க தங்கி இருக்கோம் “ என்று ரோஷினியின் அப்பா சொன்னதை கேட்டு, “ நீங்க இந்த ரூம் விட்டு வெளியே போக கூடாது. ரெண்டு கான்ஸ்டபிள் உங்க ரெண்டு பேரையும் எப்பவும் காவல் காப்பாங்க “ என்று கூறினான். பின்னர் வருணை பார்த்து, “ வருண் இவங்க மொபைல் எடுத்து அவ போன் பண்ணி இருக்காளா பாரு இல்ல இனி போன் பண்ண கூட வாய்ப்பு இருக்கு “ என்று சொன்னான்.
“ தயவு செஞ்சு எங்கள போக விடுங்க, நாங்க எங்க மகள கண்டுபிடிச்சு எங்க கூட கூட்டிட்டு போறோம். அவ உங்க குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் கொடுக்க மாட்டானு நான் உறுதி தரேன் “ என்று ரோஷினியின் அம்மா கெஞ்சினார்.
“ அவ போதுமான அளவு சேதம் ஏற்கனவே பண்ணிட்டா அதனால அவள காப்பாத்துறத பத்தி யோசிக்கக் கூட வேண்டாம். உங்க ரெண்டு பேருக்கும் வேளைக்கு சாப்பாடு வரும். நாங்க அவள கண்டுபிடிக்குற வரை நீங்கள் இங்கேயே இருங்க “ என்று சொல்லிவிட்டு கேஷவ் வெளியே சென்றான்.
ரோஷினியின் பெற்றோர் அவனுக்குப் பின்னால் ஓடினர், ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து அறையில் பூட்டினர். வருண் அவர்களின் மொபைல்களை எடுத்துக்கொண்ட பின்னர் க்ரிஷும், நைனாவும் அவளை கண்டுபிடித்த ரோஷினியின் தோழியிடம் சென்றனர்.
கேஷவ் சோபாவில் அமைதியாக உட்கார்ந்தான், வருணும் ஆனந்தும் ரோஷினியின் தோழியை விசாரித்தனர்.
“ உங்க friend ரோஷினி நேத்து இங்க இருந்து போன அப்புறம் உங்களுக்கு போன் பண்ணாளா ? “ என்று ஆனந்த் கேட்க, “ இல்ல சார், அவ எனக்கு போன் பண்ணல “ என்றாள் ரோஷினியின் தோழி.
“ ரோஷினி ஒரு கிரிமினல், நீங்க அவளுக்கு உதவ முயற்சி பண்ணா நீங்க பெரிய பிரச்சனையில சிக்குவீங்க அதனால அவள பத்தி உங்களுக்குத் தெரிஞ்சத சொல்றது நல்லது “ என்று வருண் கூறினான்.
“ சார், அவ கொஞ்ச நாள் ஹோட்டலுல தங்கப் போறதா சொன்னா. அத தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது “ என்று ரோஷினியின் தோழி சொல்ல, வருண் அவளது மொபைல் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டான். அவர்கள் வெளியே சென்றதும் கேஷவ் காரில் சாய்ந்தான்.
“ ரோஷினியோட வங்கி கணக்குகள முடக்கி, அவ சமீபத்துல அவளோட டெபிட் இல்ல கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இருக்காளா பாரு. அப்புறம் அவளோட அப்பா, அம்மா பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கு அதனால அவங்களோட வங்கி கணக்கையும் கண்காணிக்க சொல்லு. இன்னைக்கு சாயங்காலத்துக்கு முன்னாடி அவ கஸ்டடியில இருக்கணும் “ என்று கேஷவ் வருணுக்கு உத்தரவிட்டான்.
வருண் சரி என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் ஆனந்துடன் தன் வேலையை முடிக்க சென்றான்.
****************************************
முன்னோட்டம்:
“ நகம் கடிக்குறத எப்போ நிறுத்துவ அம்மு ? இங்க பாரு உன் கையில எதுவுமே மிச்சம் இல்லாம இப்போ என் நகத்தையும் கடிக்க ஆரம்பிச்சுட்ட. அப்பா, அம்மா அவன்ங்க குழந்தைங்க நகம் கடிக்காம இருக்க நெயில் பாலிஷ் வாங்குறேன். நம்ம குழந்தைக்கு இதெல்லாம் வாங்கணும்னு நெனச்சேன் ஆனா உனக்காக பண்ணிட்டு இருக்கேன் “

1 comment
[…] 80. ரோஷினி ஒரு கிரிமினல் […]