Home Family35. நான் அவர கட்டிப்பிடிச்சுட்டேன்!

35. நான் அவர கட்டிப்பிடிச்சுட்டேன்!

by Siragugal Novels
23 views

மைரா மற்றும் கேஷவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து போனது. இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ஆனந்தமாக அனுபவித்து வந்தனர். மைரா தனது அகாடமிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள், அர்ச்சனா, கேஷவ் மற்றும் மைராவை ஹாலுக்கு அழைத்தார்.

“ நானும் மதனும் குலதெய்வம் கோவிலுக்கு போறோம், மூணு நாள்ல திரும்பி வருவோம். நீங்களும் இந்த வாரம் ரீயூனியன் போக போறதுல பிஸியா இருப்பீங்க அதனால நாங்க திரும்பி வரவரைக்கும் ஜாக்கிரதையா இருங்க, வீட்டையும் பார்த்துக்கோங்க “ என்று அர்ச்சனா சொன்னதும், “ கவலைப்படாதீங்க மம்மி, ஹேப்பி ஹனிமூன். நாங்க பார்த்துக்குறோம் “ என்று குறும்புடன் சொன்னாள் மைரா. அவள் வார்த்தையை கேட்டதும், “ நாங்க கோவிலுக்கு போறோம் மைரா “ என்றார் அர்ச்சனா அதிர்ச்சியுடன்.

“ பரவாயில்ல, என்னால புரிஞ்சிக்க முடியுது. நீங்க போயிட்டு வாங்க, உங்களுக்கு பேக் பண்ண உதவி செய்யட்டுமா ? “ என்று மைரா கேட்க, “ நாங்க கிளம்ப ரெடியா இருக்கோம் “ என்றார் அர்ச்சனா.

“ நீங்க ரொம்ப மோசமான மாமியார், எல்லாமே பிளான் பண்ணிட்டு இப்போ கிளம்பும் போது சொல்றீங்களா ?” என்று மைரா கேட்க. “ இதுக்கு பேரு சர்ப்ரைஸ் பிளான். அப்புறம் கதவ பூட்டிடுங்க, க்ரிஷ் நாளைக்கு காலையில தான் வருவான். ரோஷினியும் சனிக்கிழம காலையில ரீயூனியனுக்கு போக தான் வருவா “ என்று அர்ச்சனா சொன்ன பிறகு, கேஷவ் அவர்களின் லக்கேஜ்களை காரில் வைத்தான். அர்ச்சனாவும், மதனும் விடைபெற்று சென்றனர்.

அன்று மாலையில் மைராவை அழைத்துச் செல்ல கேஷவ் அகாடமிக்கு சென்ற போது, கையில் ஒரு பரிசுடன் மைரா வாசலில் காத்திருப்பதைக் கண்டான்.

“ இந்த பரிசு எனக்கா ? “ என்று கேஷவ் கேட்க, “ இல்ல, இது ஒரு ஸ்பெஷலான ஆளுக்கு ஆனா நாம வீட்டுக்கு போற வரைக்கும் அந்த ஆள் யாருனு நான் சொல்ல மாட்டேன் “ என்று கூறினாள் மைரா.

“ நான் ரொம்ப பாவம், என் பொண்டாட்டி எனக்கு தான் ஒரு பரிசு வாங்கி இருக்கானு நெனச்சுட்டேன் “ என்று கேஷவ் அப்பாவியாக சொல்ல, மைரா அவனைப் பார்த்து கண்களை உருட்டினாள். இருவரும் வீட்டிற்குத் திரும்பி தங்கள் அறைக்கு சென்றதும், அறை முழுவதும் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மைரா திகைத்துப் போனாள்.

“ கெட்சப், எதுக்காக அலங்காரம் பண்ணி இருக்கீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது, அதுக்கு வாழ்த்துக்கள் பொண்டாட்டி. நான் மறந்துவிடுவேன்னு நெனச்சியா ? “ என்று கேஷவ் கேட்டான்.

“ இல்ல, நான் உங்கள சர்ப்ரைஸ் பண்ண நெனச்சேன் ஆனா நீங்க முந்திகிட்டீங்க. ஒரு மாசம் ஆனதுக்கு உங்களுக்கும் வாழ்த்துகள்   புருஷா “ என்று சொல்லி மைரா பரிசை அவனிடம் கொடுக்க, கேஷவ் புன்னகையுடன் பெற்றுக்கொண்டான்.

“ இது யாருக்கோ ஸ்பெஷல்னு சொன்ன ? “ என்று கேஷவ் கேட்க, “ என் வாழ்க்கையில உங்கள தவிர வேற யார் ஸ்பெஷல்? நான் நைனா கூட ஒரு மாலுக்கு போய் உங்களுக்காக இத வாங்கினேன், பிடிச்சிருக்கா சொல்லுங்க” என்று கேட்டாள்.

கேஷவ் அதைத் திறந்து பார்த்தபோது ஒரு ராயல் மெரூன் சட்டை, ஒரு வாட்ச் மற்றும் ஒரு நகைப் பெட்டி இருந்தது. அவன் நகைப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் அவனது பெயர் பொறிக்கப்பட்ட தங்க பிரேஸ்லெட் ஒன்றைக் கண்டான். வாட்சையும், பிரேஸ்லெட்டையும் அவளிடம் கொடுத்து அணிவிக்கும்படி தன் கைகளைக் காட்டினான். புன்னகையுடன் மைரா வாட்ச் மற்றும் பிரேஸ்லெட்டை அவன் மணிக்கட்டைச் சுற்றி அணிவித்தாள்.

“ பரிசுக்கு ரொம்ப புடிச்சுருக்கு அம்மு, ரொம்ப நன்…” என்று கேஷவ் சொல்லும்போதே மைரா குறுக்கிட்டு,” கெட்சப் எனக்கு நன்றி சொல்லாதீங்க. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி சொல்ல கூடாதுனு நீங்க தானே சொன்னீங்க ? “ என்று சொன்னாள்.

கேஷவ் சரி என்று சொன்னதும், “ எனக்கு பரிசு எங்க? எனக்கு ஒன்னு வாங்கலையா? “ என்று கேட்டாள்.

கேஷவ் அவள் கன்னத்தைக் கிள்ளியபடி தன் அலமாரியைத் திறந்து பரிசுப் பெட்டியை வெளியே எடுத்தான். மைரா உற்சாகத்தில் அவனிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டு, அவசரமாக அதைத் திறந்து, கருப்பு மற்றும் வெள்ளி பார்டர் கொண்ட அழகான மென்மையான பட்டு ராயல் மெரூன் புடவையைக் கண்டாள்.

“ ஓ மை காட், நாம ஒரே கலர் செலெக்ட் பண்ணி இருக்கோம் கெட்சப் “ என்று சொல்லி அவன் கையை கிள்ளி புடவையை தோளில் போட்டு கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள்.

கேஷவ் அவளுக்குப் பின்னால் நின்று, இருவரின் பெயரின் முதல் எழுத்து டாலர் கொண்ட ஒரு தங்கச் சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்தான். மைரா அதைத் தொட்டுவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள்.

“ நீ சந்தோஷமா இருக்கியா அம்மு ? “ என்று கேஷவ் மெல்ல தனது ஹஸ்கி குரலில் கேட்க, “ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கெட்சப் “ என்று சொல்லி மைரா தனது இரு கையையும் அவன் உடலை சுற்றி வளைத்து அவனை கட்டிப்பிடித்து, அவன் மார்பில் முகம் புதைத்தாள். கேஷவின் இதயம் ஒரு துடிப்பை நிறுத்தியது, அவளது திடீர் அணைப்பில் அவன் உறைந்து போனான், அவன் உடல் முழுவதும் சிலிர்த்தது, அவனும் அவளை அணைத்து கண்களை மூடி அவள் கூந்தலின் நறுமணத்தை முகர்ந்தான்.

இருவரின் இதயமும் கட்டுப்பாட்டை மீறி படபடத்து, அவர்கள் அதே நிலையில் இருந்தனர். மைரா மிகவும் வெட்கப்பட்டாள், மெதுவாக அவள் அவனிடமிருந்து விலகிச் செல்ல முயன்றாள், ஆனால் கேஷவ் அவள் முகத்தை தன் உள்ளங்கையில் பற்றி நெற்றியை முத்தமிட்டதும் அவளது எல்லா உணர்வுகளையும் உலுக்கியது. இருவரும் கண்களை மூடி அந்த தருணத்தை ரசித்தனர்.

“ எதிர்காலத்துல இன்னும் நிறைய வருஷங்கள நாம இப்படி கொண்டாடுவோம் “ என்று கேஷவ் சொல்ல, மைரா முகம் சிவந்தாள். அவன் சோபாவில் உட்கார்ந்து அறையின் இறுக்கத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.

“ இந்த நாளைக் கொண்டாட நாம வேற என்ன செய்யலாம் ? நீ சொல்ற எது வேணும்னாலும் செய்யலாம் “ என்று கேஷவ் கேட்டதும், “ படம் பார்க்க தியேட்டர் போகலாமா ? “ என்று கேட்டாள் மைரா.

“ சரி போகலாம் ஆனா இன்னிக்கு காஸ்ட்யூம் நான் தான் செலக்ட் பண்ணுவேன். நான் செலெக்ட் பண்ற வர வெளிய வெயிட் பண்ணு “ என்று கேஷவ் கூறினான்.

மைரா வெட்கம் கலந்த புன்னகையுடன் ஹாலை அடைந்து நெற்றியைத் தொட்டு பார்த்தவள், “ நான் அவர கட்டிப்பிடிச்சுட்டேன், அவர் என் நெத்தியில கிஸ் பண்ணாரு, கடவுளே ! என் இதயத்த கண்ட்ரோல் பண்ண உதவு. எனக்கு என்ன ஆகுது ? அவர் என்ன மொத்தமா அவர் வசப்படுத்துறாரு “ என்று வெட்கத்தில் கிசுகிசுத்தாள். அவள் புன்னகையை நிறுத்த உதட்டை கடித்துக் கொள்ள, கேஷவ் கையில் 2 புடவைகள் மற்றும் 2 சட்டைகளுடன் வந்தான்.

“ இது ரெண்டுல ஒன்னு செலெக்ட் பண்ணலாமா ? “ என்று கேஷவ் கேட்டதும், அவன் கையிலிருந்த புடவைகளையும் சட்டையையும் அவன் உடம்புக்கு நேராக வைத்து பார்த்தாள். ஒரு புடவை மற்றும் சட்டையை தேர்ந்தெடுத்த பிறகு மற்ற புடவை, சட்டையை சோபாவில் போட்டாள், ஆனால் அவை அதற்கு பதிலாக தரையில் விழுந்தன. மைரா சட்டையை அவனிடம் கொடுத்து தங்கள் அறைக்கு தயார் சொல்லிவிட்டு அவள் அர்ச்சனாவின் அறையில் உடை மாற்ற முடிவு செய்தாள்.

இருவரும் விரைவாக தயாராகி வெளியேற ஹாலை அடைந்தனர், ஆனால் தரையில் கலைந்த சேலை மற்றும் சட்டையைப் பார்த்ததும் அதை எடுக்க மைரா நின்றாள் ஆனால் கேஷவ் அவளை தடுத்து, “ படத்துக்கு லேட் ஆகுது அம்மு, அப்படியே இருக்கட்டும், நாம வீட்டுக்கு வந்ததும் எடுத்து வைக்கலாம். எப்படியும் நம்மள தவிர வேற யாரும் வீட்ல இல்ல “ என்றான். மைராவும் அதற்கு ஒப்புக்கொண்டு, அவர்கள் கதவைப் பூட்டிவிட்டு வெளியே விரைந்தனர். இருவரும் சரியான நேரத்தில் தியேட்டரை அடைந்து, அவர்களுக்காக கேஷவ் முன்பதிவு செய்த ஜோடி இருக்கையில் அமர்ந்தனர்.

“ நல்ல வேளை இப்போ தான் படம் தொடங்குது “ என்று மைரா சொல்ல, கேஷவ் தனது இடது கையை அவளுக்கு பின்னால் ஹெட் ரெஸ்ட்டில் வைத்து படம் பார்த்தான். கதையைப் பற்றி விவாதிப்பதிலும், காட்சிகளைப் பற்றி கருத்து தெரிவிப்பதிலும் இருந்த ஆர்வத்தில் இருவரும் நெருங்கி அமர்ந்தனர் அப்போது ஒரு கணம் மைரா தன்னையறியாமலேயே அவன் தோளில் சாய்ந்தாள். கேஷவ் அவளுடைய செயலில் உடனடியாக உறைந்து போனாள். இருக்கையின் மேல் இருந்த கேஷவின் கை அவள் தோளைச் சுற்றி வளைத்தது.

திரைப்படம் பற்றி இருவரும் மறந்தனர், மேலும் எந்த வார்த்தைகளும் பரிமாறப்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மைராவின் தலை அவன் தோளிலும், அவன் கை அவள் தோளிலும் இருந்தது மட்டுமே. படத்தின் இடைவேளை அவர்களின் மயக்கத்தை உடைக்க, கேஷவ் இடைவேளையின் தவறான தருணத்திற்காக சபித்தான்.

மைரா அவன் தோளிலிருந்து தலையை நகர்த்த, கேஷவ் நிமிர்ந்து, “ நான் போய் உனக்கு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றேன், அப்புறம்  வீட்டுக்கு போகும் போது சாப்பிடுவோம் “ என்று கூறினான்.

மைரா சரி என்று சொன்னதும் அவன் வெளியே சென்று ஐஸ்கிரீம் மற்றும் லேஸ் (lays) வாங்கி வந்தான். ஐஸ்கிரீமை அவளிடம் கொடுத்துவிட்டு, திறந்த லேஸ் பாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டான். இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் ஆரம்பித்ததும்,  மைரா தன் மீது சாய்ந்து கொள்வாளா என்று பார்க்க கேஷவ்  அவள் தலைக்கு பின்னா; இருக்கையின் மீது கை வைத்தான். அவன் கை பின்னால் இருப்பதை உணர்ந்த மைராவுக்கு கழுத்தில் இருந்த முடிகள் சிலிர்த்து எழுந்தன, ஐஸ்கிரீமை ஒரு வேகத்தில் சாப்பிட்டதும் அவள் உதட்டில் இருந்து வழிந்தது.

கேஷவ் தன் கைக்குட்டையை எடுத்து அவளுக்காக துடைக்க, மைரா உறைந்து அவனது சிறிய அக்கறையில் வெட்கப்பட்டாள்.

 படம் முடிந்ததும் இருவரும் தியேட்டரை விட்டு வெளியேறினர், கேஷவ் அவளை இரவு உணவு சாப்பிட ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் அதன் பிறகு அவர்கள் வீட்டை அடைந்து நேராக உறங்க சென்றனர்.

காலையில் வீடு திரும்பிய க்ரிஷ் தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்தான். உள்ளே நுழைந்ததும் தரையில் கிடந்த கலைந்த சேலை மற்றும் சட்டை வரவேற்க அவன் அதிர்ச்சி அடைந்தான். ரோஷினியும் அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக திரும்பி வந்தாள், அவள் தனது பையை கீழே போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து கலைந்திருந்த துணிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதலில் கண் விழித்த கேஷவ் வழக்கம் போல மைரா தன்னுடன் அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். மற்ற நாட்களைப் போலவே அவளைத் தொந்தரவு செய்யாமல் வெளியே சென்று குளித்தான். டிராக் பேன்ட் அணிந்து கொண்டு முதலில் காபி தயாரிக்க முடிவு செய்து கீழே சட்டை இல்லாமல் சென்றான்  ஆனால் க்ரிஷை பார்த்ததும் வேரூன்றி நின்றான்.

“ நீ எப்ப வந்த, க்ரிஷ்? “ என்று கேஷவ் கேட்டதும், “ இப்ப தான் வந்தேன் அண்ணா “ என்றான் க்ரிஷ்.

கண்விழித்துப் பார்த்த மைரா, அறையில் கேஷவை இல்லாததை கண்டு, “ எங்க போனாரு ? காபி போட போய் இருப்பாரு போல “ என்று நினைத்தவள், “ கெட்சப்ப்ப்ப்ப்ப்ப்ப “ என்று சத்தமாக அழைத்தாள்.

அவள் அழைக்கும் சத்தம் கேட்ட கேஷவ் வேகமாக தரையில் கிடந்த சேலையையும் சட்டையையும் எடுத்துக் கொண்டு, “ வரேன் அம்மு “ என்று அவளுக்கு பதிலளித்துவிட்டு திரும்பி செல்ல எத்தனிக்க, அங்கு வந்த மைரா கேஷவின் கையில் இருந்த துணிகளைப் பார்த்து வாயை மூடிக்கொண்டாள். கேஷவ் அவளை தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்ததும் இருவரும் தங்கள் அறைக்குத் திரும்பினார்கள்.

“ தரையில இருந்த டிரஸ் எல்லாம் பார்த்தாங்களா ? அவங்க என்ன நெனச்சு இருப்பாங்க ? “ என்று மைரா பதற்றத்துடன் கேட்க, “ கல்யாணம் ஆணவங்கள பத்தி என்ன நினைப்பாங்களோ அதே தான் நெனச்சு இருப்பாங்க “ என்று பதில் சொன்ன கேஷவ் பின்னர் அவளை பார்த்து, “ நீ ஒன்னும் தெரியாத ரொம்ப அப்பாவி பொண்ணுனு நான் நெனச்சேன் “ என்று கூறினான். அதற்கு மைரா உடனே, “ நான் ஒன்னும் தெரியாத அப்பாவினு சொல்லவே இல்லையே. அது இருக்கட்டும், இப்போ அவங்க முன்னாடி எப்படி போவேன் ? ரொம்ப தர்மசங்கடமா இருக்கும் “ என்று சொன்னாள்.

“ உனக்கு ஏன் சங்கடமா இருக்க போகுது அம்மு ? நான் உன் புருஷன், இதெல்லாம் புருஷன், பொண்டாட்டி நடுவுல நடக்குறது   விஷயம் தான் அதனால அவங்களுக்கு புரியும் “ என்று கேஷவ் சொன்னதும், அவன் சொன்ன வார்த்தைகளில் மைராவின் முகம் வெட்கத்தில் சிவந்து அவனைக் கடந்து பாத்ரூமுக்குள் சென்றாள்  ஆனால் அவள் மனதில் சட்டென ஒரு எண்ணம் தோன்றியதும், அவள் ஒரு கொடிய பார்வையுடன் அவனிடம் திரும்பினாள். அவளது முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் பயத்தால் கேஷவ் விழுங்கியபடி ஒரு அடி பின்வாங்கினான்.

“ கெட்சப் உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா சட்டை எல்லாம ரூம விட்டு வெளிய போவீங்க ? “ என்று மைரா கோவமாக கேட்டதும், “ க்ரிஷ் திரும்பி வருவான்னு எனக்குத் தெரியாது மா, அதுவும் இல்லாம அவன் என்ன சட்ட இல்லாம பார்த்து இருக்கான் “ என்று சொன்னான் கேஷவ் ஆனால் மைரா மீண்டும் அவனை முறைத்து, “ க்ரிஷ் பத்தி யார் கவலைப்படுறா இப்போ ? அவனுக்கு பக்கத்துல இன்னொரு உருவம் இருந்தத நீங்க பார்த்தீங்களா ? ரோஷினி உங்கள சட்டை இல்லாமல் பார்த்திருக்கா “ என்று சொன்னாள்.

“ அவ அங்க இருந்தாளா ? “ என்று கேஷவ் கேட்க, மைரா கைகளை மார்போடு சேர்த்து வளைத்து புருவங்களை நெரித்தாள்.

“ என் கண்ணு, என் பொண்டாட்டி மேல மட்டும் தான் இருக்கும். இன்னைக்கு நடந்தது இன்னொரு முறை நடக்காது, ஸாரி அம்மு, ப்ளீஸ் “ என்று கேஷவ் அவளிடம் கெஞ்சினான்.

“ அந்த பயம் இருக்கட்டும், இனிமே ஒழுங்கா இருங்க “ என்று சொல்லிவிட்டு அவள் பாத்ரூமுக்குள் நுழைந்ததும் கண்ணாடி முன் நின்று தாடியை தடவியபடி கேஷவ் சிரித்தான்.

“ உன் பொண்டாட்டி ஒன்னும் தெரியாத அப்பாவி இல்ல கேஷவ். உன்னோட எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள். அவ உன்  வாழ்க்கைய ஒரு வானவில் மாதிரி வர்ணம் தீட்டி இருக்கா. அவ கூட சேர்ந்து இந்த வாழ்க்கைய அனுபவிச்சு வாழ காத்துட்டு இருக்கேன். நீ என்ன, என்ன செய்ற அம்மு ? “ என்று சொல்லி புன்னகைத்தான்.

****************************************

முன்னோட்டம்: 

“ புதுசா கல்யாணம் ஆன புருஷன், பொண்டாட்டி நடுவுல இதெல்லாம் நடக்குறது தான். நமக்குள்ள எதுவும் நடக்கலனாலும், எல்லாருக்கும் நாம ஹனிமூன் டைம்ல இருக்க ஜோடி மாதிரி தெரிய நீ எல்லா விஷயமும் செய்ற “

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 9:43 am

[…] 35.நான் அவர கட்டிப்பிடிச்சுட்டேன்! […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!