பொதுவான நண்பர்கள் மூலம் க்ரிஷ் ரோஷினி, நைனா, மைரா மற்றும் கேஷவ் ஒன்றாக இருந்தனர். அவர்களில் சிலர் மைரா, க்ரிஷை திருமணம் செய்யாமல் அவனது சகோதரனை திருமணம் செய்து கொண்டாள் என்று ஆச்சரியப்பட்டனர், ஆனால் மைரா அவர்களின் கேள்விகளுக்கு முகம் சுளித்தாள்.
பின்னர் அவர்கள் அனைவரும் சில விளையாட்டுகளுக்கு அழைக்கப்பட்டனர், கேஷவும், மைராவும் அருகருகே, அவன் அவளது நாற்காலியின் பின்புறத்தில் கையை வைத்தபடி அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவராக ஒரு கிண்ணத்திலிருந்து ஒரு சீட்டை எடுத்து அதில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருந்தது. க்ரிஷின் முறை வந்ததும் அவன் ஒரு சீட்டை எடுத்து நிகழ்வை ஏற்பாடு செய்தவரிடம் கொடுத்தான்.
“ நீங்க யார அதிகம் லவ் பண்றீங்க ? “ என்று அந்த நபர் கேட்டதும், ரோஷினி புன்னகையுடன் அவன் தோளில் சாய்ந்து, வெட்கப்படுவது போல் நடித்து அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.
“ என் அம்மாவ தான் இந்த உலகத்துலையே அதிகம் லவ் பண்றேன் “ என்று க்ரிஷ் சொன்னதும், ரோஷினிக்கு ஒரு வாளி நிறைய ஐஸ் வாட்டர் அவள் மீது வீசப்பட்டது போல் இருந்தது. அவளால் யாரையும் திரும்பிப் பார்க்க முடியாமல், ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரியாதபடி புன்னகைத்தாள்.
கேஷவும், மைராவும் க்ருஷைப் பார்த்துக் கொண்டிருந்தனர், அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல், ரோஷினியை ஒரு முறை கூட பார்காமல் அமர்திருந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு கேஷவின் முறை வந்து, அவன் ஒரு சீட்டை எடுத்து அந்த நபரிடம் கொடுத்தான். அவனது கேள்வி பதிலை அறிய மைரா ஆர்வமாக இருந்தாள்.
“ நீங்க கிஸ் பண்ண முதல் பொண்ணு யாரு ? “ என்று அந்த நபர் கேட்டதும், அந்தக் கேள்வியைக் கேட்டு மைராவும் பெருமூச்சு விட, ரோஷினி மைராவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள். கேஷவ் தன் கழுத்தை தேய்த்துக் கொண்டு மைராவை முதலில் பார்த்தான்.
“ என் மனைவி தான் நான் கிஸ் பண்ண முதல் பொண்ணு “ என்று கேஷவ் பதில் சொல்ல, அதைக் கேட்ட மைரா அதிர்ச்சியடைந்தாள், எரிச்சல் அடைந்த ரோஷினி பாத்ரூம் பயன்படுத்துவதற்கான சாக்கில் வெளியேறினாள்.
கேஷவ், மைராவைப் பார்த்து புருவத்தை உயர்த்த, அவள் அவனை நெருங்கி சாய்ந்து, “ ஏன் பொய் சொன்னீங்க ? இதுவரை யாருக்கும் முத்தம் கொடுத்ததில்லையா? “ என்று கேட்டாள். அதற்கு கேஷவ் அவளிடம், “ நான் பொய் சொல்லல அம்மு. உனக்கு 4 வயசு இருக்கும் போது வீட்டுக்கு வந்த முதல் நாளே நீ என்ன கிஸ் பண்ண அதுக்கு அப்புறம் அடுத்த நாள் நீ என் பெட்ல தூங்கிட்டு இருக்கும் போது யாருக்கும் தெரியாம நான் உன்ன கிஸ் பண்ணேன் “ என்று கூறினான்.
“ அது அறியாத வயசுல செல்லமா கொடுக்குற முத்தம் கெட்சப். உண்மையாவே, அதுக்கு அப்புறம் நீங்க யாருக்கும் முத்தம் கொடுக்கலையா? “ என்று மைரா கேட்க, “ இல்ல, என்னோட எல்லாத்துலையும் நீ தான் எனக்கு முதல் அனுபவமா இருப்ப “ என்று கேஷவ் பதில் சொன்னதும், தன் முதல் முத்தத்தை இழந்த இரவை நினைவு கூர்ந்தபோது மைராவின் முகம் வெளிறிப் போனது. கேஷவ் தன் விரல்களை அவளது விரல்களோடு இணைத்து லேசாக கசக்கி, “ எதுக்காகவும் உன் சிரிப்ப தியாகம் செய்யக் கூடாதுனு நான் சொல்லி இருக்கேன்ல ? உன்னோட சிரிப்பு எனக்கு பொக்கிஷம் மாதிரி அம்மு, எப்பவும் சிரிச்சிட்டே இரு “ என்று கூறினான்.
அவளது கவனத்தை திசை திருப்ப அவளது கல்லூரி வாழ்க்கையைப் பற்றி அவன் கேள்வி கேட்கத் தொடங்கினான், அப்படியே அவர்கள் தங்கள் சொந்த உலகத்தில் தொலைந்து போனார்கள். நைனா மைராவை உலுக்கி, அவளது கவனத்தை ஈர்க்க அவள் பெயரைக் கத்தினாள்.
“ பாவம் அந்த நிகழ்ச்சி நடத்துற பொண்ணு, அஞ்சாவது முறையா உன்ன கூப்பிடுறா “ என்று நைனா சொன்னதும், மைரா மன்னிப்பு கேட்டுவிட்டு கிண்ணத்திலிருந்து ஒரு சீட்டை எடுத்து அந்த நபரிடம் கொடுத்தாள்.
“ உங்க வாழ்க்கையில ரொம்ப வினோதமான, மறக்க முடியாத தருணம்? “ என்று அந்த பெண் கேட்டதும், மைரா கேஷவை குறும்புடன் பார்த்தாள், என்ன நடக்கப்போகிறது என்று அவனுக்குத் தெரிந்தது.
“ என் கணவர் அவர கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஐஸ் கிரீம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணாரு அதுவும் எங்களுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி “ என்று மைரா சொன்னாள்.
“ ஐஸ்கிரீம் சாப்பிட்டு அவர கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டீங்களா ? “ என்று அந்த பெண் அதிர்ச்சியோடு கேட்க,
“ ஐஸ்கிரீம் தான் எல்லாம், ஆனா அதுக்கு அப்புறம் எனக்கு வைர மோதிரம் கொடுத்தாரு “ என்று சொல்லி மைரா பெருமிதப் புன்னகையுடன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் காட்டினாள்.
விளையாட்டு முடிந்ததும், அனைவரையும் இரவு உணவை சாப்பிட சொல்லி அமைப்பாளர் அறிவித்தார். கேஷவ் அவனுக்கும் மைராவுக்கும் உணவை கொண்டு வந்ததும் இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர், நைனா மைராவுக்கு அருகில் அமர்ந்தாள்.
மைரா பன்னீர் 65 சாப்பிட்டு அதன் சுவைக்கு முனகினாள். பின்னர் கேஷவை பார்த்து, “ கெட்சப், இது ரொம்ப நல்லா இருக்கு பாருங்க “ என்று சொல்லி ஒரு துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டினாள். அவள் வேறு எதையும் சாப்பிடாமல் இனிப்புக்கு செல்ல எத்தனிக்க, கேஷவ் அவளை தடுத்து நிறுத்தி உட்கார வைத்தான்.
“ ஸ்வீட் வேணும்னா முதல்ல டின்னர் சாப்பிட்டு முடி “ என்று கேஷவ் சொல்ல, “ என்ன மிரட்டாதீங்க கெட்சப். எனக்கு டின்னர் வேணாம், ஸ்வீட், ஐஸ் கிரீம் மட்டும் இப்போ போதும் “ என்று கூறினாள் ஆனால் கேஷவ் மறுத்துவிட்டு, அவள் தட்டை எடுத்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான், அவள் சாப்பிட மறுக்கும் ஒவ்வொரு முறையும் அவளை முறைத்தான். அவள் சாப்பிட்டு முடித்ததும், அவன் அவள் வாயை ஒரு டிஷ்யூ பேப்பரால் துடைக்க, மைரா இனிப்புகளை எடுக்க நைனாவை அழைத்து சென்றாள். மைரா சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு கேக்கின் முதல் துண்டை கேஷவுக்கு ஊட்டினாள்.
“ நான் பாத்ரூம் யூஸ் பண்ணிட்டு வந்துடறேன். நீ உன் ப்ரெண்ட்ஸ் கூட இரு “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க இங்க எங்களுக்காக வெயிட் பண்ணுங்க, நாங்க எல்லாரையும் பார்த்துட்டு திரும்பி வரோம் “ என்று மைரா கூறினாள்.
கேஷவ் அங்கிருந்து கிளம்பியதும், மைராவிடமிருந்து கிண்ணத்தை எடுத்து கொண்டு நைனா அவள் கன்னங்களைக் கிள்ளினாள்.
“ என் அண்ணன் உன்ன அவரோட விலைமதிப்பில்லாத பொக்கிஷம் மாதிரி பாத்துக்குறாரு. அவருக்காக நீ இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்க? “ என்று நைனா கேட்க, “ நாங்க நாங்களா இருக்கோம் நைனா. அவர் எப்பவும் அக்கறையா இருப்பாரு, இப்போ கல்யாணம் ஆனதுல கூடுதல் அக்கறையா இருக்காரு “ என்று சொன்னாள் மைரா.
“ இத பத்தி அப்புறம் இன்னொரு நாள் பேசுவோம், இப்போ மத்தவங்கள சந்திக்கலாம் “ என்று நைனா சொல்ல, இருவரும் ம் ஒவ்வொருவராக சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஆண்களும் பெண்களும் ஒரு கூட்டமாக கூடி நின்று கூச்சலும் விசில் சத்தமும் கேட்டதும் இருவரும் என்னவென்று பார்க்க அவர்களை நெருங்க, சில ஜோடிகள் முத்தமிடுவதைக் கண்டு மைரா மூச்சிரைத்தாள்.
“ என்ன நடக்குது இங்க ? அவங்க ஏன் இங்க கிஸ் பண்ணிட்டு இருக்காங்க ? மத்தவங்க ஏன் அவங்கள பார்த்துட்டு இருக்கீங்க ? “ என்று நைனா கேட்க, “ யார் நல்லா முத்தம் கொடுக்குறாங்கனு போட்டி நடக்குது “ என்று ஒருவன் சிரித்துக் கொண்டே அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான்.
மைரா நைனாவை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
“ கெட்சப் என்ன கிஸ் பண்ணா எப்படி இருக்கும் ? என்ன கொடுமை கடவுளே ? மைரா நீ ஏன் இப்படியெல்லாம் யோசிக்குற ? உனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சா ? அவர் உன் மனச நல்லா கெடுத்து வெச்சுருக்காரு, தேவையில்லாம யோசிக்காத “ என்று மனதில் நினைத்தபடி தன் எண்ண ஓட்டத்திற்கு கடிவாளம் போடா முயன்றாள்.
“ மைரா, நீ என்ன நினைக்குற ? “ என்று நைனா கேட்க, “ ஒண்ணுமில்ல, வேலை பத்தியும், அர்ச்சனா அம்மா பத்தியும் யோசிச்சிட்டு இருந்தேன் “ என்று பொய் சொல்லி சமாளித்தாள் ஆனால் அவள் எண்ண ஓட்டம் நிற்கவில்லை. “ அவர் என் புருஷன் தானே, நாங்க கிஸ் பண்ணா அதுல என்ன தப்பு ? அவருக்கு என்ன கிஸ் பண்ணனும் எண்ணம் இருக்குமா ? கடவுளே, எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சு தான் போல. மைரா இந்த என்னத்தையெல்லாம் விடு. எங்களுக்குள் எந்த காதல், ரொமான்ஸ் மாதிரி எந்த விஷயமும் இல்ல. அவர் உன்னோட ப்ரெண்ட், ஏற்கனவே பண்ண தப்ப மறுபடியும் செய்யாத “ என்று நினைத்துக் அவள் பெருமூச்சுடன் பாத்ரூம் செல்ல முடிவு செய்தாள்.
மைராவும், நைனாவும் பாத்ரூமை நோக்கி சென்ற போது, கல்லூரியில் ஒரு முறை மைராவுடன் தவறாக நடந்து கொள்ள முயன்ற அதே நபரை பார்த்ததும் நின்றனர்.
“ நைனா, நாம் திரும்பிப் போகலாம். இப்போ எந்த பிரச்சனையும் நடக்குறத நான் விரும்பல “ என்று மைரா சொன்னதும் இருவரும் திரும்பினார்கள், ஆனால் அவன் அவர்களை அழைத்ததும் நைனா மைராவின் கையை அழுத்தி பிடித்துகொண்டதும் இருவரும் அவனை நோக்கித் திரும்பினார்கள்.
“ ஹாய் மைரா, நீ என்ன சந்திக்க வெறுப்பனு எனக்குத் தெரியும், ஆனா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க விரும்புறேன். கடந்த காலத்துல நடந்த சம்பவங்களுக்காக நான் ரொம்ப வருந்துறேன். நான் இப்போ அதே ஆள் இல்ல, நான் முட்டாள்தனமா அப்படி பண்ணிட்டேன், இப்போ எனக்கு கல்யாணம் ஆகி, 8 மாச பெண் குழந்த இருக்கு, ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு “ என்று அவன் சொன்னதும், “ நான் உன்ன மன்னிக்குறேன், நீ உண்மையிலேயே மாறிட்டனு நம்புறேன். “ என்றாள் மைரா.
“ ஸாரி மைரா, கடந்த காலத்துல நான் பண்ண எல்லாத்துக்கும் நான் வெட்கப்படுறேன். இப்போ ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவா இருக்கும் போது நான் எவ்ளோ கொடூரமா நடந்துருக்கேன்னு புரியுது. ப்ளீஸ் மன்னிச்சிடு “ என்று அவன் சொல்ல, அவர்கள் பேசுவதைப் பார்த்த க்ரிஷ் அவர்களை நோக்கி நடக்க, ரோஷினி அவனை பின்தொடர்ந்தாள்.
“ மைரா, என்ன ஆச்சு ? எதுவும் பிரச்சனையா ? “ என்று க்ரிஷ் கேட்க, க்ரிஷுக்கும், அந்த நபருக்கும் இடையே பார்த்து மைரா இல்லை என்று தலையை அசைத்தாள். க்ரிஷ் அந்த நபரை பார்த்து, “ யார் இவரு ? “ என்று கேட்டான்.
அவனது கேள்வியால் அதிர்ச்சியடைந்த மைராவும் நைனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு க்ரிஷிடம் திரும்பி, “ உனக்கு இவர தெரியாதா? “ என்று இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியோடு கேட்டனர்.
“ இல்ல, நான் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான ஆளா ? “ என்று க்ரிஷ் குழப்பத்துடன் கேட்க, மைரா பதில் சொல்வதற்குள் அந்த நபர், “ இல்ல, நான் வேற டிபார்ட்மெண்ட்ல படிச்சேன். மைராவும் நானும் சும்மா பேசிட்டு இருந்தோம் “ என்று கூறிவிட்டு பின்னர் மைராவை பார்த்து, “ நான் கிளம்புறேன் மைரா “ என்று சொல்லி புறப்பாட்டன்.
“ க்ரிஷ், நான் உன்ன அப்புறம் பார்க்குறேன் “ என்று சொல்லிவிட்டு மைரா, நைனாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று அந்த நபரை வழி மறித்து நின்றாள்.
“ க்ரிஷ் ஏன் உன்ன தெரியாத மாதிரி பேசுறான் ? “ என்று மைரா அவனிடம் கேட்டதும், “ ஏன்னா, நாங்க சந்திச்சு பேசுனதே இல்ல. காலேஜ்ல நீ பெரும்பாலும் அவன் கூட இருப்ப அதனால எனக்கு அவன தெரியும் “ என்று அவன் கூறினான்.
“ அந்த சம்பவத்துக்கு அப்புறம் உன்ன யாரோ அடிச்சதா கேள்விப்பட்டேன். யார் உன்ன அடிச்சது ? “ என்று மைரா ஆவலுடன் கேட்க, “ எனக்குத் தெரியாது, ஆனா அவர் ஒரு மிருகம் மாதிரி அடிச்சு என் எலும்ப உடைச்சாரு. நான் பத்து மாசம் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருந்துச்சு. அது மட்டும் இல்ல, உன்ன விட்டு விலகி இருக்க சொல்லி எச்சரிகை பண்ணாரு. என் மனைவியும், பொண்ணும் எனக்காக வெயிட் பண்ணுவாங்க, நான் கிளம்பனும் “ என்று சொல்லி அவன் கிளம்பி சென்றான்.
மைரா சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அதே அளவு அதிர்ச்சியடைந்த நைனாவும் மைராவை இழுத்து உட்கார வைத்தாள்.
“ க்ரிஷ் தான் அவன அடிச்சதா நீ என்கிட்ட சொன்ன ? “ என்று மைரா கேட்க, “ அவன் மட்டும் தான் உன்ன யார் கூடவும் பேச விடாம இருந்தான் அதனால அவனா தான் இருக்கும்னு நெனச்சேன். அவன் இல்லனா வேற யார் அப்படி செஞ்சிருக்க முடியும் ? “ என்று பதில் சொன்னாள் நைனா.
கிரிஷ் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மைரா அவனை அழைத்து, “ க்ரிஷ், காலேஜ்ல ஒருத்தன் என் கைய புடிச்சு இழுத்தான் சொல்லி நான் அவன மேல புகார் கொடுத்தேன் உனக்கு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கா ? “ என்று மைரா கேட்க, “ ஆமா, நான் உன்ன காலேஜ்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போய் காயத்துக்கு மருந்து போட்டேன் “ என்று அந்த நாளை நினைவுப்படுத்தினான் க்ரிஷ்.
“ என்ன வீட்ல் இறக்கிவிட்ட அப்புறம் நீ எங்க போன? “ என்று கேட்ட போது மைராவின் இதயம் ஒரு இனம் புரியாத பதற்றத்துடன் துடித்தது. அவன் பதில் சொல்வதற்குள் ரோஷினி குறுக்கிட்டு,” அத நீ என்கிட்ட கேட்கணும் மைரா “ என்று கூறினாள்.
“ ரோஷினி, வாய மூடு. நான் அவகிட்ட பேசறேன், கொஞ்ச நேரம் இங்க இருந்து போ “ என்று க்ரிஷ் அவளை தடுத்தான் ஆனால் மைரா, “ அவன் எங்க இருந்தான் ரோஷினி ? “ என்று கேட்டாள்.
“ அவன் என்கூட இருந்தான். அவன் அந்த சம்பவத்த பத்தி என்கிட்ட சொன்னான். அது மட்டும் இல்ல, அவன அடிக்க பிளான் பண்ணான் ஆனா நான் தான் அவன தடுத்தேன். ஒரு விஷயத்த வன்முறையோட கையாள்றது நல்லது இல்ல, அதுவும் இல்லாம ஏற்கனவே அவன் மேல நீ புகார் பண்ணிட்ட அதனால அந்த பிரச்சனைய அப்படியே விட சொல்லி நான் தான் சொன்னேன். அன்னைக்கு தான் நாங்க ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருந்த ஈர்ப்பு பத்தி வெளிப்படையா சொன்னோம் “ என்று ரோஷினி கடைசி வாக்கியத்தை வெட்கத்தோடு சொன்னாள்.
“ நான் எவ்ளோ பெரிய முட்டாளா இருந்தா க்ரிஷ் தான் எனக்காக சண்ட போட்டதா நெனச்சு இருப்பேன் ? ஆனா அவனுக்கு புடிச்ச பொண்ணு கூட இருந்துருக்கான் “ என்று மனதில் நினைத்து உறைந்து நின்ற மைராவை பார்த்து, “ மைரா “ என்று க்ரிஷ் மெல்லிய குரலில் அழைக்க, “ என்ன கிண்டல் பண்ணதுக்காக நீ எப்போவாச்சும் யாரையாவது அடிச்சு இருக்கியா ? “ என்று கேட்டாள்.
அப்போது மீண்டும் குறுக்கிட்டு, “ அவன் ஏன் அப்படி செய்யணும் ? “ என்றாள் ரோஷினி. பொறுமை இழந்த மைரா அவளிடம், “ நான் அவன்கிட்ட பேசிட்டு இருக்கேன் ரோஷினி, அதனால அவன் பதில் சொல்லட்டும், நீ அமைதியா இரு “ என்று கத்தினாள்.
மைராவின் கோவத்தை பார்த்த க்ரிஷ், “ இல்ல மைரா “ என்று மெல்லிய குரலில் சொன்னான். அவன் மேலும் பேசுவதற்குள், “ கெட்சப் எனக்காக வெயிட் பண்ணுவாரு, அவர் என்ன தேடி கவலையோட இருப்பாரு, நைனா வா போகலாம் “ என்று சொல்லி, அவனது விளக்கங்கள் எதையும் பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, புறக்கணித்தபடி அங்கிருந்து சென்றாள்.
கேஷவைப் பார்த்ததும் புன்னகைத்தவள் அவன் தோளில் சாய்ந்து அமர்ந்தாள். கேஷவ் அவளது உள்ளங்கையை அன்பாக அழுத்தி பிடித்ததும், நைனா அவர்களின் புகைப்படங்களை கிளிக் செய்தாள்.
***********************************
முன்னோட்டம்:
“ என் பேரு இவ்ளோ செக்ஸியா இருக்கும்னு நீ இப்படி முனகுற வரை தெரியல அம்மு. நீ ரொம்ப அழகா இருக்க, என்னால உன்ன நாள் முழுக்க முத்தம் கொடுத்தா கூட எனக்கு போதுமானதா இருக்காது “

2 comments
[…] நாங்க கிஸ் பண்ணா அதுல என்ன தப்பு ? […]
[…] 37.நாங்க கிஸ் பண்ணா அதுல என்ன தப்பு ? […]