கேஷவ் மற்றும் மைரா இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது நிகழ்ச்சியின் முடிவை அறிய காத்திருந்த அவர்களின் பெற்றோர் அவர்களை வரவேற்றனர். கேஷவ் ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும், விருந்தினர், தலைமையாசிரியர் மைராவின் திறமை மற்றும் முயற்சிகளைப் பாராட்டிய விதம் பற்றியும் அவர்களிடம் தெரிவித்தான்.
அவளது வெற்றியைக் கொண்டாட அவன் வாங்கிய இனிப்புகளையும் ஐஸ்கிரீமையும் அனைவருக்கும் கொடுத்தான். அவர்கள் தங்கள் அறைக்குள் நுழைந்ததும் அவன் கதவை மூடினான். மைரா தன் தலைமுடியை முன்னால் இழுத்து நகைகளை கழற்ற எத்தனிக்க, கேஷவ் அவளை தடுத்து தன் பக்கம் திருப்பினான்.
அவளைத் தனக்கும் கண்ணாடி முன் இருந்த டேபிளுக்கும் இடையில் வைத்து நகர விடாமல் மறித்தான். மைரா முகம் சிவந்து அவன் கண்களைச் சந்திக்காமல் அவன் மார்பைப் பார்க்க, கேஷவ் அவள் தாடையைப் பிடித்து தலையை நிமிர்த்தி அவனைப் பார்க்க செய்தான்.
“ நான் என்ன கேட்டாலும் தருவியா அம்மு ?” என்று கேஷவ் கேட்டதும், மைரா மெல்ல ஆம் என்று தலையை அசைத்தாள்.
கேஷவ் அவள் காதில் சாய்ந்ததும் அவன் மூச்சுக்காற்று அவள் மடல்களை விசிறியது.
“ எனக்காக மட்டும் ஒரு பாட்டு பாடுங் அம்மு. உன் தேன் குரல நான் தனியா கேட்டு அதுல மூழ்கி போகணும் “ என்று சொல்லி அவன் பின்னால் நகர்ந்து அவள் கண்களைப் பார்த்தான். மைராவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள், ஆனால் அவனது பார்வையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அவனது ஆன்மாவை அடைய முயற்சிக்கும் அவளது ஆன்மாவின் கிளர்ச்சியை அவள் உணர்ந்தாள். அவளது இதயம் காட்டுத்தனமாகத் துடிக்கத் தொடங்கி, அவளது விலா எலும்புக் கூட்டிலிருந்து வெளியே குதிக்கத் தயாராக இருந்தது, ஆனாலும் அவன் பார்வையை விலக்கவில்லை.
அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…
மைரா பாட ஆரம்பித்ததும், கேஷவ் அவளது பாடலைக் கண்டு புன்னகைத்து புருவங்களை நெரித்தான், ஆனால் மைரா அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள், அவளது சிவந்த கன்னங்கள் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன.
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…
என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல…
உன் பக்கம் பார்த்தேன்…
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன…
காணாமல் போனேன்…
கேஷவ் அவள் தாடையைப் பிடித்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து மேலும் சிவப்பாக மாற்றினான்.
தில்தில் ரூபா ரூபா…
என்ன மந்திரம் பண்ண…
புல்புல் தாரா தாரா…
என்ன தந்திரம் பண்ண…
கேஷ்வ் தன் ஒரு கையால் அவளது வெற்று இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை அருகில் இழுத்து, அவளது கழுத்தில் இருந்த முடிகளினூடே தன் விரல்களை நுழைத்தான். அவனது வசீகரத்தையும் ஆளுமையையும் எதிர்க்க முடியாமல் மைராவின் உடல் அவனது ஸ்பரிசத்தில் உருகத் தொடங்கியது, அவளது இரத்தம் இன்னும் கொஞ்சம் சூடாக மாறியது, அவளது ஹார்மோன்கள் அவளது உடலை எல்லா வழிகளிலும் அவனை அதிகம் விரும்புவதற்கான விளிம்பிற்கு கட்டாயப்படுத்தின.
அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு விழுங்கினாள். அவளது மார்பு பெருமூச்சுடன் விம்மியது.
“ கேஷவ் “ என்று மைரா அவனை அழைத்ததும், கேஷவ் தன் உதடுகளை அவள் உதடுகள் மேல் பதித்தான். இருவரும் ஒருவருக்கொருவர் முத்தத்தில் முனகிக் கொண்டு இருந்தார்கள். முத்தம் கலையாமல் அவளை அணைத்து கட்டிலில் படுக்க வைத்தான். மைராவின் விரல்கள் அவனது தலைமுடிகளினூடே கோதி அவனை அருகில் இழுக்க, அவளது இடையையும் வயிற்றையும் வருடிக் கொண்டிருந்த கேஷவின் கைகள் மெல்ல மெல்ல மேலே நகர்ந்தன, அவன் அவளது மேடுகளைத் தொடுவதற்குள் அவன் தன் ஆசையை எரிக்க எல்லையைத் தாண்டப் போகிறான் என்பதை உணர்ந்த போது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
சட்டென அவன் நகர்ந்து விரக்தியுடன் தலைமுடியை விரல்களால் கோதிக் கொண்டிருந்தான். மைராவும் அதே அளவு விரக்தியடைந்து படுக்கையில் உட்கார்ந்து காற்றுக்காக மூச்சிரைத்தாள்.
“ ரொம்ப கஷ்டப்பட்டு என்ன நானே கட்டுப்டடுத்துறேன் அம்மு. என்னால உன்ன தொடாம இருக்க முடியல. ஒவ்வொரு நாளும் உன்ன முழுசா எனக்கு சொந்தமாக்கி உரிமை கொண்டாட கொஞ்சம் கொஞ்சமா என் எல்லையை தாண்டுறேன். உன் அனுமதி இல்லாம எதுவும் நடக்க நான் விரும்பல “ என்று சொல்லி கேஷவ் கிளம்புவதற்காக எழுந்தான். ஆனால் மைரா அவன் மணிக்கட்டைப் பிடித்து அவனைத் தடுத்ததும் ஒரு நொடியில் அவன் அவள் பக்கம் திரும்பி அவள் உதடுகளைப் பிடித்து வெறித்தனமாக முத்தமிட்டான்.
மைரா அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க போராடிக் கொண்டிருந்தாள், ஆனால் அந்த முத்தம் அவர்கள் பகிர்ந்து கொண்ட முத்தங்களிலிருந்து முற்றிலும் வேறு விதமாக இருந்தது. மூச்சிரைக்க அவன் முத்தமிடுவதை நிறுத்தியதும் அவன் தாடைகள் இறுகின.
“ என்ன மன்னிச்சிடு அம்மு. நீ டிரஸ் மாத்து நான் கொஞ்ச நேரத்துல வரேன். என்ன நானே கொஞ்சம் அமைதிப்படுத்தனும் “ என்று கேஷவ் கூறிவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை சாற்றிவிட்டு கண்களை மூடி ஷவருக்கு கீழ் நின்றான்.
“ இத்தன வருஷமா கட்டுப்பாட்டுல வெச்சுருந்த என்னோட ஆசைகள எப்படி இப்போ என்ன ஆட்கொள்ள விட்டேன் ? என் அம்மு ரொம்ப அப்பாவி, ரொம்ப மென்மையானவ. என் சரீர ஆசைகளுக்காக என்னால அவள கட்டாயப்படுத்த முடியாது “ என்று நினைத்து குளிர்ந்த நீர் தன்னை அமைதிப்படுத்த அனுமதித்தான்.
“ உன்னோட ஆசைகள அடக்கி வெச்சுட்டு அவ உனக்காக தயாரா இருக்குற வர அவ கிட்ட ஒழுங்கா நடந்துக்கோ “ என்று தன்னை தானே எச்சரித்தான்.
அவனது நரம்புகள் அமைதியடையும் வரை அவன் தண்ணீருக்கு அடியில் நின்றான். ஈர ஆடைகளை களைந்துவிட்டு இடுப்பில் துண்டை சுற்றிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தான். மைரா தனது இரவு ஆடைகளை மாற்றிக்கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் அவனிடம் விரைந்ததும், அவன் அவளைப் பார்த்து புன்னகைத்து அவள் நெற்றியில் தன் உதடுகளை பதித்தான்.
“ கெட்சப்….” என்று மைரா மெல்லிய குரலில் அழைத்ததும், “ உன்னை பயமுறுத்தினதுக்கு என்ன மன்னிச்சிடு அம்மு. நான் டிரஸ் பண்ணிட்டு வரேன், நாம தூங்கலாம் “ என்று சொல்லி புன்னகைத்தான்.
“ நல்லா இருக்கீங்களா? “ என்று மைரா கேட்க, “ ரொம்பவே நல்லா இருக்கேன் அம்மு “ என்று பதிலளித்து அவள் தலைமுடியை வருடினான்.
அவன் ஆடை அணிந்து கொண்டதும் அவர்கள் வழக்கம் போல் படுக்கையில் படுத்து மேற்கொண்டு எதுவும் பேசாமல் உறங்கினர்.
காலையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கேஷவ் கண் விழித்தான். கதவை திறந்து பார்த்த போது அர்ச்சனா ஒரு தட்டில் காபி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தார்.
“ கேஷ்வ், மைராவ எழுப்பு, ரெண்டு பேரும் ரெடியாகுங்க. இந்த காபி குடிச்சிட்டு ரெண்டு பேரும் சீக்கிரம் கீழ வாங்க “ என்று அர்ச்சனா கூறியதும், கேஷவ் சரி என்று முனகியபடி அவரிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டான். தட்டை டீப்பாயில் வைத்துவிட்டு மைராவின் அருகில் அமர்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“ எழுந்திரு அம்மு. இன்னைக்கு சடங்கு இருக்கு அதனால அம்மா சீக்கிரம் கீழ வர சொல்லி இருக்காங்க “ என்று கேஷவ் கூறினான்.
மைரா கண்களைத் திறந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள். கேஷவ் அவளை எழுப்ப அவளை இழுத்தான் ஆனால் மைரா அவன் மார்பில் சாய்ந்து கண்களை மூடி தூங்கினாள். அவன் சிரித்துக் கொண்டே அவளை இரண்டு நிமிடம் இருக்க அனுமதித்தான்.
“ இன்னைக்கு சடங்குக்கு உனக்கு புதுப்புடவை வாங்கி இருக்கேன் அப்புறம் நான் வாங்கினேன் செயின் கூட உன்கிட்ட காட்டவே இல்ல “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க செலெக்ட் பண்ணா நல்லா இருக்கும். அது இருக்கட்டும், புடவைக்கு ப்ளௌஸ் என்ன செய்றது ? ப்ளௌஸ் இல்லாம என்னால புடவை கட்ட முடியாது “ என்றாள் மைரா.
“ எப்பவும் ஒரு வழி இருக்கும். பழங்காலத்துல பெண்கள் ப்ளௌஸ் இல்லாம தான் புடவை கட்டினாங்க. ஆனா நீ கவலைப்படாத. நான் உனக்கு ப்ளௌஸ் வாங்கி இருக்கேன் “ என்று குறும்பு சிரிப்புடன் கூறினான்.
அவன் சொன்னதை கேட்டதும் மைரா அவன் இடுப்பைக் கிள்ளினாள், அவன் புன்னகையுடன் மேலும் சில நிமிடங்கள் தலைமுடியை கோதிய பிறகு மைரா இறுதியாக தயாராக பாத்ரூமுக்குள் நுழைந்தாள். அவள் வெளியே வந்ததும் கேஷவ் குளிக்க சென்றான்.
அவன் வெளியே வந்த போது மைரா தனது தலைமுடியை உலர்த்தி, அவன் அணிவதற்கான ஆடைகளைத் தேர்ந்தெடுத்தாள். கேஷவ் ஷாப்பிங் பையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“ நான் அம்மா ரூம்ல ரெடியாக போறேன். நான் எல்லா நகையும் போடணும்னு அவங்க சொல்லி இருக்காங்க அதனால எனக்கு அவங்க உதவி வேணும் “ என்று மைரா சொன்னதும், கேஷவ் தலையை அசைக்க அவள் சென்றதும் அவன் பட்டு வேட்டியும், ஊதா நிற சட்டையும் அணிந்து கொண்டான். தலைமுடியை கோதிவிட்டு மொபைலை ஸ்க்ரோல் செய்தபடி கீழே இறங்கினான்.
அர்ச்சனா, மதன், ராஜன் மூவரும் பழங்கள், பூக்கள், விளக்குகள் ஆகியவற்றை வைப்பதில் மும்முரமாக இருந்தனர். க்ரிஷ் இரண்டு ரோஜா மாலைகளுடன் உள்ளே நுழைந்து டைனிங் டேபிளில் வைத்தான்.
வசுந்தரா அர்ச்சனாவின் அறையை விட்டு வெளியே வந்து, கேஷவிடம் மைராவின் ஒட்டியாணத்தை அவள் அலமாரியில் இருந்து கொண்டு வர கூறியதும், உடனடியாக அவர்களின் அறைக்கு சென்ற கேஷவ், மைராவுக்கு பரிசளித்த வளையலை ரோஷினி கையில் வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
“ என் ரூம்ல என்ன பண்ற ? “ என்று எரிச்சலுடன் கேட்ட கேஷவ், அவள் கையிலிருந்த வளையலைப் பிடுங்கி ஆள்காட்டி விரலை எச்சரிக்கை செய்யும் பாணியில் காட்டினான்.
“ என் ரூம்ல இருந்து வெளியே போ, இன்னொரு முறை என் ரூம் உள்ள வர நினைக்காத “ என்று எச்சரித்தான்.
“ நான் உங்க தம்பியோட வருங்கால மனைவி, அதனால என்ன ஒரு திருடி மாதிரி நடத்துறத நிறுத்துங்க. டிசைன் நல்லா இருந்துச்சு அதனால எனக்கும் ஒன்னு இது மாதிரி செய்ய தான் பார்த்தேன் “ என்று ரோஷினி விளக்கம் சொன்னாள்.
“ உன்ன சும்மா விடுறதுக்கு ஒரே காரணம் க்ரிஷ் மட்டும் தான் என்கிட்ட இருந்தும், என் மனைவி கிட்ட இருந்தும் விலகி இரு. என் மைராவோட பொருட்கள் எதையும் உன்னோட அழுக்கான கைகளால தொடாத. கெட் அவுட் “ என்று கேஷவ் கோவமாக அவளை விரட்டினான்.
ரோஷினி அவசரமாக வெளியே வர, கேஷவ் வளையலை மீண்டும் அலமாரியில் வைத்து விட்டு ஒட்டியாணத்தை எடுத்து கொண்டு வெளியே செல்வதற்கு முன்பு அலமாரியைப் பூட்டுவதை உறுதிசெய்தான்.
ஒட்டியாணத்தை வசுந்தராவிடம் கொடுத்து விட்டு மற்ற வேலைகளில் தன் அப்பாவுக்கு மற்றும் மாமாவுக்கு உதவ ஆரம்பித்தான்.
***************************************
முன்னோட்டம்:
“ இப்போ போய் சாப்பிடலாம். நாம எழுந்ததுல இருந்து பட்டினியா இருக்கோம். இப்போ என்னால உன்ன கிஸ் பண்ண கூட முடியாது. உங்க லிப்ஸ்டிக்கை நான் கெடுக்க விரும்பல ஆனா சாப்பிட்டு முடிஞ்சதும் சிறப்பா பண்ணிடலாம் “

1 comment
[…] 45.உன்ன தொடாம இருக்க முடியல […]