அர்ச்சனாவின் அறைக் கதவு திறந்து வசுந்த்ரா முதலில் வெளியே வர, மைரா அவரை பின்தொடர்ந்து நடந்தாள். கேஷவ் அவளுக்காக வாங்கிய லாவெண்டர் பட்டுப் புடவையை அவள் அணிந்திருந்தாள், மேலும் திருமணத்திற்காக அர்ச்சனா மற்றும் வசுந்த்ரா அவளுக்கு பரிசளித்த நகைகளால் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளது கூந்தல் பின்னப்பட்டு நிறைய மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவள் மீண்டும் திருமணத்திற்குத் தயாராக இருக்கும் மணப்பெண்ணைப் போலத் தெரிந்தாள்.
அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல் நின்று கொண்டிருந்த கேஷவைப் பார்த்த மைரா, தன் புருவங்களை உயர்த்தினாள், அவனும் பதிலுக்கு அவளைப் பார்த்து கண்ணடித்தான். மைரா நாக்கின் நுனியைக் கடித்துக் கொண்டு புன்னகையுடன் நின்றாள்.
வசுந்தரா அவளை மரப்பலகையில் அமர அழைத்துச் சென்றார். அக்கம்பக்கத்திலிருந்து சில பெண்கள் சடங்குக்கு அழைக்கப்பட்டனர், ஆண்கள் அமர்ந்து பெண்களை அவர்களின் வேலையைச் செய்ய அனுமதித்தனர். அர்ச்சனா நகைப் பெட்டியைத் திறந்து கேஷவ் வாங்கி வந்த தங்க தாலி செயினை எடுத்ததும் மைரா கேஷவைப் பார்த்து புன்னகைத்தாள்.
பெண்கள் ஆபரணங்களை சங்கிலியில் சேர்த்து, கேஷவை மைராவின் அருகில் அமருமாறு அழைத்தனர். அர்ச்சனா அந்த தாலி செயினை அவனிடம் கொடுக்க, அவன் அதை அவள் கழுத்தில் அணிவித்தான். பின்னர் அவர்களுக்கு மாலைகள் வழங்கப்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து மாற்றிக் கொண்டனர். எல்லோரும் அவர்களுக்கு பூக்களை தூவி ஆசீர்வதித்த பிறகு கேஷவ் அவள் எழுந்திருக்க உதவினான்.
அவர்கள் தங்கள் அறையை அடைந்ததும் கேஷவ் மைராவை ஒன்றாக புகைப்படம் எடுக்க இழுத்தான்.
“ நமக்கு கல்யாணம் நடந்த அன்னைக்கு இந்த கல்யாண கெட்டப்புல நம்ம ரூம் உள்ள வர முடியாம போச்சு ஆனா இன்னைக்கு அதுக்கு ஈடு பண்ணியாச்சு. நாம புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி இருக்கோம்” என்று கேஷவ் சொல்ல, இருவரும் சேர்ந்து பல புகைப்படங்களை கிளிக் செய்தனர். இறுதியாக மைரா மாலையை அகற்ற முற்பட்ட போது, அவன் அவளைத் தடுத்து சோபாவில் உட்கார வைத்துவிட்டு தனது அலமாரியைத் திறந்து ஒரு சிறிய பெட்டியில் இருந்த வளையல்களை எடுத்து அவள் கைகளில் அணிவித்தான்.
“ நீங்க மறுபடியும் எனக்கு பரிசு வாங்கிட்டு வந்தீங்களா கெட்சப் ? “ என்று மைரா கேட்டதும், “ ஆமா, நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு ஸ்பெஷல் நாளுக்கும் நான் உனக்கு ஒரு பரிசு தருவேன். இன்னைக்கு நமக்கு ஒரு முக்கியமான நாள் அதனால இந்த பரிசு “ என்று பதில் சொன்னான்.
“ நீங்க இன்னும் உங்க வேலைய பத்தி எனக்கு சொல்லவே இல்ல. இப்படி இவ்ளோ பரிசு கொடுக்குறத பார்த்தா நீங்க ஒரு கடத்தல்காரர் இல்ல ரகசியமா நிறைய பிசினஸ் செய்ற ஒரு கோடீஸ்வரரா இருப்பீங்கனு சந்தேகமா இருக்கு “ என்று மைரா கிண்டல் செய்ய கேஷவ் அதற்கு சிரித்தான்.
“ நான் கடத்தல்காரன் இல்ல. நான் இந்த நாட்டோட பொறுப்புள்ள குடிமகன். உனக்கு திருப்தி தர மாதிரி ஒரு விஷயத்த சொல்றேன். நீ ஒரு விஷயத்த சரியா யூகிச்சிட்ட. நான் ஒரு (IT consultant) தகவல் தொழில்நுட்ப ஆலோசகரா வேலை செய்றேன். அது மட்டும் இல்ல, நான் இன்னும் ரெண்டு வேலை செய்றேன், ஆனா அத பத்தி நீ தெரிஞ்சிக்க தயாரா இருக்கும் போது மட்டும் தான் சொல்லுவேன் “ என்று கேஷவ் கூறியதும், “ நான் தயாரா இருக்கேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் இப்போ தயாராக இருக்கேன்னு சொன்னா என்ன செய்வீங்க ? “ என்று குழப்பத்துடன் கேட்டாள் மைரா.
“ நீ ரெடியா இருக்கியானு முதல்ல எனக்கு தான் தெரியும் அம்மு. இன்னும் கொஞ்ச நாள் தான் இல்ல சில மாசம் தான். என்ன பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டிய நிலைக்கு பக்கத்துல நீ வந்துட்ட. கூடிய சீக்கிரம் என்ன பத்தி எல்லாத்தையும் நான் சொல்றேன் “ என்று கேஷவ் கூறினான்.
“ சரி நான் அந்த நாளுக்காக வெயிட் பண்றேன். இப்ப சொல்லுங்க நான் எப்படி இருக்கேன்? “ என்று மைரா உற்சாகமாக கேட்டாள்.
“ ரொம்ப ரொம்ப அழகா, நேர்த்தியா இருக்க அம்மு “ என்று கேஷவ் பதில் சொன்னான் ஆனால் மைரா அவனை முறைத்து உதடுகளை சுழித்தாள். கேஷவ் அவள் முகத்தை இறுக்கி லேசாக அசைத்து அவள் இமைகளை முத்தமிட்டான்.
“ இந்த உலகத்திலேயே ரொம்ப அழகான பொண்ணா எப்பவும் நீ தான் இருப்ப அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “ பொய் சொல்லாதீங்க, நான் கண்ணாடியில என்ன பார்த்தேன். நான் கொஞ்சம் குண்டா இருக்கேன் ஆனா நீங்க என்ன அழகுனு சொல்றீங்களா ? “ என்று கூறினாள்.
“ இந்த கேள்விய உன் மனசுல நல்ல வெச்சுக்கோ, இதுக்கு நான் சரியான நேரத்துல பதில் சொல்வேன். இப்போ நீ ரொம்ப அழகான பொண்ணு தான்னு நான் சொல்றத நம்பு. நீ கொழுகொழுனு, அழகா, கவர்ச்சியா இருக்க. செக்ஸியா இருக்கனு சேர்த்து சொல்லட்டுமா ? “ என்று கேட்டு கேஷவ் கண்ணடிக்க, மைரா கன்னத்தின் உட்புறத்தைக் கடித்து வெற்று முகத்தை வைத்துக் கொண்டாள், ஆனால் அவன் அவளது உதடுகளின் ஓரத்தில் முத்தமிட்டதும் புன்னகைத்தாள்.
“ இப்போ போய் சாப்பிடலாம். நாம எழுந்ததுல இருந்து பட்டினியா இருக்கோம். இப்போ என்னால உன்ன கிஸ் பண்ண கூட முடியாது. இப்போ உன் லிப்ஸ்டிக்கை நான் கெடுக்க விரும்பல ஆனா சாப்பிட்டு முடிச்சதும் சிறப்பா பண்ணிடலாம்.” என்று கேஷவ் கூறியதும் அவர்கள் அறையை விட்டு வெளியேறினர்.
கடைசி படிக்கட்டுகளை அடைந்ததும் மைரா கேஷவை இழுத்து, “ நான் கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக் மட்டும் தான் பயன்படுத்துவேன் கேஷவ் “ என்று மெல்ல அவன் காதில் சொன்னாள்.
மைரா அவனைக் கடந்து செல்ல, கேஷவ் அவள் விலகிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான். மைரா உட்கார்ந்ததும், கேஷவ் ஒரு புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்தான். மைரா அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தி அவனது சிரிப்புக்கான காரணத்தைக் கேட்டாள்.
“ தகவலுக்கு ரொம்ப நன்றி. இத மனசுல வெச்சுக்குறேன், இனி எந்த சந்தர்ப்பத்தையும் மிஸ் பண்ண மாட்டேன் “ என்று கேஷவ் பதில் சொல்ல, அவன் என்ன சொல்ல வருகிறான் என்று உணர்ந்து மைரா பெருமூச்சு விட்டு வாய் பிளந்தாள். கேஷவ் வழக்கம் போல சாப்பிடுவதற்கு முன் அவள் வாயில் ஒரு இனிப்பை திணித்தான்.
மைரா ஓய்வெடுக்க ஒரு நாள் விடுப்பு எடுத்ததால் கேஷவ் வேலையிலிருந்து சீக்கிரமே திரும்பிவிட்டான். கேஷவின் உத்தரவுப்படி ஒருவன் இரண்டு பெட்டிகளை கொண்டு வந்து ஹாலில் இருந்த டீப்பாய் மேல் வைத்தான். அவன் அந்த நபருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அவர் சென்றதும் சோபாவில் அமர்ந்தான்.
சமையலறையில் இருந்து தண்ணீர் பாட்டிலுடன் வந்த அர்ச்சனா அதை அவனிடம் கொடுத்தார்.
“ அம்மா, மைரா எங்க ? நம்ம வீடு இவ்ளோ அமைதியா இருக்கு, அவ தூங்கிட்டு இருக்காளா இல்ல வெளிய போயிருக்காளா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ அவள பத்தி நல்லா புரிஞ்சி வெச்சுருக்க. அவ வீட்ல இல்ல, பக்கத்து வீட்டுக்கு போய் இருக்கா “ என்று பதில் சொன்னார் அர்ச்சனா.
“ ஏன்? அவ தனியா போய் இருக்காளா இல்ல அத்தை கூட போய் இருக்காளா ? “ என்று உடனே கேஷவ் கேட்டான்.
“ அந்த வீட்ல இறந்த பொண்ணுக்கு இன்னைக்கு 16-வது நாள் காரியம். அவங்க என்னையும், வசுவையும் வர சொன்னாங்க அதனால மைரா என் சார்பா வசு கூட போய் இருக்கா. உனக்கு டின்னர் சமைக்க நான் போகாம இருந்துட்டேன். “ என்று சொன்ன அர்ச்சனா அவருக்கு முன்னால் இருந்த பெட்டியை பார்த்து, “ அது இருக்கட்டும், இது என்ன பெட்டி ? “ என்று கேட்டார்.
அப்போது அலுவலகத்தில் இருந்து வந்த ரோஷினி ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்து, “ இது என்ன பெட்டி ? “ என்று அவளும் கேட்டாள்.
“ அம்மா, உங்களுக்கும் மைராவுக்கும் இத வாங்கி இருக்கேன். உங்க நகையெல்லாம் இதுல வெச்சு pin நம்பர் போட்டு பூட்டலாம். உங்க நகையெல்லாம் அலமாரியில வைக்குறது பாதுக்காப்பு இல்ல “ என்று கேஷவ் கூறியதை கேட்ட அர்ச்சனா, “ ஏன்? திடீர்னு வாங்கி இருக்க ? என்ன ஆச்சு ? “ என்று கேட்டார்.
“ சும்மா பாதுகாப்புக்காகத் தான் மா. அடுத்த கணம் என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது அதனால பாதுகாப்பாவும், முன்னெச்சரிக்கையாவும் இருக்குறது நல்லது “ என்று கேஷவ் பதில் சொல்ல, ரோஷினி கண்களால் அவனை எரிப்பது போல பார்த்துவிட்டு தன் அறைக்கு விரைந்தாள்.
கேஷவ் அர்ச்சனாவின் அறையில் ஒரு பெட்டகத்தை வைத்துவிட்டு மற்றொன்றை தன் அறைக்கு எடுத்துச் சென்றான். அதில் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் வைத்து ரகசிய எண் கொண்டு பூட்டினான்.
வீடு திரும்பிய மைரா புத்துணர்ச்சி பெற்று சோபாவில் கேஷவ் அருகில் அமர்ந்தாள். அவள் மிகவும் சீரியஸாக இருப்பதையும், சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பதையும் அவன் கண்டான்.
“ என்ன யோசிக்குற அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ ஒண்ணுமில்ல கெட்சப், இந்த உலகத்த பத்தியும், கொடூரமான அப்புறம் இதயமே இல்லாத மனுஷங்கள பத்தியும் தன யோசிக்குறேன். பாவம் அந்தப் பொண்ணு “ என்று கவலையோடு பதில் சொன்னாள்.
“ அந்த பொண்ணு உடம்புக்கு முடியாம இறந்துட்டானு கேள்விப்பட்டேன், இதுல மனுஷங்க கொடூரமாவும், இதயமே இல்லாதவங்களா இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம் ? “ என்று கேஷவ் குழப்பத்துடன் கேட்டான்.
“ நான் அத பத்தி பேசல. அந்தப் பொண்ணு இப்போ உயிரோட இல்ல, இனி அவளோட குடும்பம் அவளுக்காக எந்த பணத்தையும் செலவழிக்க வேண்டியதில்ல, அவளுக்கு டிரஸ் வாங்க வேணாம், சாப்பாடு, ஹோட்டல், செலவுக்கு பணம் கொடுக்க வேணாம், எங்கேயும் டூர் கூட்டிட்டு போக வேணாம், இப்படி அவளுக்காக இனி அவங்க எந்த பணத்தையும் செலவு பண்ண வேணாம். கடைசியா ஒரு முறை அவளுக்காக அவங்க செய்ய வேண்டியதெல்லாம் அவ இறந்த அன்னைக்கும், இன்னைக்கு 16 வது நாள் காரியம் மட்டும் தான். ஆனா…. “ என்று அதற்கு மேல் சொல்லாமல் இழுத்தாள்.
கேஷவ் அவள் உள்ளங்கைகளைப் பிடித்து அவளை அருகில் இழுத்தான்.
“ ஆனா என்ன? அவங்க என்ன பண்ணாங்க ? “ என்று கேஷவ் மெல்ல கேட்டான்.
“ அவ இறந்த அன்னைக்கு அவளோட இறுதிப் பயணத்துக்கு வழக்கமான மாலைக்குப் பதிலா கொஞ்சம் விலை அதிகமான மாலைய அவங்க வாங்கி இருக்கலாம், என்ன ஒரு 1000 ரூபாய் செலவாகியிருக்கும். அது மட்டும் இல்ல அவங்க எல்லாரும் சந்தோஷமா இருந்த அப்போ எடுத்த போடோஸ் நிறைய இருக்கும். அதுல ஏதாவது ஒரு போட்டோவுல அவங்க சிரிச்சிட்டு இருக்க மாதிரி ஒரு போட்டோ ரெடி பண்ணி இருக்கலாம் ஆனா அந்த பொண்ணு சிரிக்காம இருக்க ஏதோ ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ பெருசா பிரேம் (frame ) போட்டுட்டாங்க நினைக்குறேன் “ என்று மைரா வருத்தத்துடன் கூறினாள்.
கேஷவ் அவளது உளறல்களை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான், அவளுடைய வார்த்தைகள் சரியாக இருந்தாலும், அவள் அதைப் பற்றி உளறும் விதம் அவனுக்கு அழகாகவும் வேடிக்கையாகவும் இருந்ததால் அது அவனை சிரிக்க வைத்தது.
“ இப்ப என்ன சொல்ற ? “ என்று அவன் கேட்க, “ இறந்தவளுக்கு அவங்களோட இறுதிப் பயணத்துல விலை அதிகமான மாலை போடணும், அப்புறம் அவங்க சந்தோஷமா சிரிச்சிட்டு இருக்க மாதிரி போட்டோ ரெடி பண்ணனும். முக்கியமா அவங்க குடும்பத்துல முக்கியமான ஒருத்தர் இறந்து போனத மறந்துட்டு 16 வது நாளுக்குப் அப்புறம் அசைவம் சாப்பிடக்கூடாது “ என்று உத்தரவு போட்டாள்.
“ ஆஹா, இந்த உலகத்துலேயே நீ தான் ரொம்ப புத்திசாலி அம்மு. உன்னோட இந்த நல்ல எண்ணங்கள உலகத்துல இருக்க எல்லாருக்கும் தெரியனும். இதுக்கு நாம் ஒரு வழிய கண்டுபுடிக்கணும். உன்ன நெனச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன் அம்மு “ என்று கேஷவ் சொன்னதும் மைராவுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது.
“ நான் எப்பவும் சரியா தான் பேசுவேன். நீங்க ஏன் என்னோட கொள்கை பரப்பு செயலாளர் ஆகா கூடாது ? என்னோட இந்த வார்த்தைகள் எல்லாத்தையும் மக்களுக்கு எடுத்து சொல்லலாம் நீங்க “ என்று மைரா கூறினாள்.
அவள் சொன்னதை கேட்ட கேஷவ், “ கண்டிப்பா நான் செய்வேன் ஆனா அதுக்கு முன்னாடி அம்மாவை கூப்பிடுறேன். உனக்கு சுத்தி போட சொல்றேன், உன் புத்திசாலித்தனத்த பார்த்து எல்லாரும் பொறாமை படுவாங்க அப்புறம் கண்ணுப்படும் “ என்று கேஷவ் சொன்னான்.
“ நீங்க சொல்றது சரி தான், நான் கெடச்சதுக்கு நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி, கவலைப்பட வேண்டாம், என் மூளையில இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு, கொஞ்சம் கொஞ்சமா நான் உங்களுக்கு சொல்றேன் “ என்று மைரா கூறியதும், “ அப்படியே ஆகட்டும் மஹாராணி “ என்றான் கேஷவ்.
மைராவின் கண்களில் படாத வகையில் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேஷவ் தலை குனிந்தான் ஆனால் மைரா அதை கவனித்து அவன் கைகளைக் கிள்ளினாள்.
“ இவ்ளோ நேரம் என்ன கிண்டல் பண்ணிட்டு இருந்தீங்களா ? “ என்று அவள் அதிர்ச்சியோடு கேட்க, “ இல்ல “ என்று உடனே மறுத்தான் கேஷவ்.
“ பொய் சொல்லாதீங்க. நீங்க சிரிப்ப அடக்குறத நான் பார்த்துட்டேன். வெளியே போங்க. இன்னைக்கு நைட்டு சோபாவுல தூங்குங்க அது தான் உங்களுக்கு தண்டன “ என்று சொல்லிவிட்டு அவள் கிளம்ப எழுந்தாள், ஆனால் கேஷவ் சத்தமாக சிரித்தபடி அவளை இழுத்து தன் அருகில் உட்கார வைத்து தன் கைகளில் பூட்டினான்.
“ நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன பாராட்டாம இருக்க முடியல, ஆனா காமெடி ஒரு பக்கம் இருக்கட்டும். நீ சொன்னது உண்மை தான், இத என்னோட நண்பர்கள் எல்லார்கிட்டயும் சொல்லுவேன் “ என்று கேஷவ் கூறினான்.
சில நொடிகள் அமைதியாக அவனை பார்த்தவள், “ உண்மையாவா? “ என்று கேட்டாள்.
“ சத்தியமா, இப்போ அலமாரிய திறந்து பாரு. நம்மளோட முக்கியமான பொருட்களையும், நகைகளையும் வைக்க ஒரு லாக்கர் வாங்கி இருக்கேன். சரியான பாதுகாப்பு இல்லாம நகையெல்லாம் வைக்குறது பாதுகாப்பு இல்ல “ என்று கூறினான்.
மைரா அலமாரியைத் திறந்து அதில் இருந்த பெட்டகத்தைப் பார்த்ததும், கண்களைச் சுருக்கி இடுப்பில் கை வைத்து அவனை நோக்கித் திரும்பினாள்.
“ என் அறிவாளி புருஷா, திருடன் வந்து, இந்த லாக்கர அப்படியே எடுத்துக்கிட்டு ஓடி போயிட்டா என்ன செய்றது ? “ என்று கேட்டாள்.
“ அப்படியா ? நீ இப்போ திருடன்னு கற்பன பண்ணி அந்த லாக்கர் எடுக்க முயற்சி பண்ணு “ என்று கூறினான்.
“ நான் திருடணுமா ? “ என்று அவள் கேட்டதும், கேஷவ் தோள்களைக் குலுக்க, மைரா பெட்டகத்தை கையில் எடுத்தாள் ஆனால் அதிலிருந்து ஒரு சைரன் சத்தம் கேட்டதும் பயந்து அதை கேஷவ் கையில் கொடுத்து விட்டாள். கேஷவ் சிரித்துக் கொண்டே அதை மீண்டும் அலமாரியில் வைத்துவிட்டு கட்டிலுக்கு திரும்பினான்.
“ யாராவது அத தூக்க முயற்சி பண்ணா, என் மொபைலுக்கு இந்த மாதிரி சைரன் சத்தம் வரும், அது மாதிரி ஏற்பாடு பண்ணி வாங்கி இருக்கேன் “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க புத்திசாலி தான், நான் உங்கள பாராட்டுறேன். நீங்க என் புருஷன்னு நிரூபிச்சுட்டீங்க “ என்று மைரா சொன்னதும் கேஷவ் அவளை கட்டிப்பிடித்து அவள் கன்னங்களில் முத்தமிட்டு அவளை சீண்ட தன் தாடியை தேய்த்தான்.
“ நாம கிளம்ப இன்னும் 3 நாள் தான் இருக்கு. இது ஹனிமூனா இல்லையானு நீ தான் முடிவு செய்வனு சொன்ன ஞாபகம் இருக்கா ? “ என்று கேஷவ் கேட்டான்.
“ நிச்சயமா நீங்க கூட்டிட்டு போற இடத்த பொறுத்து முடிவு செய்றேன். இப்ப நாம குட்டித் தூக்கம் போடலாம் “ என்று மைரா சொன்னதும் இருவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
*****************************************
முன்னோட்டம்:
“ எனக்கு உன் மேல கோபம் இல்ல க்ரிஷ் ஆனா உன் வாழ்க்கைய நீ தான் முடிவு பண்ணணும்னு நினைக்குறேன். இது இப்படியே போக முடியாது. அவ உன் வாழ்க்கையில வேணும்னு நீ முடிவு பண்ணா அவள இங்க இருக்க சொல்லலாம் ஆனா உன்னோட முடிவு வேறையா இருந்தா அடுத்த நிமிஷமே என்னால அவள இங்க இருந்து அனுப்ப முடியும் “

1 comment
[…] 46.நான் கொஞ்சம் குண்டா இருக்கேன் […]