Home Family50. அழகா அம்சமா இருக்க அம்மு

50. அழகா அம்சமா இருக்க அம்மு

by Siragugal Novels
16 views

காலையில் ஹேர் ட்ரையர் சத்தம் கேட்டு எழுந்த கேஷவ், மைரா மும்முரமாக தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே இறங்கி டிராலியில் இருந்து ஒரு பையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“ இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கும், எனக்காக போடுவியா ? “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அந்த ஆடையை வெளியே எடுத்து, அது அவளது முழங்கால் வரை மட்டுமே எட்டும் ஒரு கவுன் என்பதைக் கண்டாள்.

“ நான் குண்டா இருக்கேன்னு உங்களுக்குத் தெரியும் தானே ? அதுவும் இல்லாம இந்த மாதிரி கவுன் எல்லாம் நான் போட்டதே இல்ல கெட்சப், எல்லாரும் என்ன விசித்திரமா பார்ப்பாங்க “ என்று மைரா தயங்கியபடி சொல்ல, “ நீ எவ்ளோ அழகா இருக்கனு என் கண்ணுல இருந்து தெரிஞ்சுக்கோ. நீ எது போட்டாலும் அவ்ளோ அழகா இருப்ப. வித்தியாசமா, புதுசா முயற்சி பண்ணு, உன்னோட ஆசை, விருப்பம் எல்லாத்தையும் நாம நிறைவேத்துவோம். நான் நிறைய டிரஸ் வாங்கி இருக்கேன், அதெல்லாம் ட்ராலியில இருக்கு. உன்ன நீ பாருக்குற விதத்த முதல்ல மாத்துவனு நம்புறேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் பாத்ரூமுக்குள் நுழைய, மைரா கண்ணாடி பக்கம் திரும்பி கவுனை தன் உடம்பில் வைத்தாள். தலையைக் குனிந்து அதன் நீளத்தைப் பார்த்து விழுங்கினாள்.

“ இது எனக்கு உண்மையிலேயே நல்லா இருக்குமா இல்ல நான் அவரோட மனைவி அதனால அவர் கண்ணுக்கு அழகா தெரியுறேனா ? ஆனா அவர் எனக்காக இத வாங்கி இருக்காரு அதனால போட்டு பார்க்குறதுல தப்பு இல்ல. எப்படியும் அவர் என்ன வெறும் டவல் கட்டி கூட பார்த்து இருக்காரு அதனால ஒன்னும் பிரச்சன இல்ல “ என்று நினைத்தவள் சட்டென கவுனை அணிந்து கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.

வெள்ளை பூக்கள் கொண்ட பிங்க் நிற கவுன் அவளுக்கு அழகாக இருந்தது. அவள் தலைமுடியை அவிழ்த்துவிட்டு, பொருத்தமான அணிகலன்களை அணிந்தாள். கேஷவ் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு இன்னொரு துண்டால் தலைமுடியை துடைத்துக் கொண்டு வெளியே வந்தான். முழங்கால்களை மறைக்க கவுனை கீழே இழுக்க முயன்ற மைராவைப் பார்த்து அவன் உறைந்து நின்றான்.

“ அப்படி செய்றத நிறுத்து அம்மு. நீ பிரமிக்க வைக்குற, நான் இப்போ உன்ன மத்தவங்க கண்ணுல இருந்து காப்பாத்தணும். பேசாம இங்கேயே இருக்கலாம்னு நினைக்குறேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ ஸ்டாப் இட் கெட்சப். நான் உங்களுக்காக மட்டும் தான் இத போட்டு இருக்கேன் “ என்றாள் மைரா.

கேஷவ் அவளருகே சென்று அவள் நெற்றியை முத்தமிட்டு அவளை கண்ணாடிக்கு நேராக திருப்பி அவள் காதருகே குனிந்து அவளது பிளவுக்கு மேலே இருந்த முதலெழுத்துக்களின் டாலரை தொட்டான்.

“ நீ ரொம்ப அழகா அம்சமா இருக்க அம்மு. உன் கிட்ட இருந்து பார்வைய விலக்க முடியல “ என்று கேஷவ் சொன்னதும், மைரா வெட்கப்பட்டு அவன் கன்னத்தை முத்தமிட்டாள். கேஷவ்  சட்டையும் ஷார்ட்ஸும் அணிந்து தயாராகி வந்ததும் இருவரும் காலை உணவை சாப்பிட்டு முடித்தனர். கேஷவ் ஒரு பையை எடுத்துக் கொண்டதும் டிஸ்னி லேண்டுக்கு புறப்பட்டனர். இருவரும் அந்த இடத்தை அடைந்ததும், குழந்தைக்கு நிகராக அவள் உற்சாகத்தில் மிதப்பாள் என்று கேஷவுக்குத் தெரியும்.

அவள் தலையில் மலர் கிரீடத்தை வைத்து தலை வணங்கி அவளை உள்ளே அழைத்துச் சென்றான். அவளுக்கு உணவு கொடுக்க கேஷவ் வலுக்கட்டாயமாக நிறுத்தும் வரை  மைரா ஒருபோதும் தண்ணீரையோ உணவையோ கேட்கவில்லை. கேஷவ் அவளை போட்டோ எடுக்க அழைத்ததும், மைரா ஒரு கோட்டையின் முன் நின்று ஒரு கண்ணை மூடி, ஒரு கையால் தலையில் இருந்த மலர் கிரீடத்தை தொட்டு நாக்கை வெளியே நீட்டி, மற்றொரு கையில் கவுனை விரித்து பிடித்து நின்றாள்.

கேஷவ் அவளது புகைப்படத்தை எடுத்தான் ஆனால் அவளது  அழகைப் பார்த்து அவனால் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் உறைந்து நின்றான். மைரா புகைப்படத்தைப் பார்ப்பதற்காக அவனிடம் ஓடினாள், ஆனால் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாததைக் கண்டவள், அவனது தீவிரமான பார்வை அவளை விழுங்குவது போல இருப்பதை பார்த்தாள்.

“ கெட்சப் “ என்று அழைத்து அவனின் கவனத்தை திசை திருப்ப முயன்றாள்.

“ நீ, நீ… ரொம்ப அழகா இருக்க அம்மு. சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல. என் இதயம் தாறுமாறா துடிக்குது, விட்டா வெளியே உன்கிட்ட வந்துடும் போல “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் சொன்னதும், மைரா தன் உள்ளங்கையை அவன் மார்பில் வைத்து ஒரு கனத்த பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டு தன் உள்ளங்கையை அவன் மார்பில் பதித்தாள். தன் எண்ணங்களிலிருந்து விடுபட தலையை அசைத்து, கேஷவ் தான் எடுத்த  புகைப்படத்தை அவளிடம் காட்டினான். மைரா அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அவர்களின் பெற்றோருக்கு அனுப்பினாள்.

அவள் கொஞ்சம் களைப்பாகாமல் அந்த இடத்தில் சுற்றித் திரிந்தாள், அந்தி சாயும் நேரத்தில் கேஷவ் அவளுக்கு அடுத்த சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தான் ஆனால் மைராவுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் டிஸ்னிலேண்ட் ஹோட்டல் முன் நின்ற போது, மைரா அவனைப் பார்த்து அதிர்ச்சியில் மூச்சிரைத்தாள்.

“ நைட்டு இங்க தங்கப் போறோமா ? “ என்று அவள் ஆச்சரியத்தோடு கேட்க, கேஷவ் ஆம் என்று தலையை ஆட்டி அவளை தன்னுடன் இழுத்து சென்றான்.

ஹோட்டலின் உட்புறத்தைப் பார்த்தபடி தலையை நாலாபுறமும் சுழற்றினாள். கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் வேடமிட்டவர்கள்  அவளை வரவேற்றனர், மைரா உற்சாகத்தில் குதித்தாள். கேஷவ் தனது கோமாளித்தனங்களை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தான். மேலும் பல கதாபாத்திரங்களுடன் அவர்கள் இறுதியாக ராயல் அறையை அடைந்தனர்.

“ இதுக்கு தான் எனக்கு பிடித்த டிஸ்னி கதாபாத்திரம் பத்தி கேட்டீங்களா ? “ என்று மைரா கேட்டாள்.

“ ஆமா, உன்ன வரவேற்க அவங்கள நான் புக் பண்ணேன். இப்போ குளிச்சு ரெடியாகு, நாம டின்னர் சாப்பிட போகலாம், அங்க உனக்கு இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் “ என்று கேஷவ் கூறினான்.

மைரா ஒரு மின்னல் வேகத்தில் குளித்து விட்டு தனக்கு விருப்பமான ஸ்கர்ட் மற்றும் சட்டையை அணிந்து கொண்டாள். அவர்கள் அந்த ஹோட்டலின் உணவகத்தை அடைந்தபோது, மிக்கிமவுஸ் குடும்பத்தினரால் குழந்தைகளுடன் சில குடும்பங்கள் மகிழ்விக்கப்படுவதைக் கண்டனர். ஒரு மிக்கியும் மின்னியும் அவர்களை நெருங்கியபோது மைரா உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டாள். மிக்கி கேஷவைக் கட்டிப்பிடிக்க, மின்னி மைராவை அணைத்துக் கொண்டாள்.

இருவருக்கும் அவர்களின் விருப்பப்படி இரவு உணவை பரிமாறப்பட்டது. மைரா முழுமையாக மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

“ நான் நடந்துக்குறத பார்த்து எல்லாரும் என்ன பைத்தியம்னு  நினைக்க போறாங்க. சின்ன வயசுல நான் இந்த இடத்துக்கு வந்திருந்தா, சந்தோஷத்துல கத்தி கூச்சல் போட்டு இருப்பேன். ஒரு குழந்த மாதிரி ஓடாம இருக்க ரொம்ப கஷ்டப்பட்டு என்ன கட்டுப்படுத்துறேன். நம்ம நாட்டுல ஏன் இது மாதிரி இடம் இல்ல? குழந்தைகளுக்கு இந்த மாதிரி இடம் கண்டிப்பா வேணும் “ என்று மைரா கூறினாள்.

“ கவலைப்படாத, லயா இந்த இடத்த மிஸ் பண்ண மாட்டா “ என்று கேஷவ் உடனே பதில் சொன்னதும், ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த மைரா புரையேறி அதிர்ச்சியோடு கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தாள்.

கேஷவ் அவள் உதட்டில் வழிந்த ஜூசை துடைத்து அவள் தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தான்.

“ ஏன் இப்படி அதிர்ச்சியா பார்க்குற அம்மு ? அன்னைக்கு நீ பேசினதுல இருந்து லயா உனக்கு ரொம்ப புடிச்ச ஸ்டுடென்ட்னு எனக்கு புரிஞ்சிடிச்சு. நாம ஏன் அவள இந்த இடத்துக்கு கூட்டிட்டு வரக்கூடாது? “ என்று சொல்லலி கேஷவ் கிண்டல் செய்ய, “ ஆமா, ஏன் கூட்டிட்டு வரக்கூடாது ? கண்டிப்பா கூட்டிட்டு வருவோம் “ என்று உளறினாள் மைரா.

“ அவளோட அப்பா, அம்மா நம்ம கூட அனுப்ப மாட்டாங்கனு நீ நெனச்சா அப்போ நான் அவங்க கிட்ட பேசுறேன். நாம இங்க லயா கூட இருக்க மாதிரியும், இங்க இருக்க கார்ட்டூன் கதாபாத்திரங்கள பார்த்து லயா சந்தோஷத்துல கத்துரதையும் கற்பனை பண்ணி பாரு. நான், உன் பின்னாடியும், லயா பின்னாடியும் ஓடி வருவேன். நான் சொல்றது சரி தானே அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், அவனது ஒவ்வொரு சொல்லுக்கும் மைரா வெட்கப்பட்டு தலையை மட்டும் ஆட்டினாள்.

“ இப்போ நான் சொன்னது எல்லாம் நடக்க லயா சீக்கிரம் பிறக்கனும் “ என்று கேஷவ் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

“ நீங்க ஏதாவது சொன்னீங்களா ? “ என்று மைரா கேட்க, “ இல்ல, நீ பயங்கர உற்சாகமா இருக்க அதனால ஸ்வீட் குறைவா சாப்பிடு “ என்று கூறினான்.

இருவரும் அறைக்குத் திரும்பியதும், மைரா தலைமுடியை அவிழ்த்துவிட்டு கால்களை நீட்டி கட்டிலில் உட்கார்ந்தாள். கேஷவ்  கட்டிலில் உட்கார்ந்து அவள் கால்களை தன் மதியில் வைத்து அழுத்தி அவளது வலியை குறைக்க ஆரம்பித்தான்.

“ கெட்சப், எனக்கு இந்த மெத்தையில குதிக்கனும் போல இருக்கு, நான் குதிக்கட்டுமா ? “ என்று மைரா கேட்டதும், கேஷவ் சரி என்று தலையசைக்க, மைரா டிராம்போலினில் குதிப்பது போல் குதிக்க ஆரம்பித்தாள்.

கேஷவ் ஓரமாக நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், சில நொடிகளில் மைரா தன் சமநிலையை இழந்து மல்லாந்து விழ எத்தனிக்க, கேஷவ் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டான். அவன் சற்றே தடுமாறினாலும் சீக்கிரம் நிதானித்தான் ஆனால் அவனது வலது உள்ளங்கை அவளது இடது புற மென்மையில்  இருப்பதை உணர்ந்த அடுத்த நொடி இருவரும் தங்களை மறந்தனர்.

கேஷவின் மனம் தன் உணர்வுகளை இழந்தது, அவனால் தனது கைகளை அகற்றவோ அல்லது மேற்கொண்டு தொடரவோ முன்வர முடியவில்லை. மைராவின் மூச்சு தொண்டைக்குள் சிக்கியது, அவளும் அவனைப் போலவே இருந்தாள். அவனது கைகளை அகற்றலாமா வேண்டாமா என்ற முடிவை அவளது மூளையால் எடுக்க முடியவில்லை, ஆனால் அவளது பெண்மை அதன் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தது.

ஒரு தோல்வியுற்ற பெருமூச்சுடன் கேஷவ் தன் கைகளை விலக்கிக்கொண்டு அவளுக்குப் பின்னால் நின்றான்.

“ நீ தூங்கு அம்மு, கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் “ என்று சொன்னவன், பால்கனிக்கு நகர்ந்து தன் அழகிய மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற ஆசையின் உச்சத்தில் விரக்தியில் தலைமுடியை இழுத்தான். கைப்பிடியைப் பிடித்து முகத்தைத் தேய்த்துக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் ஆனால் சட்டென அப்படி செய்வதை நிறுத்தி தன்  உள்ளங்கையை பார்த்தான்.

“ இது மாதிரி நேரத்துல, என்ன கட்டுப்படுத்த முடியாம தவிக்குறேன்  மைரா. எனக்கு நீ வேணும் மைரா ஆனா நீ தயாரா இருக்க வர எதுவும் செய்ய என் மனசாட்சி என்ன அனுமதிக்காது. நமக்கு  கல்யாணம் ஆகாத வர எனக்கு இவ்ளோ கஷ்டமா இல்ல ஆனா இப்போ ஒவ்வொரு நாளும் என் பொறுமைக்கு முடிவில்லாத சோதனையா இருக்கு “ என்று மனதில் நினைத்து தன்னை அமைதிப்படுத்தினான்.

மைரா படுக்கையில் படுத்திருந்தாள் ஆனால் அவளுடைய எண்ணங்களும் கண்களும் அவளை முழுவதுமாக ஆட்கொண்ட  மனிதன் மீதே இருந்தன.

“ எனக்கு எல்லாத்தையும் செஞ்சிட்டு எப்படி உங்களால என்கிட்டே இருந்து எந்த பிரதிபலனும் எதிர்ப்பார்க்காம இருக்க முடியுது கேஷவ் ? எந்த ஒரு ஆணும் தன் மனைவிய வற்புறுத்தி அவனோட உரிமைய அடைய நினைப்பான் ஆனா இங்க நீங்க என்கிட்ட இருந்து விலகி இருக்கீங்க. நான் தயாரா இல்லாம நீங்க எதையும் செய்ய விரும்பாம பொறுமையா இருக்கீங்க. என் வாழ்க்கையில எனக்கு நீங்க கிடைக்க நான் என்ன செஞ்சேன் ? என் பயம் காரணாமா, எனக்கு உங்க மேல இருக்க இந்த உணர்வுக்கு பெயர் சொல்லாம இருக்கேனா ? நீங்க எனக்காக உங்க ஆசைகளோட போராடுறீங்கனு எனக்கு தெரியும், நானும் உங்கள மாதிரி தான் போராடுறேன் கேஷவ் ஆனா நம்ம முதல் இரவு ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும்னு நான் விரும்புறேன் “ என்று மனதில் நினைத்து வெட்கப்பட்டாள்.

30 நிமிடங்கள் கழித்து கேஷவ் அறைக்குத் திரும்ப, மைரா தூங்குவது போல் பாசாங்கு செய்து கண்களை மூடினாள். கேஷவ் அவள் அருகில் படுத்து அவளை தன் மார்போடு இழுத்து அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்.

அவன் சட்டையில் இருந்த அவளின் பிடியை கொண்டு அவள் விழித்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். “ ஸாரி “ என்று   முணுமுணுத்தபடி கண்களை மூடி உறங்கினான்.

அடுத்த நாள் அவர்கள் டிஸ்னி லேண்டில் மணிக்கணக்கில் செலவிட்டனர், இறுதியாக அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினர். அதே நேரத்தில் மைராவின் கவனம் முழுவதும் கேஷவைச் சுற்றியே இருந்தது. அவளது கண்கள் அவனது ஒவ்வொரு அசைவையும், அவளை நோக்கி அவன் செய்த சைகைகளையும் கவனித்தன.

அன்று மாலை நேரம், இருவரும் டிவியில் ஒரு தொடரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறியா ? “ என்று கேஷவ் கேட்க, “ நிச்சயமா, ஆனா அது செய்றது ? “ என்று கேட்டாள் மைரா.

கேஷவ் படுக்கையிலிருந்து இறங்கி தனது லக்கேஜ் டிராலியைத் திறந்தான். ஒரு குட்டி ஆஃப் ஷோல்டர் கவுனை எடுத்து அவள் முன் வைத்தான். அதை பார்த்ததும் மைரா அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தாள்.

“ இத போட்டு தயாராகு, நாம வெளிய போறோம். இப்போ கொஞ்சம் என்ஜாய் பண்ணலாம் “ என்று கேஷவ் சொன்னதும், “ நான் இத போட்டு உங்க கூட வெளிய வரணும்னு நீங்க விரும்புறீங்களா ? “ என்று மைரா கேட்டாள்.

கேஷவ் அவளை படுக்கையிலிருந்து இழுத்து அவள் கையில் ஆடையை திணித்தான்.

“ நான் கொடுக்குறத போட சொல்லி நான் உன்ன வற்புறுத்த மாட்டேன். நீ எல்லாத்தையும் அனுபவிச்சு சந்தோஷமா இருக்கணும்னு நான் விரும்புறேன். நீ எப்பவும் உன்னோட விருப்பப்படி டிரஸ் பண்ணலாம், நான் உன்ன ஒருநாளும் தடுக்க மாட்டேன், ஆனா எப்போவாச்சும் கொஞ்சம் வித்தியாசமா எதுவும் செய்றதுல தப்பில்ல. நான் உன் கூட தான் இருக்கேன், நாம சேர்ந்தே எல்லாம் செய்யலாம் “ என்று கேஷவ் கூறினான்.

“ என் கெட்சப் எப்பவும் சரியா தான் சொல்லுவாரு ஆனா இந்த ட்ரெஸ் போட நான் என்ன கொஞ்சம் தயார் படுத்தனுமே “ என்று மனதில் நினைத்தவள் கேஷவை பார்த்து, “ நான் ரெடியாக எனக்கு டைம் வேணும் அதனால நீங்க அதுவர பால்கனியில வெயிட் பண்ணுங்க “ என்று சொன்னாள்.

கேஷ்வ் புன்னகைத்து சென்றதும், மைரா நைனா அவளுக்காக பேக் செய்திருந்த சிறிய ட்ராலியை இழுத்தாள். ரகசிய எண் கொண்டு  அதைத் திறந்து ரேஸர் செட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் அதை பூட்டிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். உடலை ஷேவ் செய்து நிம்மதியாகக் குளித்தாள். முழு அங்கியை அணிந்து கொண்டு வெளியே வந்தவள், தலைமுடியை உலர்த்துவதற்காக வேனிட்டி ஸ்டூலில் அமர்ந்தாள்.

“ கெட்சப், நீங்க போய் குளிச்சிட்டு வாங்க, நான் அதுக்குள்ள  ரெடியாயிடுவேன் “ என்று மைரா சொன்னதும், கேஷவ் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். கண்ணாடி முன் நின்று தாடியை ட்ரிம் செய்ய வேண்டுமா என்று விரல்களால் தடவிக் கொண்டிருந்தான் அப்போது கண்ணாடி முன் இருந்த மேடையில் ரேஸர் செட் இருப்பதை பார்த்ததும் அவன் செயல்கள் நின்று, அவன் சற்றே இருமினான், அவனது கற்பனைகள் காட்டுத்தனமாக ஓடின.

“ இந்த பொண்ணு நிச்சயமா என்ன ஆசைக்காட்டி கொல்றா. நான் அவ்ளோ கஷ்டப்பட்டு என்ன கண்ட்ரோல் பண்றேன் ஆனா இவ என் பொறுமைய ரொம்ப சோதிக்குறா. எங்க முதல் இரவு கட்டுப்பாட்ட இழந்து ஒரு அவசர வேகத்துல நடக்காதுனு நம்புறேன் “ என்று சொன்னவன் தன் கன்னத்தில் அறைந்து கொண்டான்.

“ வாய மூடு கேஷவ், என்னவோ சீக்கிரமே உனக்கு முதல் இரவு நடக்க போற மாதிரி பேசிட்டு இருக்க. பொறுமையா இரு. அவளுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணாலம். இப்ப குளிச்சிட்டு எதுவுமே பார்க்காத மாதிரி கிளம்பு “ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு குளித்து முடித்துவிட்டு சாதாரணமாக வெளியே சென்றான்.

தொடை வரை மட்டுமே இருந்த கறுப்பு நிற ஆஃப் ஷோல்டர் கவுன் அணிந்து நின்றாள் மைரா. அவள் தன்னிடம் ஏற்படுத்திய பாதிப்புகளை எல்லாம் மறைத்து, கேஷவ் ஒரு புன்னகையுடன் அவள் ஆடைக்கு பொருத்தமாக ஒரு டி ஷர்ட் மற்றும் ஜீனை எடுத்து தயாரானான்.

*****************************************************

முன்னோட்டம்:

“ என் புருஷன் ஒரு ஜென்டில்மேன், ஆனா இதுக்காக நான் சந்தோஷப்படனுமா ? அவர் என்ன கிஸ் பண்ணலனா என்ன இப்போ ? நான் திருட்டுத்தனமா கிஸ் பண்றேன் “

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:26 pm

[…] அழகா அம்சமா இருக்க அம்மு […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 19, 2026 - 11:41 am

[…] 50.அழகா அம்சமா இருக்க அம்மு […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!