கேஷவும், மைராவும் தயாராகி கைகளைப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறினார்கள். அவன் தன்னை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதை அறிய மைராவுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. 20 நிமிடத்தில் அவர்கள் ஒரு பப்பை அடைந்தனர், அதை பார்த்ததும் மைரா விழுங்கியபடி அவனது கையை பிடித்துக் கொண்டாள். உடனே கேஷவ் அவளைப் பார்த்து கண்ணடித்ததும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
இருவரும் ஒரு மேஜையை தேர்ந்தெடுத்து இருக்கையில் அமர்ந்ததும், கேஷவ் அவர்களுக்காக மொக்டெயில்களை ஆர்டர் செய்தான்.
ஆண்களும் பெண்களும் ஜோடியாக நடனமாடுவதையும், சிலர் நடன தளத்தில் பைத்தியக்காரர்களைப் போல நடனமாடுவதையும் கண்டு மைரா திகைத்துப் போனாள். அவர்கள் எல்லாவற்றையும் மறந்து அந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவளுக்கு தோன்றியது.
“ எல்லாரும் உண்மையிலேயே அவங்க வாழ்க்கைய சந்தோஷமா வாழுறாங்க. இந்த பப்புக்கு வெளியே ஒரு வாழ்க்கை இருக்குறது கூட அவங்களுக்கு நினைவுல இல்லனு நினைக்கிறேன் “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ அடிப்படையில அவங்களுக்கு இருக்க டென்ஷன், மன அழுத்தம் எல்லாத்தையும் போக்கணும் அதுக்கு தான் இங்க வராங்க. எல்லாருக்கும் ரெஸ்ட் வேணும், அதுக்கு ஒரு இடத்த அவங்க விருப்பப்படி செலெக்ட் பண்றாங்க “ என்றான் கேஷவ்.
“ உங்களுக்கு டென்ஷன் போக என்ன செய்வீங்க ? “ என்று மைரா கேட்க, “ உன்ன பார்த்தா போதும் என்னோட டென்ஷன் எல்லாம் பறந்து போயிடும் “ என்று மனதில் நினைத்தான் கேஷவ்.
அவன் பதிலுக்காக அவள் காத்திருப்பதை பார்த்தவன், “ நான் வீட்டுக்கு வந்து உங்க எல்லாரையும் சந்திப்பேன், குடும்பத்தோட இருந்தா எந்த டென்ஷனும் இருக்காது “ என்று அவளுக்கு பதில் சொன்னான்.
மைரா அவனைப் பார்த்து புன்னகைத்தாள், அவர்களின் பானங்கள் பரிமாறப்பட்டதும், அதை பருகியபடி, மைரா நடன தளத்தில் மக்களைப் பார்த்தாள். புன்னகையுடன் அவள் திரும்பி கேஷவைப் பார்க்க, அவன் அவளை நோக்கி கைகளை நீட்டியபடி நின்று கொண்டிருந்தான்.
“ நம்ம ரெண்டு பேரும் நமக்கு தெரிஞ்ச டேன்ஸ் மூலமா எல்லாரையும் ஆச்சரியப்படுத்தலாம். பைத்தியக்காரத்தனமா இருக்கும் இருந்தாலும் பண்ணலாம், சம்மதமா ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா உற்சாகமடைந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
இருவரும் நடன தளத்தை அடைந்தத போது, மக்கள் சால்சா டேன்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். கேஷவும், மைராவும் இந்திய நாட்டுப்புற மக்களின் தொடுதலுடன் ஆடத் தொடங்கியதும் மைரா முழுமையாக மகிழ்ச்சியாக அவனோட ஆடினாள். இருவரும் அவர்களின் இருக்கைக்கு திரும்பியபோது அவர்கள் மூச்சிரைத்துக் கொண்டிருந்தார்கள். மைரா தலையைப் பின்னால் சாய்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். கேஷவ் அவளது புன்னகையை ரசித்து அவள் கன்னத்தை முத்தமிட்டான்.
சிறிது நேரம் நடந்து விட்டு இரவு தாமதமாக ஹோட்டல் திரும்பினார்கள். கேஷவ் சட்டையைக் கழற்றிவிட்டு பாத்ரூமுக்கு செல்ல எத்தனிக்கையில் மைரா அவன் கையைப் பிடித்து நிறுத்தி, “ கெட்சப், நீங்க செலெக்ட் பண்ண டிரஸ் போட்டு இருக்கேன், நான் எப்படி இருக்கேன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே ? “ என்று மைரா கேட்டாள்.
கேஷவ் அவளருகே சென்று அவள் முகத்தை தன் விரல்களால் வருடினான். அவள் காதுக்குப் பின்னால் சில முடி இழைகளை நகர்த்தி அவளை கையை பிடித்து சட்டென சுழற்றி அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான். அவன் அவளது காது மடலில் முத்தமிட்டு, அவனது விரல்கள் அவளது கைகளை தடவியது.
“ நான் எதுவும் சொல்லல, ஏன்னா நான் மூச்சு விட கூட மறந்து போற அளவுக்கு நீ அழகா இருக்க. இப்போ உன்னோட அழக நான் பாராட்ட ஆரம்பிச்சா அப்புறம் நாம இந்த உலகத்தையே மறந்து போற அளவுக்கு நான் உன்ன கிஸ் பண்ணி இருப்பேன். நான் உன்ன கிஸ் பண்ண ஆரம்பிச்சதும் என் கட்டுப்பாட்ட இழந்து இன்னும் பல விஷயங்கள செய்யனும்னு எனக்கு தோணும். நீ என்ன அந்த அளவுக்கு பாதிக்குற அம்மு “ என்று சொல்லி கேஷவ் அவள் கன்னத்தைக் முத்தமிட்டு பாத்ரூமுக்குள் நுழைய, மைரா சோபாவில் உட்கார்ந்து மூடிய கதவைப் பார்த்தாள்.
“ ஏன் இவ்ளோ நல்லவரா இருக்கீங்க கேஷவ் ? நீங்க இவ்ளோ நல்லவரா இருக்குற ஒவ்வொரு முறையும் என் மனசுக்குள்ள ஏதோ பண்ணுது. நம்ம முதல் இரவ கொண்டாட நாம ஸ்விஸ் போக காத்துட்டு இருக்கேன். அப்புறம் என்ன சொன்னீங்க ? என்ன கிஸ் பண்ணா, கட்டுப்பாட்ட இழந்து நிறைய செய்யணும்னு தோணுமா ? மிஸ்டர் ஹஸ்பண்ட், இப்ப நீங்க என்ன கிஸ் பண்ணாம உங்க இருக்க போறீங்களா ? இன்னைக்கு உங்க கண்ட்ரோல் எந்த அளவுக்கு இருக்குனு நான் சோதிக்கிறேன் “ என்று அவள் மனதில் திட்டமிட்டு சிரித்தாள்.
கேஷவ் வெளியே வந்ததும் அவள் புத்துணர்ச்சி பெற பாத்ரூமுக்குள் நுழைந்தாள், அவள் வெளியே வந்ததும் கேஷவ் அவளது வழக்கமான இரவு உடையை அணிந்திருப்பாள் என்று எதிர்பார்த்தான், ஆனால் மைரா அதே உடையில் தூங்க முடிவு செய்தாள்.
“ நீ டிரஸ் மாத்தலையா? “ என்று கேஷவ் குழப்பத்தோடு கேட்க, “ இல்ல கெட்சப், எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அதனால இந்த டிரஸ் போட்டே தூங்குறேன். உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? “ என்று அப்பாவியாக கேட்டாள்.
“ எனக்கு ஏன் பிரச்சின இருக்க போகுது ? கண்டிப்பா நீ எத வேணும்னாலும் போட்டு தூங்கலாம் “ என்று சொல்லி சமாளித்த கேஷவ், “ இன்னைக்கு என்னோட சுயக்கட்டுப்பாடு பப்ளிக் எக்ஸாம் எழுத போகுது. ஆல் தி பெஸ்ட் டா கேஷவ். இன்னைக்கு இவ ஏதோ திட்டம் போட்டு இருக்க மாதிரி தெரியுது. காலையில ரெண்டு பேரும் கன்னி கழியாம எழுந்தா நான் ஜெயிச்சிட்டேன்னு அர்த்தம் “ என்று மனதில் நினைத்து கொண்டான்.
கேஷவ் படுக்கையில் படுத்து போர்வையை இழுத்தான் ஆனால் மைரா அறை வெப்பமாக இருப்பதாக கூறி அதை அகற்றினாள். அவளது கவுன் சற்று மேலே உயர்ந்து அவளது தொடையை வெளிப்படுத்தியது. அவளது நடுங்கும் நிலையை மறைத்து மைரா அவன் தோளில் தன் தலையை வைத்தாள்.
கேஷவின் மனம் தீயதாக மாற, மெல்ல அவள் பக்கம் திரும்பி அவளது பிளவை பார்த்து விழுங்கினான்.
“ நீ இந்த டிரஸ் கொடுக்கும் போது அவ்ளோ சந்தோஷமா இருந்த , ஆனா இப்போ இது உனக்கு சோதனையா மாறிடுச்சே கேஷவ் “ என்று மனதில் புலம்பியபடி இரவு விளக்கை அணைத்துவிட்டு இன்னொரு கையை கண்களின் மீது வைத்து பார்வையில் இருந்து அனைத்தையும் மறைத்தான். மைரா கண்களைத் திறந்து அவன் தன்னைத் தொந்தரவு செய்யாமல் உறங்குவதைக் கண்டு புன்னகைத்தாள்.
“ என் புருஷன் ஒரு ஜென்டில்மேன், ஆனா இதுக்காக நான் சந்தோஷப்படனுமா ? அவர் என்ன கிஸ் பண்ணலனா என்ன இப்போ ? நான் திருட்டுத்தனமா கிஸ் பண்றேன் “ என்று மனதில் சொல்லிக் கொண்டு அவள் தலையை நிமிர்த்தி அவன் கன்னத்தையும் உதடுகளையும் மெல்ல முத்தமிட்டு கண்களை மூடிக்கொண்டாள் ஆனால் அவன் விழித்திருப்பதை அவள் அறியவில்லை.
இதற்கிடையில் அர்ச்சனாவின் வீட்டில், ரோஷினியின் அப்பா, அம்மா பின்தொடர க்ரிஷ் வீட்டுக்குள் நுழைந்தான். அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அர்ச்சனாவும் மதனும் அவர்களை வரவேற்றனர், ஆனால் ரோஷினி தான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தாள்.
“ உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லணும்னு அவங்களுக்கு போன் பண்ணினேன் “ என்று க்ரிஷ் சொன்னதும், “ க்ரிஷ், அவங்க கிட்ட பேசறதுக்கு முன்னாடி முதல்ல நாம பேசுவோம். அவங்க இப்போ தான் வந்துருக்காங்க அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் “ என்றாள் ரோஷினி.
“ இல்ல ரோஷினி, நாம பேசலாம், நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தோம் “ என்றார் ரோஷினியின் அப்பா.
“ நான் கல்யாணத்துக்கு தயாரா இருக்கேன். கல்யாணத்துக்கு தேதி குறிக்கலாம். அப்புறம் எனக்கு மேனேஜரா பதவி உயர்வு கிடைக்கும் அதனால நான் மும்பைக்கு போக விரும்புறேன், என்னோட வேலை அங்க தான் இருக்கும் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டதும், “ க்ரிஷ், கண்டிப்பா இது தான் உன் முடிவா ? நீ போகணும்னு விரும்புறியா ? அதாவது ரோஷினிய கல்யாணம் பண்ணி, அவ கூட போக விரும்புறியா ? “ என்று கேட்டார் அர்ச்சனா.
“ நல்லா யோசிச்சு முடிவு பண்ணி இருக்கேன். ரோஷினிக்கு என் ஆபீஸ்ல வேலை வாங்கித் தரேன் அதனால அவ அத பத்தி கவலைப்பட வேண்டியதில்ல “ என்று க்ரிஷ் பதில் சொன்னான்.
“ இல்ல, நான் இங்க இருந்து போக தயாரா இல்ல. அதாவது, நான் குடும்பத்தோட வாழ விரும்புறேன், அது மட்டும் இல்லாம, என்னோட சொந்த முயற்சியில தான் வேலை செய்யணும் நினைக்குறேன் “ என்று ரோஷினி சொன்னதும் அனைவரும் திகைத்து போனார்கள்.
“ ரோஷினி, நீ இதுவர சொன்ன எல்லாத்தையும் நான் ஒத்துகிட்டேன் ஆனா இந்த முற நீ நான் சொல்றத கேளு. க்ரிஷ் ஒரு முடிவு எதுத்துருக்கான், அது உங்க ரெண்டு பேருக்கும் நல்லது, அதனால நீங்க கல்யாணம் பண்ணி மும்பைக்கு போறத நல்லது. என்ன சொல்றீங்க மதன் ? “ என்றார் ரோஷினியின் அப்பா.
“ க்ரிஷ் ரொம்ப உறுதியா இருந்தா நான் அவனுக்கு சப்போர்ட் பண்ணுவேன் ஆனா க்ரிஷ் இந்த முடிவுல உனக்கு சந்தோஷமா ?” என்று மதன் க்ரிஷை கேட்டார். அவன் பதில் சொல்வதற்குள் ரோஷினி குறுக்கிட்டு, “ இந்த முடிவால நான் சந்தோஷமா இருக்க மாட்டேன் “ என்றாள்.
“ ரோஷினி, உனக்கு என்ன ஆச்சு? “ என்று ரோஷினியின் அம்மா கேட்டார் ஆனால் ரோஷினி அமைதியாக இருந்தாள்.
“ ரோஷினி, ஒவ்வொரு முறையும் நாங்க எல்லாரும் உன்னோட முடிவுக்கு உடன்படுவோம்னு நீ எதிர்பார்க்காதா “ என்று அர்ச்சனா கூறினார்.
“ ஒன்னு இந்த கல்யாணம் நடக்கணும் இல்ல அவளோட எனக்கு இருக்க உறவை நான் முறிச்சுக்குறேன். நான் ஒரு மாசத்துல மும்பைக்கு கிளம்பிடுவேன் அதனால முடிவு செய்ய அவளுக்கு ஒரு வாரம் டைம் தரேன் “ என்று சொல்லிவிட்டு க்ரிஷ் அவன் அறைக்கு செல்ல, ரோஷினி அவனை பின்தொடர்ந்தாள்.
“ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க க்ரிஷ்? “ என்று ரோஷினி எரிச்சலுடன் கேட்டதும், “ இனி நீ என் வீட்டில் இருக்க கூடாது. உன்னை ஒழிக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். அப்புறம் நீ அந்த வீடியோவ வெளியிட விரும்பினா தாராளமா செய். எதையும் எதிர்கொள்ள நான் தயாரா இருக்கேன். என்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியும். என் அப்பா, அம்மாவ தவிர வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்ல, அவங்க என்ன புரிஞ்சிக்குவாங்க. இப்போ வெளிய போ “ என்று க்ரிஷ் கடுப்புடன் அவளை விரட்டியதும் ரோஷினி திகைப்புடன் அவனை பார்த்தாள். நிலைமையை சமாளிக்க வழி தேடி விரல்களை கசக்கி தடுமாறினாள்.
கேஷவ் காலை உணவை டீப்பாய் மேல் வைத்துவிட்டு, வீட்டில் நடந்த விஷயங்களை விவரித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிடம் பேசிக்கொண்டிருந்த மைராவின் முகபாவத்தை கவனித்தான். அழைப்பை துண்டித்து ஜூஸை குடித்துவிட்டு கேஷவிடம் எல்லாவற்றையும் விளக்கினாள்.
“ க்ரிஷ் அவ கூட சந்தோஷமா இல்லனு நம்ம எல்லாருக்கும் தெளிவா தெரியும் அப்படி இருந்து அவன் ஏன் இந்த முடிவு எடுத்தான்னு நினைக்குறீங்க ? “ என்று மைரா கேட்க, “ ஏதோ ஒன்னு நடந்திருக்கு, அது அவன இந்த முடிவுக்கு தள்ளி இருக்கு. நான் சொல்றது சரியா இருந்தா இது அவனோட இறுதி முடிவா இருக்காது “ என்றான் கேஷவ்.
கேஷவ் சொன்னதை கேட்டதும், “ அவனுக்கு என்ன நடக்குதுனு நீங்க ஏன் கண்டுபிடிக்க கூடாது? “ என்று கேட்டாள்.
“ நான் அவனோட தனிப்பட்ட விஷயத்துல தலையிட விரும்பல, ஆனா அவனுக்கு நான் தேவைப்படும் போது நான் நிச்சயமா தலையிடுவேன். இப்போ நம்ம ரெண்டு பேர பத்தி பேசுவோமா ? “ என்று கேட்டான் கேஷவ்.
“ கண்டிப்பா மாமா “ என்று மைரா சொன்னதும். அவள் அவனை அப்படி அழைத்ததை கேட்டு சிரித்த கேஷவ் அவள் தோளில் கை போட்டு இழுத்தான். மைரா அவன் மீசையை முறுக்கி கன்னத்தில் கடித்தாள்.
“ ஏன் என்ன கடிச்ச அம்மு ? நான் புகார் செய்யல, ஆனா உனக்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கானு தெரிஞ்சிக்க கேட்குறேன் “ என்று கேஷவ் கேட்டதும், “ நீங்க ரொம்ப அழகா, அபிமானமா, ஹட்டா இருக்கீங்க. நீங்க ஒரு சாக்லேட்டா இருந்திருந்தா, நான் உங்கள சாப்பிட்டிருப்பேன் “ என்று மைரா பதில் சொன்னாள்.
“ எனக்கும் கூட உன்ன சாப்பிட ஆசையா இருக்கு அம்மு “ என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு லேப்டாப்பை பையில் வைக்க சென்றான். அவன் வார்த்தைகளைக் கேட்டு மைரா உதட்டைக் கடித்துக் கொண்டு புன்னகைத்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு தான் மறைமுகமான அர்த்தத்தை உணர்ந்தவள் உள்ளங்கையால் தன் வாயை மூடிக் கொண்டாள்.
“ ஒன்னு இந்த மனுஷனுக்கு இப்போலாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்ல, அப்படி இல்லனா நான் தான் அதிகமா யோசிக்குறேன் போல. அப்போ நான் அவர சாப்பிட்டு இருப்பேன்னு சொன்னதை அவரும் அப்படி தான் நெனச்சு இருப்பாரா ? கடவுளே ! இந்த பூமிய பிளக்க சொல்லு நான் உள்ள போய் ஒளிஞ்சிக்குறேன். எப்பவும் நானே ஏன் இப்படி சிக்குறேன் ? “ என்று புலம்பினாள்.
மாலைக்குள் கேஷவும் மைராவும் ஹோட்டலை காலி செய்து ஸ்விஸ் சென்றனர். அவர்கள் ஹோட்டலை அடைந்ததும், கேஷவ் அறைக்கு சாவி அட்டையை வாங்கும் வரை மைரா லாபியில் அமர்ந்திருந்தாள். ரிசப்ஷனை நோக்கி அவன் நடந்து சென்ற விதத்தில் அவள் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.
“ என் சுவீட் கெட்சப். ஏன் இவ்ளோ அழகா இருக்கீங்க? “ என்று நினைத்து அவனையே பார்த்தாள் அப்போது அவள் மனதில் ஒரு பாடல் முனுமுனுத்தாள்.
நீ நடந்தால் நடை அழகு… அழகு
மேஜையில் இருந்த மேனேஜரைப் பார்த்து அவன் புன்னகைத்த போது அவள் உதடுகளும் புன்னகையாக வளைந்தன.
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு…
கேஷவ் அந்த நபரிடம் பேசும் விதத்தைப் பார்த்து அவள் நாக்கின் நுனியை கடித்துக் கொண்டாள்.
நீ பேசும் தமிழ் அழகழகு அழகு…
நீ ஒருவன் தான் அழகு
அவள் கண்கள் காதலால் மின்னியது, உதடுகள் புன்னகையாக வளைந்தன, அவன் தன் விரல்களை அவன் தலைமுடியைக் கோதினான்.
ஓ..ஓ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
அவன் விரல்கள் மீசையை முறுக்குவதையும், அவன் பாக்கெட்டில் கையை நுழைப்பதையும் பார்த்துக் கொண்டிருந்த மைரா உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவளது கண்கள் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்தன. தவறுதலாக கீழே விழுந்த பேனாவை எடுக்க கேஷவ் குனிந்தபோது அவளும் குனிந்தாள்.
நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே
மேஜையில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவனை பார்த்து மைரா திகைத்தாள்.
“ அவர் என்ன இப்படி சித்திரவத செய்துட்டு, நான் அவரோட பொறுமைய சோதிக்கிறேன்னு என் மேல புகார் சொல்றாரு. கடந்த 24 மணி நேரமா அவர் என்ன கிஸ் பண்ணவே இல்ல. இந்த உலகத்துல இருக்க எல்லாமே கிடைக்க நீங்க தகுதியானவர், உங்களுக்காக நான் ரெடி, என் ஆச புருஷா. அச்சோ கடவுளே! மைரா உனக்கு அவர் மேல கிறுக்கு புடிச்சுடுச்சு “ என்று தனக்குதானே பேசிக்கொண்டாள்.
கேஷவ் சாவி அட்டையை காண்பித்து தலையை ஆட்டி அவளை அழைத்ததும் அவளது மயக்கம் கலைந்தது. மைரா அவனை நோக்கி விரைந்ததும் இருவரும் தங்கள் அறையை அடைந்தனர். ரூம் சர்வீஸ் தங்கள் லக்கேஜ்களை டெலிவரி செய்தனர்.
******************************************
முன்னோட்டம்:
“ ஏன் இவ்ளோ நல்லவரா இருக்கீங்க கேஷவ்? நீங்க என் புருஷன், அதனால நீங்க ஏன் கொஞ்சம் கெட்டவரா இருந்து என்கிட்ட உரிமை கொண்டாடக் கூடாது? “

1 comment
[…] 51.என் புருஷன் ஒரு ஜென்டில்மேன் […]