Home Family52. நான் நல்ல பொண்ணு மாமா

52. நான் நல்ல பொண்ணு மாமா

by Siragugal Novels
15 views

கேஷவும், மைராவும் அறைக்குள் நுழைந்து, கேஷ்வ் கதவை மூடியதும், மைரா அவன் முதுகில் குதித்து தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டாள்.

“ என்ன இப்படியே தூக்கிட்டு போங்க கேஷவ் “ என்று மைரா சொன்னதும், அவள் பெயர் சொல்லி அழைதத்தை கேட்டு கேஷவ் சட்டென நின்று ஒரு வேகத்தில் அவன் அவளை முன்னால் இழுக்க, மைரா அவனை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள்.

“ நம்ம டீலிங் பத்தி மறந்துட்டனு நினைச்சேன். நல்ல வேளை உனக்கு ஞாபகம் இருக்கு, ஏன்னா நீ ஒரு தடவையாச்சும் முதல்ல ஆரம்பிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எந்த விளையாட்டையும் ஒருத்தர் மட்டும் விளையாடினா நல்லா இருக்காது. எப்பவும் முதல்ல ஆர்ம்பிக்குறது நானா மட்டுமே இருக்க கூடாது, உணர்வுகள் பரஸ்பரமா இருக்கனும் மைரா, நீயும் என்ன மாதிரியே உணர்றது தெரிஞ்சு நான் சந்தோஷப்படுவேன் “ என்று கேஷவ் அவன் முத்தமிடாமல் இருந்த காரணத்தை வெளிப்படுத்தினான்.

மைரா சிரித்தபடி அவனது காலரைப் பிடித்து இழுக்க, இருவரும்  முத்தமிடத் தொடங்கினர். முத்தத்தை கலைக்காமல் அவளை . அவளை படுக்கையில் படுக்க வைத்தான். மைரா அவன் தலை முடியை பிடித்து அருகில் இழுத்து கொண்டாள். அவள் உதடுகளை முத்தமிட்ட பிறகு அவள் கன்னத்தில் மென்மையாக கடித்தான்.

“ கொஞ்ச நாளா நீ ரொம்ப கெட்ட பொண்ணா இருக்க மைரா. என்ன நல்லா கிண்டல் பண்ணி என்னோட பொறுமையும், கட்டுப்பாட்டையும் சோதிக்குற. சரி தானே ? “ என்று கேஷவ் கேட்க, “ நான் நல்ல பொண்ணு மாமா “ என்று அப்பாவியாக சொன்னாள் மைரா.

“ என்ன கேஷவ் இல்ல மாமா சொல்லி கூப்பிடுற உன்னோட இந்த அழகான உதட்டுக்கு நிச்சயம் ஏதாவது பரிசு கொடுக்கணும் “ என்று சொல்லி கேஷவ், அவளது கீழ் உதட்டை பற்களுக்கிடையில் கடித்து மெதுவாக இழுத்தான். மைரா முகம் சிவந்து அவனிடமிருந்து பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். கேஷவ் அவள் உதடுகளை முத்தமிட்டு, அவன் கட்டுப்பாட்டை இழந்ததும் நகர்ந்து அவள் அருகில் படுத்து தன் உடலின் கீழ் பகுதியை மறைக்க போர்வையை இழுத்தான்.

மைரா அவன் பக்கம் திரும்பி அவன் முகத்தைத் தன் விரலால் வருடினாள்.

“ ஏன் இவ்ளோ நல்லவரா இருக்கீங்க கேஷவ்? நீங்க என் புருஷன், அதனால நீங்க ஏன் கொஞ்சம் கெட்டவரா இருந்து   என்கிட்ட உரிமை கொண்டாடக் கூடாது? “ என்று மைரா மெல்ல கேட்டாள்.

“ நான் உன் புருஷன் என்ற காரணத்தால உன் மேல எந்த உரிமையும் கோர விரும்பல. நீயா உன்ன எனக்கு கொடுக்கும் போது நான் சந்தோஷப்படுவேன். நீ முழுசா தயாராகுற வர நான் வெயிட் பண்ணுவேன். நாம இப்போ எந்த அளவுக்கு நம்ம உறவுல முன்னேறி இருக்கோமோ அதே மாதிரி எல்லாம் நடக்கும் “ என்று சொல்லி கேஷவ் புன்னகைத்தான்.

“ எல்லா வகையிலயும் நான் தயாரா இருக்கேன்னு சொன்னா நீங்க என்ன செய்வீங்க ? “ என்று மைரா வெட்கத்தோடு கேட்டாள். உடனே கேஷவ் தன் முழங்கையை ஊன்றி அவள் முகத்தில் இருந்த முடியை மெல்ல வருடியபடி, “ நீ எனக்காக தயாரா இருக்கும் போது நான் என்ன எல்லாம் செய்வேன்னு கேட்க நீ தயாரா இருக்கியா ? “ என்று கேட்டான்.

மைரா ஆம் என்று தலையை அசைக்க, கேஷவின் கண்கள் இருண்டு அவனது ஆசையின் தீவிரத்தை பிரதிபலித்தன. அவன் தன் ஆள்காட்டி விரலால் அவள் நெற்றியைத் தொட்டான்.

“ நான் இங்க இருந்து ஆரம்பிப்பேன் மைரா. நான் உன்ன கட்டிப்புடிக்கும் போது நீ வசதியாவும், சௌகரியமா உணர நான் உன் நெத்தியில கிஸ் பண்ணுவேன். அப்போ உன் உதட்டுல ஒரு சிரிப்பு வரும், அத பார்த்து உன் கண்கள கிஸ் பண்ணுவேன். உன் உதட்டுக்கு மேல பெருமிதமா இருக்க இந்த குட்டி மூக்கு, இத மெல்ல கடிப்பேன். அதுக்கு அப்புறம் எனக்கு போதையா இருக்க இந்த அழகான உதடு என் கருணைக்கா கெஞ்சும், அப்போ நான் அத ரசிப்பேன்.

உன்னோட இந்த அழகான கழுத்துல நான் முத்த மழை பொழியும் போது நீ தலைய சாய்த்து எனக்கு இடம் கொடுப்ப. உன் உடம்புல இருக்க ஒவ்வொரு ஆடையும் அதோட சுதந்திரத்துக்கான  போராட்டத்த தொடங்கும், அது ஒவ்வொன்னுக்கும் சந்தோஷமா சுதந்திரம் கொடுப்பேன். உன் உடம்புல என் உதடு தொடாத ஒரு இடம் கூட இருக்காது, என் மனசுல உன் உருவத்த பதிய வைக்க பொறுமையா ஆராதனா செய்வேன். உன் மேல் உடம்புல இருக்க பொக்கிஷங்களோட நான் தொடங்கும் போது நீ உன் பெயர கூட மறந்துடுவ. நான் உன் ரகசியப் பொக்கிஷத்த அடையும் போது  நீ என் பெயர சொல்லி கதறி முனகுவ.

இந்த உலகத்துல இருக்க எல்லாத்தையும் மறந்து, உன்னோட நினைவுல நான் மட்டுமே இருப்பேன். உன் உடம்ப இதுவர அனுபவிக்காத இன்பத்துல உடைய வைப்பேன் மைரா “ என்று சொல்லி முடித்து போது அவளது நெற்றியிலிருந்து தொடங்கிய  அவன் விரல் அவளது பிளவை அடைந்தது.

மைரா எல்லாவற்றையும் அவன் நிஜமாகவே செய்வது போல் மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள், அவளுடைய தொடைகள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருந்தன, அவளுடைய கால் விரல்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டிருந்தன.

“ நான் உன் உடம்ப திரும்ப திரும்ப …. திரும்ப திரும்ப … ரசிச்சு அனுபவிச்சு ஆராதன செய்வேன். அப்போ நீ என்கிட்ட இருந்து இன்னும் அதிகமா விரும்புவ. என் வாழ்க்கையில உன்கிட்ட நான் ஒருநாளும் சோர்வடைய மாட்டேன். நீ தயாராகுற வரை நான் வெயிட் பண்ணுவேன். இப்ப கொஞ்சம் தூங்கு அம்மு. காலையில சுவிஸ் சுத்தி பார்க்க போகலாம் “  என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டு மல்லாந்து படுத்து அவளை பார்த்தான்.

மைரா நீண்ட நேரம் அவன் சொன்னதைக் கேட்டு அவன் வார்த்தைகளில் தொலைந்து போயிருந்தாள். அவளது உடலில்  ஹார்மோன்கள் அதிகமாகி அவளைக் காட்டிக் கொடுத்து அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் எதிர்வினையாற்றியது. அவளை அறியாமலேயே அவன் அவளிடம் சொல்வதை எல்லாம் செய்வதை அவள் கற்பனை செய்து பார்த்தாள். அவள் திரும்பி அவனை நோக்கிய போது அவன் தன்னையே பார்ப்பதைக் கண்டாள்.

அவளை அருகில் இழுத்து அவள் இடுப்பை பிடித்து நெற்றியில் முத்தமிட்டான்.

“ நான் உன்ன பயமுறுத்த விரும்பல அம்மு, அதனால எல்லாத்தையும் மறந்துட்டு இப்போ தூங்கு. குட்நைட். “ என்று கேஷவ் சொன்னதும் மைரா அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள், அவளது ஆசைகள் அவளை அவனை அழுத்த வைத்தது. அவள் தன் கன்னத்தை அவன் மார்பில் தேய்த்தாள், அவனது கடினமான உடலை அவளது மென்மையான உடலுடன் உணர்ந்தாள்.

“ ஒரு பொண்ணு அவளோட வாழ்க்கையில விரும்புற மாதிரி நீங்க இருக்கீங்க. என் புருஷன் எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டு கனவு கண்ட மாதிரி நீங்க இருக்கீங்க. நான் முழுமையா உங்க கூட இந்த வாழ்க்கைய வாழனும் “ என்று மனதில் நினைத்தாள்.

மறுநாள் காலை மைரா முதலில் எழுந்து, அவள் தயாரானதும் கேஷவை எழுப்ப முடிவு செய்தாள். அவள் தனது ஆடைகளை எடுக்க சாமான்களைத் திறந்தாள், அப்போது சிறிய ட்ராலி அவள் கவனத்தை ஈர்த்தது. அதைத் திறந்து அதில் இருந்த சாடின் நைட்டியை தொட்டுப் பார்த்தாள்.

அவள் சிரித்துக் கொண்டே முன்போலவே அதை மூடிவிட்டு தயாரானாள். பின்னர் கேஷவை எழுப்பிய பிறகு இருவரும்  சுற்றிப் பார்ப்பதற்காக ஹோட்டலை விட்டு வெளியேறினர். நாள் முழுவதும் அவள் சிந்தனையில் மூழ்கியிருப்பதையும், சில சமயங்களில் தானாகவே புன்னகைப்பதையும் கேஷவ் பார்த்தான்.

மாலையில் களைப்புடன் அறைக்குத் திரும்ப விரும்புவதாக அவள்  சொன்னதும், கேஷவ் உடனடியாக அவளை மீண்டும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

அறைக்கு திரும்பியதும் மைரா உடனே தூங்கிவிட்டாள், கேஷவ் அவளது செயலைப் பற்றி மிகவும் கவலைப்பட்டான். ஒரு கட்டத்தில் முந்தைய இரவு அவன் பேசியது அவளை வருத்தப்படுத்தியிருக்குமோ என்று அவன் வருத்தப்பட்டான், மேலும் அதற்கு தன்னைத்தானே சபித்தான். அவளிடம் மன்னிப்பு கேட்க அவள் எழுந்திருக்கும் வரை காத்திருந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து மைரா கண்விழித்த போது கேஷவ் சோபாவில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போல அவன் நெற்றியில் தெரிந்த சுளிப்பை அவள் குப்புறப் படுத்துக் கொண்டு பார்த்தாள்.

“ நீங்க என்ன யோசிக்குறீங்க கெட்சப் ? “ என்று மைரா கேட்டதும், “ கண் முழிச்சிட்டியா அம்மு ? “ என்று கேட்டு அவளிடம் சென்று பாதுகாப்பான தூரத்தில் அவளருகில் அமர்ந்து அவள் தலைமுடியை வருடினான்.

“ ஸாரி அம்மு, நேத்து நைட்டு நான் உன்ன அப்படி  பயமுறுத்தியிருக்கக் கூடாது. நான் அப்படி பண்ணதுக்கு என்ன மன்னிச்சிடு, இனி எப்பவும் அது மாதிரி நடந்துக்க மாட்டேன் ஆனா தயவு செஞ்சு எப்பவும் போல இரு. நீ இப்படி இருக்குறத என்னால பார்க்க முடியல “ என்று கேஷவ் மிகவும் வருத்தத்தோடு கூறினான்.

“ கெட்சப், ஸாரி சொல்றத நிறுத்துங்க. நீங்க என்ன பயமுறுத்தல, நான் நல்லா இருக்கேன் அதனால இப்படி தேவையில்லாம யோசிக்குறத நிறுத்துங்க. நான் நிஜமாவே ரெஸ்ட் எடுக்கனும்னு தான் திரும்ப வரணும்னு சொன்னேன் “ என்று மைரா சொல்லி அவன் கன்னத்தை தொட்டாள்.

“ உன்ன இப்படி பார்த்ததுல என் மேலையே எனக்கு அவ்ளோ கோவம் வந்துச்சு “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க என் புருஷன், உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதுவும் இல்லாம நீங்க என் புருஷனா நடந்துகிட்டது எனக்கு ஒன்னும் புடிக்காம இல்ல. இப்போ நாம இங்கேயே டின்னர் சாப்பிடலாம் “ என்று சொன்னதும் கேஷவ் நிம்மதியடைந்து புன்னகையுடன் அவள் உதட்டை மெல்ல முத்தமிட்டான். பின்னர் அவர்கள் அறையில் இரவு உணவு சாப்பிட்டனர்.

“ இப்போ க்ளைமேட் நல்லா இருக்கு வெளிய அதனால நாம வாக்கிங் போகலாம் “ என்று மைரா சொன்னதும், அவள் சொன்ன எல்லாவற்றிற்கும் அவன் கட்டுப்பட்டான். அவர்கள் லாபியை  அடைந்ததும், மைரா அவனுக்கு முன்னால் விரைந்து சென்று மேனேஜரிடம் ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் கேஷவிடம் திரும்பினாள்.

“ நீ அவர்கிட்ட என்ன சொன்ன ? “ என்று கேஷவ் கேட்டதும், “ பாத்ரூம் சுத்தம் பண்ணிட்டு புது டவல் வைக்க சொன்னேன். காலையில சீக்கிரமே கிளம்பி போய் இங்க இருக்க பனிப்பாறைகள பார்ப்போம். நான் அதையெல்லாம் கூகுள் பண்ணி பார்த்தேன், போடோஸ் எல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு அதனால நாம அங்க போய் நிறைய போட்டோஸ் எடுக்கலாம் “ என்று மைரா விளக்கம் சொன்னதும், “ உனக்கு என்ன செய்யணுமோ அதெல்லாம் செய்யலாம் அம்மு “ என்றான் கேஷவ்.

மைரா புன்னகைத்து, அவனுடன் கைகோர்த்து நடந்து சென்றாள். அருகில் இருந்த பூங்கா பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்து தம்பதிகள் மற்றும் குழந்தைகள் ஒன்றாக மகிழ்ச்சியாக நேரம் செலவிடுதை பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் ஹோட்டலுக்குத் திரும்பினர் அப்போது மைரா கேஷவை லாபியில் நிறுத்தினாள்.

“ கெட்சப், ப்ளீஸ் எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தர முடியுமா? நீங்க திரும்பி வரதுக்குள்ள நாம ஒன்னா படம் பார்க்க எல்லாம் ரெடி பண்ணிடுறேன் “ என்றாள் மைரா.

“ சரி நான் திரும்பி வரவரைக்கும் நீ இங்க லாபியல இரு, எங்கேயும் போகாத “ என்று கேஷவ் சொல்ல, மைரா சரி என்று தலையை அசைத்தாள்.

கேஷவ் சென்றதும் அவள் விரைந்து தங்கள் அறைக்கு சென்றாள். கேஷவ் அவள் கேட்ட ஐஸ்கிரீம்களை வாங்கி கொண்டு ஹோட்டலின் லாபியை அடைந்தான் ஆனால் மைரா அங்கு இல்லை என்றதும் உடனடியாக அவளை அழைத்தான். மைரா அறைக்கு சென்றுவிட்டதாக அவனிடம் தெரிவித்தாள். கேஷவ் லிஃப்டில் ஏறி தங்கள் அறை இருந்த தளத்தை அடைந்ததும், அறை  பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான்.

கேஷவ் கதவைத் தட்ட முற்ப்பட்ட போது மேனேஜர் சாவி அட்டையை அவனிடம் கொடுத்தார். ஆச்சரியமடைந்த கேஷவ்  அட்டையைப் பெற்றுக்கொண்டு கதவைத் திறந்தான் அப்போது அவனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆச்சரியத்தைப் பெற்றான்.

அறையும், படுக்கையும் மலர்களாலும் நறுமண மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மங்கலான ஒளிரும் ஊதா ஒளி பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய இசை ஒரு காதல் அதிர்வைக் கொடுத்தது. அவன்  ஐஸ்கிரீமை டீப்பாயில் போட்டுவிட்டு இந்த ஏற்பாடுகளுக்கு பின்னால் உள்ள நபரைத் தேடினான்.

“ மைரா.” என்று கேஷவ் அழைத்ததும், பாத்ரூம் கதவு திறந்து மைரா தரையில் பார்வையை பதித்தபடி வெளியே நடந்தாள். அவள் முழங்கால்களை மட்டுமே அடைந்த ஊதா நிற சாட்டின் நைட்டி அணிந்திருந்தாள், அவளுடைய தலைமுடி முன்புறமாக இழுக்கப்பட்டிருந்தது. அவளது உள்ளங்கைகள் பக்கவாட்டில் இருந்த ஆடைகளின் மீது பிசைந்து கொண்டிருந்தன. மெதுவான காலடிகளுடன் அவள் கட்டிலின் அருகே நின்றாள். அப்போதும் அவள் அவனைப் பார்க்கவில்லை.

தன் முன்னால் இருந்த வசீகரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்த கேஷவ் இன்னும் திகைப்பில் இருந்தான். அவளிடமிருந்து பார்வையை விலக்காமல் அவளருகில் நின்று அவள் தாடையைப் பிடித்து அவனைப் பார்க்க செய்தான்.

அவன் இன்னும் நெருக்கமாக குனிந்து அவள் நெற்றியை மெல்ல முத்தமிட்டு, “ குட் நைட் அம்மு, வா தூங்குவோம்.” என்றான்.

**********************************************

முன்னோட்டம்:

“ நீ அழகா இருக்க மைரா. நீ குண்டா இருக்குறது எனக்கு பிடிக்குமானு நீ ஒரு முறை என்கிட்ட கேட்டது ஞாபகம் இருக்கா ?  இப்படி கொழுகொழுன்னு இருக்குறது எவ்ளோ அழகு தெரியுமா ? உன்னோட இந்த வளைவுகள் எனக்கு தூக்கமில்லாத இரவுகள கொடுத்து இருக்கு மைரா, எத்தனை நைட்டு நான் பச்ச தண்ணியில குளிச்சு இருக்கேன் தெரியுமா ? “

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:54 pm

[…] 52.நான் நல்ல பொண்ணு மாமா […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!