மைராவின் கதகதப்பு இல்லாமல் கேஷவ் தூக்கத்தில் இருந்து விழித்தான். சமையலறையில் இருந்து அவளது கொலுசு சத்தம் கேட்டு நேராக உள்ளே நுழைந்து அவள் கோப்பையில் தேநீர் வடிப்பதைப் பார்த்தான். அவளை பின்னாலிருந்து அணைத்து கண்களை மூடி அவள் நறுமணத்தை முகர்ந்தான்.
“ போய் ரெடியாராகுங்க, அதுக்குள்ள நான் ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணிடுவேன் “ என்று மைரா சொன்னதும் கேஷவ் அவள் கழுத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு அறைக்கு தயாராக சென்றான். மைரா உணவை சமைத்து டைனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு கேஷ சாப்பிட வருவதற்காக காத்திருந்தாள். கேஷவ் ஒரு பனியனும் ஷார்ட்ஸும் அணிந்து வெளியே வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
மைரா மிகவும் அமைதியாக இருந்தாள், இருவரும் சாப்ப்பிடு முடித்ததும் ஹாலுக்கு சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர். கேஷவ் அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்து அவள் கன்னத்தை தன் விரலால் வருடி மெதுவாக அவள் கண்களை பார்த்தான்.
“ இப்போ இந்த மௌனமான தண்டன எதுக்கு அம்மு ? “ என்று அவன் கேட்டதும், “ காலையில சாப்பிட்டு முடிச்ச அப்புறம் பேச தொடங்க எனெர்ஜி சேமிச்சு வெச்சேன். இப்போ பதில் சொல்லுங்க, இத்தன வருஷத்துல உங்களுக்கு எத்தன பொண்ணுங்க ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க ? “ என்று மிகவும் சீரியஸாக கேட்டாள்.
“ நான் பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டேன் இருந்தாலும், ஸ்கூல், காலேஜ் அப்புறம் பெங்களூர்ல ஐடி கம்பெனியில வேலை செய்யும் போது சில பேரு ப்ரொபோஸ் பண்ணாங்க. அப்புறம் என் நண்பனோட தங்கச்சி ப்ரொபோஸ் பண்ணா ஆனா நான் அவங்க எல்லாரையும் உடனே நிராகச்சிட்டேன் “ என்று கேஷவ் பயபக்தியுடன் பதில் சொன்னான்.
“ நீங்க முதல் முறையா வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அந்த பொண்ணு யாரு ? நீங்க எந்த பொண்ணையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததா ஞாபகம் இல்ல அப்போ அந்த பொண்ணு மட்டும் ஏன் கூட்டிட்டு வந்தீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ இது தான் பொண்டாட்டி விசாரணையா ? “ என்று கேஷவ் மனதில் நினைத்து புன்னகைத்தான்.
“ அவ ராகேஷோட தங்கச்சி. அவன் குடும்பத்தோட ஊட்டிக்கு கிளம்புறதால அவன வீட்டுக்கு கூப்பிட்டேன் அப்போ அவன் அவளோட ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தான் அதனால ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தாங்க. ராகேஷுக்கு அவனோட இன்னொரு நண்பன் யாரோ உதவி கேட்டு போன் பண்ணதால அவன் தங்கச்சிய வீட்ல விட்டு அவன சந்திக்க போனான். அவன் திரும்பி ஆற லேட் ஆயிடுச்சு அதனால அவன் இருக்குற இடத்துக்கு அவள கூட்டிட்டு வர சொன்னா. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க “ என்று கூடுதல் விவரத்தையும் கூறினான்.
“ அப்பாவோட 60வது பிறந்த நாளுக்கு நீங்க கூட்டிட்டு வந்த பொண்ணு யாரு ? “ என்று மைரா அடுத்த கேள்வி கேட்டாள்.
“ அவ தான் என் நண்பனோட தங்கச்சி, அவ தான் என்ன ப்ரொபோஸ் பண்ணா. அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருந்துச்சு அதனால சென்னைக்கு கூட்டிட்டு போக சொல்லு அவன் கேட்டான். அவ என் மேல் இருக்க லவ் பத்தி அம்மாகிட்ட சொல்லுவானு நான் எதிர்பார்க்கல, அதனால நான் ஒரு கார் புக் ஓந்னி அவள உடனே அனுப்பிட்டேன் “ என்று விளக்கம் கொடுத்தான்.
அவன் பதிலை கேட்டு சமாதானம் ஆனதாக தலையை ஆட்டி, “ சரி இத்தன வருஷமா எனக்காக வெயிட் பண்றதுக்கு பதிலா மறந்துட்டு வாழ்க்கைய வாழணும்னு ஒரு முறை கூட யோசிச்சது இல்லையா ?” என்று கேட்டாள்.
“ நமக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா கூட நான் வெயிட் பண்ணி இருப்பேன் அம்மு. உன்ன என் கடைசி மூச்சு இருக்க வர லவ் பண்ணுவேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் அப்புறம் எப்படி உன்ன விட்டு நான் என் வாழ்க்கையில வேற எத பத்தியும் யோசிக்க முடியும் ? ஒவ்வொரு நாளும் நீ என் மனச இன்னும் அதிகமா தான் ஆகிரமிச்சுட்டு இருந்த. உன் எண்ணங்களோட நான் வாழ்ந்துட்டு இருந்தேன் “ என்று கேஷவ் பதில் சொல்லி அவள் கன்னத்தை மெல்ல வருடினான்.
“ உங்க லவ் பத்தி இல்ல நம்ம கல்யாணத்த பத்தி என்கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணுச்சா ? “ என்று அவள் கேட்க, “ ஆமா, ஒவ்வொரு நாளும் நான் உன்கிட்ட திரும்பி ஓடி வந்து எல்லாத்தையும் சொல்லனும்னு உணர்ந்தேன், ஆனா என்ன நானே நிறுத்திக்கிட்டேன். ரொம்ப வேதனையான நாள் உனக்கு நலங்கு நடந்த அப்போ தான். நீ தடுமாறி என் மேல விழுந்தது ஞாபகம் இருக்கா ? “ என்று கேஷவ் கேட்க, “ ஆமா, நான் உடைஞ்சு அழற நிலமையில இருந்தேன், ஆனா எல்லாருக்கும் முன்னால சமாளிச்சிட்டு இருந்தேன். ஆனா உங்கள பார்த் உடனே என் கண்ணீர என்னால கட்டுப்படுத்த முடியல “ என்று மைரா அந்த நாளை நினைவுகூர்ந்தாள்.
“ நீ என் மேல விழுந்த அப்போ உன் கண்கள பார்த்தேன், அதுல அவ்ளோ வலி தெரிஞ்சுது. நான் உன்ன தனியா கூட்டிட்டு போய் கட்டிப்புடிச்சு எல்லாத்தையும் சொல்லனும் விரும்பினேன், ஆனா கையில கிடைச்ச கடைசி வாய்ப்ப என்னால நழுவ விட முடியாதுனு அமைதியா இருந்துட்டேன் ஆனா என் வார்த்தையாள உன்ன ஆறுதல்படுத்த முடிவு செஞ்சேன். அன்னைக்கு நான் உன்கிட்ட சொன்ன வார்த்தையெல்லாம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு, ‘ உன் முகத்துல சிரிப்ப காணும் அம்மு, எதுக்காகவும், யாருக்காகவும் அத விட்டுடாத. எல்லாம் சரியாயிடும்னு சொன்னேன் “ என்று கூறியவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு, கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் அவள் உதடுகளை விரித்து புன்னகைக்க செய்தான்.
“ உன்னோட சிரிப்ப மட்டும் எனக்கு கொடு, நான் இந்த உலகத்த உன் காலடியில கொண்டு வருவேன் “ என்று கேஷவ் சொன்னதும் மைரா உணர்ச்சிவசப்பட்டு அவன் கழுத்தைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு அவன் கழுத்தில் ஒரு முத்தம் வைத்தாள்.
“ எல்லாத்தையும் நீங்க பாத்துக்கிட்டீங்கன்னு சொன்னீங்க ஆனா என்னோட நலங்கு மஞ்சள் யார் கொடுத்தது ? “ என்று மைரா கேட்டு உதட்டை சுளித்தாள்.
“ என் வருங்கால பொண்டாட்டிக்கு வேற யாராவது மஞ்சள் கொடுக்க அனுமதிப்பேன்னு நெனச்சியா ? பிரஷாந்தோட அம்மா மூலமா அதையும் நான் தான் அனுப்பினேன். நான் ஸ்பெஷல் ஸ்வீட் வாங்கிட்டு வந்து நலங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி வெச்சுட்டேன். சடங்கு முடிஞ்சதும் அந்த ஸ்வீட் தான் உனக்கு ஊட்டிவிட்டாங்க. அது மட்டும் நீ என் மேல மஞ்சள் பூசி நீ எனக்கும் நலங்கு வெச்சுட்ட “ என்று சொல்ல, மைரா அதிர்ச்சியில் பெருமூச்சுடன் புன்னகைத்துக் கொண்டிருந்த கேஷவைப் பார்த்தாள்.
“ அது விதி அம்மு, எனக்கு நலங்கு வைக்க மட்டும் என்னால ஏற்பாடு செய்ய முடியல, ஆனா என் வருங்கால பொண்டாட்டி அத பண்ணிட்டா. இத்தன வருஷம் கழிச்சு எல்லாமே நமக்கு சரியா சாதகமா நடந்துச்சு “ என்றான் கேஷவ்.
“ நீங்க கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஐஸ் கிரீம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ண அப்போ நான் நிராகரிப்பேன்னு நீங்க பயப்படவே இல்லையா ? “ என்று மைரா கேட்க, “ அய்யோ! உண்மைய சொல்லனுமா நான் அவ்ளோ பயந்தேன். வயசு வித்தியாசத்த சொல்லி மாமாவும் அத்தையும் கூட என்ன முதல்ல வேண்டாம்னு சொல்லிடுவாங்களோனு பயந்தேன். நான் சொன்னத கேட்டு அவங்க பதில் அஞ்சு நிமிஷம் எதுதுகிட்டாங்க. அவங்க வேணாம்னு சொல்லிட்டா என்ன செய்றதுனு தெரியாம, உன்ன முடிவு எடுக்க சொல்ல சொன்னேன். அப்புறம் அவங்க உன்கிட்ட பேசி, நீ என்கிட்ட பேச விரும்புறதா அவங்க சொல்ற வர நான் ஊசி மேல நின்னுட்டு இருந்த மாதிரி இருந்தேன். என்ன நம்பு, என் மனசுல ஒவ்வொரு கடவுளையும் நான் பிரார்த்தனை பண்ணேன். எனக்கு என் லவ் மேல நம்பிக்க இருந்துச்சு, உன்ன சம்மதிக்க வைக்க என் வசீகரத்தையும் கொஞ்சம் பயன்படுத்தினேன் “ என்று சொல்லி கேஷவ் அவளைப் பார்த்து கண்ணடித்ததும், மைரா அவன் கையை அறைந்தாள்.
“ ரொம்ப பெருமைப்படாதீங்க. உங்க வசீகரமான அழக பார்த்து ஒன்னும் நான் சம்மதம் சொல்லல மிஸ்டர். உங்க நேர்மை எனக்கு புடிச்சுது ஆனா இப்போ நீங்க சொன்னத கேட்ட அப்புறம் நீங்க சரியான fraudனு புரியுது “ என்று மைரா சொன்னாள்.
“ என்ன எந்த பெயர் வேணும்னாலும் சொல்லி கூப்பிடு, ஏன்னா இப்போ நீ என்கூட இருக்க. என் கழுத்த சுத்தி கட்டிப்புடிச்சிட்டு என் மடியில எவ்ளோ அழகா உட்கார்ந்திருக்க பாரு. நீ என் கண்ணுக்கு அவ்ளோ அழகான காட்சி அம்மு “ என்று சொல்லி அவள் கன்னத்தை முத்தமிட்டான்.
“ இப்படி கடலப்போடுறது, கிண்டல் செய்றது எல்லாம் நிறுத்துங்க, நாம இன்னும் பேசி முடிக்கல “ என்று மைரா சொல்ல, கேஷவ் அவளை தடுக்க அவள் உதட்டில் விரலை வைத்து அழுத்தினான்.
“ நீ எனக்கு பரிசா கொடுத்த சட்டைய நான் போடாம அப்படியே வெச்சுருந்தேன். நான் உன்ன ப்ரொபோஸ் பண்ணும் போது போடணும்னு அப்படியே வெச்சுருந்தேன் ஆனா கடைசியில நம்ம கல்யாணத்துக்கு புது பட்டு வேட்டி வாங்கி, நீ பரிசா கொடுத்த சட்டைய போட்டுகிட்டேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ அப்போ அதுவும் பிளான் பண்ணதா ? ஆனா நீங்க உங்க அலமாரியில இருந்து ஒரு சட்டைய யதார்த்தமா எடுத்ததா சொன்னீங்க ? “ என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“ ஸாரி அம்மு, நான் உண்மையா உன்கிட்ட எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்குறேன் “ என்றான் கேஷவ்.
“ எனக்குத் தெரியும், ஆனா நீங்க நம்ம ரெண்டு பேரோட ஒன்பது வருஷத்த வீணடிச்சுட்டீங்க அதனால நான் சமாதானம் ஆக மாட்டேன். சரி அது இருக்கட்டும் இப்போ அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை தடவை என்ன வேற கண்ணோட்டத்துல பார்த்திருப்பீங்க? “ என்று கேட்டாள்.
“ நீ என்ன கிஸ் பண்ண அன்னைக்கு தான் உன்ன எப்பவும் என் கையிலையே வெச்சுக்கனும்னு தோணுச்சு. உன் இடுப்ப நான் தொட்டது அது தான் முதல் முறை, உன் இடுப்பு ரொம்ப மென்மையா இருந்துச்சு. அப்புறம் ஆண்டு விழா அன்னைக்கு நான் உனக்காக செலெக்ட் பண்ண புடவையில நான் உன்ன கற்பனை பண்ண மாதிரியே இருந்த, உன்ன ஒரு முறை கட்டிப்பிடிக்க ஆசையா இருந்துச்சு ஆனா முடியல. அடுத்த முறை நீ எனக்கு சட்டைய பரிஸா கொடுத்த அப்போ, நீ சாக்லேட் சாப்பிடுறதுல மும்முரமா இருக்கும் போது உன்ன கிஸ் பண்ணனும் தோணுச்சு “ என்று சொல்லி தன் உதட்டை கடித்தான்.
ஆனால் அவன் பார்வையை கண்ட மைரா,” வேற எதுவும் தோணலையா ? “ என்று கேட்டாள்.
“ உன் கல்யாணத்தைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச நாள் தான் என் ஆசைகளோட உச்சத்த உணர்ந்த நாள். நான் உள்ள நுழையும் போது நீ மட்டும் தனியா உன் தலைமுடியை உலர்த்திட்டு இருந்த. உன் கன்னத்துல, கழுத்துல நீர்த்துளி இருந்துச்சு, நீ வேற துப்பட்டா போடாம இருந்த அதனால உன் நெஞ்சுல கூட நீர்த்துளி இருந்தத நான் பார்த்தேன். என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம உன்னோட அழகான வளைவுகள என் கண்கள் பார்க்க அனுமதிச்சேன் “ என்று சொல்லி கேஷவ் அவள் இடுப்பை கசக்கி அவளை அருகில் இழுத்து இருவரின் உடலையும் ஒன்றோடொன்று அழுத்தி அவள் கன்னம், கழுத்து, மார்பு என்று முத்தமிட்டான்.
“ அந்த நீர்த்துளி எல்லாம் உறிஞ்சி உன் இடுப்ப இப்படி அழுத்தி புடிக்க வெறியா இருந்துச்சு. என்னோட எண்ணங்கள் இன்னும் மோசமா எல்லை மீறி போறதுக்கு முன்னாடி என் மனச நிறுத்திட்டேன் “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் கூறினான் ஆனால் மைரா அவன் தலைமுடியை இழுக்கத் தொடங்கி, அவன் வலியில் துடித்து அவன் தலைமுடியை அவள் பிடியிலிருந்து விலக்க முயன்றான்.
“ லவ் சொல்லி ப்ரொபோஸ் பண்ணவும் இல்ல, நானும் உங்கள லவ் பண்றதா சொல்லவே இல்ல, அப்படி இருக்கும் போது எப்படி நீங்க என்ன அப்படி பார்க்கலாம் ? “ என்று மைரா கேட்க, அவள் கைகளை வெற்றிகரமாக அகற்றி, தன் தலைமுடியை சரி செய்து கேஷவ் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்,.
“ நான் உன்ன பல வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கேன், அதனால அந்த ஒரு நொடி தான் என் மனசு ஆசையில தடுமாறிடுச்சு, அதுல என் தப்பு எதுவும் இல்ல, நீ அவ்ளோ அழகா, கவர்ச்சியா தெரிஞ்ச, அதுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக்குறேன். ஏற்கனவே மதிய லஞ்ச் சாப்பிட நேர ஆயிடுச்சு அதனால உன்னோட விசாரணைய கொஞ்சம் நிறுத்திட்டு சமைக்க என்ன அனுமதி “ என்று சொல்லி அவளை தன் கைகளில் தூக்கி சென்று டைனிங் டேபிளில் உட்கார வைத்து விட்டு சமையலறைக்கு சென்று சமைக்க ஆரம்பித்தான்.
“ சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி பாட்டு பாடுற திறமை உங்களுக்கு இல்லையா, இப்போ ஏன் ஒரு பாட்டு பாடக்கூடாது? “ என்று மைரா கேட்டதும் கேஷவ் பாட ஆரம்பித்தான்.
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல…
கொல்ல வரும் மோகினியா…
சொக்குபொடி கொண்ட சுடர் விழியா…
திக்கி திக்கி வந்த சிறு மொழியா…
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…
8 மில்லிமீட்டர் புன்னகையா…
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா…
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…
மைரா அவன் பாடுவதைக் கேட்டு புன்னகையை மறைக்க உதட்டைக் கடித்துக் கொண்டாள், ஆனால் கேஷவ் அவள் காதுகளிலும் கன்னத்திலும் இருந்த இளஞ்சிவப்பு நிறத்தைப் பார்த்து சிரித்தான். அவன் அவளிடம் சென்று ஒரு கேரட்டை அவள் வாயில் வைத்து, கேரட்டின் மறுமுனையை கடிக்க ஆரம்பித்தான். மைரா அவன் வாயிலிருந்து கேரட்டை எடுத்துவிட்டு கைகளில் மார்பில் கட்டி அவனை முறைத்தாள்.
“ மிஸ்டர் ஹஸ்பண்ட் கிஸ் பண்ண கூடாதுனு உங்களுக்கு கொடுத்த தண்டன இன்னும் அப்படியே தான் இருக்கு அதனால நீங்க என்ன சமாதானப்படுத்துற வரை ஒழுங்கா நடந்துக்கோங்க “ என்று மைரா அவனை மிரட்டினாள்.
“ நீ ஏன் என்ன வேற வழியில தண்டிக்கக் கூடாது, நாம் இந்த முத்தம் இல்லாத தண்டனையில இருந்து சீக்கிரம் மீண்டு வரலாம் ? “ என்று கேஷவ் யோசனை சொன்னான் ஆனால் மைரா அவனிடம், “ இல்ல, நான் உங்கள என்ன கிஸ் பண்ண அனுமதிக்குற வரை இல்ல நான் முதல்ல கிஸ் பண்ற வர நீங்க வெயிட் பண்ணனும். இப்போ சொல்லுங்க, ஒவ்வொரு முறையும் என் உணர்வுகளுக்கு கச்சிதமா பொருந்துற மாதிரி உங்களால எப்படி பாட்டு பதிவிட முடிஞ்சுது ? “ என்று கேட்டாள்.
“ எனக்கு பாட்டு கேட்குறது மட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு. நான் பெரும்பாலான நேரத்துல பாடல்களோட வரிகள் மூலம் ரொம்ப ஈர்க்கப்படுவேன் “ என்று கேஷவ் பதில் கூறினான்.
அவன் சொன்னதை கேட்டதும், “ உங்க தண்டனைய நான் தீர்மானிச்சுட்டேன் கெட்சப். இந்த நிமிஷத்துல இருந்து நான் கேள்வி கேட்குற அப்போ இல்ல பேசும் போது நீங்க 10 வினாடிக்குள்ள பதில் சொல்லணும் “ என்று சொன்னாள். அதற்கு கேஷவ், “ நான் ஏற்கனவே உடனே பதில் சொல்றேனே அப்புறம் ஏன் அந்த பத்து வினாடி ? “ என்று கேட்டான்.
“ அச்சோ நான் தெளிவா சொல்ல மறந்துட்டேன். நீங்க ஒன்னு இல்ல ரெண்டு வரி பாடி எனக்கு பதில் சொல்லணும். நீங்க பத்து வினாடி வேணாம்னு சொல்றதால நான் வேணும்னா அத திரும்ப எடுத்துக்குறேன் “ என்று மைரா சொல்ல, கேஷவ் தன் வேலையை நிறுத்திவிட்டு சட்டென அவள் முன் சென்று அவள் தோளைப் பிடித்துக் கொண்டான்.
“ அம்மு, ஏற்கனவே உன்ன கிஸ் பண்ண கூடாதுனு சொல்லி இருக்க, அந்த தண்டன போதாதா ? “ என்று அவன் அதிர்ச்சியில் கேட்க, “ இல்ல, நீங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி பாட்டு போடுறதுல வல்லவராச்சே அதனால என்னோட அடுத்த ஆர்டர் வரை நீங்க பாடி தான் ஆகணும் “ என்று கண்டிப்பாக கூறினாள் மைரா.
“ உன் கேள்விக்கு என்னால பாட முடியாம போனா என்ன செய்றது ? “ என்று கேஷவ் கேட்க, “ ஏற்கனவே முத்தம் இல்லாத தண்டனையோட இன்னும் ஒரு 24 மணிநேரம் சேர்க்கப்படும். ஒவ்வொரு முறையும் நீங்க பதில் தவறவிட்டா, 24 மணிநேரத்தையும் நீங்களே சேர்த்துடுங்க “ என்று சாதாரணமாக சொன்னாள்.
கேஷவ் அதிர்ச்சியில் அவள் அருகில் இருந்த நாற்காலியில் சரிந்ததும், மைரா அவள் சட்டையில் இருந்த தூசியை துடைத்துவிட்டு டைனிங் டேபிளில் இருந்து குதித்தாள். அவள் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கேஷவிடம் கொடுத்ததும் அவன் உடனே மொத்தமாக குடித்தான்.
மைரா புன்னகையுடன் அவன் தோளைத் தட்டி, “ நல்ல பையன், உங்க நேரம் இப்போ ஆரம்பம் ஆயிடுச்சு “ என்றாள்.
****************
முன்னோட்டம்:
“ பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி “

1 comment
[…] 69. இது தான் பொண்டாட்டி விசாரணையா ? […]