கேஷவ் பயத்தில் விழுங்கியபடி சமையலில் கவனம் செலுத்த முயன்றான், ஆனால் அவன் மனம் மைரா அவனுக்கு முடிவு செய்த தண்டனையின் மீதே இருந்தது. இதுவரை கேட்ட பாடல்களை மனதளவில் நினைவு கூர்ந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான்.
“ ஏற்கனவே ஒரு முறை கூட கிஸ் பண்ணாம ஒரு நாள் ஆயிடுச்சு , இது இப்படியே நீடிக்க கூடாது அதனால உன்னோட திறமைய காட்டு கேஷவ் “ என்று நினைத்துக் கொண்டு அவன் மனதளவில் பிரார்த்தனை செய்தான், அவன் கண்களை உருட்டி தனக்குத்தானே மெல்லிய குரலில் பேசிக் கொள்வதைக் கண்டு மைரா திகைத்தாள்.
“ எனக்கு சாப்பாடு கிடைக்குமா இல்ல நீங்க இப்படி தனியா பேசிக்கிட்டே இருப்பீங்களா?” என்று மைரா கேட்டதும், கேஷவ் சட்டென்று நின்று ஒரு பாடலை நினைத்துக் கொண்டே மைராவை நோக்கித் திரும்பினான்.
“ பசும் பால் நெயிலத் துவரம் பருப கடஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா “ என்று கேஷவ் பாடியதும், மைரா புருவங்களை உயர்த்தி அவனை பாராட்டினாள், ஆனால் கேஷவ் முதல் நொடியே வென்றதற்காக நிம்மதி பெருமூச்சு விட்டான்.
கேஷவ் உணவை சமைத்து முடித்து பரிமாறியதும், மைரா மௌனமாக சாப்பிடத் தேர்ந்தெடுத்ததற்கு மனதில் நன்றி சொல்லிக்கொண்டான். அவர்கள் அறைக்குத் திரும்பியதும் மைரா கொட்டாவி விட்டபடி கட்டிலில் படுத்துக் கொண்டதும், கேஷவ் அவளருகில் அமர்ந்தான்.
“ கெட்சப், எனக்கு தூக்கம் வருது, அதனால நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன் “ என்று அவள் சொல்ல, “ தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே “ என்று கேஷவ் அதற்கு பதில் பாட்டு பாடினான்.
அவன் தேர்ந்தெடுத்த பாடலை கேட்டு மைரா உடனே கண்களைத் திறந்து அவனை துரத்த, கேஷவ் அறையை விட்டு வெளியே ஓடினான்.
“ அங்கேயே நில்லுங்க இல்ல ரொம்ப வருத்தப்படுவீங்க கெட்சப் “ என்று மைரா கூறியதும்,
“நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே” என்று கேஷவ் பாடினான்.
மைரா அவனை சோபாவில் பிடித்து அவன் கைகளை கிள்ளினாள்.
“ என்ன சோம்பேறின்னு சொல்றீங்களா? எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட பொய் சொல்லுவீங்க ? நான் சோம்பேறி இல்ல “ என்று மைரா கூறினாள்.
“ பொய் சொல்ல கூடாது காதலிப் பொய் சொன்னாலும் நீயே என் காதலி “ என்று கேஷவ் பாடல் பாடினான்.
அதை கேட்டு மைரா அவனை அடிப்பதை நிறுத்த, கேஷவ் அவள் கன்னங்களில் முத்தமிட்டான்.
“ நீ கோவமா இருக்க மாதிரி நடிக்கும் போது கூட அழகா இருக்க. இப்போ நான் உன் தண்டனையோட விதிகள மீறி நடந்த மாதிரி என்ன பார்க்காத. நான் பாட்டு பாடி பதில் சொல்லனும்னு தான் நீ சொன்ன ஆனா நான் உன் கூட பேசக்கூடாதுனு நீ சொல்லல “ என்று கேஷவ் கூற, “ என்ன நெனச்சுட்டு இருக்கீங்க உங்கள பத்தி ? “ என்று கேட்டு மைரா அவனை முறைத்தாள்.
“ நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை, பறக்கும் அது கலக்கும் தன் உறவை “ என்று கேஷவ் பாடியதும், மைரா புன்னகைத்தபடி அறைக்குத் திரும்ப, கேஷவ் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் அவளைப் பின்தொடர்ந்து அறைக்குச் சென்றான்.
மைரா மொபைலை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அவள் மடியில் தலை வைத்து கட்டிலில் படுத்திருந்தான்.
“ நீ என் பக்கத்துல இல்லாத நேரம் கூட என் உலகத்த மாத்தின அம்மு. உன் போட்டோவ பார்த்து பேசி எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லுவேன். நானும் வருணும் வேலையில இருந்து ரிலாக்ஸ் பண்ண வெளிய போகும் போது நான் மக்கள் ஜோடியா போறத பார்ப்பேன். ஒரு நாள் நாம அப்படி இருக்கனும்னு விரும்பினேன். விதவிதமான கலர்ல வளையல், கம்மல் பார்க்கும் போது, நீ என்கூட இருந்து, உன்கிட்ட இருக்க எல்லா டிரஸ்கும் மேட்சிங் நகை வாங்கி தர ஆசைப்படுவேன் “ என்று கேஷவ் மெல்ல கூறினான்.
“ ராகேஷ் சார் அப்புறம் வருண் கிட்ட உங்க லவ் பத்தி சொல்லி இருக்கீங்க ஆனா என்கிட்ட ஏன் சொல்லல ? நீங்க ஏன் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணல ? “ என்று மைரா பதிலுக்கு அவனிடம் கேட்டாள்.
“ ரகசியமானது காதல், மிக மிக ரகசியமானது காதல் “ என்று பாடியவன், “ அம்மு, நாம தியேட்டர் போய் ஒன்னா பார்த்த முதல் படம் உனக்கு ஞாபகம் இருக்கா ? நீ என் மேல சாய்ஞ்சு இருந்த, என்னால படத்துல கவனம் செலுத்த முடியவே இல்ல. அந்த டைரக்டர் சரியான முட்டாள், நம்ம அழகா உட்கார்ந்து இருந்த அப்போ இடைவெளி போட வேண்டிய அவசியம் என்ன ? “ என்று சொல்லி முகம் சுளித்தான்.
அவன் வார்த்தையை கேட்டு மைரா சிரித்தபடி அவன் மீசையை இழுத்தாள். கேஷவ் மீசையை முறுக்கியபடி அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
“ கிஸ் பண்ண கூடாதுனு தான் தண்டன கொடுத்த, நாம வேற ஏதாவது செய்யலாமா? எல்லாத்தையும் மறக்க நாம நிறைய செய்ய முடியும்னு உனக்கும் தெரியும். நாம லவ் சொல்லி ப்ரொபோஸ் பண்ணிட்டு இன்னும் அத கொண்டாடவே இல்ல அம்மு “ என்று கேஷவ் கண்களை சுருக்கி கெஞ்சினான்.
“ நீங்க என்ன சமாதானப்படுத்துற வரை எதுவும் நடக்காது, அதனால தள்ளி போய் உங்க இடத்துல படுத்து தூங்குங்க “ என்று மைரா சொன்னாள்.
“ மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே “ என்று கேஷவ் பாட, மைரா அவனைத் தடுக்க அவன் வாயின் மீது தன் உள்ளங்கையை வைத்து கண்களை மூடி உறங்கினாள். கேஷவ் அவள் உள்ளங்கையை எடுத்து முத்தமிட்டு அவளை இழுத்து அணைத்தான்.
மாலையில் நல்ல நறுமணம் வர எழுந்த மைரா சமையலறைக்கு சென்றால். கேஷவ் அவளுக்காக என்ன தயார் செய்திருக்கிறான் என்று அவள் பார்ப்பதற்குள் கேஷவ் அவள் கண்களை மூடினான்.
“ தயவு செஞ்சு கொஞ்ச நேரம் எதுவும் பேசாத, எதுவும் கேட்காத. என் வேலைய முடிக்க எனக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் மட்டும் கொடு “ என்று சொல்லி கேஷவ் அவளை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து கண்களைக் கட்டினான். மைரா தன் கால்களைத் தட்டிக் கொண்டும், உதட்டைக் கடித்துக் கொண்டும் இருந்தாள். அவன் அவளுக்காக ஏதோ சமைத்திருக்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தாலும், அவளது கற்பனைகளால் ஊகிக்க நினைத்தாள்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கேஷவ் அவளது கண்ணைக் கட்டியிருந்த கட்டை அகற்றியாதும் மைரா தன் முன்னால் ஒரு கேக்கைப் பார்த்தாள், அதில் “ SORRY “ என்று எழுதப்பட்டிருந்தது. கேஷவ் அவள் முன் மண்டியிட்டு அவள் கைகளைப் பற்றினான்.
“ மைரா, என் லவ் பத்தி சீக்கிரம் உன்கிட்ட சொல்லி ப்ரொபோஸ் பண்ணாததுக்கு என்ன மன்னிச்சிடு, என் பரிசுகள நேரடியா உன்கிட்ட கொடுக்காததுக்கும் என்ன மன்னிச்சிடு, உனக்கு தெரியாம நம்ம கல்யாணத்த பிளான் பண்ணதுக்கும் என்ன மன்னிச்சிடு, உன்ன காயப்படுத்துனதுக்கு என்ன மன்னிச்சிடு, உன்ன வருத்தப்பட வேச்சதுக்கும் என்ன மன்னிச்சிடு, நீ பல மாசமா அழுததுக்கும் நான் தான் காரணம் அதுக்கும் என்ன மன்னிச்சிடு, உன்ன என்கூட கூட்டிட்டு போக லேட்டா வந்ததுக்கும் என்ன மன்னிச்சிடு, ஒரு முட்டாளா இருக்குறதுக்கு மன்னிச்சிடு. எல்லாதுக்கும் மன்னிச்சிடு அம்மு. நீ இனி என் மேல இப்போ கோவமா இல்லனு எனக்கு தெரியும் இருந்தாலும் நீ என்ன மன்னிக்குற வரை நான் பொறுமையா வெயிட் பண்ணுவேன். நீ என் பாடல்கள ரசிக்குறனு எனக்கு தெரியும் அதனால உன் தண்டனை எல்லாத்தையும் நான் ஏத்துக்குறேன். உன்ன சமாதானம் செய்யும்னா நான் ஒரு பில்லியன் முறை கூட மன்னிப்பு கேட்க தயாரா இருக்கேன், ஆனா நான் உன்ன லவ் பண்றேன்னு ஒரு பில்லியன் முறை சொல்ல தயாரா இருக்கேன். ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஐ லவ் யூ “ என்று கேஷவ் சொல்லும் போது, மைரா குறுக்கிட்டு, : ஐ லவ் யூ “ என்றாள்.
மைரா அவனை அணைத்துக் கொள்ள, கேஷவ் அவளது உடலைச் சுற்றி தன் கையை வளைத்து அனைத்துக் கொண்டு அந்த காதலை உணர்ந்தான், அப்போது அவளுக்காக தான் பாட வேண்டும் என்பது உடனடியாக அவனுக்கு நினைவுக்கு வந்தது.
“ சொல்லிட்டாலே அவ காதல சொல்லும் போதே சுகம் தாளல “ என்று கேஷவ் பாடியதும், மைரா அணைப்பிலிருந்து பின்வாங்கி புன்னகையுடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ நீங்க ஜெயிச்சுட்டீங்க அதனால உங்க தண்டனைய ரத்து பண்றேன் “ என்று சொல்லி அவனை நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்து கிரீம் மற்றும் கத்தியுடன் மைரா திரும்பி வந்தாள். அவள் கேக்கில் “ SORRY “ என்று அழுதி இருந்ததை நீக்கி, அதன் அருகில் இதய ஈமோஜியுடன் ஐ லவ் யூ என்று எழுதினாள்.
“ இப்போ கேக் வெட்டுங்க, நான் இத டேஸ்ட் பண்ண ஆர்வமா இருக்கேன் “ என்று அவள் சொன்னதும், கேஷவ் அவளை இழுத்து தன் முன் நிற்க வைத்து கத்தியை அவளிடம் கொடுத்தான். அவன் அவள் கையைப் பிடித்துக் கொள்ள அவர்கள் ஒன்றாக கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டனர்.
“ நாம வாக்கிங் போயிட்டு ரெஸ்டாரண்ட்ல டின்னர் சாப்பிடலாம், ரொம்ப நேரம் வீட்டுல இருக்கறதுல எனக்கு அலுப்பா இருக்கு “ என்று மைரா யோசனை சொல்ல, “ ஏன்னா நாம பிஸியா இருக்க மாதிரி எதுவும் செய்யல, சாப்பிட்டு தூங்க மட்டும் தான் செஞ்சோம் “ என்றான் கேஷவ்.
“ அப்போ நீங்க என்ன எதிர்பார்த்தீங்க மிஸ்டர் ஹஸ்பண்ட் ? “ என்று மைரா கேட்க, “ நாமா நிறைய விஷயங்கள் ஒன்னா பண்ணி இருக்கலாம். ஒன்னா படம் பார்க்குறது, ஒன்னா பேக்கிங் பண்ணி இருக்கலாம், ஒன்னா சுத்தம் செய்றது, ஒன்ன குளிக்குறது, ஒன்ன தூங்குறது “ என்று கேஷவ் சொல்ல, மைரா அவன் கால்களை மிதித்து, தன் தலைமுடியை சிலுப்பி அவனை மீண்டும் நாற்காலியில் தள்ளினாள்.
“ நான் உங்க தண்டனைய ரத்து பண்ணி, உங்கள மன்னிச்சிட்டேன் ஆனா நான் எதுவும் ஆரம்பிக்குற அப்போ தான் எந்த விஷயமும் நடக்கும், அதனால வாய ஜிப் போட்டு மூடுங்க “ என்று மைரா கூறினாள்.
“ நான் இப்போ ரெண்டு நாளா அத திறக்கவே இல்ல, நான் பாவம் இல்லையா “ என்று கேஷவ் கேட்க, மைரா மீதம் இருந்த கேக்கை குளிர்சாதன பெட்டியில் வைத்து கதவை மூடிக்கொண்டு தயாராகினாள். கேஷவ் கதவை ஒட்டிய சுவரில் சாய்ந்து கதவு திறப்பதற்காகக் காத்திருந்தான். 30 நிமிடங்கள் கழித்து கதவு திறந்தது, மைரா ஒரு சம்மர் கவுன் அணிந்து வெளியே வந்தாள், கேஷவ் அவனை ஒரு பார்வை கூட பார்க்காமல் அவளை கடந்த போது அவளை பின்னால் தட்டினான்.
“ ஹலோ இப்போ நீங்க என்ன அடிச்சீங்களா ? “ என்று மைரா அதிர்ச்சியோடு கேட்க, “ அச்சோ நான் கதவ தட்டுறதா நெனச்சேன். கதவு ஏன் மென்மையாவும் வழவழப்பாவும் இருக்குனு நெனச்சதுல ஆச்சரியமில்ல. எனக்காக வெயிட் பண்ணி என் பொண்டாட்டி சலிப்படைய நான் விரும்பல, அதனால நான் சீக்கிரம் ரெடியாகுறேன் “ என்று சொல்லி கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தன் பனியனைத் தூக்கி எறிந்துவிட்டு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மைராவைப் பார்த்துக் கண்ணடித்தான். அவள் உதடுகளை சுளித்து அவன் தயாராக விட்டு ஹாலுக்கு சென்றால் ஆனால் உண்மையில் அவள் அவனது குறும்புத்தனங்களைக் கண்டு புன்னகைத்தாள்.
கேஷவ் அவளது கவுனுக்கு பொருத்தமான சட்டையை அணிந்து வெளியே வந்ததும், இருவரும் காரில் ஏறினார்கள். மார்க்கெட் சாலை அருகே காரை நிறுத்திவிட்டு நடந்து செல்ல முடிவு செய்தான். ஒரு வளையல் கடையில் நின்று அவளை உள்ளே இழுத்துச் சென்றான்.
“ இனிமே என் ஆசை எல்லாத்தையும் நிறைவேத்த போறேன். வளையல், கம்மல், இன்னும் என்னெல்லாம் வேணுமோ அதையெல்லாம் எல்லார் கலர்லையும் செலெக்ட் பண்ணுவோம் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ எந்த படத்துல இருந்து இந்த ஐடியா எல்லாம் கிடைச்சது? “ என்று மைரா கேட்டாள்.
“ இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்க்கு இருக்கற ஆசை. இப்போ என்ன கிண்டல் பண்ணாத, நாம சீக்கிரம் ஷாப்பிங் பண்ணிட்டு அடுத்த வேலைக்கு போவோம் “ என்றான் கேஷவ்.
மைரா சில வளையல் மற்றும் கம்மல் எடுத்துக் கொண்டு அவனை நோக்கித் திரும்பினாள், ஆனால் அவன் கையில் ஏற்கனவே ஒரு கூடை நிறைய பொருட்களை வைத்திருந்தான். அதோடு அவளிடம் இருந்தும் வாங்கி எல்லாவற்றிற்கும் பணம் செலுத்தினான்.
ஷாப்பிங் முடித்துவிட்டு இருவரும் ஒரு உணவகத்தை அடைந்தனர். மைரா அவனுக்கு எதிரே உட்கார இருந்தாள், ஆனால் அவன் அவளை இழுத்து தன் அருகில் உட்கார வைத்தான்.
“ நீ என் எதிருல உட்கார்ந்தா நான் எப்படி உனக்கு ஊட்டிவிடுவேன் ? உன்ன கிஸ் பண்ணவும் நீ அனுமதிக்க மாட்ட, அதனால நான் உன் கையையாவது புடிச்சுக்குறேன் “ என்று கேஷவ் சலித்துக் கொண்டதும், மைரா அவனை நெருங்கி தன் விரல்களை அவன் விரல்களால் கோர்த்தாள். அவர்கள் உணவை ஆர்டர் செய்த பின்னர் மைரா கேஷவின் தாடையைப் பிடித்து அவளைப் பார்க்க செய்தாள்.
“ நான் உன் புருஷன் அம்மு, நாம காட்டேஜுக்கு திரும்பி போற வரைக்கும் வெயிட் பண்ணு அப்புறம் நீ எவ்ளோ வேணும்னாலும் என்ன பார்க்கலாம் “ என்று கேஷவ் கிசுகிசுக்க, “ காலால நடுங்க மிஸ்டர் ஹஸ்பண்ட். நான் உங்க தாடியை பார்க்குறேன், நீங்க இப்போ கிட்டத்தட்ட ஒரு வாரமா தாடி ட்ரிம் செய்யலையா ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.
“ நீ என்ன கிஸ் பண்ண அனுமதிச்சா தான் டிரிம் செய்வேன்னு சபதம் எடுத்துருக்கேன் “ என்று கேஷவ் பதில் சொன்னான். அதற்கு மைரா உடனே, “ நான் உங்கள கிஸ் பண்ண முடிவு செய்யும் போது உங்க மீசைக்கும், தாடிக்கும் நடுவுல உங்க உதடுகள கண்டுபிடிக்க முடியாம போனா என்ன செய்றது ? “ என்று மைரா கிசுகிசுத்து கண்ணடித்தாள்.
“ இது ஒரு சீரியஸான பிரச்சின தான். நாம காட்டேஜுக்கு போனதும் என்னோட முதல் வேலை என் தாடியை ட்ரிம் செய்றது தான். இன்னைக்கு நைட்டு நான் உன்ன கிஸ் பண்ண நீ அனுமதி கொடுத்தா என்ன செய்றது? நான் எந்த வாய்ப்பையும் இழக்க விரும்பல” என்று சொல்லி உள்ளங்கையால் தாடியைத் தடவிக் கொண்டே மைராவைப் பார்த்துக் கண்ணடித்தான். மைரா முகம் சிவந்து அவன் பார்வையிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ நீங்க ஏன் எப்பவும் எல்லாத்துலையும் என்ன பத்தி மட்டும் நினைக்குறீங்க ? உங்களுக்கு ஒரு ஆசையும் இல்லையா ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.
“ ஏன் இல்ல ? எனக்கும் நிறைய ஆசை இருக்கு, அதுல பெரும்பாலானது நிறைவேறிடுச்சு. நான் குளிச்சு முடிச்சு வந்ததும் நீ எனக்கு தலை துவட்டி விடணும்னு நெனச்சேன், அது என் மணிக்கட்டுல காயம் ஏற்பட்ட அப்போ நடந்துச்சு. நீ எனக்கு ஊட்டி விடனும்னு ஆசைப்பட்டேன் அது பெரும்பாலான நாள் நடக்குது. உன் மடியில தலை வெச்சு தூங்கனும்னு ஆசைப்பட்டேன், அதுவும் எப்பவும் நடக்குது. உனக்கு புடிச்ச மாதிரி நான் ட்ரெஸ் பண்ணனும்னு நெனச்சேன் அதுவும் நடக்குது, ஏன்னா நீ தான் அத தினமும் செலெக்ட் பண்ற “ என்று கேஷவ் மகிழ்ச்சியோடு கூறினான்.
“ இன்னும் நிறைவேறாத ஆசைகள பத்தி சொல்லுங்க “ என்று மைரா கேட்டாள்.
“ காலையில நீ என்கூட குளிக்கனும், ப்ளௌஸ் இல்லாம புடவை கட்டி உன்ன பார்க்கணும், என் தலைமுடிக்கும், உடம்புக்கும் உன் கையால எண்ணெய் மசாஜ் செய்யனும், இது மாதிரி நிறைய ஆசைகள் இருக்கு, அது மட்டும் இல்ல எனக்கு ஒரு ஸ்பெஷல் ஆசை கூட இருக்கு ஆனா அத இன்னொரு நாள் சொல்றேன் “ என்று கேஷவ் ரகசியமாக அவள் காதில் சொல்லி முடித்தான்.
இருவரும் உணவை சாப்பிட்டு முடித்து காட்டேஜுக்கு திரும்பிய போது கிட்டத்தட்ட 11 மணி ஆகியிருந்தது. ஷாப்பிங் பைகளை கீழே போட்டுவிட்டு களைப்பில் இருவரும் நேராக படுக்கையில் விழுந்தனர்.
**************************************
முன்னோட்டம்:
“ அண்ணனும், தம்பியும் மூளைய அடமானம் வெச்சுட்டீங்க போல. எங்க அமைதிய சாப்பிட முடிவு பண்ணி எல்லாம் செய்றீங்க. டிவி சீரியல் மாதிரி தினமும் ஏதாவது ஒரு விஷயம் நடக்குது. அப்புறம் அவள பத்தி நான் சொல்லனுமா ? அந்த பல்லி சரியான நாடகக்காரி”

1 comment
[…] 70. பொய் சொல்லக் கூடாது காதலி […]