Home FamilyChapter 21

Chapter 21

by Siragugal Novels
22 views

ஆர்யன் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது ரஞ்சித் உள்ளே நுழைந்து, “சார், மானசி திரும்ப ஆபீஸ் வந்துட்டா. இப்போ அவ உங்கள சந்திக்க விரும்புறா ” என்று கூறினான். அதுவரை காதல் மயக்கத்தில் புன்னகைத்து கொண்டிருந்த ஆர்யனின் முகபாவம் கோவத்தில் இருண்டது. அவள் பெயரைக் கேட்டவுடனேயே அவனுக்குக் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. டேனியல் சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் மனதில் புதியதாக இருந்தது. அவன் மனதின் ஒரு பகுதி அவளை அப்போதே அங்கேயே கொன்றுவிட வேண்டும் என்று விரும்பியது ஆனால் இப்போதைக்கு அவன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

“அவள உள்ள அனுப்பு.” என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் வெளியே சென்றான். சில கணங்களுக்குப் பிறகு, மானசி உள்ளே நுழைந்தாள், அவளுடைய முகபாவம் வருத்தத்தில் இருப்பது போல தோன்றியது. 

“குட் மார்னிங் சார்.” என்று அவள் சொன்னதும் ஆர்யன் ஒரு முணுமுணுப்புடன் அவளை அங்கீகரித்தான்.

மானசி பேசுவதற்கு முன் தயங்கினாள், அவள் குரல் நடுங்கியது. ” சார், என்ன மன்னிச்சிடுங்க. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க. நான் இவ்ளோ தரம் தாழ்ந்திருக்கக் கூடாது. எனக்கு உங்க மேல இருந்த காதல்-” என்று மானசி சொல்லும் போது ஆர்யன் அவளை முறைத்து, “ நிறுத்து “ என்று கத்தினான். 

“ உன் முட்டாள்தனத்தை பத்தி எல்லாம் நான் கேட்க விரும்பல. போய் வேலைய பாரு. இந்த முறை கத்தி எடுத்த நான், அடுத்த முறை துப்பாக்கியில் கை வைக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டேன், அது நல்லா ஞாபகத்துல இருக்கட்டும் “ என்று ஆர்யன் எச்சரித்ததும் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது, ஆனால் அது எல்லாம் வெறும் முதலைக் கண்ணீர் என்று ஆர்யன் நன்கு அறிந்திருந்தான்.

” என்ன மன்னிச்சிடுங்க சார். நான் உங்களுக்கு விசுவாசமா இருப்பேன்” என்று மானசி சொல்ல, ஆர்யன் பதில் எதுவும் சொல்லாமல், “ வெளியே போ “ என்று சொன்னான்.  

மானசி வெளியே சென்றதும் மீண்டும் உள்ளே நுழைந்தான் ரஞ்சித்.

” அவளைக் கூர்ந்து கவனி ரஞ்சித், அவளோட ஒவ்வொரு அசைவும் கவனத்துல இருக்கணும் ” என்று ஆர்யன் சொன்ன போது அவன் குரல் கூர்மையாக இருந்தது. ரஞ்சித் சரி என்று சொல்லி விடைபெற்றான்.

 

மதிய உணவு இடைவேளையில், பவியைப் பார்க்க மகிழ்ச்சியாக சென்ற சஞ்சு அவளை பார்த்ததும் அவளை நோக்கி விரைந்து சென்றாள். இருவரும் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டனர், அவர்களுடைய பிணைப்பு எப்பொழுதும் போலவே வலுவாக இருந்தது.

” உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் சஞ்சு” என்று தோழியை இறுகப் பிடித்துக் கொண்டாள் பவி. “ நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் “ என்று சொல்லி சஞ்சு சிரித்தாள்.

அணைப்பில் இருந்து பின்வாங்கிய பவி அவளை கவலையுடன் பார்த்தாள். ” சஞ்சு, என்ன நடந்துச்சு ? உன்ன நெனச்சு நான் ரொம்ப பயந்தேன் தெரியுமா “ என்று கவலையுடன் கூறினாள். 

” ஒண்ணுமில்ல பவி. வா நாம உட்கார்ந்து, முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணுவோம் அதுக்கு அப்புறம் நான் எல்லாத்தையும் சொல்றேன் “ என்று சஞ்சு சொன்னதும் இருவரும் இருக்கையில் அமர்ந்தனர்.  உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அவர்கள் செட்டில் ஆனதும், பவி எதிர்பார்ப்புடன் முன்னால் குனிந்தான். ” இப்போ சொல்லு, உண்மையில என்ன நடந்துச்சு, நீ ஏன் இவ்ளோ நாள் வரல ?” என்று கேட்டாள்.

அந்த பயங்கரமான சம்பவத்தை விவரித்த சஞ்சு, ஆர்யனுடன் ஒரே வீட்டில் இருப்பதை மட்டும் சொல்லாமல் தவிர்த்து, அவன் அவளை  எவ்வாறு காப்பாற்றினான் என்பதையும் விளக்கினாள். அனைத்தையும் கேட்ட பவி திகைத்துப் போனான். “அட கடவுளே! அந்த பாஸ்டர்ட், இவ்ளோ கீழ்த்தனமான வேலைய செய்வான்னு நான் நினைக்கவே இல்லை.” என்று அதிர்ச்சியில் கூறினாள்.

” ஹ்ம்ம்… அது போகட்டும் விடு, இப்ப தான் எல்லாம் சரியாகிடுச்சே “ என்று சொல்லி சஞ்சு பெருமூச்சு விட்டாள். ஆனால் பவி முகம் சுளித்து, “ எனக்கு நெனச்சு பார்க்க கூட பயமா இருக்கு சஞ்சு, ரொம்ப கஷ்டமா இருக்கு “ என்று சொன்னாள். அதற்கு சஞ்சு உடனே, “ ஆமா… எனக்கும் பயமா இருந்துச்சு” என்று சொல்லி அந்த நினைவை நினைத்து லேசாக நடுங்கினாள்.

பவி அவளை ஒரு கணம் பார்த்து விட்டு சிரித்தான். ” சஞ்சு ஆனா இப்போ ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சிடுச்சு. ஆர்யன் சாருக்கு உன்ன புடிச்சு இருக்கு அது மட்டும் இல்ல அவருக்கு உன் மேல ஒரு கண்ணு இருக்கு. இப்போ சொல்லு, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன நடக்குது?” என்று கேட்டு அவள் புருவங்களை நெரித்தாள்.

ஆர்யனின் பெயரைக் கேட்டதும் சஞ்சுவின் கன்னங்கள் உடனடி சிவக்க ஆரபித்தன. அதை பார்த்ததும் பவி இன்னும் சிரிக்க ஆரம்பித்தாள். “ ஏய் சஞ்சு, நீ வெட்கப்படுறியா ? அப்போ  கண்டிப்பா ஏதோ நடக்குதுனு தான் அர்த்தம் “ என்று சொல்லி புருவத்தை உயர்த்தினாள். 

சஞ்சு சட்டென்று “இல்ல பவி, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ” என்று சொல்லி தலையை மறுத்து ஆட்டினாள். ஆனால் பவி குறும்பு சிரிப்புடன், “ பொய் சொல்றத நிறுத்து சஞ்சு, உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. அது இருக்கட்டும் ரெண்டு பேரும் லவ் சொல்லிட்டீங்களா ? “ அருகில் குனிந்து ரகசியாமாக கேட்டாள். 

பவியின் கேள்வியைக் கேட்டதும் சஞ்சுவின் மனம் அலைபாய்ந்தது. “ காதலா ? இப்போ வர ஆர்யன் லவ்னு ஒரு வார்த்த கூட என் கிட்ட சொன்னதே இல்லையே. அவர் உண்மையிலேயே என்ன லவ் பண்றாரா ? அப்படி லவ் பண்றதா இருந்தா ஏன் என் கிட்ட இது வர சொல்லவே இல்ல ? “ என்று அவள் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

“ சஞ்சு ?” என்று சத்தமாக அழைத்து பவி அவள் முகத்துக்கு முன்னால் கையசைத்து, “ அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்க ? “ என்று கேட்டதும், சிந்தனையில் இருந்து விடுபட்ட சஞ்சு தயங்கித் தயங்கி, ” இல்ல பவி. நாங்க இதுவர லவ் பத்தி பேசுனதே இல்ல. ஒரு வேல இது ஒரு பரஸ்பர உணர்வா கூட இருக்கலாம் ?” என்று சொன்னாள்.

சஞ்சு சொன்னதை கேட்டு பவி கண்களை உருட்டினாள். ” இந்த உருட்டுலாம் இங்க வேணாம், பளிச்சினு லவ் பண்றனு ஒத்துக்கோ “ என்று சொல்லி கண்ணடித்தாள்.  

“ அம்மா தாயே, அவர் என் கிட்ட வந்து லவ் ப்ரொபோஸ் பண்ணா முதல்ல உன்கிட்ட தான் வந்து சொல்லுவேன், இப்போ இத பத்தி பேசுறத நிறுத்து “ என்று சஞ்சு சொன்னதும், “ நீ ஏன் அவர் ப்ரொபோஸ் பண்ற வர வெயிட் பண்ணனும் ? நீ முதல்ல ப்ரொபோஸ் பண்ணு “ என்று பவி சொல்ல சஞ்சுவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. ” என்ன விளையாடுறியா ? வாய்ப்பே இல்லை “ என்று சொல்லி மறுத்துவிட்டாள். உடனே பவி வெற்றிப் புன்னகையுடன் சிரித்தாள். ” பாருடா ! அப்போ நீ அவர லவ் பண்றனு ஒத்துகுறியா ? “ என்று கேட்க, சஞ்சுவின் முகம் சிவந்தது. ” பவி, ப்ளீஸ் வாயை மூடு.” என்று கெஞ்சினாள். அதற்கு மேல் அவளை கிண்டல் செய்ய விரும்பாமல், “ சரி சரி நான் நிறுத்தறேன்” என்று சிரித்தபடி சொன்னான் பவி.

சஞ்சு தலையை ஆட்டி, “ சரி, வேற எதாவது நியூஸ் இருக்கா நான் தெரிஞ்சிக்க “ என்று கேட்டு பேச்சை மாற்ற முயன்றாள்.

பவியின் முகபாவம் உடனே மாறியது. ” ஆமா சஞ்சு, மானசி ரொம்ப நாள் லீவுல இருந்தா, நேத்து தான் திரும்ப வந்தா. என்ன விஷயம்னு தெரியல ஆனா ஏதோ சம்பவம் நடந்திருக்கு “ என்று சொன்னாள் அதை கேட்ட சஞ்சு தோள்களைக் குலுக்கி, “அவ விஷயத்த பத்தி நாம ஏன் கவலைப்படணும் ? விடு “ என்று சொன்னாள். அத்துடன், அவர்கள் தங்கள் மதிய உணவை முடித்துவிட்டு தங்கள் அறைகளுக்குத் திரும்பினர்.

சஞ்சு யோசனையில் ஆழ்ந்தவளாக தன் அறையில் அமர்ந்திருந்தாள். அவளும், ஆர்யனும் காதலைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை, ஆனால் அவர்களுக்கு இடையே ஒவ்வொரு பார்வை பரிமாற்றத்திலும், ஒவ்வொரு தொடுதலிலும் காதலை இருவரும் உணர தான் செய்தார்கள்.

“ இது லவ் தானே ? ஏன் அவருக்கும், எனக்கும் இந்த விஷயம் தோணவே இல்ல ? ஆனா இந்த சொல்லாம லவ் பண்றது கூட நல்லா தான் இருக்கு. அவர் முதல்ல ப்ரொபோஸ் பன்றாரானு பார்க்கலாம். அவர் சொல்லாம லேட் பண்ணா, நம்மலே ப்ரொபோஸ் பண்ண வேண்டியது தான். நான் ஆர்யன லவ் பண்றேன், கடவுளே ! “ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஆர்யனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.     

“ இதோ அழைப்பு வந்துடுச்சுல, எனக்கு தெரிஞ்சி இனிமே இவர கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம் போல “ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் சட்டென எழுந்து அவன் அறைக்கு சென்று, “ சொல்லுங்க ஆர்யன் “ என்று கேட்டாள்.  

” நீ லஞ்ச் சாப்பிட்டியா ? “ என்று ஆர்யன் விசாரிக்க, “ நான் சாப்பிட்டேன், நீங்க சாப்பிடீங்களா ? “ என்று அவளும் அவனை விசாரித்தாள்.  

” நானும் சாப்பிட்டேன் “ என்று சொன்ன ஆர்யன் மேஜையில் முன்னால் சாய்ந்து உட்கார்ந்து, “ பவித்ரா என்ன சொன்னாங்க?” என்று கேட்டான். ” நான் எல்லாத்தையும் சொன்னேன்… நாம ஒன்னா தங்கி இருக்கோம்னு மட்டும் தான் சொல்லல “ என்று சஞ்சு சொன்னதும் ஆர்யன் பதிலுக்கு சரி என்று முணுமுணுத்தான்.

” சரி நான் இப்ப கிளம்பட்டுமா?” என்று சஞ்சு கேட்டதும், “ வெயிட் பண்ணு கொஞ்சம் “ என்றான் ஆர்யன். “ இப்போ என்ன ? “ என்று கேட்டு சஞ்சு கண்களைச் சுருக்க, “ மேடம், இப்ப கூட கர்டைன்ஸ் திறக்க மாட்டீங்களா ? “ என்று ஆர்யன் கேட்டான். 

 “நான் ஏன் அத கழட்டனும் ? “ என்று சஞ்சு கேட்க, ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு அவளை பார்த்து, “ நீ அத கழட்டினா இப்படி அடிக்கடி உன்ன இங்க வர சொல்ல மாட்டேன் “ என்று சாதாரணமாக சொன்னான்.  சில நொடிகள் அவனை பார்த்த சஞ்சு, “ ஒருவேள நான் அந்த கர்டைன்ஸ் கழட்டினா நீங்க  உண்மையா வேலையில் கவனம் செலுத்துவீங்களா?” என்று கேட்டு புருவத்தை உயர்த்தினாள். 

” ஒஹ்ஹ்ஹ நல்லாவே வேலை செய்வேன் “ என்று ஆர்யன் குறும்பு சிரிப்புடன் சொல்ல, “ நீங்க என்ன வேலை செய்வீங்கன்னு எனக்கு தான் நல்லா தெரியுமே, அதனால கண்டிப்பா கழட்ட மாட்டேன் “ என்று உறுதியாக சொன்னாள்.

அவள் மறுத்ததும் ஆர்யன், ” ஏய் டார்லிங், கொஞ்சம் மனசு வெக்கலாமே, நான் பாவம் இல்லையா பேபி  ? “ என்று சொல்லி மீண்டும் கெஞ்சினான் அதை பார்த்து தன் புன்னகையை அடக்கி கொண்டு ” முயற்சி பண்றேன் “ என்றாள் சஞ்சு. 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் அவளை நோக்கி கையை நீட்டினான். சற்றும் யோசிக்காமல் சஞ்சு தன் உள்ளங்கையை அவன் உள்ளங்கையில் வைத்தாள். அவள் கையை தன் உதட்டருகே கொண்டு சென்று அவள் விரல்களில் மென்மையாக முத்தமிட்டான் ஆர்யன்.

சஞ்சு லேசாக கையை பின்னுக்கு இழுத்து, ” உங்களுக்கு என்ன ஆச்சு? உங்க வேலையில கொஞ்சம் கவனம் செலுத்துங்க “ என்று சொன்னாள் அதற்கு ஆர்யன், “ நான் முயற்சி பண்றேன் பேபி ஆனா என்னால முடியல “ என்று சொல்லி அவளை பார்த்துக் கொண்டே இருந்தான். 

அவனது குறும்புத்தனங்களுக்கு தலையை அசைத்தபடி, ” இது சரி வராது, நான் கிளம்பறேன்.” என்று சொல்லி அவள் தன் அறைக்கு  திரும்பி சென்றாள்.

பிற்பகல் 3 மணிக்கு ஆர்யனுடன் சஞ்சு மீட்டிங் அறைக்கு சென்றாள். அவன் மேஜையின் முன்னால் முதல் இருக்கையில் உட்கார்ந்தான். அவள் அவனருகில் அமர்ந்தாள். கட்டுமான தொழிலுக்கான புதிய டீலர்கள் ஆர்யனுடன் ஒரு பயனுள்ள விவாதத்தை நடத்தினர், 4:30 மணிக்கு, மீட்டிங்  முடிந்தது. மீட்டிங் அறையில் ஆர்யனையும், சஞ்சுவையும் தவிர வந்தவர்கள் அனைவரும் வெளியேறினர்.

சஞ்சு எழுந்து நின்று, “சரி, நான் மீடிங்க்ல பேசினத ரிபோர்ட் ரெடி பண்ணி உங்களுக்கு அனுப்புறேன் “ என்று கூறினாள். அவள் கிளம்பத் திரும்பிய போது, ஆர்யன் அவள் மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தினான்.

“ஆர்யன், நீங்க என்ன செய்றீங்க ? நாம மீட்டிங் ரூம்ல இருக்கோம். யாராவது வந்தா என்ன செய்றது ? ” என்று கேட்டு சஞ்சு முறைத்தாள். அதற்கு ஆர்யன், “ வந்தா என்ன இபோ ? எனக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்ல “ என்று அலட்சியமாக சொன்னான்.  “ எல்லாரும் நம்மள பத்தி கிசுகிசு பேச ஆரம்பிச்சிடுவாங்க “ என்று சொல்லி சஞ்சு கண்களை உருட்டினாள். அதை கேட்டு ஆர்யன் சிரித்தான். “ உனக்கு பயமா இருக்கா ? என்ன பத்தி கிசுகிசு பேச யாருக்கு தைரியம் இருக்கு ? “ என்று கூறினான். 

” எதுவா இருந்தாலும் சரி. இப்ப வாங்க போகலாம்” என்று சஞ்சு வற்புறுத்தினாள் ஆனால் ஆர்யனுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. அவன் அவளை தன் பக்கம் இழுக்க, சஞ்சு அவன் மடியில் விழுந்தாள். அவள் எழுந்து செல்வதற்கு முன் ஆர்யன் அவன் கைகள் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

” உனக்கு சொன்னா புரியாது பேபி. எனக்கு எப்பவும் உன் கூடவே இருக்கணும் போல இருக்கு “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும், “ ஏற்கனவே நாம அப்படி தான் இருக்கோம் ஆர்யன் “ என்றாள் சஞ்சு. 

அவள் சொன்ன பதிலை கேட்டு ஆர்யன் மறுத்து தலை அசைத்தான். “ எனக்கு அது போதாது ” என்று ஹஸ்கி குரலில் கூறினான். சஞ்சு பதில் பேசுவதற்குள் கதவு சுழன்று திறந்தது. சஞ்சு சட்டென ஆர்யனின் மடியில் இருந்து தடுமாறி வேகமாக பக்கவாட்டில் நகர்ந்து நின்றாள்.

மானசி ஒரு கணம் திகைத்துப் போய் வாசலில் நின்று, ” ஸாரி சார்” என்று முணுமுணுத்தாள்.

இருண்ட முகபாவத்துடன் ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து, “என்ன வேணும் மிஸ் மானசி?” என்று எரிச்சலான குரலில் கேட்டான். 

” புது காஸ்மெடிக் அறிமுகப்படுத்துனதுல இருந்து நம்ம கம்பெனிக்கு கிடைச்சு இருக்க லாப ரிபோர்ட் அப்புறம் அரசாங்க கட்டிட கட்டுமானத்துக்கு லீகல் டாகுமென்ட் தயாரா இருக்கு. நீங்க இதுல கை எழுத்து போடணும் “ என்று சொல்லி ஃபைலை நீட்டினாள்.

ஆர்யன் அவளை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. “ அத இங்க வெச்சுட்டு போங்க, நான் செக் பண்ணிட்டு அப்புறம் கையெழுத்துப் போடறேன்.” என்று அவன் சொன்னதும், “ சார் எல்லாத்தையும் நான் சரி பார்த்துட்டேன் ” என்று மானசி உடனே கூறினாள்.

அவள் சொன்னதை கேட்ட ஆர்யன், “மிஸ் மானசி, ஃபைலை வெச்சுட்டு போங்கனு சொன்னேன். நீங்க அப்புறம் வந்து எடுத்துக்கலாம் “ என்றான் அலட்சியமாக.

மானசி தயங்கினாள் ஆனால் அவனை எதிர்த்து பேச முடியாது என்பதால், “சரி சார். நன்றி.” என்று சொல்லி வெளியேற திரும்பினாள் ஆனால் ஆர்யனின் குரல் அவளைத் தடுத்ததும் நின்று அவனை பார்த்தாள்.

” மானசி, இனிமே நான் எந்த ரூம்ல இருந்தாலும் நீங்க கதவ தட்டிட்டு தான் வரணும் “ என்று ஆர்யன் கட்டளையிட்டான். மானசியின் பார்வை ஒரு நொடி சஞ்சுவை நோக்கி சென்றது. பின்னர் மறுபடியும் அவனை பார்த்து, “சரிங்க சார். என்னை மன்னிச்சிடுங்க.” என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பியதும், சஞ்சு ஆர்யன் பக்கம் திரும்பி முறைத்தாள்.

” இப்ப என்ன?” என்று அவன் கேட்க, “ அவ நம்ம ரெண்டு பேரையும் பார்த்துட்டா “ என்று பற்களை கடித்துக் கொண்டு சொன்னாள். அதற்கு ஆர்யன், “அதனால என்ன இப்போ ? அவ வாய் திறக்க தைரியம் வராது. அப்படியே வந்தாலும் நீ கவலைப்பட வேண்டாம்.” என்று சொல்லி புன்னகைத்தான்.

“ உங்கள என்ன செய்றதோ தெரியல “ என்று சொல்லி சஞ்சு தலையை ஆட்டினாள். “ ஒரு வழியா உனக்கு இப்போ புரிஞ்சிடுச்சு அதுல எனக்கு சந்தோஷம். சரி வா நாம ரூமுக்கு போகலாம் “ என்று அவன் சொன்னதும், ” ஹலோ மிஸ்டர், நீங்க உங்க ரூமுக்கு போங்க, நான் என்னோட ரூமுக்கு போறேன்” என்று திருத்தினாள்.

” சரி வா போகலாம் “ என்று அவன் வேடிக்கையாக சொல்ல இருவரும்  திரும்பி நடந்த போது, ஒரு மறுக்க முடியாத உண்மை அவர்களிடையே குடியேறியது. அவர்கள் உரக்கச் சொல்லாத காதல் ஏற்கனவே வளர்ந்து, ஒவ்வொரு கணத்திலும் அதன் வழியை நெய்யத் தொடங்கியது. இருவரும் மனம் திறந்து காதலை ஒப்புகொள்ளமால் இருக்கலாம் ஆனால் இப்போதைக்கு, அவர்கள் தங்கள் சொல்லப்படாத காதலை ஆழமாக உணர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

***************************

முன்னோட்டம்:

” நான் கெட்ட பையனா ? உண்மைய சொல்லு, என்ன மாதிரி ஒரு நல்ல பையனா யாரும் இருக்க மாட்டாங்க. இவ்ளோ நாள் ஆகியும் உன்ன ஒன்னும் பண்ணாம விட்டு வெச்சுருக்கேன் “

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!