Home FamilyChapter 84

Chapter 84

by Siragugal Novels
8 views

ரஞ்சித்தும், பாலாவும் போர்ட்டிகோவில் நின்று ஆர்யனும், சஞ்சுவும் எப்போது வருவார்கள் என்று காத்திருந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு கீர்த்தி மற்றும் பவித்ராவுடன் பிரதீப் மேன்ஷனை அடைந்தான். சந்திரசேகரின் மரணம் குறித்த அதிர்ச்சி செய்தியைக் கேட்டதும், நரேன் ஆர்யனின் மேன்ஷனில் இருப்பதை ரஞ்சித் மூலம் அறிந்து கொண்டு அவர்கள் மூவரும் ஆர்யன் மேன்ஷனை அடைந்தனர்.

“நரேன் இப்போ எப்படி இருக்காரு ?” என்று பவித்ரா கவலை தோய்ந்த குரலில் ரஞ்சித்திடம் கேட்டாள்.

“அவன் ரொம்ப உடைஞ்சு போய் இருக்கான் பவி, இப்போ கெஸ்ட் ரூம்ல தான் இருக்கான் ” என்று அதற்கு பதில் அளித்த ரஞ்சித்தின் குரல் சோகமாக இருந்தது.

ரஞ்சித் சொன்னதை கேட்டதும், பவித்ராவின் கண்கள் கண்ணீர் துளிர்த்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டு, “சஞ்சு எப்படி இருக்கா?” என்று கேட்டாள். அதற்கு ரஞ்சித், “சார் அவள கூட்டிட்டு வர போய் இருக்காரு, அவங்க எப்போ வேணும்னாலும் இங்க வருவாங்க “ என்று மெதுவாக சொன்னான்.

பவித்ரா கவலையுடன் இருப்பதை பார்த்த பிரதீப், “பவி, நீங்க முதல்ல நரேன போய்ப் பாருங்க. அதுக்கு அப்புறம் நாங்க அவன சந்திக்குறோம். அவனுக்கு இப்போ நீ பக்கத்துல இருக்குறது ரொம்ப அவசியம் “ என்று கூறினான்.

பவித்ரா மௌனமாகத் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள். ரஞ்சித் சொன்ன விருந்தினர் அறைக்குள், நரேன் ஜன்னலருகே உட்கார்ந்திருந்தான், அவன் பார்வை வெளியில் வெறுமையில் தொலைந்திருந்தது. கதவு லேசாகத் திறந்திருந்தது, ஒரு மெல்லிய தட்டல் அவனை மயக்கத்திலிருந்து வெளியே இழுத்தது. நரேன் திரும்பிப் பார்த்த போது வாசலில் நின்றிருந்த பவித்ராவைப் கண்டான்.

அவள் நரேனின் அனுமதிக்காக காத்திருக்கவில்லை, கதவை முழுமையாக திறந்து அவள் உள்ளே நுழைந்து தன்னுடைய கைகளை அவனைச் சுற்றி வளைத்து கொண்டாள். ஆறுதலான வார்த்தைகளை முணுமுணுத்தபடி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள், அவளுடைய கை அவன் முதுகை மென்மையாக தடவியது.

” ஸாரி நரேன், தகவல் தெரிஞ்சு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ப்ளீஸ் தைரியமா இரு, உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் “ என்று பவித்ரா ஆறுதல் சொன்னாள்.

“அவர் ரொம்ப மோசமானவர்னு எனக்குத் தெரியும், அவர் பண்ண பாவம் எல்லாம் ஒரு நாள் அவருக்கு திரும்ப வரும்னு எதிர்ப்பார்த்தேன் தான் ஆனா அது நடந்த அப்புறம் என்னால அத ஏத்துக்க முடியல. என்ன இருந்தாலும் அவர் என் அப்பா, எல்லாமே  ஒரே நேரத்தில் நடக்குது, அத நெனச்சா இன்னும் வேதனையா இருக்கு, என்னால தாங்க முடியல.” என்று சொன்ன நரேனின் குரலில் சோகம் கனத்தது. 

“மாயா சீக்கிரம் சரியாகிடுவா, நீ கவலைப்படாத. இப்போ அவளுக்கு நீ தான் இருக்க, அவளுக்காக நீ தைரியமா இருக்கணும் ” என்று பவித்ரா மெல்லிய குரலில் சொல்லி, அவன் முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், அவன் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “ இப்படி உள்ளேயே அடைஞ்சு இருக்காத, வா கொஞ்சம் வெளிய போகலாம் “ என்று ஒரு மென்மையான இழுப்புடன் அவள் அவனை லிவிங் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே எல்லோரும் காத்திருந்தனர்.

பிரதீப் உடனே நரேனை அணைத்துக் கொண்டு மௌனமான வார்த்தைகளால் ஆறுதல் சொன்னான். அனைவரும் பேசி முடித்த பின்னர், கௌசல்யா அவர்கள் அனைவருக்கும் காபி கொடுத்தார்.

நரேன் நிமிர்ந்து ரஞ்சித்தை பார்த்து, “ஆர்யன் உனக்கு போன் எதுவும் பண்ணானா ? “ என்று ஆவலுடன் கேட்டான். அதற்கு ரஞ்சித் ஆம் என்று தலையசைத்து, ” பண்ணாரு நரேன். அவர் சஞ்சுவ கூட்டிட்டு வந்துட்டு இருக்காரு. சீக்கிரம் வந்துடுவாங்க “ என்று பதில் சொன்னான்.

“சஞ்சு எப்படி இருக்கா?” என்று கேட்ட நரேனின் கண்கள் அவனது கவலையைக் காட்டிக் கொடுத்தன. “அவ நல்லா இருக்கா ” என்று ரஞ்சித் அவனுக்கு ஆறுதலாக பதில் சொன்னான். 

அப்போது, கார் ஹாரன் சத்தம் அங்கு நிலவிய அமைதியைக் கிழித்தது, அவர்கள் அனைவரும் எழுந்து நுழைவாயிலுக்கு விரைந்தனர். ஆர்யனும், சஞ்சுவும் வெளியே வர, ஒரு துடிப்பில்  கீர்த்தியும், பவித்ராவும் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டனர்.

“எப்படி இருக்க சஞ்சு?” என்று பவி கேட்டதும், “ நான் நல்லா இருக்கேன் பவி” என்றாள் சஞ்சு மென்மையாக.

கீர்த்தி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா ? “ என்று சொன்னாள். அதற்கு சஞ்சு, “ ஒண்ணுமில்ல கீர்த்தி, நான் திரும்பி வந்துட்டேன். ரிலாக்ஸ்” என்று ஆறுதல் சொன்னாள்.    

அவள் முன்னே சென்றதும், ரஞ்சித் அவளை அனைத்துக் கொண்டான், அருகில் இருந்த பிரதீப் பிரதீப் அவள் தலைமுடியை அன்பாக வருடினான்.

“ எப்படி இருக்க தங்கம் ? “ என்று ரஞ்சித் கண்ணீரை துடைத்தபடி கேட்க, “ நான் நல்லா இருக்கேன் அண்ணா “ என்றாள் சஞ்சு.

“ பாப்பா எப்படி டா இருக்க ? “ என்று நரேன் கேட்க, “ நல்லா இருக்கேன் அண்ணே “ என்று சஞ்சு புன்னகையோடு கூறினாள்.   

சஞ்சுவின் அத்தனை கஷ்டத்திற்கும் காரணம் தன் தந்தை செய்த காரியம் தான் என்ற குற்றவுணர்ச்சியில் நரேன் தலை குனிந்து நின்றான். அவன் நிலையை பார்த்த சஞ்சு அவனருகே சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஸாரி அண்ணா, தைரியமா இருங்க. மாயாவுக்கு நீங்க ரொம்ப முக்கியம். அவளுக்காக தைரியமா இருங்க “ என்று சஞ்சு ஆறுதல் சொன்னாள். அவள் வார்த்தையை கேட்டதும், “என் அப்பாவால நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க, இருந்தும் நீ எனக்கு ஆறுதல் சொல்ற. அவர் உனக்கு கொடுத்த கஷ்டம் எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு “ என்று சொன்ன போது நரேனின் குரல் உடைந்தது.

சஞ்சு அழைப்பில் இருந்து பின்வாங்கி, “ அண்ணா, தயவு செஞ்சு இப்படியெல்லாம் பேசுறத நிறுத்துங்க. இதுல உங்க தப்பு என்ன இருக்கு ? நாங்க எல்லாரும் உங்களுக்காகவும், மாயாவுக்காகவும் இருக்கோம். எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும் ” என்று சொன்னாள்.

” உன்ன தவிர வேற யாரும் இப்படி நடந்துக்க மாட்டாங்க சஞ்சு. ஆர்யன் ரொம்ப அதிர்ஷ்டசாலி அதனால தான் நீ அவனுக்கு கெடச்சு இருக்க. எப்பவும் சந்தோஷமா இரு டா. நிறைய கஷ்டம் அனுபவிச்சுட்ட, இனி நீ எதுக்கும் கஷ்டப்பட கூடாது “ என்று நரேன் உண்மையாக சொல்ல, “ அதையெல்லாம் விடுங்க, இப்போ வாங்க உள்ள போகலாம்” என்றாள் சஞ்சு புன்னகையுடன்.

அனைவரும் உள்ளே சென்றதும், கௌசல்யா சஞ்சுவை கட்டிப்பிடித்து அடக்க முடியாமல் தேம்பி அழுதார். பாலாவும் கண்கள் ஈரமாக உணர்ச்சிவசப்பட்டான்.

“ப்ளீஸ், ஏன் எல்லாரும் இப்படி அழறீங்க? பாலா அண்ணா, தீபா அம்மா என்னை அவங்க சொந்த பொண்ணு மாதிரி பார்த்துகிட்டாங்க. எனக்கு அவங்கள ரொம்ப புடிச்சு இருக்கு “ என்றாள் சஞ்சு மென்மையாக. 

” சஞ்சு மா, உன்ன பார்த்துகுறத விட அவங்களுக்கு வேற என்ன முக்கியமான வேல சொல்லு ? நீ எங்க எல்லாருக்கும் தேவத
“ என்று சொல்லி பாலா கண்ணீருடன் சிரித்தான்.

சஞ்சு ஆர்யன் பக்கம் திரும்பி, “ஆர்யன், எல்லாரும் ரொம்ப எமோஷனலா இருக்காங்க… எனக்கும் அழனும் போல இருக்கு “ என்று சொன்னதும், ” நீ இப்போ பயணம் பண்ணி வந்ததுல களைப்பா இருப்ப அதனால போய் குளிச்சிட்டு வந்து எல்லார் கூடவும் சேர்ந்து டின்னர் சாப்பிடலாம் “ என்று சொல்லி ஆர்யன் அவள் தோளில் கை போட்டான்.

ஆர்யன் அவளை அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்று, உள்ளே சென்றதும், கதவை மூடிவிட்டு, அவளை பின்னாலிருந்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

” நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்னேன் தெரியுமா? நீ இல்லாம இந்த ரூம் உள்ள வர புடிக்கவே இல்லடி“ என்று ஆர்யன் கிசுகிசுத்தான். அதற்கு சஞ்சு அவன் கையை தட்டிக் கொடுத்து, “ அதான் இப்போ நான் வந்துட்டேன்ல, கவலைப்படாத விடு “ என்று கூறினாள்.     

“ நான் உன்னை நிறைய மிஸ் பண்ணேன் “ என்று ஆர்யன் மீண்டும் சொல்ல, ” சரி பா, எல்லோரும் நமக்காக கீழ வெயிட் பண்ணுவாங்க அதனால முதல்ல போய் அவங்களோட சாப்பிடலாம் அப்புறம் வந்து நாம பேசுவோம்.” என்று சஞ்சு அன்பாக பதில் சொன்னாள். 

இருவரும் புத்துணர்ச்சி பெற்று மற்றவர்களுடன் சேர்ந்து இரவு உணவு அருந்தினர். அவர்கள் அனைவரும் அரிய ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வுடன் ஒன்றாக சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்த பினனர், “நரேன், நைட்டு நீ இங்கேயே இரு. இன்னிக்கு நீங்க எல்லாரும் இங்கேயே தங்கிக்கலாம்.” என்று ஆர்யன் சொன்னததை கேட்டு அனைவரும் சம்மதித்தார்கள்.

ரஞ்சித் அவர்களுக்கு அறைகளை ஒதுக்க உதவினான், அதே நேரத்தில் பவித்ரா நரேனுடன் அதிக நேரம் தங்க முடிவு செய்தாள். அவன் உடைந்து இருக்கும் தருணத்தில் அவன் தனியாக இருப்பதை அவள் விரும்பவில்லை.

அனைவரும் அவரவர் அறைக்கு சென்ற பின்னர், ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் அறைக்குத் திரும்பினர். ஆர்யன் அவள் முன் மண்டியிட்டு அவளது வயிற்றை முத்தமிட்டு, தனது உள்ளங்கையை வைத்தான்.

” பாப்பா, நாம மறுபடியும் ஒன்னா இருக்கோம். இதுக்கு அப்புறம் நாம எப்பவும் ஒன்னா இருப்போம், உன்னையும், அம்மாவையும் விட்டு அப்பா எப்பவும் பிரிய மாட்டேன். உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்குவேன். ஐ லவ் யூ பாப்பா “ என்று ஆர்யன் கிசுகிசுத்தான். அப்போது திடீரென்று, அவன் தனது உள்ளங்கையில்  ஒரு சிறிய உதையை உணர்ந்தான். சஞ்சுவும் கண்களை அகல விரித்து மூச்சிரைத்தாள்.

“ஆர்யன்…” என்று அவள் அவனை அழைத்ததும், இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது, அவர்களின் இதயங்கள் மகிழ்ச்சியால் துடித்தன. ஆர்யன் குனிந்து மீண்டும் அவள் வயிற்றை முத்தமிட, இன்னொரு உதை தொடர்ந்தது.

“நீ அத உணர்ந்தியா ?” என்று சஞ்சு வியப்பில் நடுங்கிய குரலில் கேட்க, “ ஆமா.” என்று ஆர்யன் சொன்னான்.

” நம்ம குழந்த முதல் முறை உதைச்சத நாம ஒன்னா உணர்ந்து இருக்கோம் ஆர்யன் “ சஞ்சு மகிழ்ச்சியில் சொல்ல, நிறைந்த மனதுடன் அவளை நிமிர்ந்து பார்த்த ஆர்யன், ” ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட். இந்த சந்தோஷத்த எனக்கு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி “ என்று கூறினான்.

இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் அறையில் ஒன்றாக அரவணைத்து உறங்க படுத்ததும், அவர்களின் இதயங்கள் இறுதியாக அமைதியடைந்து இருவரும் ஒரு நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

மறுநாள் காலை, நரேனும் பவித்ராவும் மாயாவுடன் இருக்க மருத்துவமனைக்கு சீக்கிரமே கிளம்பினர். அதே நேரத்தில், ஆர்யன் தான் இல்லாத நேரத்தில் அலுவலகத்தை நிர்வகிக்குமாறு பிரதீப்பிடம் சொல்ல அவனை அழைத்தான்.

“ சொல்லு ஆர்யன் “ என்று பிரதீப் கேட்டதும், “பிரதீப், நான் இன்னும் சில விஷயங்கள கவனிக்க வேண்டி இருக்கு அதனால இன்னும் கொஞ்ச நாள் ஆபீஸ் வேலை எல்லாம் நீ பார்த்துக்க “ என்று ஆர்யன் கூறினான்.

எப்போதும் பொறுப்புடன் இருக்கும் கீர்த்தி, பிரதீப்புக்கு வேலையில் உதவத் தொடங்கினாள்.

மூன்று நாட்கள் கழிந்தன. ஆர்யனின் பெற்றோரை மேற்பார்வையிடும் தலைமை மருத்துவர் இறுதியாக மாற்று மருந்தைப் பெற்றார். சிகிச்சையைத் தொடங்கிய பின்னர் மருத்துவரின் அறிக்கைக்காக ஆர்யன் ரஞ்சித்துடன் மருத்துவமனையில் பதட்டத்துடன் காத்திருந்தான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவர் ஐ.சி.யுவில் இருந்து வெளியே வந்தார்.

” சார், இதுவரை எந்த பக்க விளைவுகளும் இல்ல. அடுத்த மூணு இல்ல நாலு நேரத்துல அவங்களால கொஞ்சமா உடம்ப அசைக்க முடியும்னு நம்புறேன். அடுத்த முறை இதே மருந்து கொடுக்கும் போது இன்னும் நல்ல முன்னேற்றம் இருக்கும் “ என்று டாக்டர் நம்பிக்கையாக சொன்னதை கேட்டதும், “தேங்க்யூ டாக்டர்” என்றான் ஆர்யன் மகிழ்ச்சியாக.

பின்னர் அவன் தனது பெற்றோர்களான திரு. விஷ்ணு சைதன்யா மற்றும் திருமதி தேவிகா சைதன்யா படுத்திருந்த அறைக்குள் சென்றான். அவர்களின் கண்கள் திறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

“அம்மா, அப்பா… கவலைப்பட வேணாம். நீங்க சீக்கிரம் சரியாகி இயல்பு நிலைக்கு வருவீங்க ” என்று ஆர்யன் அவர்களுக்கு நம்பிக்க அளித்தான்.

பதிலுக்கு அவர்கள் அவனைப் பார்த்து கண் சிமிட்ட, ஆர்யனின் இதயம் மகிழ்ச்சியில் வேகமாக துடித்தது. அவர்களுடன் சிறிது நேரம் பேசி செலவிட்டுவிட்டு, அவர்கள் தூங்கியவுடன் கிளம்பிய ஆர்யன்,  இன்னும் சாப்பிடாமல் காத்திருந்த தன் மனைவியைப் பார்க்க வீடு திரும்பினான்.

“சஞ்சு மா, நீ ஏன் இப்படி சாப்பிட எனக்காக வெயிட் பண்ற ? ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட வேணாமா ? “ என்று கேட்டபடி  உள்ளே நுழைந்தான் ஆர்யன்.

” கடந்த சில நாளா நீ இல்லாம நான் தனியா தான் சாப்பிட்டேன் அதனால இனி முடியாது. நீயும் வா, நாம ஒன்னா சாப்பிடலாம் “ என்று சஞ்சு சொல்ல, ஆர்யன் புன்னகைத்து, சட்டென்று புத்துணர்ச்சி பெற்று, அவளருகில் அமர்ந்து, அன்புடன் அவளுக்கு உணவளித்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சஞ்சு அவனை ஆவலுடன் பார்த்தாள். “ஆர்யன், என் கிட்ட ஏதாவது சொல்லணுமா?” என்று அவள் கேட்க, “ஆமாம் சஞ்சு. ஆனா அது ஒரு நல்ல செய்தி தான். இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணு நானே சொல்றேன் “ என்று பதில் அளித்தான் ஆர்யன்.

சஞ்சு பதிலுக்கு சரி என்று சொல்லி அவன் மீது சாய்ந்தாள். ஆர்யன் அவளை ஒரு குட்டித் தூக்கம் போட தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“மாயாவோட ஆபரேஷன் நாளைக்கு ப்ளான் பண்ணி இருக்கு ” என்று ஆர்யன் மென்மையாக சொன்னதும், சஞ்சு சரி என்று தலையசைத்து, “ஹ்ம்ம்… அவ சீக்கிரம் குணமடையனும். நரேன் அண்ணாவ பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு “ என்று கூறினாள்.

“அவ நல்லா இருப்பா,” என்று ஆர்யன் அவளுக்கு உறுதியளித்தான். அதை கேட்டதும், “அவ மறுபடியும் நமக்குள்ள பிரச்சன பண்ணா என்ன செய்றது ? “ என்று சஞ்சு அமைதியாகக் கேட்டாள்.

“அவ இனி வர மாட்டா ” என்று ஆர்யன் உறுதியாக சொன்னான். அதற்கு சஞ்சு அவனிடம், “எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?” என்று கேட்டாள். 

“பொறுத்திருந்து பாரு” என்று ஆர்யன் புன்னகையுடன் சொல்ல, “ரொம்ப சஸ்பென்ஸ் வைக்குற ” என்று முணுமுணுத்தபடி கண்களை மூடிக்கொண்டாள்.

சஞ்சு தூங்கிய பிறகு, ஆர்யன் ரஞ்சித் காத்திருந்த தனது ஆபீஸ் ரூமுக்கு சென்றான்.

“ரஞ்சித், நான் கேட்ட மாதிரி போட்டோ ரெடி பண்ணிட்டியா ?” என்று ஆர்யன் கேட்டதும், ” எல்லாமே ரெடி சார் “ என்றான் ரஞ்சித்.

“விவான சந்திச்சு நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வா. நான் நரேன் கிட்ட பேசறேன்.” என்று ஆர்யன் சொன்னதும், ரஞ்சித் சரி என்று கூறினான்.

மறுநாள் காலை, மருத்துவமனைக்கு சென்ற ஆர்யன், நரேனை தனிப்பட்ட முறையில் சந்தித்தான்.

“நரேன், நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன், நீ அத புரிஞ்சிக்குவனு நம்புறேன் “ என்று ஆர்யன் கவனமாக ஆரம்பித்தான்.

“சொல்லு, என்ன விஷயம்?” என்று நரேன் குழப்பத்துடன் கேட்டான்.

அப்போது ரஞ்சித்தும், விவனும் அங்கு வந்தனர். விவானை பார்த்ததும், ” இவன் ஏன் இங்க இருக்கான்?” என்று கேட்ட நரேனின் முகபாவம் கோவமாக மாறியது.

” நான் சொல்றத கேளு நரேன். விவான் இன்னும் மாயாவ லவ் பண்றான். அவன் அவள கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கான். இது தான் சரியான நேரம்னு நான் நினைக்குறேன். ஆபரேஷனுக்கு முன்னாடி விவான் மாயாவை கல்யாணம் பண்ணிக்கட்டும். ப்ளீஸ்,     என்ன நம்பு, அவளுக்கு சந்தோஷமான வாழ்க்க அமையும்.” என்று ஆர்யன் உறுதியா பேசினான். 

நரேன் கண்களைச் சுருக்கியபடி விவானை நோக்கித் திரும்பினான்.

” சார், நான் மாயாவ உண்மையிலேயே லவ் பண்றேன். நான் பண்ணது தப்பு தான் ஆனா அவ கிட்ட இருக்க எல்லா குறைபாடுகளோட நான் அவள லவ் பண்றேன். தயவு செஞ்சு என்ன நம்புங்க. அவள நான் நல்லா பார்த்துக்குறேன் “ என்று விவான் நம்பிக்கையாக சொன்னதை கேட்டதும், “ஆபரேஷன் முடிஞ்ச அப்புறம் அவ உன்ன நிராகரிச்சா என்ன செய்றது ?” என்று நரேன் இன்னும் கவலையுடன் கேட்டான்.

“கவலைப்படாத, அவ விவான நிராகரிக்க மாட்டா. அதுக்கு நாம என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்யலாம். அவ வாழ்க்கையில சந்தோஷமா இருக்க மாதிரி பார்த்துக்கலாம் “ என்று ஆர்யன் கூறினான்.

நரேன் நீண்ட மௌனத்திற்குப் பிறகு சம்மதம் சொல்லி தலையசைத்தான். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் மாயாவின் வார்டுக்குள் நுழைந்தனர். ரஞ்சித் விவானிடம் ஒரு தங்க தாலி செயினை கொடுக்க, விவான் அதை மாயாவின் கழுத்தில் கட்டினான். ரஞ்சித் அமைதியாக அந்த தருணத்தை பதிவு செய்தான். பின்னர், அவர்கள் வார்டை விட்டு வெளியே சென்றனர்.

“நீங்க என்னை நம்பலாம், அவ என்ன வெறுத்தாலும் நான் அவள நல்லா பார்த்துக்குவேன் “ என்று நரேனிடம் விவான் உறுதியளித்தான். அப்போது ரஞ்சித் ஒரு ஃபைலை நரேனிடம் கொடுத்தான்.

“மாயாவ பொறுத்தவர, உங்க அப்பா விவான ஏத்துக்க மறுத்துட்டாரு அதனால மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவங்க ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிட்டாங்க. விபத்துல அவளோட நினைவையும், பிறக்காத குழந்தையையும் இழந்துட்டா “ என்று ரஞ்சித் சொன்னான்.

ரஞ்சித்தை தொடர்ந்து “ஏ.ஆர்.சி கூட ஒரு பிசினஸ் பார்ட்னர்ஷிப் இருந்துச்சு, அதுல அவ வேலை செஞ்சா ஆனா அந்த பிசினஸ் நஷ்டம் ஆனதால நாம பார்ட்னர்ஷிப் ரத்து பண்ணிட்டோம்னு சொல்லலாம். நரேன், அவளுக்கு என்ன பத்தி எந்த நினைவும் இருக்காது. அவளுக்கு நீ, விவான் அப்புறம் உன் அப்பா மட்டும் தான் ஞாபகத்துல இருப்பீங்க. நீ என்ன புரிஞ்சிக்குவனு நம்புறேன். இது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது “ என்று ஆர்யன் பொறுமையாக எடுத்து சொன்னான்.

“எனக்குப் புரியுது, அவளும் எல்லாரும் மாதிரி ஒரு சந்தோஷமான வாழ்க்கைய வாழனும். அது தான் என் விருப்பமும் கூட. அதுக்கு இது தான் ஒரே வழியா இருந்தா, நான் இதுக்கு சம்மதிக்குறேன் “ என்று நரேன் கூறினான்.

“நான் ஏற்கனவே டாக்டர் கிட்ட சொல்லிட்டேன். இப்போ நாம சொன்ன மாயாவா தான் அவ கண் முழிப்பா. அவ என்ன சந்திக்குறதுக்கு முன்னாடி இருந்த மாயாவா இருப்பா. நீ என்ன உறுதியா நம்பலாம் “ என்று ஆர்யன் வாக்குறுதி அளித்ததும், “ ரொம்ப நன்றி ஆர்யன் “ என்றான் நரேன்.

“ரஞ்சித், அவளோட friends கிட்ட பேசு. நாம சொன்னத தாண்டி வேற எந்த விஷயமும் மாயாவுக்கு அவங்க சொல்ல கூடாதுனு எச்சரிக்க பண்ணு. அத மீறி அவங்க ஏதாவது மாத்தி சொன்னா அப்புறம் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்னு தெளிவா சொல்லிடு. “ என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் உடனே அந்த வேலைகள் மேற்கொண்டான். 

சிறிது நேரத்தில் திட்டமிட்டபடி மாயா ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டாள். ஆர்யனின் நம்பிக்கைக்குரிய மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய நுழைந்தபோது அனைவரும் வெளியே காத்திருந்தனர்.

நரேன் அமைதியிழந்து நடந்து கொண்டிருந்தான். பவித்ரா அவன் கையைப் பிடித்து மெல்ல ஆறுதல் சொன்னாள்.

இந்த அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நீடித்தது. கடைசியில், டாக்டர் கையுறைகளைக் கழற்றியபடி வெளியே வந்தார்.

“டாக்டர், மாயா எப்படி இருக்கா?” என்று நரேன் அவசரமாகக் கேட்டான்.

“ஆபரேஷன் சக்சஸ் “ என்றார் டாக்டர் நம்பிக்கையூட்டும் புன்னகையுடன். பின்னர் அனைவரையும் பார்த்து, “ அவங்களுக்கு மறுபடியும் சுயநினைவு வரும் ஆனா குறைஞ்சது எட்டு இல்ல பத்து மணி நேரம் ஆகும். அவங்க சுயநினைவுக்கு வந்ததும் நான் அவங்க கிட்ட பேசுறேன். அதுவர அவங்க ICUவுல தான் இருப்பாங்க. அவங்களோட அண்ணன் மட்டும் போய் அவங்கள பார்க்கலாம், வேற யாரும் கண்டிப்பா போக கூடாது. நான் அவங்க கிட்ட பேசுற வர நீங்க யாரும் அவங்க கிட்ட எதுவும் பேச கூடாது “ என்று கூறினார். 

“நிச்சயமா டாக்டர், ரொம்ப நன்றி “ என்று சொல்லவிட்டு, காத்திருந்த நரேன், உள்ளே இருந்து நர்ஸ் அழைத்ததும் அமைதியாக ஐ.சி.யு.வுக்குள் நுழைந்தான். மாயா தலையில் கட்டுப் போட்டுக் நினைவிழந்து பலவீனமாகக் கிடந்தாள். அவன் மௌனமாக அவளருகே நின்று அவள் மூச்சு விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவனது உணர்ச்சிகள் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருந்தன. சில கணங்களுக்குப் பிறகு, டாக்டர் அறிவுறுத்தியபடியே அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல்  வெளியேறினான்.

******************

முன்னோட்டம்:

“இப்போ என்னால உன்னை கட்டிப்பிடிக்க கூட முடியலடி “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!