ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் அறையில் இருந்தனர். ஆர்யன் பால்கனியில் நின்று காலைச் சூரியனின் பொன்னிறக் கதிர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தோளில் அவளது மென்மையான ஸ்பரிசம் அவனை யதார்த்தத்திற்கு கொண்டு வர, ஆர்யன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“நீ என்ன யோசிக்குற ஆர்யன்?” என்று சஞ்சு மெதுவாகக் கேட்டாள்.
“அம்மாவையும் அப்பாவையும் பத்தி அறிவிக்கணும். ஆனா அதுக்கு முன்னாடி நரேன் கிட்ட பேசி நேத்து நாம பேசின எல்லாத்தையும் சொல்லணும். அவன் நம்புவானா தெரியல, சந்தேகமா தான் இருக்கு ” என்று ஆர்யன் யோசனை தோய்ந்த குரலில் பதில் சொன்னான்.
” எப்போ உன் மேல் நம்பிக்க இல்லாம போச்சு ? நம்பிக்கையோட சொல்லு. அவர் உன்ன நிச்சயம் நம்புவாரு. உண்மைய சொல்லி அவர இன்னும் காயப்படுத்த வேணாம். இத்தன அதிர்ச்சியான சம்பவத்துக்கு அப்புறம் இப்போ தான் அவர் கொஞ்சம் நிம்மதியா இருக்காரு. அத கெடுக்க வேணாம் “ என்று சஞ்சு கூறினாள்.
” நீ சொல்றது சரி தான். அவன இன்னிக்கு வீட்டுக்கு கூப்பிடறேன். அவன் கிட்ட பேசுன அப்புறம் பிரஸ் மீட் வச்சுக்கலாம்.” என்று ஆர்யன் தலையசைத்தான். அதற்கு சஞ்சு உடனே, “சரி, சீக்கிரம் அவர் கிட்ட பேசி வரச் சொல்லு.” என்றாள்.
ஆர்யன் தலையசைத்து உடனே நரேனை அழைத்து தன் மேன்ஷனுக்கு வரச் சொன்னான். எந்தக் கேள்வியும் கேட்காமல் நரேன் வர சம்மதித்தான்.
பின்னர், ஆர்யன், சஞ்சு மற்றும் அவனது பெற்றோர் லிவிங் அறையில் அமர்ந்திருந்த போது, நரேன் மேன்ஷனுக்குள் நுழைந்தான். லிவிங் அறையை அடைந்ததும் அவன் பார்ப்பதை நம்ப முடியாமல் உறைந்து போய் நின்றான். அவனைக் கவனித்த ரஞ்சித் அவனை உள்ளே அழைத்ததும், எல்லோரும் தங்கள் கவனத்தை அவன் பக்கம் திருப்பினார்கள். ஆர்யன் எழுந்து நரேனை நோக்கி நடந்து அவன் கையைப் பிடித்து மெல்ல உள்ளே அழைத்து சென்று தன் பெற்றோர் முன் நின்றான்.
நரேனின் கண்கள் ஆர்யனிடம் இருந்து நம்ப முடியாமல் அவன் பெற்றோரை நோக்கின.
” அங்கிள், ஆன்டி எப்படி இருக்கீங்க?” என்று தணிந்த குரலில் நரேன் கேட்டதும், “நாங்க நல்லா இருக்கோம் நரேன். நீ எப்படி இருக்க ?” என்று தேவிகா புன்னகையுடன் பதிலளித்தார்.
“வா நரேன், வந்து எங்க கூட உட்காரு ” என்று விஷ்ணு அவனை அன்புடன் அழைத்தார். நரேன் அவர்களுடன் அமர்ந்திருந்தான், இன்னும் திகைப்புடன், ஆர்யனைப் பார்த்தபடி, பதில்களுக்காகக் காத்திருந்தான்.
” ஆக்ஸிடென்ட் ஆன அப்புறம் அம்மாவையும், அப்பாவையும் யாரோ காப்பாத்தி இருக்காங்க. உன் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆன அடுத்த நாள் அவங்க உயிரோட இருக்காங்கன்னு தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. முதல்ல நான் அத நம்பவே இல்ல. ஆனா ரெண்டாவது முறை போன் வந்த அப்போ, அப்பாவே என்கிட்ட பேசினாரு. அப்ப தான் நான் உடனே போய் அவங்களை இங்க கூட்டிட்டு வந்தேன். ரெண்டு பேருக்கும் முழு பரிசோதனைக்காக ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன். அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நல்லா ஆரோக்கியமா இருக்காங்கனு தெரிஞ்ச அப்புறம் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் “ என்று ஆர்யன் அவன் திட்டமிட்டபடி கூறினான்.
ஆர்யன் சொன்னதை கேட்டதும், “ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆர்யன் ” என்று நரேன் உணர்ச்சிவசப்பட்டான் ஆனால் அதன் பிறகு மீண்டும் ஆர்யனை பார்த்து, “ அப்போ ஆக்ஸிடென்ட் ஆன இடத்துல கிடச்ச உடம்பு யாரோடது ? “ என்று கேட்டான்.
” அப்பாவோட பழைய friend ஒருத்தரும், அவரோட மனைவியும் அப்பா, அம்மா கூட போய் இருக்காங்க. அது நம்ம யாருக்கும் தெரியாது. அந்த ரெண்டு உடம்பும் அவங்களோடது “ என்று ஆர்யன் சொன்னான்.
” ஒஹ், ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று உண்மையான மகிழ்ச்சியுடன் சொன்னான் நரேன்.
“ அம்மா, அப்பா உயிரோட இருக்குறத எல்லாருக்கும் தெரிவிக்க இன்னைக்கு சாயங்காலம் ஒரு பிரஸ் மீட் நடத்த பிளான் பண்ணி இருக்கேன் ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லனும்னு நெனச்சேன். அது மட்டும் இல்ல அம்மாவும், அப்பாவும் கூட உன்ன சந்திக்க வர சொல்ல சொன்னாங்க “ என்று ஆர்யன் சொன்னதும் நரேன் அவர்களை பார்த்து புன்னகைத்தான்.
“மாயா எப்படி இருக்கா ?” என்று தேவிகா மெதுவாகக் கேட்க, “அவ இப்போ நல்லா இருக்கா, ஆக்ஸிடென்ட் ஆனதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா குணமாகுறா” என்றான் நரேன்.
ஆர்யன் அவனை நுட்பமாக ஒரு பார்வை பார்த்து, மேலும் விவரங்களுக்குள் செல்ல வேண்டாம் என்று சமிக்ஞை செய்தான். அதை புரிந்து கொண்ட நரேன், “சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்” என்று கூறினான்.
“வெரி குட், நாம எல்லாரும் சேர்ந்து கல்யாணத்த நடத்துவோம். நீ தனியா இல்ல. இது நம்ம குடும்பத்துல நடக்க போற கல்யாணம் “ என்று விஷ்ணு உற்சாகமாக கூறினார்.
ஆர்யன் மீது தன் தந்தையின் அணுகுமுறையையும், பதிலுக்கு ஆர்யனின் பெற்றோர் அன்பை மட்டுமே காட்டுவதையும் பார்த்து நரேனுக்குள் குற்ற உணர்ச்சி பொங்கியது. அவனது கவலையான முகத்தை பார்த்த தேவிகா, ” டேய், வருத்தப்படாத. இந்த சோகமா இருக்குறது எல்லாம் உனக்கு செட் ஆகல, நீ எப்பவும் போல இரு. அப்புறம் நான் சீக்கிரம் வந்து மாயாவ பார்க்குறேன் “ என்று கூறினார்.
“சரி ஆன்டி “ என்று நரேன் மெல்லிய குரலில் பதில் சொல்லி புன்னனைத்தான். .
அனைவருடனும் சிறிது நேரம் இருந்துவிட்டு நரேன் சென்ற சிறிது நேரத்தில், சஞ்சு ஆர்யனை மீண்டும் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“ஆர்யன், நீ ஏன் மாயாவ பத்தி அம்மா, அப்பா கிட்ட சொல்லாம மறைச்சுட்ட ? “ என்று சஞ்சு ஆர்வத்துடன் கேட்டாள்.
“மாயாவால நமக்கு நடந்த கஷ்டம், அதனால நாம அனுபவிச்ச வலி எல்லாமே நம்மளோட போகட்டும். அப்பாவும், அம்மாவும் ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க, இப்போ அவங்க வாழ்க்கையில ஒரு சின்ன கஷ்டம், சோகம் எதுவும் இருக்க கூடாதுனு நான் நினைக்குறேன். அவங்க மனசு வருத்தப்படுறத நான் விரும்பல.அது மட்டும் இல்ல அவங்க நாம எல்லாரும் ஒரு குடும்பமா இருந்து மாயா கல்யாணத்த நடத்த விரும்புறாங்க. நமக்கு நடந்த கசப்பான விஷயங்களால அத கெடுக்க வேண்டாம். நானும் கூட நரேனுக்காக கல்யாணத்துல கலந்துக்கணும்னு ஆசைப்படறேன் “ என்று ஆர்யன் அமைதியாக பதிலளித்தான்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்ட சஞ்சு புன்னகையோடு அவனை பார்த்து, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ஆர்யன் ? என்று கண்களில் காதல் நிரம்ப சொன்னவள், “நீ என்ன ஒவ்வொரு நாளும் இன்னும் அதிகமா உன்ன லவ் பண்ண வைக்குற. உன்ன நெனச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்.” என்று கூறினாள்.
“ஓ, அப்படியா!” என்று ஆர்யன் சிரித்து, “அப்போ எனக்கு ஏதாவது ஸ்பெஷலா கொடு” என்று கேட்டு, அவன் அவளை அணைத்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டான்.
” ஸ்பெஷல் தானே ? நான் உனக்காக ஒரு நல்ல நியூஸ் வெச்சுருக்கேன் “ என்று சொன்னாள்.
“என்ன நியூஸ் ?” என்று ஆர்யன் லேசாக அவள் கன்னத்தை முத்தமிட்டான்.
“பவி எனக்கு போன் பண்ணா. அவ மாயாவ சந்திச்சிட்டு வந்துருக்கா “ என்று சஞ்சு சொல்ல, “ சரி இப்போ அதுக்க என்ன ? “ என்று ஆர்யன் ஆர்வம் இல்லாமல் கேட்டான்.
” நரேன் அண்ணாவும், பவியும் எங்க, எப்படி சந்திச்சாங்கனு மாயா கேட்டு இருக்கா ” என்று சஞ்சு விளையாட்டுத்தனமாக சொன்னதும், ஆர்யன் அணைப்பிலிருந்து பின்வாங்கினான், அவன் முகபாவத்தில் ஒரு பதற்றத்தின் அறிகுறி தோன்றியது.
“மாயாவோட இன்னொரு அண்ணன் கிட்ட வேலை செய்றதாவும் அவர் மூலமா தான் நரேன் அண்ணாவ சந்திச்சதாவும் பவி சொல்லி இருக்கா “ என்று சஞ்சு சொல்ல, அதை கேட்ட ஆர்யன், “நரேனுக்கு இன்னொரு அண்ணனா? எனக்கு தெரியாம யார் அவன்?” என்று ஆர்யன் குழப்பத்துடன் கேட்டான்.
“ஹ்ம்ம்… ஆமா, மாயாவோட இன்னொரு அண்ணன் – மிஸ்டர் ஆர்யன் சைதன்யா” என்று சொல்லி சஞ்சு அவன் திகைத்த முகத்தைப் பார்த்து சிரித்தாள்.
ஆர்யன் சிரிப்பதற்கு பதிலாக, “அதுக்கு அவ என்ன பதில் சொன்னா?” என்று ஆவலுடன் கேட்டான்.
“அவ ஆர்யன் அண்ணனையும், அண்ணியையும் சீக்கிரம் சந்திக்க விரும்புறதா சொல்லி இருக்கா ” என்று புன்னகையுடன் பதிலளித்தாள் சஞ்சு.
சஞ்சு சொன்னதை கேட்டதும் உற்சாகத்தில் ஆர்யனின் முகம் மலர்ந்தது, அவளை இறுக்கமாக அணைத்து மகிழ்ச்சியுடன் முத்தமிட்டான்.
” கடவுளே ! உண்மையிலேயே, நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன், வா நாம இப்போ கொண்டாடுவோம்!” என்று சொல்லி ஆர்யன் அவளை தன் கைகளில் அள்ளி கட்டிலுக்கு தூக்கி சென்றான். இருவரும் படுக்கையில் படுத்ததும் சஞ்சு அவன் நெஞ்சில் கை வைத்து, ” ஹலோ, என்ன கொண்டாட்டத்த பத்தி பேசுறீங்க ? இப்ப அதெல்லாம் ஒன்னும் முடியாது ” என்று சிரித்தாள்.
“கவலைப்படாத, நான் உன்ன காயப்படுத்த மாட்டேன். கொஞ்ச நேரம்டி. ஒரு குட்டி ரொமான்ஸ் மட்டும் போதும், முழுசா ஒன்னும் பண்ண வேண்டாம். நான் பாவம் இல்லையா ? “ என்று ஆர்யன் கெஞ்சினான். பதிலுக்கு சஞ்சு சரி என்று சம்மதம் சொல்ல, அவன் அவர்களின் கை விரல்களை கோர்த்து அவள் உதட்டில் முத்தமிட்டான். சற்று இடைவெளி விட்டவன் இருவரும் அணிந்திருந்த சட்டைகளை கழட்டி எறிந்தான். அவளது தாடை, கழுத்து எலும்பு, மார்பு என முத்தங்களை பொழிந்தான். அவனது கைகள் அவளது மென்மைகளை மென்மையாக அழுத்தின. சிறிது நேரம் ரொமான்ஸ் செய்த பிறகு அவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“இதுக்கு மேல தொடர்ந்தா அப்புறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது, அதனால நாம இதோட நிறுத்துறது தான் நல்லது” என்று ஆர்யன் கிசுகிசுத்தான். உடனே சஞ்சு வெட்கத்துடன் சிரித்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“சிரிக்காதடி பொண்டாட்டி, நம்ம குழந்தை பிறந்த அப்புறம் மொத்தமா சேர்த்து வெச்சு வசூல் பண்ணிடுறேன். நீ படுக்கையை விட்டு எழுந்திருக்க கூட மாட்ட.” என்று சொல்லி ஆர்யன் கண்ணடித்தான். அதற்கு சஞ்சு அவனிடம், “ பாக்கலாம், பாக்கலாம். அப்போ நம்ம குழந்தைய பார்த்துக்கவே நேரம் இருக்காது “ என்று சொன்னாள்.
” அதெல்லாம் என் செல்லம், அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்காம இருப்பா ” என்று ஆர்யன் பெருமிதத்துடன் சொன்னான்.
“அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போ கொஞ்ச நேரம் தூங்குவோம். எனக்கு களைப்பா இருக்கு ” என்று சொல்லி சஞ்சு கண்களை மூடிக்கொண்டாள்.
ஆர்யன் அவள் நெற்றி மற்றும் உதட்டை முத்தமிட்டு, அவள் உறங்கும் வரை மென்மையாகத் தட்டிக் கொடுத்தான்.
ஆர்யன் மேன்ஷனில் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ரஞ்சித் ஏற்றிருந்தான். மாலைக்குள் எல்லா ஏற்படும் செய்தான். அன்று மாலை குடும்பத்தில் இருந்த அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து, காபி குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பிரதீப் தனது தந்தை சுரேந்தருடன் அங்கு வந்ததும் சஞ்சனா அவர்களை வியப்புடன் பார்த்தாள்.
” வாங்க மாமா, என்ன திடீர்னு வந்துருக்கீங்க ? “ என்று கனிவான புன்னகையுடன் கேட்டாள் சஞ்சு. அதற்கு பிரதீப், “ஆர்யன் தான் எங்கள வர சொன்னாரு சஞ்சு ” என்று அவளிடம் கூறினான்.
ஆர்யன் அவர்கள் இருவரையும் அன்புடன் வரவேற்றான். ஆர்யனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த வயதான தம்பதியினரை பிரதீப்பும் சுரேந்தரும் ஆவலுடன் பார்த்தனர், ஆனால் அவர்களை உடனடியாக அடையாளம் காணவில்லை.
” வாங்க சார், வா பிரதீப் “ என்று வரவேற்றவன், “ இவங்க என் அப்பா அம்மா” என்று அவர்களை அறிமுகம் செய்தான் ஆர்யன்.
” அவங்க ரெண்டு பேருக்கும் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுனு சொன்னீங்க ஆர்யன் “ என்று சுரேந்தர் கேட்க, ” நல்ல மனசு இருக்க யாரோ சிலர், அவங்கள காப்பாத்தி இருக்காங்க. அவங்க யார்னு அடையாளம் தெரிஞ்ச அப்புறம் எனக்கு போன் பண்ணாங்க.நான் போய் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்தேன். இப்போ உங்களுக்கு அறிமுகம் செய்ய தான் வர சொன்னேன் “ என்று அமைதியாக விளக்கம் சொன்ன ஆர்யன் தன் பெற்றோரை பார்த்து, “ அம்மா, அப்பா, இவர் சுரேந்தர் – சஞ்சுவோட தாய்மாமா அப்புறம் அவன் பிரதீப் அவரோட மகன். பிரதீப் தான் ஏஆர்சி காஸ்மெடிக்ஸ் கம்பெனியோட தலைமை நிர்வாக அதிகாரி. அவனுக்கு சொந்தமா தனியா பிசினஸ் இருக்கு “ என்று அறிமுகம் செய்தான்.
“ வாங்க சம்மந்தி, நல்லா இருக்கீங்களா ? “ என்று விஷ்ணு அவர்களை அன்புடன் வரவேற்றார்.
“நான் நல்லா இருக்கேன். உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் “ என்று சுரேந்தர் உண்மையாகவே பதிலளித்தார்.
” வணக்கம் சம்மந்தி, சஞ்சு மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க ஆர்யன் ரொம்ப கொடுத்து வெச்சுருக்கணும். அவ்ளோ நல்ல பொண்ணு ” என்று தேவிகா கூறினார். அதை கேட்ட சுரேந்தர், “ ஆர்யன் மட்டும் என்ன ? அவர மாதிரி ஒரு மாப்பிள்ள கிடைக்க நாங்க கொடுத்து வெச்சுருக்கணும் “ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
“ பிரதீப் உன்ன சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் பா “ என்று விஷ்ணு சொன்னதும், “ அங்கிள், ஆன்டி, உங்கள சந்திச்சதுல எனக்கும் சந்தோஷம் “ என்று பதில் சொன்னான்.
சுரேந்தர் ஒரு கணம் யோசித்துவிட்டு, ” நாங்க இங்க வந்தது நல்லதா போச்சு. பிரதீப்புக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்குறேன் “ என்று கூறினார். அதை கேட்ட உடனே, “ மாமா, சார் ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டாரு “ என்று சொல்லி சஞ்சனா சிரித்தாள்.
“ சொல்லிட்டான் சஞ்சு மா, அதனால தான் முதல்ல உங்க கிட்ட சொல்லிட்டு நிச்சயம் செய்யலாம்னு நினைக்குறேன் “ என்று சுரேந்தர் கூறினார். அதை கேட்ட ஆர்யன், “ஆனா சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாமே “ என்று யோசனை கூறினான்.
“இல்ல” என்று பிரதீப் மெல்ல இடைமறித்தான். ” சஞ்சுவுக்கு முதல்ல டெலிவரி ஆகட்டும். அப்போ தான் எல்லா சடங்கையும் சஞ்சு சந்தோஷமா கலந்துக்க முடியும். கீர்த்தியும், பவியும் கூட அப்போ தான் சந்தோஷப்படுவாங்க. எனக்கு அது தான் சரினு தோணுது “ என்று கூறினான்.
” ஹ்ம்ம் சரி, அப்போ நிச்சயதார்த்தம் செய்ய பிளான் பண்ணுங்க “ என்று சஞ்சு மகிழ்ச்சியோடு கூறினாள்.
” அப்படியே சஞ்சுவுக்கு வளைகாப்பு நடத்தவும் பிளான் பண்ணுவோம் ” என்று தேவிகா சொல்ல, ” அப்போ அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் பண்ணலாம், அதுக்கு அடுத்த வாரம் சஞ்சுவுக்கும் வளைகாப்பு நடத்தலாம் ” என்று சுரேந்தர் சொன்னார்.
” ரொம்ப நல்லது, அப்படியே பண்ணலாம் “ என்று விஷ்ணு சம்மதம் சொன்னார்.
ஆர்யன் தன் அம்மாவை பார்த்து, ” அம்மா, எங்க கல்யாணம் யாரும் இல்லாம ரொம்ப எளிமையா நடந்துச்சு. சஞ்சுவோட மாமா அப்புறம் ரஞ்சித் மட்டும் தான் இருந்தாங்க அதனால சஞ்சுவோட வளைகாப்பு ரொம்ப பிரம்மாண்டமா நடத்தனும்னு நான் விரும்புறேன் “ என்று கூறினான்.
“கவலைப்படாத ஒரு கல்யாணத்த விட பிரம்மாண்டமா நடத்தலாம் ” என்று விஷ்ணு உறுதியளித்தார்.
“இல்ல அதெல்லாம் வேணாம், எளிமையா செய்யலாம் “ என்று சஞ்சு சொன்னாள் ஆனால் ” இல்ல சஞ்சு, நான் சொன்னது தான் நடக்கும் “ என்று திட்டவட்டமாக ஆர்யன் கூறினான். சஞ்சு புன்னகையுடன் பெருமூச்சு விட்டு, “சரி, நான் மறுக்கல “ என்று சொன்னாள்.
அன்று மாலை, பிரதீப்பும் அவனது தந்தையும் சென்ற பிறகு, ஆர்யனும் அவனது பெற்றோரும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு தயாரானார்கள். மேன்ஷனின் பசுமையான தோட்டத்தில் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்யனும், ரஞ்சித்தும் பத்திரிகையாளர்களை வரவேற்க, அவனது பெற்றோர் அவன் அழைப்புக்காக காத்திருந்தனர்.
ஆர்யன் அனைவரையும் சந்திக்க சென்றதும், அனைத்து ஊடகவியலாளர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ரஞ்சித் கையில் மைக்கை எடுத்து அனைவரும் பார்த்து, ” இவ்ளோ குறைஞ்ச நேரத்துல தகவல் கிடைச்சு வந்ததுக்கு உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இது ஒரு சின்ன மீட்டிங் தான். இப்போ ஆர்யன் சார் உங்க கிட்ட பேசுவாரு “ என்று சொல்லி மைக்கை ஆர்யனிடம் கொடுத்தான்.
ஆர்யன் முன்னால் சென்று, “இங்க வந்துருக்க உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இன்னைக்கு ரொம்ப முக்கியமான ஒரு அறிவிப்ப சொல்ல போறேன், இத சொல்ல நான் சந்தோஷப்படுறேன். என் அப்பா, அம்மா ஒரு விபத்துல இறந்துட்டதா எல்லாருக்கும் தெரியும், நானும் அத நம்பினேன்… ஆனா அவங்க உயிரோட இருக்காங்கனு உங்க எல்லார்கிட்டயும் சந்தோஷமா சொல்ல விரும்புறேன் “ என்று புன்னகையோடு கூறினான்.
உடனே ஒரு நிருபர் எழுந்து நின்று, ” சார் ஆனா அவங்க ஆக்ஸிடென்ட் ஆனா இடத்துல ரெண்டு இறந்த உடல்கள் இருந்துச்சே, அவங்க ரெண்டு பேரும் உங்க அப்பா, அம்மா தான்னு சொல்லப்பட்டுச்சே “ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆர்யன் அவரை பார்த்து, ” அது சம்மந்தமா விசாரண நடத்த சொல்லி இருக்கேன். அது மட்டும் இல்ல அந்த விபத்துல இறந்தவங்க என் அப்பாவோட நண்பரும் அவரோட மனைவியும். ஏர்போர்ட் போகும் போது அவங்களும் போய் இருக்காங்க “ என்று பதில் அளித்தான்.
இன்னொரு நிருபர் சிநேகமாகச் சிரித்தார். ” சார், உங்களுக்காகவும், உங்க அப்பா அம்மாவுக்காகவும் நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுறோம். இப்போ நாங்க அவங்கள சந்திக்க முடியுமா ? “ என்று கேட்டார்.
“நிச்சயமா, அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வருவாங்க. என் அப்பா, தொழிலதிபர் விஷ்ணு சைதன்யாவும், என் அம்மா திருமதி தேவிகா சைதன்யாவும் உயிரோட இருக்காங்கனு எல்லாருக்கும் தெரியனும்னு நான் விரும்புறேன் “ என்று சொன்ன ஆர்யன் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த பாலாவை பார்த்து தன் பெற்றோரை அழைத்து வரும்படி சைகை செய்தான்.
பாலா மேன்ஷனுக்கு விரைந்து அவர்களை அழைத்து வந்தான். பெருந்தன்மையுடனும் பெருமையுடனும் அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கேமரா வெளிச்சம் தோட்டத்தை முழுவதுமாக ஒளிரச் செய்தன. நிருபர்கள் ஆவலுடன் முன்னோக்கி சாய்ந்தனர்.
” மிஸ்டர் விஷ்ணு, அந்த விபத்தில் இருந்து எப்படி தப்பிச்சீங்க ?” என்று ஒருவர் கேட்டார்.
திரு விஷ்ணு அவருக்கே உரிய கம்பீர தோற்றத்தில் அவர்கள் முன் நின்றார்.
” இன்னைக்கு இங்க வந்த உங்க எல்லாருக்கும் நன்றி “ என்று தொடங்கிய விஷ்ணுவின் குரலில் உறுதியும் கனிவும் இருந்தது. ” கடவுளுக்கு நிறைய நன்றி சொல்லணும், உலகத்துல இன்னும் நிறைய நல்ல மனசு இருக்க மனுஷங்க இருக்காங்க. ஆக்ஸிடென்ட் ஆனதும் யாரோ எங்கள காப்பாத்தினாங்க. நாங்க ரொம்ப வருஷமா நினைவுகள் இல்லாம இருந்தோம். நாங்க குணமடைஞ்சதும் நான் ஆர்யனுக்கு போன் பண்ணி பேசினேன். எங்க மகன் உடனே வந்து எங்கள கூட்டிட்டு வந்துட்டாரு. இந்த நேரத்துல அந்த அன்பான மனுஷங்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புறேன்.” என்று கூறினார்.
” சார், உங்கள காப்பாதத்தினவங்கள அறிமுகப்படுத்த முடியுமா?” என்று ஒரு நிருபர் கேட்டதும், ” அவங்க எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம எங்களுக்கு உதவி பண்ணி இருக்காங்க. அது மட்டும் இல்ல அவங்கள பத்தி வெளிய சொல்ல வேணாம்னு சொல்லி இருக்காங்க. அவங்க வேண்டுகோள நான் மதிக்குறேன் ” என்று விஷ்ணு மரியாதையுடன் கூறினார்.
மற்றொரு நிருபர், ” சார் அந்த விபத்து உங்க எதிரிகள் யாராவது திட்டமிட்டு பண்ணதா நினைக்குறீங்களா ?” என்று எச்சரிக்கையுடன் கேட்டார். அதற்கு விஷ்ணு உடனே மறுத்து தலை அசைத்தார், “இல்ல, அது ஒரு விபத்து தான். அதுக்கும், என் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று தெளிவுப்படுத்தினார்.
” சார், உங்க மகன் ஏற்கனவே உங்கள மாதிரி இண்டஸ்ட்ரியில ஆட்சி பண்றாரு. இப்போ நீங்க மறுபடியும் பிசினஸ் செய்ய போறீங்களா ? நீங்க திரும்பி வந்த செய்தி பரவினா நிறைய பேரு மன உளைச்சலுக்கு ஆளாவாங்க “ என்று ஒரு கேள்வி வந்ததும், “இல்ல மறுபடியும் பிசினஸ் பண்ற எண்ணம் எனக்கு இல்ல. நீங்க சொன்ன மாதிரி என் மகன் நல்லா பிசினஸ் செய்றாரு. இப்போ என் குடும்பத்தோட ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. “ என்று விஷ்ணு அமைதியாக சொன்னார்.
“சார் DC குழுமத்தோட சேர்மன் திரு சந்திரசேகர் சமீபத்துல ஒரு பயங்கர விபத்துல இறந்துட்டாரு, அவரோட மகளும் கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ஒரு பயங்கரமான விபத்துல சிக்கி ட்ரீட்மென்ட் நடக்குது. அவர் உங்க சிறந்த நண்பர். அவரோட மரணத்த எப்படி பார்க்குறீங்க ?” என்று இன்னும் ஒரு சோகமான கேள்வி தொடர்ந்தது.
விஷ்ணு சற்று இடைவெளி விட்டார், அவரது முகம் சோகமாக மாறியது. “ஆமா, அவர ரொம்ப மிஸ் பண்றேன். அவர் இறந்த அப்போ நானும் ஒரு மோசமான நிலமையில இருந்தேன். அவர் இல்லாதது எனக்கு பெரிய இழப்பு. ஆனா எனக்கு இன்னும் அவரோட மகனும், மகளும் இருக்காங்க. அவங்க இனிமே எனக்கு மகன், மகளா இருப்பாங்க. சந்திரா விட்டு போன வெற்றிடத்த நிரப்ப என் வாழ்நாள் முழுக்க நான் அவங்களுக்காக இருப்பேன். அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
“சார், நீங்க எல்லாரும் ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் சேர்ந்துட்டீங்க. அதனால ஒரு குடும்ப போட்டோ கிடைக்குமா ? “ என்று ஒரு இலகுவான வேண்டுகோள் வந்தது.
அதுவரை அமைதியாக இருந்த தேவிகா, “ ஆமா, நாங்க ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் ஒன்னு சேர்ந்துருக்கோம் ஆனா குடும்ப படம் இப்போ இல்ல. சீக்கிரம் எங்க குடும்பத்துல ஒரு பெரிய விழா நடக்க போகுது. அதுக்கு உங்க எல்லாரையும் கூப்பிடுறோம். அப்போ கண்டிப்பா நீங்க கேட்ட குடும்ப போட்டோ எடுக்கலாம் “ என்று சொல்லி புன்னகைத்தார்.
மற்றொரு நிருபர் உற்சாகமாக, ” அது என்ன சந்தோஷமான விசேஷம்னு இப்போ எங்ககிட்ட பகிர்ந்துக்க முடியுமா?” என்று கேட்டார்.
“ நிச்சயமா, எங்க குடும்பத்துல ரொம்ப சீக்கிரம் ஒரு புது உறுப்பினர எதிர்பார்க்குறோம். எங்க மகள் சஞ்சனா ஆர்யனோட வளைகாப்பு விழா தான் அந்த பெரிய விசேஷமான விழா. அதுக்கு உங்களுக்கு நிச்சயம் அழைப்பு வரும் “ என்று தேவிகா பெருமிதத்துடன் அறிவித்தார்
“வாழ்த்துக்கள் மிஸ்டர் ஆர்யன்” என்று நிருபர்கள் அனைவரும் அவனை வாழ்த்தினர்.
” உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி. இந்த மீட்டிங் இதோட முடியுது “ என்று சொல்லி ஆர்யன் சந்திப்பை முடித்துக் கொண்டான். அப்போது குறுக்கிட்ட நிருபர்கள், ” சார், மிஸ்டர் அண்ட் மிஸஸ் விஷ்ணுவோட போட்டோ எடுத்துக்குறோம் ப்ளீஸ் “ என்று கேட்டனர்.
சரி என்று ஆர்யன் புன்னகையுடன் சைகை செய்தபடி பின்னால் நகர்ந்தான்.
வயதான தம்பதியினர் கம்பீரமாக போஸ் கொடுத்த போது கேமராக்கள் முடிவில்லாமல் கிளிக் செய்தன. அவர்கள் திரும்பி வந்தது அடுத்த சில நாட்களுக்கு தலைப்புச் செய்திகளாக மாறியது. முன்னாள் தொழிலதிபர், வணிக உலகத்தில் அரக்கனாக இருந்த விஷ்ணுவின் வருகை தொழில்துறை சலசலத்தது. விஷ்ணு தான் இனி பிசினஸ் செய்ய போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தாலும், தற்போது வணிக உலகின் அரக்கனான ஆர்யன் சைதன்யாவின் பின்னால் அவர் இன்னும் மறைக்கப்பட்ட சக்தியாக இருக்கிறாரா? என்ற ஒரு அமைதியான பயம் தொழிலதிபர்களிடையே நீடித்தது.
*******************************
முன்னோட்டம்:
” ஒய் நீ கர்ப்பமா இல்லனா செம்ம மேட்டர் எதாச்சும் பரிசா தருவேன் ஆனா இப்போ உனக்கு என்ன வேணும்னு சொல்லு “
