Home Family60. என்ன நம்புறத விட உங்கள நம்புறேன்

60. என்ன நம்புறத விட உங்கள நம்புறேன்

by Siragugal Novels
17 views

வருண் வந்திருப்பான் என்று எதிர்பார்த்து கதவைத் திறந்த கேஷவ், வாசற்படியில் மைராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றான். ரோஷினியைப் பார்த்ததும் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்து அவன் ஆத்திரம் கொண்டான்.

“ மைரா “ என்று கேஷவ் சொன்னதும், “ கெட்சப், எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, எனக்கு ஜூஸ் கொடுங்க, அப்படியே ரோஷினிக்கும் ஏதாவது கொண்டு வாங்க “ என்றாள் சொல்லி மைரா கேஷவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். வருண் அவர்களை பின்தொடர்ந்தான். மைரா நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து ரோஷினி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

மைரா சோபாவில் அமர்ந்து தனக்கு முன்னால் சுவரில் மாட்டியிருந்த கேஷவின் புகைப்படத்தைப் பார்த்தாள். பின்னர் நின்று கொண்டிருந்த ரோஷினியின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள்.

“ ரோஷினி, நீ எங்க வீட்டுக்கு வர விரும்புறதா சொல்லி இருந்தா நானே உன்ன கூட்டிட்டு வந்துருப்பேன். நீ என்ன ரொம்ப தூரம் ஊற சுத்தி கூட்டிட்டு வந்த “ என்று மைரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேஷவ் ஒரு கிளாஸ் ஜூஸை மைராவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கிளாஸை டீப்பாயின் மீது வைத்தான். ரோஷினி இன்னும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்.

காலி டம்ளரை டீப்பாயின் மீது வைத்துவிட்டு அமைதியற்று நின்று எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்த வருணைப் பார்த்தாள் மைரா. நிலைமையை சமாளித்துக் கொண்டிருந்த மைராவுடன் சேர்ந்து கேஷவும் விளையாடினான், அவனது இதயமும், புத்தியும் ம் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தாலும் அவளுடன் புன்னகைத்தான்.

“ ரோஷினிக்கு பசி இல்லனு நினைக்கிறேன், அதனால நான் அவள வெளிய அனுபிட்டு வரேன் “ என்று சொல்லி மைரா ரோஷினியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவளது பிடியை இறுகப் பற்றிக் கொண்டு வெளியே சென்றாள். அவர்கள் வாயிலை அடைந்ததும், மைரா அவளை கொஞ்சம் பலமாக தள்ளினாள்.

“ எங்க வாழ்க்கையில நீ உன் கேவலமான விளையாட்டை விளையாட நெனச்சா நான் உன்ன கொன்னுடுவேன். எங்க வாழ்க்கையில என்ன நடந்தாலும் அது உனக்கு தேவையில்லாத விஷயம் அதனால வெளிய போடி சூனியக்காரி “ என்று அவளை விரட்டிவிட்டு மைரா கைகளை மார்போடு சேர்த்து வளைத்து புருவங்களை உயர்த்தி சிரித்தாள். ரோஷினியை ஒரு சவாலானா பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து ஓட, மைரா கண்களை மூடிக்கொண்டு பெருமூச்சு விட்டாள். ரோஷினி கிளம்பும் வழியைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றாள்.

கேஷவ் உள்ளங்கையால் முகத்தைத் தேய்த்துக் கொண்டான். வருண் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தான், ஆனால் கேஷவ் அதை மறுத்து தலையை அசைத்தான்.

“ இப்ப என்ன பண்ண போறீங்க ? “ என்று வருண் கேட்டதும், “ “ இன்னைக்கு சொன்னாலும், நாளைக்கு சொன்னாலும் அதுல எந்த மாற்றமும் இருக்க போறது இல்ல அதனால இன்னைக்கு என்னோட நேரம். வித்தியாசமா செய்ய நெனச்சேன் இருந்தாலும் பரவாயில்ல, அவள நான் பார்த்துக்குறேன் “ என்றான் கேஷவ்.

“ சரி நான் கிளம்பறேன். உங்க 20 வருஷ தவத்துக்கு வாழ்த்துக்கள்.” என்று வருண் சொன்னதும், கேஷவ் தலையை அசைக்க, வருண் வெளியே நின்று கொண்டிருந்த மைராவுக்கு புன்னகையுடன் பை சொல்லிவிட்டு கிளம்பினான்.

கேஷவ் மைராவை தேடி செல்ல எழுந்தான் ஆனால் அவள் அவனை நோக்கி வருவதை கண்டு நிம்மதி அடைந்தான். மைரா வெறுமனே அவனை மார்பில் தலை வைத்ததும் அவன் அவளை அணைத்துக் கொண்டான்.

“ அம்மு, உன்கிட்ட எல்லாத்தையும் சொல்ல நானே நாளைக்கு  .. உன்ன இங்க கூட்டிட்டு வர பிளான் பண்ணி இருந்தேன் ஆனா அவ நம்ம ரெண்டு பேரையும் வெச்சு விளையாடிட்டா “ என்று கேஷவ் சொல்ல, “ நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்குறேன், ஆனா அவ என் மனச குழப்புனதால இந்த கேட்கல, முன்னாடியே நான் இந்த கேள்விய உங்க கிட்ட கேட்டு இருக்கணும். என் கேள்விக்கு நீங்க பதில் சொல்லுவீங்களா கெட்சப்? “ என்று மைரா மிக மெல்லிய குரலில் கேட்டாள். 

“ நீ லட்சம் கேள்வி கேட்டா கூட பதில் சொல்ல தயாரா இருக்கேன் அம்மு. நானும் உன்கிட்ட நிறைய சொல்லணும். தயவு செஞ்சு ஒரு முறை நான் சொல்றத கேளு. நீ என்ன நம்புறியா அம்மு ?” என்று கேஷவ் கேட்டதும், “ நான் என்ன நம்புறத விட உங்கள நம்புறேன், இப்போ எனக்கு பதில் சொல்லுங்க, நீங்க உங்க வாழ்க்கையில யாரையாச்சும் லவ் பண்ணி இருக்கீங்களா ? “ என்று மைரா கேட்டாள்.

“ ஆமா அம்மு ஆனா நான் சொல்றத கேளு..” என்று கேஷவ் சொல்லும் போதே குறுக்கிட்ட மைரா, அவன் மார்பில் இருந்து தலையை உயர்த்தி அவன் உதடுகளின் மீது தன் உள்ளங்கையை வைத்து பேசவிடாமல் தடுத்தாள்.

“ நீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாம் கெட்சப். நீங்க ஒருத்தர லவ் பண்ணதுக்கு நான் கோபப்படவோ வருத்தப்படவோ இல்ல, ஆனா அத பத்தி நான் தெரிஞ்சிக்கணும்னு உங்களுக்கு தோணல அது தான் எனக்கு வேதனையா இருக்கு “ என்று மைரா கூறினாள்.

“ நீ நினைக்குற மாதிரி இல்ல அம்மு, உன்கிட்ட மறைக்கணும்னு எனக்கு எண்ணம் இல்ல, உண்மைய சொல்ல கொஞ்ச நாள் காத்திருந்தேன் அவ்ளோ தான். நான் நாளைக்கு எல்லாத்தையும் சொல்ல பிளான் பண்ணி இருந்தேன் ஆனா இப்போ எல்லாத்தையும் சொல்றேன், தயவு செஞ்சு நான் சொல்றத கேளு “ என்று கேஷவ் சொன்னான்.

“ இப்போ வேணாம் கெட்சப். ப்ளீஸ், எனக்கு கொஞ்சம் டைம் வேணும், ரொம்ப இல்ல ஒரு நாள் அவகாசம் கொடுங்க. என்ன நம்புங்க, நான் ஒருநாளும் என்னால உங்க மேல வருத்தமாவோ இல்ல உங்கள விட்டு விலகி இருக்க முடியாது. நான் ஒரு முக்கியமான விஷயத்த கையாளனும் அது முடிஞ்சதும் நாம சந்திப்போம். நீங்க சொல்ல நினைக்குற எல்லாத்தையும் நான் கேட்பேன்” என்று மைரா சொல்ல, “ தயவு செஞ்சு இப்படி செய்யாத மைரா. உன்ன விட்டு ஒரு நாள் பிரிஞ்சி இருந்தாலும் அது என்ன கொன்னுடும் “ என்று கேஷவ் கெஞ்சினான்.

மைரா அவன் முகத்தை இறுக்கி அணைத்து முத்தமிட ஆரம்பிக்க, கேஷவ் அவளை அருகில் இழுத்து அதே தீவிர முத்தத்தை கொடுத்தான். அவர்கள் முத்தத்தை உடைத்தபோது மைரா அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

“ உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல கேஷவ். நான் கேட்காமலேயே எனக்கு எல்லாம் கொடுத்து இருக்கீங்க ஆனா இப்போ நான் உங்ககிட்ட ஒன்னு கேட்குறேன். தயவுசெஞ்சு எனக்கு 48 மணி நேரம் கொடுங்க, இந்த நேரம் உங்க கிட்ட இருந்து தள்ளி போக நான் கேட்கல, உங்க கிட்ட  திரும்பி வர தான் கேட்குறேன் “ என்று அவனிடன் கேட்ட மைரா, “ இந்த நாள என் மனசுல இருந்து மறந்து அழிக்கனும், சந்தோஷமா வந்து உங்கள ப்ரொபோஸ் பண்ணனும். நீங்க என் காதல நிராகரிச்சு என் இதயம் உடைஞ்சு போனாலும் எனக்கு கவலையில்ல, ஆனா என் காதல நான் உங்ககிட்ட சொல்லுவேன். நீங்க என்ன போக சொல்லாத வர எனக்கு உங்கள விட்டு போற எண்ணம் இல்ல கேஷவ் “ என்று மனதில் நினைத்தாள்.

கேஷ்வ் அவர்களின் நெற்றியை ஒன்றாக இணைத்து, கண்களை மூடி, “ நீ இங்க இருந்து போனதும், கடந்து போற ஒவ்வொரு நொடியும் நாம ஓன்னா இருக்க முடிவு செஞ்சு, ஒன்னா வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு பரீட்சைனு ஞாபகம் இருக்கட்டும். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்தது, நடந்தது எல்லாமே உண்மை, ரொம்ப புனிதமானதுனு நீ நம்புவனு நான் நம்புறேன் “ என்று கேஷவ் கிசுகிசுத்தான்.

“ நான் உங்க கிட்ட கேட்ட நேரத்துக்கு முன்னாடியே உங்க கிட்ட ஓடி வந்தா உங்களுக்கும் ஆட்சேபன இருக்காதுனு நானும் நம்பறேன் “ என்று மைராவும் சொல்ல, கேஷவ் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். தன் மனதில் உள்ளதை அவளிடம் கொட்டி தீர்க்க வேண்டும் என்று எண்ணினான் ஆனால் எப்போதும் போல அவளது விருபத்தை தேர்ந்தெடுத்து, அவள் கேட்ட அவகாசத்தை அவளுக்குக் கொடுத்தான்.

“ நேரத்துக்கு சாப்பிட்டு நிம்மதியா தூங்குங்க. என் அழகான புருஷனோட கண்கள சுத்தி கருவளையம் இருக்குறத நான் பார்க்க விரும்பல “ என்று சொல்லி மைரா புன்னகைத்தாள்.

“ ஒரு நிமிஷமா இருந்தாலும் அவகிட்ட இருந்து விலகி இரு, இல்ல வசு அத்தை வீட்டுல இரு. எனக்காகவும் நான் நிம்மதியா இருக்கவும் தயவு செஞ்சு இத மட்டும் செய் “ என்று கேஷவ் கேட்டுகொள்ள, “ அவ விடிய காலையில கிளம்பிடுவா, அதனால நான் பாதுகாப்பா இருப்பேன், என்ன பத்தி கவலைப்பட வேண்டாம் “ என்று மைரா அவனுக்கு உறுதியளித்தாள்.

“ நான் என் மனசு மாறுறதுக்கு முன்னாடி கிளம்பனும் “ என்று மனதில் நினைத்தவள், அணைப்பிலிருந்து பின்வாங்கி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். கேஷவ் அவள் கண்களில் கண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தான், ஆனால் எதையும் காணாதபோது நிம்மதியடைந்தான். மைரா தன் முதுகு கதவைத் தொடும் வரை பின்னால் நடக்கத் தொடங்கினாள். மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்தபடி கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

கேஷ்வ் கேட்டருகே நின்று மைராவின் கார் அவன் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் அவன்  லிவிங் அறைக்கு திரும்பி தனது முஷ்டியை சுவரில் அடித்தான்.

“ நாயே, உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கும் என் மைராவுக்கும் இடையில உன் விளையாட்டை விளையாடி இருப்ப ? இன்னைக்கு பண்ண காரியத்துக்கு அப்புறம் நான் உன்ன சும்மா விட மாட்டேன். எங்க வாழ்க்கைய கெடுத்ததுக்கு இந்த நாள நெனச்சு நீ வருத்தப்படுவ “ என்று சூளுரைத்தவன், தனது மொபைலை எடுத்து எந்த விவாதமும் செய்யாமல் சென்ற வருணை அழைத்தான்.

“ என்ன ஆச்சு ? எந்த பிரச்சனையும் இல்லையே ? “ என்று வருண் பதற்றத்துடன் கேட்க, “ நான் நல்லா இல்ல வருண், ஆனா எல்லாத்தையும் சரிசெய்ய எனக்கு 2 நாள் இருக்கு. இப்போ சொல்லு, அவங்களோட மொபைல்ல இருந்து ஏதாவது கண்டுபிடிச்சியா ? “ என்று ஆத்திரம் கொண்டு கேஷவ் கேட்டான்.

“ அவகிட்ட ஒரு படம் இருந்துச்சு ஆனா அதோட ஒரு பகுதி மட்டும் தான் என்னால பார்க்க முடிஞ்சுது. நீங்க அனுமதி கொடுத்த முழு படத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். என்ன சொல்றீங்க?” என்று வருண் சொல்ல, அவன் வார்த்தைகளைக் கேட்டு கேஷவ் புன்னகைத்து சரி என்று கூறினான்.

“ நான் அனுமதி கொடுக்குறதுக்கு முன்னாடி அத பார்க்கலாமா ? “ என்று கேஷவ் கேட்க, “ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அதனால கண்டிப்பாக நீங்க பார்க்க கூடாது “ என்றான் வருண்.

“ சரி, நீ கேட்ட தகவல் உனக்கு அனுப்புறேன், நீ வேலைய முடிச்சதும் எனக்கு ரிப்போர்ட் பண்ணு “ என்று சொல்லி கேஷவ் அழைப்பை துண்டித்து சி.சி.டி.வி காட்சிகளைத் திறந்து ரோஷினி தனது வீட்டைப் பற்றி எவ்வாறு அறிந்தாள் என்பதை சரிபார்க்க ஆரம்பித்தான்.

வெறும் 30 நிமிடங்களில் புர்கா அணிந்த ஒரு பெண் காரில் கடப்பதையும், அதே பெண் தனது வீட்டைப் பார்ப்பதை ஆட்டோவில் கடப்பதையும் அவன் கண்டான். பின்னர் ஆட்டோ டிரைவர் ஒருவர் செக்யூரிட்டியிடம் பேசுவதை பார்த்தான்.

ஆட்டோ டிரைவர் பேசும் வீடியோவை கொண்டு செக்யூரிட்டியை அழைத்து அது குறித்து விசாரித்தான்.

“ சார், அவர் ஒரு பார்சலை டெலிவரி செய்ய யாரையோ தேடிட்டு இருந்தாரு. அது உங்களுக்காக வந்துருக்கானு சரிபார்க்க இந்த வீட்டோட உரிமையாளர் பெயர் கேட்டாரு “ என்று செக்யூரிட்டி சொல்ல, “ நீங்க உடனே என் பெயர சொல்லிட்டீங்க அப்படி தானே ? “ என்று கேஷவ் கேட்டான்.

“ சார், அவர் பெயர் மட்டும் தான் கேட்டாரு “ என்று செக்யூரிட்டி மீண்டும் சொல்ல, கேஷவ் பதில் ஏதும் சொல்லாமல் செக்யூரிட்டி ஏஜென்சியின் நம்பரை டயல் செய்து, செக்யூரிட்டியை மாற்றச் சொன்னான்.

“சார் என்ன மன்னிச்சிடுங்க “ என்று செக்யூரிட்டி கெஞ்சினார் அதற்கு கேஷவ் அவரை பார்த்து, “ உன்ன மாத்த சொல்லி உன்னோட  ஆபீஸுக்கு தகவல் கொடுத்துட்டேன். நீ என் முன்னாடி எவ்ளோ  நேரம் நிற்குறியோ அவ்ளோ சீக்கிரம் உன் வேலை உனக்கு இருக்காது. திரும்பி போய், நீ என் வீட்டுக்கு செக்யூரிட்டி வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி கையெழுத்து போட்ட அக்ரீமென்ட் மறுபடியும் படிச்சு பாரு. அதுல முதல் ரூல், என் சம்மந்தப்பட்ட எதுவா இருந்தாலும், என் பெயர் உட்பட எதையும் வெளிப்படுத்தக்கூடாது. இப்போ வெளிய போ “  என்று கத்தினான்.

செக்யூரிட்டி ஒன்றும் பேசாமல் தலை குனிந்து வெளியே சென்றார். கேஷவ் போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்து ஆட்டோ டிரைவரை எச்சரிக்க சொன்னான்.

வீட்டுக்கு சென்ற மைரா ஹாலில் அர்ச்சனா டிவி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

“ அச்சு மா, கெட்சப் ஆபீஸ்ல ஏதோ அவசர வேலைக்காக பெங்களூர் போய் இருக்காரு, நாளைக்கு இல்ல நாளை மறுநாள் திரும்பி வருவாரு. நான் நாள் முழுக்க வேலை செஞ்சு சோர்வா இருக்கேன் அதனால தூங்க போறேன், எனக்கு சாப்பாடு வேணாம் “ என்று மைரா சொன்னாள் ஆனால் அர்ச்சனா அவளை தடுத்து, “ இல்ல, ஒரு நிமிஷம் இரு, நான் உனக்கு தோசை கொண்டு வரேன்  அத சாப்பிட்டு முடிச்சிட்டு தூங்க போ “ என்று சொன்னார்.

மைரா அவரை மறுக்க முடியாமல் சோபாவில் சரிந்து ரோஷினியைத் தேடி சுற்றும் முற்றும் பார்த்தாள், ஆனால் அவள் சுற்றிலும் காணப்படவில்லை.

அர்ச்சனா ஒரு தட்டில் தோசையுடன் திரும்பி வந்ததும், மைரா ஒரே ஒரு தோசை மட்டுமே சாப்பிட்டாள்.

“ ரோஷினி எங்க ? “ என்று மைரா கேட்க, “ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி இன்னைக்கு நைட்டு அவ ஃப்ரெண்ட் வீட்டுல தங்கறதா சொன்னா “ என்றார் அர்ச்சனா. அதை கேட்டதும், “ ஆனா அவ காலையில கிளம்பனும் தானே ? “ என்று மைரா குழப்பத்தோடு கேட்டாள்.

“ ஆமா, ஆனா அவ ஆபீஸ்ல இருந்து ஏதோ விசாரணைக்கு கூப்பிட்டாங்களாம், விசாரணை முடியுற வரை சென்னையில தான் தங்கி இருக்கணும்னு எச்சரிக்க பண்ணி இருக்காங்களாம். அவ மேல எந்த தப்பும் இல்லனு தெரியுற வர அவ இங்க இருக்கனுமாம் இல்ல அரெஸ்ட் பண்ணுவாங்களாம் “ என்று அர்ச்சனா பதில் கூறினார்.

“ அப்போ அவ இங்க தான் தங்குவாளா ? “ என்று மைரா கேட்க, அர்ச்சனா ஆம் என்று தலையை அசைக்க, மைராவுக்கு எரிச்சலாக இருந்தது.

“ அவ போகலையா ? “ என்று அப்போது வாசலில் இருந்து க்ரிஷின் குரல் கேட்டது.

“ அந்த சூனியக்காரி எதையோ ப்ளான் பண்ணி வச்சிருக்கா. கடவுளே, நான் என் குடும்பத்துக்கு என்ன பண்ணி இருக்கேன். அவ போய்டுவானு நெனச்சேன். இதுல இருந்து நான் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன் “ என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவன் தன் அறைக்குச் சென்றான்.

 

************************************

முன்னோட்டம்:

“ இத நான் தாமதமா தான் உணர்ந்தேன். அவர் செலெக்ட் பண்ற பாட்டு எல்லாம் பெரும்பாலான நேரத்துல என் உணர்வுகளோட சரியா பொருந்தி இருக்குனு நீ கவனிச்சு இருக்கியா ? நேத்து நைட்டு அவர் பாட்டு வெளியிட்டு இருந்தாரு அதுவும் என் மனசுல நான் பாடிட்டு இருந்த அதே பாட்டு. என் உணர்வுகளோட ஒருத்தர் ஒத்திசைவா இருக்குறது எப்படி சாத்தியம்? “

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:53 am

[…] 60.என்ன நம்புறத விட உங்கள நம்புறேன் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!