Home Family39. ரொம்ப கேட்ட பையனா இருக்கீங்க

39. ரொம்ப கேட்ட பையனா இருக்கீங்க

by Siragugal Novels
19 views

அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண் விழித்த கேஷவ், மைரா அவன் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், அவளது உள்ளங்கை அவனது டி ஷர்ட்டை பிடித்து கொண்டிருப்பதையும் பார்த்து அவளை லேசாக அணைத்து அவள் நெத்தியில் முத்தமிட்டான்.

“ நீ கண் முழிக்குற வர இன்னைக்கு நான் வெயிட் பண்றேன். நாம எப்படி தூங்குரோம்னு பார்த்ததும் நீ எப்படி ரியாக்ட் பண்றனு நான் பார்க்க விரும்புரேம் “ என்று நினைத்த கேஷவ், பொறுமையாக காத்திருந்தான், திடீரென்று மைரா தன் காலை அவன் தொடைக்கு மேல் போட்டு அவன் அணைப்பில் மேலும் நெருங்கியதும் அவனது ஆசைக்கு எண்ணெய் ஊற்றியது போல இருந்தது.  உணர்சிகளின் தீவிரத்தில் சிக்கி தவித்த கேஷவ் அசௌகரியத்தில் மெல்ல முனகினான். அவனது நிலையை மறைப்பதற்காக தொடையில் தலையணையை வைத்து மனதை திசை திருப்ப முயன்றான்.

ஒரு மணி நேரம் கழித்து மைரா கண் விழித்ததும், கேஷவ் சட்டென  கண்களை மூடிக்கொண்டான். அவர்களின் நிலையைக் கண்டு வெட்கப்பட்ட மைரா தலையை நிமிர்த்தி கேஷவைப் பார்த்தாள். அவன் உறங்குவதைப் பார்த்ததும் அவன் முகத்தை ரசித்தவள், மறுக்க முடியாமல் அவன் புருவங்களில் விரலை வைத்து வருடினாள் பின்னர் மெல்ல அவன் மீசையை முறுக்கினாள்.

“ நீங்க என்ன, என்ன செய்றீங்க  கெட்சப் ? “ என்று மைரா மிக மெல்லிய குரலில் பேசினாள் அப்போது கண்கலை திறந்த கேஷவ், “ நீ எனக்கு என்ன செய்றியோ அதே தான் அம்மு “ என்று அவன் சொன்னதும், மைரா மூச்சிரைக்க அவனிடமிருந்து விலகிச் செல்ல முயன்றாள் ஆனால் கேஷவ் அவளை கவனமாக பிடித்து அவர்களின் கீழ் உடலுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்தான்.

“ நீங்க தூங்குகிட்டு இருந்தீங்கனு நெனச்சேன், இப்போ என்ன விடுங்க, நான் போறேன் “ என்று மைரா சொல்ல, “ நீ என்கிட்ட என்ன வேணும்னாலும் செய்யலாம் அம்மு, நான் தூங்குற வர வெயிட் பண்ண வேண்டியதில்ல. என் மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அம்மு. இப்போ நாம ரொமான்டிக் புருஷன் பொண்டாட்டியா வாழ ஆர்மபிக்காம இருக்கலாம் ஆனா நமக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா ஏற்படுற இந்த மாற்றம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. இப்போ என் பக்கம் திரும்பி பாரு, என் அம்முவோட அழகான முகத்த பார்க்க கடந்த ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் “ என்று கேஷவ் கூறியதும், மைரா அவன் பக்கம் திரும்ப, கேஷவ் அவள் நெற்றியை மெல்ல முத்தமிட்டு, “ குட மார்னிங் அம்மு “ என்று சொன்னான்.

“ கு மார்னிங் கெட்சப்.” என்று மைரா சொன்னதும், “ எனக்கு தினமும் காலையில இப்படி உன் முகத்த பார்த்து எழுந்திருக்கனும் “ என்றான் கேஷவ். மைரா அவன் வார்த்தைகளின் ஆழத்தை உணர்ந்து அவன் கன்னத்தை மெல்ல முத்தமிட்டாள். உடனே கேஷவ் சிரித்துக்கொண்டே பதிலுக்கு அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“ சரி முதல்ல நான் ரெடியாகுறேன் அதுவரைக்கும் நீ தூங்கு “ என்று அவன் சொன்னதும், மைரா சரி என்று சொல்ல கேஷவ் மறுபுறம் இறங்கி டி-ஷர்ட்டை கீழே இழுத்து விட்டு ஒரு டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். அவன் வெளியே வந்தபோது மைரா தூங்கிக் கொண்டிருந்தாள், அவளைத் தொந்தரவு செய்யாமல் அவன் தயாராகி, காலை உணவு சமைக்க சமையலறைக்கு சென்றான்.

க்ரிஷ் சமையலறைக்குள் நுழைந்து சமையலில் மும்முரமாக இருந்த கேஷவை அழைத்து, “ அண்ணா, உங்க கார் சாவி கொஞ்சம் கொடுங்க, நான் கொஞ்சம் வெளிய போகணும், ரெண்டு மதனி நேரத்துல வந்துடுவேன் “ என்று கேட்டான்.

“ ஒரு நிமிஷம் க்ரிஷ் “ என்று சொல்லி கேஷவ் உணவை ஹாட் பாக்ஸில் மாற்றிவிட்டு சாவியை எடுக்க அறைக்குள் சென்றான். அவன் கதவைத் திறந்ததும், மைரா உடலைச் சுற்றி ஒரு துண்டில் இருப்பதை கண்டு அவன் கண்கள் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அவனது திடீர் வருகையை  கண்டு அவளும் அதிர்ச்சியடைந்தாள். இருவருமே  எதிர்வினையாற்றுவதற்குள் அவர்கள் அறைக்கு அருகில் காலடி ஓசை கேட்டது.

க்ரிஷ் சாவியை வாங்க பின்தொடர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த கேஷவ், ஒரு நொடியில் மைராவை தன்னருகே இழுத்து அவளது உருவத்தை தனது பெரிய உருவத்தை கொண்டு  மறைத்தான். கேஷவின் முதுகைப் பார்த்த க்ரிஷ் அதிர்ச்சியடைந்தான், மைராவை அவன் பார்க்க முடியவில்லை என்றாலும், அவர்கள் நெருக்கமாக இருப்பதை அவன் அறிந்து உடனே மன்னிப்பு கேட்டு முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

கேஷவும், மைராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கேஷவ் அவளை விடுவித்து வேகமாக கதவை பூட்டிவிட்டு மீண்டும் அவளை தன்னிடம் இழுத்தான். அவளது கூந்தலில் இருந்து சொட்டிய நீரும், அவளது வெற்று சருமமும் அவனுக்குள் இருந்த ஒரு நெருப்பை பற்ற வைத்தன, ஆனால் அதை விட க்ருஷ் அவளை அந்த நிலையில் பார்த்திருக்க முடியும் என்ற எண்ணத்தில்  அவன் தாடைகளை இறுக்கினான்.

“ ரூம்ல டிரஸ் பண்ணும் போது ஏன் கதவை பூட்டிக்கல? “ என்று கேஷவ் கேட்டதும், “ நான்… நான்.. இல்ல.. நான் என் டிரஸ் எடுக்க மறந்துட்டேன், கதவு பூட்டாம இருந்துச்சுனு நான் கவனிக்கல, ஸாரி.. என்ன மன்னிச்சிடுங்க “ என்று மைரா திக்கி திணறினாள்.

“ நீ என் மனைவி அம்மு, உன்ன இப்படி யாரும் பார்க்க கூடாது, உன்ன இப்படி பார்க்கும் முதலும் கடைசி ஆளா நானா தான் இருப்பேன் “ என்று கேஷவ் உறுதியான குரலில் சொல்ல, மைரா சரி என்று தலையை அசைத்து, அவனது தீவிரமான மற்றும் கோபமான பார்வையை கண்டு விழுங்கினாள். மைரா அவன் பிடியில் இருந்து வெளியேற முயன்றாள், ஆனால் கேஷவ் அவளை அருகில் இழுத்தும், இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று ஒட்டி இருந்தன. இருவருக்கும் பேசும் சக்தி இழந்தது போல அவர்களின் வார்த்தைகைள் வெறும் கிசுகிசுப்பாக வெளிவந்தது.

“ கோபமா இருக்கீங்களா? ஸாரி, இனி எப்பவும் கவனமா இருப்பேன் “ என்று மைரா சொல்ல, “ உன் மேல எனக்கு எப்பவும் கோபம் வராது அம்மு. உன்ன இப்படியே நிரந்தரமா வெச்சுருக்கனும்னு நான் விரும்புறேன்.” என்று பதில் சொன்ன கேஷவ், அவளை இன்னும் நெருக்கமாக அனைத்து குனிந்ததும் அவள் தன் கண்களை தானாக மூடிக் கொண்டாள். அவள் கன்னங்களை முத்தமிட்டபடி  நெற்றியில் வழிந்த நீரை லாவினான். மைரா அவன் பெயரை முனகியபடி கால் விரல்களை மடக்க, அவளது உள்ளங்கை அவன் சட்டையை இறுக பிடித்தது. கேஷவ் அவளது பெருமூச்சு விட்ட மார்பை பார்த்தான், அவளது பிளவின் மேல் விழுந்த அவனது லேசான பார்வை அவனை தேவையில் உறும வைத்தது. அவனது விரல்கள் அவள் இடுப்பை அழுத்த, மைரா தன் ஹார்மோன்களில் ஒரு வேகத்தை உணர்ந்தாள், திணறும் குரலில் தரையில் கண்களை பதித்து, “ நான் … எனக்கு டிரஸ் .. நான் டிரஸ் பண்ணனும் கெட்சப். “ என்று திக்கியபடி சொன்னாள்.

“ வேணாம் “ என்று கேஷவ் சொல்ல, அவனது பதில் அவளை திகைக்க வைத்தது.

“ எனக்காக வெயிட் பண்ணு, நான் ஒரு நிமிஷத்துல திரும்பி வருவேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் ஒரு அடி பின்னால் நகர்ந்து சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு ஓடிச்சென்று அதை  க்ரிஷிடம் கொடுத்தான்.

“ ஸாரி அண்ணா, நான் 2 மணி நேரத்துல திரும்பி வருவேன் “ என்று க்ரிஷ் சொல்ல, “ நீ பொறுமையா வா, அப்புறம் ப்ரேக்பாஸ்ட் டேபிள் மேல இருக்கு, நீயே பரிமாறி சாப்பிடு “ என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் கேஷவ் அறைக்குத் திரும்பினான். அவன் கதவைத் திறந்து பார்த்தபோது மைரா கட்டிலுக்குப் பக்கத்தில் கால் விரல்களை மடக்கி, கீழ் உதட்டை கடித்தபடி நிற்பதைக் கண்டான். கதவைப் பூட்டிக் கொண்டவன், ஒரு நொடியில் அவள் முன் சென்று, “ மைரா “ என்று அழைத்தான்.

அவள் பெயரைக் கேட்டதும் மைரா முகம் சிவந்தாள், வெற்று மேல் மார்பில் வெட்கமின்றி சுற்றித் திரியும் அவனது கண்களைக் கண்டவள் தன் கூந்தலை முன்புறம் இழுக்க, கேஷவ் அவள் காதில் சாய்ந்து, “ உனக்குப் பின்னால் ஒரு கண்ணாடி இருக்கு “ என்று சொல்லி சிரித்தான்.

அவன் வார்த்தையை கேட்டதும் தன் முதுகு அவன் கண்களுக்கு விருந்தாக இருப்பதை மைரா உணர்ந்தாள். கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் உதட்டின் ஓரத்தில் முத்தமிட்டான்.

“ நீ இன்னும் சம்மதம் சொல்லல மைரா “ என்று கேஷவ் சொன்ன அடுத்த கணம், “ கேஷவ் “ என்று அவன் பெயரை சொல்லி சம்மதம் தெரிவித்தாள்.

கேஷவ் அவள் கைகளை தன் கழுத்தைச் சுற்றி வளைத்து, நெருக்கமாக சாய்ந்ததும் இருவரின் உதடுகளும் ஆவேசமாக முத்தமிட்டன. அவர்கள் முத்தத்தை உடைத்தபோது அவர்களின் தலைமுடி கலைந்து உதடுகள் வீங்கியிருந்தன.

“ நாம டூர் போக இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு, ஒவ்வொரு நாளும் ரொம்ப ஸ்பெஷலா, வேடிக்கையா இருக்க போகுது. இப்போ நாம அத டூர் சொல்லனுமா இல்ல ஹனிமூன் சொல்லனுமா ? “ என்று கேஷவ் கேட்க, வெட்கத்தில் நின்ற மைரா அவனிடம், “ எனக்குத் தெரியாது. நான் டிரஸ் பண்ணிக்கட்டுமா? அம்மா வர சொல்லி இருந்தாங்க, இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு “ என்று மெல்ல கிசிகிசுத்தாள்.

“ அது என்ன வேலைனு சொல்லு, நான் செய்றேன். நீ இப்படியே இரு என் முன்னாடி “ என்று கேஷவ் சொன்னதும், “ கொஞ்சம் வெட்கப்படுங்க கெட்சப். உங்களுக்கு ரொம்ப தைரியம் ஆயிடுச்சு, அதோட ரொம்ப கேட்ட பையனா இருக்கீங்க “ என்று சொன்னாள் மைரா.

“ நாம இப்ப தான் கிஸ் பண்ணவே ஆரம்பிச்சு இருக்கோம் அதுக்குள்ள நீ என்ன கேட்ட பையன் சொல்ற ? “ என்று கேட்டு குறும்புடன் கேஷவ் சிரித்தான். அவனது குறும்புச் சிரிப்பைக் கண்ட அவளுக்கும் தைரியம் வந்தது. மைரா அவனது சட்டையைப் பிடித்து அவனை அருகில் இழுத்து அவன் கன்னத்தைக் கடிக்கத் தொடங்கினாள்.

“ ஐயோ அம்மு, நீ இவ்ளோ ஆக்ரோஷமா இருப்பனு நான் நினைக்கவே இல்ல “ என்று கேஷவ் கிண்டல் செய்தான். மைரா அவன் நெஞ்சில் குத்தி அறையை விட்டு வெளியே தள்ள முயன்றாள். அவளது நெற்றியை தன் நெற்றியை கொண்டு முட்டிவிட்டு அவள் தயாராக அறையை விட்டு கேஷவ் வெளியேறினான். அறைக்கு வெளியே நின்று அவன் கன்னத்தைத் தொட்டுப் பார்த்து பைத்தியம் பிடித்தவன் போல் புன்னகைத்தான்.

“ நீ என்கூட சகஜமா இருக்குறது அப்புறம் நம்ம உறவுல இருக்க இந்த முன்னேற்றம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு, சந்தோஷமாவும் இருக்கு “ என்று நினைத்து புன்னகைத்தான்.

மைரா இந்த முறை கதவைப் பூட்டிவிட்டு நெஞ்சு படபடக்க கதவில் சாய்ந்தாள்.

“ அய்யோ ! ஒரு அரக்கன் மாதிரி அவ்ளோ ஆக்ரோஷமா கிஸ் பண்றாரு. ஒவ்வொரு முறையும் அவர் என்ன கிஸ் பண்ணும் போது முதல் முறை கிஸ் பண்ற மாதிரியே இருக்கு. மைரா, அவர் உனக்கு கெடச்சதுல நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவர் உன்ன கிஸ் பண்றதே உன் உடம்புல இருக்க அணுக்கள் எல்லாம் இப்படி ஆசையில எரியுதே அப்போ மத்த விஷயம் எல்லாம் பண்ணா என்னவாகும் ? “ என்று நினைத்தவள், மற்ற எண்ணங்களிலிருந்து விடுபட பெருமூச்சு விட்டுத் தலையை அசைத்தாள்.

அவசர அவசரமாக உடைகளை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தவள் கேஷவ் அழைப்பில் இருப்பதைப் பார்த்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே ஒரு கையை விரித்து தலையை ஆட்டி அணைத்துக் கொள்ள அவன் அழைத்ததும், வெட்கத்துடன் மைரா ஓடி சென்று அவன் அரவணைப்பில் தன்னை ஒளித்துக் கொண்டாள்.

கேஷவ் அழைப்பை துண்டித்து அவள் நெற்றியை முத்தமிட்டதும் இருவரும் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தனர்.

“ இன்னிக்கு உனக்கு என்ன வேலை இருக்கு? “ என்று கேஷவ் கேட்டதும், “ ரொம்ப நாளா இருக்க தேவையில்லாத பொருள் எல்லாத்தையும் அப்புறப்படுத்த அம்மா என்ன வர சொல்லி இருக்காங்க. அதுல நிறைய பொருள் நான் ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து இருக்கு அதனால அதெல்லாம் பார்க்க வேடிக்கையா இருக்கும்னு நைனாவ வர சொல்லி இருக்கேன் “ என்று மைரா பதில் சொன்னாள். 

“ அப்போ நல்லா என்ஜாய் பண்ணு. நான் ஒரு வேலையா போறேன், நான் திரும்பி வரவரைக்கும் அங்கேயே இரு. நீ இங்க தனியா இருக்க வேணாம். நான் வந்து கூட்டிட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் ஒரு வாடகை காரை முன்பதிவு செய்து தனது வேலைக்கு புறப்பட்டான்.

******************************************

முன்னோட்டம்:

“ நாளை மறுநாள் உங்க மாபிள்ளையோட பிறந்த நாள், அன்னைக்கு நீங்க அவர பிஸியா வெச்சுருக்கணும். 12 மணிக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தா போதும். நான் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்றேன் “

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 19, 2026 - 11:40 am

[…] 39.ரொம்ப கேட்ட பையனா இருக்கீஉன் கெட்சப… […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!