Home Family78. அவ ப்ளாக்மெயில் பண்ணத ஏன் சொல்லல ?

78. அவ ப்ளாக்மெயில் பண்ணத ஏன் சொல்லல ?

by Siragugal Novels
14 views

க்ரிஷ் மிகவும் பதட்டமடைந்து கேஷவ் அனுப்பிய முகவரியை அடைந்தான் ஆனால் செக்யூரிட்டி அவனை தடுத்து நிறுத்தினார்.  க்ரிஷ் தனது விவரங்களைக் கொடுத்ததும், செக்யூரிட்டி கேஷவிடம் அவன் வருகையை பற்றி தெரிவித்தார். கேஷவின் உத்தரவின் பேரில் செக்யூரிட்டி க்ரிஷையும், நைனாவையும் உள்ளே அனுமதித்தார்.

வருண் கதவைத் திறந்து அவர்களை ஆபீஸ் ரூமுக்கு அழைத்துச் சென்றான், அங்கே கேஷவ் பாக்கெட்டில் கைகளை வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தான். க்ரிஷை பார்த்ததும் கேஷவ் கோபம் கொண்டு வருணை பார்த்ததும் அவன் உடனே குறிப்பை புரிந்து கொண்டு அறையை விட்டு வெளியேறி கதவை தாழிட்டுக் கொண்டான்.

கேஷவ் க்ரிஷிடம் சென்று அவனை பலமாக அறைந்தான். க்ரிஷ் கீழே விழாமல் தடுக்க நைனா அவனை பிடித்துக் கொண்டாள்.

“ உங்களுக்கு பைத்தியமா? இப்ப எதுக்கு இவன அடிச்சீங்க? “ என்று நைனா கேட்க, “ உன்ன அப்புறம் கேள்வி கேட்குறேன், நான் அவன் கிட்ட பேசி முடிக்குற வர வெயிட் பண்ணு “ என்று அவளிடம் சொல்லிவிட்டு, கேஷவ் ஆள்காட்டி விரலை க்ரிஷை நோக்கி காட்டி சோபாவில் சென்று அமர சொன்னதும், அவன் கன்னத்தை பிடித்து கொண்டு அமர்ந்தான் க்ரிஷுக்கு எதிரே இருந்த டீப்பாயில் கேஷவ் உட்கார்ந்தான்.

“ அவ உன்ன மிரட்டி ப்ளாக்மெயில் பண்ணத ஏன் என்கிட்ட சொல்லல ? “ என்று கேஷவ் கேட்டதும், “ ப்ளாக்மெயிலா ? “ என்று க்ரிஷ் அதிர்ச்சியோடு கேட்டான்.

“ உன் வாழ்க்கையில ஏதாவது பிரச்சன இருக்கானு நான் உன்கிட்ட எத்தன முறை கேட்டேன் ? அதுவும் உன்கிட்ட அவ உன்ன ப்ளாக்மெயில்  செய்றாளானு குறிப்பா கேட்டேன். அப்போ நீ ஏன் அத பத்தி என்கிட்ட சொல்லாம மறைச்ச ? அந்த பிச்சைக்கார நாய் என் மைராவ இதுல சம்பந்தப்படுத்தியிருக்கா, மைராவுக்கு ஏதாவது கெட்டது நடந்தா என்ன செய்றது ? என் மனைவிக்கும் அவளோட  கண்ணியம், மரியாதைக்கும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை எப்படி என்கிட்ட சொல்லாம இருக்க முடிஞ்சுது ? “ என்று கேஷவ் கத்தினான்.

“ அது போலி.” என்று க்ரிஷ் மெல்லிய குரலில் சொன்னதை கேட்டு, “ அது போலினு எனக்குத் தெரியும் “ என்று கேஷவ் மீண்டும் கத்தினான்.

“ அவ அந்த வீடியோவ கசிய விடுவானு நான் பயந்தேன், அதனால  மைராவ காப்பாத்த அவ சொன்னத செஞ்சேன். மைராவையும் அவளோட உயிரையும் எப்படி காப்பாத்துறதுனு எனக்குத் தெரியல அதனால நான் வீட்ட விட்டு வெளிய போறது நல்லதுனு நெனச்சு மும்பைக்கு போறேன்னு எல்லார்கிட்டையும் சொன்னேன். ஆனா அப்போ கூட ரோஷினி வீட்ட விட்டு போக தயாரா இல்ல அதனால அடுத்த இருந்த ஒரே வழி மைராவும் நீங்களும் வீட்ட விட்டு வெளிய போறது ஆனா அது சாத்தியமில்ல. நான் பல வழிய  யோசிச்சேன், கடைசியா நான் கெட்டவனா மாறினா நீங்க மைரா கூட வீட்ட விட்டு போவீங்கன்னு முடிவு பண்ணேன் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு கேஷ்வ் பல்லைக் கடித்துக் கொண்டு அவன் காலரைப் பிடித்துக் கொண்டான்.

“ அப்போ அதுக்கு தான் என் மைராகிட்ட தப்பா நடந்துக்குற மாதிரி நடிச்சியா ? நீ பண்ண அந்த காரியம் அவள எவ்ளோ பாதிச்சுது தெரியுமா ? நீ என்கிட்ட வந்துருக்கனும், நான் அத கையாண்டிருப்பேன். இப்போலாம் படிப்பறிவு இல்லாதவங்க கூட உன்ன விட அறிவாளியா, புத்திசாலியா இருக்காங்க. இந்த மாதிரி பிளாக்மெயில் பண்ணா அத எப்படி கையாள்றதுனு அவங்களுக்குத் தெரியும். நான் வாழ்நாள் முழுக்க உனக்கு எல்லாத்துலையும் சப்போர்ட் பண்ணி இருக்கேன் ஆனா பதிலுக்கு நீ எனக்கு என்ன கொடுத்த ? “ என்று கேஷவ் விரக்தியோடு கேட்டான். 

“ உங்களையும், மைராவையும் அவ கிட்ட இருந்து காப்பாத்த  மட்டும் தான் அவன் விரும்பினான் “ என்று நைனா க்ரிஷுக்கு ஆதரவாக பேசினாள்.

“ நீ அவளோட ஃப்ரெண்ட், ப்ளாக்மெயில் பத்தி என்கிட்டயாவது சொல்லியிருக்கலாம். என் மைராவ பார்த்துக்க நான் எதையும் செய்வேன். அவ கொஞ்ச நேரத்துல இங்க வருவா, அவளுக்கு நீ பதில் சொல்லி ஆகணும். நான் சொல்றத கவனமா கேளுங்க, இந்த  மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவ பத்தி மைராவுக்குத் தெரியாது. அந்த வீடியோ பத்தி அவ கிட்ட எதுவும் சொல்லக் கூடாது இது நல்லா ஞாபகம் இருக்கட்டும். க்ரிஷும் அவளும் இருக்க வீடியோ பத்தி மட்டும் சொன்னா போதும் “ என்று எரிச்சலுடன் சொல்லி, கேஷவ் எழுந்து டீப்பாயை எட்டி உதைத்தான்.

சட்டைக் கைகளைச் சுருட்டிக் கொண்டு ஆபீஸ் அறையை விட்டு வெளியே சென்றான். க்ருஷும் நைனாவும் அவனைப் பின்தொடர்ந்து ஹாலுக்கு வந்த போது கேஷ்வ் மாடிப்படிகளில் ஏறுவதைப் பார்த்தார்கள்.

“ அவருக்கு எப்படி எல்லாம் தெரியும்? ரோஷினியோட லேப்டாப்ப எடுத்தது இவரா இருக்குமோ? “ என்று நைனா கேட்க, “ எனக்குத் தெரியல “ என்று க்ரிஷ்.

“ கவலைப்படாத, இன்னைக்கு எல்லாம் சரியாகிடும். உன்  முட்டாள்தனமான வேலையால அவங்க கோவப்படுவாங்க, அத தவிரா நம்ம பிரச்சின எல்லாம் இன்னைக்கு தீர்ந்துடும் “ என்று நைனா அவனுக்கு தைரியம் சொல்ல, “ அண்ணாவுக்கு அவ்ளோ சீக்கிரம் கோவம் வராது ஆனா கோவம் வந்தா அவ்ளோ சுலபமா சமாதானம் ஆக மாட்டாரு, அவர பார்க்க பயமா இருக்கு, அவர எதிர்கொள்ள முடியல “ என்றான் க்ரிஷ்.

“ அவர் உன் அண்ணன் க்ரிஷ், விசாரணை நடத்துற போலீஸ் அதிகாரி இல்ல, அதனால நிதானமா எல்லாத்தையும் அவர்கிட்ட பேசிடலாம் “ என்று நைனா மீண்டும் அவனை சமாதானம் செய்தாள்.

30 நிமிடங்கள் கழித்து கேஷவ் படிகளில் இறங்கி வருணுடன் உள்ளே நுழைந்த மைராவைப் பார்த்து புன்னகைத்தான்.

“ கெட்சப், என்ன இங்க கூட்டிட்டு வர வருணை ஏன் அனுப்புனீங்க ? நீங்க வீட்டுக்கு வருவீங்கன்னு நெனச்சேன் “ என்று சொன்ன மைரா, க்ருஷும் நைனாவும் ஹாலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே உறைந்து நின்றாள். கேஷவ் அவள் கையைப் பிடித்துக் கொள்ள, அவர்கள் க்ரிஷ் மற்றும் நைனாவுக்கு எதிரே அமர்ந்தனர்.

“ என்ன ஆச்சு ? “ என்று மைரா கேட்க, “ புதுமண தம்பதிகள் உனக்கு விளக்கமா சொல்லுவாங்க அம்மு “ என்று கேஷவ் சொன்னான்.

“ மைரா, நான் உனக்கு பண்ண எல்லாத்துக்கும் குறிப்பா அன்னைக்கு சாயங்காலம் நான் பண்ணதுக்கும் என்ன மன்னிச்சிடு. சத்தியமா அது என் நோக்கம் இல்ல. நானும், ரோஷினியும் ஒன்னா இருக்க வீடியோவ வெச்சு அவ என்ன பிளாக்மெயில் பண்ணிட்டு இருந்தா. உன்ன நம்ம வீட்ல இருந்தும், அண்ணனோட வாழ்க்கையில இருந்தும் தூக்கி எறிய அவ உனக்கு தெரியாம நிறைய வேலை செய்ய ஆரம்பிச்சா. உன்னையும், அண்ணனையும் காப்பாத்த எனக்கு இருந்த ஒரே வழி, நீங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டு போறது தான் அதனால தான் நான் அப்படி நடந்துகிட்டேன். அன்னைக்கு உண்மையெல்லாம் தெரிஞ்சு நீ ரொம்ப மனசு உடைஞ்சு வருத்தமா, பலவீனமா இருந்தனு எனக்கு தெரியும் அதனால நான் என்ன பண்ணாலும் அது என்ன கெட்டவனா காட்டும்னு தெரிஞ்சு அதுக்காக தான் அப்படி பண்ணேன். ஆனா மத்த நேரத்துல நான் உன்ன எப்படி கட்டிப்புடிக்க செய்வேனோ அதே மாதிரி அன்னைக்கும் பண்ணேன் ஆனா நீ இருந்த மனநிலையில அது வேற மாதிரி இருக்கும்னு எனக்கு தெரியும். சத்தியமா சொல்றேன், என் வாழ்நாள்ல உன்ன கெட்ட எண்ணத்துல நடத்த மாட்டேன் மைரா. அத விட நான் செத்துப் போவேன் “ என்று க்ரிஷ் உண்மையெல்லாம் சொல்லி உடைந்து போனான்.

“ நான் ஏன் உன்ன நம்பனும் ? அவ உன்ன பிளாக்மெயில் செய்றானு ஏன் எனக்கோ இல்ல கெட்சப்புக்கோ தெரியப்படுத்தல? “ என்று மைரா கேட்டதும், “ நான் பயந்தேன் மைரா, அந்த வீடியோ நம்ம குடும்பத்த மொத்தமா அழிச்சிடும்னு பயந்தேன். அவள என் வாழ்க்கையில இருந்து அனுப்ப நான் எல்லாத்தையும் பண்ணேன் “ என்று க்ரிஷ் வேதனையுடன் பதில் சொன்னான்.

“ அது யாரோட தப்பு ? “ என்று மைரா கேட்க, “ என் தப்பு மட்டும் தான். வெறும் ஈர்ப்ப காதல்னு நெனச்ச நான் ஒரு முட்டாள் ஆனா அவ செய்த எல்லாத்துலையும் தெளிவா இருந்தா. அவ என்ன ஒருநாளும் லவ் பண்ணதே இல்ல. நம்ம வீட்டுக்கு வர்றது மட்டும் தான் அவளோட பிளான். அவளோட திட்டத்துல என்ன ஒரு பகடைக்காயா பயன்படுத்திட்டா. நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனேயே அவளோட உண்மையான சுயரூபத்த காட்டத் தொடங்கினா. நான் அவள தடுக்கவும், அவள என் வாழ்க்கையில இருந்து அனுப்பவும் முயற்சி பண்ணேன் ஆனா அவ அந்த வீடியோவ காட்டி என்ன அவ வலையில சிக்க வெச்சுட்டா. நான் அவள கல்யாணம் பண்ண சம்மதிச்சேன், பணம் கொடுக்க தயாரா இருந்தேன் ஆனா அவ நாம நினைக்குற மாதிரி இல்ல. அவ ரொம்ப ஆபத்தானவ.

எல்லா வீடியோவையும் அழிக்க நைனா அவளோட மொபைல திருட எனக்கு உதவி பண்ணா ஆனா அதுல எதுவுமே இல்ல. அதுக்கு அப்புறம் அவளோட லேப்டாப் திருட தான் நாங்க பெங்களூர் போனோம் ஆனா எங்களால அத கண்டுபிடிக்க முடியல. அந்த லேப்டாப்ப கண்டுபுடிக்க இன்னைக்கு நாங்க அவளோட ப்ரெண்டஸ் எல்லாரையும் சந்திச்சோம் ஆனா அவங்க யார்கிட்டயும் அது இல்லனு தெரிஞ்சிகிட்டோம். வேற யாரோ அத திருடி இருக்காங்க “ என்று க்ரிஷ் நடந்த அனைத்தையும் சொல்லலி முடித்தான்.

“ வேற யாரோ திருடிட்டாங்கன்னு எப்படி உறுதியா சொல்ற ? “ என்று கேஷவ் கேட்க, “ ரோஷினியும் அவ friend கிட்ட பேசிட்டு இருந்தத நாங்க கேட்டோம், அவ இன்னும் பெங்களூர் போகல “ என்று க்ரிஷ் பதில் சொன்னதும், கேஷவ் வருணை அழைக்க, அவன் விருந்தினர் அறையை விட்டு வெளியே வந்தான். அப்போது கேஷவின் இண்டர்காம் ஒலிக்க, வருண் அதற்கு பதிலளித்தான்.

“ இன்ஸ்பெக்டர் ஆனந்த் வந்திருக்காரு “ என்று சொல்லி வருண் கதவைத் திறந்து இன்ஸ்பெக்டரை உள்ளே அனுமதித்தான்.

“ ஹலோ மிஸ்டர் ஆனந்த், இப்படி அவசரமா வர சொன்னதும் வந்ததுக்கு ரொம்ப நன்றி, ப்ளீஸ் உட்காருங்க “ என்று கேஷவ்  சொல்ல, “ உங்களையும் பார்த்ததுல சந்தோஷம் சார் “ என்றார் இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டரிடம் கேஷவ் சாதாரணமாக பேசுவதைக் கண்டு க்ருஷும் நைனாவும் அதிர்ச்சியடைந்தனர். கேஷவ் ஆனந்துக்கு அனைவரையும் அறிமுகப்படுத்தி, ரோஷினி செய்ததை விளக்கினான்.

“ இந்த கேஸ் தொடர்பா என் அசிஸ்டன்ட் வருண் இன்னும் நிறைய தகவல் சொல்லுவான் “ என்று சொல்லி கேஷவ் வருணை பார்த்தான்.

“ நான் அவளோட மொபைல் அப்புறம் லேப்டாப் ரெண்டையும் முழுசா ஹேக் பண்ணி இருக்கேன், அந்த வீடியோ தவிர அவளோட லேப்டாப்புல இன்னும் சில மெடிக்கல் ரிப்போர்ட் இருந்துச்சு. குறைஞ்சது மாசத்துக்கு ரெண்டு முறையாவது டாக்டர் விஸ்வநாத் கிட்ட பேசுறா அதனால நான் அவர சந்திச்சு காரணத்த தெரிஞ்சிகிட்டேன் ஆனா நீங்க எல்லாரும் நான் சொல்றதுக்கு பதில் டாக்டர் சொல்ல போறத கேட்குறது நல்லது அதனால நான் அவர இங்க கூட்டிட்டு வந்துருக்கேன் “ என்று சொல்லி வருண் விருந்தினர் அறையைத் திறந்து டாக்டரை அழைத்து அவருக்காக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான்.

“ ரோஷினிய உங்களுக்கு எப்படித் தெரியும், அவ ஏன் உங்க கிட்ட வந்தா ? “ என்று கேஷவ் டாக்டர் விஸ்வநாத்தை கேட்டான்.

“ நான் ஒரு மனநல டாக்டர், அவங்க என் நோயாளி. கடந்த ஒரு வருஷமா என்ன சந்திக்க வராங்க. அதுக்கு முன்னாடி பெங்களூர்ல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தாங்க “ என்று டாக்டர் சொன்னதும், “  அவளுக்கு என்ன பிரச்சன ? “ என்று இன்ஸ்பெக்டர் ஆனந்த் கேட்டார்.

“ நாசீசிஸ்டிக் ஆளுமைக் கோளாறு (Narcissistic personality disorder- NPD ) “ என்று டாக்டர் சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் கேஷவ் மைராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாதாரணமாக இருந்தான்.

“ மிஸ்டர் ஆனந்த் இத பத்தி நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்கனு நம்புறேன். இது மாதிரி கேஸ் நாம் நிறைய பார்த்து இருக்கோம். டாக்டர், ப்ளீஸ் இத பத்தி எல்லாருக்கும் விளக்கமா சொல்லுங்க “ என்று கேஷவ் டாக்டரிடம் கேட்டுக்கொண்டான்.

“ இது ஒரு மனநல சம்மந்தப்பட்டது. இந்த பாதிப்பு இருக்க ஒரு நபர், அவங்க தான் மத்தவங்கள விட சிறந்தவங்கன்னு நம்புறாங்க. NPD இருக்கவங்க அவங்களோட தேவைய மட்டும் தான் முக்கியம், அதுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கனும்னு உணர்வாங்க. இதுக்கு பல அறிகுறி இருக்கு. தான் மட்டும் தான் மத்தவங்கள விட ரொம்ப ஸ்பெஷல், தனக்கு நிறைய பவர் இருக்கு, ரொம்ப அழகானவங்க, எல்லாத்துலையும் ஜெயிக்கணும், தான் மட்டும் தான் ரொம்ப புத்திசாலி, அவங்க சாதனைகள மிகைப்படுத்தி பேசுறது,  மத்தவங்க கவனத்தையும் பாராட்டையும் அவங்களுக்கு கிடக்க நினைக்குறது, அவங்களுக்கு முன்னுரிமை கிடக்க நினைக்குறது, முக்கியமா மத்தவங்க அவங்கள பார்த்து பொறாமைபாடுறதா நம்புவாங்க “ என்று டாக்டர் நீண்ட விளக்கம் கொடுத்தார். 

“ எவ்ளோ வருஷமா அவளுக்கு இந்த பிரச்சனை இருக்கு ? “என்று மைரா அவரிடம் கேட்டாள்.

“ அவ ட்ரீட்மென்ட் எடுத்த பெங்களூர்ல இருக்க டாக்டர் கிட்ட நான் பேசினேன். அவர் சொன்னதுல இருந்து அவளுக்கு 12 வயசுல இருந்தே இந்த பிரச்சினை இருந்துருக்கு ஆனா கண்டுபிடிக்காம இருந்துருக்காங்க. அவ காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணு கிட்ட ஏதோ ஒரு போட்டியில தோற்று போய் இருக்கா. அதுக்கு அப்புறம் அவ விசித்திரமாக நடந்துகிட்டதால அவளோட அப்பா, அம்மா அவள டாக்டர் கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு போய் இருக்காங்க “ என்று வருண் சொன்னதை கேட்டு குறுக்கிட்ட கேஷவ், “ அவ அப்பா, அம்மாவுக்கு அவள பத்தி தெரியுமா ? “ என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.

“ ஆமா பாஸ், நம்ம ஆளுங்க லேப்டாப்ப தேட போனப்ப அவ ரூம்ல நிறைய மாத்திரை, மெடிக்கல் ரெக்கார்டுகளும் இருந்துச்சு. அவங்க எல்லா ஆதாரங்களையும் கொண்டு வந்துட்டாங்க “ என்று வருண் பதில் சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டதும், “ லேப்டாப் நீங்க திருட முயற்சி பண்ணீங்களா ? “ என்று நைனா அதிர்ச்சியோடு கேட்டாள்.

வருண் பதில் சொல்வதற்கு முன் குறுக்கிட்ட கேஷவ், “ அது எங்ககிட்ட தான் இருக்கு. உங்க கிட்ட இருக்க மொபைல்ல எந்த ஆதாரமும் இல்ல ஏன்னா வருண் எல்லாத்தையும் அழிச்சிட்டான் “ என்று சொன்னான்.

“ டாக்டர், இந்தப் பிரச்சினைக்கு என்ன காரணம்? “ என்று மைரா டாக்டரிடம் கேட்டாள். 

“ இது மரபணு மூலமாவோ இல்ல குழந்தை பருவத்துல ஏற்படுற  அனுபவங்கள் அப்புறம் உளவியல் காரணிகளா கூட இருக்கலாம் “ என்று டாக்டர் விஸ்வநாத் பதில் சொன்னார்.

“ நான் அத பத்தி கண்டுபுடிச்சேன், அவளோட பாட்டிக்கு ரோஷினி மாதிரி அறிகுறி இருந்துருக்கு. இந்த தகவல ரோஷினியோட அம்மா டாக்டர் கிட்ட சொல்லி இருக்காங்க “ என்று வருண் கூறினான்.

அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சியானார்கள்.

“ இப்ப என்ன கட்டத்துல இருக்கா ? “ என்று கேஷவ் டாக்டரிடம் கேட்டான்.

“ அவங்க இப்போ தனிப்பட்ட லாபத்துக்காக இல்ல சுயநல நலன்களுக்காகவோ மத்தவங்கள மோசமா பயனப்படுத்துற  கட்டத்துல இருக்காங்க ஆனா ஆண்களும் பெண்களும் இத செய்ற விதம் வேற மாதிரி இருக்கும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, NPD இருக்க பெண்கள் பெரும்பாலும் மத்தவங்க மனச கலைச்சு, எமோஷனல் விளையாட்டு மூலமா அவங்க தேவைகள பூர்த்தி செய்வாங்க. அதே நேரத்துல ஆண்கள் அவங்க சக்தி, மிரட்டல் இல்ல உடல் ஆக்கிரமிப்ப பயன்படுத்துறாங்க. ரோஷினி இப்போ கொஞ்சம் மாசமா ட்ரீட்மென்ட் எடுக்காம இருக்காங்க அதனால அவங்க மனசுல குறிவெச்சுருக்க நபருக்கு எதிரா அவங்க  ஆக்ரோஷமா மாற வாய்ப்புகள் ரொம்ப அதிகம் “ என்று டாக்டர் விளக்கம் சொன்னார்.

ஆனால் அவர் சொன்னதை கேட்டதும் மைரா கேஷவின் கையை இறுகப் பற்றிக் கொள்ள, அவன் அவளது உள்ளங்கைகளை அழுத்தி அவளுக்கு ஆறுதல் கூறினான்.

“ ரொம்ப நன்றி டாக்டர். நீங்க இங்க வந்து இவ்ளோ விவரங்கள சொன்னதுக்கு ரொம்ப நன்றி. இப்போ நாம பேசுனது வெளிய யாருக்கும் தெரிய வேணாம். உங்க உதவி தேவைப்பட்டா நான் உங்கள கூப்பிடுறேன் “ என்று கேஷவ் அவரிடம் சொன்னான்.

“ கண்டிப்பா சார். நான் இப்ப கிளம்புறேன் “ என்று டாக்டர் சொன்னதும், வருண் டாக்டரை வெளியே அழைத்து சென்றான். கேஷவ் உடனே மைராவுக்கு தண்ணீர் கொடுத்தான்.

**************************************

முன்னோட்டம்:

“ அண்ணா இன்ஸ்பெக்டர் ஏன் உங்கள சார்னு கூப்பிடுறாரு, நீங்க எப்படி போலீஸ் ஆபீசருக்கு ஆர்டர் கொடுக்க முடியும்? லேப்டாப் எப்படி உங்களுக்கு கிடைச்சது ? வருண் உங்கள ஏன் பாஸ் சொல்லி கூப்பிடுறாரு ?

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:54 am

[…] 78. அவ ப்ளாக்மெயில் பண்ணத ஏன் சொல்லல ? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!