மதன், அர்ச்சனா மற்றும் நைனாவின் பெற்றோர் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் நின்று விருந்தினரை வரவேற்றனர். க்ரிஷ் ஒரு அறையில் தயாராகிக் கொண்டிருந்தான், மைரா, ரோஷினி ஒரு அறையில் ஸ்டைலிஸ்ட் உதவியுடன் தயாராகிக் கொண்டிருந்தனர், வசுந்த்ரா அவர்களுக்கு அவ்வப்போது தண்ணீரும் ஜூஸும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ராஜனும், கேஷவும் மற்ற வேலைகளைக் கவனித்து, விருந்தினருக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படுவதை உறுதி செய்தனர். ராஜன் கேஷவை ரெடி ஆக சொன்னதும் அவன் தன் அறைக்கு சென்றான். கண்ணாடி முன் நின்று தலைமுடியை சரி செய்து கோட் சூட் அணிந்து தயாரானான்.
“ என் ஆச பொண்டாட்டிய பார்த்து மூணு மணி நேரம் ஆச்சு. அவ மட்டும் ரூம்ல தனியா இருந்தா நான் நேரா ரூம் உள்ள போய் இருப்பேன் “ என்று புலம்பியவன் அவளுக்கு ஒரு செய்தியை அனுப்பினான் ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கேஷவ் தயாராகி அறையை விட்டு வெளியே சென்று தயாராக இருந்த க்ரிஷை பார்த்தான்.
“ நான் எப்படி இருக்கேன் அண்ணா ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ நீ மேடைக்கு போய் உன் மனைவிய சந்திக்குற வர வெயிட் பண்ணு. இந்த கேள்விய அவ கிட்ட கேளு. இப்போ டைம் ஆயிடுச்சு, அவங்க ரெடியா இருக்காங்களா தெரியல, நான் போய் பார்க்குறேன் “ என்று சொல்லி, வசுந்த்ராவை அழைத்து நைனாவும் மைராவும் தயாராக இருப்பதை அறிந்து கொண்டான்.
கேஷவும், க்ரிஷும் பெண்களின் அறையை அடைந்து கதவை தட்டினார்கள். வசுந்த்ரா கதவை அகலமாகத் திறக்க, இளஞ்சிவப்பு நிற அழகான பட்டுப் புடவை அணிந்திருந்த நைனாவைப் பார்த்து க்ரிஷ் புன்னகைத்தான். அவள் கனமான மற்றும் பொருத்தமான நகைகளையும் அணிந்திருந்தாள், அவளுடைய தலைமுடி கொண்டையாக அலங்கரிக்கப்பட்டு மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
“ நீ அழகா இருக்க நைனா “ என்று க்ரிஷ் சொன்னதும், “ நான் எப்படி இருக்கேன்னு சொல்லி நீ என்ன பாராட்ட மாட்டனு நெனச்சேன் “ என்றாள் நைனா.
“ ஏன் பண்ண மாட்டேன்? இப்போ கிளம்பலாமா? “ என்று கேட்டு அவன் தன் உள்ளங்கையை நீட்ட, நைனா அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வெளியேறினார்கள்.
மைராவுக்காக காத்திருந்த கேஷவ், அவள் நீல நிற பட்டு லெஹங்கா மற்றும் பீச் துப்பட்டா அணிந்திருப்பதைக் கண்டு உறைந்து போனான். அவளுடைய தலைமுடி ஒரு பிரஞ்சு பாணியில் ஒரு மலர் ப்ரூச்சுடன் பின்னப்பட்டிருந்தது, மேலும் அவள் தனது உடைக்கு பொருத்தமான நெக்லஸ் அணிந்திருந்தாள். அவளும் நைனாவின் பின்னால் நடந்தால் ஆனால் நின்று கேஷவிடம் சென்று புன்னகையுடன் அவன் டையை சரி செய்தாள்.
“ நான் எப்படி இருக்கேன் மிஸ்டர் ஹஸ்பண்ட் ? “ என்று மைரா மெல்லிய குரலில் கேட்டதும், கேஷவ் பார்வையை அவளது தலையில் இருந்து ஆராய்ந்து அவளது மையிட்ட விழிகளையும், பின்னர் அவள் உதடுகளையும் பார்த்தான். அவனது பார்வை அவளது மார்பகங்களிலும் பின்னர் அவளது வெற்று இடுப்பிலும் சிறிது அதிக நேரம் நிலைத்து நின்ற போது மைரா அவளது பாவாடையை இறுகப்பற்றினாள், அவளது நெஞ்சு விம்மியது.
“ நீ செம்ம அழகா இருக்க அம்மு. நீ எப்படி இருக்கனு நாம கொஞ்ச தனிமையில பேசுவோம். நீ என்கூட வந்தா என்னால உன்ன இன்னும் அழகா மாத்த முடியும் “ என்று கேஷவ் அவள் காதில் கிசுகிசுக்க, “ நீங்க தனியா இருந்து யோசிச்சு அப்புறம் எனக்கு சொல்லுங்க ? இப்போ நான் நைனா கூட மேடையில் இருக்கனும் அதனால பார்த்து இருங்க கெட்சப் “ என்று சொல்லிவிட்டு அவள் அவன் கன்னத்தை தட்டி விட்டு தன் இடுப்பை லேசாக அசைத்தபடி நடந்து செல்ல, அவள் இடுப்பில் இருந்த சிறிய மடிப்பை பார்த்து கேஷவ் முனகினாள்.
“ நான் உன்ன தனியா கூட்டிட்டு வரவரைக்கும் வெயிட் பண்ணுடி என் அழகு பொண்டாட்டி “ என்று மனதில் நினைத்துக் கொண்டு கேஷவ் ஹாலுக்குத் திரும்பிய போது, மேடையில் க்ரிஷும் நைனாவும் மாலைகளைப் பரிமாறிக் கொள்வதையும், மைரா நைனாவுக்குப் பக்கத்தில் நிற்பதையும் கண்டான்.
முதல் வரிசையில் ராஜனுக்கு அருகே அமர்ந்து இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர், ஆனால் அவன் கண்கள் முழுவதும் தன் மனைவியின் அசைவுகளைக் கவனித்துக் கொண்டிருந்தன.
அவள் முகத்தில் இருந்த கூந்தலை சரி செய்வதைப் பார்த்தவன், உடனடியாக அவளுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். மைரா செய்தியைத் திறந்து அதைப் படித்து புன்னகைக்க, அவர்கள் செய்திகளைப் பரிமாறத் தொடங்கினர்.
கேஷவ்: உன் பக்கத்துல நின்னு என் மனைவியை தொந்தரவு பண்ற அந்த அழகான தலைமுடிய சரி பண்ணட்டுமா
மைரா: முடியை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுவீங்களா ?
கேசவ்: என் கை உன் இடுப்ப சுத்தி வளைச்சு, என் விரல்கள் உன் மடிப்புல கொஞ்சம் தாளம் போடலாம்
மைரா: அழுக்கு மனுஷா
கேஷவ்: அழுக்கு மனுஷனா ? ஆனா நான் சொன்னது உன் இடுப்புல இருக்க மடிப்ப மட்டும் தான். நீ என்ன நெனச்சுகிட்ட ? நீ வெட்கப்படுறத நான் பார்க்குறேன் அம்மு.
மைரா: ப்ளீஸ், என் கன்னம் ரெண்டும் ரொம்ப வலிக்குது.
மைரா அவனுக்கு மெசேஜ் செய்வதை நிறுத்திவிட்டு, புன்னகையை முஷ்டியில் மறைத்துக் கொண்டிருந்த கேஷவை முறைத்தாள். ராஜனிடம் சொல்லிவிட்டு இரவு உணவு ஏற்பாடுகளை பார்க்க சென்றவன், ரோஷினியின் பெற்றோர் தன்னை நோக்கி நடந்து வருவதை பார்த்தான். அவர்களைத் தன்னைப் பின்தொடர்ந்து ஒரு அறைக்குச் செல்லுமாறு சைகை செய்துவிட்டு, அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் கதவைச் சாத்திக்கொண்டான்.
“ கேஷவ், ரோஷினி எங்கனு எங்களுக்கு சொல்லு. நான் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க ஏற்பாடு செய்றேன், அவ உங்க வாழ்க்கையில தலையிடாம பார்த்துக்குறேன் “ என்று ரோஷினியின் அப்பா சொன்னார்.
“ அவளுக்கு இருந்த பிரச்சினைய பத்தி உங்ககிட்ட சொல்லாம இருந்ததுக்கு எங்கள மன்னிச்சிடு. தயவு செஞ்சு எங்களுக்கு ஒரு முறை உதவி செய் “ என்று ரோஷினியின் அம்மாவும் கெஞ்சினார்.
“ நான் ஏற்கனவே உதவி பண்ணிட்டேன். உங்க பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் நடக்குது. அவ முழுசா குணமாகிட்டதா டாக்டர் எனக்கு ரிப்போர்ட் கொடுக்குற வர நீங்க அவள சந்திக்க முடியாது “ என்று கேஷவ் சொல்ல, “ அவ குணமடைஞ்சதும் விடுதல செய்வியா ? “ என்று உடனே ரோஷினியின் அப்பா கேட்டார்.
“ நான் இன்னும் அத பத்தி யோசிக்கல “ என்று கேஷவ் சொன்னதும் ரோஷினியின் அம்மா பொறுமை இழந்தார்.
“ எப்படி உன்னால இவ்ளோ கொடூரமா இருக்க முடியுது ? நாங்க உன் மாமா, அத்தை. இத மறந்துட்டியா ? “ என்று ரோஷினியின் அம்மா கத்தினார்.
“ நீங்க என்ன நினைக்குறீங்க ? நான் உண்மையிலேயே கொடூரமான ஆளா இருந்திருந்தா நீங்க இன்னைக்கு இந்த இடத்துல காலடி எடுத்து வெச்சுருக்க மாட்டீங்க. என் செல்வாக்கு வெச்சு உங்க பொண்ண நிரந்தரமா சிறையில அடைச்சுருப்பேன். என் குடும்பத்த சீரழிக்க அவளுக்கு உதவியா இருந்த உங்க ரெண்டு பேரு மேலையும் கேஸ் போட என்னால முடியும், ஆனா என் அம்மா, அப்பாவுக்காக நான் உங்கள சும்மா விடுறேன் அதனால நீங்க உங்க குரல உயர்த்தி பேசாதீங்க இல்லனா ரொம்ப வருத்தப்படுவீங்க அப்புறம் உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தத மறந்துட வேண்டியது தான் “ என்று கேஷவ் சொல்லி அவர்களை ஏளனமாய் பார்த்தான்.
“ மன்னிச்சிடு கேஷவ், நாங்க உன்ன கோவப்படுத்த அப்படி சொல்லல. ப்ளீஸ் கேஷவ், அவ எங்களுக்கு ஒரே பொண்ணு “ என்று ரோஷினியின் அப்பா சொல்ல, “ மைராவும் அவளோட அப்பா, அம்மாவுக்கு ஒரு பொண்ணு. யாரோ ஒருத்தன் கூட உங்க பொண்ணு இருக்க மாதிரி அருவருப்பான வீடியோ எல்லாரும் பார்க்குற மாதிரி வெளிவந்தா உங்களுக்கு எப்படி இருக்கும் ? “ என்று கேஷவ் பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.
“ அவளுக்கு இருக்க மனநில பிரச்சனையால தான் அவ அப்படி பண்ணா. நீ சட்டப்பூர்வமா இத கையாண்டு இருந்தா நாங்க கோர்ட்ல இந்த கேஸ் ஜெயிச்சு எங்க பொண்ண எங்க கூட கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்க ஏற்பாடு பண்ணி இருப்போம் “ என்று ரோஷினியின் அம்மா கத்தியதும், “ கொஞ்சம் அமைதியா இரு, அவன தூண்டாத “ என்று ரோஷினியின் அப்பா தன் மனைவியை அமைதிப்படுத்தினார்.
“ நான் ஏன் அமைதியா இருக்கனும் ? இவன் அவனோட அதிகாரத்த தனிப்பட்ட காரணத்துக்கு பயன்படுத்துறதா நாம இவன் மேல கேஸ் போடுவோம், எல்லா நியூஸ் சேனலுக்கும் போவோம். கோர்ட் மூலமா இவன் கூட சண்ட போடலாம் “ என்று ரோஷினியின் அம்மா பொறுமை இழந்து கத்தினார்.
அவர் சொன்னதை கேட்ட கேஷவ், “ ஓ வாவ், நீங்க என் மேல என்ன கேஸ் போட்டாலும் அத நான் பார்த்துக்குறேன். இப்போ வெளிய போங்க “ என்று சீறினான்.
“ கேஷவ், நாங்க ரோஷினிய பார்க்காததால இவ வருத்தப்படுறா. தயவு செஞ்சு எங்க கோரிக்கைய கொஞ்சம் பரிசீலிச்சு பாரு, எங்க பொண்ண சந்திக்க எங்களுக்கு உதவி செய் “ என்று கெஞ்சிவிட்டு ரோஷினியின் அப்பா தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.
கேஷ்வ் மூலையில் நின்று மேடையில் இருந்த ஜோடிகள் சோர்வாக இருப்பதைப் பார்த்தான் எனவே உடனே விருந்தினரை சிறிது நேரம் நிறுத்துமாறு பவுன்சர்களுக்கு அறிவித்து, க்ரிஷ் மற்றும் நைனாவுக்கு சிற்றுண்டி வழங்குமாறு கேட்டரரிடம் தெரிவித்தான்.
அதோடு கேஷவ் வசுந்த்ராவை மைராவின் இடத்தில் நிற்க சொல்லி மைராவை சிறிது நேரம் ஓய்வெடுக்க விடுவிக்க சொன்னான். முன் வரிசையில் ராஜனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்து ஜூஸை உறிஞ்சிக் கொண்டிருந்த மைராவின் கண்கள் கேஷவைத் தேடிக் கொண்டிருந்தன.
அவள் தன்னைத் தேடுவதைப் பார்த்து கேஷவ் சிரித்தான், உடனடியாக அவளுக்கு போன் செய்து அவள் அழைப்பை எடுப்பதைப் பார்த்தான்.
“ நீங்க எங்க இருக்கீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ ஒரு அவசரம் அம்மு அதனால யாருக்கும் தெரியாம ரூமுக்கு வா “ என்று கேஷவ் அவசரமாக பேசினான்.
“ என்ன ஆச்சு ? “ என்று மைரா கேட்டதும், “ ஒருத்தர் சாகுற நிலையில இருக்காங்க, அவங்கள காப்பாத்த எனக்கு உன் உதவி வேணும். உடனே நைனாவோட ரூமுக்கு பக்கத்துல இருக்க ரூமுக்கு வா, சீக்கிரம் “ என்று சொல்லி கேஷவ் அழைப்பை துண்டித்தான்.
மைரா அவள் குடித்துகொண்டிருந்த ஜூசை அப்பாவிடம் கொடுத்துவிட்டு அறைக்கு விரைந்தாள். கதவைத் திறந்தவள் தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, கேஷவ் அவளை தன் கைகளுக்கு நடுவே கதவில் வைத்துப் பூட்டினான்.
“ கெட்சப், நீங்க என்கிட்ட பொய் சொல்லி ப்ரான்க் பண்ணீங்களா ? “ என்று மைரா கேட்க, “ இல்ல அம்மு, நான் சீரியஸா தான் சொல்றேன். ஒருத்தர் சாகுற நிலமையில இருக்காங்க, காப்பாத்த உன் உதவி எனக்கு தேவ “ என்றான் கேஷவ்.
“ யார் சாகுற நிலமையில இருக்காங்க ? “ என்று மைரா கேட்டதும், “ கடந்த 6 மணி நேரமா பட்டினியா இருக்க என் உதடு இப்போ மரணத்தோட விளிம்புல இருக்கு, ப்ளீஸ் என் உதடுகள காப்பாத்து “ என்று சொன்ன கேஷவ், தன் கட்டை விரலால் அவள் உதடுகளை வருட, மைரா அவன் கையை பிடித்தாள்.
“ கடந்த 2 மணி நேரமா ஒரே இடத்துல நின்னு நான் களைச்சு போய் இப்போ தான் உட்கார முடிஞ்சுது ஆனா இங்க நீங்க என்கூட விளையாடுறதுல சந்தோஷப்படுறீங்க ? “ என்று மைரா சலிப்புடன் சொன்னதும், கேஷவ் அவளை தன் கைகளில் தூக்கி சென்று தன் மடியில் வைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான். அவள் தொடைகளை மெல்ல அழுத்தி, கசக்கி சிரித்தான்.
“ உன்ன கவனிச்சுக்க நான் இருக்கும் போது நீ ஏன் கவலைப்படுற ? இப்போ நீ என்ன கிஸ் பண்ண வசதியா இருக்கா ? “ என்று அவன் கேட்க, “ ரிசப்ஷனுக்கு வந்தவங்க இன்னும் அவ்ளோ பேரு இங்க தான் இருக்காங்க, என் லிப்ஸ்டிக் கலைஞ்சு போய் இருக்குறத யாரும் பார்க்குறத நான் விரும்பல “ என்று மைரா அவனுக்கு பதில் சொன்னாள்.
“ தகவல் ஒரு பொக்கிஷம், நீ கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக் பயன்படுத்துறதா சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கு அப்படியும் கவலையா இருந்தா, நான் உனக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக் வாங்கிட்டு வரேன், இப்போ எனக்கு முத்தம் கொடு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா புன்னகைத்தாள், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக குனிந்து தங்கள் உதடுகளை ஒன்றாக இணைத்தனர். அவனது உள்ளங்கை அவள் தொடையிலிருந்து இடுப்பு வரை நகர்ந்து வட்டங்களை வரைந்தது. ஒரு நிமிடம் கழித்து மைரா முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவன் உதடுகளின் மீது தன் உள்ளங்கையை வைத்தாள்.
“ நாம இங்கேயே ஒளிஞ்சிட்டு இருக்க முடியாது. யாராவது நம்ம ரெண்டு பேரையும் தேடி வர்றதுக்கு முன்னாடி நாம கிளம்பிவிடுவோம் “ என்று மைரா சொன்னாள் ஆனால் கேஷவ் அவளை பிடித்து, “ இன்னும் ஒரு முத்தம் கொடுத்தா இனி உன்ன தடுக்க மாட்டேன். ப்ளீஸ் மைரா, நீ ரொம்ப நேரமா என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்க, இது நியாயமே இல்ல “ என்று சிணுங்கினான்.
“ நல்ல பையனா இருங்க, நாம வீட்டுக்கு போனதும், கிஸ் பண்றது மட்டும் இல்ல அத விட அதிகமா செய்வோம். இப்ப என்ன விடுங்க “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ சத்தியமா? “ என்று கேஷவ் கேட்டான்.
மைரா அவன் கன்னத்தில் தன் வாக்குறுதியை முத்திரையிட்டபடி கண்ணாடியை நோக்கி நகர்ந்து தன் தோற்றத்தை சரி செய்தாள். கேஷவ் அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பி அவர்கள் அறையை விட்டு வெளியேறும் முன் அவளுக்காக கொண்டு வந்த ஜூஸை அவளை குடிக்கச் செய்தான்.
மைரா நைனாவின் அருகில் நின்று அவள் காதில் ஏதோ சொன்னதும் அவர்கள் புன்னகைத்தனர். க்ரிஷ் உட்பட அனைவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர், திடீரென விளக்குகள் அணைக்கப்பட்டன, மைரா அனைவரிடமும் பேசுவது கேட்டது.
“ எல்லாருக்கும் வணக்கம், எங்க க்ரிஷ் அப்புறம் அவர் மனைவி என் அன்பு தோழி நைனாவோட கல்யாண ரிசப்ஷனுக்கு வாழ்த்து சொல்ல வந்த உங்க எல்லாருக்கும் நன்றி, எங்களுக்கு ரொம்ப சந்தோஷமும் கூட. நானும் நைனாவும் ஒரு பாட்டு பாட போறோம். இந்த இரவ இன்னும் சிறப்பானதா மாத்த நாங்க விரும்புறோம் “ என்று சொன்னாள்.
க்ரிஷ் மேடையில் இருந்து இறங்கி கேஷவ் அருகில் அமர்ந்து அவர்களின் பாடலை ரசிக்க ஆவலாய் இருந்தான். மைரா ஒரு மைக்கை நைனாவிடம் கொடுத்ததும், விளக்குகள் அவர்கள் மீது கவனம் செலுத்தின. மைரா கேஷவைப் பார்த்துக் கொண்டிருக்க, நைனா புன்னகையுடன் க்ரிஷைப் பார்த்துக் கொண்டிருந்தாள், மறைமுகமாக அந்தப் பாடல் அவர்களுக்கானது என்பதை உணர்த்தியது.
நைனா:
என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
மைரா:
என்னை எழுப்பிய பூங்காற்றே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என்னை மயக்கிய மெல்லிசையே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
தங்கள் மனதை வெளிப்படுத்த பாடல் தேர்வு செய்யப்பட்டதைக் கேட்டு கேஷவும், க்ரிஷும் திகைத்துப் போனார்கள். நைனா அவனிடம் தன் மனம் திறப்பதைக் கண்டு க்ரிஷ் விழுங்கினான், அவன் கண்கள் பனித்தன.
நைனா:
மண்ணைத் திறந்தால்…
நீர் இருக்கும்…
என் மனதைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
கேஷவ் முழங்கைகளை முழங்கால்களில் ஊன்றி உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டு மைரா தன் பாடல் வரிகளில் தன் இதயத்தை ஊற்றுவதைப் பார்த்தான்.
மைரா:
ஒளியைத் திறந்தால்…
இசை இருக்கும்…
என் உயிரைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
நைனா:
வானம் திறந்தால்…
மழை இருக்கும்…
என் வயதைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
மைரா:
இரவைத் திறந்தால்…
பகல் இருக்கும்…
என் இமையைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
தன்னைப் பார்த்த நைனா தொலைந்து போய் பாடுவதை கண்டு க்ரிஷ் திகைத்துப் போனான்.
நைனா:
மண்ணும் விண்ணும் உரசுகையில்…
என்ன பாஷை பேசிடுமோ…
கேஷவ் மைராவின் கண்களில் இருந்து தன் பார்வையை விலக்கவில்லை, அவள் கண்கள் வழியாக அவனுடன் பேசுவதை அவன் பார்த்தான்.
மைரா:
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்…
பாஷை ஊமை ஆய்விடுமோ…
மைராவும் நைனாவும் விருந்தினரை வணங்கினர், விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு கைதட்டினர்.
கேஷவ் கையைத் தட்டி மைராவுக்கு காற்றில் முத்தம் கொடுக்க, எந்த ரியாக்ஷனும் இல்லாமல் க்ரிஷ் நிற்பதைப் பார்த்து நைனா விழுங்கினாள். நைனா தடுமாறும் தன் மனதை அமைதிப்படுத்த ஆதரவுக்காக மைராவின் கையைப் பிடித்ததும், மைரா அவளைப் பார்க்க திரும்பினாள்.
“ நல்லா இருக்கியா நைனா ? என்ன ஆச்சு ? “ என்று மைரா மெல்ல கேட்க, “ இதோட ரிசப்ஷன் நிறுத்திடலாமா ? எனக்கு இங்க இருந்து போகணும் மைரா “ என்றாள் நைனா.
மைரா சரி என்று முணுமுணுத்தபடி நைனாவை மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் அறைக்குள் நுழைந்தவுடன் நைனா மைராவைக் கட்டிப்பிடித்து அழுதாள்.
“ நைனா, என்ன ஆச்சு ? நீ என்ன பயமுறுத்துற, ப்ளீஸ் சொல்லு “ என்று மைரா கேட்டதும், “ க்ரிஷ் வருத்தமா இருக்க மாதிரி தெரியுது. நான் அவனுக்காகப் பாட்டு பாடுனது அவனுக்குப் பிடிக்கல போல. நான் முதல் அடி எடுத்து வெச்சு என் மனசுல இருக்குறத அவனுக்கு தெரியப்படுத்த நெனச்சேன் “ என்று நைனா அழுதாள்.
“தயவு செஞ்சு நீயா எதையும் தீர்மானிக்காத நைனா. அவன் கிட்ட பேசி விஷயங்களை தெளிவுபடுத்து. நானே நிறைய விஷயங்கள தீர்மானம் பண்ணி வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டேன். நான் பண்ண தப்ப நீ செய்யாத, ப்ளீஸ். எந்த பிரச்சனையா இருந்தாலும் நாம் பேசி தீர்த்துடலாம் “ என்று மைரா சொன்னாள். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மைரா கதவைத் திறந்து க்ரிஷைப் பார்த்தாள்.
இருவரையும் பேச விட்டு அவள் அறையை விட்டு சென்றாள். நைனா தன் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டு, கண்ணீரை அடக்கி கொண்டு அவனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
க்ரிஷ் அவள் தாடையை பிடித்து அவனை நோக்கி திருப்பி அவளை அணைத்துக் கொண்டான். அவனது கண்ணீர் தன் தோலில் படுவதை உணர்ந்த நைனா அதிர்ச்சியடைந்தாள்.
“ ஏன் என்ன இவ்ளோ நல்லா நடத்துற ? இதுக்கெல்லாம் நான் தகுதியானவன் இல்ல நைனா “ என்று க்ரிஷ் மெல்ல சொன்னதை கேட்டதும், “ முட்டாள்தனமா பேசுறத நிறுத்து. உன் தப்பு எல்லாத்தையும் நீ உணர்ந்துட்ட, வாழ்க்கையில இப்போ சந்தோஷமா இருக்க நீ தகுதியானவன். நான் என் முழு விருப்பதோட தான் உன் கூட வாழ விரும்புறேன், ப்ளீஸ் எனக்காக முயற்சி பண்ணு க்ரிஷ், விட்டுடாத “ என்று நைனா அவனிடம் கேட்டுக்கொண்டாள்.
“ மாட்டேன் நைனா, ரொம்ப நன்றி “ என்று க்ரிஷ் சொல்ல, “ நான் பயந்துட்டேன். பாட்டு பாடி உன்ன கஷ்ட்டப்படுத்திட்டதா நெனச்சேன் “ என்றாள் நைனா.
“ இல்ல, ரொம்ப உணர்வுப்பூர்வமா இருந்துச்சு, என்னால ரியாக்ட் பண்ண முடியல. நீ ரொம்ப நல்லா பாடுன “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு, “ மைராவ விட நல்லா பாடினேனா ? “ என்று நைனா கேட்டாள்.
“ நான் ஆமானு சொன்னா அது பொய்யா இருக்கும். உன்ன சந்தோஷப்படுத்த, திருப்பதி படுத்த, நீ என்ன நல்லவன்னு நினைக்க கூட நான் எந்த பொய்யும் சொல்ல விரும்பல. நான் எல்லா விஷயத்துலையும் உன்கிட்ட நேர்மையா இருக்க விரும்புறேன் “ என்று க்ரிஷ் பதில் சொன்னான்.
“ பாரு, நீ மாறிட்ட, நீ என்கிட்ட நேர்மையா பதில் சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று நைனா சொன்னாள். அதற்கு க்ரிஷ் உடனே, “ நான் மைரா நல்லா பாடுனதா சொன்னதுல உனக்கு வருத்தம் இல்லையா ? “ என்று கேட்டான்.
“ அவ எப்படி பாடுவானு எனக்கு தெரியும், அது மட்டும் இல்ல, அவ என் பெஸ்ட் friend அதனால நான் ஏன் அவ மேல வருத்தப்படனும் ? மைரா கூட உனக்கு இருக்க நட்ப பத்தி நீ என்கிட்ட எந்த தயக்கமும் காட்ட வேணாம். நான் அதுக்கு வருத்தப்பட மாட்டேன் “ என்று சொல்லி நைனா அணைப்பில் இருந்து பின்வாங்கி அவன் கன்னத்தில் சட்டென்று முத்தமிட, க்ரிஷ் அதிர்ச்சியில் நின்றான்.
“ அதிர்ச்சியாகாத. உனக்கு தான் அவகாசம் வேணும் எனக்குத் தேவையில்ல, அதனால நான் ஏன் வெளிப்படையா பேசுறத நிறுத்தனும் ? அப்புறம் நான் உனக்காக ஏதாவது ஸ்பெஷலா செய்தா உனக்கு புடிச்சு இருக்குனு எனக்கு தெரிஞ்சிடுச்சு. ஆனா கவலைப்பட வேணாம், நான் எல்லை தாண்டி போக மாட்டேன். இந்த உறவுக்கு நீ தயாராகுற வரை வெயிட் பண்ணுவேன் “ என்று சொல்லி அவள் புன்னகையுடனும் வெட்கத்துடனும் அறையை விட்டு வெளியேறினாள்.
*******************
முன்னோட்டம்:
“ ரோஷினி உன் கூட ஒட்டிக்கிட்டே இருக்குறத பார்க்கும் போது அப்படியே அவள கிழிக்கனும் நெனச்சேன் ஆனா என்னால முடியல ஆனா இப்போ யாராச்சும் உன்ன நெருங்க நெனச்சா கொன்னுடுவேன். அப்புறம் என்ன கேட்ட நீ அழகா இல்லையானா ? உன் அண்ணன் மைராவோட ஹங்க், நீ என் ஹங்க், அதனா தான் எனக்கு உன்ன புடிக்கும் “

1 comment
[…] 82. மைராவ விட நல்லா பாடினேனா ? […]