Home Family2. என்ன கேஷவ் சொல்லி கூப்பிடுவியா ?

2. என்ன கேஷவ் சொல்லி கூப்பிடுவியா ?

by Siragugal Novels
59 views

7 வயதில் மைரா:

மூன்று ஆண்டுகள் கழிந்தது, மைரா இப்போது அர்ச்சனாவின் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டாள். அவர்கள் அனைவரும் அவளது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி, அவளை  நேசித்து செல்லம் கொடுத்தனர். வசுந்த்ராவுக்கும் அதேதான், அவள் கிருஷ் மற்றும் கேஷவை அன்புடன் நடத்தினாள், இரண்டு குடும்பங்களும் உணவைப் பகிர்ந்து கொண்டனர், பிக்னிக், திரைப்படங்கள், கடற்கரைகளுக்கு ஒன்றாக சென்றனர்.

மதன் மற்றும் ராஜன் வார இறுதி நாட்களில் டென்னிஸ் விளையாடினர், சனிக்கிழமை இரவுகளில் பானங்களை அனுபவித்தனர். அர்ச்சனாவும், வசுந்தராவும் நெருங்கிய நண்பர்களாகி, ஷாப்பிங், மளிகை பொருட்கள் வாங்குதல் என மகிழ்ச்சியாக இருந்தனர்.

க்ரிஷ் மற்றும் கேஷவ் படித்த அதே பள்ளியில் மைராவை ராஜன் சேர்த்தார். க்ரிஷும் மைராவும் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றனர், காலையிலும் மாலையிலும் சிறப்பு வகுப்புகள் இருந்ததால் கேஷவ் தனியாக சென்றான்.

க்ரிஷும், மைராவும் இரவு உணவு சாப்பிட அழைக்கப்படும் வரை விளையாடுவார்கள். இப்போதும் க்ரிஷ் தினமும் பள்ளிக்கு கிளம்பும் முன் மைராவின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டே இருந்தான். கேஷவ்  தனது தேர்வுகளில் பிஸியாக இருந்ததால் மைராவுக்கும் அவனுக்கும் இடையேயான தொடர்பு குறைந்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மைரா, அர்ச்சனாவின் வீட்டிற்கு ஓடி சென்று க்ரிஷை கூப்பிட, அர்ச்சனா ஒரு கரண்டியுடன் வெளியே வந்து அவளைப் பார்த்து புன்னகைத்து, “ ஏய் வாலு, க்ரிஷ், அங்கிள் கூட பேட் வாங்க போய் இருக்கான். ஸ்நாக்ஸ் வேணுமா? “ என்று கேட்டார் அதற்கு மைரா, “ இல்ல அத்த, அவன் வரவரைக்கு நான் வெயிட் பண்றேன் “ என்று சொல்லிவிட்டு டிவியை ஆன் செய்து அவளுக்கு பிடித்த இசை நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு பாடுவதில் இருந்த ஆர்வத்தை பார்த்த வசுந்தரா அவளை பாட்டு வகுப்பில் சேர்த்தார். அருகில் யாரோ இருப்பதை உணர்ந்தவள், கேஷவ் தன் தலைமுடியை கோதிவிடுவதை பார்த்தாள்.

“ ஹேப்பி பர்த்டே அம்மு “ என்று கேஷவ் அவளை வாழ்த்தியதும், “ தேங்க்ஸ் அங்கிள், இப்ப தான் எழுந்தீங்களா ? டைம் என்ன ஆகுது பாருங்க “ என்று சொன்னாள். அவள் வார்த்தையை கேட்ட கேஷவ் புன்னகையுடன், “ நான் என் கிளாஸ் முடிஞ்சி லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன், அதுவும் இல்லாம நைட்டு தூங்கவும் லேட் ஆயிடுச்சு அதனால நான் கொஞ்சம் லேட்டா எழுந்தேன். அது சரி உன் கூட்டாளி எங்க ? “ என்று அவளிடம் கேட்டான்.

“ மாமா கூடவே பேட் வாங்கப் போயிருக்கான்னு அத்த சொன்னாங்க “ என்று மைரா சொன்னதும், “ ஏய் அம்மு, என்ன ஏன் அங்கிள் சொல்லி கூப்பிடுற ? நீ எப்பவும் என்ன கெட்ச்அப் சொல்லி தானே கூப்பிடுவ ? இப்போ தான் உனக்கு என் பெயர சரியா சொல்ல வருமே அப்போ என்ன பெயர் சொல்லி கூப்பிட வேண்டியது தானே ? “ என்று கேஷவ் தன் மனதில் நீண்ட காலமாக இருந்த கேள்வியை கேட்டான்.

“ என்னையும், க்ரிஷையும் விட நீங்க பெரியவர் அதனால நான் உங்கள கெட்சப் இல்ல கேஷவ்னு பெயர் சொல்லி கூப்பிட கூடாதுனு க்ரிஷ் சொன்னான். எனக்கு என்ன சொல்லி கூப்பிடுறதுனு குழப்பமா இருந்துச்சு அப்போ அவன் தான் உங்கள அங்கிள் சொல்லி கூப்பிட சொன்னான் “ என்று அவள் அழகாக தலையை ஆட்டி பேச, கேஷவ்  அவளது க்யூட்னஸை பார்த்து சிரித்து அவள் கன்னங்களை கிள்ளினான்.

“ என்ன கேஷவ் சொல்லி கூப்பிடுவியா ? உங்க ரெண்டு பேரையும் விட அவ்ளோ ஒன்னும் எனக்கு பெரிய வயசு வித்தியாசம் இல்ல “ என்று கேஷவ் சொல்லும் போதே அவர்கள் ஒரு அலறலைக் கேட்டனர். க்ரிஷ், மைராவுக்காக ஒரு டெடி பியரைப் பிடித்துக் கொண்டு ஓடி வருவதை கண்டனர்.

“ இதோ பார் மைரா, உனக்காக இந்த பரிசும், எனக்காக ஒரு பேட் வாங்கினேன் “ என்று சொல்லி க்ரிஷ் மைராவை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவனுடன் விளையாடினான் அவளை வெளியே இழுத்து சென்றான்.

அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்த கேஷவ் அருகில் அமர்ந்த மதன், “ கேஷவ், உன் friends பார்க்க வெளிய போகாத. இன்னைக்கு மைராவோட பிறந்த நாள். ராஜன் வீட்டு மொட்டை மாடியில் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காங்க “ என்று சொன்னார். அதற்கு கேஷவ் சரி என்று  முணுமுணுத்துக் கொண்டே தன் அறைக்குத் திரும்பினான்.

மாலையில் ராஜன், மதன், கேஷவ்  மூவரும் மைராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மொட்டை மாடியை பலூன்களாலும், நட்சத்திரங்களாலும் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். க்ரிஷும், மைராவும் கைகளைப் பிடித்துக் கொண்டு மொட்டை மாடியை அடைந்தனர், அவள் ஒரு அழகான பாவாடை மற்றும் டாப் அணிந்திருந்தாள். அர்ச்சனாவும் வசுந்தராவும் கேக்கை பிடித்தபடி அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மேஜை மீது அதை வைத்தனர்.

க்ரிஷும், மைராவும் அருகருகே நிற்க, இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டினார்கள். பெரியவர்கள் அவளுக்கு கேக்கை ஊட்டினார்கள், அவள் ஒரு துண்டு எடுத்து க்ரிஷ் மற்றும் கேஷவுக்கு ஊட்டினாள். மதன் மற்றும் அர்ச்சனா அவளுக்கு பொம்மைகளை பரிசளித்தனர், க்ரிஷ் அவளுக்கு மற்றொரு பொம்மையை பரிசளித்து அவள் கன்னங்களில் முத்தமிட்டு, “ ஹேப்பி பர்த்டே மைரா “ என்று அவளை வாழ்த்தினான்.

“ கேஷவ், நீ மைராவுக்கு கிஃப்ட் வாங்கலையா ? “ என்று அர்ச்சனா கேட்க, “ நான் அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சுருக்கேன் மா “ என்று சொன்ன கேஷவ், பிறகு மைராவை பார்த்து, “ அம்மு என் கூட வா “ என்று சொல்லி அவள் கையைப் பிடித்து தன் அறைக்கு அழைத்துச் செல்ல, க்ரிஷ்  மைராவின் இன்னொரு கையைப் பிடித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான்.

அவர்கள் அறையை அடைந்ததும் மைரா கட்டிலில் உட்கார்ந்தாள், கேஷவ்  அவளுக்கு அளிக்க போகும் பரிசை காண க்ரிஷ் அவள் அருகில் அமர்ந்தான்.

துணியால் மூடப்பட்டிருந்த ஒரு ஜாடியை எடுத்து கேஷவ் அவளிடம் கொடுத்தான். மைரா துணியை அகற்றியதும்  அதிலிருந்து நிறைய பட்டாம்பூச்சிகள் அறை முழுவதும் பறந்தன. மைரா வியப்பில் பெருமூச்சு விட்டபடி கேஷவ்  மீது பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டு, “ தேங்க்யூ கெட்ச்அப் “என்று உற்சாகமாக சொன்னாள்.

பூட்டிய அறையில் இருந்து தப்பிக்க முடியாமல் பறந்த பட்டாம்பூச்சிகளை க்ரிஷும், மைராவும் பிடிக்க முயன்றனர். கேஷவ்  தனது மொபைலில் அவர்களை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தான். ஒரு பட்டாம்பூச்சி அவளது ஹேர்பேண்டில் அமர்ந்த போது அவன் புன்னகைத்து அந்த காட்சியை படம் பிடித்தான். பின்னர் அவன் புகைப்படங்களை மைராவிடம் காட்டினான். அவள் ஹேர் பேண்டில் பட்டாம்பூச்சியுடன் எடுத்த போட்டோவை அவள் விரும்பினாள், ஆனால் முகம் சுளித்து, “ நான் இதுல முன் பல் இல்லாம அசிங்கமா இருக்கேன் கெட்சப் அதனால இத டெலீட் பண்ணுங்க “ என்று கெஞ்சினாள். அதற்கு கேஷவ், “ சரி அம்மு, டெலீட் பண்ணிடுறேன் “ என்று சொன்னான்.

அப்போது க்ரிஷ் அவள் கையை பிடித்து, “ மைரா, முன் பல் இல்லாம கூட நீ அழகா இருக்க “ என்று சொல்லிவிட்டு பின்னர் தன் அண்ணனை பார்த்து, “ அண்ணா, அத டெலீட் பண்ணாதீங்க “ என்று சொன்னான். க்ரிஷின் வார்த்தையை கேட்ட மைரா, “ நான் உண்மையிலேயே அழகா க்ரிஷ் ? என்று அவனிடம் கேட்டாள்.

“ என் பெஸ்ட் friend தான் இந்த உலகத்திலேயே ரொம்ப அழகான பொண்ணு “ என்று சொல்லி க்ரிஷ் கதவைத் திறந்து மைராவை இழுத்துக்கொண்டு வெளியே ஓடினான், பட்டாம்பூச்சிகள் அவர்களைப் பின்தொடர்ந்து அறையை விட்டு வெளியேறின.

அடுத்த நாள் பள்ளியில் மைரா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், அப்போது ஒரு பெண் மைராவின் கையைப் பிடித்து, “ என் பேரு நைனா. நாம friendsஸா இருக்கலாமா ? “என்று கேட்டாள் அதற்கு மைரா, “ இல்ல, எனக்கு ஏற்கனவே என் பெஸ்ட் friend க்ரிஷ் இருக்கான் “ என்று சொன்னாள். அதற்கு நைனா, “ சரி இருக்கட்டும், நம்ம ரெண்டு பேரும் கூட பெஸ்ட் friends ஆகலாம் “ என்று கேட்டாள்.

“ இல்ல, நமக்கு ஒரே ஒரு பெஸ்ட் friend தான் இருக்க முடியும். க்ரிஷ்க்கு நான் தான் பெஸ்ட் friend “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ இல்ல, அவன் வளர்ந்த அப்புறம் அவனுக்கு நிறைய friends இருப்பாங்க. அவன் ஒரு பையன், அவனுக்கு நிறைய friends கிடைப்பாங்க அப்போ நீ தனியா இருப்ப “ என்று நைனா சொன்னாள்.

நைனாவின் வார்த்தையை கேட்டு கோவமடைந்த மைரா, “ வாய மூடு, நான் மட்டும் தான் க்ரிஷ்கு பெஸ்ட் friend. நீ இங்க இருந்து போ “ என்று சொல்லி மைரா அங்கிருந்து நகர்ந்து ஓட முயன்றாள்  ஆனால் நைனா அவளைத் தாண்டி ஓட முயன்ற போது தவறுதலாக அவர்களின் தோள்கள் மோதி, மைரா கீழே விழுந்து அவள் தலை ஒரு கல்லில் மோதி இரத்தம் வழிய ஆரம்பித்தது. வலி மற்றும் பயத்தில் அவள் அழுது அலறத் தொடங்கினாள். உடனடியாக ஆசிரியை அவளை முதலுதவிக்கு அழைத்துச் சென்றதோடு இல்லாமல் பெற்றோருக்கு போன் செய்தார்.

மைராவின் விபத்து பற்றி அறிந்த க்ரிஷ் உடனடியாக வீட்டுக்கு போக விரும்புவதாக அழ ஆரம்பித்தான். அவனது ஆசிரியர் அவனது அழுகையை நிறுத்த முயன்றார், ஆனால் அவன் கேட்கத் தயாராக இல்லை. கடைசியில் கேஷவை வகுப்பறைக்கு அழைத்தனர்.

க்ருஷ் அழுவதைப் பார்த்த கேஷவ் அவனைக் கட்டிப்பிடித்து அவன் தலைமுடியைக் கோதி, “க்ரிஷ், ஏன் அழற ? உனக்கு ஏதாவது அடிபட்டுச்சா இல்ல யாராச்சும் உன்ன அடிச்சாங்களா ? சொல்லு க்ரிஷ் “ என்று அவன் பதற்றத்துடன் கேட்டான்.

“ இல்ல அண்ணா, மைராவுக்கு தான் அடிபட்டு இருக்கு, அவள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க, நான் அவள பார்க்கனும், ப்ளீஸ்  என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க “ என்று சொல்லி க்ரிஷ் அழுதான். அவன் சொன்னதை கேட்டதும், “ மைராவுக்கு அடிபட்டுச்சா ? அவளுக்கு என்ன ஆச்சு ? என்று கேட்ட போது கேஷவின் இதயம் வேகமாக துடித்தது. 

க்ரிஷ் தான் கேட்டதை விளக்க, கேஷவ் அவன் கண்ணீரைத் துடைத்து விட்டு, “ க்ரிஷ், நீ இப்போ வளர்ந்துட்ட, உன் friends எல்லாரும் நீ அழுறத பார்க்குறாங்க. அவங்க உன்ன கிண்டல் செய்வாங்க அதனால கொஞ்சம் அமைதியா இரு. சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் நான் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். மைராவுக்கு ஒன்னும் ஆகாது, அவ நல்லா இருப்பா “ என்று கேஷவ் அவனை சமாதானம் செய்ய முயன்றான்.

கேஷவ் சொன்னதை கேட்டுவிட்டு மறுத்து தலை ஆட்டி, “ அவங்க என்ன கிண்டல் செய்யட்டும், அவங்க என் friends இல்ல. மைரா மட்டும் தான் என் பெஸ்ட் friend. எனக்கு இப்போவே அவள பார்க்கணும். அவ அழுதுட்டு இருப்பா. நான் கூட இருந்தா அவ அழ மாட்டா “ என்று சொல்லி க்ரிஷ் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான்.

“ ஆனா டீச்சரும், பிரின்சிபாலும் இப்போ நம்மள போக விட மாட்டாங்க க்ரிஷ். நீ என்ன நம்புற தானே ? என்று கேஷவ் கேட்க க்ரிஷ் ஆம் என்று தலையை அசைத்து கேஷவைப் பார்த்தான்.

“ சரி, இப்போ உன் கிளாஸுக்கு போ, நான் இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸை போகாம உன் கூட வீட்டுக்கு வரேன். நாம மைராவுக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் வாங்கிட்டு போவோம் “ என்று கேஷவ் சொன்னதும், “ சத்தியமா? “ என்று கேட்டு க்ரிஷ் தன் உள்ளங்கையை காட்டினான்.

“ சத்தியம். இப்போ என் தைரியசாலி க்ரிஷ், உன்னோட கிளாஸுக்கு போ “ என்று கேஷவ் சொன்ன பிறகு, க்ரிஷ் தன் வகுப்பிற்குத் திரும்ப, கேஷவ்  தன் வகுப்புக்கு சென்றான். கடைசி வகுப்பில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்து, சிறப்பு வகுப்பைத் தவிர்க்க கேஷவ் அனுமதி கோரினான். வகுப்பில் முதலிடம் பெரும் மாணவன் என்பதால்  அவனுக்கு அனுமதி கிடைத்து, ஆவலுடன் காத்திருந்த க்ரிஷை பார்க்க அவன் விரைந்தான்.

அவர்கள் மைராவுக்கு பிடித்த ஐஸ்கிரீமுடன் வீடு திரும்பினர். தலையில் கட்டுடுடன் இருந்த மைராவை பார்த்தவுடன் க்ரிஷ் அவளை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தான்.

“ க்ரிஷ், அவ நல்லா இருக்கா ஆனா நீ இப்படி அழுதா அப்புறம் அவளும் அழுவா “ என்று கேஷவ் சொன்னதும் க்ரிஷ் அணைப்பிலிருந்து பின்வாங்கி அவளது காயத்தை மெதுவாகத் தொட்டான். மைரா வலியில் மெல்ல சீற, கிருஷ் அவன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

“ என்ன ஆச்சு அம்மு ? உனக்கு எப்படி அடிப்பட்டுச்சு ? “ என்று கேஷவ் தனது பணிவான, அன்பான குரலில் கேட்டதும். மைரா நடந்ததை ஒரு கதை போல அவனிடம் ஒப்பிக்கத் தொடங்கினாள். கேஷவ் அவள் தலைமுடியை அவள் காதுக்குப் பின்னால் தள்ளி, அவள் கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

“ க்ரிஷ், மைரா நீங்க ரெண்டு பேரும் நான் சொல்றதைக் கேளுங்க. நமக்கு பெஸ்ட் friend இருக்குறது நல்ல விஷயம் தான் ஆனா அதுக்காக நிறைய friends இருக்க கூடாதுனு அர்த்தம் இல்ல. நமக்கு எவ்ளோ friends வேணும்னாலும் இருக்கலாம் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ உண்மையாவா? “ என்று கேட்டாள் மைரா.

“ ஹ்ம்ம் ஆமா. உனக்கு எவ்ளோ friends வேணும்னாலும் இருக்கலாம் அப்போவும் க்ரிஷ் உனக்கு பெஸ்ட் பிரெண்டா இருப்பான் “ என்று விளக்கம் சொன்னான் கேஷவ்.

“ உங்களுக்கு நிறைய பெஸ்ட் friends இருக்காங்களா ? “ என்று க்ரிஷ் கேட்க, “ எனக்கு நிறைய friends இருக்காங்க அதோட ரெண்டு பெஸ்ட் friends இருக்காங்க “ என்று பதில் சொன்னான் கேஷவ்.

“ அப்படியா ? “ என்று ஆச்சரியமடைந்த மைரா, “ க்ரிஷ், அப்போ நான் நைனா கூட friend ஆகட்டுமா ? “ என்று கேட்டாள். அதற்கு க்ரிஷ் உடனே, “ இல்ல, அவ உன்ன தள்ளிவிட்டா, அதனால அவ வேணாம் வேற ஒரு friend வெச்சுக்கோ “ என்று சொன்னான். உடனே குறுக்கிட்ட கேஷவ், “ இல்ல க்ரிஷ், அப்படி சொல்லாத. நைனா,  மைரா கூட பிரிண்ட்ஷிப் வெச்சுக்க தான் கேட்டுருக்கா. அவ மைராவ தள்ளி விடல, நடந்தது ஒரு விபத்து. அவ மைராவுக்கு ஒரு நல்ல தோழியா இருப்பா “ என்று சொன்னான். ஆனாலும் க்ரிஷ் முகம் சுளித்து அமர்ந்திருந்தான்.

“ அங்கிள் சொல்றது சரி தான் க்ரிஷ். இப்போ கொஞ்சம் சிரி முட்டாள். நீ இப்படி இருந்தா தாத்தா மாதிரி இருக்க “ என்று சொல்லி சிரித்தாள்.

அவர்களின் பெற்றோர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஹாலுக்கு திரும்பினர்.

“ கேஷவ் கிட்ட அவனோட வயசுக்கு மீறி பக்குவம் இருக்கு. க்ரிஷ்,  மைராவ அவன் அக்கறையா கவனிச்சுக்குற விதம் என்ன ரொம்ப ஆச்சரியப்படுத்துது “ என்று ராஜன் சொன்னதும், “ அவங்க வளர்ந்த அப்புறம் ஒரு ஜோடிய நாம பார்ப்போம்னு நினைக்கிறேன் என்று வசுந்தரா சொல்ல, உடனே வசுந்தராவை அணைத்துக் கொண்டாள் அர்ச்சனா. மதனும் ராஜனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்த்னர்.

“ அப்படி நடந்தா நாம் friends மட்டும் இல்ல சொந்தகாரங்களா மாறிடுவோம். அவங்களுக்காக நான் கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்வேன் “ என்று அர்ச்சனா சொல்ல, “ நானும் செய்வேன் அர்ச்சனா. க்ரிஷ் இப்போலாம் மைராவ விட்டு இருக்குறதே இல்ல. அவள கேஷவ் கூட பேச விட மாட்டேங்குறான். கேஷவும், மைராவும் பேசுறத பார்க்கவே முடியல. அவளுக்கு அடிப்பட்டத பார்த்து அவன் எப்படி அழுதான் பாருங்க “ என்றார் வசுந்தரா.

கேஷவ்  வீடு திரும்பி தனது படிப்பைத் தொடங்கினான். படிப்பை நிறுத்திவிட்டு தன் தம்பியை அணைத்துக் கொண்டு அவன் அருகில் உட்கார்ந்தான்.

“ ஆர் யூ ஓகே க்ரிஷ் ? நாம மறுபடியும் ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ என் பாக்கெட் மணி எல்லாம் காலி ஆயிடுச்சு “ என்றான் க்ரிஷ் வருத்தத்துடன். அதற்கு கேஷவ், “ கவலைப்படாத, என்கிட்ட பணம் இருக்கு, வா நாம போலாம் “ என்று அவனை அழைத்தான்.

க்ரிஷ் கிராஸ் பாரில் உட்கார்ந்தானதும், கேஷவ்  தனது சைக்கிளை அருகிலிருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு ஒட்டிச் சென்று அவர்களுக்கு பிடித்த சுவையை வாங்கினான்.

“ நீங்க தான் பெஸ்ட் அண்ணா, ரொம்ப நன்றி “ என்று க்ரிஷ் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டே சொன்ன போது, “ இன்னும் ரெண்டு நாள்ல நாம ஊருக்கு கிளம்பறோம் தெரியுமா? “ என்று கேஷவ் கேட்டான். அதற்கு க்ரிஷ், “ மைராவ நம்ம கூட கூட்டிட்டு போகலாமா ? “ என்று கேட்டான்.

“ இல்ல க்ரிஷ், இப்ப வேண்டாம் அவளுக்கு அடிப்பட்டு இருக்கு. நீ அவ கூட ஒரு வாரம் இருக்க மாட்டனு அவள சமாதானப்படுத்து. இதுக்கு தான் உங்க ரெண்டு பேருக்கும் நிறைய friends வேணும்னு சொன்னேன். அவளுக்கு உன்ன தவிர friends இருந்தா அவ வருத்தப்பட மாட்டா “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ ஹ்ம்ம், அவளுக்கு சாக்லேட் வாங்க எனக்கு கொஞ்சம் பணம் கடன் தரீங்களா ? என்று கேட்டான் க்ரிஷ்.

கேஷவ்  சிரித்தபடி பணத்தை மேஜை மீது வைத்ததும், க்ரிஷ்  கேஷவை கட்டிப்பிடித்தான், அவர்கள் வீடு திரும்பும் போது க்ரிஷ்  மைராவுக்கு சாக்லேட் வாங்கினான்.

அடுத்த நாள் க்ரிஷ் அவளுக்கு சாக்லேட் கொடுத்து ஒரு வாரம் ஊருக்கு கிளம்புவதாக சொல்லி சமாதானப்படுத்தினான். ஒரு வாரம் அவன் கிளம்பியதில் மைரா அமைதியாக வருத்தப்பட்டாள், அவர்கள் கிளம்பும் நாளில் அவள் யாருடனும் பேசவில்லை. கார் கிளம்புவதைப் பார்த்ததும் அவள் அழத் தொடங்கினாள், ராஜன் அவளை திசைதிருப்ப அவளை கடற்கரைக்கும், தியேட்டருக்கும்  அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, ஆனாலும் அவள் கவலையோடு இருந்தாள்.

ஒரு வாரமாக அவள் எரிச்சலுடன் இருந்தாள், அவர்கள் திரும்பி வந்துவிட்டார்களா என்று பார்க்க அர்ச்சனாவின் வீட்டிற்கு அடிக்கடி ஓடுவாள்.

மைரா யாருடனும் தொலைபேசியில் பேச மறுத்து, கிருஷ் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினாள். கடைசி நாளன்று அவள் மனம் திறந்து நைனாவுடன் பேசினாள். மைரா தனக்கு பிடித்த ஸ்நேக்ஸ் மற்றும் மதிய உணவை நைனாவுடன் பகிர்ந்து கொண்டாள்.

க்ரிஷ் எப்போதும் முதலில் தனது சிறந்த நண்பனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவளுடன் நட்பு கொண்டாள், அதற்கு நைனா மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள்.

மாலையில் மைராவை அழைத்துச் செல்ல வசுந்த்ரா பள்ளிக்கு வந்தபோது, மைரா நைனாவின் கையை பிடித்துக் கொண்டு தன்னிடம் ஓடி வருவதை பார்த்து வசுந்தரா ஆச்சரியப்பட்டார்.

“ அம்மா, நானும், நைனாவும் இப்போ friends “ என்று மைரா சொன்னதும், “ என் செல்லக்குட்டி நல்ல பொண்ணு. உனக்கு புது friend கெடச்சுதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா இருங்க “ என்று இருவரிடமும் கூறினார் வசுந்தரா.

“ கண்டிப்பா ஆன்டி, நான் எப்பவும் மைரா கூட இருப்பேன் “ என்று நைனா சொன்னதும், “ நல்லது. மைரா நாம் போகலாமா? க்ரிஷ், கேஷவ், அர்ச்சனா அத்த, மதன் மாமா கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவாங்க “ என்று வசுந்தரா கூறினார்.

மைரா அவர்களை மீண்டும் பார்ப்பதில் உற்சாகமாக இருந்தாள். க்ரிஷ்  ஒரு வாரத்திற்கு மைராவை விட்டு வெளியேறியதால் ஏதோ நல்லது நடந்துவிட்டது என்று வசுந்த்ரா மகிழ்ச்சியடைந்தார்.

**************

முன்னோட்டம்:

“ ஏய் அம்மு, இனி நீ என்ன அங்கிள் சொல்லி கூப்பிட்டு கிண்டல் செய்ய மாட்டணு சொல்லு உன்ன போக விடுறேன் “

 

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 11:30 am

[…] என்ன கேஷவ் சொல்லி கூப்பிடுவியா ? […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:51 pm

[…] 2. என்ன கேஷவ் சொல்லி கூப்பிடுவியா ? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!