Home Family38. உன்ன கிஸ் பண்றது புடிச்சு இருக்கா ?

38. உன்ன கிஸ் பண்றது புடிச்சு இருக்கா ?

by Siragugal Novels
20 views

இரவு உணவிற்கு பிறகு டிஸ்கோ விளக்குகள் எரிந்தன, டி.ஜே பாடல்களை இசைக்கத் தொடங்கினார். நிகழ்ச்சி அமைப்பாளர் ஜோடிகளை நடன தளத்தில் நடனம் ஆட அழைத்ததும், மைராவை நடன தளத்திற்கு செல்லுமாறு நைனா சைகை செய்தாள், ஆனால் அவள் வேண்டாம் என்று மறுத்து தலையை அசைத்தாள்.

ஒரு சில ஜோடிகள் மைராவிடம் சென்று, அவளும், கேஷவும் புதுமண தம்பதி என்பதால் நடனம் ஆட வரும்படி அழைத்தனர்.

“ உனக்கு டேன்ஸ் ஆடணுமா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ எல்லாரும் கூப்பிடுறாங்க, வேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காது அதனால அவங்க திருப்திக்காக ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடலாம் ஆனா எனக்கு சுத்தமா டேன்ஸ் ஆட தெரியாது “ என்று சொன்னாள் மைரா.

“ நாம ஒன்னா ஆட கத்துக்குவோம் இல்ல ஒன்னா விழுவோம் வா பாத்துக்கலாம் “ என்று சொல்லி கேஷவ் எழுந்து நின்று உள்ளங்கையை நீட்டினான். மைரா தனது உள்ளங்கையை வைத்ததும் இருவரும் நடன தளத்தை அடைந்தனர்.

“ இப்போ புது ஜோடி டேன்ஸ் ஆட வந்துருக்காங்க டி.ஜே, அவங்களுக்காக ஒரு ரொமான்ஸ் பாட்டு போடுங்க “ என்று நிகழ்ச்சி அமைப்பளார் சொன்னதும், டி.ஜே கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

கேஷவ் அவளது இரு கரங்களையும் பிடித்துக் கொள்ள இருவரும் எதிரெதிரே நின்றனர். கேஷவ், மைராவைத் தன்னருகே இழுத்து ஒரு கையால் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து, மறு கையால் அவளது கையைப் பிடித்துக் கொண்டான். இருவருக்கும் இருந்த நெருக்கத்தில் மைரா மூச்சடைப்பது போல உணர்ந்து அவன் மார்பில் தன் பார்வையை பதித்தாள்.

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

கேஷவ் ஒரு அடி பின்னால் நகர்ந்து அவளை ஒரு முறை சுழற்றினான். பின்னர் அவள் தாடையை பிடித்து மெல்ல அவனைப் பார்க்க செய்ய, இருவரும் பாடலுக்கு ஏற்ப தங்கள் உடலை அசைத்தனர்.

இது இருளல்ல அது ஒளியல்ல
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்
இது இருளல்ல அது ஒளியல்ல
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்

தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்…

கேஷவும், மைராவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அருகருகே நின்று, இரவரும் மற்றவரின் கண்ணத்தை உள்ளங்கையில் பற்றியபடி மெதுவாக சுற்றி பார்த்துக் கொண்டனர். மைரா அவனது வசீகரிக்கும் கண்களில் தன்னை இழந்தாள்.

பெண்ணே… பெண்ணே
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே…
புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே…

நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்
பாலுாட்ட நிலவுண்டு

கேஷவ் அவள் இடுப்பைச் சுற்றி தன் கை வைத்து பிடித்து  அவளைத் தரையிலிருந்து தூக்கி சுழற்றினான். அவளது வெற்று இடுப்பில் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்த மைரா அவனது ஸ்பரிசத்தில் தன்னை இழந்து உதடுகளை கடித்துக் கொண்டாள்.

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…

கேஷவ் அவள் கால்களை தரையில் பதிக்க, மைரா தன் கையை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டாள். இருவரும் தங்களை மறந்து நின்ற போது, கேஷவ் தன் இரு கைகளையும் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்துப் பிடித்தான். அவர்களின்  உடல்கள் ஒன்றோடொன்று அழுத்தப்பட்டு இருவரும் முழுமையாக தங்களை மறந்து இருந்தனர்.

அவர்களை சுற்றி இருந்த உலகை மறந்து இருவரும், காதுகளுக்கு எட்டாத இசைக்கு அவர்களின் உடல்கள் மெதுவாக அசைந்தன. இருவரின் முகமும் மிகவும் நெருக்கமாக இருந்தன, அவர்களின் சூடான மூச்சு ஒருவருக்கொருவர் உதடுகளை விசிறிக் கொண்டிருந்தது.

கேஷவ் அவள் உதடுகளை பார்த்தான், அவற்றை விழுங்க வேண்டும் என்ற எண்ணம் அவனை சித்திரவதை செய்தது. அவன் அவளது உதடுகளைப் பார்த்தான், பிறகு அவள் அனுமதிக்காக அவளது கண்களைப் பார்த்தான். அவள் கண்களும் அவனைப் போலவே உணர்ச்சிகளைக் கொண்டிருந்தன. அவன் இன்னும் நெருக்கமாக சாய்ந்ததும், இருவரின் உதடுகளுக்கிடையில் இடைவெளி ஒரு நூல் இழை போல இருந்தது.

“ கிஸ் பண்ணட்டுமா அம்மு ? “ என்று கேஷவ் மெல்லிய ஹஸ்கி குரலில் கேட்க, மைரா சம்மதம் தெரிவித்து கண்களை மூடினாள். அடுத்த கணம் கேஷவ் அவள் உதடுகளை முத்தமிட்டதும் இருவரின் உடலிலும் மின்னல் பாய்ந்தது போல இருந்தது. அவளது கீழுதட்டை மெல்ல சுவைத்து திருப்தியில் முனகினான். அவன் கட்டை விரலால் அவளது வெற்று இடுப்பில் வட்டங்களை வரைந்து, அவளது மென்மையான பருத்த உதடுகளை மேலும் தீவிரமாக முத்தமிட வேண்டும் என்ற ஆசையில் முத்தத்தை ஆழப்படுத்துவதற்குள் அவர்களின் முதல் நெருக்கமான தருணம் மற்றும் முதல் முத்தம் விசில் சத்தம் கேட்டு தடைப்பட்டது.

கேஷவும், மைராவும் முத்தத்திலிருந்து பின்வாங்கி, நடன தளத்தின் மையத்தில் ஒரு ஜோடி ஒருவருக்கொருவர் முத்தமிடுவதை அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டனர். மூவரின் கண்களைத் தவிர மற்றவர்களின் கண்களுக்கு தெரியாத வகையில் ஒரு மூலையில் இருந்ததற்காக இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கேஷவ் அவளை தன் மார்போடு அனைத்து அவள் முகத்தை மறைத்துக் கொள்ள, இருவரும் தங்கள் இருக்கைக்கு திரும்பினர். அவர்கள் முத்தமிட்டதை பார்க்காதது போல நைனா எப்போதும் போல இருந்தாள் ஆனால் அவர்கள் இவ்வளவு காதலோடு இருப்பதைக் கண்டு க்ரிஷ் அதிர்ச்சியடைந்தான், ரோஷினி பொறாமையில் எரிந்து கொண்டிருந்தாள்.

அவர்களின் முத்தத்திற்குப் பிறகு மைராவின் காதுகளையும், கண்களையும் எதுவும் எட்டவில்லை. வசீகரிக்கும் கண்களை கொண்ட மனிதனால் அவளுடைய புலன்கள் அனைத்தும் விழுங்கப்பட்டன. அவளது தோலில் அவனது ஸ்பரிசமும், அவளது உதடுகளில் அவனது உதடுகளும் பதிந்திருந்த உணர்வில் அவள் யாரிடமும் பேசவில்லை. முத்தத்தின் உணர்வில் அவள் உடல் இன்னும் சிலிர்த்துக் கொண்டிருந்தது.

கேஷவ், தன் மனைவியை விழுங்க வேண்டும் என்ற எரியும் ஆசையை மறைத்து அமர்ந்திருந்தான். வெட்கத்தில் முகம் சிவந்து இருந்த மைராவை திருட்டுத்தனமாகப் பார்த்தவன், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அவர்கள் விடைபெறும் வரை எதுவும் பேசவில்லை.

கேஷவ் ஓட்டுநர் இருக்கையிலும், மைரா பயணிகள் இருக்கையிலும் அமர்ந்தனர். அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை, ஆனால் அவளுடைய சிவந்த கன்னங்கள், காது மற்றும் கழுத்து அவனுக்கு எல்லா பதில்களையும் அளித்தன. க்ரிஷும், ரோஷினியும் பின் இருக்கையில் இருந்தனர், யாரும் வீட்டிற்கு திரும்பும் வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை, ஆனால் கேஷவ் மற்றும் மைராவுக்கு இடையில் ஒருவிதமான பதற்றம் அடர்த்தியாக இருந்தது.

அவர்கள் வீட்டை அடைந்ததும், மைரா அறைக்கு விரைந்தாள், அவளை பின்தொடர்ந்த கேஷவ், கதவைச் சாத்திவிட்டு, அவளை வேகமாக இழுத்து அவளைத் தனக்கும், சுவருக்கும் இடையில் அடைத்துக் கொண்டான். மைராவின் மார்பு விம்ம ஆரம்பித்தது, அவனது சூடான மூச்சு அவள் கன்னத்தில் படுவதை உணர்ந்தாள்.

“ நாம கிஸ் பண்ணதுக்கு வருத்தப்படுறியா அம்மு ? “ என்று கேஷவ் கேட்க, மைரா அவனது கண்களைப் பார்த்தாள், அவளால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாத பல உணர்ச்சிகளைப் அவன் கண்கள் பிரதிபலித்தன. அவள் இல்லை என்று முணுமுணுத்த விதம், அவன் அவளுக்கு அருகில் நிற்கவில்லை என்றால் நிச்சயம் அவனுக்கு கேட்டிருக்காது. அவளது பதிலை கேட்டு அவனது உதடுகள் புன்னகையாக வளைந்தன. அடுத்த கணம் இருவரின் உடல்கள் ஒன்றோடொன்று அழுத்த, அவனது உதடுகள் அவளது உதடுகளில் பதிந்தன.

அவளது வெற்று இடுப்பைச் சுற்றி தன் கையை வைத்து மென்மையாக வருடி லேசாக கிள்ளியதும் அவள் மூச்சிரைத்தாள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கேஷவ் முத்தத்தை ஆழப்படுத்தினான். அவன் முத்தமிடுவதை பின்பற்றி மைராவும்  அவனை முத்தமிட்டாள்.

கேஷவ் அவளை வேகமாகத் தூக்கி டிரெஸ்ஸிங் டேபிளில் உட்கார வைத்து முத்தமிட்டுக் கொண்டே அவளது வெற்று வயிற்றில் தன் விரல்களால் விளையாடி கொண்டிருந்தான். அவளது காற்றின் தேவையை உணர்ந்த பின்னர் இருவரும் பின்வாங்க, மைரா ஆக்சிஜனுக்காக மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள். கண்களை மூடிக்கொண்டு, முகம் சிவந்து, உதடுகள் லேசாக வீங்கி, அவன் சாதித்த அழகு காட்சியாக அவள் தோற்றமளித்தாள்.

அவளது உதடுகளின் ஓரத்தில் முத்தமிட்டு அவள் நாபியில் அவன் விரல் பட்டதும், “ கேஷவ்வ்வ்வ்வ் “ என்று மைராவும், “ மைரா “ என்று கேஷவும் ஒரே நேரத்தில் தங்கள் பெயரை முனக, கேஷவின் முகம் திருப்தியில் புன்னகையுடன் பிரகாசித்தது. மைரா அவன் மார்பில் சாய்ந்து வெட்கத்தில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“ என் பேரு இவ்ளோ செக்ஸியா இருக்கும்னு நீ இப்படி முனகுற வரை தெரியல அம்மு. நீ ரொம்ப அழகா இருக்க, என்னால உன்ன நாள் முழுக்க முத்தம் கொடுத்தா கூட எனக்கு போதுமானதா இருக்காது “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவனைத் தள்ளிவிட்டு ஓட முயன்றாள், ஆனால் அவன் அவள் கையைப் பிடித்து பின்னால் இருந்து கட்டிப்பிடித்தான்.

“ நான் உன்ன கட்டிப்பிடிக்குறது உனக்கு புடிச்சு இருக்கா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா ஆம் என்று தலையை அசைக்க, உடனே கேஷவ் அவள் கழுத்து எலும்பில் ஒரு முத்தம் வைத்தான்.

“ நான் உன்ன கிஸ் பண்றது புடிச்சு இருக்கா ? “ என்று கேஷவ் மீண்டும் கேட்க, மறுபடியும் மைரா தலையை அசைத்தாள். கேஷவ்,  அவள் கழுத்தில் இருந்த தாலியை வருடிக் கொண்டே சென்று  அவள் மார்பை அடையும் முன் நிறுத்திவிட்டான்.

“ நாம் மறுபடியும் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி நீ போய் டிரஸ் மாத்து, நான் என் கட்டுப்பாட்ட இழக்குற விளிம்புல இருக்கேன் “ என்று சொல்லி கேஷவ் அவளை தன் பிடியிலிருந்து விடுவித்தான். மைரா பாத்ரூமுக்கு செல்ல எத்தனித்தாள் ஆனால் கேஷவ் அவளை அழைத்ததும் சட்டென நின்றாள்.

“ மாத்துறதுக்கு நீ டிரஸ் எடுக்கலையே, இல்ல எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்ல “ என்று கேஷவ் கிண்டல் செய்ததும், மைரா அவனை படுக்கையில் தள்ளிவிட்டு கையில் கிடைத்த ஏதோ ஒரு உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றாள். கேஷவ் அறையில் உடை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுத்து மைரா திரும்பி வருவதற்காக காத்திருந்தான் ஆனால் அவள் பாத்ரூம் கண்ணாடியில் தன் உதடுகளையும், கன்னங்களையும் பார்ப்பதில் மும்முரமாக இருந்தாள்.

“ எவ்ளோ நேரம் உதடும், கன்னமும் இப்படி சிவந்து இருக்கும் ? “ என்று தனக்குத்தானே கேட்டவள், தன் இடுப்பைத் தொட்டு அவன் ஸ்பரிசத்தை உணர்ந்து கண்களை மூடினாள்.

“ எனக்கு என்ன ஆகுது ? நான் ஏன் அவர்கிட்ட என்ன இழந்துட்டு இருக்கேன் ? கல்யாணம் ஆன எல்லாருக்கும் இப்படி தான் ஆகுமா ?  அடுத்து என்ன நடக்கும்? அவர் என்ன மறுபடியும் கிஸ் பண்ணுவாரா ? அவர் என்ன கிஸ் பண்ண நான் விரும்புறேனா ? “ என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் உதடுகள் புன்னகையில் துடித்தன, அவள் உடதட்டை கடிக்க முயன்றாள், ஆனால் அது மீண்டும் அவன் முத்தமிட்ட  விதத்தை நினைவூட்டியது.

“ அவர் உன்ன கூப்பிடுறதுக்குள்ள வெளிய போகலாம். அவர் உன் புருஷன், உனக்கும் அவர் கிஸ் பண்ணது புடிச்சு அவர் கிட்ட ஒத்துக்கவும் செஞ்ச. நாங்க எங்க வாழ்க்கையோட அடுத்த கட்டத்துல அடியெடுத்து வெச்சுட்டோமா ? நீங்க என் மனச ஆக்கிரமிக்குறீங்க கெச்ச…. இல்ல இல்ல. கேஷவ் “ என்று சொல்லி அவள் சிரித்துக் கொண்டே இரவு உடையை மாற்றிக் கொண்டாள். நாணத்தை அடக்க கன்னங்களைத் தட்டிக் கொண்டே வெளியே சென்றவள், அவனைப் பார்க்காமலேயே அவனுக்கு முதுகு காட்டி ஒரு பக்கமாகப் படுத்துக் கொண்டாள்.

கேஷவ் புன்னகையை அடக்கிக்கொண்டு அவள் பக்கம் திரும்பி,  தலையணையை இழுத்து அவளுக்கு இடம் கொடுத்து தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

“ தூங்குன அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா அம்மு ? “ என்று கேஷவ் கேட்க, மைரா அவன் பக்கம் திரும்பி இல்லை என்பது போல் தலையை அசைத்தாள்.

“  30 நிமிஷம் கழிச்சு நீ பக்கம் உருண்டு வந்து என் கையில, இல்ல என் தலையணையில தலை வச்சு படுத்து தூங்குவ, கல்யாணம் ஆன முதல் நாள்ல இருந்தே இப்படி நடக்குது.” என்று கேஷவ் சொன்னதும், “ பொய் சொல்லாதீங்க, நான் தூக்கத்துல நகர மாட்டேன் ஆனா நீங்க விரும்பினா வெளிப்படையா என்ன கூப்பிடலாம் “ என்று மைரா கூறினாள்.

கேஷவ் தலையணையில் கையை நீட்டி அவளைப் பார்த்ததும், படுக்கையின் மீது பார்வையை செலுத்தியபடி மைரா மெதுவாக அவனருகில் நகர்ந்து அவன் தோளில் தன் தலையை வைத்தாள். கேஷவ் அவள் கையை பிடித்து தன் இடுப்பில் சுற்றி வளைத்து அவளை அருகில் இழுத்து அவள் இடுப்பில் கை போட்டான்.

“ நீ தினமும் இப்படித் தான் தூங்குவ, அப்புறம் நீ தூங்கும் போது நான் உன்ன கிஸ் பண்ண மாட்டேன் அதனால பயப்படாத. குறைந்தபட்சம் உன் நெத்தியில முத்தம் கொடுப்பேன் வேற எதுவும் செய்ய மாட்டேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டதும், “ கிஸ் பண்ணீங்களா ? “ என்று மைரா ஆச்சரியமாக கேட்டாள். 

கேஷவ் ஆம் என்று தலையை அசைத்து அவள் நெற்றியில் தன் உதடுகளால் சிறிது நேரம் பதித்தான். அந்த உணர்ந்த மைராவுக்கு ஒரு சுகமான ஆறுதல் கொடுத்ததும் அவள், அவன் மார்பின் மேல் டி ஷர்ட்டை தடவினாள்.

“ இன்னிக்கு தான் முதன்முறையா என்ன பெயர் சொல்லி கூப்பிட்டு இருக்க அம்மு, இல்ல..இல்ல..என் பெயர சொல்லி முனகி இருக்க. என்ன ஒரு முறை பெயர் சொல்லி கூப்பிடு அம்மு “ என்று கேஷவ் கேட்டதும், மைரா மறுத்து தலையை ஆட்ட, கேஷவ் கட்டை விரலால் அவள் உதடுகளை வருடி, “ நீ என் பெயர் சொல்லி கூப்பிட நான் உன்ன கிஸ் பண்ணனுமா ? “ என்று கேட்டான்.

“ என்ன கிண்டல் செய்றத நிறுத்துங்க கெட்சப் “ என்று சொல்லி அவள் மறுபக்கம் திரும்ப, கேஷவ் அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.

“ நீ என்ன கெட்சப் சொல்லி கூப்பிடும் போது எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நாம ரொமான்ஸ் பண்ணும் போது இல்ல உனக்கு என்ன கிஸ் பண்ண தோணும் போது என்ன பெயர் சொல்லி கூப்பிடு, நானும் அதே மாதிரி செய்வேன், என்ன சரியா ? “ என்று கேஷவ் கேட்டான். 

“ அப்போ நீங்க என்ன மறுபடியும் கிஸ் பண்ணுவீங்களா ? “ என்று மைரா கேட்க, கேஷ்வ் அவளை தன் பக்கம் திருப்பி அவள் தலை முடியை விரல்களால் கோதினான்.

“ ஏன் உனக்கு வேணாமா ? என்ன மாதிரியே உனக்கும் ஆச இருந்தா மட்டும் தான் நான் கிஸ் பண்ணுவேன். நான் உன்ன  பெயர் சொல்லி கூப்பிடும் போது நீ பதில் சொல்லாம இருந்தா அப்போ உனக்கு விருப்பம் இல்லனு நான் உன்ன கிஸ் பண்ண மாட்டேன் அது மட்டும் இல்ல அதுக்கு அப்புறம் நீ ஒரு முறை மறுத்தா கூட, நீயா முதல் தொடங்குற வரை நான் வெயிட் பண்ணுவேன். சரியா அம்மு ? “ என்று கேஷவ் கூறினான். 

“ சரி, ஆனா எனக்கு கிஸ் பண்ண தெரியாது. இன்னும் சொல்ல போனா நீங்க தான் என்னோட முதல் முத்தம் “ என்று மைரா பதில் சொல்ல, “ நீயும் எனக்கு ஃபர்ஸ்ட்… மைரா “ என்று கேஷவ் புன்னகையோடு சொன்னான்.

அவன் தன் பெயரைக் கூப்பிடுவதைக் கேட்டு மைரா முகம் சிவந்தாள் ஆனால் கேஷவ் அவளது பதிலுக்காகக் காத்திருந்தான்.

“ கேஷவ்வ்வ்வ் “ என்று அவள் குரல் கிசுகிசுப்பாக வெளிப்பட்டதும், கேஷவ் அவள் முகத்தை இறுக்கி அணைத்து முத்தமிட ஆரம்பித்தான். பின்னர் அவள் நெற்றியை முத்தமிட்டு அவள் தலை முடியை கோத ஆரம்பித்தான்.

“ இப்போ நல்லா தூங்கு அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “ குட் நைட் கெட்சப் “ என்றாள் மைரா.

*******************************

முன்னோட்டம்:

“ அய்யோ ! ஒரு அரக்கன் மாதிரி அவ்ளோ ஆக்ரோஷமா கிஸ் பண்றாரு. ஒவ்வொரு முறையும் அவர் என்ன கிஸ் பண்ணும் போது முதல் முறை கிஸ் பண்ற மாதிரியே இருக்கு. மைரா, அவர் உனக்கு கெடச்சதுல நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவர் உன்ன கிஸ் பண்றதே உன் உடம்புல இருக்க அணுக்கள் எல்லாம் இப்படி ஆசையில எரியுதே அப்போ மத்த விஷயம் எல்லாம் பண்ணா என்னவாகும் ? “

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:25 pm

[…] உன்ன கிஸ் பண்றது புடிச்சு இருக்கா ? […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:53 pm

[…] 38.உன்ன கிஸ் பண்றது புடிச்சு இருக்கா ? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!