அர்ச்சனா இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ரோஷினி அழுது கொண்டே உள்ளே நுழைந்தாள். ஹாலுக்கு வந்த அவளது பெற்றோர் அர்ச்சனா, மதன், க்ரிஷ் ஆகியோர் அவள் கதறி அழுததைப் பார்த்தனர். க்ரிஷ் சலிப்புடன் அவளது பெற்றோர் அவளை ஆறுதல்படுத்த முயற்சிப்பதைப் பார்த்தான்.
“ என்ன ஆச்சு ரோஷினி? “ என்று மதன் கேட்டதும், “ என்ன வேலைய விட்டு அனுப்பிட்டாங்க “ என்றாள் ரோஷினி.
ரோஷினி வேலையில் இருந்து நீக்கப்பட்டதைக் கேட்டு க்ரிஷ் மகிழ்ச்சியடைந்தான், மற்றவர்கள் அவள் அதே வார்த்தைகளை மீண்டும் சொல்லி அழுவதைப் பார்த்தனர்.
“ ரோஷினி, என்ன நடந்துச்சு, ஏன் திடீர்னு உன்ன வேலைய விட்டு அனுப்பினாங்க ? “ என்று ரோஷினியின் தந்தை அவளிடம் கேட்டார்.
“ கொஞ்ச நாளுக்கு முன்னாடி நான் வேலை செஞ்சிட்டு இருந்த முக்கியமான ப்ராஜெக்ட் காணாம போயிடுச்சு. இதுவர நான் நல்லா வேலை பண்ண காரணத்தால என்ன எச்சரிக்க பண்ணி மன்னிச்சு விட்டாங்க ஆனா இன்னைக்கு சில ரகசிய தகவல் எதிரி கம்பனிக்கு போயிருக்கு, அது என்னோட லேப்டாப்புல இருந்து தான் போய் இருக்குனு சொல்லி ஐடி குழு கண்டுபுடிச்சாங்க ஆனா நான் அப்படி எதுவும் செய்யல. உடனே என்ன வேலைய விட்டு அனுப்பிட்டாங்க “ என்று சொல்லி ரோஷினி அழுதாள்.
“ உனக்கு தெரியாம அது எப்படி நடந்திருக்கும் ? “ என்று க்ரிஷ் கேட்க, “ வாய மூடு க்ரிஷ் “ என்று கத்தினாள் ரோஷினி.
“ அவன் கேட்குறது சரி தான் ரோஷினி. அது எப்படி சாத்தியம் ஆகும் ? “ என்று மதனும் கேட்டார்.
“ உன்னோட கம்பெனி உனக்கு எதிரா புகார் செய்ய அதிக வாய்ப்பு இருக்கு, இது ஒரு தீவிரமான பிரச்சினையா இருந்தா உன்ன அரெஸ்ட் பண்ண கூட வாய்ப்பு இருக்கு. இப்போதைக்கு நீ சென்னைய விட்டு போறது தான் நல்லது “ என்று க்ரிஷ் கூறினான்.
அவன் சொன்னதை கேட்டதும், “ இல்ல இல்ல, அவள அரெஸ்ட் பண்ண கூடாது. ரோஷினி நாம வீட்டுக்குப் போகலாம். நீ சென்னையில தங்கியிருந்து எல்லாத்தையும் இழந்தது எல்லாம் போதும்” என்று ரோஷினியின் அம்மா சொன்னார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, “ நான் உடனே டிக்கெட் புக் பண்றேன், அத்த நீங்க சாமான்களை பேக் பண்ண ஹெல்ப் பண்ணுங்க “ என்று க்ரிஷ் கூறினான்.
ரோஷினி அவனை முறைத்துவிட்டு புறங்கையால் கண்ணீரைத் துடைத்தபடி அவனை நோக்கி நடந்தாள்.
“ என்னை ஒழிச்சுக்கட்ட சூழ்நிலைய உனக்கு சாதகமா பயன்படுத்துறியா ? “ என்று ரோஷினி கேட்டதும், “ ரோஷினி, உன் வாழ்க்கையில நடக்குற எல்லாத்துக்கும் அவன குறை சொல்லாத “ என்றார் அர்ச்சனா.
“ ரோஷினி, வா கிளம்பலாம். நீ இனி எந்த பிரச்சனையில சிக்க வேணாம், நாங்க அத விரும்பல “ என்றார் ரோஷினியின் அப்பா.
“ இப்ப நீ பெங்களூர்ல வேலை தேடுறது தான் நல்லது. சென்னையில தங்குறது உனக்கு ஆபத்தா இருக்கும். உனக்கு புரியும்னு நம்புறேன் “ என்றான் க்ரிஷ். அதற்கு ரோஷினி உடனே, “ அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம், கொஞ்ச நாள் வீட்ல இருந்துட்டு அப்புறம் வேலை தேடுறேன் “ என்றாள்.
ரோஷினியின் வார்த்தையை கேட்ட அர்ச்சனா, “ ஏன் எப்பவும் எல்லா முடிவையும் அவசரப்பட்டு எடுக்குற ரோஷினி? உன் அப்பா, அம்மா கூட போய் கொஞ்ச நாள் இரு. இத பத்தி அப்புறம் பேசுவோம் “ என்று அவளிடம் கூறினார்.
ரோஷினியின் அம்மா அவளது பொருட்களை பேக் செய்தார், க்ரிஷ் அவர்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் அவர்கள் புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு க்ரிஷ் தன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
“ அவ ஏதாவது செய்றதுக்கு முன்னாடி நான் ஒரு நிரந்தர தீர்வு கண்டுபிடிக்கனும் “ என்று நினைத்துக் கொண்டே அவன் சுவரை நோக்கித் திரும்பி, அவனது குடும்பத்தின் புகைப்படத்தைப் பார்த்தான், அதில் அனைவரும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.
காலையில் கண் விழித்த கேஷவ், மைரா தன் வெற்று உடலை அவனுடன் அழுத்தியபடி அவனை அணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கி அவள் நெற்றியை வருடினான். போர்வையை மார்பு வரை மூடிக்கொண்டு, அவர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு மிக நெருக்கமான காட்சியாக இருந்தது. அவளை தொந்தரவு செய்யாமல் கீழே இறங்கி உடை அணிந்து கொண்டு ஒரு மணி நேரம் கழித்து காலை உணவை அறைக்கு அனுப்பும்படி ஆர்டர் செய்தான். மேலும் குளியல் தொட்டியில் சூடான நீர் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை நிரப்பி, அவள் எழுந்தவுடன் குளிக்க துண்டு வைத்தான். அறைக்குத் திரும்பியவன் அவள் அருகில் அமர்ந்து அவள் விழிப்பதற்காகக் காத்திருந்தான்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து மைரா தூக்கத்தில் அசைவதை கண்டு அவள் கன்னத்தை வருடினான். மைரா கண்களைத் திறந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள், அவள் கன்னத்தைக் பற்றிக் கொண்டிருந்த அவனது உள்ளங்கையில் முத்தமிட்டாள்.
கேஷவ் அவள் நெற்றியில் முத்தமிட்ட பிறகு, மைரா உட்கார முயன்ற போது அவன் அவளைத் தடுத்து நிறுத்தி, போர்வையை சுற்றிக்கொண்டு பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றான்.
“ உனக்காக எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன் அம்மு. உன்னை தயார் செய்ய சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். சத்தியமா எந்த குறும்பும் செய்ய மாட்டேன், ஏன்னா நீ ஏற்கனவே களைப்பா, வலியோட இருப்பனு எனக்கு தெரியும். என்ன நான் உன்ன குளிப்பாட்டி ரெடி பண்ணட்டுமா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, நான் உங்கள கூப்பிடுறேன் “ என்று மைரா பதில் சொன்னாள்.
கேஷவ் சரி என்று சொல்லி பாத்ரூமுக்கு வெளியே காத்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து அவள் கூப்பிடும் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்து அவளை தூக்கிக் கொண்டு தொட்டிக்கு சென்றான். அவள் உடலை சுற்றி இருந்த போர்வையை கழற்றி அவளைத் தொட்டியில் உட்கார வைக்க, வெதுவெதுப்பான நீரில் தன் உடல் தளர்வதை உணர்ந்த மைரா கண்களை மூடினாள். கேஷவ் அவளது கைகள், கால்கள் மற்றும் தோள்பட்டைக்கு மென்மையாக மசாஜ் செய்தான், பின்னர் அவன் அவளை ஷவர் அறைக்கு அழைத்துச் சென்று அவளை குளிக்க வைத்து, உடலைத் துடைத்து மீண்டும் அறைக்குத் தூக்கிச் சென்றான். அவளைத் தன் சட்டைகளில் ஒன்றைப் அணிய செய்து, அவள் கூந்தலைத் துடைத்தான்.
“ இன்னைக்கு நாம ரூம்ல இருக்கலாம், நீ நல்லா ரெஸ்ட் எடு. நாளைக்கு நீ விரும்புற இடத்துக்கு நாம போகலாம் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ நீங்க எனக்கு அதிக செல்லம், அக்கறை கொடுத்து கெடுக்குறீங்க கெட்சப் “ என்றாள் மைரா.
“ என் வாழ்நாள் முழுக்க இத சந்தோஷமா செய்வேன் அம்மு “ என்று புன்னகையோடு சொல்லி கேஷவ் தயாரான பிறகு அவர்கள் ஒன்றாக காலை உணவை சாப்பிட்டார்கள்.
“ நான் மருந்து எதுவும் வாங்கித் தரட்டுமா? “ என்று அவன் கேட்க, இல்ல, நீங்க என்ன நல்லா பார்த்துக்கிட்டீங்க, இப்போ குளிச்ச அப்புறம் நல்லா இருக்கேன் “ என்று பதில் சொன்னாள்.
“ நமக்கு முதல் இரவு அதனால நான் மென்மையா இருந்தேன், ஆனா இனி அப்படி இருப்பேன்னு உறுதியா சொல்ல முடியாது. அது இருக்கட்டும் எப்படி இருந்துச்சு, உனக்கு புடிச்சுதா சொல்லு “ என்று கேஷவ் கேட்க, “ வாயை மூடுங்க கெட்சப். என்ன கிண்டல் செய்யாதீங்க “ என்று அவன் முகத்தை தள்ளி விட்டாள்.
“ என்ன ? உனக்கு எப்படி இருந்துச்சுனு தெரிஞ்சிக்க நான் ஆர்வமா இருக்கேன் அம்மு, அடுத்த முறை ஏதாவது மாத்தணும் இல்ல இன்னும் நல்லா செய்யணுமானு எனக்கு எப்படி தெரியும் ? “ என்று கேஷவ் கூச்சமின்றி கேட்டான்.
“ அப்படியா ? கேட்க அவ்ளோ ஆர்வமா இருக்கா ? அப்போ கேளுங்க. உங்களுக்கு வயசாயிடுச்சு கஷ்டப்படுவீங்கன்னு நினைச்சேன் ஆனா பரவாயில்ல நல்லாவே இருந்துச்சு கேஷவ் “ என்று சொல்லி மைரா கூறினாள்.
“ ஒரு உண்மையைச் சொல்றேன் கேளு, ஒருத்தருக்கு வயசு அதிமாகும் போது அவங்களோட ஆசையும் அதிமாகுமாம் அதனால என்னோட செயல்திறன குறைச்சு மதிப்பிடாத இல்லனா அடுத்த முறை நீ கொஞ்ச நாள் படுக்கைய விட்டு எழுந்திருக்க மாட்ட. நான் உனக்கு படுக்கையில சேவை செய்வேன் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா முகம் சிவந்து அவனிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
“ உன்னோட வெட்கம் எனக்கு தேவையான பதில் கொடுத்துடுச்சு அம்மு “ என்று கேஷவ் சொன்னான் பிறகு இருவரும் கட்டிலுக்கு நகர்ந்தனர். கேஷவ் அவள் மடியில் தலை வைத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து படுத்திருந்தான்.
“ இத்தன வருஷம் பிரம்மச்சாரியா இருந்த நீங்க எப்படி இந்த மாதிரி இருக்கீங்கனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. உண்மையிலேயே நேத்து தான் உங்களுக்கு முதல் முறையானு எனக்கு ஆச்சரியமா இருக்கு “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ அம்மு, என்ன ஒரு நாளும் சந்தேகப்படாத. சத்தியமா நீ தான் எனக்கு எல்லாத்துலையும் முதல் அனுபவம். நான் எந்த பொண்ணு கூடவும் பழகுனதே இல்ல. ஒரு அழகான, ஸ்பெஷலான பொண்ணு என் வாழ்க்கையில வந்து என்ன முழுசா புரட்டி போடுற வரை என் வேலையில மட்டும் தான் கவனமா இருந்தேன் “ என்று கேஷவ் சத்தியம் செய்து விளக்கம் கூறினான்.
மைரா அவனது தலைமுடியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், அவள் முந்தைய இரவை நினைத்து வெட்கப்படுவதைப் பார்ப்பது அவனுக்கு அழகாக இருந்தது. கேஷவ் அவளைப் பார்த்து சிரித்தான், ஆனால் சட்டென அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றி ஒரு அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தான்.
“ என்ன ஆச்சு ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள்.
“ அம்மு, நான் நேத்து நைட்டு காண்டம் பயன்ப்படுத்தல. நான் உனக்காக மாத்திரை வாங்கட்டுமா இல்ல டாக்டர் கிட்ட போகலாமா ? “ என்று கேஷவ் கேட்க, “ நான் ஏன் மாத்திரை சாப்பிடனும்னு நினைக்குறீங்க ? “ என்று கேட்டாள் மைரா.
“ நீ அப்பாவி இல்லனு நான் நெனச்சேன் அம்மு. நீ மாத்திரை சாப்பிடலனா என்ன ஆகும் தெரியாதா ? சீக்கிரமே லயா நம்ம கூட இருக்க வாய்ப்பு இருக்கும் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவனைத் தள்ளிவிட்டு உள்ளங்கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். கேஷவ் அவள் கைகளை விலக்கி அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்து அவள் இடுப்பில் கைகளை சுற்றி அனைத்துக் கொண்டான்.
“ கனவு பத்தி என்கிட்ட சொல்ல நினைக்குறியா ? “ என்று கேஷவ் மெல்ல கேட்டான்.
“ நான் அத பத்தி சொல்லுவேன் ஆனா நீங்க என்ன கிண்டல் செய்ய கூடாது கெட்சப். எனக்கு சத்தியம் பண்ணுங்க “ என்று மைரா பதிலுக்கு கேட்டாள்.
“ அந்தக் கனவு நம்ம வாழ்க்கை, நம்ம எதிர்காலம். நம்ம வருங்காலத்த நான் ஒருநாளும் கிண்டல் செய்ய மாட்டேன் அம்மு. இது நீ கண்ட ரொம்ப அழகான கனவா இருக்கும்னு எனக்குத் தெரியும், அத பத்தி நீ எப்படி உணர்ந்தனு தெரிஞ்சிக்க நினைக்குறேன் “ என்று கேஷவ் அன்பாக கூறினான்.
“ ரொம்ப ஸ்பெஷல் உணர்வு அது கெட்சப். அது ஒரு கனவு மாதிரியே தோணல. நம்ம லயா ரொம்ப அழகா இருந்தா, அவளுக்கு உங்கள மாதிரி பழுப்பு நிற கண்கள் இருந்துச்சு, என்ன மாதிரி கொழுகொழுன்னு இருந்தா. அவ என்கூட படுக்கையில இருந்தா, நீங்க எங்களுக்காக பால் கொண்டு வந்து அவள உங்க மடியில உட்கார வெச்சு பால் குடிக்க வெச்சீங்க. நாங்க ரெண்டு பேரும் உங்க தோள் மேல சாய்ஞ்சு படுத்தோம். அப்புறம் நான் கர்ப்பமாவும் இருந்தேன். நானும், லயாவும் அது ஆண் குழந்தையாக இருக்கனும்னு விரும்பினோம், அப்போ தான் நம்ம டீம் சமமா இருக்கும். நீங்க என்னோட வயிற தொட்டு நம்ம குழந்தை கூட பேசிட்டு இருந்தீங்க. அது பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு கெட்சப் “ என்று மைரா தன் கனவை கூறினாள்.
கனவைக் கேட்ட கேஷவுக்கு உடல் சிலிர்த்தது, அவள் அடிவயிற்றை வருடி, கண்களை மூடி அந்தக் காட்சியை இருவரும் மனதில் கற்பனை செய்து கொண்டிருந்தனர்.
“ நாம சந்தோஷமான குட்டி குடும்பம் அம்மு “ என்று கேஷவ் சொன்னதும், “ நான் மாத்திரை சாப்பிட்டா அந்த கனவு நனவாகாது. உங்களுக்கு வேணாமா ? “ என்று மைரா கேட்டாள்.
“ கண்டிப்பா எனக்கு நம்ம குடும்பம் வேணும் அம்மு. இது ஒரு கேள்வியா ? ஆனா நீ தயாரா இருக்கியா ? நீ இன்னும் சின்ன பொண்ணு தான், குழந்த பிறந்தா உன் உடம்புல நிறைய மாற்றங்கள் ஏற்படும். எனக்கு அது எல்லாமே புடிக்கும், இருந்தாலும் இதுல உன்னோட விருப்பம் என்னனு நான் தெரிஞ்சிக்க விரும்புறேன் “ என்று கேஷவ் அவளிடம் பொறுமையாக கேட்டான்.
“ இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் எனக்கு 25 வயசு ஆயிடும்னு உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புறேன், அது ஒன்னும் சின்ன வயசு இல்ல. அது மட்டும் இல்ல, பிளான் பண்ணி குழந்த பெத்துக்க நினைக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. நாம பிளான் எதுவும் செய்ய வேணாம். அதுவா நடக்கட்டும், நம்ம குழந்த எனக்குள்ள வளர்றது தெரிஞ்சுக்கும் போது நாம சந்தோஷப்படுவோம் “ என்று மைரா அவனிடம் சொன்னாள்.
அதை கேட்டு புன்னகைத்த கேஷவ், “ லயா என்ன டாடி சொல்லி கூப்பிட்டாளா இல்ல அப்பா சொன்னாளா ? “ என்று கேட்டான்.
“ அவ உங்கள அப்பா சொல்லி தான் கூப்பிட்டா. ரொம்ப ரொம்ப அழகா இருந்தா ஆனா அந்த பல்லி அலறி கனவ கெடுத்துட்டா “ என்று சொன்ன மைரா, “ அடக் கடவுளே, நான் அர்ச்சனா அம்மாகிட்ட பேசி என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்கணும் “ என்று சொல்லி அவனை தள்ளிவிட்டு நைட் ஸ்டாண்டில் இருந்த மொபைலை எடுத்து உடனே அர்ச்சனாவை அழைத்தாள்.
கேஷவ் சட்டையை தூக்கி எறிந்துவிட்டு குப்புற படுத்து மொபைலை புரட்டிக் கொண்டிருந்தான். அவள் அழைப்பை முடிக்கும் வரை அவன் காத்திருந்தான், 30 நிமிடங்கள் கழித்து மைரா அழைப்பை துண்டித்து, கேஷவ் அவளைப் பார்ப்பதைக் கண்டாள்.
“ க்ரிஷ், ரோஷினிய பெங்களூருக்கு அனுப்பிட்டான் சொன்னாங்க “ என்று மைரா சொல்ல, “ அவனுக்கும், நமக்கும் நல்லது. இப்போதைக்கு அவன் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும் “ என்று பதில் சொன்ன கேஷவ், அவளை தன் அருகில் இழுக்க, தன் மேலாடை விளிம்பில் விளையாடிக் கொண்டிருந்த அவனது சூடான பார்வையை பார்த்து மைரா புருவங்களை உயர்த்தினாள்.
“ ரேஸர் செட் எப்போ வாங்கின ? “ என்று கேஷவ் புன்னகையை அடக்கி கொண்டு கேட்டதும், “ உங்க கண்ணுக்கு தெரியாம எதுவும் இருக்குமா ? அய்யோ கடவுளே, நீங்க பார்த்திருக்க மாட்டீங்கன்னு நெனச்சேன் “ என்றாள் மைரா.
“ என் கண்ணுல இருந்து எதுவும் தப்பாது அதுவும் நேத்து நைட்டு இந்த பேரழக பார்த்த அப்புறம் நிச்சயம் எதுவும் தப்பாது “ என்று கேஷவ் பெருமையோடு பதில் சொல்ல, “ எவ்ளோ அழுக்கா பேசுறீங்க கெட்சப், கொஞ்சமாச்சும் வெட்கப்படுங்க. நாம கொஞ்சம் ஷாப்பிங் போகலாம், நான் ரூம் உள்ள அடைஞ்சு இருக்க விரும்பல “ என்று மைரா சொன்னாள்.
அதற்கு கேஷவ் உடனே “ வா போகலாம், நாளைக்கு உன்னை வெளியே கூட்டிட்டு போறேன்னு நான் கேரண்டி சொல்ல மாட்டேன். நாளைக்கு நாம படுக்கையில மட்டும் தான் இருப்போம். சாப்பாடு டெலிவரி செய்ய மட்டும் தான் கதவு திறக்கப்படும். நான் உன்ன முழுசா ரசிக்க போறேன் அதனால எனக்குள்ள இருக்க மிருகத்தை கையாள தயாரா இரு “ என்று சொல்லி கேஷவ் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அதற்கு மைரா அவனை தலையணையால் அடித்தாள்.
இருவரும் தயாராகி, சூரிச் நகரத்தை சுற்றிப் பார்க்கவும், குடும்பத்தினருக்கு ஷாப்பிங் செய்யவும் முடிவு செய்தனர். கேஷவ் அவளை ஒரு நகைக் கடைக்குள் அழைத்து சென்றான். ஜோடி மோதிரங்களை தேர்வு செய்து அதில் முந்தைய நாளின் தேதியை பொறிக்க சொன்னான்.
“ நம்ம வாழ்க்கையோட மறக்க முடியாத நாள், அத ஞாபகப்படுத்த தான் இந்த பரிசு “ என்று சொல்லி அவன் மோதிரத்தை அவள் விரலில் அணிவிக்க, அதில் இருந்த தேதியைப் பார்த்து மைரா புன்னகைத்தாள்.
*********************************
முன்னோட்டம் :
“ நீங்க என்ன பிளான் பண்றீங்க கெட்சப் ? எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு அதனால என்ன கீழே இறக்கி விட்டு வெளிய போங்க. நான் கொஞ்சம் பொறுமையா குளிச்சிட்டு வரேன் “

1 comment
[…] 54.எந்த குறும்பும் செய்ய மாட்டேன் […]