பெங்களூரில், ரோஷினி தனது அறையில் தன்னை பூட்டிக் கொண்டாள். கண்ணாடி முன் நின்று அதில் ஒட்டியிருந்த க்ரிஷ், கேஷவ் மற்றும் மைரா ஆகியோரின் புகைப்படங்களைப் பார்த்தவள், அவர்கள் முகத்தைத் தொட்டு ஒரு வஞ்சகப் புன்னகையை உதிர்த்தாள். மேஜையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து அவர்கள் முகத்தில் ஒரு குறுக்குக் குறியை வரைந்தாள்.
க்ரிஷின் போட்டோவைக் கிழித்து காலடியில் நசுக்கினாள்.
“ உன்னால என்ன மிஞ்ச முடியாது க்ரிஷ். என்னோட பல வருஷ திட்டம் அப்புறம் கடின உழைப்ப அப்படியே வீணா போக நான் அனுமதிக்க மாட்டேன். க்ரிஷ் உன்ன நெனச்சு நீ பயப்படாம இருக்கலாம் ஆனா உன் லவர் மைராவோட நல்ல பெயருக்கு ஆபத்து வந்தா என் முன்னாடி மண்டியிட்டு விழ கூட மொத்த குடும்பமும் யோசிக்க மாட்டீங்க. என் வலையில் விழுந்து நீ பெரிய தப்பு பண்ணிட்ட “ என்று சொன்ன ரோஷினி தனது லேப்டாப்பை எடுத்து க்ரிஷ் மற்றும் அவளது படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்த ஃபோல்டரைத் திறந்தாள். அவள் சில புகைப்படங்களையும் அவர்கள் அந்தரங்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட சில வீடியோவையும் தேர்ந்தெடுத்து அதில் சில மாற்றங்களைச் செய்தாள்.
அவளது அம்மா பல முறை கதவைத் தட்டினார், ஆனால் அவள் யாரையும் அனுமதிக்க மறுத்து, அவள் வேலையைப் பார்த்தாள்.
“ பாவம் க்ரிஷ் இந்த போட்டோ, வீடியோ பார்த்து நொந்து போவான். இப்போ நீ என் தாளத்துக்கு ஆட போற பொம்மையா இருக்க போற. நான் எத பத்தியும் கவலைப்பட மாட்டேன், என்னோட சந்தோஷம், கெளரவம் அப்புறம் ஈகோ மட்டும் தான் முக்கியம் “ என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு க்ரிஷுக்கு ஒரு போட்டோவை அனுப்பிவிட்டு அவன் அழைப்புக்காக கட்டிலில் படுத்து காத்திருந்தாள்.
ரோஷினியிடமிருந்து ஒரு அறிவிப்பைப் பெற்ற போது க்ரிஷ் தனது அப்பாவுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை மனதுக்குள் திட்டிவிட்டு அந்த தகவல் என்னவென்று பார்க்க அதைத் திறந்ததும், அதிர்ச்சியில் அவன் கையிலிருந்த மொபைல் கீழே விழுந்தது.
“ க்ரிஷ், என்ன ஆச்சு? “ என்று மதன் கேட்க, க்ரிஷுக்கு பயந்து உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டியவன் மொபைலை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று கதவை சாத்தினான்.
அவன் தரையில் சரிந்ததும், அவன் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து, கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. அவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் நம்பருக்கு டயல் செய்ய, ரோஷினி அவன் பெயரைப் பார்த்து சிரித்தபடி அழைப்பை எடுத்தாள்.
“ ஹலோ லவ்வர் பாய் “ என்று ரோஷினி சொல்ல, “ உன்ன மாதிரி மோசமான ஒருத்திய லவ் பண்ணாத தவிர நான் என்ன தப்பு பண்ணேன் ? நீ என் முன்னால இருந்திருந்தா இந்த நொடியே உன்னைக் கொன்றிருப்பேன் “ என்று க்ரிஷ் சீறினான்.
“ உண்மைய சொல்லு க்ரிஷ், நீ நிஜமா என்னை லவ் பண்றியா? உனக்கு என் மேல இருந்தது வெறும் ஈர்ப்பு மட்டும் தான், அத நான் எனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டேன். இப்போ நீ என் கட்டளைய கேட்டு அதன் படி நடந்துக்குவனு நினைக்கிறேன் இல்ல உனக்கு வேற ஒருத்தர் தண்டனையா அனுபவிப்பாங்க “ என்று ரோஷினி மிரட்டியதும், “ என் வாழ்க்கையில நான் உன்ன சந்திச்சு இருக்கவே கூடாது க்கவே கூடாது. உன்ன நான் அவ்ளோ வெறுக்குறேன் “ என்றான் க்ரிஷ்.
“ சரி, உன்னோட உணர்ச்சிவசத்த அடக்கு, இதையெல்லாம் கேட்க எனக்கு இப்போ நேரம் இல்ல. உனக்கு ஒரு வாரம் டைம் தரேன் அதுக்குள்ள நம்ம குடும்பத்துக்கு நாம மறுபடியும் ஒன்னு சேர்ந்த்துட்டோம்னு சொல்லு. நீயே வந்து என்ன கூட்டிட்டு போகணும் “ என்று ரோஷினி அவனுக்கு உத்தரவிட்டாள்.
“ தயவு செஞ்சு என் குடும்பத்த விட்டுடு. நான் உன் வழியில குறுக்க வரவே மாட்டேன், உனக்கு எவ்ளோ பணம் வேணுமோ அத கூட நான் தரேன் “ என்று க்ரிஷ் அவளிடம் கெஞ்சினான்.
“ எனக்கு பணம் தேவைப்பட்டுச்சு, நல்ல நிலையான, வசதியான வாழ்க்கை, அப்புறம் குடும்பத்தோட கவனம் முழுக்க என் மேல இருக்கனும்னு நெனச்சேன் ஆனா இப்போ அது எதுவும் முக்கியம் இல்ல அதனால வாய மூடிக்கிட்டு என்ன மறுபடியும் கூட்டிட்டு போ. இன்னும் மூணு மாசத்துல நாம கல்யாணம் பண்ண தயாரா இருக்குறதா எல்லார்கிட்டயும் சொல்லு “ என்று கத்தினாள்.
“ ரோஷினி, நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு உனக்கு என்ன வேணும்னாலும் தரேன். தயவு செஞ்சு “ என்று க்ரிஷ் சொல்லும் போதே குறுக்கிட்ட ரோஷினி, “ உன்ன கல்யாணம் செய்றது ஆரம்பத்துல இருந்தே என்னோட எண்ணம் இல்ல, என்னோட திட்டத்துலையும் அது இல்ல. உன் டைம் வீணடிக்காத, அப்புறம் எனக்கு எதிரா ஏதாவது செய்ய துணிஞ்ச அப்புறம் உன் குடும்பத்தோட அழிவுக்கு என்ன குறை சொல்லாத “ என்று சொல்லிவிட்டு ரோஷினி அழைப்பை துண்டித்தாள்.
க்ரிஷ் தனது குடும்பத்திற்குள் ஒரு பாம்பைக் கொண்டு வந்ததற்காக தன்னை இடைவிடாமல் அறைந்து கொண்டான்.
“ அவ அனுப்புன போட்டோ போலியானது, ஆனா என்னால நிரூபிக்கவோ இல்ல அதனால ஏற்பட கூடிய சேதத்தையோ தடுக்க முடியாது. அவ கிட்ட இருந்து என் குடும்பத்தை காப்பாத்த நான் ஏதாவது செய்யனும். என் குடும்பத்துக்காக நான் சாகவோ இல்ல அவள கொல்ல கூட செய்வேன். இத ஆரம்பிச்சது நான் தான், இதை எப்படியாவது நானே முடிக்குறேன். அவளோட விளையாட்டை நான் அவளுக்கு எதிரா விளையாட நான் ஏதாவது கண்டுபிடிக்கனும் “ என்று மனதில் நினைத்துக் கொண்டு, ரோஷினி தன் குடும்பத்திற்கு வைத்த பொறியில் இருந்து தப்பிக்க எந்த வழியிலும், எல்லா வழிகளிலும் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஸ்விஸில் மைராவும், கேஷவும் நிறைய ஷாப்பிங் பைகளுடன் தங்கள் அறைக்குத் திரும்பினர், மைரா அறை பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டாள். அவர்கள் பையை கீழே போட்டதும் மைரா தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கேஷவை நோக்கித் திரும்பினாள்.
“ என்ன அப்படி பார்க்குற ? நேத்து நீ என்ன சர்ப்ரைஸ் பண்ண அதனால இன்னைக்கு நான் உன்ன சர்ப்ரைஸ் பண்ண நெனச்சேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ ஷாப்பிங் பண்ணி நான் வியர்வையோட இருக்கேன் கெட்சப் அது மட்டும் இல்ல, நாம இன்னும் சாப்பிடல “ என்று மைரா கூறினாள்.
“ நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். நீ குளிக்க எல்லாம் தயாரா இருக்கு, அதுக்குள்ள டின்னர் ரூமுக்கு வந்துடும். உனக்கு புடிச்சத நீ சாப்பிடு அப்புறம் எனக்கு புடிச்சத நான் சாப்பிடுவேன் “ என்று கேஷவ் அவளை பார்த்து கண்ணடித்து, அவளை பாத்ரூமுக்குள் தூக்கி சென்றான். அங்கு தொட்டியில் ரோஜா இதழ்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் அறை முழுவதும் வைக்கப்பட்டிருந்தன.
“ ஆஹா, நம்ம வீட்டு பாத்ரூம்ல கூட இது மாதிரி இருந்தா நான் நாள் முழுக்க அங்கேயே இருப்பேன் “ என்று மைரா சொன்னதும், “ எனக்கு இருக்க மாதிரி ஆசையெல்லாம் உனக்கும் இருக்குனு எனக்கு தெரியாமே போச்சே “ என்று கேஷவ் ஆச்சரியமாக சொன்னான்.
“ நீங்க என்ன பிளான் பண்றீங்க கெட்சப் ? எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு அதனால என்ன கீழே இறக்கி விட்டு வெளிய போங்க. நான் கொஞ்சம் பொறுமையா குளிச்சிட்டு வரேன் “ என்று மைரா சொல்ல, “ நாம ஏற்கனவே எல்லைய தாண்டியாச்சு அப்புறம் ஏன் இப்படி வெட்கப்படுற ? தனியா குளிக்குறதுல என்ன அழகு இருக்கு ? நீ எவ்ளோ அழகா இருக்கனு சொல்ல உனக்கு நான் தேவ. சரி தானே மைரா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ உங்களுக்கு ரொம்ப தைரியம் ஆயிடுச்சு, அழுக்கு பையனா ஆயிட்டீங்க கேஷவ் “ என்றாள் மைரா.
“ நீ என்ன கேஷவ் சொல்லி கூப்பிடும் போது எனக்கு எப்படி இருக்கு, நீ எனக்கு என்ன செய்றனு தெரியுமா? “ என்று சொல்லி கேஷவ் அவளை நிற்க வைத்ததும், மைரா அவனை மறுபக்கம் திருப்பிவிட்டு தன் ஆடைகளை களைந்து தொட்டிக்குள் அமர்ந்தாள். தண்ணீர் தெறிக்கும் சத்தம் கேட்டு கேஷவ் திரும்பி பார்த்தபோது அவளது துணிகள் தரையில் குவிந்து கிடந்தன.
அவன் அவளுக்கு நேர் எதிரே நின்று அவள் முகத்தையே பார்த்து கொண்டு தன் சட்டை பொத்தான்களை மெதுவாக அவிழ்க்க, அவளது கண்கள் வெட்கமில்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தன. அவன் பேண்ட்டை கழட்டி விட்டு நின்றதும் மைரா தன் உள்ளங்கையால் முகத்தை மூடிக் கொண்டு விரல் இடையே அவனை கண்டாள்.
“ காலையில உன்ன நான் தான் குளிப்பாட்டினேன் ஞாபகம் இருக்கட்டும் “ என்று சொன்ன கேஷவ் அவளது எதிர்வினையைக் கண்டு சிரித்தபடி தொட்டிக்குள் அமர்ந்து மைராவை இழுத்து தன் கால்களுக்கிடையில் உட்கார வைத்தான். மைராவின் கண்கள் அதிர்ச்சியில் விருந்தன.
“ கவலைப்படாத நாம இன்னைக்கு தொட்டியில ஒண்ணும் செய்ய மாட்டோம் “ என்று கேஷவ் அவளை சாந்தப்படுத்தினான்.
அவன் தன்னை கவனித்துக் கொண்ட விதத்தை நினைத்து மைரா புன்னகைத்து அவன் மார்பில் சாய்ந்தாள். தண்ணீர் குளிர்ச்சியாக மாறியதும் அவர்கள் தொட்டியை விட்டு வெளியேறி கேஷவ் ஷவரை ஆன் செய்து அவளை குளிப்பாட்டினான். பதிலுக்கு மைரா தனது உள்ளங்கையை அவன் உடலில் வைத்த போது அவன் முனகி குளித்து முடிக்கும் வரை தன்னை கட்டுபடுத்திக் கொண்டான்.
அவர்கள் ஆடைகளை அணிந்து வெளியே சென்றதும், கேஷவ் கதவைத் திறந்து உணவு ட்ராலியை உள்ளே இழுத்தான்.
அவர்கள் சோபாவில் அமர்ந்து இரவு உணவு சாப்பிட ஆரம்பித்தனர். கேஷவின் பார்வை மைராவின் சிறிய ட்ராலியின் மீது பட்டதும், அவன் இருக்கையின் பின்னால் சாய்ந்து அதைப் பார்த்தான்.
“ அந்த சின்ன ட்ராலியில நீ என்ன எடுத்து வந்துருக்கணு எனக்கு சொல்றியா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நீங்க தான் ஹேக்கர் ஆச்சே, அதுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க முதல்ல அத திறக்க முடியுதா பாருங்க. இது உங்களுக்கு சவால், ஒருவேள உங்களால திறக்க முடியலனா அப்புறம் அதுல என்ன இருக்குனு எப்பவும் நீங்க தெரிஞ்சிக்க முடியாது “ என்று புன்னகையோடு சவால் விட்டாள் மைரா.
கேஷவ் டிராலியை இழுத்து தன் முன் வைத்துவிட்டு, நான்கு இலக்க கடவுக்குறியீடு பூட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“ முதல் முயற்சியில நான் இத திறந்துட்டா உனக்கு வருத்தமா இருக்குமா? “ என்று கேஷவ் கேட்க, மைரா இல்லை என்று தலையை ஆட்டினாள். கேஷவ் அவளையும், அந்த ட்ராலி யையும் ஒரு நிமிடம் பார்த்தான்.
அவன் தனது பிறந்த தேதி மற்றும் அவர்களின் திருமண தேதிக்கு எண்களை அமைத்ததும், மைரா உதட்டைக் கடித்துக் கொண்டு இலக்கங்களைப் பார்க்க, கேஷவ் வெற்றிப் புன்னகையை உதிர்த்துவிட்டு டிராலியைத் திறந்தான். மைரா உள்ளங்கையை வைத்து டிராலியை மூடியபடி அவனை முறைத்தாள்.
“ என்னோட ரகசிய நம்பர் உங்களுக்கு எப்படித் தெரியும்? நானும் நைனாவும் இத செய்த அப்போ நீங்க ஒட்டுக் கேட்டீங்களா? “ என்று மைரா அவனை முறைத்ததும், “ இல்ல அம்மு, லாஜிக் ரொம்ப சிம்பிள். பொதுவா மக்கள் அவங்களுக்கு புடிச்ச ஆளுக்கு அதிக முன்னுரிம கொடுக்கும் போது, அவங்களோட பிறந்த தேதிய தான் பயன்படுத்துவாங்க. இப்போ உனக்கு ரொம்ப புடிச்சு ஆளு நான் தான்னு எனக்கு தெரியும், எனக்கு தான் முன்னுரிம கொடுப்பனு எனக்கு தெரியும் அதனால என் பிறந்த தேதிய தான் இருக்கணும் அப்புறம் அடுத்த ரெண்டு நம்பர் சந்தேகமே இல்லாம நம்ம கல்யாண தேதியா தான் இருக்கணும் “ என்று கேஷவ் விளக்கம் சொன்னான்.
“ கடைசி 2 நம்பர் என் பிறந்த தேதியா இருக்கலாம்னு உங்களுக்கு தோணலையா ? “ என்று மைரா கேட்டாள்.
“ இல்ல அம்மு, ஏன்னா உனக்கு என் மேல லவ் வந்துடுச்சு அதனால இப்போ நான் மட்டும் தான் உனக்கு தெரிவேன் “ என்று மனதில் நினைத்தவன் பின்னர் அவளை பார்த்து, “ ஏன்னா உன்னோட முன்னுரிம லிஸ்ட் மாறிடுச்சு. அதுல முதல்ல நான், அப்புறம் நாம அதுக்கும் அப்புறம் தான் நீ இருக்க. சரி தானே அம்மு ? “ என்று கேட்டான்.
மைரா புன்னகைத்தபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டு ட்ராலி மீது இருந்த தன் கையை எடுத்தாள். அதில் இருந்த சாட்டின் மற்றும் லேஸ் ஆடைகளை பார்த்ததும் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
“ நாம வீட்டுக்கு போறதுக்குள்ள இந்த ட்ராலி காலியா இருக்குறத நான் உறுதி செய்வேன், நான் உன்னோட அலமாரி முழுக்க இந்த மாதிரி டிரஸ் வாங்கி அடுக்குறேன். இப்போ இதுல இருந்து ஒன்ன நான் செலெக்ட் பண்ணட்டுமா ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா சரி என்று தலை அசைக்க, கேஷவ் சிவப்பு நிற லேஸ் உள்ளாடையை அவளிடம் கொடுத்தான்.
மைரா ஒரு சாட்டின் நைட்டியை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். கேஷவ் கட்டிலில் உட்கார்ந்திருந்த போது, மைரா அங்கியை அணிந்து வெளியே வந்ததும், கேஷவ் அவளை அருகே வரும்படி சைகை செய்ய, மைரா அவனை நோக்கி நடந்து சென்று அவன் கால்களுக்கிடையில் நின்றாள். கேஷவ் முடிச்சை இழுத்து தோளில் இருந்து மேலாடையை நழுவ விட்டு அவளை பார்த்து ரசித்தான்.
அவளைத் திருப்பி தன் மடியில் உட்கார வைத்து, அவளது தலைமுடியை முன்புறமாக நகர்த்தி அவளது கழுத்தின் பின்புறம் முத்தமிட்டான்.
அவளை தன் முகத்துக்கு நேராக திருப்பி அவள் கால்களை அவன் இடுப்பில் சுற்றி வளைத்து அவள் முகத்தில் முத்தமிட ஆரம்பித்து, அவள் கழுத்து, மார்பு மற்றும் அவளது பிளவுகளில் முத்தமிட்டான். மைரா நெஞ்சு படபடக்க அவன் கண்களைப் பார்த்தாள். அவள் அவன் உதட்டில் சாய்ந்து முத்தமிட ஆரம்பித்தாள், கேஷவ் அவளை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தான், ஆக்ஸிஜன் தேவைப்படும் நுரையீரல் எரியும் வரை அவர்கள் முத்தத்தில் தொலைந்து போயினர்.
கேஷவ் அவளை கட்டிலில் புரட்டிப் போட்டு ஒரு திருப்தியான புன்னகையுடன் அவளை அணைக்க, மைரா அவனது வீங்கிய உதடுகளைப் பார்த்து வெட்கப்பட்டாள். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் தோலை முத்தமிட்டு லாவ ஆரம்பித்தான். உணர்சிகளின்வேகத்தில் அவளது ஆடையை கிழித்து அவளோடு காதல் செய்தான்.
“ நீ சந்தோஷமா இருக்கியா மைரா ? “ என்று கேஷவ் கேட்க, “ உலகத்திலேயே நான் தான் சந்தோஷமா இருக்கேன் கேஷவ், அதுக்கு நீங்க தான் காரணம் “ என்று பதில் சொன்னாள் மைரா.
கேஷவ் அவளது உதடுகளில் முத்தமிட அவர்கள் முனகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளும் உதடுகளும் தொட்ட இடமெல்லாம் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தன. உச்சத்தில் இருவரின் உடல்களும் நடுங்க, அவன் அவள் மீது சரிந்து அவள் மார்பில் முகம் புதைத்து மென்மையான முத்தங்களை வைத்தான்.
மைரா அவன் தலைமுடியை வருடி, சில நிமிடங்கள் கழித்து அவன் அவளருகில் படுத்து அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
**********************************
முன்னோட்டம்:
“ ஈஸ்வரா இல்ல மைரா, கேஷவா சொல்லு “

2 comments
[…] ஏன் இப்படி வெட்கப்படுற ? […]
[…] 55ஏன் இப்படி வெட்கப்படுற ? […]