கேஷவும், மைராவும் ஹாலுக்கு சென்ற போது, நிறைய உணவுகள் பரிமாறப்படுவதை பார்த்த மைரா கேஷவைப் பார்க்க, அவன் தோள்களைக் குலுக்கி அவளை சாப்பிட அழைத்து சென்றான். அவன் அவளுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் பரிமாறினான், அவர்களை அப்படி பார்ப்பதில் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
கேஷ்வ் மைராவுக்கு சர்ப்ரைஸ் ஏற்படுத்திய ஒவ்வொரு முறையும் கிரிஷ் ரோஷினியைப் பார்த்துக் கொண்டிருந்தான், இது மாலை வரை தொடர்ந்தது. கேஷ்வ் மற்றும் மைராவின் அறை அவன் அவளுக்குக் கொடுத்த பரிசுகளால் நிரம்பியிருந்தது. அவள் படுக்கையில் ஒரு பஞ்சுபோன்ற பட்டாம்பூச்சியை வைத்திருந்தாள், அதுவும் கேஷவ் பரிசாக கொடுத்தது. அவள் சோர்வாக இருப்பதைப் பார்த்து கேஷவ் அவளை தூங்க அனுமதித்து மாலையில் அவளை எழுப்பினான்.
“ தயவு செஞ்சு எனக்கு இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு, பரிசு தர போறீங்கனு சொல்லாதீங்க “ என்று மைரா கெஞ்ச, “ இன்னும் ரெண்டு தான் அதுக்கு அப்புறம் உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன். இப்போ என்னோட நல்ல பொண்ணா போய் சீக்கிரம் ரெடியாகு, நாம வெளிய போறோம். எல்லாரும் நம்ம கூட வருவாங்க, நாம ஒன்னா சாப்பிடலாம் “ என்று கேஷவ் அவளை எழுப்பி தயாராக சொன்னான்.
மைராவுக்கு அவன் பரிசளித்த கவுனை அணிந்து கொண்டு கிளம்ப தயாரானாள் ஆனால் கேஷவ் அவளை தடுத்து நிறுத்தி கண்களை கட்டினான்.
“ நான் தடுமாறி மாடிப்படியில விழுந்தா என்ன செய்றது ? தயவு செஞ்சு இத கழட்டுங்க கெட்சப் “ என்று மைரா சொன்னாள் ஆனால் கேஷவ் பதில் சொல்லாமல் அவளை தூக்கிக் கொண்டு ஹாலை அடைந்தான். அவன் முழு குடும்பத்தையும் வீட்டுக்குள் பூட்டி யாரையும் வெளியே விட மறுத்துவிட்டான். அவன் கதவைத் திறந்து மைராவுடன் வெளியேறியதும், குடும்பத்தினர் அவர்களைப் பின்தொடர்ந்தனர். எல்லோரும் பெருமூச்சு விட, மைரா கேஷவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“ நீங்க என்ன பயமுறுத்துறீங்க. கெட்சப் தயவு செஞ்சு கண்கட்ட கழட்டுங்க. எனக்கு இப்போ பயமா இருக்கு “ என்று மைரா சொல்ல, கேஷவ் அவள் கைகளை வருடி அவளை தன் முன் நிற்க வைத்து கண்ணை கட்டியிருந்த கட்டை அவிழ்த்தான். பானட்டில் கட்டப்பட்ட சாட்டின் ரிப்பனுடன் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற Audi காரைப் பார்த்து மைரா அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் வாயை மூடிக்கொண்டாள், வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளியேற மறுத்தன. மைரா கண்ணீர் விட ஆரம்பித்தாள், கேஷவ் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாவியை உள்ளங்கையில் வைத்தான்.
“ என்ன பண்ணி இருக்கீங்க ? “ என்று மைரா கிசிகிசுக்க, “ உன் முகத்துல சிரிப்ப பார்க்க நான் இத வாங்கினேன் அம்மு ஆனா நீ உன் கண்ணீர எனக்கு பரிசா கொடுக்குற “ என்றான் கேஷவ்.
காலையிலிருந்து மைராவின் மீது கேஷவ் பொழிந்து கொண்டிருந்த அன்பை பார்த்து வசுந்தராவும் ராஜனும் கூட அழுது கொண்டிருந்தனர். அந்த மனிதன் தங்கள் மகள் மேல் கொண்டிருக்கும் காதலை அவர்கள் உணர்ந்தனர்.
“ அப்பா, மாமா உங்க கார் ஓட்டிட்டு எங்க பின்னாடியே வாங்க. கடைசி சர்ப்ரைஸ் பார்க்க போகலாம் அதுக்கு அப்புறம் டின்னர் சாபிட்டு வீட்டுக்கு திரும்பலாம் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் மைராவை நோக்கித் திரும்பி புன்னகையுடன் கையை நீட்டினான்.
“ இன்னைக்கு நான் உனக்கு டிரைவரா இருக்கேன் அம்மு “ என்று கேஷவ் சொன்னான் ஆனால் மைரா அவனிடம், “ இல்ல, நீங்க என்ன ராணி மாதிரி நடத்துறீங்க அப்போ நீங்க என்னோட ராஜா கெட்சப் “ என்று சொன்னாள்.
கேஷவ் புன்னகைத்தபடி அவளுக்காக கதவைத் திறந்து விட்டு அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஓட்டத் தொடங்கியதும் மைரா குனிந்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள்.
30 நிமிடங்கள் பிறகு ஒரு கட்டிடத்தின் முன் கேஷவ் காரை நிறுத்தினான்.
கேஷவ் இறங்கி கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மைராவுக்காக கதவைத் திறந்தான், ஆனால் நைனா நுழைவாயிலில் காத்திருப்பதைக் கண்டு அவள் இன்னும் ஆச்சரியப்பட்டாள்.
“ நைனா…” என்று மைரா அழைத்ததும், “ என்ன ஏன் இங்க வர சொன்ன மைரா? “ என்று நைனா கேட்டாள்.
மைரா கேஷவைப் பார்க்க, அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு புன்னகைத்தான்.
“ உன்னோட மொபைல்ல இருந்து அவங்கள இங்க வர சொல்லி நான் தான் மெசேஜ் அனுப்பினேன்.” என்று கேஷவ் கூறினான்.
குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கியதும், கேஷவ் அனைவரையும் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டிருந்தது மற்றும் சுவரில் ஒரு திரை எதையோ மறைத்திருந்தது. அனைவருக்கும் ஆச்சரியமாக வருண் உள்ளே நுழைந்தான். மைரா, நைனா ஆகியோர் அவனை பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட பின், கேஷவ் ஒரு மெழுகுவர்த்தியை மைராவிடம் கொடுத்து விளக்கேற்ற சொன்னான். அவளைத் தொடர்ந்து அனைவரும் ஒருவர் பின் ஒருவராக விளக்கை ஏற்றினர்.
கடைசியில் ஒரு ரிமோட்டை மைராவிடம் கொடுத்து, “ உன் வாழ்க்கையில அடுத்த அடி எடுத்து வைக்க என்னோட பரிசு. உனக்கு என்னோட வாழ்த்துக்கள் அம்மு “ என்று கேஷவ் கூறியதும், மைரா உதட்டைக் கடித்துக் கொண்டு மனதில் பல எண்ணங்கள் படர்ந்திருக்க ரிமோட்டில் இருந்த பட்டனை அழுத்தினாள்.
சுவரில் இருந்த திரை விலகி “லயா மியூசிக் அகாடமி” என்று காட்டியது. மைரா ரிமோட்டை கீழே போட்டுவிட்டு கேஷவை அனைத்து அழுதாள்.
“ ப்ளீஸ் மைரா, இனி அழாதே. உன் கண்ணுல கண்ணீர பார்க்க ரொம்ப வலிக்குது. என் இதயத்துல கத்தி மாதிரி கிழிக்குது “ என்று கேஷவ் வருத்தமாக சொல்லி அணைப்பிலிருந்து பின்வாங்கியவன், அவள் கன்னங்களின் கண்ணீரைத் தன் கைக்குட்டையால் துடைத்தான்.
“ கேஷவ், இத எப்படி செய்த? இந்த இடத்த வாடகைக்கு எடுத்தியா ? “ என்று மதன் கேட்க, “ உங்க எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன் பா. வருண், ஃபைல் கொடு “ என்று சொன்னான். உடனே வருண் ஒரு ஃபைலை கேஷவிடம் கொடுக்க, அவன் அதை மைராவிடம் கொடுத்தான்.
“ இந்த இடம் உனக்கும், உன்னோட தோழி நைனாவுக்கும் சொந்தம் மைரா. சொந்தமா மியூசிக் அகாடமி தொடங்குறது உங்க கனவுனு எனக்குத் தெரியும், இப்போ நீங்க வேலை செய்ற அகாடமியில இருக்க ஸ்டுடென்ட்ஸ் பத்தி கவலைப்பட வேணாம் “ என்று கேஷவ் சொல்ல அப்போது குறுக்கிட்ட வருண், “ உங்க ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் இங்க சேர்த்தாச்சு, அதுக்கான இழப்பீட்டை உங்க புருஷன் நீங்க வேலை செஞ்ச அகாடமிக்கு கொடுத்துட்டாரு “ என்று சொன்னான்.
ராஜனும், மதனும் கேஷவை கட்டிப்பிடித்துக் கொள்ள, மைராவும் நைனாவும் தங்கள் கனவு நனவாவதைக் கண்களில் கண்ணீருடன் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்ததைக் கண்டு வசுந்த்ராவும், அர்ச்சனாவும் மகிழ்ச்சியடைந்தனர்.
“ வாழ்த்துக்கள் மைரா, நைனா. உங்களுக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுறேன் “ என்று ரோஷினி கூறியதும், க்ரிஷ் அவளை கூர்ந்து கவனித்தான்.
“ புது அகாடமி பத்தி மக்கள் தெரிஞ்சிக்க நிறைய விளம்பரம் செய்யனும் “ என்று அர்ச்சனா சொன்னார் அதற்கு கேஷவ் உடனே, “ நாளைய நியூஸ்பேப்பர்ல அகாடமி பத்தி விளம்பரம் இருக்கும், முக்கியமான பொது இடத்துல துண்டுப் பிரசுரம் கொடுக்க ஏற்பாடு பண்ணியாச்சு “ என்று சொன்னான்.
“ ரொம்ப நன்றி அண்ணா. நீங்க மைராவுக்கு நிறைய ஆதரவா இருக்கீங்க. அதோட நீங்க என்கிட்ட பேசினது இல்லனாலும் என்னையும் இதுல ஒரு அங்கமா சேர்த்து இருக்கீங்க அதுக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று நைனா கூறியதை கேட்டு கேஷவ் புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தான்.
வருண் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிய பிறகு கேஷவ் அவர்கள் அனைவரையும் உணவகத்திற்கு அழைத்துச் சென்றான், அங்கு அனைவரும் ஒன்றாக உணவு சாப்பிட முன்பதிவு செய்திருந்தான்.
இரவு உணவிற்கு பிறகு அவர்கள் வீட்டிற்குத் திரும்பியதும் கேஷவ் மற்றும் மைராவுக்கு அர்ச்சனா திர்ஷ்டி எடுத்தார். அவர்கள் அறைக்குள் நுழைந்து கேஷவ் கதவை மூடியதும் மைரா அவனை இழுத்து அவன் உதடுகளை முத்தமிட்டாள்.
“ நீங்க எனக்கு கிடைக்க நான் என்ன நல்லது பண்ணேன்னு நிறைய முறை யோசிச்சு இருக்கேன் ஆனா இன்னும் எனக்கு பதில் கிடைக்கல ஏன்னா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு, நீங்க எனக்காக மட்டும் பிறந்தவரு. நீங்க எனக்கு செய்த எல்லாத்துக்கும் என்ன சொல்றது தெரியல, என்கிட்ட வார்த்தையே இல்ல. நீங்க என் இரவுக்கு சந்திரன், என் பகலுக்கு சூரியன் கேஷவ் “ என்று மைரா உணர்ச்சி பொங்க சொன்னதும், “ நீ என் வானம் மைரா. வானம் இல்லாம சூரியனையோ சந்திரனையோ பார்க்க முடியாது “ என்றான்.
“ ப்ளீஸ் கேஷவ், நான் ரொம்ப எமோஷனலா இருக்கேன், நீங்க எனக்காக இவ்ளோ எல்லாம் செய்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும், ஏன்னா இந்த ஒரு நாள் மட்டுமே என் வாழ்நாள் முழுக்க திணற வைக்குற அளவுக்கு இருந்துச்சு. எனக்கு உங்கள தவிர வேற எதுவும் வேணாம். எனக்கு நீங்க தான் வேணும் “ என்று சொல்லி அழுதவள் அவன் காலரைப் பிடித்து மீண்டும் முத்தமிட ஆரம்பித்தாள். கேஷவும் அவளை முத்தமிட்டபடி அவளது கண்களில் வழிந்த கண்ணீரை தனது கட்டைவிரலால் துடைத்தான்.
“ நீ ரொம்ப டயர்டா இருக்க,டிரஸ் மாத்து, நான் உன்ன தூங்க வைக்குறேன். இன்னைக்கு நைட்டு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு “ என்று கேஷவ் சொன்ன பிறகு இருவரும் உடை மாற்றியதும் கேஷவ் அவளை கட்டிப்பிடித்து அவள் தலை முடியை வருட ஆரம்பித்தான்.
ரோஷினியின் அறையில், அவள் படுக்கையின் விளிம்பில் அமர்ந்து காலையிலிருந்து இரவு உணவை முடித்து வீடு திரும்பும் வரை நடந்த அனைத்தையும் நினைவு கூர்ந்தாள்.
“ அவர் எப்படி அவளுக்கு இவ்ளோ விலையுயர்ந்த பரிசுகள கொடுத்தாரு ? அவர் ஏதோ ஒரு ஐடி கம்பெனியில வேலை செய்றதா இல்ல வேலை இல்லாம இருபாருன்னு நெனச்சேன் ஆனா அவர் மில்லியன் கணக்குல சம்பாதிக்குற மாதிரி நடந்துக்குறாரு. இவ்ளோ சம்பாதிக்க அவர் எங்க வேலை செய்றாரு ? நான் செய்ய வேண்டிய முதல் விஷயம், அவரோட வேலை பத்தி கண்டுபுடிக்குறது தான். உன் வாழ்க்கையில உனக்கு இவ்ளோ எல்லாம் கிடைக்க கூடாது மைரா. இனி அப்படி நடக்க விடமாட்டேன் “ என்று நினைத்துக் கொண்டு உறக்கமின்றி அமர்ந்திருந்தாள்.
மைரா மற்றும் கேஷவின் அறையில், மைரா தூங்கியவுடன் கேஷவ் படுக்கையிலிருந்து நகர்ந்து தன் மொபைலை எடுத்து வருணை அழைத்தான்.
“ வருண், அவங்க மொபைல் நம்பர் கொடுத்தேனே என்ன ஆச்சு ? அவங்க என்ன பேசிக்கிட்டாங்க ? “ என்று கேஷவ் கேட்டதும், “ இல்ல, அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த தகவல் பரிமாற்றமும் இல்ல. ஒரு மெசேஜ் கூட ரெண்டு பேரும் பரிமாறிக்கல. அசாதாரணமா ஏதாவது இருக்கானு பார்க்க அவங்க மொபைல் முழுசா ஹேக் செய்யனும் “ என்று வருண் பதில் அளித்தான்.
“ என் சந்தேகம் சரி தான். ரெண்டு பேரோட மொபைலையும் ஹேக் செய். கடந்த ஒரு மாசத்துல அவங்களுக்கு நடுவுல பரிமாறப்பட்ட எல்லா மெசேஜ் அப்புறம் எதுவா இருந்தாலும் எடுத்து எனக்கு தெரியப்படுத்து “ என்று கேஷவ் உத்தரவிட்டான். அதற்கு வருண் உடனே, “ சரி செய்றேன், அப்புறம் நீங்க மைரா கிட்ட உங்கள பத்தி சொல்ல போறத பத்தி என்ன பிளான் பண்ணி இருக்கீங்க ? “ என்று கேட்டான்.
“ நாளை மறுநாள் செய்வேன். அவள அங்க கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி எங்க வீட்ல சில ஏற்பாடு எல்லாம் செய்யனும் அதனால நான் நாளைக்கு நான் அங்க தான் பிஸியா இருப்பேன். ஏதாவது தகவல் கிடைச்சா என்ன அங்க வந்து மீட் பண்ணு “ என்று கேஷவ் சொன்ன பிறகு அவர்கள் வேலை பற்றி பேசினார்கள்.
அழைப்பை துண்டித்து அறைக்கு திரும்பிய கேஷவ் சோர்வாக தூங்கிக் கொண்டிருந்த மைராவைப் பார்த்து, “ என்ன உன்கிட்ட சொல்ல போறத கேட்ட அப்புறம் நீ என்ன ஏத்துக்குவனு நம்புறேன் அம்மு. நீ என்ன நிராகரிச்சுட்டா என் வாழ்க்கையே வெறும் தோல்வி தான் “ என்று மனதில் நினைத்தான்.
மைராவும் கேஷவும் தயாராகி ஹாலில் காலை தேநீர் அருந்திவிட்டு மைராவின் மியூசிக் அகாடமியின் விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கள் குடும்பத்தினரைச் சந்தித்தனர். மைரா அந்த விளம்பரத்தைத் தொட்டு கேஷவைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ கேஷவ், நான் நேத்து நைட்டு உன்கிட்ட கேட்க நெனச்சேன், அகாடமிக்கு நீ தேர்ந்தெடுத்த பெயருக்கு பின்னால ஏதாவது காரணம் இருக்கா ? “ என்று மதன் கேட்டதும், “ ஆமா, லயா ரொம்ப அழகான பெயர், ஆனா அத எப்படி செலெக்ட் பண்ணீங்க ? “ என்று அர்ச்சனாவும் கேட்டார்.
மைரா தன் வெட்கத்தை மறைக்க மற்றவர்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள, கேஷவ் ஏதாவது சாக்கு சொல்ல நினைத்து புருவங்களைச் சொறிந்தான்.
“ உண்மையில அது மியூசிக் சம்மந்தமான வார்த்த. அகாடமிக்கு அந்த பெயர் தான் வைக்கனும்னு நான் ஒரு முறை கெட்சப் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் “ என்று மைரா நிலைமையை சமாளித்தாள்.
“ இன்னிக்கு அகாடமி போறியா மைரா? “ என்று மதன் கேட்டதும், “ நிச்சயமாக போறேன் அப்பா. நைனாவும் வருவா. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அகாடமி பத்தி கேட்டு எனக்கு நிறைய மெசேஜ் போன் கால் வருது அதனால நான் அகாடமி போனவுடனே அவங்க எல்லாருக்கும் போன் பண்ணி பேசணும்.” என்று சொன்ன மைரா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ அது இருக்கட்டும் ரோஷினி எங்க ? அவ இன்னும் தூங்கிட்டு இருக்காளா ? “ என்று கேட்டாள்.
“ நாளைக்கு பெங்களூர் கிளம்பறதுக்கு முன்னாடி ஃப்ரெண்ட்ஸை சந்திக்க போயிருக்கா. மதியம் லஞ்ச் சாப்பிட திரும்பி வருவா நினைக்குறேன் “ என்று அர்ச்சனா அதற்கு பதில் சொன்னார்.
“ அம்மா அவளுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். அவ திரும்பி வந்ததும், அவளோட பொருட்கள பேக் செய்யச் சொல்லுங்க “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டதும், “ ஏன் நீ சொல்ல மாட்டியா ? நீங்க ரெண்டு பேரும் பேசாம இருக்கீங்களா? “ என்று அர்ச்சனா அவனை கேட்டார்.
“ இல்ல மா, அவ ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்கும் போது தொந்தரவு செய்ய வேணாம்னு நெனச்சேன். அதுவும் இல்லாம நானும் இன்னைக்கு ஆபீஸ்ல பிஸியா இருப்பேன் “ என்றான் க்ரிஷ்.
*************************************
முன்னோட்டம்:
“ நன்றே செய் அதுவும் இன்றே செய். எங்க ஹனிமூன் அப்புறம் என்னோட பிறந்தநாளுக்கு அவர் நிறைய லீவ் எடுத்துட்டாரு அதனால அவர் வேலையை கவனிக்க ஆரம்பிச்சிடாரு அதனால நாளைக்கு நான் அவர் கிட்ட என் லவ் சொல்ல போறேன் அப்போ அவருக்கு ஏதாவது ஸ்பெஷலா செய்யணும் “

1 comment
[…] நீங்க எனக்காக மட்டும் பிறந்தவரு […]