Home Family65. மூத்த மகனா பிறந்தத வெறுக்குறேன்

65. மூத்த மகனா பிறந்தத வெறுக்குறேன்

by Siragugal Novels
15 views

கேஷவ் அவளை கட்டிலில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“ ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா, கலகலப்பா இருந்த கேஷவ், என் தம்பிக்கு என் மேல இருந்த பொறாமைய பத்தி தெரிஞ்ச அப்புறம் மொத்தமா அமைதியா, யார் கிட்டயும் பேசாம ஒதுங்க ஆரம்பிச்சிட்டேன். நான் எதுக்கும் ஆசைப்படுறத கூட நிறுத்திட்டு, என் தம்பியோட சந்தோஷத்த மட்டும் தான் விரும்பினேன், எனக்கு வேற எதுவும் வேணாம்னு முடிவுக்கு வந்தேன். எனக்கு பிரெண்ட்ஸ் இருந்து நான் அவங்க கூட பழக ஆரம்பிச்சா என்னோட உண்மையான கலகலப்பான குணம் வெளிய வரும்னு பயந்து பிரெண்ட்ஸ் கூட இல்லாம தனியா இருந்தேன். எல்லாரும் நான் திமிரு புடிச்சவன், தலைக்கணம் புடிச்சவன்னு நெனச்சாங்க. ஆனா ஒரு தேவதை பிங்க் அப்புறம் வெள்ளை கலர் ஃபிராக் போட்டு, எங்க வீட்டு கதவு வழியா வந்த நிமிஷம் எல்லாமே மாறிடுச்சு.

நீ ஒரு நாள் என் முழு உலகத்தையும் மாத்துவனு அப்போ எனக்குத் தெரியாது, ஆனா நான் நெனச்சது தப்பு, நீ உடனே என் உலகத்த மாத்திட்ட. உன்னோட அழகான சிரிப்புல என் உலகத்த சந்தோஷமா மாத்துன. ரொம்ப நாளைக்கப்புறம் என்ன ஃப்ரெண்ட்னு சொன்ன முதல் ஆள் நீ தான். என்ன கிஸ் பண்ண அந்த அழகான குட்டி தேவதைக்கு நானும் ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டேன். அன்னைக்கு அத்த உன்ன எங்கள் வீட்ல விட்டு போகும் போது நான் உன்னபார்த்துக்குறேன்னு அவங்க கிட்ட சொன்னேன். அந்த நிமிஷத்துல இருந்து உன்ன பாதுக்காக்குற வேலைய தீவிரமா எடுத்துக்கிட்டேன். நீ சிரிக்கும் போது நானும் சிரிப்பேன்.

என்னோட கிரிக்கெட் கார்டு எல்லாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்,. க்ரிஷ் அத கிழிச்சிட்டா இல்ல அவன் அதுல கிறுக்கிட்ட என்னால எவன திட்ட முடியாது அதனால அத நான் க்ரிஷ் கிட்ட கூட கொடுக்க மாட்டேன் ஆனா நீ அதையெல்லாம் கிறுக்கி வெச்ச அப்போ என்னால உன்ன காயப்படுத்த முடியல.

நீயும் அவன மாதிரி ஒரு ஸ்பெஷல் இடத்த பிடிச்சுட்டனு  க்ரிஷுக்கு அப்போ தான் தெரிஞ்சுது போல அதனால அவன் உன்ன என் பக்கத்துல இருக்கவே விடமாட்டான். அவன் உன் வீட்ல அவன் கூட விளையாட உன்ன கூட்டிட்டு போயிடுவான். நீ எங்க வீட்ல இருக்கும் போது கூட நீ என்கிட்ட வராம பார்த்துக்குவான் இருந்தாலும் நான் உங்க ரெண்டு பேர விட்டு விலகி இருந்து நீங்க  ஒன்னா விளையாடும்போது உங்களுக்கு காயம் ஏற்படாம பார்த்துக்குவேன் “ என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி விட்டான். 

கேஷவ் ஜூஸை எடுத்து டம்ளரின் விளிம்பை அவள் உதடுகளுக்கு அருகில் வைத்து அவளை குடிக்கும்படி சைகை செய்தான். மைரா சில மிடறுகள் குடித்தவுடன், கோப்பையை மீண்டும் தட்டில் வைத்துவிட்டு, சாண்ட்விச்சை நீட்டி, மைராவை ஒரு கடி சாப்பிடும்படி சைகை செய்தான், அவளும் அப்படியே செய்தாள். அதன் பின்னர் கேஷவ் மீண்டும் சொல்ல தொடங்கினான்.

“எனக்கு என்ன நடக்குதுனு புரியல அம்மு ஆனா எனக்கு உன்ன  பார்க்குறது, உன்ன பாதுக்காக்குறது ரொம்ப புடிச்சுது, நான் பல வருஷமா அத பண்ணிட்டு இருக்கேன் அம்மு. உனக்கு  பட்டாம்பூச்சி ரொம்ப புடிக்கும்னு நான் அத உனக்கு பரிசா கொடுக்க நெனச்சேன் அதனால உன்னோட 7 வது பிறந்தநாளுக்கு நான் நாள் முழுக்க (Park ) பார்க்ல அத புடிச்சேன், நான் ராகேஷ எனக்கு உதவ கூட்டிட்டு போனேன். எல்லாத்தையும் ஒரு ஜாடியில் சேகரிச்சேன், அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஆனா அன்னைக்கு அத பார்த்ததும் சந்தோஷத்துல நீ துள்ளி குதிச்சு என்ன கட்டி புடிச்ச கிஸ் பண்ண அப்போ அந்த கஷ்டம் எல்லாம் பெருசாவே தெரியல. ஆனா நான் ஏன் அத உனக்கு செய்யணும்னு நெனச்சேன், ஏன் நீ சிரிச்சு சந்தோஷமா இருக்குறத பார்க்க விரும்பினேன்னு எனக்குத் தெரியல.” என்று சொன்னவன் மைரா சாண்ட்விச்சை விழுங்கியதைப் பார்த்ததும், அவளை மீண்டும் ஜூஸை குடிக்க செய்து தனது கடந்த காலத்தை தொடர்ந்தான்.

“ ஸ்கூல்ல உனக்கு அடிபட்ட அப்போ என்னால வார்த்தையால சொல்ல முடியாத வலிய உணர்ந்தேன், அதுவும் ஏன்னு தெரியல. உனக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கிட்டு வீட்டுக்கு வந்த அப்போ அத க்ரிஷ் உனக்கு கொடுத்தான். அவன் ஏற்கனவே அழுதுட்டு இருந்தான் அதனால என்னால அவன தடுக்க முடியல. ஆனா நீ உன்னோட வலிய என்கிட்ட சொன்ன அப்போ எனக்கு சந்தோஷமா இருந்துச்சு அதே சமயம் உன் கண்ணுல கண்ணீர பார்த்து அவ்ளோ கஷ்டமாவும் இருந்துச்சு. நீ அழாம இருக்க நான் எதையும் செய்வேன்னு அன்னைக்கு சபதம் எடுத்தேன் ஆனா நான் ஏன் அப்படி உணர்ந்தேன்னு எனக்கு அப்பாவும் தெரியல.

நீ நான் சொன்னத கேட்டு நைனா கூட friend ஆனாபுல க்ரிஷுக்கு என் மேல கோவம். அவன் மட்டும் தான் உன்னோட ப்ரெண்டா இருக்கணும், நான் இருக்க கூடாதுனு அழுதான். அதுக்கு அப்புறம் ரொம்ப தீவிரமா உன்னையும், என்னையும் பிரிச்சான், அது எனக்கும் தெரியும். நீ சொன்னது சரி தான், அது என் தப்பு தான், நான் அவன கொஞ்சம் வேற மாதிரி கையாண்டு அவன மாத்தி இருக்கணும்.

உன்னோட 11 வது பிறந்த நாளுக்கு நான் உனக்கு புடிச்ச பார்பி பொம்மைய வாங்கினேன், ஆனா க்ரிஷ் அத என்கிட்ட இருந்து எடுத்து அவனோட பரிசா உனக்கு கொடுத்தான். எனக்கு அவன ரொம்ப புடிக்கும், எனக்கு அவன் மேல ரொம்ப பாசம், அவன் காயப்படுறத என்னால பார்க்க முடியல, அதனால நான் அந்த பரிச அவன் கிட்ட கொடுத்தேன்.

அடுத்த வருஷமும் அதே தான் நடந்துச்சு. அவனோட  பொறாமைய தவிர்க்கனும், அதே நேரத்துல உனக்கும் பரிசு கொடுக்கணும்னு அவனுக்கு தெரியாம ஒரு பரிசு வாங்கி அதுல “ K “னு எழுதி ஒவ்வொரு வருஷமும் கொடுக்க ஆரம்பிச்சேன்.

தூரத்துல இருந்து நீ சிரிக்குறத பார்த்து நான் சந்தோஷப்பட்டேன். என் கண்கள் எப்பவும் உன் மேல தான் இருந்துச்சு. ஒரு நாள் நான் வீட்டுக்கு திரும்பி வரும் போது நீங்க ரெண்டு பேரும் ஏதோ ப்ராஜெக்ட் செய்றத பார்த்தேன், ஆனா கொஞ்ச நேரத்துல நீங்க சாப்பிட ரெஸ்டாரன்ட் கிளம்பி போயிட்டீங்க. க்ரிஷ் வீட்டுக்கு வந்து அத செய்ய முயற்சி செய்றத நான் பார்த்துட்டு இருந்தேன் ஆனா செய்ய முடியாம தூங்கிட்டான்.

ப்ராஜெக்ட் பண்ணலைனா நீ வருத்தப்படுவனு தெரியும், அதனால கண் முழிச்சு ப்ராஜெக்டை முடிச்சேன். உன் முகத்துல சிரிப்ப நான் கற்பனை பண்ணி பார்த்து தூங்கிட்டேன் அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுனு உனக்கே தெரியும் “ என்று கேஷவ் கூறி நீண்ட பெருமூச்சு விட்டான்.

“ அது லவ் தான்னு எப்போ உணர்ந்தீங்க ? “ என்று மைரா மெல்ல கிசிகிசுத்தாள்.

“ உன்னோட 16 வது பிறந்த நாள் அன்னைக்கு உனக்கு ஆக்ஸிடென்ட் ஆனா அப்போ. “ என்று கேஷவ் சொன்னதும் மைரா ஆச்சரியம் அடைந்தாள்.

ப்ளாஷ் பேக் ஆரம்பம்:

மைராவின் பதினாறாம் பிறந்த நாளுக்கு முந்தைய இரவு வீடு திரும்பிய கேஷவ் தன்னிடம் இருந்த சாவி கொண்டு கதவை திறந்து தனது அறைக்குள் நுழைந்தான். கண்ணாடி முன் நின்று தன் லேப்டாப் பையில் இருந்து சிறிய பரிசை எடுத்தான்.

“ இத நான் உனக்கு நேரடியாகக் கொடுக்க விரும்புறேன் அம்மு, ஆனா பரவாயில்ல, இந்த பரிச பார்த்து நீ சந்தோஷப்படுறத பார்த்து நான் சந்தோஷப்படுவேன். இந்த மாடல் வாட்சை நீ நியூஸ்பேப்பர்ல பார்த்து ரசிச்சிட்டு இருந்த அன்னைக்கே இத வாங்கிட்டேன். ஒருவழியா இன்னைக்கு உனக்கு இது கிடைக்கும். நீ சிரிச்சா எனக்கு ஏன் சந்தோஷமா இருக்கு புரியல. ஹேப்பி பர்த்டே அம்மு “ என்று தனக்குதானே பேசிக் கொண்டவன், வெளியே சென்று மைராவுக்காக தன் அம்மா தயாராக வைத்திருந்த பரிசுப் பொருட்களைப் பார்த்தான். அவன் வாங்கிய பரிசை அவற்றோடு  மறைத்து வைத்து விட்டு தன் அறைக்குத் திரும்பி உறங்கினான்.

காலையில் வேலைக்கு தயாரானவன், யாருடனோ பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான். மைரா இனிப்புப் பெட்டியை அவனை நோக்கி நீட்டுவதைக் கண்டதும் அவன் நின்றான், ஆனால் அவன் கண்கள் அவளது மணிக்கட்டில் இருந்த வாட்சை பார்த்ததும் அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து புன்னகைத்தன.

“ ஹேப்பி பர்த்டே குட்டி பொண்ணு “ என்று கேஷவ் வாழ்த்தியதும், மைரா பெட்டியை விலக்க, கேஷவ் புன்னகையை அடக்கி புருவத்தை நெரித்து என்ன என்று கேட்டான்.

“ நான் குட்டி பொண்ணு இல்ல அங்கிள். எனக்கு இப்போ பதினாறு வயசு ஆயிடுச்சு, நான் வளர்ந்துட்டேன் “ என்று மைரா செல்ல கோவத்துடன் சொல்ல, “ நிச்சயமா என் குட்டி பொண்ணு வளர்ந்துட்டு இருக்கா, நான் உன்ன நெனச்சு ரொம்ப பெருமைப்படுறேன்.” என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

மைரா மீண்டும் பெட்டியை அவனை நோக்கி நீட்ட, கேஷவ் சிரித்தபடி ஒரு இனிப்புத் துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டினான். மைரா ஒரு முழு இனிப்பை எடுத்து அவன் வாயில் திணித்து நாக்கை வெளியே நீட்டி கிண்டல் செய்தாள். கேஷவ் அவள் தலைமுடியை கோதிவிட்டு தன் அறைக்குத் திரும்பினான்.

கண்ணாடி முன் நின்று அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடாத போதும் அவள் தன்னைச் சுற்றி கலகலப்பாக வசதியாக உணர்ந்த விதத்தை நினைத்து புன்னகைத்தான்.

“ எல்லா நேரமும் உன் கூடவே இருக்கணும்னு தோணுற இந்த உணர்வு எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்குது ஆனா அதே நேரம் எனக்கு பயமா இருக்கு. எல்லா நேரமும் உன்ன பத்தி பேசுறதால நான் ஒரு பெடோஃபில் மாதிரி ஸ்கூல்ல இருந்த என் ப்ரெண்ட்ஸ்  என்ன கிண்டல் பண்ணது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அதனால நான் உன்ன பத்தி யார்கிட்டயும் பேசுறத நிறுத்திட்டேன், அது மட்டும் இல்ல பொதுவா யார் கூடையும் பேசுறத வெறுத்தேன், இப்போ உன் விஷயம் வரும் போது பைத்தியமா துடிக்குற என் இதயத்துக்கு என்னால பதில் சொல்ல முடியல. எனக்கு 26 வயசு ஆகுது, எல்லாத்தையும் கையாளுற அளவுக்கு முதிர்ச்சி, பக்குவம்  இருக்கு ஆனா நீ மட்டும் தான் இத்தன வருஷமா என்னால தீர்க்க முடியாத ஒரு புதிரா இருக்க “ என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு தன் இதயத்தை அமைதிப்படுத்த முயன்றான். 

மைரா, க்ரிஷ் மற்றும் நைனாவுடன் ஐஸ்கிரீம் பார்லருக்கு கிளம்புவதாக கேஷவ் கேள்விப்பட்டதும், “ நீ ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் சந்தோஷத்துல சுத்தி இருக்குறத கூட மறந்துடுவ, குறிப்பா ட்ராபிக் அதிகமா இருக்க நேரத்துல உன்ன கையாள்றது கஷ்டம் அதனால நீ வீட்டுக்கு வரவரைக்கும் நீ பாதுகாப்பா இருக்குறத பார்க்குறது நல்லது “ என்று மனதில் நினைத்துக் கொண்டு கேஷவ் சம்பவ இடத்திற்கு சென்று தனது காரை பாதுகாப்பான தூரத்தில் நிறுத்திவிட்டு, மைராவும் நைனாவும் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்து வெளியேறுவதைப் பார்த்தான். உற்சாகமாக கைகளை காற்றில் அசைத்தபடி அவள் பேசுவதைப் பார்த்து அவன் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது, ஆனால் ஒரு பைக் மைரா மேல் மோதியதைப் பார்த்ததும் அவன் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது.

சற்றும் யோசிக்காமல் அவளை நோக்கி விரைந்து சென்று அழுது கொண்டிருந்த க்ருஷ் உட்பட அனைவரையும் புறக்கணித்து அவளை தன் காருக்கு தூக்கிச் சென்றான். கேஷவ் பின்புற கண்ணாடியில் வழியாக மைராவைப் பார்த்தான், அவள் பிறந்தநாளுக்காக அணிந்திருந்த புதிய உடையில் இரத்தத்தையும், மயக்கமடைந்த அவளது உருவத்தையும் பார்த்த அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ஸ்டியரிங்கைப் பிடித்த விதத்தில் அவனது விரல்கள் வெளுத்துப் போயின.

“ எனக்கு என்ன ஆகுது அம்மு ? உன்னை இப்படி பார்க்க என் நெஞ்சு வலிக்குது ஆனா இது நடக்கக் கூடாது சரி தானே ? உனக்கு 16 வயசு தான், எனக்கு 26 வயசு, ஆனா என் இதயம் இப்போ உன்ன சுத்தி துடிக்குற விதம் சரி இல்ல. ப்ளீஸ் கடவுளே… அவ நல்லா  இருக்கட்டும், அவளுக்கு எதுவும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். என் உயிர கொடுத்தாவது அவள நான் பாதுகாப்பேன் “ என்று மனதோடு போராட்டம் நடத்தி இறைவனிடம் வேண்டினான்.

க்ரிஷ் அழத் தொடங்கிய போது அவனது எண்ண ஓட்டம்  கலைந்தது.

“ க்ரிஷ், அமைதியா இரு. மைரா நல்லா இருப்பா “ என்று அவனுக்கு தைரியம் சொன்ன கேஷவ் தன் மனதில், “ அவ நல்லா இருக்கனும்.. அவ நல்லா இருப்பா “ என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டான்.

காரை நிறுத்தி, கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் சட்டையால் துடைத்துக் கொண்டு, பின்புறக் கதவைத் திறக்க விரைந்து சென்று, மைராவை சிகிச்சைக்காக அவசர சிகிச்சைக்கு தூக்கிச் சென்றான். அதன் பின்னர் பெற்றோரை அழைத்து விபத்து குறித்து தெரிவித்தவன், க்ரிஷ் இன்னும் அழுது கொண்டிருப்பதை கண்டு அவனை இழுத்து அணைத்து தோளில் தட்டினான்.

“ தைரியமா இரு, நீ இப்படி ஒரு குழந்த மாதிரி அழுதா, அவள யார் கவனிக்குறது ?. அவ நல்லா இருப்பா “ என்று ஆறுதல் சொன்னான்.

டாக்டர் எமர்ஜென்சி அறையை விட்டு வெளியே வருவதைப் பார்த்த கேஷவ் அவரிடம் விரைந்து, “ எப்படி இருக்கா ? “ என்று பதற்றத்துடன் கேட்டான்.

“ கவலைப்பட ஒண்ணுமில்ல, சின்ன காயம் தான், திடீர் ஆக்ஸிடென்ட் ஆனதுல பயந்து மயங்கி விழுந்து இருக்காங்க. சீக்கிரம் சசுயநினைவு வந்துடும். மூணு மணி நேரம் அப்புறம்  நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் “ என்று டாக்டர் சொன்னதும், “  ரொம்ப நன்றி டாக்டர் “ என்று கூறினான்.

தன் உயிர் தன்னிடம் திரும்பிவிட்டதாக உணர்ந்த கேஷவ், மைராவைப் பார்க்க அறைக்குள் நுழைந்த க்ரிஷை பின்தொடர்ந்தான். மைராவின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டதும் கேஷவின் இதயம் விலா எலும்புக் கூண்டிலிருந்து குதிக்கத் தயாராக இருந்தது.

“ நான் வெளிய வெயிட் பண்றேன் ஏதாவது தேவைப்பட்டா என்ன கூப்பிடுங்க இல்ல மைரா எழுந்ததும் என்ன கூப்பிடுங்க “ என்று சொல்லிவிட்டு வெளியே சென்று கண்ணீரை உள்ளங்கையால் மறைத்துக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டான்.

“ உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் செத்து போயி இருப்பேன் அம்மு, என்னால உன்ன இப்படி பார்க்க முடியாது, தயவு செஞ்சு  எழுந்து என்ன எவ்ளோ வேணும்னாலும் கிண்டல் செய். ஐ லவ் யூ அம்மு, நான் உன்ன அவ்ளோ லவ் பண்றேன், என்னால உன்ன இழக்க முடியாது மைரா, ப்ளீஸ் “ என்று அழுதவன், தன்னை மறந்து என்ன உளறுகிறோம் என்பதை உணர்ந்து திகைத்து நின்றான். பாத்ரூமுக்கு விரைந்து சென்று முகத்தில் தண்ணீரை தெளித்து தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தான்.

“ காதலா? நான் லவ் பண்றேனா ? என் அம்மு மேல எனக்கு இருக்க இந்த உணர்வுக்கு பெயர் காதலா ? ஆனா அவளுக்கு 16 வயசு தான் ஆகுது, அவ ஒரு குழந்த. எல்லாரும் உன்ன ஒரு pedophile சொல்லுவாங்க, எனக்கு அவ மேல இருக்க லவ் தூய்மையானதுனு அவங்க யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க, அவளுக்காக என் இதயம் எப்படி துடிக்கும்? “ என்று தனக்குதானே கேட்டுக்கொண்டு உடைந்து போனான். 

அப்போது பாத்ரூமுக்குள் நுழைந்த ஒரு முதியவர் கேஷவ் கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்து நின்றார்.

“ நல்லா இருக்கியா தம்பி ? சில நேரம் நாம நல்லா இல்லாம இருக்குறதும் நல்லதுக்கு தான், என்கிட்ட பேசுனா உனக்கு ஆறுதலா இருக்கும்னா தாராளமா கேட்க நான் தயாரா இருக்கேன் “ என்று அந்த முதியவர் ஆறுதலாக பேசியதும் கேஷவ் அவரை பார்த்தான்.  

“ யாருக்காக செய்யக் கூடாது அவங்களுக்காக என் இதயம் துடிக்குது, மனசு ஏங்குது “ என்று கேஷவ் சொன்னதும், “ அவ மேல உனக்கு எந்த மாதிரி உணர்வு இருக்கு ? “ என்று அந்த முதியார் அவனிடம் கேட்டார்.

“ நான் அவளுக்காக எல்லாமே உணர்றேன், இன்னைக்கு என் வாழ்க்கையில அவள கிட்டத்தட்ட இழந்துட்டேன்னு உணர்ந்த அப்போ அது காதல்னு உணர்ந்தேன். ஆனா என்னால இதை செய்ய முடியாது. “ என்று பதில் சொல்லி கேஷவ் தலையை மறுத்து ஆட்டினான்.

“ அவளுக்கு உன்மேல காதல் வராம போனா, நீ அவள லவ் பண்றத இல்ல அவ மேல அக்கறையா இருக்குறத நிறுத்துவியா ? “ என்று அந்த முதியவர் கேட்டதும், “ இல்ல, அவள பாதுகாக்க என்னால முடிஞ்ச எதையும் செய்வேன் “ என்று சற்றும் யோசிக்காமல் கேஷவ் பதில் சொன்னான்.

அவன் பதிலை கேட்டு சிரித்த முதியவர், “ உன் இதயம் உனக்கு  சொந்தமானது இல்ல, அது இனி உனக்காக துடிக்காது. அது அவளுக்கு சொந்தமானது, உன் இதயத்துக்கு மேல உனக்கு எந்த உரிமையும் இல்ல, உன் மனசு சொல்றத கேளு, அது உனக்கு அமைதிய தரும். உன்ன விட யாரும் அவள அதிகமா காதலிக்க முடியாது.” என்று அந்த முதியர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியோடு பார்த்த கேஷவ், “ அவளுக்கு 16 வயசு, எனக்கு 26 வயசு. என் கண்ணு முன்னாடி அவள் வளர்றத நான் பார்க்குறேன் “ என்று பதில் சொன்னான்.

“ அவ எப்பவும் பதினாறு வயசுலேயே இருக்க மாட்டா. எனக்கு 87 வயசு, என் மனைவிக்கு 73 வயசு. அவளுக்கு 13 வயசு இருக்கும் போது எங்களுக்கு கல்யாணம் ஆச்சு. அவ என் மனைவி ஆகுறதுக்கு முன்னாடி என் தோழியா இருந்தா. அவ என் முன்னாடி தான் வளர்ந்தா, நான் அவளுக்கு வாழ்க்கையில எல்லாத்தையும்  கற்றுக் கொடுத்தேன். காதல் உண்மையாவும் தூய்மையாவும் இருக்கும் போது வயசு ஒரு பொருட்டே இல்ல, அது வெறும் நம்பர் மட்டும் தான் தம்பி. பொறுமையா இரு, அவ உன்னோட விதியில இருந்தா, அவளே உன் வாழ்க்கையில வருவா. காதல் எல்லாருக்கும் ஏற்படாது அதனால எந்த காரணத்துக்காகவும் அத விட்டுடாத. அது ரொம்ப அழகான உணர்வு. நான் கிளம்பனும், என் பொண்டாட்டி நான் எப்பவும் அவ பக்கத்துல இருக்கனும் நினைப்பா “ என்று அந்த முதியவர் தன் மனைவியை பற்றி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கேஷசவ் சிரித்தபடி அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை நோக்கித் திரும்பி தன்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.

“ ஒருவழியா நான் உன்ன லவ் பண்றேன்னு தெரிஞ்சிகிட்டேன். உன்ன நான் ஒருநாளும் விட்டுப் பிரிய மாட்டேன் அம்மு, என் கடைசி மூச்சு வர உன்ன லவ் பண்ணுவேன், இது நான் உனக்கு செய்ற சத்தியம் “ என்று சொல்லவிட்டு, பாத்ரூமை விட்டு வெளியே சென்றவன் அறைக்கு வெளியே குடும்பத்தினர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் வெளியே செல்வதாக கூறி அருகிலிருந்த பூக்கடைக்குச் சென்று ஒரு கொத்து மஞ்சள் ரோஜாக்களை வாங்கினான்.

அதன் நறுமணத்தை உள்ளிழுத்து தன் நாணத்தை மறைக்க பின் கழுத்தை தேய்த்தான்.

“ நீ பெரியவளா வளர்ற வரை நான் வெயிட் பண்ணுவேன், உன்கிட்ட என் காதல ஸ்பெஷலா ப்ரொபோஸ் பண்ணுவேன் அம்மு. அப்போ நீயும் என்ன லவ் பண்ணுவனு நம்புறேன், அதுக்காக வாழ்நாள் முழுக்க காத்திருப்பேன் “ என்று சொன்னவன், மைராவுக்கு பூக்களைக் கொடுக்க மருத்துவமனைக்குள் பதுங்கி அவர்களின் குடும்பம் வார்டை விட்டு வெளியேறுவதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவர் கதவைத் திறக்க முயன்ற போது மைரா மற்றும் நைனாவின் உரையாடலைக் கேட்டதும் நிறுத்தினான்.

“ மைரா, உன்னோட உணர்வுகள பேசி தெளிவுபடுத்துறது நல்லதுனு தான் சொல்லுவேன். அவனும் லவ் பண்றதா இருந்தா நல்லது இல்லனா நீ எல்லாத்துலையும் தெளிவா இருக்க முடியும். நீ லேட் பண்ணாம சொல்லிடு “ என்று நைனா சொல்ல, “ வாய மூடு நைனா. எனக்கு இப்போ தான் 16 வயசு. குறைந்த பட்சம் எனக்கு 18 இல்ல 19 வயசு ஆகுற வரை வெயிட் பண்ணலாம். க்ரிஷும் என்ன லவ் பண்றதா இருந்தா அவன் முதல்ல என்னை ப்ரபோஸ் செய்யட்டும். ஒருவேள என்னோட 18 வது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பண்ண பிளான் பண்ணுவான் போல “ என்று மைரா சொன்னதும், “ யாரோ வெட்கப்படுறாங்க” என்று நைனா கிண்டல் செய்தாள். 

தன் காலடியில் பூமி பிளந்து போவதை போல உணர்ந்த கேஷவ் கண்களில் கண்ணீருடன் அங்கிருந்து தடுமாறி நகர்ந்து சென்று  காரில் ஏறி அவளை இழந்து கதறி அழுதான். ஒரு மணி நேரம் கழித்து நர்ஸ் உதவியுடன் நைனாவை அறையில் இருந்து அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தான். அப்போது மருந்துகளின் தாக்கம் காரணமாக மைரா தூங்கிக் கொண்டிருந்தாள்.

கேஷவ் பூக்களை அவள் அருகில் வைத்து அவள் கூந்தலை மென்மையாக வருடினான்.

“ ஐ லவ் யூ அம்மு, நான் லேட்டா பிறந்திருக்கலாம் இல்ல நீ சீக்கிரம் பிறந்திருந்தா நாம ஒன்னா இருந்திருக்கலாம். மூத்த மகனா பிறந்தத நான் வெறுக்குறேன், ஆனா நீ என்ன லவ் பண்ணலனா பரவாயில்ல அம்மு. நான் என் வாழ்நாள் முழுக்க உன்ன லவ் பண்ணுவேன். குட் பை அம்மு “ என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டு தன் ஆன்மாவை அவளிடம் விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

பிளாஷ்பேக் முடிகிறது.

*****************************

முன்னோட்டம்:

“ அப்போ ஏன் உங்க காதல சீக்கிரமே சொல்லாம இருந்தீங்க ? இத்தன கஷ்டம் எல்லாம் நம்ம வாழ்க்கையில அனுபவிக்க நாம என்ன தப்பு செய்தோம்? “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!