தரைத்தளத்தில் இருந்த அறைக்கு மைராவை அழைத்து சென்ற கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்.
“ நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன் அம்மு “ என்று சொல்லிவிட்டு கேஷவ் மைராவுக்கு தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் நுழைந்தான்.
அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று அழிந்திருந்த ஐ லைனர் மற்றும் லிப்ஸ்டிக், கண்ணீருடன் ஒட்டி இருந்த முடியுடன் முகத்தை மைரா பார்த்தாள். தலைமுடியை கொண்டையாகக் கட்டிக்கொண்டு டிஷ்யூ பேப்பரைத் தேடி அந்த மேஜையின் டிராவை திறந்த போது ஒரு சிறிய பெட்டியைச் சுற்றி சாட்டின் ரிப்பன் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.
மைரா ஆர்வத்தில் பெட்டியை வெளியே எடுத்து அதை திறக்க சாட்டினைக் கழற்றினாள். ஆனால் தன் முதல் முத்தத்தோடு தான் தொலைத்துவிட்டதாக நினைத்த ஒரு குஞ்சத்தையும், அதோடு சில கிறுக்கலுடன் கிரிக்கெட் சீட்டுகளையும் பார்த்த போது கண்ணீர் அவள் கன்னங்களில் மீண்டும் வந்தது. இருட்டில் அந்த மனிதனை முத்தமிட்ட நாளை நினைவுபடுத்தியபடி அவள் குஞ்சத்தை கையில் எடுத்தாள்.
ஜூஸும் சாண்ட்விச்சும் அடங்கிய தட்டுடன் உள்ளே நுழைந்த கேஷவ், கையில் குஞ்சம் வைத்திருந்த மைராவைப் பார்த்ததும் உறைந்து நின்றான். மைரா அவன் பக்கம் திரும்பி அவன் முகத்துக்கு முன்னால் குஞ்சத்தைக் காட்டினாள்.
“ இதுக்கு என்ன அர்த்தம்? “ என்று மைரா கேட்டதும், கேஷவ் ட்ரேயை மேஜை மேல் வைத்து விட்டு அவளை இழுத்து கட்டிலில் உட்கார வைத்து உள்ளங்கையால் முகத்தை தேய்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டான்.
தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மைரா தன் உணர்வை இழந்து அறையை விட்டு வெளியேறினாள். கேஷவ் அவளைப் பின்தொடர்ந்து லிவிங் அறையில் அவள் முற்றிலும் உடைந்து போவதை கண்டான். மைரா சோபாவில் படுத்து, அந்த நேரத்தில் அவளை காயப்படுத்தும் அனைத்தையும் மூடும் நம்பிக்கையில் கண்களை மூடினாள்.
கேஷவ் அவளை தொந்தரவு செய்யாமல், அவள் சோபாவை நோக்கி இருந்ததால் அவளுக்கு எதிரே அவள் முதுகைப் பார்த்தபடி அமர்ந்தான். முந்தைய இரவும் தூங்காமல் இருந்ததால் சில மணி நேரம் கழித்து கேஷவும் தூங்கிவிட்டான்.
காலையில் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த போது மைரா தூங்கிக் கொண்டிருந்த சோபாவில் காணாமல் போயிருந்தாள். கேஷவ் பீதியடைந்து அவளது பெயரைக் கத்தி வீடு முழுவதும் தேடத் தொடங்கினான் ஆனால் மைரா எங்கும் காணப்படவில்லை.
கதவு திறக்கப்பட்டிருப்பதைக் கண்ட கேஷவ் வெளியே நடந்து சென்றபோது தனது கார் இல்லை என்று கவனித்தான். சாலைக்கு ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறி அவர்கள் வீட்டை அடைந்தவன், கார் அங்கும் இல்லை என்று கவனித்தான். அவன் உள்ளே நுழைந்து பார்த்த போது அவனது பெற்றோர் காலையில் காபி குடித்துக் கொண்டிருந்தனர்.
“ கேஷவ், திரும்பி வந்துட்டியா? மைரா எங்க? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ மைரா இங்க இல்லையா? அவ எங்க போயிருப்பா? “ என்று மனதில் நினைத்தான்.
“ அம்மா, நான் என் என்ஃபீல்டை எடுக்க வந்தேன். மைரா அதுல சவாரி போகணும்னு சொன்னா அதனால நான் கிளம்புறேன், நான் உங்களுக்கு அப்புறம் போன் பண்றேன் “ என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு விரைந்து சென்ற தனது என்பீல்டின் சாவியை எடுத்துக்கொண்டவுடன் அங்கிருந்து கேஷவ் வெளியேறினான்.
அவள் நைனாவின் வீட்டிற்கு சென்றாளா என்று பார்க்க நைனாவின் வீட்டிற்கு சென்றான். அவன் கதவு மணியை அழுத்தியதும் அவனுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் நைனா கதவைத் திறந்தாள்.
“ அண்ணா, என்ன ஆச்சரியம்? மைரா உங்கள இங்க கூட்டிட்டு வந்தாளா? “ என்று நைனா கேட்க, “ மைரா உங்களுக்கு நைட்டு இல்ல இப்போ காலையில போன் பண்ணாளா ? “ என்று கேஷவ் அவசரமாக கேட்டான்.
“ இல்ல, ஆனா ஏன் கேட்குறீங்க ? மைரா எங்க? அவ நல்லா இருக்காளா ? “ என்று நைனா கேட்டதும், “ அவள காணும், அவ கிட்ட இருந்து தகவல் கிடச்சா எனக்கு சொல்லுங்க “ என்று கூறினான்.
“ திடீர்னு அவ காணாம போற அளவுக்கு என்ன நடந்துச்சு ? நேத்து அவ ரொம்ப மன அழுத்தத்துல இருந்தா “ என்று நைனா கவலையுடன் கூறினாள்.
“ நான் அவள கண்டுபிடிக்கனும், அவ கிட்ட இருந்து தகவல் கிடைச்சா எனக்கு சொல்லுங்க “ என்று மீண்டும் சொல்லிவிட்டு, அவன் அங்கிருந்து கிளம்ப, நைனா அவளைத் தேடிச் செல்ல விரைந்து தயாரானாள்.
கேஷவ் வருணிடம் தெரிவித்து, மைராவை தேட ஒரு குழுவை அமைத்தான். ஒரு மணி நேரத்திற்குள் அவளது கார் சில டோல் கேட்டுகளை தாண்டியிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். கேஷவை அழைத்துச் செல்ல வருண் கார் கொண்டு கேஷவை சந்தித்ததும் அவர்கள் விரைவில் மைராவைப் பிடிக்க ஓட்டத் தொடங்கினர்.
“ அவங்க கோயம்புத்தூர் போறாங்க நினைக்குறேன். அங்க அவங்களுக்கு யார தெரியும்? “ என்று வருண் கேட்டதும், “ அவ ஊட்டி போயிட்டு இருக்கா “ என்று சொன்ன கேஷவ், மைராவைக் கண்டுபிடித்ததாக நைனாவுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். பின்னர் அவன் ராகேஷை உதவிக்கு அழைத்தான்.
“ ராகேஷ், மைரா ஊட்டி வந்துட்டு இருக்கா. காட்டேஜ் சுத்தம் செய்யவும், அவளுக்கு சமைக்கவும் ஒருத்தர உடனே அனுப்பு. அவகிட்ட எந்த கேள்வி கேட்க வேண்டாம், அவள பார்த்துக்க, நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன் “ என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் அழைப்பை துண்டித்து டிரைவர் சீட்டில் அமர்ந்த கேஷவ், வருண் சென்னை திரும்புவதற்காக அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டான்.
கேஷவின் செய்தியைப் பெற்றவுடன் கொஞ்சம் ஓய்வெடுக்க நைனா ஒரு பூங்காவிற்கு காரில் சென்றாள். கொஞ்சம் தண்ணீரைக் குடித்தவள், மைராவின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள், ஆனாலும் கேஷவை விட்டு போகும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்ற பயத்தில் இருந்தாள்.
கான்கிரீட் பெஞ்சில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். சில நிமிடங்களில் அம்மாவிடம் இருந்து வந்த அழைப்புடன் அவளது மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது. தன் தாய்மாமாவின் மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு அவள் அம்மா அவளை வற்புறுத்தியதால் அவள் முனகி அழைப்பை துண்டித்தாள்.
பூங்காவை விட்டு கிளம்பும் தறுவாயில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த க்ரிஷ் கண்களை மூடிக்கொண்டு கண்ணீர் வழிய உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் நின்றாள். அவள் சட்டென்று அவனை நோக்கி நடந்து சென்று அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். தன் தோளில் ஏதோ தொட்டதை உணர்ந்த க்ரிஷ் திடுக்கிட்டான்.
“க்ரிஷ், நீ இங்க என்ன செய்ற, ஏன் அழற? “ என்று நைனா கேட்டதும், “ நைனா.. எதுவும் இல்ல. நான் கிளம்பப் போறேன். “ என்று பதில் கூறினான் க்ரிஷ்.
“ இரு க்ரிஷ், நேத்து ராத்திரி மைராவை சந்திச்சியா ? இங்க நீ அழறதுக்கும், மைரா காணாம போனதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ? “ என்று நைனா உறுதியான குரலில் கேட்டாள்.
“ மைரா.. காணுமா ? ஆனா நடந்த சம்பவத்துக்கு அப்புறம் நேத்து நைட்டு அண்ணா அவள அவர் கூட கூட்டிட்டு போனாரே. அவ எப்படி காணாம போனா? “ என்று க்ரிஷ் அதிர்ச்சியுடன் கேட்க, “ நேத்து நைட்டு என்ன நடந்துச்சு ? “ என்று நைனா கேட்டாள்.
“ ஒண்ணுமில்ல. “ என்று சொல்லி கிளம்பத் தயாராக இருந்த க்ரிஷை நிறுத்திய நைனா அவனை முறைத்தாள்.
“ நீ உண்மைய சொன்னா உனக்கு நல்லது இல்ல நீ ரொம்ப வருத்தப்படுவ “ என்று நைனா அவனை மிரட்டியதும், க்ரிஷ் விழுங்கி மைராவிடம் தான் செய்ததை ஒப்புக்கொண்டான். உடனே நைனா அவன் கன்னத்தை அறைந்த வேகத்தில் அவன் முகம் பக்கவாட்டில் திரும்பியது.
“ எவ்ளோ தைரியம் இருந்தா அவள காயப்படுத்தி இருப்ப ? “ என்று கேட்டு நைனா அவன் காலரை பிடித்து மீண்டும் அறைந்தாள். க்ரிஷ் அவளைத் தடுக்காமல் தரையில் விழுந்து விம்மி அழுதான்.
“நீ ஏன் அவள இப்படி பண்ண ? அவ உன்ன எவ்ளோ நம்பினா, உன்னால எப்படி அவளுக்கு துரோகம் செய்ய முடிஞ்சுது ? “ என்று நைனா கத்தினாள். அதற்கு க்ரிஷ் அவளிடம், “ அவளோட பாதுகாப்புக்காக இப்படி பண்ணேன், அவ வாழ்க்கைக்காக பண்ணேன் “ என்று சொன்னான்.
நைனா க்ரிஷை இழுத்து கான்கிரீட் பெஞ்சில் உட்கார வைத்து அவன் கழுத்தில் பாக்கெட் கத்தியை வைத்து எல்லாவற்றையும் சொல்லும்படி என்று மிரட்டினாள், ஆனால் க்ரிஷ் அவள் கையை தட்டிவிட்டான்.
“ எனக்கு இனி சாக எந்த பயமும் இல்ல, ஆனா நீ நான் சொல்ல போறத ரகசியமா வெச்சுக்குவனு சத்தியம் பண்ணா, நான் உன்கிட்ட சொல்றேன் “ என்று க்ரிஷ் சொன்னதும், நைனா வாக்குறுதி அளித்தாள். அதன் பின்னர் க்ரிஷ் எல்லாவற்றையும் அவளிடம் வெளிப்படுத்தத் தொடங்கினான்.
ஊட்டியில் காட்டேஜுக்கு சென்ற மைரா கதவு திறந்திருப்பதைப் பார்த்தாள். காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை, பணிப்பெண் புன்னகையுடன் வரவேற்றாள்.
“ நீநக இங்க என்ன செய்றீங்க ? இங்க யாராவது இருக்காங்களா? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டதும், “ இல்ல மேடம், நான் வாரத்துக்கு ரெண்டு முறை வந்து சுத்தம் பண்ணிட்டு தோட்டத்தையும் பார்த்துக்குவேன் ஆனா உங்கள இங்க பார்த்தது எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க குளிச்சிட்டு வாங்க, நான் உங்களுக்கு சமைச்சுடுறேன் “ என்று அந்த பணிப்பெண் கூறினாள்.
“ இல்ல வேணாம், எனக்கு பசி இல்லை. உங்க வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க. எனக்கு உங்க உதவி தேவைப்பட்டா நான் உங்கள கூப்பிடுறேன். நான் வந்தத பத்தி ராகேஷ் சார் கிட்ட சொல்ல வேண்டாம், நானே அவர சந்திக்கிறேன் “ என்று மைரா சொன்னதும், பணிப்பெண் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
மைரா குளித்து முடித்து வீட்டை விட்டு கிளம்பும் போது பேக் செய்த கேஷவின் சட்டை மற்றும் ஷார்ட்ஸை மாற்றிக்கொண்டு படுக்கையில் படுத்து மொபைலில் அவனது போட்டோவைப் பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் வாகனம் ஓட்டிய களைப்பில் தூங்கிவிட்டாள்.
மாலையில் பாத்திரங்களின் இரைச்சலைக் கேட்டு அவள் கண் விழித்தாள். புத்துணர்ச்சி பெற்று சமையலறைக்குள் நுழைந்தவள், கேஷவ் சமைப்பதைக் கண்டு கோசமும் ஆச்சரியப்படவில்லை. அவளைப் பார்த்து புன்னகையுடன் கைகளை விரித்து அருகே வரும்படி அவன் தலையை ஆட்டியதும் மைரா ஓடிச் சென்று அவனது கைகளுக்குள் ஒளிந்து கொள்ள கேஷவ் அவளை இறுக்கி அணைத்து அவள் தலைமுடியில் முத்தமிட்டான்.
மைரா உடனே மார்பில் சாய்ந்து விம்மி அழுதாள். கேஷவ் அவள் முகத்தை தன் உள்ளங்கையில் பற்றி அவள் உதடுகளை முத்தமிடடன். சில நொடிகளுக்குப் பிறகு மைராவும் அவனை முத்தமிட தொடங்கினாள், அவர்களின் உதடுகள் ஒத்திசைவில் அசைந்தன. கேஷவ் முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவள் கண்களில் தன் உதடுகளை பதித்தான்.
“ தயவு செஞ்சு என்ன தனியா விட்டு போகாதா “ என்று கேஷவ் கிசுகிசுத்ததும், “ ஸாரி “ என்று மைரா அழுதாள்.
“ உனக்கு உண்மையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரியுறதுக்கு பதிலா நான் எல்லாத்தையும் ஆரம்பத்துல சொல்ல அனுமதி தருவியா ? “ என்று கேஷவ் மெல்லிய குரலில் கேட்டதும், மைரா நீண்ட பெருமூச்சு விட்டு சரி என்று தலையை அசைத்தாள். அவள் கன்னங்களில் ஒரு முத்தம் கொடுத்த பிறகு, ஜூஸ் மற்றும் சாண்ட்விச் அடங்கிய தட்டுடன் அவளை படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான். அவளை கட்டிலில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
********************************************
முன்னோட்டம்:
“ உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் செத்து போயி இருப்பேன் அம்மு, என்னால உன்ன இப்படி பார்க்க முடியாது, தயவு செஞ்சு எழுந்து என்ன எவ்ளோ வேணும்னாலும் கிண்டல் செய். ஐ லவ் யூ அம்மு, நான் உன்ன அவ்ளோ லவ் பண்றேன், என்னால உன்ன இழக்க முடியாது மைரா, ப்ளீஸ் “
குறிப்பு: இனி வரும் அத்தியாயங்கள் பெரியதாக இருக்கும் அதோடு கேஷவ் தன் உணர்வுகளை பற்றி வெளிப்படுத்த போவதால் இடையில் என்னால் நிறுத்த முடியாது அதனால் இந்த அத்தியாயம் சிறியதாக வெளிடப்பட்டது. கேஷவின் பக்க கதையை கேட்க தயாராகுங்கள்.
