Home Family63. ஐ லவ் யூ மைரா

63. ஐ லவ் யூ மைரா

by Siragugal Novels
17 views

கேஷவ் காரை ஓட்டத் தொடங்கியதும் அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை. நகரின் புறநகர்ப் பகுதியை அடையும் வரை அவன் இலக்கின்றி காரை ஓட்டிக்கொண்டே இருந்தான். ஆளரவமற்ற ஒரு சாலையை அடைந்ததும், காரை நிறுத்தி, சுத்தமான காற்றுக்காக கார் கண்ணாடியை இறக்கினான்.

“ எப்படி இருக்க அம்மு ? “ என்று கேஷவ் மெல்ல கேட்டான்.

“ அவன் ஏன் அப்படி பண்ணான் ? ஒரு பொண்ண கட்டாயப்படுத்துறை ஆள் இல்ல அவன். நாம அவன கேட்கணும் கெட்சப். க்ரிஷ் என்கிட்ட அப்படி நடந்துகிட்டத என்னால நம்பவே முடியல. அதுக்கான காரணத்த அவன் கிட்ட இருந்து நான் தெரிஞ்சிக்கணும் “ என்று மைரா சொல்ல, “ செய்யலாம் ஆனா இப்போ இல்ல. முதல்ல நீ நல்லா இருக்கணும்னு நான் விரும்புறேன் “ என்றான் கேஷவ்.

மைரா சரி என்று தலையை ஆட்ட, கேஷவ் மீண்டும் காரை ஓட்ட ஆரம்பித்தான். சில நிமிடங்கள் கழித்து ஒரு ஆணும் பெண்ணும் கையில் குழந்தையுடன் உதவி கேட்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் ஒரு கார் பழுதடைந்திருந்தது போல தோன்றியது.

“ அம்மு அவங்களுக்கு உதவி செய்றதுல உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே ? அவங்க சார் பிரச்சன மாதிரி தெரியுது, கையில குழந்த வேற வெச்சுருக்காங்க “ என்று கேஷவ் கேட்டதும், “ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை “ என்றாள் மைரா.

கேஷவ் காரை நிறுத்த, அந்த ஆணும் பெண்ணும் மைராவின் பக்கத்தில் விரைந்தனர். கண்ணாடியை கீழே இறக்கிய மைரா, கல்லூரியில் படித்த அதே சீனியரை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

“ நீயா ? “ என்று அவள் அதிர்ச்சியோடு கேட்க, “ ஹலோ மைரா, இவங்க என் மனைவி அப்புறம் எங்க பொண்ணு. எங்க கார் ஸ்டார்ட் ஆகாம நடுவழியில நின்னுடுச்சு. ப்ளீஸ் சிட்டி போக எங்களுக்கு உதவ முடியுமா ? நான் அங்க இருந்து ஒரு வாடகை கார் புக் பண்ணி வீட்டுக்கு போயிடுவேன் “ என்று அந்த சீனியர் கேட்டதும், “ உள்ளே ஏறுங்க “ என்று கேஷவ் சொன்னான்.

அந்த சீனியர் தலையை குனிந்து டிரைவர் சீட்டில் இருந்த கேஷவைப் பார்த்து பயந்து விழுங்கினான்.

“ சார், நீங்களா? சார், நான் எந்த தப்பும் செய்யல, நான் இப்போ குடும்பத்தோட இருக்கேன். நான் உண்மையா உதவி தான் கேட்டேன். ப்ளீஸ் என்ன நம்புங்க. நான் இப்போ மாறிட்டேன் சார் “ என்று அவன் சொல்ல, கேஷவையும் அவனும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் போல் பேசிக்கொண்டிருப்பதை மைரா பார்த்தாள்.

“ இவர் என் புருஷன். உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் தெரியுமா ? “ என்று மைரா கேட்டதும், “ மைரா, உன்ன கிண்டல் பண்ணி கைய புடிச்சு இழுத்ததுக்கு என்னையும் காலேஜ்ல இருக்க மத்த பசங்களையும் அடிச்சது இவரு தான் “ என்றான் அந்த சீனியர்.

மைராவின் பார்வை இப்போது சீனியர் மீதோ அல்லது அவனது குடும்பத்தினர் மீதோ இல்லை, ஆனால் அவள் கேஷவைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் புருவத்தை சொறிந்து கொண்டும், கழுத்தை தேய்த்துக் கொண்டும் இருந்தான்.

“ மிஸ்டர் லேட் ஆகுது சீக்கிரம் உள்ளே ஏறுங்க “ என்று கேஷவ் சொன்னதும், அந்த குடும்பம் பின் இருக்கையில் அமர்ந்தது. கேஷவ் இன்னும் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மைராவை திருட்டுத்தனமாக பார்க்கத் தொடங்கினான், ஆனால் குழந்தை அழத் தொடங்கியபோது அவளுடைய மயக்கம் உடைந்தது.

மைரா பின்புற கண்ணாடி வழியாக தம்பதியினரைப் பார்த்தாள், அவர்கள் குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர், விரைவில் குழந்தை தூங்கிவிட்டது. அவர்கள் நகரத்தை அடைந்ததும் அந்த குடும்பம் இறங்கி, அவன் தனது விசிட்டிங் கார்டை மைராவிடம் கொடுத்தான்.

“ உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி. அன்னைக்கு உன் புருஷனோட கோவத்துக்கு காரணம் எனக்கு இப்போ தான் புரியுது. உங்க கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள். நீங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் “ என்று அவன் சொல்ல, மைராவும் கேஷவும் தலையை அசைத்து, கேஷவ் மீண்டும் காரை ஓட்ட ஆரம்பித்தான், கேஷவ் காரை நிறுத்தும் வரை யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

“ நாம ஏன் இங்க வந்துருக்கோம் ? “ என்று மைரா கேட்க, “ உன்ன சந்திக்கனும்னு சொன்னவர இங்க தான் வர சொல்லி இருக்கேன் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

அவன் இறங்கி அவளுக்காக கார் கதவைத் திறந்தான். வீட்டின் கதவைத் திறந்து அவளை கீழ்த்தளத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான்.

“ மைரா முகம் கழுவி ரெடியா இரு, நான் ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் சென்றதும், மைரா படுக்கையில் உட்கார்ந்து அன்று மாலையில் நடந்த அனைத்தையும் அவள் மனம் அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.

“ எனக்காக சண்ட போட்டது கேஷவ், அப்போ அந்த பரிசு ? க்ரிஷ் அதையெல்லாம் கொடுக்கலைனா வேற யாரா இருக்கும் ? கேஷவ் – ‘K’ ,  அது அவரா இருக்குமோ? வெளியில இருந்து ஒருத்தர் என் வீட்டுல  ஒரு பரிசை வைக்க வழி இல்ல, ஆனா அவர் ஏன் ‘K‘ என்ற பெயருல பரிசை வைக்கணும் ? அதனால தான் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி கெட்சப் எனக்கு கொடுத்த மஞ்சள் ரோஜாக்கள் என் மனசுக்கு அந்த பழைய ஞாபகத்த கொடு வந்துச்சா ? “ என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கிடார் சத்தம் கேட்டு எழுந்து நின்றவள், மர்மப் பாடகரின் அதே குரலைக் கேட்டு திடீரென்று நின்றாள்.

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்

மைரா அந்த பாடல் கேட்ட திசையை நோக்கி ஒடி, ஒரு கதவின் முன் நின்றாள். அவள் கதவைத் திறந்து பார்த்தபோது, கேஷவ் ஒரு சோபாவில் அமர்ந்து கையில் கிடாரைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் – என்று கேஷவ் அவளை பார்த்து பாடுவதை பார்த்து, தடுமாறி சுவரில் சாய்ந்து அவன் பாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப்
பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி

அந்த வரிகளை கேட்டு மைராவின் கன்னங்களில் கண்ணீர் வழிவதை உணர்ந்தாள், கேஷவ் அவளிடம் சென்று அவள் முன் மண்டியிட்டு தனது பாடலைத் தொடர்ந்தான்.

இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு
போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி

மைராவின் நெஞ்சு கனத்தது, இப்போது கிடாரை தரையில் வைத்த கேஷவைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் விழுங்கினாள். அவன் அவள் கையைப் பிடித்து அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் அவள் விரல்களில் முத்தமிட்டான்.

“ நான் தான் உன்னோட மர்ம பாடகர் அம்மு, இது என்னோட  மூன்றாவது வேலை, ஆனா இத ஒரு வேலையா இல்லாம எனக்கு புடிச்சு சந்தோஷமா செய்றேன் ஏன்னா நான் உனக்காக இத செய்றேன், உனக்காக மட்டும். ஐ லவ் யூ அம்மு “ என்று கேஷவ் கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போன மைரா, தன் ஆத்மாவை அடையும் தீவிரம் கொண்ட அவன் கண்களை நோக்கி பார்வையைத் திருப்புவதற்கு முன் அவன் கைகளைப் பார்த்தாள்.

“ என்ன சொல்றீங்க ? “ என்று முணுமுணுக்க, “ ஐ லவ் யூ மைரா, இன்னைக்கு இல்ல, நேத்து இல்ல பல வருஷமா நான் உன்ன லவ் பண்றேன், உன்ன லவ் பண்ண தான் நான் சுவாசிக்குறேன் “ என்றான் கேஷவ்.  

“ கெட்சப் “ என்று மைரா மெல்ல அவனை அழைக்க, “ காதல் ஒரு கலையா இருந்தா நீ என்னோட பிக்காசோவா இருக்க நான் விரும்புறேன் மைரா “ என்று கேஷவ் உணர்வுப்பூர்வமாக கூறினான்.

“ இல்ல, நீங்க உண்மையா இத சொல்லல. இதெல்லாம் பொய்னு சொல்லுங்க. உங்களால என்ன லவ் பண்ண முடியாது. நீங்க வேற ஒருத்தரை லவ் பண்ணும் போது என்கிட்ட எப்படி இப்படி சொல்ல முடியும்? “ என்று கேட்டு மைரா குழப்பத்துடன் வேகமாக தலையை மறுத்து ஆட்டினாள்.

“ நான் உனக்கு எப்படி நிரூபிப்பேன் மைரா? “ என்று கேஷவ் கேட்க, “ தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க. இந்த காதல் விளையாட்ட நிறுத்துங்க. எனக்கு அலுத்துப் போச்சு “ என்று சொல்லி மைரா கண்ணீர் சிந்த, அவன் அவள் கையைப் பிடித்து தன் மார்பில் வைத்துக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டு பெருமூச்சு விட்டபடி அவள் உள்ளங்கையை மென்மையாக வருடினான்.

“ ஐ லவ் யூ மைரா. அப்பவும் நீ தான், இப்பவும் நீ தான், எப்பவும் நீ மட்டும் தான் இங்க இருப்ப. கொஞ்சம் கூட சோர்வடையாம உன்ன லவ் பண்ணிட்டே இருப்பேன் மைரா ஏன்னா உன்ன லவ் பண்ண மட்டும் தான் நான் வாழுறேன். காதலோட அர்த்தம் என்னனு கூட தெரியாத வயசுல இருந்து உன்ன லவ் பண்றேன். என் மனசு முழுக்க நீ தான் இருக்க, என் மனசுல இத்தன வருஷமா சொல்லாம மறைச்சு வெச்சுருந்த என்னோட காதல உன் கிட்ட இப்போ சொல்றேன் மைரா. என் உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவும் உன்ன லவ் பண்ணுது, இந்த உலகத்துல சொல்ல முடியாத எல்லைய தாண்டி நான் உன்ன லவ் பண்றேன் “ என்று கேஷவ் கூறினான்.

அவன் சொன்னதை கேட்டு மைராவின் தோள் தளர்ந்தது, அவள் உடல் தன் உணர்வுகளை இழந்தது, அவள் கால்கள் தளர்ந்தன, அவள் தரையில் விழுவதற்குள் கேஷவ் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவளை இழுத்து சோபாவில் உட்கார வைத்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்தான்.

“ அம்மு என்ன பாரு. நான் பல வருஷமா உன்கிட்ட என்னோட லவ் பத்தி சொல்ல தவிச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் என்னால சொல்ல முடிஞ்சுது “ என்று கேஷவ் சொல்ல, “ எப்படி? நீங்க லவ் பண்றதா சொன்னீங்க ? “ என்று மைரா தடுமாறி கேட்டாள்.

“ அது நீ தான் அம்மு, நான் உன்ன எப்பவுமே லவ் பண்ணிட்டு தான் இருந்தேன், உனக்கு ஆச்சரியமா, அதிர்ச்சியா இருக்கும்னு எனக்கு தெரியும் ஆனா இது தான் உண்ம. இன்னைக்கு உன்ன இங்க கூட்டிட்டு வந்து உன்கிட்ட என் லவ் சொல்ல பிளான் பண்ணி இருந்தேன் ஆனா அவ எல்லாத்தையும் கெடுத்துட்டா. உண்மைய சொல்லனும்னா நீ கேட்ட ரெண்டு நாளுக்கு அப்புறம் நீ என்கிட்ட திரும்பி வந்ததும் எல்லாத்தையும் சொல்ல நான் தயாரா இருந்தேன், ஆனா இன்னைக்கு நீ இப்படி உடைஞ்சு போனத பார்த்ததும் நான் முடிவ மாத்திட்டேன். இன்னைக்கு நடந்த சம்பவத்துல இருந்து வெளியே வர உனக்கு நேரம் தேவைனு நெனச்சேன் ஆனா இன்னைக்கு சொல்லியே ஆகணும்னு முடிவு பண்ணேன் “ என்று சொன்ன கேஷவ் தயங்கியடி “ அப்புறம் …. “ என்று சொல்ல தடுமாறி இழுத்தான்.

“ அப்புறம் என்ன ? “ என்று மைரா கேட்டதும், “ நம்ம படுக்கையில இருந்த அந்தப் பரிசுகள பார்த்த அப்புறம் “ என்று கேஷவ் சொல்லும் போதே குறுக்கிட்ட மைரா, “ அது … அதெல்லாம் … நீங்க தான் அனுப்பினீங்களா ? அந்த பரிசு எல்லாம் ? “ என்று திக்கி திணறி கேட்டாள்.

கேஷவ் ஆம் என்று தலையை அசைக்க, மைரா அதிர்ச்சியுடன் கண்ணீர் கன்னங்களில் உருள அவனைப் பார்த்தாள்.

அவள் உடல் எந்த எதிர்வினையும் காட்டாமல் கண்களில் கண்ணீர் மட்டும் வழிவதை பார்த்து கேஷவ் அமைதியிழந்தான். அவள் கண்ணீரைத் துடைத்தவன், அவளை இழுத்து அவள் தலைமுடியைக் கோதினான்.

“ ஐ லவ் யூ மைரா, நீ என்ன லவ் பண்ணலனா கூட பரவாயில்ல, ஆனா தயவு செஞ்சு என் கூட பேசு, நான் உன் கூட இருக்குறதுல சந்தோஷமா இருப்பேன். ஐ லவ் யூ அம்மு “ என்று சொன்ன கேஷவ் அணைப்பில் இருந்து பின்வாங்கி அவள் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ என்று இடைவிடாமல் முணுமுணுத்தான்.

“ ஐ லவ் யூ “ என்று மைரா மெல்லிய குரலில் சொன்னதை  கேட்டதும் அவனது செயல்கள் சட்டென்று நின்று போயின.

“ என்ன சொன்ன ? “ என்று அவன் கேட்க, “ ஐ லவ் யூ “ என்று மீண்டும் சொன்னாள் மைரா.

தன் காதல் வென்றதை அறிந்த கேஷவ் தன் ஆன்மா தன் உடலைத் திருப்பிக் கொடுத்ததை போல உணர்ந்தான், அவன் உதடுகள் துடித்தன. அவனது உள்ளங்கை அவள் கன்னத்தைத் தொட எத்தனிக்க, மைரா அவனைத் மெதுவாக தடுத்தாள்.

“ என் கடந்த காலம் தெரியுமா? நான் யார லவ் பண்ணேன்  தெரியுமா? நீங்க சொல்லி நான் கேட்கனும்னு ஆசைப்படுறேன் அதனால அது யாருனு சத்தமா சொல்லுங்க “ என்று மைரா கேட்டுக்கொண்டதும், “ க்ரிஷ் “ என்று கேஷவ் கூறினான் ஆனால் அந்தப் பெயர் அவன் உதடுகளில் இருந்து வெளிவந்தவுடனேயே மைரா அவன் காலரை பிடித்து அவனை பலமாக உலுக்கினாள்.

“ இல்ல, நீங்க சொன்னது தப்பு, உண்மைய சொல்ல போனா நான் தான் தப்பு பண்ணிட்டேன். இத்தன வருஷமா நான் ஒரு முட்டாளா இருந்துருக்கேன். சில முட்டாளுங்க என்ன கிண்டல் பண்ண அப்போ எனக்காக சண்ட போட்டவர நான் லவ் பண்ணேன், என் கைய புடிச்சு இழுத்த ஒருத்தன அடிச்சு அவன் கைய உடைச்சவர நான் லவ் பண்ணேன், எனக்கு கையாலேயே பரிசு செய்ய முழு நேரத்தையும் எடுத்துக்கிட்டவர நான் லவ் பண்ணேன், அந்த பரிசு ஒவ்வொன்னும் அவர் என் மேல வெச்சுருந்த அன்பையும், அத உருவாக்க செலவழித்த நேரத்தையும் எனக்கு காட்டுச்சு, எனக்கு பிடிச்ச மஞ்சள் ரோஜாக்கள பரிஸா கொடுத்தவர லவ் பண்ணேன், எனக்காக எல்லாத்தையும் பண்ண அந்த “ K “ அவர தான் லவ் பண்ண ஆரம்பிச்சேன். நான் என்னோட 16 வயசுல இருந்து அவர லவ் பண்ணேன் “ என்று சொல்லி மைரா கதறி அழுதாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்டு கேஷவ் உறைந்து போனான், அவனது இதயம் வேகமாக துடித்து விலா எலும்புக் கூட்டில் மோதியது. மைரா இப்போது அவன் கழுத்து வளைவில் தலை வைத்து அழுது கொண்டிருந்தாள்.

“ மைரா “ என்று கேஷவ் மெல்ல அழைத்ததும், மைரா தலையை நிமிர்த்தி ரத்தச் சிவப்பேறிய கண்களால் அவனைப் பார்த்தாள். அவள் ஆத்திரத்தில் பற்களைக் கடித்துக் கொண்டு அவனது சட்டை காலரை பிடித்து இழுத்தாள்.

“ ஆனா உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? க்ரிஷ் தான் எல்லாத்தையும் பண்ணதா நெனச்சேன், அவன் தான் எனக்கு பரிசு, பூ, சாக்லேட் எல்லாம் கொடுத்தான்னு நெனச்சேன். அதோட விளைவு என்ன தெரியுமா? அவனோட செயல்கள் எல்லாம் என் மேல அவனுக்கு காதல்னு நெனச்சு என்ன நானே முட்டாளாக்கி இருக்கேன். என் வாழ்க்கையில நான் லவ் பண்ணாத ஒருத்தனுக்காக நான் அழுது இருக்கேன், வேற பொண்ணுக்காக என்ன விட்டு போனதா யாரோ ஒருத்தனுக்கு அழுதேன், நான் துண்டு துண்டாக உடைஞ்சு போனேன், என் வாழ்க்கையில இல்லாத ஒரு சம்பவத்துக்காக என் இதயம் நொறுங்கி போச்சு “ என்று சொல்லி மைரா உடைந்து போனாள்.

“ மைரா, என்ன மன்னிச்சிடு, நீ என்ன லவ் பண்ணது எனக்கு தெரியாது “ என்று கேஷவ் சொல்ல, அவனை மேலும் பேச விடாமல் தடுத்த மைரா, “ வேணாம், இத்தன வருஷமா மௌனமா என்ன லவ் பண்ணீங்க அதனால இன்னைக்கும் நீங்க அமைதியா இருப்பீங்க, நான் பேசுவேன். அந்த “கே” எழுதுனதுக்கு பதிலா உங்க பெயர நீங்க எழுதி இருந்தா நாம இப்போ பல வருஷமா ஒன்னா இருந்திருக்கலாம். நீங்க வெளிப்படையா இருந்திருந்தா இத்தன நாள் நான் மனசு உடைஞ்சு அந்த சூனியக்காரிகிட்ட அவமானப்பட்டு இருக்க மாட்டேன். இது க்ரிஷ், ரோஷினியோட தப்பு இல்ல, இது என் தப்பு கூட இல்ல, ஆனா நீங்க தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. உங்க மேல மட்டும் தான் தப்பு, என்ன காயப்படுத்துனது க்ரிஷ் இல்ல, நீங்க தான் கேஷவ், நீங்க தான் என்ன உடைச்சீங்க, என் இதயத்த நொறுக்கிட்டீங்க, உங்க மேல எனக்கு இருந்த காதலுக்கு வேற ஒருத்தரோட பெயர கொடுக்க வெச்சீங்க, நான் லவ் பண்ண மனுஷனுக்கு வேற முகம் கொடுத்ததுக்கு நீங்க தான் காரணம். எல்லாம் உங்களால தான் “ என்று சொல்லி அவள் அவனைத் தள்ளிவிட்டு எழுந்து கிளம்ப முயன்றாள், ஆனால் கேஷவ் வேகமாக எழுந்து அவள் பின்னால் ஓடி சென்று அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.

“ அம்மு, இதெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியாது. என் லவ் பத்தி சொல்லாம இருந்ததுக்கு காரணம் இருந்துச்சு. தயவு செஞ்சு அம்மு. நான் பண்ணத நியாயப்படுத்தல, ஆனா ப்ளீஸ் நான் சொல்றத கேளு. க்ரிஷ் உன் மேல அதிக உரிமையா இருந்தான் அதனால நான் எதுவும் செய்யல. நான் அவன காயப்படுத்த விரும்பல “ என்று கேஷவ் விளக்கம் சொன்னதும், “ நீங்க சொல்றது சரி தான், உங்க தம்பிய நீங்க காயப்படுத்த விரும்பல, அதனால என்ன துண்டு துண்டா உடைக்க முடிவு பண்ணிட்டீங்க. நீங்க என் மேல வெச்சுருந்த காதல விட உங்க தம்பி மேல உங்களுக்கு  இருந்த அன்பு அதிகம், அதனால நீங்க அவனோட சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து என் ஆன்மாவ சிதச்சுட்டீங்க “ என்று அழுதாள் மைரா.

“ இல்ல, ப்ளீஸ் அப்படிச் சொல்லாத மைரா. நான் சுவாசிக்க ஒரே காரணம் நீ தான், நீ தான் என் ஆக்ஸிஜன் அம்மு. தயவு செஞ்சு நான் சொல்றத கேளு, எனக்கு ஒரு வாய்ப்பு கொடு “ என்று கேஷவ் கெஞ்சி அவளை தன் முகத்துக்கு நேராக திருப்பி முகமெங்கும் முத்தமிட்டு, கண்ணீர் நிறைந்த அவளது முகத்தில் ஒட்டியிருந்த கூந்தலை ஒதுக்கினான்.

“ பல வருஷமா நான் ஒரு மாயையில வாழ்ந்துட்டு இருந்துருக்கேன். நீங்க என்ன இவ்ளோ லவ் பண்ணி இருந்தா அப்போ ஏன் என்கிட்ட சொல்லாம இருந்தீங்க ? என் வாழ்க்கையில இவ்ளோ கஷ்டத்த அனுபவிக்க நான் என்ன பாவம் பண்ணேன்.  அண்ணன், தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து என் வாழ்க்கையில விளையாடிட்டீங்க “ என்று மைரா சொன்னாள்.

“ மைரா, ப்ளீஸ்.. ப்ளீஸ் ப்ளீஸ் … தயவு செஞ்சு அம்மு, நான் மட்டும் தான் தப்பு பண்ணேன்னு ஒத்துக்குறேன், எல்லா தப்பும் பண்ணது நான் தான், அதுக்காக நீ எனக்கு தண்டன கொடு ஆனா தயவு செஞ்சு அழாத மைரா, நீ அழறத பார்த்து என் இதயம் வலிக்குது. நான் என் லவ் பத்தி சொல்லாம இருந்ததுக்கு முக்கிய காரணம் நான் பலவீனமா இருந்தேன், நீ உடைஞ்சு போறத பார்க்க கொஞ்சம் கூட தைரியம் இல்லாம பலவீனமா இருந்தேன் ஆனா இதெல்லாம் நடக்கும், நான் தான் உன்ன இந்த அளவுக்கு காயப்படுத்துவேணு நான் ஒரு நாளும் கனவுல கூட நினைக்கல. என்கூட வா, இன்னைக்கு நான் எல்லாத்தையும் சொல்றேன் “ என்று கேஷவ் அவளை அழைத்தான்.

“ கடந்த ரெண்டு நாளா நான் நிறைய கேட்டு, அனுபவிச்சுடேன் அதனால எனக்கும் கொஞ்சம் இடைவெளி கொடுங்க, என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க “ என்று மைரா மெல்லிய குரலில் கூறினாள்.

“ இன்னைக்கு நைட்டு நாம வீட்டுக்கு வர மாட்டோம்னு அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கேன். நாம இங்கேயே இருக்கலாம். இந்த வீட்ட பத்தி உனக்குத் தெரிய வேண்டாமா? இது நம்ம வீடு அம்மு, உன் மேல இருக்குற காதலுக்காக இத கட்டினேன், உனக்கு புடிச்ச மாதிரி எல்லாத்தையும் செலெக்ட் பண்ணி இருக்கேன். இது உன் வீடு, அம்மு. நான் உன் ராஜா அப்படினு நீ சொன்ன தானே ? எனக்கு என் ராணி என் பக்கத்துல இருக்கனும்.  ப்ளீஸ் நாம இங்க இருக்கலாம் “ என்று கெஞ்சியபடி கேஷவ்  அவளை கீழ்த்தளத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று அலமாரியில் இருந்து ஒரு துண்டை எடுத்தான். அவள் முன் குனிந்து அவள் முகத்தை துண்டால் துடைத்தான். அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்.

***************************************

முன்னோட்டம்:

“ உனக்கு உண்மையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரியுறதுக்கு பதிலா நான் எல்லாத்தையும் ஆரம்பத்துல சொல்ல அனுமதி தருவியா ? “

அடுத்த அத்தியாயம்

You may also like

1 comment

Leave a Comment

error: Content is protected !!