அறைக்குள் நுழைந்த கேஷவ் தனுக்கு முன்னால் இருந்த காட்சியை பார்த்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியடைந்து நின்றான். கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, படுக்கையின் நடுவில் தலையணைகளை வைத்துக் கொண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த மைராவை நோக்கி நடந்தான்.
“ இவ வருத்தப்பட்டு படுக்கையில் ஒரு தடுப்பு சுவர் கட்டுற அளவுக்கு நான் என்ன பண்ணேன் ? அது எதுவா இருந்தாலும், இது நடக்க நான் அனுமதிக்க மாட்டேன், என் கனவுல கூட நடக்க விட மாட்டேன் “ என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒரு குறும்புச் சிரிப்புடன் ஷார்ட்ஸை மாற்றிக் கொண்டு சட்டை அணியாமல் மைராவின் அருகில் இருந்த சிறிய இடத்தில் படுத்துக் கொண்டான், ஆனால் மைரா கட்டிலில் உட்கார்ந்து கட்டிலின் மறுபுறம் நகர்ந்தாள்.
“ அந்த பக்கம் அழுக்கா இருக்கு அதனால தான் நீ இப்படி தலையணை வெச்சுருக்கனு நெனச்சேன். என்ன நடந்துச்சுன்னு சொல்லு அம்மு. நான் உன்ன காயப்படுத்துற மாதிரி ஏதாவது செய்தேனா? “ என்று கேட்டு கேஷவ் அவள் பக்கத்தில் நின்று அவள் மீது சாய்ந்து தன் உள்ளங்கையை அவளருகே வைத்தான். மைரா போர்வையை இழுத்து முகத்தை மறைக்க, கேஷவ் அதை கீழே இழுத்து அவள் கன்னத்தில் முத்தமிட முயன்றான், மீண்டும் மைரா தன் உள்ளங்கையை வைத்து அவன் தன்னை முத்தமிட விடாமல் தடுத்தாள்.
“ இப்போ நான் என் பொண்டாட்டிய கிஸ் பண்ண கூடாதா? “ என்று கேஷவ் கேட்க, “ நான் ஏன் என்ன கிஸ் பண்ண உங்கள அனுமதிக்கனும் “ என்று கேட்டாள் மைரா.
கேசவ்:
அடி நேந்திகிட்டேன்
நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
மைரா அவனை தள்ள அவன் மார்பில் தன் கையை வைத்தாள், ஆனால் கேஷவ் அவளது மணிக்கட்டைப் பிடித்து அவள் மீது புரண்டு அவளை அவன் தன் மேல் இழுத்தான்.
நேத்திகடன் தீர்க்கலேனா
கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
மைரா கண்ணீருடன் விம்ம, கேஷவ் அவள் நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான்.
“ நீ இப்படி கண்ணீர் வடிச்சிட்டு இருந்தா என்னால போக முடியாது “ என்று கேஷவ் சொன்னதும், “ நீங்க டெல்லி போன அப்புறம் நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். நான் தனியா இருக்க பழகிக்கனும் அதனால இப்ப என்ன போக விடுங்க “ என்று சொல்லலி விம்மி அழுதாள்.
“ அடுத்த மூணு மாசம் நாம தனியா இருப்போம், இப்போ நான் உன் பக்கத்துல இருக்கும் போது நாம ஏன் விலகி இருக்கணும். தயவு செஞ்சு இப்படி செய்யாத மைரா. நீ தனிமையா உணராம இருக்க என்னால ,முடிஞ்ச வர முயற்சி செய்றேன். இப்போ எனக்கு பிடிச்ச உன்னோட சிரிப்ப கொடு அம்மு “ என்று சொன்ன கேஷவ், அவள் கன்னத்தை மெதுவாக கடித்து அவள் முகத்தை வருட ஆரம்பித்தான். மைரா அவனது முத்தத்தைத் திருப்பிக் கொடுத்தாள். தூக்கம் அவர்களை ஆட்கொள்ளும் வரை அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
காலையில் கேஷவும் மைராவும் பகல் பொழுதை கழிப்பதற்காக தங்கள் வீட்டிற்குச் சென்றனர். வீட்டுக்கு சென்றவுடன் வசதியான உடைகளை மாற்றிக்கொண்டு சோபாவில் கட்டிப்பிடித்து படம் பார்த்தார்கள்.
“ உங்க வேலைய பத்தி எனக்குத் தெரியும், ஆனா அதுல இருக்க ஆபத்து பத்தி எனக்குத் தெரியாது. நீங்க இப்படி ஒரு வேலை விஷயமா போறத முதல் முறை நான் பார்க்குறேன், எனக்கு பயம் இல்லனு நான் சொல்ல மாட்டேன் ஆனா நீங்க பாதுகாப்பா இருப்பீங்கன்னு நீங்க எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க. இத்தன வருஷத்துக்கு அப்புறம் நாம வாழ்க்கையில ஒன்னு சேர்ந்து இருக்கோம் அதனால நீங்க என்ன பண்ணாலும் கவனமா இருக்கனும்னு நான் விரும்புறேன் “ என்று மைரா மெல்லிய குரலில் அவனிடம் கூறினாள்.
“ முதல் விஷயம் என் வேலையில எனக்கு எந்த ஆபத்தும் வராது, அப்படியே இருந்தாலும் என்ன பாதுகாக்க நான் ட்ரைனிங் எடுத்துருக்கேன், அது உனக்கு நல்லா ஞாபகம் இருக்கட்டும். டெல்லியில இருக்க வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு இருக்கு. இரண்டாவது விஷயம், கல்யாணத்துக்கு முன்னாடியே உன்ன மனசுல வச்சுக்கிட்டே இருந்தேன். உனக்காக நான் பாதுகாப்பாவும் உயிருரோடையும் இருக்க விரும்பினேன், அதனால நீ என்ன அனுப்புற மாதிரியே உன்கிட்ட திரும்பி வருவேன் “ என்று கேஷவ் அவளுக்கு உறுதியளித்தான்.
“ டெல்லியில இருக்க வீடு என்ன ஆகும் ? “ என்று மைரா கேட்க, “ நான் அத வித்துடுவேன், அந்த பணத்த வெச்சு இங்க ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க முதலீடு செய்யலாம் இல்ல நம்ம லயா அகாடமிக்கு இன்னும் நிறைய கிளை ஆரம்பிக்கலாம் “ என்று கேஷவ் தன் மனதில் இருந்த யோசனையை சொன்னான்.
“ நீங்க டெல்லியில இருந்தா லயா எப்படி நம்ம வாழ்க்கையில வருவா? “ என்று கேட்டு மைரா சிணுங்க, “ எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழமை என் அம்மு கிட்ட வருவேன். கல்யாணத்துக்கு முன்னாடியும் நான் அப்படித் தான் செஞ்சேன். இந்த தடவ உன்ன பார்க்க நான் ஒளிய வேண்டிய அவசியம் இல்ல. ஒரு வாரம் கழிச்சு நான் உன்ன சந்திக்க வரும் போது நீ எப்படி நடந்துக்குவ ? “ என்று கேஷவ் பதிலுக்கு அவளிடம் கேட்டான்.
“ எனக்குத் தெரியாது. நான் அழலாம், உங்க மேல குதிச்சு கட்டிப்புடிக்கலாம், உங்கள அறைவேன், இல்ல மயக்கம் போட்டு விழலாம் “ என்று மைரா சொன்னதை கேட்டு சிரித்த கேஷவ், “ நீ என்ன கிஸ் பண்ணி வரவேற்பனு நெனச்சேன் “ என்று சொன்னான்.
“ எனக்கு பசிக்குது, ஏதாவது சமைப்போம் “ என்று மைரா சொன்னதும் கேஷவ் சோபாவில் இருந்து இறங்க, மைரா அவன் முதுகில் குதித்து தன் கால்களை அவன் இடுப்பில் கட்டிக்கொண்டாள். கேஷவ் சிரித்தபடி அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றான். அவளை கிட்சன் மேடையில் உட்கார வைத்து கொஞ்சம் தூக்கி அவள் அணிந்திருந்த ஷார்ட்ஸை கழட்டினான்.
“ நீ என் சட்டை மட்டும் போட்டு கச்சிதமா இருக்க “ என்று அவன் சொல்ல, “ நீங்க ஏன் இவ்ளோ உயரமா வளர்ந்தீங்க ? உங்க சட்ட என் தொடை வரை மட்டும் தன் எட்டுது பாருங்க “ என்று மைரா முகம் சுளித்தாள்.
“ நான் உயரமா இல்ல அம்மு, நீ தான் குள்ளமா இருக்க “ என்று சொல்லி கேஷவ் சிரித்தான். மைரா அவன் தலைமுடியை இழுக்க, அவன் அவள் கையைப் பிடித்து அவள் உதடுகளை வேகமாக முத்தமிட்டு அவளை அமைதிப்படுத்தினான்.
“ நான் சும்மா கிண்டல் பண்ணிட்டு இருந்தேன். என் கைக்குள்ள வெச்சு உன்ன கட்டிப்புடிக்க நீ பொருத்தமா இருக்க. இப்போ எனக்கு ஒரு கிஸ் கொடு, நான் உனக்கு ஏதாவது ஸ்பெஷலா சமைக்கிறேன் “ என்று கேஷவ் சொன்னான்.
மைரா தன் கால்களை அவனைச் சுற்றி வளைத்து அவன் உதடுகளை முத்தமிட்டதும் கேஷவ் முனகியபடி அவள் கழுத்தை மெல்ல பிடித்து முத்தத்தை ஆழப்படுத்தினான். அவனது உள்ளங்கை அவள் தொடையை வருடியபோது மைரா முனகினாள். அவள் அவனை முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, அவளை பார்த்து புன்னகைத்தான்.
“ நம்ம ரொமான்ஸ் ஆசையோட லிஸ்ட்ல முதல் ஆசைய ஆரம்பிப்போம், என்ன பாரு மைரா “ என்று கேஷவ் சொன்னதும் மைரா அவன் கண்களைப் பார்த்தாள். இருவரும் மீண்டும் முத்தமிட ஆரம்பித்து, தங்களோ மறந்து காதல் செய்தனர். அவர்கள் உச்சம் அடைந்த போது மைரா அவன் கன்னத்தைக் கடித்தாள். அவர்களின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவன் அவளை விருந்தினர் அறையில் உள்ள பாத்ரூமுக்கு தூக்கி சென்றான்.
இருவரும் குளித்து முடித்து வெளியே வந்ததும் அவன் அவளை படுக்கையில் கிடத்தினான்.
“ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. இன்னைக்கு நாள் முழுக்க உனக்கு நிறைய எனெர்ஜி தேவைப்படும் அதானல நான் உனக்கு லஞ்ச் சமைச்சு கொண்டு வரேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு மைரா சிரிக்க, இடுப்பில் துண்டை கட்டியபடி கேஷவ் வெளியே சென்றான்.
ஒன்றரை மணி நேரம் கழித்து தன் இடுப்பைச் சுற்றி ஒரு ஜோடி கைகளை இருப்பதை உணர்ந்து மைரா அவன் முதுகில் தன் கன்னத்தை அழுத்தி அவனை அணைத்துக் கொள்வதை பார்த்து கேஷவ் புன்னகைத்தான். அவன் திரும்பி அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் முகத்தை வருடினான்.
“ இன்னும் 30 நிமிஷத்துல சாப்பாடு ரெடி ஆயிடும் அம்மு “ என்று கேஷவ் சொல்ல, அவன் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பி இருப்பதை மைரா பார்த்தாள். அவன் தலைமுடியைப் பின்னுக்குத் தள்ளி, வியர்வையைத் தன் சட்டையின் கையால் துடைத்துக் கொண்டாள். பின்னர் அவள் மேடையில் உட்கார்ந்து அவன் சமைக்க அழகாக நகர்த்துவதைப் பார்த்தாள்.
“ நீ போய் சிஷிமாருவுக்கு சாப்பாடு போடு, நான் சாப்பிட எல்லாம் ஏற்பாடு பண்றேன் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா மேடையில் இருந்து கீழே குதித்து டைனிங் டேபிளில் இருந்த ஷார்ட்ஸை அணிந்து கொண்டு கொல்லைப்புறத்திற்கு சென்றாள். காதுக்குப் பின்னால் தன் ரோமங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த மைராவைப் பார்த்து ஷிஷிமாரு குரைக்கவும் வாலை ஆட்டவும் தொடங்கியது.
“ பசிக்குதா ஷிஷிமாரு ? “ என்று மைரா கேட்டதும் ஷிஷிமாரு பதிலுக்கு குரைக்க, மைரா நாய்க்கு உணவையும் தண்ணீரையும் கொடுத்து அது அவசரமாக சாப்பிடுவதைப் பார்த்தாள். மைரா அவன் அருகில் அமர்ந்து அவன் ரோமங்களைத் தடவிக் கொடுத்து அவன் உணவை முடிக்கக் காத்திருந்தாள். பின்னர் திரும்பி சென்று பார்த்த போது கேஷவ் உணவை மேஜை மீது வைத்து அவளுக்காக காத்திருந்தான்.
கை கழுவி விட்டு அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். கேஷவ் அவளுக்கு பிடித்த லசாக்னே மற்றும் கிரில் காய்கறிகளை பரிமாறினான். மைரா அவன் கன்னத்தைக் கிள்ளி ஒரு போர்க் ( fork ) கொண்டு லசாக்னை எடுத்து முதலில் அவனுக்கு ஊட்டினாள்.
“ நீ நல்லா ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடனும் அம்மு, எனக்கு ஆதாரம் வேணும். நான் வாங்கி கொடுக்கும் போது மட்டும் தான் ஐஸ்கிரீம் சாப்பிட உனக்கு அனுமதி. நான் இல்லாத நேரத்துல நீ உடம்புக்கு முடியாம இருக்குறத நான் விரும்பல “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க ப்ராமிஸ் பண்ண மாதிரி எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழம என்ன சந்திக்க வரவரைக்கும் நீங்க சொல்ற எல்லாத்தையும் நானும் செய்வேன் “ என்றாள் மைரா.
“ உன்ன பார்க்காம நான் ரொம்ப நாள் தங்கியிருந்தது மாமாவும் அத்தையும் உனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணின நேரம் தான். நான் உன்ன விட்டு ரொம்ப நாள் விலகி இருக்க மாட்டேன் மைரா. உன்ன பார்க்காம நான் பைத்தியமாயிடுவேன் “ என்று சொன்னபடி கேஷவ் அவளுக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தான், மைராவும் அவனுக்கு உணவளித்தாள். ஒரு தட்டின் மூடியைத் திறந்து ஆப்பிள் பையை மைராவின் முன் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு ஊட்டினான்.
மாலையில் மைரா கண்விழித்த போது கேஷவ் குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தான், அவனது ஒரு கை அவளை சுற்றி இருந்தது. தரையில் கிடந்த சட்டையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள். கண்ணாடி முன் நின்று விம்மலை அடக்க உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டாள். அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, அவள் பிரதிபலிப்பைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ பைத்தியமா மைரா உனக்கு, நீ அழுதா அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்காதுனு உனக்கு தெரியாதா? நாளைக்கு அவர் கிளம்பும் போது நீ அவர கஷ்டப்படுத்த கூடாது. சிரிச்சு சந்தோஷமா அவர வழி அனுப்பு “ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு குளித்து முடித்து கேஷவை எழுப்பினாள்.
தங்கள் குடும்பத்தினருடன் இரவு உணவை சாப்பிட இருவரும் கிளம்பி வீட்டுக்கு சென்றனர்.
மருத்துவமனையில் ரோஷினி கிரில் கேட்டில் சாய்ந்து உட்கார்ந்து காலியான காரிடாரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அஜய் நைட் ஷிப்ட் என்பதால் ரவுண்ட்ஸ் வந்து ரோஷினியின் அருகில் நின்றான்.
“ மாத்திரை சாப்பிட்டு இந்நேரம் நீ தூங்கி இருக்கணுமே, ஏன் இன்னும் கண் முழிச்சி இருக்க ? “ என்று அஜய் அவளிடம் கேட்டதும், “ மனசுல முழுக்க கஷ்டம் நிறைஞ்சு இருக்கும் போது எந்த மாத்திரையும் நிம்மதியோ தூக்கத்தையோ தராது “ என்று சொன்ன ரோஷினி, தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்து கசப்புடன் புன்னகைத்தாள். அஜய் ஆர்வமாக மோதிரத்தைப் பார்த்து சோகமாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்த அவளைப் பார்த்தான்.
“ நீ போய் தூங்கு, அப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கும் “ என்று அஜய் கூறினான்.
“ துரோகம் மட்டும் மனசுல நிறைஞ்சு இருக்கும் போது எதுவும் எனக்கு நிம்மதிய கொடுக்காது. அவன் என்ன விட்டு ஒருநாளும் போக மாட்டேன்னு சொன்னான், அவன் என்ன எப்பவும் லவ் பண்ணுவேன்னு சத்தியம் பண்ணான். என்ன கல்யாணம் பண்ணிக்குறதா சொல்லி இந்த மோதிரத்த கொடுத்தான் ஆனா எல்லாம் பொய். அவனால எப்படி எனக்கு துரோகம் செய்ய முடிஞ்சுது ? “ என்று சொல்லி அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்டு அஜய் வருத்தமடைந்து கேட்டின் அருகில் இருந்த சுவரில் சாய்ந்தான்.
“ வெளிய சொன்னா உன் மனசுக்கு ஆறுதலா இருக்கும்னா என்கிட்ட சொல்லலாம் ஆனா அதுக்கு அப்புறம் தூங்க போகணும். யார் உனக்குத் துரோகம் பண்ணாங்க, எதுக்காக உன்ன இங்க அனுப்பினாங்க ? “ என்று அஜய் நிதானமாக கேட்டான்.
“ க்ரிஷ், என் அத்த பையன். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப அதிகமா ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணோம். நான் அப்படி தான் நெனச்சேன். அவன் என் மேல ரொம்ப பாசமா இருந்தான், எனக்கு நிறைய பரிசு வாங்கி தருவான், என்ன படம் பார்க்க கூட்டிட்டு போவான், நாங்க நிறைய ஊர் சுத்துனோம். ஒரு கனவு உலகத்துல நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ சந்தோஷமா இருந்தோம். அவனோட 25 வது பிறந்த நாள் அன்னைக்கு எங்க முழு குடும்பத்துக்கு முன்னாடி என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டு ப்ரொபோஸ் பண்ணான். நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன் ஆனா என் சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. அவனோட சின்ன வயசு friend மருமகளா வரணும்னு அவன் அப்பா,அம்மா விரும்பினாங்க அதனால எங்க கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் அவன் சண்ட போட ஆரம்பிச்சான். அவன் வேலைய சாக்கு சொல்லி என்ன தவிர்க்கத் தொடங்கினான், நான் அவன நம்பினேன், ஆனா அவன் உண்மையில அவனோட friend கூட இருந்துருக்கான் “ என்று சொல்லி ரோஷினி முதலை கண்ணீர் வடித்தாள்.
“ அவன் உன்ன தானே லவ் பண்ணான் அப்புறம் ஏன் உன்ன தவிர்த்தான் ? “ என்று அஜய் கேட்டதும், “ அவ அவன எனக்கு எதிரா நடக்க செஞ்சா. அவங்க எனக்கு தெரியாம சந்திக்குறாங்கனு எனக்கு தெரிஞ்சதும் நான் அவன் கிட்ட அழுதேன். நான் என் சுயமரியாதைய இழந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவன் கிட்ட கெஞ்சினேன். க்ரிஷ் கிட்ட இருந்து என்ன பிரிப்பேன்னு அவ என்கிட்ட சவால் விட்டா, அதுல ஜெயிச்சுட்டா ஆனா எனக்கு இன்னும் நம்பிக்கை இருந்துச்சு. என் அப்பா, அம்மா எனக்காக அவனோட அப்பா, அம்மா கிட்ட அழுதாங்க ஆனா அவங்க கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவங்களா மாறிட்டாங்க. எங்களுக்கு துரோகம் பண்ணதுக்கு என் அப்பா அவரோட தங்கச்சி கூட கடுமையா சண்ட போட்டாரு அப்புறம் அவங்க மேல கேஸ் போடுவேன்னு அவங்கள மிரட்டினாரு “ என்று ரோஷினி சொல்லும் போது குறுக்கிட்ட அஜய், “ கேஸ் பதிவு பண்ணீங்களா ? “ என்று அவளோடு கேட்டான்.
“ நாங்க உண்மையிலேயே அவங்கள குறைச்சு மதிப்பு போட்டுட்டோம். டெல்லியில வேலை பார்த்துட்டு இருந்த அவங்க மூத்த மகன் திரும்பி வந்து எங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தான். அவன் சிபிஐயில கூடுதல் இயக்குனரா இருக்கான். அவன் என்ன சென்னைய விட்டு போக சொல்லி மிரட்டினான். நான் வேற வழி இல்லாம சென்னைய விட்டு பெங்களூருக்கு போனேன். அங்க நான் என் அப்பா, அம்மா கூட வாழ்ந்தேன் ஆனா அந்த பொண்ணுக்கு அதுல கூட திருப்தி இல்லாம போச்சு. அவ எல்லாரையும் எனக்கு எதிரா திருப்பினா, அவனோட அண்ணன் அவனோட செல்வாக்கு, அதிகாரத்த பயன்படுத்தி போலீஸ மூலமா என்ன கடத்தினான். என்ன மயக்கமடைய வெச்சு யாருக்கும் தெரியாம என்ன ஒரு ரூம்ல அடைச்சு வெச்சுருந்தான். நைட்டோட நைட்டா நான் NPD நோயால பாதிக்கப்பட்டு இருக்கேன்னு போலி டாக்டர் ரிப்போர்ட் வாங்கி என்ன இங்க அனுப்பிட்டான். என் அப்பா, அம்மா பாதுகாப்பா இருக்காங்களானு எனக்குத் தெரியல. அவனோட அதிகாரத்த எதிர்த்து என்னால போராட முடியல. நான் இங்க செத்து போகணும்னு என் விதி இருக்கு போல. அன்புக்கும் கருணைக்கும் இந்த உலகத்துல மதிப்பே இல்ல. அவங்கள மாதிரி ஆளுங்க தான் சந்தோஷமா வாழ்க்கைய வாழ முடியும் “ என்று சொல்லி ரோஷினி நெஞ்சை பிடித்துக் கொண்டு அழுதாள்.
அஜய் தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டு ரோஷினி விம்மி விம்மி அழுகையே கட்டுபடுத்திக் கொண்டாள்.
“ தயவு செஞ்சு என் மேல பரிதாபப்படவோ இல்ல அன்பான வார்த்தையோ பேசவோ வேண்டாம். நான் என் மனசுல இருந்தத எல்லாத்தையும் சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிடு “ என்று ரோஷினி சொல்ல, “ இரக்கம் காட்டுறது என் வேலை இல்ல. நான் இந்த இடத்த பாதுகாக்குறேன், என் வேலை அதோட முடியுது. இப்போ தூங்க போ “ என்று சொல்லிவிட்டு அஜய் விலகிச் செல்ல, ரோஷினி ஒரு புன்னகையுடன் படுக்கைக்குத் திரும்பினாள்.
“ முட்டாள் நான் சொல்றத கேட்க நீ ஆரம்பிச்ச அப்போவே என் வலையில விழுந்துட்ட. இங்க இருந்து எனக்கு சுதந்திரமும், என் பழிவாங்கலுக்கான திறவுகோல் நீ தான் “ என்று மனதில் நினைத்து ரோஷினியின் நிம்மதியாக உறங்கினாள்.
********************
முன்னோட்டம்:
“ அந்தக் கதவுகள தாண்டி நான் போனதும் நீ அழாம இருக்குறது நல்லது. நான் டெல்லி போன உடனே உனக்கு போன் பண்ணுவேன். உன் கண்ணு சிவந்து, வீக்கம் இல்லாம இருக்கணும், இல்லனா சனிக்கிழமை நைட்டு உன்ன தண்டிப்பேன் “
