Home Family93. உன்னால என்ன அரெஸ்ட் பண்ண முடியாது

93. உன்னால என்ன அரெஸ்ட் பண்ண முடியாது

by Siragugal Novels
9 views

ரோஷினியின் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மைரா, விழுங்கினாள்.

“ மைரா பேபி.. நான் திரும்ப வந்துட்டேன் “ என்று ரோஷினி சொல்ல, மைராவைப் பிடித்திருந்த நபர் அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார். மைரா அதற்கு ஆமோதிப்பது போல் தலையை அசைத்தாள். அவள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதும், அந்த நபர் மைராவை தனக்கு பின்னால் இருத்தி அறையை விட்டு வெளியேறினார். ரோஷினி கையில் கத்தியுடன் சுற்றும் முற்றும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ மைரா வெளிய வந்து என்ன பார்க்க மாட்டியா ? உன் புருஷனோட சொந்தக்கார பொண்ணு வந்துருக்கேன், உனக்காக ஸ்பெஷலா நான் ஒன்னு கொண்டு வந்துருக்கேன் “ என்று ரோஷினி சொன்னாள்.

“அவளுக்கு என்ன ஸ்பெஷல் கொண்டு வந்துருக்க ?” என்று வந்த குரல் கேட்டு ரோஷினி பயத்தில் தன் இடத்தில் திடுக்கிட்டு  திரும்பினாள். பாக்கெட்டில் கைகளை வைத்துக் கொண்டு கேஷவ் நிற்பதையும், அவன் கையைப் பிடித்தபடி மைரா அவனருகே நிற்பதையும் கண்டதும் அவள் தடுமாறி தரையில் விழுந்தாள்.

“ சொல்லு, என் பொண்டாட்டிக்கு என்ன கொண்டு வந்துருக்க ? “ என்று கேஷவ் மீண்டும் கேட்டு, ரோஷினிக்கு அருகில் தரையில் கத்தியை பார்த்து கோபத்தில் கொதித்தான். அவன் ரோஷினியை நோக்கி நகர்ந்தான், ஆனால் மைரா மறுப்பாக தலையை அசைத்தபடி அவனைத் தடுத்தாள்.

“ நீயா ? நீ எப்படி இங்க ? “ என்று ரோஷினி திக்கி தடுமாறினாள்.

“ அது ஒரு பெரிய கதை, அதனால நாம உட்கார்ந்து இத பத்தி பேசலாமா? “ என்று ரோஷினியிடம் சொன்ன கேஷவ், “ அம்மு  எனக்காக கதவை திறந்து விடு “ என்று மைராவிடம் சொன்னான்.

மைரா விரைந்து சென்று கதவைத் திறந்தாள், ஆனால் வருண் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆனந்த் கைகள் கட்டப்பட்ட ஒருவரைப் பிடித்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அவள் அவர்களை உள்ளே அனுமதித்ததும், அஜய் விலங்கிடப்பட்டு வருணின் பிடியில் இருந்ததைக் கண்டு ரோஷினி அதிர்ச்சியடைந்தாள்.

“ அஜய்யா? “ என்று ரோஷினி அதிர்ச்சியில் கேட்க, கேஷவ்  பல்லைக் கடித்துக்கொண்டு அஜய்யின் காலரைப் பிடித்து இழுத்தான். அவனை உதைத்து தன் முன் மண்டியிட வைத்து முகத்தில் குத்தினான். அஜய் வலியால் அலறி, தன்னை அடிப்பதை நிறுத்துமாறு கேஷவிடம் கெஞ்சினான். கேஷவ் இரக்கமற்றவனாக இருப்பதைக் கண்டு மைரா கண்களை மூடிக்கொண்டாள்.

ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் ரோஷினியின் பெற்றோருடன் உள்ளே நுழைந்தனர், பெண் கான்ஸ்டபிள் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டு  ரோஷினியிடம் விரைந்து சென்று அவள் கைகளை விலங்கிட்டார்.

“ என்ன போக விடு முட்டாள். கேஷவ் பாஸ்டர்ட் என்ன விடு “ என்று ரோஷினி கத்தியதும் மைரா பல்லைக் கடித்துக் கொண்டு ரோஷினியின் கூந்தலைப் பிடித்து அறைந்தாள்.

“ யார பாஸ்டர்ட் சொல்ற ? யாரையும் நிம்மதியா வாழ விடாத நீ தான்டி சூனியக்காரி. நீயெல்லாம் ஒரு மனுஷியா ? என்ன ஜென்மம் நீ ? “ என்று மைரா கத்தினாள். கேஷவ் மைராவை பின்னால் இழுத்து அவளை அமைதிப்படுத்த அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான்.

“ ரோஷினி, நீ ஏன் இங்க வந்த? நாம இந்த சிட்டி விட்டு போகலாம்னு தானே பேசினோம் ? இப்ப என்ன ஆச்சு பாரு “ என்று ரோஷினியின் அப்பா அவளை முறைத்தார்.

கேஷவ் சில அழைப்புகளை செய்து விட்டு தான் அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பி மைராவை இழுத்துத் தன் அருகில் உட்கார வைத்தான். செக்யூரிட்டி ஒரு உணவுப் பையோடு உள்ளே நுழைந்ததும், வருண் இன்ஸ்பெக்டர் மற்றும் பிற கான்ஸ்டபிள் காலை உணவை சாப்பிட்டனர்.

“ கெட்சப், நீங்க ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலையா ? நீங்க பசியோட இருப்பீங்க “ என்று மைரா சொன்னதும், கேஷவ் அவள் காதருகே குனிந்து, “ வீட்டுக்கு போனதும் எனக்கு புடிச்ச சாப்பாடு சாப்பிடுறேன் “ என்று அவள் காதில் மட்டும் ரகசியமாக பேசினான்.

மைரா வெட்கி முகம் சிவந்து அவனை இடித்து தள்ளி சிரித்தாள். அவள் அலுவலக அறைக்குள் நுழைந்து அவளுக்காக கொண்டு வந்த ஜூசை அவனிடம் கொடுத்தாள். கேஷவ் ஜூஸை குடித்து  உதட்டை துடைத்து அவளை பார்த்து கண்ணடித்தான்.

“ நீ அந்தப் பன்றி கூட ரொமான்ஸ் பண்ணி முடிச்சிட்டா என்ன போக விடுடா முட்டாள். ஒரு தைரியமான ஆம்பளையா என் மேல கேஸ் போடு. நான் கோர்ட்டுல கேஸ் எதிர்த்து போராடுறேன் “ என்று ரோஷினி சீறினாள்.

ஒரு கணம் தணிந்த கோபம் இப்போது பழிவாங்கும் வெறியுடன் மீண்டும் எழுந்து கேஷவின் கண்களில் அனல் பறந்தது. மைராவை அவமானப்படுத்தியதற்காக அவன் ரோஷினியின் கழுத்தை நெரித்தான். வருண் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆனந்த் கேஷவை இழுக்க முயன்று தோல்வியடைந்தனர். மைரா தனது ஈரமான கண்களால் அவனிடம் கெஞ்சினாள், அது உடனடியாக அவனை அமைதிப்படுத்தி அவன் ரோஷினியை தன் பிடியிலிருந்து விடுவித்ததும் அவள் மயங்கி விழுந்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து முழு குடும்பமும் அகாடமிக்கு வந்தது, ரோஷினியையும் அவளது பெற்றோரையும் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

“ கேஷவ், நீ எப்போ டெல்லியில இருந்து வந்த ? இவங்க எல்லாரும் ஏன் இங்க இருக்காங்க ? இங்க இருக்க மத்தவங்க யாரு ? “ என்று அர்ச்சனா குழப்பம் மற்றும் பதற்றத்துடன் கேட்டார்.

ரோஷினி செய்த அனைத்தையும் கேஷவ் அவர்களுக்கு விளக்கினான். அவனது வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவன் பெண் கான்ஸ்டபிளிடம் ரோஷினி மீது தண்ணீரை ஊற்றுமாறு கூறினான். தண்ணீர் கொட்டப்பட்டவுடன் ரோஷினி இருமிக் கொண்டே எழுந்தாள்.

நைனாவும், க்ரிஷும் மைராவின் அருகில் நிற்க, வசுந்த்ரா மைராவை அணைத்துக் கொண்டார். அர்ச்சனா தன் அண்ணனிடம் சென்று அவரை பார்த்து அருவருப்பான முகத்தை வைத்துக் கொண்டார்.

“ உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் நான் எவ்ளோ நல்லது பண்ணி இருக்கேன் அதுக்கு நீங்க செய்ற பிரதிபலனா இது ? ஏன் எங்க குடும்பத்த நிம்மதியா வாழ விட மாட்டேங்குறீங்க ? தப்பு என் மேல தான். உங்க பொண்ண என் வீட்ல தங்க அனுமதி கொடுத்துருக்க கூடாது. அப்போ என் குடும்பம் இதையெல்லாம் அனுபவிச்சு இருக்காது “ என்று அர்ச்சனா கோவமும், விரக்தியும் கலந்த குரலில் சொன்னார்.  

“ உங்க பொண்ணு கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லி நான் உங்கள எச்சரிக்கலையா? நான் உங்க மேல இரக்கம் காட்டி உங்க பொண்ண ட்ரீட்மென்ட் எடுக்க அனுப்பினேன் ஆனா அவ என்ன பண்ணி இருக்கா பாருங்க ? அங்கிருந்து தப்பிச்சு வந்து என் மனைவிய கொலை செய்ய பார்த்துருக்கா “ என்று கேஷவ் கர்ஜித்தான்.

“ தயவு செஞ்சு அவள மன்னிச்சிடு கேஷவ், எங்கள போக விடு. நாங்க இங்கிருந்து எங்காவது ரொம்ப தூரம் போயிடுறோம் “ என்று ரோஷினியின் அப்பா கெஞ்சினார். அப்போது குறுக்கிட்ட மதன், “ அவ்ளோ சுலபமா உங்கள போக விட முடியாது. நீங்களும் உங்க பொண்ணும் எங்க குடும்பத்துக்கு பண்ண எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணும். அவளோட மிரட்டலுக்கு என் பையன் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பான்? எல்லாத்தையும் தனியா அனுபவிச்சு இருக்கான். உங்க பொண்ணு அவ பண்ண எல்லாத்துக்கும் தண்டனை கிடைக்கும்னு பயப்படலையா ? “ என்று கேட்டார்.

“ மைராவுக்கு அவ கொடுத்த சித்திரவதைக்கு என்ன பதில் சொல்லுவீங்க ? எங்க மைரா அவளால தினமும் அழுதா, என் பொண்ண அவமானப்படுத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினா இவ அவ மட்டும் அர்ச்சனாவுக்கு சொந்தமா இல்லாம இருந்திருந்தா நானே அவள கழுத்த நெரிச்சு கொன்னுருப்பேன் “ என்று வசுந்தரா கத்தினார்.

“ கொடூரமான நாயே, மைராவ கொல்ல நீ இங்க வந்தியா? “ என்று கேட்டு நைனா ரோஷினியிடம் விரைந்து சென்று அவளை அறைந்தாள். அவள் அறைந்த சத்தம் அறை முழுவதும் எதிரொலித்தது. க்ரிஷ் நைனாவின் பின்னால் பாதுகாப்பாக நின்று அவளது காயம்பட்ட கையைப் பிடித்துக் கொண்டான். நைனா முகத்தைச் சுளித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

“ அவசரப்பட்டு இந்த கையால எதுவும் செய்யாத. வேணும்னா உன்னோட கால் ரெண்டையும் பயன்படுத்து “ என்று க்ரிஷ் சொன்னதும் நைனா புன்னகைத்தபடி ரோஷினியை இன்னொரு அறை விட்டாள், அதற்குள் மைரா அவளை பின்னுக்கு இழுத்தாள்.

“ நீ ஒரு துரோகி, நல்லவ மாதிரி நடிச்சு கொலை செய்ய இங்க வந்தியா ? “ என்று அஜய் கேட்டதும், கேஷவ் தன் சட்டையின் கையை சுருட்டி அஜய்யின் காலரைப் பிடித்துக் கொண்டு முகத்தில் குத்தினான். ஆனால் மூச்சிரைப்பு கேட்டு அர்ச்சனா மற்றும் வசுந்தராவின் பயந்த முகங்களைக் கண்டான்.

“ அப்பா, மாமா நீங்க அம்மாவையும் அத்தையையும், கூட்டிட்டு போங்க, நான் உங்கள வீட்ல பார்க்குறேன் “ என்று கேஷவ் சொன்னதும் மதனும், ராஜனும் சரி என்று சொல்லி அர்ச்சனாவையும் வசுந்த்ராவையும் வெளியே அழைத்துச் சென்றனர். அவர்கள் வெளியே சென்றதும் கேஷவ் அஜய்யை குத்த ஆரம்பித்தான்.

“ அந்த இடத்த பாதுக்காக்குறது தான் உன் வேலை ஆனா நீ என்ன பண்ண ? இந்த பிச்சக்காரி வடிச்ச முதல கண்ணீர பார்த்துட்டு நீ அவ வலையில விழுந்து அவள வெளிய தப்பிக்க விட்டு இருக்க. அவ என்ன பண்ணா கேட்டியா ? இனி எல்லா குற்றத்துக்கும்  அவளுக்கு நீ உடந்தையா இருந்தனு உன் மேல கேஸ் போடுவேன் “ என்று சொல்லி கேஷவ் அவனை கண்மூடித்தனமாக அடித்தான்.

“ சார், நான் நீங்க நினைக்குற மாதிரி ஆள் இல்ல. நான் அவ மேல பரிதாபப்பட்டு அவ வலையில விழுந்துட்டேன். அவ யாரையோ கொல்ல வந்துருக்கானு எனக்குத் தெரியாது “ என்று அஜய் அழுதான்.

“ அவளோட தந்திரத்துக்கும் மயங்க வேண்டாம்னு உனக்கு டாக்டர் சொல்லலையா ? எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டு இருக்கும் போது உன்னால முடியலையா ? “ என்று கேட்டு கேஷவ் அவனை அறைந்து கையை முறுக்கி உதைத்தான். உதடுகள் கிழிந்து  மூக்கில் ரத்தம் வழிய அஜய் தரையில் விழுந்தான். அவன் பயந்து வேகமாக பின்னால் நகர்ந்து காயம்பட்ட கையைப் பிடித்துக் கொண்டு சுவரில் சாய்ந்தான். கேஷவ் ரோஷினியின் அருகில் சென்று அஜயின் விரலில் வழிந்த ரத்தத்தை டிஷ்யூ பேப்பரால் துடைக்க, வருண் அவனருகில் சென்றான்.

“ உனக்கு முன்னாடி நான் எப்படி இங்க வந்தேன்னு உனக்குத் தெரியனுமா ? “ என்று கேஷவ் கேட்க, “ உனக்கு இருக்க மனநில கோளாறு காரணம் சொல்லி நீ பண்ண குற்றத்துள இருந்து தப்பிக்க வழி இருக்கு அதனால உனக்கு எதிரா எங்களுக்கு வலுவான அதாரம் ஒன்னு தேவைப்பட்டுச்சு. உன்ன அங்க அனுப்பிட்டு நாங்க உன் மேல ஒரு கண்ணு வெச்சுருந்தோம் “ என்று வருண் கூறினான்.

“ இந்த முட்டாள் உன் வலையில விழுந்துவிட்டான், ஆனா செக்யூரிட்டி என் ஆளு. உன்ன வெளிய அனுப்ப அவன் செக்யூரிட்டி கிட்ட பேசின உடனே அவர் எனக்கு போன் பண்ணி என்ன பண்ணனும்னு கேட்டாரு. ஹாஸ்பிடல்ல இருந்து நீ கிளம்புன நொடியில இருந்து என் ஆளுங்க உன்ன follow பண்ண நான் ஏற்பாடு செய்ய எனக்கு போதுமான நேரம் இருந்துச்சு. உன் அம்மாவுக்கு போன் பண்ண நீ மொபைல் வாங்குனவரு கூட என் ஆளு தான்.

நீ சென்னை வந்த உடனே இன்ஸ்பெக்டர் ஆனந்த் அவரோட ஆளுங்கள வெச்சு உன்ன follow பண்ணாரு. உன்ன இங்க அகாடமிக்கு கூட்டிட்டு வந்த ஆட்டோ டிரைவரும் அவர் ஆள் தான். உன்ன வரவேற்க சென்னைக்கு பறந்து வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தேன் “ என்று கேஷவ் நடந்ததை சொல்லி முடித்து சிரித்தான்.

“ நான் நேத்து நைட்டு திருவனந்தபுரம் போய் அங்க இருந்து கார் மூலமா ஹாஸ்பிடல் போனேன். இந்த பைத்தியக்காரன கூட்டிட்டு திரும்பவும் சென்னைக்கு வந்தேன். இன்ஸ்பெக்டர் ஆனந்த் என்ன ஏர்போர்ட்ல இருந்து கூட்டிட்டு அப்படியே ஹோட்டலுக்கு போய் உன் அப்பா, அம்மாவ கூட்டிட்டு நாங்க இங்க வந்து சேர்ந்தோம். அப்பாடா! நீ எங்க எல்லாருக்கும் நிறைய பிரச்சன கொடுத்துட்ட “ என்று ரோஷினியிடம் சொன்ன வருண் பின்னர் கேஷவை பார்த்து, பாஸ், ரொம்ப டயர்டா இருக்கு, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். “ என்று சொல்ல, கேஷவ் சிரித்தபடி வருணின் தோளில் கை போட்டான்.

‘ சார், நான் விடிய காலையில இருந்து ரயில்வே ஸ்டேஷன்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், இந்த லேடிய follow பண்ணி ஹோட்டலுக்கு போனேன் “ என்று லேடி கான்ஸ்டபிள் சொன்னதை கேட்டு, “ உங்களுக்கு அதுக்கு சன்மானம் கிடைக்கும், இது ரொம்ப ஸ்பெஷல் கேஸ் “ என்று இன்ஸ்பெக்டர் ஆனந்த் கூறினார்.

“ மிஸ்டர் ஆனந்த், ப்ளாக்மெயில், பாலியல் துன்புறுத்தல், மார்ஃபிங், கஸ்டடியில இருந்து தப்பிச்சது அப்புறம் கொலை முயற்சி கேஸ்  இவ மேல போடுங்க. இவள அரெஸ்ட் பண்ணுங்க, இவ பண்ண எல்லா குற்றத்துக்கும் ஆதாரம் நான் உங்களுக்கு கொடுக்குறேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ உன்னால என்ன அரெஸ்ட் பண்ண முடியாது. நான் ஒரு நோயாளி, நீ என்ன ஹாஸ்பிடல் தான் அனுப்ப முடியும் “ என்று ரோஷினி சீறினாள்.

“ டாக்டர் அவரோட கவனக்குறைவுக்கு பொறுப்பேத்து, நீ ஆரோக்கியமா, ரொம்ப நல்லா இருக்குறதா சர்டிபிகேட் கொடுக்க சம்மதிச்சிட்டாரு. அவர் ஒரு அரசு மருத்துவர் அப்புறம் நீ தங்கி இருந்தது ஒரு அரசாங்க ஹாஸ்பிடல் அது தெரியுமா உனக்கு ? நீ அங்க தங்க நான் ஸ்பெஷல் ஏற்பாடு பண்ணேன் “ என்று கேஷவ் ஏளனமாய் கூறினான்.

“ பாஸ், அவளுக்கு கஸ்டடியில இருந்து தப்பிச்ச குற்றம் மேல சந்தேகம் இருக்கும் போல “ என்று வருண் சொன்னான்.

“ உன் மேல கேஸ் எதுவும் போடாம நாங்க உன்ன அந்த ஹாஸ்பிடல் அனுப்பினோம்னு நெனச்சியா ? இல்ல, நாங்க எல்லாத்தையும் சட்டப்பூர்வமா தான் பண்ணோம். உன் ஆரோக்கியத்த கண்காணிக்க நீதிமன்ற உத்தரவோட உன்ன ஹாஸ்பிடல் அனுப்பினோம். இப்போ நீ நல்லா இருக்குறதா டாக்டர் சொல்லிட்டாரு அதனால உன் வாழ்நாள் முழுக்க இனி நீ ஜெயிலுல இருக்க தேவையான அதாரம் எங்க கிட்ட இருக்கு “ என்று ஆனந்த விளக்கினார்.

“ இவளோட அப்பா, அம்மா அப்புறம் ரொம்ப முக்கியமான ஆள் இங்க இருக்காரு. கொஞ்சம் கூட யோசிக்காம யாருக்கு வேணும்னாலும் உதவுற அன்பான மனுஷன மறந்துட வேணாம். அவளுக்கு உதவியா இருந்ததா சொல்லி இவங்க மூணு பேரு மேலையும் கேஸ் போடுங்க “ என்று கேஷவ் உத்தரவிட்டான்.

“ சார், ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க. நான் என் வாழ்க்கையில இனி யாருக்கும் உதவி செய்ய மாட்டேன் “ என்று அஜய் கெஞ்சி கதறினான்.

“  அவ கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லி உன்கிட்ட சொன்ன அப்போ நீ இத பத்தி யோசிச்சு இருக்கனும். முதல் தடவ நீ அவளோட அப்பா அம்மாகிட்ட பேச உதவி செஞ்ச அப்போ உன்ன விட்டுட்டேன். அவள அங்க அனுப்பிட்டு அவள சுத்தி என்ன நடக்குதுனு கவனிக்காம என் இடத்துல உட்கார்ந்திருக்க நான் ஒரு முட்டாள்னு நெனச்சியா ? “ என்று கேஷவ் கேட்டதும் அஜய் அதிர்ச்சியடைந்தான்.

“ உங்களுக்கு எல்லாம் தெரியுமா ? அப்போ நீங்க ஏன் என்ன எச்சரிக்காம இருந்தீங்க ? எல்லாத்தையும் ஆரம்பத்துல இருந்தே ஏன் நிறுத்தல? “ என்று அஜய் கேட்டதும், “ முதல் முறையா புத்திசாலித்தனமா இருக்க. நான் உன்ன தடுத்திருந்தா இப்போ இருக்க மாதிரி இவளுக்கு எதிரா எனக்கு இவ்ளோ அதாரம் கெடச்சு இருக்காது “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

கேஷவ் சொன்ன அனைத்தையும் கேட்ட ரோஷினி, “ தந்திரக்காரப் பாஸ்டர்ட் “ என்று அவனை திட்டினாள்.

“ என் மைராவ காயப்படுத்த நெனச்சா அது யாரா இருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காம அவங்கள கொன்னு போட்டுடுவேன். ஆனா நீ அவள கொல்லத் திட்டம் போட்டு இருக்க. நான் உன்ன அவ்ளோ சுலபமா விடுவேன்னு நெனச்சியா ? உன்ன அரெஸ்ட் பண்றதோட எல்லாம் முடிஞ்சிடும்னு நினைக்காத. நீ ஜெயிலுக்கு போன அப்புறம் அங்க உனக்கு இன்னும் நிறைய சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்றேன். “ என்று கர்ஜித்த கேஷவ் பின்னர் வருணை பார்த்து, “ வருண், இவ சோறு தண்ணி கேட்டு பிச்ச எடுக்கணும். அங்க இருக்க மோசமான கைதி யாருனு பார்த்து இவ கூட ஒரே ரூம்ல போடு “ என்று உத்தரவிட்டான்.

“ தண்டனை காலம் முடிஞ்சு இவளோட அப்பா, அம்மா சீக்கிரம் வெளிய வர வாய்ப்பு இருக்கு. அவங்கள என்ன செய்யலாம் மிஸ்டர் கேஷவ் “ என்று ஆனந்த் கேட்டதும், “ அவங்கள முதியோர் இல்லத்துக்கு அனுப்புங்க, வாழ்நாள் முழுக்க அங்கேயே வேலை செய்யட்டும் “ என்றான் வருண்.

கேஷவ் அவனைப் பார்த்து புன்னகைத்து அவன் யோசனையை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.

“ மைரா, எல்லாம் உன்னால தான். நீ என்ன வெற்றிகரமா அழிச்சிட்ட, இப்போ சந்தோஷமா ? “ என்று ரோஷினி கேட்க, “ உன் வாழ்க்கைய நான் கெடுக்கல ரோஷினி. நீ தான் உன் வீட்ட, உன் வாழ்க்கைய அழிச்ச. உன் அப்பா, அம்மாவ பாரு, அவங்களுக்கு  நீ என்ன கொடுத்துருக்க, உனக்கு உதவி பண்ண நண்பன பாரு. உன்ன சுத்தி இருந்த எல்லாரையும் நீ அழிக்க மட்டும் தான் செஞ்ச. நீ விதைச்சத இன்னைக்கு அறுவடை பண்ணி இருக்க “ என்று மைரா கூறினாள்.

“ சரி, நான் உன்ன பார்த்து பொறாமைப்பட்டேன், உன்ன மிஞ்ச எல்லாத்தையும் பண்ணேன்னு ஒத்துக்குறேன். இப்போ உன் புருஷன் கிட்ட சொல்லி என்ன விட சொல்லு. நான் இனி உங்கள ஒரு நாளும் தொந்தரவு செய்ய மாட்டேன் “ என்று ரோஷினி சொன்னதும், நைனா சிரித்தபடி முன்னால் செல்ல, க்ரிஷும் மைராவும் அவளுக்குப் பின்னால் சென்றார்கள்.

“ எங்கள பத்தி நீ என்ன நெனச்ச ? நாங்க செண்டிமெண்ட் தான் ஆனா நாங்க நேசிக்கிறவங்களுக்கு மட்டும் தான். உன்ன மாதிரி கேடுகெட்டவளுக்கு பரிதாபம் காட்ட மாட்டோம். மைராவும், க்ரிஷும் வாழ்க்கையில பட்ட கஷ்டத்துக்கு 100 மடங்கு நீ கஷ்டப்படனும். இன்னும் ஒரு வார்த்தை பேசினா இன்னைக்கு உன் தாடையை உடைச்சிடுவேன் “ என்று நைனா அவளை மிரட்டினாள்.

“ நாயே, நான் உன்கிட்ட பேசல. நான் மைரா கிட்ட பேசிட்டு இருக்கேன் “ என்று ரோஷினி நைனாவை திட்டியதும், மைரா தன் முஷ்டியை மடக்கி ரோஷினியை குத்தினாள். ரோஷினியின் வாயில் இருந்து ஒரு பல் கீழே விழுந்ததும் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர், மைரா தனது முஷ்டியைப் பார்த்தாள், பின்னர் புன்னகைத்துக் கொண்டிருந்த கேஷவைப் பார்த்தாள்.

“ கெட்சப், எனக்கு ஏதாவது சூப்பர் பவர் இருக்கா ? நான் ஒரு குத்து விட்டதுக்கே எப்படி அவளோட பல்லு விழுந்துச்சு ? அவ பலவீனமான இருக்காளா இல்ல நான் பலசாலியா? “ என்று மைரா கேட்டதும், “ அவள் வார்த்தைகளை கேட்டு அனைவரும் சிரிக்க, கேஷவ் அவளை தன்னருகே இழுத்து அவள் விரல்களை தேய்த்து மெல்ல ஊதினான்.

“ என் பொண்டாட்டி பலசாலியாகிட்டா, நான் இப்போ உன்கிட்ட  கவனமா இருக்கனும் போல “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவன் தாடையில் குத்துவது போல் நடித்தாள்.

நைனா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, மைராவைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கும்படி சைகை செய்தாள். மைரா தலையை அசைத்துவிட்டு நைனாவின் அருகில் சென்று நின்றாள்.

இன்ஸ்பெக்டர் ஒரு கார் புக் செய்து ரோஷினியையும் அவளது பெற்றோரையும் அதில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள்கள் மற்றொரு வண்டியில் அஜையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

“ ரொம்ப நன்றி மிஸ்டர் ஆனந்த். உங்க உதவிய நான் எப்பவும்  மறக்க மாட்டேன் “ என்று கேஷவ் கூறினான். 

“ இது உங்க கேஸ் தான் ஆனா அப்பாவி மக்கள பாதுகாக்குறது எங்க கடமை, நீங்க எல்லாத்தையும் பண்ணீங்க, இந்த வழக்கை சட்டப்பூர்வமா நடத்த தேவையான நடவடிக்க மட்டும் தான் நான் பண்ணேன் “ என்று சொல்லி ஆனந்த் புன்னகைத்தார்.

“ இருந்தாலும் நீங்க எங்களுக்கு ரொம்ப ஆதரவா இருந்தீங்க அதுக்கு ரொம்ப நன்றி “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ அவள பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் மேடம். உங்க புருஷன் அவ உங்க குடும்பத்த நெருங்காம இருக்க எல்லாமே பிளான் பண்ணி இருக்காரு “ என்று ஆனந்த் கூறினார்.

மைரா புன்னகைக்க, இன்ஸ்பெக்டர் வருணுடன் விடைபெற்று சென்றார். கேஷவ் மைராவைப் பார்த்து புருவத்தை உயர்த்த, அவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

“ இப்போ எல்லாம் முடிஞ்சிடுச்சு, நான் நைனாவ செக்கப்புக்கு கூட்டிட்டு போறேன். நாம வீட்ல சந்திப்போம் “ என்று க்ரிஷ் சொன்னதும், கேஷவும் மைராவும் சரி என்று சொன்னார்கள்.

நைனா, கிரிஷ் மருத்துவமனைக்கு சென்றனர். மைரா கேஷவை தனது அலுவலக அறைக்கு இழுத்துச் சென்று கதவை மூடினாள். அவள் அவனை நோக்கித் திரும்பியதும் அவன் விரைவாக முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவளை மேஜையில் உட்கார வைத்து, காற்றின் தேவை உணரும் வரை முத்தமிட்டுக் கொண்டே இருந்தான்.

“ நீங்க வேலை நேரத்துல பார்க்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க  டைரக்டர் சார், இப்ப என்ன ப்ளான்? “ என்று மைரா கேட்க, “  வீட்டுக்குப் போய் இப்ப ஆரம்பிச்சதை முடிப்போம். அதுக்கு அப்புறம்  நான் மறுபடியும் டெல்லிக்கு போகணும். என்னோட வேலை கொஞ்சம் இருக்கு, அத முடிச்சிட்டு உன்கிட்ட திரும்பி வருவேன், இந்த முறை வந்த அப்புறம் நான் திரும்பி போக மாட்டேன் “ என்று கேஷவ் பதில் சொன்னதும், மைரா கதறி அழுதபடி அவனை அணைத்துக் கொண்டாள். கேஷ்வ் அவளது உற்சாகத்தை கண்டு சிரித்தபடி அவள் முதுகை வருடினான்.

*********************************

முன்னோட்டம்:

“ நீங்க இனி என்ன தனியா விட மாட்டீங்கன்னு சொல்லுங்க, நான் உங்க இருக்க வெள்ளி அப்புறம் சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியதில்ல சொல்லுங்க “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!