மூன்று நாட்கள் கழித்து க்ரிஷ் கையில் பூக்களுடன் வீட்டிற்குள் நுழைந்து நைனாவைத் தேடினான். அர்ச்சனா கிண்டலாக புன்னகைத்து அவள் சமையலறையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார். அம்மாவின் கன்னத்தைக் கிள்ளியபடி விசிலடித்துக் கொண்டே சமையலறையை நோக்கி நடந்தான். காயமடைந்த கையுடன் ஐஸ் கிரீம் சாப்பிட போராடி கொண்டிருந்த நைனாவை சுவரில் சாய்ந்து நின்று பார்த்தான். அவன் தொண்டையைக் கனைத்துக் கொள்ள, நைனா பயத்தில் தன் மார்பை இறுகப் பற்றிக் கொண்டு திடுக்கிட்டாள்.
“ நீ என்னை பயமுறுத்திட்ட க்ரிஷ் “ என்று நைனா சொல்ல, க்ரிஷ் அவள் கைகளில் பூக்களை கொடுத்து விட்டு அவளுக்கு ஐஸ்கிரீமை ஊட்ட ஆரம்பித்தான்.
“ நீ ஏன் தினமும் பூ வாங்கிட்டு வர ? “ என்று அவள் கேட்க, “ என் பொண்டாட்டிக்கு நான் பூ வாங்கி கொடுக்கக் கூடாதா? “ என்று கேட்டு அவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். உடனே நைனாவின் கன்னமும், கழுத்தும் வெட்கத்தில் சிவந்தது. நைனா அவனைத் தள்ளிவிட்டு சமையலறையை விட்டு வெளியேற முயன்றாள், ஆனால் க்ரிஷ் அவளை மீண்டும் இழுத்து ஐஸ்கிரீமை ஊட்டுவதைத் தொடர்ந்தான்.
“ க்ரிஷ் என்ன ஹனிமூனுக்கு கூட்டிட்டு போவியா ? “ என்று நைனா மெல்ல கேட்டதும், “ நிச்சயமா நைனா. நான் மாறிட்டேன், உன் கூட சேர்ந்து வாழ எனக்கு தகுதி இருக்குனு நீ எப்போ என்ன நம்புறியோ அப்போ நீ எங்க சொன்னாலும் அங்க நான் உன்ன கூட்டிட்டு போறேன். இந்த உலகத்துல இருக்க எல்லா சந்தோஷத்தையும் உனக்கு தருவேன்னு பொய் சத்தியம் செய்ய மாட்டேன் ஆனா உன் கண்ணீருக்கு நான் ஒரு நாளும் காரணமா இருக்க மாட்டேன்னு என்னால சத்தியம் செய்ய முடியும். வேற ஏதாவது காரணத்துக்காக நீ அழுதா அப்போ நான் உனக்கு ஆறுதலா இருப்பேன் “ என்று க்ரிஷ் நிதனாமாக அவளுக்கு பதில் சொன்னான்.
அவன் சொன்னதை கேட்ட நைனா, “ நீ நல்லா பேசக் கத்துக்கிட்ட, குறிப்பா என்ன கவர. எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு, நான் உன்ன நம்புறேன் “ என்று நைனா சொல்ல, “ அப்போ ஹனிமூன் எங்க போகணும்னு முடிவு பண்ணு ஆனா இன்னும் ரெண்டு மாசம் அப்புறம் உன் கை முழுசா சரியான அப்புறம் போகலாம் “ என்று சொன்ன க்ரிஷ், “ இப்போ சொல்லு மைரா எங்க ? “ என்று அவளிடம் கேட்டான்.
“ ஷாப்பிங் முடிஞ்சு திரும்பி வந்துட்டா, இப்ப அவ ரூம்ல இருக்கணும், மேடம் மாமாவ வரவேற்க செம்ம உற்சாகமா இருக்கா “ என்று நைனா சிரித்துக் கொண்டே சொல்ல, “ இந்த மூணு மாசம் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழம, ஞாயிற்றுக்கிழமை அண்ணன் இங்க வந்தாலும் ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப மிஸ் பண்ணாங்க “ என்றான் க்ரிஷ்.
“ நீ சொல்றது சரி தான். ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அப்படி ஒரு கண்மூடித்தனமான அன்பு, அக்கறை, காதல் வெச்சுருக்காங்க. “ என்று நைனா கூறினாள்.
கேஷவ் மற்றும் மைராவின் அறையில், மைரா அலமாரியை மறுசீரமைத்து, அறையை சுத்தம் செய்து, தன்னை அலங்கரிக்க போதுமான நேரம் எடுத்துக் கொண்டாள். சிவப்பு நிற ஆர்கன்ஸா புடவையும், வெள்ளை நிற ப்லௌசை அணிந்து அவள் தலைமுடியை அப்படியே விட்டு கண்ணாடி முன் சுழன்றாள்.
“ இந்த புடவையில கெட்சப்புக்கு உன்ன ரொம்ப புடிக்கும் மைரா. லூசு பொண்ணு நீ, என் புருஷனுக்கு நான் எந்த டிரஸ் போட்டாலும் புடிக்கும், அவர் மொழியில சொல்லனும்னா ஒன்னும் போடலனாலும் புடிக்கும். அய்யோ மைரா, போதும் வெட்கப்படுறத நிறுத்திட்டு இப்போ கிளம்பு “ என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு சாவியை எடுத்துக் கொண்டு ஹாலை அடைந்தாள். மாலை நடக்க திட்டமிட்டிருந்த பேட்மிண்டன் போட்டியைப் பற்றி மதனும் ராஜனும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்க, அர்ச்சனா வசுந்தராவுடன் வம்பு பேசிக் கொண்டிருந்தார்.
“ ஹலோ வயசானவங்ளே, நான் கெட்சப் கூப்பிட ஏர்போர்ட் போறேன் “ என்று மைரா உற்சாகமாக சொல்ல, “ அர்ச்சனா நம்ம எல்லாரையும் வயசானவங்கன்னு சொன்னதால அவளுக்கு சாப்பாடு கொடுக்காத “ என்றார் வசுந்தரா.
“ கண்டிப்பா வசு “ என்று சொன்ன அர்ச்சனா பின்னர் மைராவை பார்த்து, “ மைரா, பேரன் பேத்தி பிறக்குற வர எங்கள வயசானவங்கன்னு சொல்ல முடியாது “ என்று கூறினார்.
மைரா முகம் சிவந்து அங்கிருந்து வெளியே ஓடினாள். காரில் புறப்பட்டு அவள் விமான நிலையம் சென்று அவள் வருகை வாயிலை அடைந்து தனது கெட்சப்பிற்காக பொறுமையின்றி காத்திருந்தாள். கேஷவ் கருப்பு ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து, கண்ணாடி அணிந்து, லெதர் ஜாக்கெட்டை முழங்கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் டிராலியை இழுத்தபடி நடந்து வந்தான்.
கேஷவைப் பார்த்ததும் மைரா கத்தி கூச்சலிட்டு அவனைப் பார்த்துக் கைகுலுக்கினாள். கேஷவ் சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டான்.
“ குட்டி கெட்சப் பாட்டில் மாதிரி சிவப்பு புடவையில ஹாட்டா இருக்க. நாம வீட்டுக்குப் போகலாம், இன்னைக்கு உன்ன கசக்கிப் பிழியிறேன் “ என்று கேஷவ் சொன்னதும் மைரா வெட்கத்துடன் சிரித்து அவனை காருக்கு இழுத்துச் சென்றாள். அவள் ஓட்டுநர் இருக்கையில் ஏறவிருந்தாள், ஆனால் கேஷவ் நிறுத்தி அவளுக்காக பயணிகள் கதவைத் திறந்துவிட்டு அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஓட்டத் தொடங்கினான்.
“ நீங்க ஏன் இப்போ என்ன ஓட்ட அனுமதிக்கல? “ என்று மைரா கேட்ட, “ நான் உன்ன ரெஸ்ட் எடுக்க அனுமதிச்சு இருக்கேன். நம்ம ரூமுக்கு போற வர ரெஸ்ட் எடு “ என்று கேஷவ் பதில் சொன்னதும், “ கேஷவ் நீங்க சரியான அழுக்கு புடிச்ச மனுஷன் “ என்று சொல்லி மைரா அவன் கையை அடித்தாள்.
அவர்களின் பேச்சும், அரட்டையும், சிரிப்பும் காரை நிரப்பியது. இருவரும் வீட்டை அடைந்ததும், ஹார்ன் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே விரைந்தனர். அர்ச்சனா கேஷவை கட்டிப்பிடித்து வீட்டிற்குள் வரவேற்றார்.
எல்லோரும் சோபாவில் அமர்ந்ததும், மைரா அவனுக்கு ஜூஸ் ஊற்றினாள். அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன், தட்டிலிருந்து ஜூஸ் கிளாஸை எடுத்தான்.
“கேஷவ், நீ இனி டெல்லிக்கோ இல்ல வேற எந்த ஊருக்கோ போக வேண்டியதில்ல தானே ? “ என்று வசுந்தரா கேட்டதும், “ ஆமா அத்த, நான் இனி எங்கேயும் போக வேண்டியதில்ல. நான் இப்போ ஃப்ரீலான்ஸர் வேல செய்ற கேஷவ் மட்டும் தான் வேற எதுவும் இல்ல “ என்று கேஷவ் உறுதிப்படுத்தினான்.
“ நீ எந்த வேலைய செய்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, ஆனா உனக்கு சந்தோஷமும், திருப்தியும் தர வேலைய செய் “ என்றார் ராஜன்.
“ நீங்க இனி டெல்லிக்கு போக மாட்டீங்க அதனால எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க ? “ என்று நைனா கேட்க, “ வாங்கிட்டு வந்துருக்கேன் மேடம், நான் பரிசு வாங்காம வந்தா என்ன வீடுக்குள்ள விட மாட்டனு மைரா எச்சரிக்க பண்ணி இருந்தா “ என்று சொன்னபடி கேஷவ் அவன் கொண்டு வந்த ட்ராலியை திறந்து நைனாவுக்காக வாங்கிய ஹேண்டபேக் மற்றும் பர்ஸ், அவன் அம்மா மற்றும் அத்தைக்கு வாங்கிய புடவைகள், மீனாகாரி நகைகள், அப்பா மற்றும் மாமாவுக்கு வாங்கிய சால்வை, க்ரிஷுக்கு வாங்கிய சட்டைகளை அவர்களிடம் கொடுத்தான்.
“ கேஷவ் டெல்லியில இருக்க வீடும் அதுல இருக்க பொருட்களும் என்ன பண்ண ? “ என்று மதன் கேட்டதும், “ மக்கள் இப்போ ஃபர்னிஷ் பண்ண வீடு தான் விரும்புவாங்க அதனால அங்க இருக்க பொருட்களோட விற்க ஏற்பாடு செய்ய வருண் கிட்ட சொல்லி இருக்கேன். என்னோட தனிப்பட்ட பொருட்கள மட்டும் நான் தனியா கொண்டு வந்தேன் “ என்று கேஷவ் பதில் கூறினான்.
“ கேஷவ் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு, பயணம் பண்ணி வந்ததுல சோர்வா இருக்கும் உனக்கு “ என்று அர்ச்சனா சொன்னதும் கேஷவ் தனது ட்ராலியை எடுத்துக் கொண்டு நடக்க, மைரா அவனைப் பின்தொடர்ந்தாள். அவர்கள் அறைக்குள் நுழைந்த உடனேயே கேஷவ் கதவைப் பூட்டிவிட்டு மைராவை அணைத்துக் கொண்டான். அவன் அவளை முத்தமிட்டு அவள் இடுப்பை கசக்க, மைரா முனகி அவன் சட்டையை தன் முஷ்டியில் பிடித்து அவன் மார்பில் சாய்ந்தாள். இருவரும் பின்வாங்கிய பிறகு கேஷவ் சோபாவில் அமர்ந்து மைராவைன் இழுத்து மடியில் அமர்த்தினான்.
“ நீங்க இனி என்ன தனியா விட மாட்டீங்கன்னு சொல்லுங்க, நான் உங்க கூட இருக்க வெள்ளி அப்புறம் சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியதில்ல சொல்லுங்க “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ உன்ன நான் தனியா விட மாட்டேன் அம்மு. நாம முத்தம் கொடுக்க, கட்டிப்புடிக்க சனிக்கிழம வர வெயிட் பண்ண வேண்டியதில்ல. நாம இன்னும் எவ்ளோ நேரம் ஒன்னா இருக்க முடியும்னு நேரத்த பார்த்துட்டே இருக்க வேணாம். இனிமே 24 மணி நேரமும் என் அம்மு கூட மட்டும் தான் “ என்று கேஷவ் பதில் சொன்னதும், மைரா அவன் கழுத்தைச் சுற்றி தன் கைகளைப் போட்டு அவனை அணைத்துக் கொண்டாள்.
“ பரிசு வேணும்னு கேட்க மாட்டியா ? “ என்று கேஷவ் கேட்க, “ என்னோட 5 அடி 11 அங்குல பரிசு எனக்கு திரும்ப கிடைச்சுடுச்சு. எனக்கு வேறு என்ன வேணும் ? “ என்றாள் மைரா.
கேஷவ் அவளை சோபாவில் உட்கார வைத்து ட்ராலியைத் திறந்தான். அவன் ஒரு பெட்டியை வெளியே எடுத்து அதைத் திறந்ததும் அதில் அழகான மீனகாரி, குந்தன் மற்றும் அனைத்து வண்ண வளையல்களும் இருந்தன.
“ இந்த வளையல் எல்லாம் என் அம்முவுக்கு மட்டும் தான் “ என்று கேஷவ் சொல்ல, மைரா அந்த வளையல்களை வியப்புடன் தொட்டாள், கேஷவ் அவளுக்கு ஒரு அழகான ஹேண்டபேக் மற்றும் பர்ஸ் பரிசளித்தான்.
“ இந்த வார கடைசியில நம்ம வீட்டுக்கு போவோம். நான் எல்லார்கிட்டையும் பேசிட்டேன், அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் கெட்சப். நீங்க இல்லாம என்னால ஒரு நாள் கூட வாழ முடியாது “ என்று மைரா சொல்ல, கேஷவ் அவள் கண்ணீரைத் துடைத்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அவள் தலைமுடியில் முத்தமிட்டான். அன்றைய நாள் முழுவதும் அவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டனர்.
மறுநாள் கேஷவ் தயாராகி மைராவுடன் ஹாலுக்கு வந்ததும் அனைவரும் திகைப்புடன் அவர்களைப் பார்த்தனர்.
“ இவ்ளோ காலையில எங்க கிளம்புறீங்க கேஷவ்? “ என்று அர்ச்சனா கேட்க, “ அம்மா, இன்னிக்கு தீர்ப்பு வரும். கோர்ட் செஷனுக்கு முன்னாடி நான் வக்கீலையும், இன்ஸ்பெக்டரையும் சந்திக்கணும். கவலைப்பட வேண்டாம், வக்கீல் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாரு. இன்னைக்கு வெறும் தீர்ப்பு மட்டும் தான், எல்லா விசாரணையும் ஏற்கனவே முடிஞ்சுடுச்சு “ என்று சொல்லி கேஷவ் தனது குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு நீதிமன்றத்திற்கு சென்றான்.
போலீஸ் கண்காணிப்பில் ரோஷினி, அவளது பெற்றோர் அஜய் ஆகியோரை பார்த்தான் கேஷவ். முன்னதாக கேஷவ் அவளை கையும் களவுமாக பிடித்த அதே நாள் ரோஷினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாள், வருண் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தான் அதோடு அகாடமியின் செக்யூரிட்டி, டாக்டர், அஜய், கேஷவின் வீட்டைப் பற்றி முன்பு அறிந்த ஆட்டோ ஓட்டுநர், ரோஷினிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும் ரோஷினி பணிநீக்கம் செய்யப்பட்ட அலுவலகத்தின் எச்.ஆர் புகார் அளித்து ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
ரோஷினி கேஷவைப் பார்த்து அனுதாபத்தை உருவாக்க தன்னால் முடிந்தவரை முயன்றாள், ஆனால் கேஷவ் மைராவைக் கொல்லத் திட்டமிட்டதை நினைத்து கோபத்தில் கொதித்தாள். போலீஸ்காரர்களின் அலறலையும் மீறி ரோஷினியின் பெற்றோர் கேஷவை நோக்கி நடந்து சென்று கேஷவின் கையைப் பிடித்தனர்.
“ கேஷவ், தயவு செஞ்சு எங்க மேல கொஞ்சம் கருணை காட்டு “ என்று ரோஷினியின் அப்பா கெஞ்சினார் ஆனால் கேஷவ் அவரை பார்த்து ஏளனமாக அவர் பிடியிலிருந்து கையை எடுத்தான். அவனது உத்தரவின் பேரில் கான்ஸ்டபிள்கள் ரோஷினியின் தந்தையை அவனிடமிருந்து இழுத்துச் சென்ற பிறகு அவர்கள் நீதிமன்ற அறைக்குள் நுழைந்தனர். நீதிபதி அறைக்குள் நுழைந்தவுடன் அமர்வு தொடங்கியது. கொலை முயற்சி, மிரட்டல், தகவல் திருட்டு, பாலியல் துன்புறுத்தல், சிறையில் இருந்து தப்பித்தல் மற்றும் மார்பிங் செய்தல் குற்றங்களுக்காக ரோஷினிக்கு மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ரோஷினியின் செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக அவளது தந்தை மற்றும் தாய்க்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரோஷினிக்கு உதவியதற்காக அஜய்க்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
கேஷவின் சிறப்பு வேண்டுகோளின் பேரில், ரோஷினி மற்றும் அவளது பெற்றோரை வேறு மாவட்டத்தில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி அறையை விட்டு வெளியேறியவுடன், ரோஷினி தனது வாழ்க்கையை நாசமாக்கியதற்காக கேஷவை ஆபாசமாக கத்தினாள். அவன் அவளை அலட்சியப்படுத்திவிட்டு விலகிச் சென்றான், ஆனால் மேஜைகளின் இரைச்சலைக் கேட்டதும் திரும்பி பார்த்த போது, நீதிமன்ற அறையில் ரோஷினி மேஜை மற்றும் நாற்காலிகளை உதைப்பதை அவன் பார்த்தான். இன்ஸ்பெக்டரின் உத்தரவை மீறி அவள் செயல்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வளாகத்தில் பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் ரோஷினியிடம் விரைந்து சென்று ரோஷினியை அறைந்து கைளில் விலங்கிட்டார். பின்னர் அவளை, அவளது பெற்றோர் மற்றும் அஜய் ஆகியோருடன் இழுத்துச் சென்றனர்.
கேஷவ் வீடு திரும்பியதும், தீர்ப்பு குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் காத்திருந்தனர். கேஷவ் எல்லாவற்றையும் விளக்கி, அவர்கள் பயப்பட வேண்டியதில்லை என்று அவர்களை சமாதானப்படுத்தினான்.
“ இப்போ எல்லா பிரச்சனையும் சரி ஆயிடுச்சு அதனால கேஷவும், மைராவும் அவங்க வீட்டுக்கு கிளம்பட்டும். நிறைய கஷ்டம் அனுபவிச்சிட்டாங்க ரெண்டு பேரும். அவங்க வாழ்க்கைய புதுசா தொடங்கட்டும் “ என்று அர்ச்சனா சொல்ல, மைரா புன்னகையுடன் தலையை அசைத்து மறுநாள் கிளம்ப முடிவு செய்தாள்.
அவர்களிடம் எல்லாமே இருந்ததால், அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட முக்கியமான பரிசுகளைத் தவிர வேறு எந்த பேக்கிங் செய்யவில்லை. மறுநாள் காலை அவர்கள் பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்று சிஷிமாருவுடன் வீட்டை விட்டு புறப்பட்டனர்.
கேஷவ் காரை ஓட்ட, மைரா ஒவ்வொரு நொடியையும் கேஷவுடன் செலவிட நினைத்தாள். கேஷவ் காரை நிறுத்தியதும் மைரா ஷிஷிமாருவை அவனது கொட்டிலில் படுக்க வைத்து அவனுக்கு உணவு ஊட்டினாள்.
அறைக்குள் நுழைந்ததும் கேஷவ் அவளை தூக்கி சுழற்றியதும் உற்சாகத்தில் காத்த ஆரம்பித்தாள். மைரா தன் கைகளை விரித்து அவர்களின் காதலின் உற்சாகத்தையும் பிரகாசத்தையும் அனுபவித்தாள்.
கேஷவ் அவளை நிற்க வைத்து அவள் ஆடைகளை களைந்தான். மைரா அவனை எதிர்க்க முயன்றாள், ஆனால் கேஷவ் அவளது ஆடையை கழற்றிவிட்டு அலமாரிக்கு சென்று கையில் ஒரு ஷார்ட்ஸ் மற்றும் சட்டையுடனும் திரும்பி வந்தான்.
“ நீ என் சட்டைய மட்டும் போடு, இன்னைக்கு நாம கட்டிப்பிடிச்சு படம் பார்ப்போம், சாப்ப்பிடுவோம் அப்புறம் ரொமான்ஸ் பண்ணுவோம். இன்னைக்கு வேற எதுவும் பண்ண மாட்டோம் “ என்று சொல்லி கேஷவ் அவனது சட்டையை அணிய செய்தான். அவனும் ஷார்ட்ஸ் அணிந்த பிறகு மைரா அவனைத் திருப்பி அவன் முதுகில் குதித்தாள். கேஷவ் அவளை தூக்கி சென்று சோபாவில் அமர்த்தி கட்டிப்பிடித்து படம் பார்த்தான். அவள் சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை அவிழ்த்து அவள் சட்டைக்குள் கைகளை நுழைக்க, மைரா அவன் கைகளை அகற்ற முயன்று சிரித்தாள்.
“ நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் அம்மு, அதனால சும்மா உன்ன புடிச்சுக்குறேன், ஒன்னும் பண்ண மாட்டேன் “ என்று சொல்லி அவளை அனைத்துக் கொண்டான்.
இருவரும் அடுத்தடுத்து படம் பார்த்தனர், பசி எடுத்த போதெல்லாம் உணவு மற்றும் சிற்றுண்டிகளை கேஷவ் ஆர்டர் செய்தான். மாலையில் அவளை முதல் மாடிக்கு அழைத்துச் சென்று, நீச்சல் குளத்தின் அருகில் உள்ள ஷவரின் கீழ் நின்று, அவர்களின் ஆடைகளை களைந்துவிட்டு, அவளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றான்.
மைரா குளத்தின் விளிம்பைப் பிடித்துக் கொள்ள, கேஷவ் அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.
“ நீச்சல் குளத்துல ரொமான்ஸ் பண்ணனும் யோசிக்க கூட செய்யாதீங்க. அப்புறம் இப்படி தான் டிரஸ் இல்லாம நீச்சல் அடிப்பாங்களா ? “ என்று மைரா கிண்டலுடன் கேட்க, “ இது நம்ம வீட்டுக்குள்ள இருக்க பிரைவேட் குளம், நாம எப்படி இருந்தா யாருக்கு தெரியப் போகுது ? “ என்றான் கேஷவ்.
அவன் அவளை திருப்பி மெல்ல முத்தமிட, அவன் கைகள் அவள் உடலை ஆராயத்தொடங்கியது. அவர்கள் முத்தத்திலிருந்து பிரிந்ததும், அவன் அவளைத் தூக்கி விளிம்பில் உட்கார வைத்து விட்டு கேஷவ் தன் ஈரத் தலைமுடியை பின்புறமாக நகர்த்தி அவளை பார்த்து கண்ணடித்தான்.
நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்து இடுப்பில் ஒரு துண்டையும் மைராவைச் சுற்றி ஒரு துண்டையும் போர்த்திக் கொண்டு அவர்கள் உடலில் வழிந்த நீரைத் துடைத்தான். அவளை அருகிலிருந்த அறைக்கு தூக்கிச் சென்றான். நீண்ட நேரம் ரொமான்ஸுக்கு பிறகு இருவரும் குளித்து முடித்தனர்.
இருவரும் தங்கள் படுக்கையறைக்கு சென்றதும், மைரா கமிசோல் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்தாள், கேஷவ் ஒரு ஷார்ட்ஸை மட்டுமே அணிந்தான். மைராவின் தலை அவன் மார்பில் இருக்க இருவரும் படுக்கையில் அமைதியாக படுத்தனர்.
“ அம்மு, நீ இதுவர என்கிட்ட எதுவுமே கேட்டது இல்ல அதனால உனக்கு என்ன ஆச இருக்குனு சொல்லு நாம அது எல்லாத்தையும் நிறைவேத்துவோம் “ என்று கேஷவ் அவளிடம் கேட்டதும், “ நான் கேட்காமலேயே எனக்கு எல்லாம் செய்றீங்க கெட்சப் ஆனா எனக்கு சின்ன சின்ன ஆசைகள் இருக்கு. நாம வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நீங்க என்ன கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும். நாம ஹாலுல டேன்ஸ் ஆடலாம், நடுராத்திரி கிட்சன்ல ஒன்னா நின்னு பேசிட்டே காபி குடிக்கணும், இன்னைக்கு பண்ண மாதிரி டிரஸ் இல்லாம நீச்சலிடக்கலாம், மாடியில இருக்க ஊஞ்சல்ல உட்கார்ந்து மழையை ரசிப்போம், உங்க மடியில் தலை வெச்சு சோபாவுல தூங்கனும், எனக்கு மாடிப்படி ஏற சோம்பேறித்தனமா இருக்கும் போது நீநக என்ன தூக்கிட்டு நடக்கணும், நான் உங்க தலைக்கு, உடம்புக்கு மசாஜ் செய்யணும், நாம ஒன்னா கார் கழுவுவோம், ஷிஷிமாருவ ஒன்னா வாக்கிங் கூட்டிட்டு போகணும், கிட்சன்ல இருக்கும் போது கொஞ்சம் சமைப்போம் ஆனா நிறைய விளையாடலாம், இந்த மாதிரி ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் வாழ நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் “ என்று மைரா கூறினாள்.
அவளது ஆசையைக் கேட்ட கேஷவ் திகைத்துப் போய் அவள் தலையில் முத்தமிட்டான்.
“ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யாராவது நான் லவ் பண்ண பொண்ணு கூட இன்னைக்கு இப்படி கட்டிப்புடிச்சிட்டு இருப்பேன்னு சொல்லி இருந்தா நான் அவங்கள பார்த்து சிரிச்சு இருப்பேன். ஆனா நம்ம ரெண்டு பேரையும் பாரு, லவ் எப்பவும் தோற்காது, அதுக்கு நாம தான் உதாரணம். விதி நம்ம ரெண்டு பேரையும் ஒன்னு சேர்க்க அதோட விளையாட்ட மேஜிக் மாதிரி பண்ணிடுச்சு. உன் ஆசை எல்லாத்தையும் நிறைவேத்தி ஒவ்வொரு நொடியையும் முழுமா நாம் வாழலாம் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.
“ ஆமா கெட்சப், நம்ம குட்டி லயா கூட, நம்ம குட்டி பையனோட நம்ம வாழ்க்கைய கற்பனை பண்ணி பாருங்க. கடவுளே, கெட்சப் நீங்க என்னோட ஆண் தேவதை, நான் உங்கள பைத்தியாக்கரத்தனமா லவ் பண்ற பொண்ணா எப்பவும் இருக்க விரும்புறேன் “ என்று மைரா புன்னகையோடு சொன்னதும், “ நாம் அப்படி தான் இருப்போம் அம்மு. நீ என்னுடையவ, நான் உன்னுடையவன். ஐ லவ் யூ அம்மு “ என்று கேஷவ் கூற, “ ஐ லவ் யூ கெட்சப் “ என்று சொல்லி மைரா அவன் கண்களில் முத்தமிட்டாள். கேஷவ் புன்னகையுடன் அவள் மூக்கு நுனியில் முத்தமிட்டான். கேஷவ் அவள் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்ததை பார்த்து மைரா சிரித்தாள்.
“ நம்ம வீட்ல நம்ம புது வாழ்க்கையோட தொடக்கத்துக்கு “
*****************************
முன்னோட்டம்:
“ அம்மு, உனக்கு எப்பவும் பீரியட்ஸ் சரியான நேரத்துக்கு வந்துடும் ஆனா இந்த மாசம் மூணு வாரம் தள்ளி போயிடுச்சு. டாக்டர் கிட்ட போய் செக்கப் பண்ணலாமா இல்ல மெடிக்கல் ஷாப்ல இருந்து டெஸ்ட் வாங்கிட்டு வரட்டுமா? நாம வீட்ல முதல்ல டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் “
