Home Family95. நமக்கு குழந்த பிறக்க போகுது

95. நமக்கு குழந்த பிறக்க போகுது

by Siragugal Novels
9 views

சில மாதங்கள் கழிந்து போனது, அனைவரும் அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தனர். .

கேஷவ் மைராவை தன் இடுப்புபில் சுமந்து கொண்டு சமையலறையில் நிற்க, மைரா தன் கால்களை அவன் இடுப்பை இறுகப் பற்றிக்கொண்டு, அவன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டிருந்தாள். ஒரு குழந்தையை சுமப்பது போல கேஷவ் அவளைப் பத்திரமாக அணைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவன் அவள் உதடுகளை மூன்று முறை மெல்ல முத்தமிட்டான்.

மைக்ரோவேவ் அவனில் இருந்து பீப் ஒலி கேட்டதும் அவர்கள் தங்கள் பார்வையை அதை நோக்கித் திருப்பினார்கள். மைரா அவன் இடுப்பில் இருந்து கீழே குதித்த ஓட, கேஷவ் அவளைப் பின்தொடர்ந்தான். அவள் இடுப்பைச் சுற்றி கையை வைத்து மைக்ரோவேவ் அவனில் இருந்து கேக்கை வெளியே எடுத்து கிட்சன் மேடை மேல் வைத்ததும், மைரா தலையைக் குனிந்து அவன் முன் நின்றாள்.

“ கெட்ச்கப், நான் தான் ஐசிங் செய்வேன். என் திறமைய நீங்க பாருங்க “ என்று மைரா சொன்னதும், கேஷவ் தன் கைகளை அவளுக்கு இருபுறமும் வைத்து அவள் வேலையில் கவனம் செலுத்துவதைப் பார்த்தான். அவன் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட, மைரா சிணுங்கி, அவளைத் தொந்தரவு செய்ததற்காக அவனைத் தன் தோளால் இடித்தாள்.

“ இன்னும் 2 நிமிஷம் தான் இருக்கு அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “ முடிஞ்சு போச்சு.. முடிஞ்சு போச்சு… வெறும் ஒரு நிமிஷம் “ என்று சொல்லி அவள் ஐசிங் செய்வதை முடித்துவிட்டு முஷ்டியை காற்றில் உயர்த்தினாள். கேஷவ் கேக்கை ஹாலுக்கு கொண்டு சென்று அங்கிருந்த டீப்பாயில் வைக்க, இருவரும்  மண்டியிட்டு மொபைல் திரையில் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மணி பன்னிரண்டு ஆனதை பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

“ முதல் வருஷ கல்யாண நாள் வாழ்த்துக்கள் கெட்சப் “ என்று மைரா அவனுக்கு வாழ்த்து சொன்னதும், “ உனக்கும் நம்ம முதல் வருஷ கல்யாண நாள் வாழ்த்துக்கள் அம்மு “ என்று கேஷவ் அவளை வாழ்த்தினான்.

தங்கள முதல் திருமண நாளைக் கொண்டாட கடந்த மூன்று நாட்களாக மாலத்தீவில் காத்திருந்த இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தை உள்ளங்கையில் பற்றி முத்தமிடத் தொடங்கினர், மைரா கேக் வெட்ட ஆர்வமாக இருந்ததால் இருவரும் கத்தியை ஒன்றாக பிடித்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டினர். கேஷவ் ஒரு பெரிய கேக் துண்டை எடுத்து அவள் முகத்தில் பூச, அவர்கள் உடல் முழுவதும் கேக் மற்றும் கிரீம் பூசி விளையாட ஆரம்பித்தனர். கேஷவ் அவள் இடுப்பை பிடித்து இழுத்து அவள் முகத்தில் இருந்த கேக்கை லாவினான்.

அவளை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, தங்கள் திருமண நாளை இனிமையாக கொண்டாட ஆரம்பித்தனர்.

காலையில் எழுந்த கேஷவ் போர்வையை தள்ளிவிட்டு மைரா அவன் மார்பில் சாய்ந்திருப்பதை பார்த்தான். அவள் தலையின் உச்சியில் முத்தமிட்டு அவள் விழிக்கும் வரை காத்திருந்தான். காலையில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண் விழித்த மைரா, கேஷவ் தன்னைப் பார்த்து புன்னகைப்பதைப் பார்த்தாள். அவன் சட்டை அணிந்து கொண்டு அழைப்புக்கு பதில் சொல்லி அவர்களை வாழ்த்த கூடியிருந்த குடும்பத்தினரை பார்த்தான்.

கேஷவ் மற்றும் மைரா ஆகியோரை குடும்பத்தினர் முதல் திருமண நாளுக்கு வாழ்த்தி அதிக நேரம் எடுக்காமல் அழைப்பை துண்டித்தனர்.

கேஷவ் மைராவை பாத்ரூமுக்கு தூக்கி சென்றதும் இருவரும் குளித்து முடித்து ஷாப்பிங் செய்ய ஆடை அணிந்தனர், அவர்கள் அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, கேஷவ் அவளுக்கு ஒரு சிறிய பரிசுப் பெட்டியைக் கொடுத்தான். மைரா அதைத் திறந்து பார்த்த போது அதில் ஒரு அழகான வைரக் காதணிகள் இருந்தன. அவள் அவன் கன்னத்தை முத்தமிட்டு அந்த காதணிகளை அணிந்து அவனை நோக்கி திரும்பினாள். கேஷவ் சூப்பர் என்று சைகை காட்டியதும், மைரா அவனுக்காக வாங்கிய பரிசை எடுக்க, கேஷவ் அவளது பரிசை அறிய ஆர்வமாக இருந்தான். அவள் அவனது மணிக்கட்டை இழுத்து அவனுக்குப் பிடித்த வாட்சை அணிய செய்தாள்.

“ இது ரொம்ப அருமையா இருக்கு அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “ உங்களுக்கு வாட்ச் ரொம்ப புடிக்கும்னு எனக்கு தெரியும். அதோட கீழ் பக்கம் பாருங்க, அதுல நம்ம பெயர் போட்டு இருக்கு” என்று மைரா சொன்னதை கேட்டு, கேஷவ் வாட்சை கழற்றி அவர்களின் பெயர்கள் அழகாக பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அதை பார்த்த சந்தோஷத்தில் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அதன் பிறகு அவர்கள் குடும்பத்திற்கு ஷாப்பிங் செய்ய புறப்பட்டனர்.

மறுநாள் இரவு சென்னை வந்து சேர்ந்த இருவரும் குடும்பத்தினரை சந்திக்க வீட்டிற்கு சென்றனர். அவர்களைப் பார்த்ததும் நைனா மைராவைக் கட்டிப்பிடிக்க ஓடினாள், ஆனால் மைரா விரைந்து சென்று நைனாவை முறைத்துப் பார்த்து தடுத்தாள்.

“ உனக்கு பைத்தியமா நைனா ? என் மருமகன் இல்ல மருமகள் இருக்குறத மறந்துட்டியா ? “ என்று மைரா கேட்க அப்போது பின்னாலிருந்து க்ரிஷ் சிரிப்பதைக் கேட்டு நைனா உதட்டைப் பிதுக்கினாள். மைரா தரையில் குனிந்து நைனாவின் அடிவயிற்றை மெல்ல முத்தமிட்டாள்.

“ ஹலோ பாப்பா, உன்னோட அத்த திரும்பி வந்துட்டேன்.  நீ அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருந்தியா ? இப்போ அம்மாவ தொந்தரவு செய்யாத, நீ பிறந்த அப்புறம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அவள தொந்தரவு செய்வோம் “ என்று சொல்லி மைரா எழுந்து நின்று புன்னகையுடன் நைனாவை அணைத்துக் கொண்டாள்.

“ நான் உனக்காக நிறைய பரிசு, சாக்லேட் வாங்கிட்டு வந்துருக்கேன் “ என்று சொல்லி ஆடைகள், நகைகள், சாக்லேட்டுகள் அனைத்தையும் நைனாவுக்கும், மற்ற பரிசுப் பொருட்களையும் அவர்களின் பெற்றோர் மற்றும் க்ரிஷிடமும் கொடுத்தாள்.

“ உன் அடுத்த செக்கப் எப்போ நைனா? “ என்று கேஷவ் கேட்டதும்,
“ ரெண்டு வாரம் கழிச்சு ஆனா உங்க தம்பிக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்க. எனக்குப் பிடிச்ச ஸ்னேக்ஸ் எதையும் சாப்பிட அவன் விட மாட்டேங்குறான் “ என்று நைனா அவனிடம் புகார் செய்தாள்.

“ என்ன முட்டாள்தனம் இது ? நீ கவலைப்படாத, இப்போ நான் வந்துட்டேன், உனக்கு புடிச்ச எல்லாமே வாங்கித் தரேன் “ என்று மைரா சொன்னதும், க்ரிஷ் நைனாவை முறைத்தான், ஆனால் அவள் நாக்கை வெளியே நீட்டி அவனை சீண்டினாள். கேஷவும் மைராவும் தங்கள் அறைக்குத் திரும்ப, க்ரிஷ் நைனாவின் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“ நேத்து நீ அகாடமிக்கு போற வழியில 2 பிளேட் பானி பூரி சாப்பிட்டது எனக்கு ஞாபகம் இருக்கு. இன்னைக்கு நான் உனக்கு ஸ்னேக்ஸ் வாங்கி கொடுக்கலனு சொல்லி என் மேல புகார் செய்ற ? “ என்று க்ரிஷ் கேட்க, “ ஆமா, நான் இன்னும் 2 ப்ளேட் பாணி பூரி கேட்டேன் ஆனா நீ எனக்கு அத வாங்கி தர மாட்டனு சொல்லிட்ட. நான் சோர்வா இருக்கேன் அதனால என் கால் மசாஜ் பண்ணு “ என்று நைனா பதில் சொன்னாள்.

“  நான் முழு உடம்பையும் மசாஜ் செய்யட்டுமா ? “ என்று க்ரிஷ் கேட்க, “ அது எங்க போய் முடியும்னு எனக்கு தெரியும் அதனால நான் கேட்குறத நீ வாங்கி தர சம்மதிக்குற வர நான் உன்ன அனுமதிக்க மாட்டேன் “ என்றாள் நைனா.

“ கர்ப்பிணி பொண்ணுங்களுக்கு ஆசை அதிகமா இருக்கும்னு நான் படிச்சேன் அது தப்பா இல்ல பொய்யா ? “ என்று க்ரிஷ் கேட்க, “ எனக்கு ஆசை இருந்தா பச்ச தண்ணியில குளிச்சுக்குறேன் அதனால நீ முடிவு பண்ணு. நான் கேட்டது வாங்கி தரியா இல்ல சோபாவுல தூங்குறியா ? “ என்று நைனா மிரட்டியதும், க்ரிஷ் கொஞ்சமும் யோசிக்காமல், “ வாங்கி தரேன் “ என்று சம்மதித்தான்.

நைனா உடனே உற்சாகத்தில் அவனை அணைத்துக் கொண்டாள். க்ரிஷ் அவள் தலைமுடியை ஆசையோடு கோதி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

ஒரு வாரம் கழித்து கேஷவும் மைராவும் மாலையில் தங்கள் வீட்டிற்கு திரும்பி ஒன்றாக தங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, சிற்றுண்டியுடன் சோபாவில் அமர்ந்து படம் பார்த்தார்கள்.

“ அம்மு, உனக்கு எப்பவும் பீரியட்ஸ் சரியான நேரத்துக்கு வந்துடும் ஆனா இந்த மாசம் மூணு வாரம் தள்ளி போயிடுச்சு. டாக்டர் கிட்ட போய் செக்கப் பண்ணலாமா இல்ல மெடிக்கல் ஷாப்ல இருந்து டெஸ்ட் வாங்கிட்டு வரட்டுமா? நாம வீட்ல முதல்ல டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் “ என்று கேஷவ் சொன்னதும், “ நானும் வீட்ல டெஸ்ட் பண்ணலாம்னு யோசிச்சேன் ஆனா எனக்கு எந்த அறிகுறியும் இது வர இல்லையே. ஒருவேளை கர்ப்பமா இருந்தா இல்ல கர்ப்பமா இல்லனா என்ன செய்றது ? “ என்று மைரா குழப்பத்துடன் பதில் சொன்னாள்.

கேஷவ் கையில் இருந்த தின்பண்டக் கிண்ணத்தை டீப்பாயின் மீது வைத்து அவளை இழுத்து மடியில் அமர்த்தினான்.

“ டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் அம்மு. பாஸிட்டிவ்வா இருந்தா நம்ம லயாவ வரவேற்க நாம தயாரா இருப்போம், இல்ல டெஸ்ட் நெகட்டிவா இருந்தா நாம லயாவ கொண்டு வர வேலை செய்வோம், ஆனா எப்படியும் டாக்டர் கிட்ட போகணும்னு நான் நினைக்குறேன். உன்னோட ஆரோக்கியம் சம்மந்தமா நான் எதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பல. நீ என்ன சொல்ற ? “ என்று கேஷவ் கூறியதும், “ ஒரு டெஸ்ட் வாங்கிட்டு வாங்க, அப்படியே டாக்டர் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கிடுங்க. வீட்ல டேஸ்ட் பண்ண அப்புறம் டாக்டர் பார்க்க போகலாம் “ என்று மைரா பதில் சொன்னாள்.

கேஷ்வ் அவள் மூக்கின் நுனியில் முத்தமிட்டு அருகிலுள்ள மருந்தகத்திற்கு சென்று பல பிராண்ட் ஹெச்.பி.டி. (HPT) பாக்கெட்டை வாங்கி வந்தான். 

“ பார்மஸியில இருந்தவரு காலையில செக் பண்ண சொன்னாரு “ என்று கேஷவ் சொல்ல, மைரா சரி என்று தலையை அசைத்தாள்.

அடுத்த நாள் காலையில் மைரா முதலில் எழுந்து கேஷவை உலுக்கி எழுப்பினாள். அவள் இப்போது HPT பரிசோதனை செய்ய ஆர்வமாக இருந்தாள். மைரா பாத்ரூமுக்குள் சென்று தனது சிறுநீர் மாதிரியுடன் திரும்பி வர, கேஷவ் அவன் வாங்கி வந்த அனைத்து பாக்கெட்டையும் பிரித்து டீப்பாய் மேல் வைத்தான்.

“ எனக்கு ரொம்ப ஆர்வமாவும் பதட்டமாவும் இருக்கு அதனால நீங்க செக் பண்ணி சொல்லுங்க “ என்று சொல்லிவிட்டு மைரா கேஷவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடி அவன் முடிவை தெரிவிப்பதற்காகக் காத்திருந்தாள். எல்லா கிட்களிலும் இரண்டு கோடுகள் தெரிவதைப் பார்த்த கேஷவின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவனை அறியாமல் வழிந்தது. அவன் மைராவின் நெற்றியில் தன் உதடுகளை பதிக்க, மைரா விழுங்க, அவள் இதயம் எதிர்பார்ப்பில் துடிக்க ஆரம்பித்தது.

“ லயாவோட அம்மாவுக்கு வாழ்த்துக்கள் “ என்று கேஷவ் சொன்னதும் மைரா கண்களைத் திறந்து உள்ளங்கைகளால் வாயை மூடிக்கொண்டு கிட்களில் நேர்மறையான முடிவைப் பார்த்தாள். கேஷவ் தன் கட்டை விரலால் அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க, மைரா கேஷவை நோக்கிப் பார்வையைச் செலுத்தினாள்.

“ கெட்சப்… லயா… நம்ம லயா… நாம.. நாம .. அப்பா அம்மா… நீங்க அப்பா.. .. நான் … நான் அம்மா. லயாவோட அப்பாவுக்கு வாழ்த்துக்கள் “ என்று சொன்ன மைராவின் வார்த்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தடுமாறியது.

சட்டென அவன் கன்னங்களை பற்றி அவன் உதடுகளை முத்தமிட இருவரும் அந்த தருணத்தை அனுபவித்து முத்தமிட்டனர். அவர்கள் முத்தத்தில் இருந்து பின்வாங்க, கேஷவ் அவள் சட்டையை தூக்கி எறிந்து அவள் அடிவயிற்றை மெதுவாக தொட்டான். உடனே மைரா தன் உள்ளங்கையை அவன் கை மேல் வைத்தாள். இருவரும்  ஒவ்வொரு துளி மகிழ்ச்சியையும் ஒன்றாக உணர்ந்தனர்.

கேஷவ் தரையில் மண்டியிட்டு அவள் அடிவயிற்றில் முத்தமிட, மைரா கண்ணீருடன் அவனைப் பார்த்தாள்.

“ உடனே டாக்டர் கிட்ட போய் செக்கப் பண்ணுவோம் பாப்பா “  என்று கேஷவ் சொன்னதும், “ நமக்கு குழந்த பிறக்க போகுது, நீங்க இப்பவும் என்ன பாப்பா சொல்றீங்களா ? “ என்று மைரா சிரித்துக் கொண்டே கேட்டாள்.  

“ நமக்கு தலைமுடி நரைச்ச அப்புறம் கூட நீ எனக்கு பாப்பா தான். உன்னை ரெடி பண்றேன் “ என்று சொன்ன கேஷவ் அவள் தயாராக உதவினான்.

********************************************

முன்னோட்டம்:

“ அம்மு, உன் நல்லதுக்காக தான் கயிற உன்கிட்ட கொடுக்கல. ஷிஷிமாரு அவன் கேர்ள்பிரண்ட் பார்த்த உடனே சந்தோஷத்துல திடீர்னு நம்ம பிடியில இருந்து ஓட முயற்சி செய்வான். அவன் அப்படி திடீர்னு இழுத்தா நீ பயந்துடுவ. இப்போ சொல்லு, அது உனக்கு நல்லதா இருக்குமா? “

                      அடுத்த அத்தியாயம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!