ஆர்யன் டைனிங் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல சஞ்சனா அவனுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட வருவதற்காக காத்திருந்தான். காலையும், இரவும் அவளை பார்ப்பதை நிச்சயம் அவன் உறுதி செய்தான். உணவு சாப்பிடும் அந்த சில நிமிடங்கள் அவள் அவனுக்கு அருகே இருப்பதை அவன் மிகவும் நேசித்தான் அதனால் அந்த தருணத்தை அவன் தவறுவதே இல்லை.
மெல்ல படிகளில் இறங்கி வந்த சஞ்சு அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு இடையேயான இடைவெளியை மௌனம் மட்டுமே நிறைத்தது. சாப்பிட்டு முடித்ததும், சஞ்சனா அமைதியாக தன் அறைக்குச் சென்றாள்.
சஞ்சு செல்வதை பார்த்த ஆர்யன் அவளைப் பின்தொடர்ந்து தயக்கம் இல்லாமல் அவள் அறைக்குள் நுழைந்தான். அலமாரி இருக்கும் அறைக்கு சென்ற சஞ்சு இரவு உடையை மாற்றிக் கொண்டு, திரும்பிப் வந்து பார்த்த போது ஆர்யன் சோபாவில் அமர்ந்து அவளுக்காக காத்திருப்பதைக் கண்டாள்.
“ இவர் ஏன் இப்போ இங்க வந்து இருக்காரு ? “ என்று வியந்தவள், ஒன்றும் பேசாமல் படுக்கைக்கு சென்றாள் ஆனால், “ சஞ்சனா…”, என்று ஆர்யன் மெல்ல அவளை அழைத்து பேச ஆரம்பித்தான் ஆனால் சஞ்சனா கைகளைக் கட்டிக் கொண்டு, “ இங்க இருந்து போறீங்களா ? “ என்று சொல்லி அவனை பேச விடாமல் தடுத்தாள்.
அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று தீர்மானத்துடன் இருந்த ஆர்யன், “ நான் சொல்றத கொஞ்சம் கேளு சஞ்சனா, அன்னைக்கு நைட்டு நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு அதுக்கு உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். உனக்கு புரியும்னு நினைக்குறேன், ப்ளீஸ், ஸாரி “ என்று சொன்னான் ஆனால் சஞ்சு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
ஏற்கனவே காயப்பட்டு இருப்பவளை மேலும் காயப்படுத்த விரும்பாமல் தனது முகத்தை உள்ளங்கையால் தேய்த்துக் கொண்டு பெருமூச்சு விட்ட ஆர்யன், “ இங்க பாரு சஞ்சனா, நாம ரெண்டு பேரும் இப்படி ஓடி ஒளிஞ்சிட்டே இருக்குறத நான் விரும்பல அதனால நாம பேசுறது நல்லது. கொஞ்சம் புரிஞ்சிக்கோ, எவ்ளோ நாள் இப்படி இருக்க முடியும்னு நீ நினைக்குற ? ” என்று அமைதியாகவும் ஆறுதலாகவும் பேசினான் ஆர்யன்.
சஞ்சுவின் கண்கள் கோவத்தில் பனித்தன. ” மிஸ்டர் சைதன்யா, உங்க முட்டாள்த்தனமான பேச்சு எல்லாம் பேசி முடிச்சிட்டா இங்க இருந்து கிளம்புறீங்களா ? “ என்று சொல்லி கதவைக் காட்டினாள்.
ஆர்யன் அமைதியாக அவளை பார்த்தான். அவள் கண்களில் அவனுக்கு வெறுப்பு மட்டுமே இருப்பதை பார்த்தான். “ என்ன விட்டு விலகி போக நினைக்காத சஞ்சனா. நீ எவ்ளோ தூரம் என்ன விட்டு போக முயற்சி செய்றியோ அந்த அளவுக்கு நான் உன்ன நெருங்கி வருவேன், உன்னால என்ன தவிர்க்கவே முடியாது “, என்று கூறினான்.
ஆர்யனின் வார்த்தையை கேட்டு சஞ்சனா கோவத்தில் முஷ்டியை மடக்கினாள். ” உங்களுக்கு எவ்ளோ தைரியம் ? நல்லா கேளுங்க ஆர்யன், உங்கள நான் அதிகமா வெறுக்குறேன். நீங்க ஒரு இதயமே இல்லாத மிருகம். என்ன இந்த மேன்ஷன்ல அடிச்சு வெச்சு இருக்குறதுல அப்படி என்ன உங்களுக்கு திருப்தி கிடைக்குது ? “ என்று கத்தினாள்.
உறங்க செல்லும் முன் அவள் அழுவதை விரும்பாத ஆர்யன் அதற்கு மேல் பேசுவதை தவிர்க்க முடிவு செய்து, “ தூங்கு சஞ்சனா. நாம நாளைக்குப் பேசலாம்.” என்று சொல்லிவிட்டு அறையில் இருந்து வெளியேறினாள்.
விரக்தியடைந்த சஞ்சு ஆர்கில் இருந்த மேஜை மேல் இருந்த ஒரு பூச்சாடியை அவன் சென்ற பாதையை நோக்கி வீசி எறிந்தாள். கம்பளம் விரிக்கப்பட்ட அந்த அறையின் தரையில் சரிந்தவள், அந்த மேஜையின் டிராவில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தாள். அதை மார்போடு அணைத்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.
“ இப்படி கஷ்டப்படுற அளவுக்கு நான் அப்படி என்ன தப்பு பண்ணேன் ? இந்த கஷ்டத்துல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கானு கூட எனக்கு தெரியல ? “ என்று சொல்லி வழக்கமான இரவை போல அவள் அழுது கொண்டே தூங்கினாள்.
அடுத்த நாள், ஆர்யன் தனது அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருந்தான் ஆனாலும் சஞ்சனாவின் எண்ணம் அவன் மனதை விட்டு நீங்கவே இல்லை.
” ரஞ்சித், கௌசல்யா அம்மாவுக்கு போன் பண்ணி சஞ்சனா வீட்ல என்ன செய்வானு கேளு ” என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் உடனே மேன்ஷனுக்கு போன் செய்தான். கௌசல்யா சொல்வதை அர்யனும் கேட்க வேண்டும் என்பதால் ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
கௌசல்யா அழைப்பில் வந்ததும், ” கௌசல்யா ஆண்ட்டி, நீங்க கொஞ்சம் தனியா போய் பேச முடியுமா ? முக்கியமா சஞ்சனா பக்கத்துல இல்லாத மாதிரி விலகி போங்க “ என்று ரஞ்சித் கூறினான்.
மொபைலை கையில் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்ற கௌசல்யா, “ நான் இப்ப வெளிய தான் இருக்கேன் ரஞ்சித். என்ன விஷயம் சொல்லு “ என்று மெல்லிய குரலில் கேட்டார்.
” ஒரு முக்கியமான விஷயம் தெரிஞ்சிக்கணும். ஆர்யன் சார் ஆபீஸ் வந்த அப்புறம் சஞ்சனா வழக்கமா வீட்ல என்ன செய்வா ?” என்று ரஞ்சித் கேட்க, ஆர்யன் அந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான்.
“சார் ஆபீஸ் போன உடனே தோட்டத்துல கொஞ்ச நேரம் இருப்பா, இப்போ நிறைய பறவைங்க இருக்கு, அது எல்லாத்துக்கும் சாப்பாடு போட்டு பராமரிப்பா. அதுக்கு அப்புறம் லிவிங் ரூம்ல இல்ல அவளோட ரூம்ல கொஞ்ச நேரம் புத்தகம் படிப்பா. அது மட்டும் இல்ல அவளுக்கு பாட்டு ரொம்ப புடிக்கும், அதனால பாட்டு கேட்பா. சில நேரம் பாடவும் செய்வா, அவளுக்கு அற்புதமா பாட வரும் ஆனா அவ எப்பவும் கவலையாவே இருப்பா, ஏதாவது யோசிச்சிட்டே இருப்பா. தோட்டத்துல பறவைங்க கூட இருக்கும் போது மட்டும் தான் அவ சிரிச்சு நான் பாத்து இருக்கேன் “ என்று சஞ்சனாவின் தினசரி வழக்கத்தை கௌசல்யா கூறினார்.
“ ரொம்ப நன்றி கௌசல்யா ஆன்டி “ என்று சொல்லி ரஞ்சித் அழைப்பை துண்டித்தான். நாற்காலியில் சாய்ந்த ஆர்யன் மௌனமாக இருந்தான். அவன் மனம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு அழகிய தருணத்தை நினைவுபடுத்தியது.
ஒரு வருடதிற்கு முன்பு:
ஒரு நாள் மழை நின்ற பிறகு புதியதாக பிறந்தது போல வானம் அழகாக, மக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. ஆர்யன் ஒரு பிசினஸ் மீட்டிங்குக்காக எமரால்டு ரிசார்ட்டுக்கு சென்றிருந்தான். மீட்டிங் முடிந்த பிறகு காற்று வாங்கவும், விரக்தியில் இருந்த மனதை அமைதிப்படுத்தவும் அறையை விட்டு ஆர்யன் வெளியே வந்தான். சற்று இடைவெளி கொடுத்த மேகங்கள் மீண்டும் சூழ்ந்து தூறலிட ஆரம்பித்தது. அவன் அந்த அழகான காட்சியை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு இனிமையான குரல் அவனது கவனத்தை ஈர்த்தது. அந்த குரல் அவன் மனதை அமைதிப்படுத்திய அதே நேரத்தில் அவனது முதுகெலும்பில் ஒரு நடுக்கத்தை கொடுத்தது.
அந்த பாடல் கேட்ட திசையை நோக்கி சென்றவன், ஒரு பெண் ஒரு தூணில் சாய்ந்து பாடுவதைக் கண்டான்.
முழுசா உனக்கென நான் வாழுறேன்…
புதுசா தினம் தினம் என பாக்குறேன்…
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்…
அளவில்லாம ஆசை வெக்குறேன்…
அந்த பெண்ணின் குரல் அவனை மொத்தமாக சிறைப்பிடித்தது. ஆர்யன் அங்கு நின்று அவள் பாடுவதை பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஏனோ தானோ என்று போன நாளும்…
எல்லாம் நீயே என்று மாறுதே…
யாரும் இல்லா நேரம் வந்த பின்னும்…
உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே…
அவள் பாடி முடித்ததும், அவளை சுற்றி இருந்த பெண்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“ஏய், சஞ்சு! நீ ஒரு அற்புதமான பாடகி தெரியுமா, அவ்ளோ அழகா பாடுற. இந்த மழையில எங்கள சந்தோஷப்படுத்த உன்னால மட்டும் தான் முடியும்” என்றாள் அவளது தோழி.
தன் தோழியின் வார்த்தையை கேட்டு சஞ்சனா சிரித்தாள். ” நான் சாதாரணமா தான் பாடுனேன், நீ சும்மா இப்படி மிகைப்படுத்தி சொல்றத நிறுத்து “ என்று சொன்னாள்.
” நீ எப்பவும் இப்படி தான் சொல்லுவ சஞ்சு. தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் நம்பு. உன்னோட வருங்கால புருஷன் ரொம்ப அதிர்ஷ்டசாலியா தான் இருப்பாரு. உன்ன தினமும் பாட சொல்லி கேட்டு ரசிப்பாரு “ என்று சொல்லி அவள் தோழி மீண்டும் கிண்டல் செய்ய சஞ்சு வெட்கப்பட்டு அவள் தோளில் தட்டினாள்.
” ஏய்! கொஞ்சம் வாய மூடு. இப்படி எதாவது உளறிட்டு இருக்காத “ என்று தலையை ஆட்டியபடி சொன்ன சஞ்சு அவர்களிடம் இருந்து விலகிச் சென்றாள்.
சஞ்சு பாடியதையும், அவளின் தோழிகள் அவளை கிண்டல் செய்ததையும் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் அவள் விலகிச் செல்வதைப் பார்த்து புன்னகைத்தான்.
பெண்களை நிமிர்ந்து கூட பார்க்காத ஆர்யன் முதல் முறையாக சஞ்சனாவை கண்ணிமைக்காமல் பார்த்து ரசிப்பதை அருகில் இருந்து பார்த்த ரஞ்சித், “ சார், அந்த பொண்ண பத்தி நான் விசாரிச்சு சொல்லட்டுமா ? என்று கேட்டான் ஆனால் ஆர்யன் மறுத்து தலையை ஆட்டி, “ வேணாம் ரஞ்சித் “ என்று கூறினான்.
ஃப்ளாஷ்பேக் முடிந்தது
முதல் முறையாக சஞ்சுவை பார்த்த நாளை நினைத்து கொண்டிருந்த ஆர்யனின் எண்ண ஓட்டம் ரஞ்சித்தின் குரல் கேட்டு தடைப்பட்டது.
“ சார், ஏதாச்சும் பிரச்சனையா ? “, என்று ரஞ்சித் கேட்டதும் தனது எண்ண ஓட்டத்தில் இருந்து மீண்ட ஆர்யன் அவனை பார்த்து, ” ஒண்ணுமில்ல ரஞ்சித், நீ போய் வேலைய பாரு “ என்று கூறினான்.
ரஞ்சித் சரி என்று சொல்லிவிட்டு ஆர்யனை தனிமையில் விட்டு வெளியே சென்றான். ஆர்யன் தனது மொபைலை எடுத்து சஞ்சனா பாடுவதை பதிவு செய்த வீடியோவை பார்த்தான். அந்த வீடியோவை அவன் பல முறை பார்த்திருந்தாலும் எப்போதும் போல இந்த முறையும் அவள் பாடுவதை கேட்டு அவன் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது.
“ என்ன நடந்தாலும் சரி, நீ என் கூட தான் இருப்ப சஞ்சனா. இப்போ நீ வருத்தத்துல இருக்கணு எனக்கு தெரியும், அதுக்கு காரணமான நானே நீ சந்தோஷமா இருக்கவும் காரணமா மாறுவேன். நீ சந்தோஷமா இருக்க என்ன வேணும்னாலும் செய்வேன். ஒரு நாள், நீ என்ன புரிஞ்சிக்குவனு நான் நம்புறேன் சஞ்சனா “ என்று மொபைலில் இருந்த அவளின் புகைப்படத்தை பார்த்து சொல்லி கொண்டிருந்தான் அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மொபைலை மேஜை மேல் வைத்து விட்டு அந்த நபரை உள்ளே அழைத்ததும் ரஞ்சித் பதற்றமான முகத்துடன் உள்ளே நுழைந்தான். “ சார், கௌசல்யா ஆண்ட்டி இப்போ தான் போன் பண்ணாங்க. வீட்ல சஞ்சனா மயங்கி விழுந்துட்டா சொன்னாங்க ” என்று ரஞ்சித் சொன்னதை கேட்டதும் ஆர்யனின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்த நொடியே அறையை விட்டு வெளியேறி லிஃப்டுக்கு விரைந்து சென்று, காரில் ஏறினான்.
மேன்ஷனுக்கு செல்லும் வழியில் அவனது டாக்டர் நண்பரை அழைத்து மேன்ஷனுக்கு விரைந்து சஞ்சுவை பார்க்கும்படி கூறினான். வழியெங்கும் அவன் மனம் சஞ்சுவை நினைத்து படப்படத்தது. அவன் மேன்ஷனை அடைந்த போது டாக்டர் ஏற்கனவே சஞ்சுவை பரிசோதித்து விட்டு லிவிங் அறையில் காத்திருந்தார்.
” சஞ்சனா இப்போ எப்படி இருக்கா ? “ என்று ஆர்யன் பதற்றத்துடன் கேட்டான். சஞ்சனாவை நினைத்து அவன் முகம் பயத்தில் வெளிறிப் போய் இருந்தது.
“அவங்க நல்லா இருக்காங்க ஆர்யன் சார் ஆனா அவங்க மன அழுத்தத்துல் இருக்காங்க. அது மட்டும் இல்ல சரியா சாப்பிடாததால பலவீனமா இருக்காங்க. நான் இப்போ அவங்களுக்கு ஒரு ஊசி போட்டு இருக்கேன். அவங்களுக்கு நிறைய ஓய்வு வேணும் அத விட அதிகமா கவனிப்பும் தேவை ” என்று டாக்டர் சொன்னதும் ஆர்யன் சமீபக நாட்களாக அவள் உணவு சாப்பிடுவதை அவனே பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனிக்காமல் விட்டதற்கு தன்னைத்தானே பழித்துக் கொண்டான்.
” நன்றி டாக்டர், அவள இனி நானே பார்த்துக்குறேன் ” என்று ஆர்யன் அவரிடம் கூறினான். சஞ்சுவிற்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு டாக்டர் சென்ற பிறகு, ஆர்யன் சஞ்சனாவின் அறைக்கு விரைந்து சென்றான்.
சஞ்சு முகம் வெளிறிப் போய் படுக்கையில் நினைவிழந்து கிடந்தாள். அவளை அந்த நிலையில் பார்த்ததும் குற்ற உணர்வு அவனை உறுத்தியது.
“ ஏன் இப்படி இருக்க சஞ்சனா ? எனக்கு வேற வழி இல்லை, என்னால உன்ன போக விட முடியாது “ என்று மனதில் நினைத்தபடி ஆர்யன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
” கௌசல்யா மா, சஞ்சனாவுக்கு சாப்பாடு கொண்டு வாங்க ” என்று சொன்னவன் சஞ்சுவின் மீது இருந்த பார்வையை விலக்கவே இல்லை. கௌசல்யா உணவு கொண்டு வந்து ஆர்யனிடம் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார். ஆர்யன் சஞ்சனாவின் அருகில் அமர்ந்து அவள் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து, சஞ்சுவுக்கு நினைவு திரும்பி அவள் அசைந்தாள். சஞ்சு மெதுவாக கண்களைத் திறந்ததும் அவள் பார்வை ஆர்யன் மீது விழுந்தது.
ஆர்யன் உடனே ஒரு டம்ளர் தண்ணீரை அவளிடம் நீட்டி ” முதல்ல இந்த தண்ணிய குடி” என்று முணுமுணுத்தான், ஆனால் சஞ்சு அவனிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
” சஞ்சனா, முதல்ல தண்ணி குடி, ஏற்கனவே உனக்கு உடம்புக்கு முடியல, திரும்பவும் அடம் புடிக்காத “ என்று சொன்னவனின் குரல் உறுதியாக இருந்தது. தொண்டை வறண்டு போயிருந்ததால் சஞ்சனா தயக்கத்துடன் டம்ளரை வாங்கி தண்ணீரை குடித்தாள்.
அருகில் இருந்த டீபாய் மேல் இருந்த தட்டை எடுத்த ஆர்யன், “ இப்போ சாப்பிடு “, என்று சொல்லி அவளுக்கு ஊட்ட முற்பட்டான்.
” என்னால சாப்பிட முடியும். தட்ட வெச்சுட்டு நீங்க வெளிய போங்க ” என்று சஞ்சு சொன்னாள் ஆனால் அவள் ஏற்கனவே காயமடைந்து நோய்வாய்ப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த ஆர்யன் மறுத்து தலை அசைத்து, ” உன்னால சாப்பிட முடியும்னு எனக்கும் தெரியும் சஞ்சனா, ஆனா இப்போ நான் ஊட்டி விடுவேன், நீ என் கையால சாப்பிடு ” என்று மென்மையாக குரலில் அவளிடம் கூறினான்.
ஆர்யனின் வார்த்தையை கேட்ட சஞ்சு முகம் சுளித்தாள். ” நான் ஏன் நீங்க சொல்றத கேட்கணும் ? “ என்று சஞ்சு கேட்க அதற்கு ஆர்யன், “ நல்ல பொண்ணா நான் சொல்றத நீ பண்ணா, நான் உனக்கு ஒரு நல்ல நியூஸ் சொல்லுவேன் “ என்று கனிவான குரலில் சொன்னான்.
உடனே சஞ்சுவின் புருவங்கள் சுருங்கின. ” குட் நியூஸ் சொல்ல உங்களுக்கு இன்னும் மனசு இருக்கா என்ன ?”, என்று கடுப்புடன் கேட்டாள். அவள் சொன்னதை கேட்டு சிரித்த ஆர்யன், “ இருக்குனு தான் நான் நினைக்குறேன் “என்று தன் தோள்களை குலுக்கி உணவை சாப்பிடும்படி மீண்டும் கையை நீட்டினான்.
அவன் என்ன நல்ல செய்தி சொல்ல போகிறான் என்று தெரிந்து கொள்ள சஞ்சு மிகவும் ஆர்வமாக இருந்தாள். மெல்ல தொண்டையை கனைத்து கொண்டு, “ என்ன நியூஸ் ? ” என்று அவள் மெல்லிய குரலில் கேட்க, ஆர்யன் சிரித்தான். ” அது என்னனு நீ தெரிஞ்சிக்க விரும்பினா முதல்ல சாப்பிட்டு முடிக்கணும் “ என்று உறுதியாக சொன்னான்.
” சரி, ஆனா நானே சாப்பிடுறேன் “ என்று சொல்லி சஞ்சு அவன் கையிலிருந்த தட்டை எடுக்க முயல, ஆர்யன் தட்டை இருகப்பிடித்தான்.
” சரி, தட்ட கொடுக்குறேன். நீயே சாப்பிடு ஆனா அந்த நல்ல நியூஸ் என்னனு என் கிட்ட கேட்க கூடாது “ என்று ஆர்யன் சொன்னதும் விரக்தியடைந்த சஞ்சு பதில் சொல்லாமல் அவள் வாயைத் திறந்தாள். ஆர்யன் உடனே அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.
சஞ்சு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அவனை தடுத்து, “ எனக்கு போதும்” என்று தட்டைத் தள்ளினாள் ஆனால் ஆர்யன், “ இல்ல சஞ்சனா, ஒழுங்கா முழுசா சாப்பிட்டு முடி “ என்று சொல்லி அவளுக்கு ஊட்டினான்.
வாயில் இருந்த உணவை விழுங்கிய பின்னர், “ இப்படி தட்டுல இருக்க எல்லாத்தையும் சாப்பிட எனக்கு ஒன்னும் பன்றி மாதிரி வயிறு இல்ல “ என்று சஞ்சு எரிச்சலான முகத்துடன் சொல்ல, அவளது ரியாக்ஷனை பார்த்து ஆர்யன் சத்தமாக சிரித்தான். அவள் ஓரளவு அவள் சாப்பிட்டு விட்டாள் என்பதால் அவளை வற்புறுத்தாமல் தட்டை ஓரமாக வைத்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீரை அவளிடம் நீட்டினான்.
சஞ்சு அவள் கையில் இருந்த டம்ளரில் தண்ணீரை குடித்துவிட்டு, “ இப்போ அந்த நல்ல நியூஸ் என்னனு சொல்லுங்க “ என்று கேட்டு அவனை முறைத்தாள்.
” ஏன் இவ்ளோ அவசரம் ? கொஞ்சம் பொறுமையா இரு, முதல்ல நான் போய் உனக்கு மாத்திர கொண்டு வரேன் “ என்று சொல்லி அவன் விலகிச் செல்லும் போது, “ சரியான சிடுமூஞ்சி “ என்று அவள் முணுமுணுத்தாள்,
ஆர்யன் நின்று திரும்பி அவளை பார்த்து, “ நீ சொன்னது எனக்கு கேட்டுச்சு “ என்று சொல்லி சிரித்தான்.
*****************
முன்னோடோம்:
” உங்க சார் என்ன பெரிய அப்பாட்டக்கரா இல்ல அவருக்கு என்ன ரெண்டு கொம்பு முளைச்சு இருக்கா ? “

1 comment
[…] Chapter 4 […]