ஆர்யன் மற்றும் சஞ்சனாவின் வாழ்க்கை அடுத்த chapter முதல் மாறும்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சஞ்சு உணவை முடித்து அறைக்கு திரும்பினாள். சோர்வு அவளை ஆட்கொண்டதாள் அவள் வழக்கத்தை விட சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆனால் வழக்கமான நேரத்துக்கு மேன்ஷனை அடைந்த ஆர்யன் எப்போதும் போல புத்துணர்ச்சி பெற்று இரவு உணவை சாபிட்டான். வழக்கம் போல தனது அறைக்கு செல்லும் முன் சஞ்சுவை பார்க்க அவள் அறைக்கு சென்றவன் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டான்.
போர்வை கூட இல்லாமல் குளிரில் நடுங்கிக் கொண்டு அவள் உறங்குவதை பார்த்த ஆர்யன், உடனே அவளுக்கு அருகில் இருந்த போர்வையை கொண்டு அவளை மெல்ல போர்த்தி, அவள் கதகதப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டான். பின்னர் குனிந்து அவள் நெற்றியில் லேசாக முத்தமிட்டு, “ குட் நைட் ஸ்வீட் ஹார்ட் “ என்று புன்னகையோடு கூறிவிட்டு அந்த அறையை விட்டு அமைதியாக வெளியேறினான்.
அன்று இரவு நன்றாக உறங்கியதால் மறுநாள் காலையில் சஞ்சனா சற்று புத்துணர்ச்சியுடன் எழுந்தாள். வழக்கம் போல பறவைகளுக்கு உணவளிக்க எண்ணியபடி தோட்டத்திற்குள் நுழைந்தாள் ஆனால், ஏற்கனவே பறவைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டு ஆர்யன் அங்கே இருப்பதைக் கண்டதும் மேலும் செல்லாமல் அப்படியே நின்று, “ இப்ப என்ன பண்றது?” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு யோசித்தாள்.
காலடி சத்தம் கேட்டு சஞ்சு அங்கு வந்ததை கவனித்த ஆர்யன், “குட் மார்னிங் டார்லிங்” என்று கண்ணடித்து அவளை வரவேற்றான்.
அவனை அலட்சியப்படுத்தியவள் மீண்டும் அறைக்கு திரும்பி அலுவலகத்திற்கு செல்ல ஆயத்தமானாள். இளஞ்சிவப்பு நிற புடவையை அணிந்து கொண்டு கொஞ்சமாக மேக்கப் போட்டாள் அதோடு தன் கூந்தலை தோளில் அலையாக தவழ அவள் காலை உணவு சாப்பிட படிகளில் இறங்கிய போது, ஏற்கனவே அவளுக்காக காத்திருந்த ஆர்யனின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்தாள்.
வழக்கத்தை விட அவனது பார்வை தீவிரமாக, அவள் அலட்சியப்படுத்த முடியாத அளவில் இருந்தது. மெல்ல வெறும் வாயில் விழுங்கியவள் அவனை கண்டு கொள்ளாமல் இருக்க முயற்சித்து அதில் தோற்று வெரி வழி இல்லாமல் காலை உணவை முழுவதுமாக தவிர்த்து விட்டு, தனது பையை எடுத்துக் கொண்டு ஆபீஸுக்கு கிளம்பினாள். அவள் சாப்பிடாமல் செல்வதை பார்த்த ஆர்யன் மிகவும் கவலை கொண்டான் இருப்பினும் அலுவலகம் சென்று அவளை சாப்பிட வைக்க முடிவு செய்து அவனும் சாப்பிடாமல் கிளம்பி சென்றான்.
அலுவலகத்தை அடைந்து தனது அறைக்கு அவள் சென்ற போது அவள் அறைக்கு வெளியே டேனியல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருப்பதை பார்த்தாள். சஞ்சுவை பார்த்த டேனியல் புன்னகையுடன், “ ஆஹா, சஞ்சு! இன்னைக்கு செம்ம அழகா இருக்க “ என்று நாடகத்தனமாக நெஞ்சை பிடித்துக் கொண்டு கூறினான். அவன் வார்த்தையை கேட்டு எரிச்சல் அடைந்த சஞ்சு, ” டேனியல், என்னை சஞ்சனானு கூப்பிடுங்க ” என்று திருத்தியவளின் பொறுமை குறைந்தது.
” சரி, சரி, சஞ்சனா, இன்னைக்கு என்ன விசேஷம் ?” என்று அவளைப் பின்தொடர்ந்து அவன் கேட்க, சஞ்சனா “ஒண்ணுமில்ல “ என்று அவனுக்கு பதிலளித்தாள்.
” கடவுளே, இன்னைக்கு என்னால வேலையில கவனம் செலுத்த முடியும்னு கொஞ்சம் கூட எனக்கு நம்பிக்க இல்ல “ என்று டேனியல் சொன்னதை கேட்ட சஞ்சு கண்களை உருட்ட டேனியல் அவளை கனவுடன் பார்த்தான். ” டேனியல். எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நீங்க கிளம்புங்க ” என்று சொன்னாள்.
ஆர்யன் வரும் நேரம் என்பதால் டேனியல் அவள் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாமல் தன் இருக்கைக்கு சென்றான்.
” அவன் இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பார்த்ததே இல்லனு நினைக்கிறேன். பைத்தியக்காரன், காலையிலேயே என் மனநிலையைக் கெடுத்துட்டான் ” என்று டேனியலை திட்டுக் கொண்டே வேலையில் மூழ்கிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அறைக்குச் சென்றாள். அவள் வேலை செய்து கொண்டிருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள். நடுத்தர வயதில் புதிதாக ஒரு பெண் கையில் ஒரு தட்டுடன் அங்கே நின்று கொண்டிருந்தார்.
” நீங்க யாரு?” என்று சஞ்சு கேட்க அதற்கு அந்த பெண், “ மேடம், நான் இங்க தான் வேலை செய்றேன், இங்க கிட்சன்ல சமையல் வேலை செய்றது தான் என் வேலை. சார் உங்களுக்கு ப்ரேக்பாஸ்ட் கொடுக்க சொன்னாரு, அதான் கொண்டு வந்தேன் ” , என்று சொன்ன அந்த பெண் கையில் இருந்த தட்டை சற்று உயர்த்தி காட்டினார்.
என்ன செய்வது என்று யோசித்த சஞ்சனாவின் புருவங்கள் ஒன்றோடொன்று பின்னின. ” நன்றி, ஆனா எனக்கு பசி இல்லை. தயவு செஞ்சு நீங்க திரும்ப கொண்டு போங்க “ என்று சஞ்சு சொன்னதும் அந்த பணிப்பெண் தயங்கினாள், ஆனால் இறுதியில் சரி என்று திரும்பி சென்றாள். சஞ்சு மீண்டும் வேலை செய்ய உட்கார்ந்தால் ஆனால் சிறிது நேரத்தில் ஆர்யன் அவளது அறைக்குள் நுழைந்து அவளது மணிக்கட்டைப் பிடித்து அவனுடன் இழுத்தான்.
” ஆர்யன், என்னை விடுங்க ” என்று சொல்லி சஞ்சு தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள் ஆனால் ஆர்யன், ” வாயை மூடிட்டு என் கூட அமைதியா வா “ என்று சொல்லி அவளை அறையை விட்டு வெளியே அழைத்து சென்றான்.
” உங்களுக்கு என்ன பைத்தியமா ஆர்யன் ? என்ன விடுங்கனு சொன்னேன், இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது ? “ என்று சொல்லி சஞ்சு அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றாள், ஆனால் ஆர்யன் அவளை முறைத்தான். ” இப்போ நீ வாய மூடலனா அத செய்ய எனக்கு நிறைய வழி தெரியும் ” என்று சொல்லி அவளை அவன் உணவருந்தும் தனி அறைக்கு அழைத்து சென்று ஒரு நாற்காலியில் உட்கார வைத்தான்.
பணிப்பெண்ணிடம் இருந்து தட்டை வாங்கி சஞ்சு முன் வைத்துவிட்டு, ” சாப்பிடு சஞ்சனா ” என்று கூறினான். ஆனால் சஞ்சு கோவத்தில், ” எனக்குப் பசிக்கல ” என்று சொன்னாள்.
” நீ சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் இங்க இருந்து நீ போக மாட்ட “ என்று சொல்லி ஆர்யன் கைகளை கட்டிக் கொண்டு அவள் முன் நின்றான். அவன் பிடிவாதமாக நிற்பதை பார்த்த சஞ்சு, ” ஆர்யன், நீங்க ஏன் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறீங்க ?” என்று கத்தியவளின் குரலில் விரக்தி தெரிந்தது.
” சஞ்சனா, சாப்பிட்டா நிச்சயம் உனக்கு நிம்மதி கிடைக்கும்.” என்று ஆர்யன் அமைதியாக கூறினான் அதே சமயம் அவள் குரலில் அவன் தீர்மானமாக இருப்பது தெரிந்தது.
ஏற்கெனவே டேனியல் பேசிய வார்த்தையால் எரிச்சல் மற்றும் விரக்தியில் இருந்த சஞ்சனாவின் பொறுமை கலைந்து, உணர்ச்சிகள் அவளை ஆட்கொண்டன. என்ன செய்கிறாள் என்று புரியாமல் அவள் தட்டைத் தள்ளிவிட்டதில் டேபிள் மேல் இருந்த ஸ்பூன் மற்றும் டம்ப்ளர் கீழே விழுந்தது. இருவருக்கும் இடையே இருக்கும் பதற்றத்தை உணர்ந்த பணிப்பெண் அறையை விட்டு வேகமாக வெளியேறினார்.
ஆர்யனின் தாடை கோவத்தில் இறுகியது. அவன் அவள் மணிக்கட்டைப் பிடித்து அருகில் இழுத்ததில் அவளுடைய முன்பகுதி அவனுடைய அகன்ற மார்பில் அழுத்தியது. அவன் அவளுடைய கைகளை அவளுடைய முதுகுக்குப் பின்னால் பிடித்து, அவளுடைய அசைவுகளைக் கட்டுப்படுத்தினான்.
” என் பொறுமையை சோதிக்காத சஞ்சனா தயவு செஞ்சு உட்கார்ந்து சாப்பிடு “ என்று ஆர்யன் எச்சரித்தான்.
சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது, அவள் அதை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கையில் அமர்ந்தாள். ஆர்யன் அவள் அருகில் அமர்ந்து அவள் தயக்கத்துடன் சாப்பிடுவதைப் பார்த்து ஒரு கிளாசில் தண்ணீர் ஊற்றி வைத்தான்.
” நல்ல பொண்ணு “, என்று முணுமுணுத்தவன், அவளுடைய தலைமுடியில் மெல்ல கோதினான். ” நீ ரொம்ப பலவீனமா இருக்கனு டாக்டர் சொல்லி இருக்காரு. ஒழுங்கா நேரத்துக்கு ஏன் சாப்பிட மாட்டேங்குற சஞ்சனா ? குறைந்த பட்சம் உன்னோட ஆரோக்கியத்த மனசுல வெச்சு ஒழுங்கா சாப்பிடு. உடம்பு சரியில்லாம நீ கஷ்டப்படுறத பார்க்க நான் விரும்பல, அது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது ? ” என்று ஆர்யன் கேட்டான் ஆனால் சஞ்சு அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வேகமாக சாப்பிட்டு முடித்தாள். பின்னர் அவனை பார்த்து, ” நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன். இப்ப நான் கிளம்பலாமா ?” என்று கேட்டாள்.
ஆர்யன் பெருமூச்சு விட்டான். ” ஹ்ம்ம். நீ போகலாம். ரூமுக்கு போனதும் உன்னோட டேபிள் மேல மாத்திர இருக்கு, அத மறக்காம சாப்பிடு “ என்று கூறினான். சஞ்சு அமைதியாக நிற்க, “ என்ன மன்னிச்சிடு ஸ்வீட் ஹார்ட் “ என்று சொல்லி அவளது கூந்தலில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவன், அங்கிருந்து வெளியே சென்றான்.
சஞ்சனாவும் தனது அறைக்குத் திரும்பினாள், ஆனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தாள். சிறிது நேரம் கழித்து, ஆர்யன் அவளை தனது அறைக்கு அழைத்தான். சஞ்சு ஐபேட் எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்று ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றாள்.
“சஞ்சனா” என்று அவன் கூப்பிட, சஞ்சா அவனைப் பார்க்காமலேயே பதிலுக்கு வெறுமனே, “ ஹ்ம்ம் “ என்று முணுமுணுத்தாள். அவள் வருத்தத்துடன் இருப்பதை பார்க்க முடியாமல், ” என்ன பாரு ஸ்வீட் ஹார்ட்”, என்று சொல்லி ஆர்யன் கிட்டத்தட்ட அவளிடம் கெஞ்சியதும், சஞ்சா பெருமூச்சு விட்டாள், ஆனால் ” பரவாயில்ல. என்ன ஏன் கூப்பிட்டீங்கன்னு மட்டும் சொல்லுங்க.” என்று அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் கேட்டாள்.
அவள் நல்ல மனநிலைக்கு திரும்ப நினைத்த ஆர்யன் இன்னும் நிதானமாக, “ கொஞ்சம் உட்கார வாச்சும் செய்றியா சஞ்சனா “ என்று கேட்டான் ஆனால் டேனியல் அவளை எதிர்கொண்ட தருணத்திலிருந்து இன்னும் விரக்தியில் இருந்த சஞ்சு, “ உங்களுக்கு என்ன வேலை செய்யணும்னு மட்டும் சொல்லுங்க, எனக்கு இன்னும் செய்ய வேண்டிய வேலை வேற இருக்கு “ என்றாள் ஐபேடைக் கையில் வைத்துக் கொண்டு.
” நான் கூட வேலை விஷயமா பேச தான் உன்ன வர சொன்னேன். உட்காரு சஞ்சனா “ என்று ஆர்யன் கெஞ்சியதும் பெருமூச்சு விட்டபடி சஞ்சு அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.
” எனக்கு சில விவரங்கள் தேவை. இப்போ நான் சொல்றத குறிச்சுகிட்டு, சம்பந்தப்பட்ட மேனேஜர்ஸ் கிட்ட இருந்த மதியதுக்குள்ள அது எல்லாத்துக்கும் ரிப்போர்ட் கொடுக்க சொல்லி கேட்டு வாங்கு. அப்புறம் நாளைக்கு காலையில 11 மணிக்கு மீட்டிங் இருக்குனு சொல்லிடு, நீயும் அப்போ என் கூட இருக்கணும் ” என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சனா அவன் சொன்னதை எல்லாம் குறிப்பெடுக்க தொடங்கினாள். அவன் அமைதியாக இருந்த போது, “ சரி. இன்னும் வேற எதாவது இருக்கா ?” என்று சஞ்சு கேட்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், “ ஆமா.. ஸாரி பேபி” என்று மெல்லிய குரலில் கூறினான்.
தன் முழு கவனத்துடன் குறித்து கொண்டிருந்த சஞ்சு அதையும் எழுதிவிட்டாள் ஆனால் சுதாரித்து அவனை எரிச்சலுடன் பார்த்து, “ என்ன ?” என்று கேட்டாள். அவள் குரலில் விரக்தி மட்டுமே தெரிந்தது.
” என்ன மன்னிச்சிடுனு சொன்னேன் சஞ்சனா, ஸாரி ” என்று ஆர்யன் சொல்ல, அவனை ஒரு நொடி அமைதியாக பார்த்தவள், “ என்ன சொன்னீங்க ? ஸாரியா ? எதுக்கு அர்த்தம் என்னனு உங்களுக்கு தெரியுமா ? “ என்று கேட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் அறையை விட்டு வெளியேறினாள்.
சஞ்சு வெளியே சென்றதும் இருக்கையில் பின்னல் சாந்து அமர்ந்த ஆர்யன், ” அந்த புடவையில பார்க்க எவ்ளோ அழகா இருக்கா ஆனா ஏன் இவ்ளோ கடுப்பா இருக்கா தெரியல “ என்று சொல்லி தனது நெற்றியை தடவி யோசித்தான். அவளை இந்த நிலையில் பார்ப்பது ஆர்யனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
ஆர்யன் சொன்னபடி சம்மந்தப்பட்ட மேனேஜர்களை அழைத்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லி கேட்க முடிவு செய்த சஞ்சனா, முதலில் மானசியை அழைத்து, ” மானசி, இப்போ புதுசா அறிமுகம் செய்ய போற தயாரிப்போட பட்ஜெட் ரிப்போர்ட் வேணும்” என்று சஞ்சு சொன்னதும், உடனே மானசி, ” நான் இப்போ தான் ரெடி பண்ண போறேன் நாளைக்கே அனுப்பிடறேன்.” என்றாள்.
” இல்ல மானசி, இன்னைக்கு மதியதுக்குள்ள எனக்கு ரிப்போர்ட் வேணும். நாளைக்கு காலையில மீட்டிங் இருக்கு, நீங்க அப்போ அத பத்தி விரிவான தகவல் சொல்ல வேண்டி இருக்கும் “ என்று சஞ்சு கண்டிப்பான குரலில் பேசியது மானசிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
” எங்க கிட்ட கலந்தாலோசிக்காம நீ ஏன் மீட்டிங் ஏற்பாடு பண்ண சஞ்சனா ? “ என்று மானசி கிட்டத்தட்ட திட்டுவது போல பேச, சஞ்சு பல்லைக் கடித்துக் கொண்டு அவளை திரும்ப திட்டாமல் இருக்க ஒரு கணம் கண்களை மூடி மீண்டும் திறந்தவள். ” இந்தக் கேள்விய நாளைக்கு மீட்டிங் சமயத்துல பாஸ் கிட்ட கேளுங்க.” என்று சொன்னாள்.
ஆர்யன் ஏற்பாடு செய்ய சொன்ன மீட்டிங் என்று தெரிந்ததும் மானசி மேற்கொண்டு எதுவும் பேசாமல், ” சரி. அனுப்பி வைக்கிறேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
பின்னர் சஞ்சு, டேனியலை அழைக்க எரிச்சலடைந்தாள், ஆனால் அவள் வேலை செய்ய வேண்டியிருந்தது, எனவே வேறு வழியின்றி அவனை அழைத்தாள். டேனியல் உடனடியாக அவளுக்கு பதிலளித்து, ” ஹாய், சஞ்சு ! என்ன ஒரு இன்ப அதிர்ச்சி, எனக்கு போன் பண்ணி இருக்க. சரி சொல்லு, நான் என்ன உதவி செய்யணும் இந்த அழகு தேவதைக்கு ? “ என்று கேட்டான்.
” டேனியல், ஒழுங்கா பேசுங்க ” என்று சஞ்சு எச்சரிக்கை தொனியில் சொல்ல, டேனியல் உடனே சிரித்து, “ சரி… சரி.. மன்னிச்சிடுங்க. இப்போ சொல்லுங்க சஞ்சனா.” என்று கேட்டான்.
” எனக்கு மதியத்துள்ள சந்தை நிலவர பகுப்பாய்வு ரிப்போர்ட் வேணும் அப்புறம் நாளைக்கு 11 மணிக்கு உங்களுக்கு பாஸ் கூட மீட்டிங் இருக்கு ” என்று சொல்லிவிட்டு அவன் மேற்கொண்டு பேசுவதற்குள் சஞ்சு அழைப்பை துண்டித்தாள்.
மதியம், பவித்ரா சஞ்சுவின் அறை கதவைத் தட்டினாள். பவித்ராவுக்கு அறைக்குள் நுழைய அனுமதி இல்லாததால் சஞ்சு அவளுக்காக கதவைத் திறந்தாள்.
” என்னாச்சு சஞ்சு? மானசி ஏன் கொலைவெறியில கத்திட்டு இருக்கா ? என்று பவித்ரா சஞ்சுவிடம் கேட்டதும், ” நான் அவ கிட்ட ஒரு ரிப்போர்ட் கேட்டேன். அதனால தானோ என்னவோ.” என்று சொல்லி சஞ்சு சிரித்தாள்.
” ஓஹோ சரி, மதியம் லஞ்ச் சாப்பிட என் கூட வர தானே ?” என்று பவித்ரா கேட்க அதற்கு ஆமோதிப்பது போல சஞ்சு தலையை ஆட்டினாள்.
பவித்ரா வெளியே சென்றதும் டேனியல் அவள் கதவைத் தட்ட, சஞ்சு தயக்கத்துடன் கதவைத் திறந்தாள்.
அவனை பேச விடாமல், ” ரிப்போர்ட் ரெடியா இருக்கா?” என்று சஞ்சு கேட்டாள் அதற்கு டேனியல் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
” நீங்க வேலை செய்யும் போது பாஸ் மாதிரி இருக்கீங்க தெரியுமா. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க சஞ்சனா ” என்று அவன் பேச இடம் கொடுக்க முயன்றான் அதை புரிந்து கொண்ட சஞ்சு, ” ரிப்போர்ட் மட்டும் கொடுங்க டேனியல், எனக்கு நிறைய வேல இருக்கு ” என்று நேரடியாக வேலையை பற்றி மட்டும் பேசினாள்.
” இதோ இருக்கு ரிப்போர்ட் “ என்று சொல்லி அவள் கையில் கொடுத்த டேனியல், “ சரி இப்போ வாங்க சாப்பிட போகலாம் ” என்று அவளை அழைத்தான், ஆனால் சஞ்சு, “ இல்ல நீங்க போங்க. நான் அப்புறம் சாப்பிடறேன்.” என்று சொல்லி பணிவுடன் மறுத்தாள்.
” என்ன சஞ்சனா, இவ்ளோ வேலை செஞ்சா என்ன ஆகுறது ? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.” என்று டேனியல் அவளை மேலும் வற்புறுத்த முயற்சிக்க, அவள் பதில் சொல்வதற்குள் ரஞ்சித் உள்ளே நுழைந்தான்.
” டேனியல்! நல்ல வேல நீ இங்க இருக்க “ என்று சொல்லி ரஞ்சித் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.
ரஞ்சித் தன்னுடன் எப்போதும் நட்பாக இருந்ததில்லை என்பதால் டேனியல் குழப்பத்துடன், ” என்னாச்சு ரஞ்சித் ?” என்று கேட்டான்.
” என் கூட இப்போ லஞ்ச் சாப்பிட வா “ என்று ரஞ்சித் சொல்ல, டேனியல் மறுப்பதற்குள், ரஞ்சித் அவனை வெளியே இழுத்துச் சென்றான். ரஞ்சித் தெரிந்தே அதை செய்தான் என்பதை புரிந்து கொண்ட சஞ்சனா அவனது சேட்டைகளைக் கண்டு சிரித்தாள். பின்னர், ஆர்யனின் அறைக்கு சென்று அறிக்கைகளை சமர்ப்பித்தாள்.
” லஞ்ச் சாப்டியா சஞ்சனா ? ” என்று ஆர்யன் அவளிடம் கேட்டதும், “ இப்போ தான் போக போறேன் “ என்றாள் சஞ்சு.
அவள் என்ன பதில் சொல்வாள் என்று தெரிந்தும் ” ஹ்ம்ம். என் கூட லஞ்ச் சாப்பிட வரியா ? ” என்று ஆர்யன் கேட்டதும், “ முடியாது நான் வர மாட்டேன் “ என்று அவன் எதிர்பார்த்தது போலவே சஞ்சு பதில் சொன்னாள்.
அவன் அறையை விட்டு வெளியேறியதும் பவியை அழைத்து மதிய உணவு சாப்பிட சென்றாள். அன்று மாலை, அவள் புறப்படத் தயாரான போது, டேனியல் அவளை அணுகி, “ ஹலோ சஞ்சனா ! உங்களுக்கு இப்போ எதாவது வேலை இருக்கா ? என் கூட காபி சாப்பிட வரீங்களா ? என்று அவன் அவளிடம் கேட்க, டேனியல் என்ன முயற்சி செய்கிறான் என்று புரிந்து கொண்டு, “ இல்ல, ஸாரி டேனியல். எனக்கு வேலை இருக்கு ” என்ரு சொல்லி அவனது கோரிக்கையைய நிராகரித்தாள்.
அவள் காரை நோக்கி செல்வதை பார்த்து பின்தொடர்ந்த டேனியல், ” கொஞ்ச நேரம் தானே சஞ்சனா ? நாம இங்க பக்கத்துல இருக்க காபி ஷாப் போகலாம் ” என்று இரண்டாவது முறையாக தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்தான், ஆனால் சஞ்சு அவனிடம் மறுத்து, ” எனக்கு லேட் ஆகுது டேனியல் “ என்று சொல்லிவிட்டு விரைந்து காரில் ஏறி புறப்பட்டாள்.
டேனியல் பைக்கில் சாய்ந்து சஞ்சனாவின் கார் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவன் உதட்டில் ஒரு கள்ளச் சிரிப்பு விளையாடியது.
” இவ ரொம்ப அடம் புடிக்குறா ஆனா சீக்கிரமே என் வலையில இவள விழ வைப்பேன் “ என்று அவன் முணுமுணுத்தான். அவன் அருகில் நின்று எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த வினய், “ எனக்கு அப்படி தோனல டேனியல். நீ அவ கிட்ட இருந்து விலகி இருக்குறது தான் நல்லது. அவள பாத்தா எனக்கு என்னவோ கண்டிப்பா பெரிய பிரச்சன பண்றவ மாதிரி தான் தெரியுறா. இதனால பின்னாடி நீ தான் வருத்தப்பட போற “ என்று எச்சரித்தான்.
வினயின் வார்த்தையை கேட்டு டேனியல் கலங்காமல் சிரித்தான். ” ரிலாக்ஸ் நண்பா. அவ புதுசுல அதனால தான் கொஞ்சம் முரண்டு புடிக்குறா போல. பழகிட்டா சரி ஆயிடுவா. சீக்கிரமே என் கிட்ட சிக்க தான் போறா. அப்போ அவளுக்கு நல்லா ட்ரைனிங் கொடுத்து எனக்கு ஏத்த மாதிரி மாத்துறேன் பாரு “ என்று கூறினான்.
வினய்யின் முகபாவம் இருண்டது. ” சொல்றத நீ கேட்குற மாதிரி எனக்கு தெரியல. என்னவோ பண்ணு ஆனா என்ன இதுல இழுக்காத “ என்று சொன்னான்.
தூரத்தில் மறைந்த சஞ்சனாவை டேனியலின் பார்வை பின்தொடர்ந்தது. மெல்லிய விசில் அடித்து, “ அந்த புடவையில அவ இன்னைக்கு எவ்ளோ அழகா இருந்தா தெரியுமா. சத்தியமா சொல்றேன், இவ்ளோ அழகான பொண்ண நான் பார்த்ததே இல்ல ” என்று டேனியல் சொன்னதும் வினய் அவனை முறைத்தான். ” டேனி, இந்த மாதிரி பேசுறது எனக்கு சுத்தமா புடிக்காதுன்னு உனக்கு நல்லாவே தெரியும் அதனால இந்த மாதிரி என்கிட்ட பேசுறத நிறுத்து “ என்று சொன்னான்.
” நீயெல்லாம் மனுஷனா ? வாழ்க்கையை எப்படி அனுபவிக்குறதுனு உனக்கு தெரியாம நீ எல்லாம் வாழுறதுல என்ன அர்த்தம் ? “ என்று கேட்டு டேனியல் சிரிப்பதை பார்த்த வினய் தன் கையை கட்டிக் கொண்டு, “ அவளுக்கு ஒரு அண்ணனோ இல்ல லவ்வர் இருந்தா அப்போ என்ன செய்வ ? அவங்க கையால நீ மரண அடி வாங்குவ அப்போ தெரியும் “ என்று வினய் கிண்டல் செய்தான் ஆனால் அவன் வார்த்தையில் எச்சரிக்கை இருந்தது.
” அப்படி எதுவும் நடக்காது. பொறுத்திருந்து பாரு, ஒரு நாள் இதே ஆபீஸ்ல இருந்து அவள என் கூட என் பைக்குல கூட்டிட்டு போவேன் “ என்று சொல்லி டேனியல் கள்ளப் புன்னகை உதிர்த்தான்.
டேனியலின் வார்த்தையை கேட்டு வினய் தலையை ஆட்டி, “ இவன் கிட்ட பேசுறதுல அர்த்தமே இல்ல, இவன் மாறவே மாட்டான். நான் விலகி போறது தான் எனக்கு நல்லது “ என்று மனதில் நினைத்துக் கொண்டு மறுவார்த்தை பேசாமல், டேனியலை அவன் போக்கில் யோசிக்க விட்டுவிட்டு அவன் திரும்பிச் சென்றான்.
****************
முன்னோட்டம் :
” ஸ்வீட் ஹார்ட், நான் சொல்றதைக் கேளு. அப்புறம் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? கோவமா இருக்கும் போது நீ ரொம்ப அழகா இருப்ப “

1 comment
[…] Chapter 8 […]