Home FamilyChapter 17

Chapter 17

by Siragugal Novels
22 views

அன்று பிற்பகல் ஆர்யனும், ரஞ்சித்தும் அவர்களின் ரகசிய இடத்தை விட்டு வெளியேறிய பிறகு, டேனியல் வெகு தொலைவில் இருந்த ஒரு பழைய கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டான். ஆர்யனின் திட்டப்படி ரஞ்சித் கொடுத்த அறிவுறுத்தலை ஏற்று டேனியலின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவனை அந்த கட்டிடத்தின் உள்ளே இழுத்துச் சென்றனர். அங்கு அவன் பாதுகாப்பாக வைக்கப்பட்டதும், ரஞ்சித் காவலர்களிடம், ” அவனோட கை, கால்கள அவிழ்த்துவிட்டு, நைட்டு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்க “ என்று கட்டளையிட்டான்.

காவலர்கள் ரஞ்சித்தின்  உத்தரவுகளைப் பின்பற்றி, டேனியலின்  கையில் பூட்டி இருந்த கைவிலங்கை விடுவித்து, பின்னிரவில் அவனுக்கு ஒரு தட்டு உணவைக் கொடுத்தனர்.

டேனியல் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது காவலர்கள் தங்களை அலட்சியமாக நிலைநிறுத்திக் கொண்டனர், அவர்கள் அதிக கவனம் செலுத்தாதது போல டேனியலுக்கு தோன்றியது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட டேனியல் எச்சரிக்கையுடன் சத்தமில்லாமல் கதவை நோக்கி நடந்தான். காவலர்கள் ஆழ்ந்த உரையாடலில் இருந்தனர், அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாதது போல அவர்கள் பாசாங்கு செய்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

டேனியல் அந்த கட்டிடத்தை விட்டு வெளியே சென்றதும், அவன்  அந்த பாழடைந்த சாலையில் விரைந்து ஓட முயன்றான், அவனுடைய கண்கள் அங்கிருந்து தப்பித்து செல்வதற்கான வழியை ஆராய்ந்தன. அந்த சாலையின் மூலையில், ஒரு ஆட்டோ நின்று கொண்டிருப்பதை கண்டு உடனே அதை நோக்கி விரைந்தான்.

அந்த ஆட்டோ டிரைவர் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டேனியல் ஆட்டோவில் அமர்ந்து அவரை அழைத்து, “ டிரைவர், நான் சொல்ற அட்ரஸ்கு என்ன கூட்டிட்டு போக முடியுமா ? “ என்று  அவன் மூச்சிரைத்து கேட்டான்.

ஆட்டோ டிரைவர் ரியர் வியூ கண்ணாடி வழியாக அவனைப் பார்த்து ” கண்டிப்பா சார், எங்க போகணும் சொல்லுங்க நான் கூட்டிட்டு போறேன் “ என்றார்.

” உங்களால எவ்ளோ வேகமாக ஓட்ட முடியுமோ அவ்ளோ வேகமாக ஓட்டுங்க ” என்று சொன்ன டேனியலின் குரல் பயத்தில் மற்றும் போதையின் தாக்கத்தில் நடுங்கியது அதற்கு டிரைவர் உடனே ” கண்டிப்பா சார்.” என்று சொல்லி தலையசைத்தார்.

அதன் பிறகு டேனியல் அவரிடம், அவன் நீண்ட மாதங்களாக தனிமையில் தங்கி இருந்த அவன் வீட்டு முகவரியை கூறினான்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணத்திற்கு பிறகு டிரைவர் அந்த முகவரியில் ஆட்டோவை அவன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தினார். டேனியல் வீதடுமாறி வீட்டுக்குள் சென்று பணத்தை கொண்டு வந்து டிரைவரிடம் கொடுத்தான். 

டேனியலின் கை மற்றும் அவன் உடம்பும் நடுங்குவதை பார்த்த டிரைவர், ” சார், உங்களுக்கு எதாவது பிரச்சனையா ? உங்க கை ரெண்டும் ஏன் இப்படி நடுங்குது ? ” என்று கேட்டார் அதற்கு டேனியல், “ அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீங்க போங்க நான் பாத்துக்குறேன் ” என்று சொன்னான்.  

ஆட்டோ கிளம்பியதும், சற்றும் தூரம் கடந்து டிரைவர் ரகசியமாக போன் செய்தார்.

” ஹ்ம்ம் சொல்லுங்க என்ன ஆச்சு ? ” என்று ரஞ்சித கேட்டதும், ” சார், நீங்க சொன்ன அட்ரஸ் தான் அந்த ஆளும் கொடுத்தான். அவன இப்போ தான் அங்க  இறக்கி விட்டேன்.” என்றார் அந்த ஆட்டோ டிரைவர்.

” அங்க அவனைத் தவிர வேற யாராது இருந்தாங்களா ? ” என்று ரஞ்சித் கேட்க, அந்த டிரைவர் உடனே, “ இல்ல சார். அவன் மட்டும் தான் இருந்தான் வேற யாரும் இல்ல “ என்றார். 

” சரி, உங்க வேலை முடிஞ்சுது நீங்க கிளம்புங்க “ என்று ரஞ்சித் சொன்னதும் அந்த ஆட்டோ டிரைவர் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்து தன் வழியில் சென்றார். 

இதற்கிடையில், டேனியல் தனது வீட்டின் கொல்லைப்புறத்துக்கு  பதுங்கி சென்று அங்கிருந்த ஒரு பூந்தொட்டியை தூக்கிய போது, பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட மொபைல் போன் மறைத்து வைக்கப்படிருன்தது. டேனியல் தன் நடுங்கும் கைகளால் அதை பையை விரித்து அதில் இருந்த மொபைலை எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்று அந்த மர்ம நபரின் எண்ணை டயல் செய்தான்.

அவனது அழைப்பு கிட்டத்தட்ட உடனடியாக பதில் சொல்லப்பட்டது.

“டேனியல், நீ எங்க இருக்க ?” என்று அந்த நபர் கேட்டதும், “ நான் தப்பிச்சு வீட்டுக்கு வந்துட்டேன், அந்த பாஸ்டர்ட் எனக்கு போதை மருந்து கொடுத்தான் ” என்று டேனியல் கோவத்தில் கொந்தளித்தான்.

” நீ என்ன பேசுறனு தெரிஞ்சு மரியாதையா பேசு, இன்னொரு முறை ஆர்யன் பத்தி தப்பா எதுவும் பேசின அப்புறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன், மரியாதையா இரு “  என்று அந்த நபர் எச்சரித்தார்.

டேனியல் கசப்பான சிரிப்பை உதிர்த்தான். ” எதுவா இருந்தாலும் இப்போ நான் கவலைபப்ட தயாரா இல்ல. எனக்கு இப்போ என்ன வேணும்னு உங்களுக்குத் தெரியும். சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க,  இதுக்கு மேல என்னால தாங்க முடியாது, என் உடம்பு எரியுது ” என்று டேனியல் பற்களை கடித்துக் கொண்டு முணுமுணுத்தான்.

” உன் அட்ரஸ் என் கிட்ட  ஏற்கனவே இருக்கு, முப்பது நிமிஷம் வெயிட் பண்ணு, உனக்கு தேவையானது வந்து சேரும் ” என்று சொல்லி அந்த நபர் அழைப்பை துண்டித்தார்.

டேனியலின் விரல்கள் பதற்றத்துடன் மேஜையில் தட்டின. ஒவ்வொரு நொடியும் அவள் உடல் தாங்க முடியாத அளவுக்கு அவனை இம்சைக்கு உள்ளாக்கியது. அவன் உடல் வலித்தது, அவன் ஏங்கியது கிடைக்காததால் நரம்புகள் எரிந்தன, அவனது கரங்கள் அவனது கால்களுக்கு இடையே சென்று வேலை செய்ய தொடங்கியது.

ஒரு வழியாக நாற்பது நிமிடங்கள் கழித்து கதவு தட்டும் சத்தம் வீடு முழுவதும் எதிரொலித்தது. டேனியல் விரைந்து சென்று கதவைத் திறந்த போது அங்கே ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.

” என்ன உங்களுக்கு சேவை செய்ய அனுப்பி இருக்காங்க ” என்று அவள் மெதுவாக சொன்னாள். அவசரத்தில் இருந்த டேனியல் அவளது மணிக்கட்டைப் பிடித்து உள்ளே இழுத்து கதவை அறைந்து சாத்தினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்லிய அலறல்கள் அவன் வீடு முழுவதும் எதிரொலித்தது.

காலையில், டேனியல் களைப்புடன் தரையில் விரிந்து கிடந்தான். அவன் உடல் வியர்வையில் நனைந்திருந்தது, அவன் உடல் போல அவன் புத்தியும் மந்தமாக இருந்தது. அவன் தலையைத் திருப்பிப் பார்த்த போது அந்தப் பெண் அவனக்கு அருகில் நிர்வாணமாக, அசைவற்று சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டான். ஆனால் தற்போது எதுவும் செய்ய ஆற்றல் இல்லாமல் சோர்ந்து போய் பெருமூச்சை இழுத்து விட்டு நிம்மதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்தான்.

அதே நேரம் ஆர்யன் மேன்ஷனில், தன் உடலை சுற்றி ஒரு அரவணைப்பும், தனது முகத்திற்கு கீழே இருந்த கதகதப்பை உணர்ந்த சஞ்சு கண் விழித்துப் பார்த்த போது அவள் ஆர்யனின் மார்பில் தலை வைத்து படுத்திருப்பதை பார்த்தாள், அதோடு  அவளது விரல்கள் அவளை அறியாமலேயே அவனது சட்டையை இறுக்கமாக  பிடித்திருந்தன. ஆர்யன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான், அவனது முகம் முற்றிலும் அமைதியாகவும் இருந்தது.

அவனது ஸ்பரிசத்திலும், அவர்களின் நெருக்கத்தை உணர்ந்ததும் சஞ்சனாவின் மனத்திலும், வயிற்றிலும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. அவனது வலுவான கைகள் அவளது இடுப்பைச் சுற்றி பாதுகாப்பாக பிடித்து அணைத்திருப்பதை அவள் உணர்ந்த போது அவளுடைய கன்னங்கள் வெப்பமடைந்தது, அவள் உதடுகளில் ஒரு வெட்கப் புன்னகை தவழ்ந்தது, அந்த நெருக்கத்தில் அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

சஞ்சு அவனது உறக்கத்தை தொந்தரவு செய்யாமல் கவனமாக அவனிடம் இருந்து நகர முயன்றாள், ஆனால் தூக்கத்திலும் கூட  அவள் இடுப்பில் இருந்த அவனது பிடி லேசாக இறுகியது. தன் உதட்டை கடித்து புன்னகையை மறைத்து கொண்டு அவன் கைகளை மெல்ல விலக்கிவிட்டு படுக்கையிலிருந்து நழுவி பாத்ரூமுக்கு  சென்று கண்ணாடி முன் நின்றாள். அவள் கன்னங்கள் மட்டும் அல்ல அவள் முகம் முழுவது வெட்கத்தில் சிவந்திருப்பதை கண்டு முகத்தை உள்ளங்கையில் மூடி சிரித்தாள்.

சஞ்சு படுக்கையை விட்டு சென்று பாத்ரூம் கதவை சாத்தியதும் உதட்டில் ஒரு குறும்புச் சிரிப்புடன் ஆர்யனின் கண்கள் திறந்தன.

” இன்னிக்கு பொழுது நல்லாவே விடிஞ்சு இருக்கு ஆர்யன், குட் மார்னிங் டா உனக்கு “ என்று புன்னகையுடன் நினைத்தான் ஆர்யன்.

குப்புறப் படுத்து தனது கையை நீட்டி சஞ்சு படுத்திருந்த இடத்தில் இருந்த கதகதப்பை அனுபவித்தபடியே சோம்பல் முறித்தபடி படுத்திருந்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு பாத்ரூம் கதவு திறந்து சஞ்சு ஒரு அங்கி அணிந்து வெளியே வந்தாள். அவளுடைய ஈரமான தலைமுடி அவளுடைய தோள்களில் விழுந்து, நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. ஆர்யன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து சஞ்சு கண்ணாடி முன் நின்று தன் தலைமுடியை உலர்த்திக் கொண்டாள். பின்னர் அன்றைய நாளுக்கான ஆடைகளை எடுக்க அலமாரியை நோக்கி நகர்ந்தாள்.

சஞ்சு அலமாரி இருக்கும் அறைக்கு சென்று கதவை சாத்தியதும் பெரு மூச்சு விட்டான் ஆர்யன். ” என்னடா ஆர்யன் இது உனக்கு வந்த சோதன ?  இவ தினமும் வந்து இப்படி நின்னா நான் என்ன செய்வேன் ? ஏற்கனவே உன் கண்ட்ரோல் ஊசலாடுது இதுல இவ வேற இப்படி வந்து நிக்குறா.ஒரே ரூம்ல வந்து இருக்க முடிவு பண்ணி தப்பு பண்ணிட்டோமோ ? அய்யையோ.. கடவுளே…உன் புள்ளைய காப்பாத்து பா “ என்று மனதில் சொல்லிக் கொண்டே தனது படப்படக்கும் நெஞ்சை தட்டி கொடுத்து விட்டு  அவனது எண்ணங்கள் மேலும் சுழல்வதற்குள் படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமை நோக்கி நடந்தான். குளிர்ந்த நீரில் குளித்தால் நல்லது நடக்கும் என்று ஷவரை ஆன் செய்து குளிர்ந்த நீரில் தன்னை அமைதிப்படுத்தினான்.

புத்துணர்ச்சியுடன்  உடை அணிந்த பின் ஆர்யன் வெளியே வந்த போது, சஞ்சு பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். வழக்கம் போல அவள் அந்த காலை நேர அழகிய காட்சியில் தொலைந்து போயிருந்தாள். ஆர்யன் மெல்ல அங்கு சென்று அவளருகில் நின்றான்.

” குட் மார்னிங் பேபி ” என்று ஆர்யன் மெல்லிய குரலில் சொன்னதும், சஞ்சு மெல்லத் திரும்பி ” குட் மார்னிங் ஆர்யன்.” என்று புன்னகையோடு கூறினாள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்யன், ” என்ன மேடம் ஆர்யன் சொல்லி பேசுறா ? குட் மார்னிங் வேற திருப்பி சொல்றா ? நல்ல மூட்ல இருக்கா போல, சரி இப்படியே இருக்க மாதிரி பாத்துக்குவோம் “ என்று யோசித்துக் கொண்டே அவளைப் பார்த்தான்.

” நீ இங்க என்ன செய்ற ?” என்று ஆர்யன் கேட்டதும், “ ஒண்ணுமில்ல சும்மா தான் தோட்டத்தோட அழகான காட்சிய பாத்துட்டு இருக்கேன் “ என்றாள் அவள் மென்மையான குரலில்.

ஆர்யன் தன் பார்வையை முன்னால் இருந்த காட்சிக்கு பதிலாக அவளை நோக்கித் திருப்பினான். ” நான் கூட அழகான காட்சிய தான் பாத்துட்டு இருக்கேன் “ என்று அவன் சொன்னதும் சஞ்சுவின் கண்கள்  அவன் கண்களைச் சந்தித்தன, அவன் பார்வையில் படிக்க முடியாத ஏதோ ஒன்று இருப்பதை சஞ்சு கண்டடு அது என்னவென்று புரியாமல் சட்டென  பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அவள் கூந்தலின் சில இழைகள் காற்றில் பறந்து அவள் முகத்தில் விழுந்தது. ஆர்யன் கையை நீட்டி மெல்ல அந்த இழைகளை அவள் காதுக்குப் பின்னால் ஒதுக்கிய போது அவனது விரல்கள் அவளது தோலை மேய்ந்தன.

ஆர்யனின் லேசான ஸ்பரிசத்தில் சஞ்சு நடுங்கினாள், அவள் உடல் சிலிர்த்தது, ஆர்யன் அவளிடம் அவன் ஏற்படுத்திய தாக்கத்தை கவனித்து ஒரு திருப்தி அலையை உணர்ந்தான்.

” டேய் ஆர்யன், வேணாம் டா ரொம்ப ஓவரா போகாத. இப்போ தான் ஆர்யன் சொல்லி கூப்பிடுறா. நீ ஏதாவது பண்ண போய் அப்புறம் அவ  மறுபடியும் மிஸ்டர் சைதன்யா சொல்லிட போறா “ என்று மனதில் நினைத்த ஆர்யன் தொண்டையைக் கனைத்து அமைதியாக நின்றான்.  

” ப்ரேக்பாஸ்ட் சாப்பிட போகலாமா ?  என்று சஞ்சு கேட்டதும், ” நீ போ, நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வறேன்” என்றான் ஆர்யன்.

சஞ்சு சரி என்று தலையசைத்துவிட்டு பால்கனியை விட்டு வெளியேறினாள். அவள் வெளியே சென்றதும் ஆர்யன் மொபைலை எடுத்து ரஞ்சித்துக்கு டயல் செய்தான்.

” குட் மார்னிங் சார் ” என்று ரஞ்சித் சொன்னதும்,  “ என்ன ஆச்சு தகவல் எதுவும் கண்டுபுடிச்சியா ? “ என்று ஆர்யன் கேட்டான்.

“ ஆமாங்க சார், டேனியல் அவனோட வீட்டுக்கு போன உடனே யாரோ ஒருத்தருக்கு போன் பண்ணி பேசினான் ஆனா அது அவனோட நம்பர்ல இருந்து இல்ல, வேற ஒரு புது நம்பர்ல இருந்து பேசினான் “  என்று ரஞ்சித் சொன்னதை கேட்டதும் ஆர்யனின் கண்கள் கோவத்தில் இருண்டன. ” அவன் என்ன பேசினான் ?” என்று கேட்டான்.

” போதை மருந்து தாக்கத்துல இருந்ததால அவனோட தேவைகள கேட்டான். அவன் பேசின ஆள் என்ன சொன்னாங்கனு  எங்களால கேட்க முடியல, ஆனா சுமார் ஒரு நாற்பது நிமிஷத்துக்கு அப்புறம்  ஒரு பொண்ணோட குரல் கேட்டுச்சு.அவனோட விரக்தியெல்லாம் அவ மேல காட்டிட்டு இருந்தான், அந்த பொண்ணு ரொம்ப நேரம் கெஞ்சி அழுதுட்டு இருந்தா ஆனா அதுக்கு அப்புறம் அவ குரல் சுத்தமா நின்னு போச்சு ” என்று ரஞ்சித் முழு விவரங்களையும் கூறினான். அதை கேட்ட பிறகு ஆர்யனின் தாடை இறுகியது. ” அவன தொடர்ந்து கண்காணிச்சுட்டே இரு ” என்றான் ஆர்யன்.

” புரியுது சார். அவன் நிச்சயமா அந்த ஆள சீக்கிரமே சந்திப்பான்னு எனக்கு தோணுது “ என்று ரஞ்சித் சொல்ல, “ ஹ்ம்ம் பார்க்கலாம்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு ஆர்யன் கீழே சென்றான். அங்கு சஞ்சு டைனிங் ஹாலில் அவனுக்காக காத்திருப்பதைக் கண்டான். அவனும் சாப்பிட அமர்ந்ததும் சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் ஓரப் பார்வையால் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒரு அமைதியான அதே சமயம்  சொல்லப்படாத பதற்றம் அவர்களுக்கிடையில் நிலவிக் கொண்டிருந்தது.

“என்னாச்சு சஞ்சு ? இன்னிக்கு பார்க்க நீ ரொம்ப வித்தியாசமா இருக்க ” என்றார் கௌசல்யா கண்களைச் சுருக்கியபடி. அவர் வார்த்தையை கேட்டதும் சஞ்சனா சட்டென்று மறுத்து தலையை ஆட்டினாள். ” அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மா.” என்று சொல்லி கன்னங்களை தட்டினாள்.

கௌசல்யா சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை, ஆனால் அதை பற்றி மேலும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து, ” இல்ல நீ வேற மாதிரி இருக்க… பரவாயில்ல விடு, இப்போ சாப்பிடு ” என்று கூறினார்.

சஞ்சனாவின் எதிரே அமர்ந்திருந்த ஆர்யன், பிடிபட விரும்பாமல் தன் வேடிக்கையான புன்னகையை மறைத்துக் கொண்டான்.

சில நொடிகளுக்குப் பிறகு, ” சஞ்சு, இன்னைக்கு எங்கேயாச்சும் வெளிய போகலாமா?” என்று ஆர்யன் கேட்டதும், சஞ்சனா வியப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்து, “எங்க போகலாம் ?” என்று கேட்டாள்.

” நீயே சொல்லு ” என்று ஆர்யன் சொன்னதும், “ என்ன தனியா அனுப்பப் போறீங்களா ? ” என்று கேட்டு அவள் புருவத்தை உயர்த்தினாள். உடனே ஆர்யன், “ நிச்சயமா உன்ன தனியா அனுப்ப மாட்டேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்.” என்று கூறினான்.

அவள் புன்னகை லேசாக தடுமாறியது. “ஆனா உங்கள யாராச்ச்சும்  பார்த்துட்டா என்ன செய்றது ? எல்லாத்துக்கும் மேல, நீங்க ஒரு பிரபலம் அதோட பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்த கட்டி ஆளுற தொழிலதிபர் வேற “ என்று சஞ்சு சொன்னதும் அவள் சொன்ன விதத்தை கேட்டு ஆர்யன் பின்னால் சாய்ந்து சிரித்தான். பின்னர் அமைதியடைந்து, ” உனக்கு எங்க போகணும்னு மட்டும் சொல்லு, மத்ததை நான் பாத்துக்கறேன்.” என்று கூறினான்.

உடனே சஞ்சு ” பீச் போலாமா ? ” என்று கேட்டாள் தயக்கமின்றி.

 ” அவ்ளோ தானே, சரி நீ ரெடி ஆகு, நாம சீக்கிரம் கிளம்புறோம்.” என்று ஆர்யன் புன்னகையோடு சொன்னான். அவன் சொன்னதை கேட்டதும் அவள் முகம் மலர்ந்தது. ” நிஜமாவா ?” என்று கேட்டாள் அவன் ஆம் என்று தலை அசைத்ததும், சஞ்சு கைகளைக் கூப்பி, ” அய்யோ கடவுளே ! ஆர்யன் ரொம்ப நன்றி “ என்று சொல்லிவிட்டு அவள் மனதில் உற்சாகம் குமிழியிட மாடிக்கு ஓடினாள். சில நிமிடங்களில் தயாரானவள், கிளம்பும் ஆவலுடன் மீண்டும் லிவிங் அறைக்கு ஓடி வந்தாள்.

அவள் உற்சாகத்தை கண்ட ஆர்யன் மனத்திலும் அதே உற்சாகம் பிரதிபலித்தது. இருவரும் புறப்பட்டு காரில் அமர்ந்தனர், ஆர்யன் மற்றும் சஞ்சனா பின் இருக்கையில் அமர்ந்தனர், ரஞ்சித் பயணிகள் இருக்கையில் அமர்ந்தான். ஆர்யன் ஏற்கனவே ரஞ்சித்திடம் அவனது திட்டம் பற்றி தெரிவித்திருந்தான்.

கார் செல்லும் பாதையை சஞ்சனா சந்தேகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ” என்ன எங்க கூட்டிட்டு போறீங்க ? ” என்று கேட்டாள். அதற்கு புன்னகைத்த ஆர்யன் முன்னால் சாலையைப் பார்த்துக் கொண்டே, “ கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியும் “ என்று சொன்னான்.  

சஞ்சுவின் உற்சாகம் கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. அவள் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆர்யனின் கையைப் பிடித்துக் கொண்டாள், அவன் சந்தோஷத்தை கட்டுப்படுத்துவதற்குள் சஞ்சு அவன் மீது சாய்ந்து கொண்டு கடற்கரைக்கு அவள் சென்ற முந்தைய அனுபவங்களை பற்றி உற்சாகமாகப் பேசித் தொடங்கினாள். அவளது வார்த்தைகள் மட்டும் அல்ல, அவள் கண்களும் உற்சாகத்தில் மின்னிய விதமும் ஆர்யனை மெய்மறக்கச் செய்தன.

ஆர்யனின் மனம் அலைபாய்ந்தது. சஞ்சு அவன் கையை பிடித்தது முதல் முறை அல்ல. அவள் உறங்கும் போதும், அவளை அறியாமல் உடைந்த நிலையில் இருக்கும் போது மட்டும் தான் அவன் கையை பிடித்திருக்கிறாள் ஆனால் முதல் முறையாக அவள் இயல்பாக, சுய விருப்பத்தோடு அவன் கையை பிடித்தாள், அந்த உணர்வு அவனுக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.

சஞ்சனா திடீரென பேசுவதை நிறுத்தி விட்டு, “ எவ்ளோ நேரமா நான் மட்டும் பேசிட்டே இருக்கேன் “ என்று முகத்தை சுளித்து சொன்னாள். “ ஒன்னும் பிரச்சன இல்ல, நீ பேசு மா “ என்று சொல்லி ஆர்யன் சிரித்தான். அவன் சொன்னதை கேட்டு சஞ்சு விளையாட்டாக கண்களை உருட்டினாள். ” சரி. ஆனா இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் நாம போக “ என்று கேட்டாள். அதற்கு ஆர்யன், “ இன்னும் கொஞ்ச நேரம் தான் மா “ என்று சொன்னான். 

சில நொடிகள் கூட அமைதியாக இருக்க முடியாமல், “ அது சரி, நாம அங்க எவ்ளோ நேரம் இருப்போம் ? “ என்று சஞ்சு கேட்க, “  உனக்கு எவ்ளோ நேரம் இருக்கணுமோ அவ்ளோ நேரம் இருக்கலாம். நீ வீட்டுக்கு போகலாம்னு சொன்ன அப்புறம் நாம அங்க இருந்து கிளம்பலாம், என்ன சந்தோஷமா ?  “ என்று ஆர்யன் பதில் சொன்னதும் அவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தன. ” நெஜமாவா ? அய்யோ ரொம்ப ரொம்ப நன்றி, ஆர்யன், நீங்க ரொம்ப நல்லவரு “ என்று சொல்லி அவன் கையை இறுக்கமாக பிடித்தாள். 

“ போதும் போதும் ரொம்ப ஐஸ் வைக்குற “ என்று சொல்லி ஆர்யன் சிரித்ததும், சஞ்சு அவனை முறைத்தாள். “ உங்கள போய் நல்லவருனு சொன்னேன் பாருங்க, என்ன சொல்லணும் “ என்று சொல்லி அவனிடம் இருந்து நகர்ந்து உட்கார்ந்தாள்.   

“ மா, நான் சும்மா தான் சொன்னேன் “ என்று சொன்ன ஆர்யன்  அவளை கொஞ்சம் அதிகமாக கிண்டல் செய்ததை உணர்ந்து, “ லூசுப் பயலே,  எவ்ளோ  அழகா கைய புடிச்சுட்டு வந்தா அதுக்குள்ள உன் வாய வெச்சுட்டு சும்மா இல்லாம நீயே சொதப்பிட்ட “ என்று தன்னைத்தானே மனதில் திட்டிக் கொண்டான்.

சஞ்சு அமைதியாக இருப்பதை பார்த்து தொண்டையைக் கனைத்துக் கொண்டு மீண்டும் அவளிடம், “ ஏய், நான் சும்மா உன்ன கிண்டல் தான் ஸ்வீட் ஹார்ட் “ என்று ஆர்யன் சொன்னதும், “ சரி சரி விடுங்க, நான் ஒன்னும் பெருசா எடுத்துக்கல “ என்று சொல்லி அவள் தோள்களைக் குலுக்கினாள். 

“ பெருசா எடுத்துக்கலன்னு சொல்லிட்டு இன்னும் தள்ளியே இருக்க “ என்று மனதில் நினைத்த ஆர்யன் அவள் தன்னை நெருங்குவாள் என்று ஏக்கத்துடன் காத்திருந்தான். 

நீண்ட நேரம் யாரும் பேசாமல் இருப்பதை பார்த்து சற்றே ஏமாற்றத்துடன் அவள் ரஞ்சித்தை அழைத்து, “ ரஞ்சித் அண்ணா, நீங்களாச்சும் ஏதாவது பேசுங்க “ என்று கூறினாள். 

அவள் கேட்டதை பார்த்து ரஞ்சித் சிரித்து, “ சொல்லு சஞ்சனா. என்ன பேசணும் ? “ என்று கேட்டான். அவன் வார்த்தையை கேட்டு சஞ்சு சட்டென மூச்சிரைத்து இருவரையும் முறைத்தாள். ” அட கடவுளே! நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒரு வார்த்தை கூட பேசாம இப்படி அமைதியா வரீங்க ? நான் கொஞ்சம் நேரம் பேசாம இருந்தா அது பெரிய ஆச்சரியம் தான் “ என்று சஞ்சு சொன்னதும் ஆர்யன் சற்றும் தயங்காமல். “ அது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே ” என்று உளறிவிட்டான்.

” அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று சஞ்சு கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்து கேட்டதும் ஆர்யன் அவன் சொன்னதை மறைத்து, ” அது…வந்து… நீ இப்போ பேசிட்டு இருந்தத பாத்தேன்ல அத வெச்சு தான் சொன்னேன் “ என்று சொல்லி சமாளிக்க முயன்று தடுமாறினான்.

சஞ்சு அவன் சொன்னதை முற்றிலும் நம்பவில்லை என்றாலும் அதை பற்றி பெரிதாக யோசிக்காமல் சரி என்று பதிலுக்கு முணுமுணுத்தாள்.

ஆர்யன் தன் மொபைலை எடுத்து இமெயில்களை ஸ்சரி பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த சஞ்சனா, “ நீங்க பிஸியா இருக்கீங்களா? நான் உங்கள தொந்தரவு பண்ணிட்டேனா ? “ என்று கேட்டாள்.

சட்டென நிமிர்ந்து பார்த்த ஆர்யன், “ இல்லை மா, கொஞ்சம் இ-மெயில் மட்டும் பார்க்க வேண்டி இருக்கு. நாம அங்க போறதுக்குள்ள அதுக்கு பதில் அனுப்பி முடிச்சிட்டா நான் எந்த தொந்தரவும் இல்லாம உன் கூட இருக்க முடியும் “ என்று பதில் சொன்னான். அவன் தொந்தரவு இல்லாமல் அவளுடன் இருப்பதை நினைத்து, “ அப்போ பாருங்க “ என்று உடனே சொல்லி புன்னகைத்தாள்.   

சில கணங்கள் கழித்து வேலையை முடித்த ஆர்யன், ” ரஞ்சித், நீ ஆபீஸ் போயிட்டு அப்புறம் நான் சொல்லும் போது வா” என்று அவனிடம் கூறினான் அதற்கு ரஞ்சித்தும் சரி என்று தலை அசைத்தான். ஆனால் அதை கேட்ட சஞ்சனா மட்டும் முகம் சுளித்தாள். ” எப்படி ஆர்யன், உங்களால தான் ரஞ்சித் அண்ணா இல்லாம இருக்க முடியாதே அப்புறம் ஏன் அவர அனுப்புறீங்க ? “ என்று கிண்டல் செய்து கேட்டாள். 

அவள் கேள்வியால் சிரித்த ஆர்யன், “ நான் அவனுக்கு ஒரு முக்கியமான வேலைய கொடுத்திருக்கேன் சஞ்சு. கவலைப்படாத, அவன் நம்ம கூட இல்லனாலும் நம்ம பாதுக்காப்புக்கு தேவையான எல்லா ஏற்படும் சரியா செய்வான் “ என்று ஆர்யன் பதில் சொன்னான்.

சஞ்சுவும் ஆமோதிப்பது போல தலையை லேசாக அசைத்துவிட்டு அமைதியாக இருந்தாள்.  சில கணங்கள் கழித்து. ” நாம வந்துட்டோம் “ என்று ஆர்யன் சொன்னதும் கடற்கரையைப் பார்க்கும் எதிர்பார்ப்புடன் சஞ்சனா ஆவலுடன் திரும்பி பார்த்தாள் ஆனால் அவள் பார்த்தது முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தது.

********************

முன்னோட்டம்:

“ அவ இப்போ திரும்பி வந்து எதாவது சொல்லிடுவாளோ ? அய்யோ இப்போ என்ன செய்றது ? கடவுளே நீ தான் பா என்ன காப்பாத்தணும். ஆனா நல்லா இருந்துச்சு. மறுபடியும் இந்த மாதிரி நடக்குமானு கூட தெரியல ஆனா இப்படியே போனா உன்ன எப்படி ஆர்யன் கண்ட்ரோல் பண்ண போற ?   

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!