Home FamilyChapter 22

Chapter 22

by Siragugal Novels
23 views

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சஞ்சு நேராக தங்கள் அறையின் குளியலறைக்கு சென்று குளித்தாள். சிறிது நேரம் கழித்து ஆர்யன் உள்ளே நுழைந்து டையை அவிழ்த்து சோபாவில் சரிந்தான். சஞ்சு தனது குளியல் அங்கியை அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வெளிய வந்த போது அவன் தனது மொபைலில் இ-மெயில்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது ஈரமான கூந்தல் அவள் தோள்களில் படர்ந்திருந்தது, அவள் அணிந்திருந்த அங்கி அவளது முழங்காலுக்கு சற்று மேல் மட்டுமே வரை இருந்தது, அதை கவனித்த ஆர்யனின் பார்வையை அவன் விரும்பியதை விட நீண்ட நேரம் நீடிக்கச் செய்தது. அவன் கையில் இருந்த மொபைலும், அவன் பார்த்துக் கொண்டிருந்த இ-மெயிலும் அவள் பாத்ரூமில் இருந்து வெளியே வந்த நொடியே மறந்து போனது. அவன் பார்வையை அவளிடம் இருந்து விளக்க முடியாமல் போராடினான்.   

 ” ஆர்யன் ! போச்சு டா, நான் நல்லவனா இருக்கணும்னு நெனச்சா கூட இவ விட மாட்டா போல. வேணாம் டா அவள பார்க்காதா, கன்ட்ரோல் பண்ணு ஆர்யன், கன்ட்ரோல் பண்ணு. உன் கையில மொபைல் இருக்கு, அத பாருடா “ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே  தன் கவனத்தை திசை திருப்ப முயன்றான் ஆர்யன். ஆனால் அது பற்றி எதுவும் அறியாமல் எல்லாம் இயல்பாக இருப்பது போல சஞ்சு தலைமுடியை துடைத்துக் கொண்டிருந்தாள். 

சிறிது நேரம் கழித்து சஞ்சு அவனைக் கடந்து அலமாரியை நோக்கி நடந்த போது அவளிடம் இருந்த வந்த ரோஜா நறுமணம் அவனது கடைசி துளி கட்டுபாட்டை இழக்க செய்தது. சற்றும் யோசிக்காமல் ஆர்யன் அவள் மணிக்கட்டைப் பிடித்து அவளை மேலும் செல்ல விடாமல் நிறுத்தினான். சஞ்சு தன புருவத்தை உயர்த்தி என்ன என்று அவனிடம் கேட்டாள்.

” மேடம், இப்போ நீங்க என்ன பண்றீங்க ?” என்று குரல் தாழ்ந்தபடி ஆர்யன் கேட்டதும், “ பார்த்தா தெரியல, டிரஸ் பண்ண போறேன் “  என்று சஞ்சு சாதாரணமாக கூறினாள்.

” அது சரி, நீ இந்த மாதிரி என் முன்னாடி நடந்துட்டு இருக்கியே, நான் உன்ன எதாவது பண்ணிட்டா என்ன செய்வ ? “ என்று ஆர்யன் கேட்க அதற்கு சஞ்சு உடனே, “ நீங்க லேட்டா வருவீங்கனு நெனச்சேன், நீங்க சீக்கிரம் வருவீங்கனு எனக்கு எப்படி தெரியும் “ என்று சொல்லி தன கையை அவன் பிடியில் எடுக்க முயன்றாள் ஆனால் ஆர்யன் குறும்பு சிரிப்புடன் அவளை பார்த்து, “ அப்படியா சொல்ற ? ஆனா எனக்கு என்னவோ அப்படி தோணலையே “ என்று கிண்டல் செய்தான்.    

” நீங்க மனசுல நினைக்குறதுக்கு எல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும் ? “ என்று சஞ்சு தனது பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டே சொன்னாள். அவளின் உண்மையான நிலையை புரிந்து கொண்ட ஆர்யன், “ நல்லது “ என்று சொல்லி இருக்கையில் இருந்து முன்னாள் சாய்ந்து அவளை நெருங்கினான். அவன் கண்கள் அவளுடன் பிணைந்திருந்தன. ” நீ சொல்றது சரினு வெச்சுக்குவோம் ஆனா நீ ஏன் அத என்ன பார்த்து சொல்ல மாட்டேங்குற ? எங்க இப்போ என்ன பார்த்து சொல்லு பார்க்கலாம் “ என்று ஆர்யன் சொன்னதும், அவள் கண்களை லேசாக சுருக்கினாள். ” நான் இப்படி இருந்தா சொன்னா என்ன இப்போ உங்களுக்கு ? “ என்று கேட்டாள்.  

ஆர்யன் அவளை மெல்ல இழுத்து தன் மடியில் அமர்த்தினான். அவளது கூந்தலிலிருந்து சொட்டிய நீர் அவன் கன்னத்தில் விழுந்தது, அவளது ஈரமான கழுத்தைப் பார்த்ததும் அவன் பார்வை ஆசையில் இருண்டது.

அவனது ஸ்பரிசத்தில் ” ஆ … ஆர் … ஆர்யன் …” என்று  சஞ்சு திக்கித் திணறினாள். அதை பார்த்த ஆர்யன், “ என்ன வார்த்த வர மாட்டேங்குதா ? “ என்று கிண்டல் செய்தான்.

சஞ்சு ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் ஆம் என்று மெல்ல முனகியபடி வேறு பக்கம் பார்த்தாள். ஆர்யன் அவள் தாடையை பிடித்து அவன் பக்கம் திருப்பி, ” நீ ரொம்ப அழகா இருக்க ” என்று தன் ஹஸ்கி குரலில் முணுமுணுத்தான்.

அவனது தீவிரமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வெட்கத்துடன் சஞ்சு கீழே பார்த்தாள். அந்த நெருக்கம் இருவருக்கும் உடலில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆர்யன் அவளை அணைத்து அவள் ஈரமான கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தான். அந்த மென்மையான ஸ்பரிசத்தில் அவள் கண்கள் இறுக மூடிக்கொண்டன. கட்டை விரலால் அவள் உதடுகளை வருடியவன், அவள் முகத்தை தன் பக்கம் சாய்த்தான். அவள் உதடுகளின் ஓரத்தை முத்தமிட்டான்.

” சஞ்சு…” என்று ஆர்யன் மெல்லிய குரலில் அழைத்ததும், அதே போன்ற மெல்லிய குரலில் சஞ்சு ” ஹ்ம்ம்?” என்று பதில் சொன்னாள்.

” நீ என்ன பைத்தியமாக்குற சஞ்சு. என் எண்ணங்கள், உடம்பு, மனசு எதுவும் என் கட்டுப்பாட்டுல இருக்க மாட்டேங்குது. ரொம்ப கஷ்டப்படுறேன் பேபி “ என்று சொன்னவன் அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான். அந்த முத்தத்தில் உருகி சஞ்சுவும் அவனை முத்தமிட்டாள். இருவரின் உதடுகளும்  உணர்ச்சிகரமான தாளத்தில் ஒத்திசையில் நடனமாடின. இறுதியாக அவர்கள் முத்தத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. 

சன்சுவின் முகம் சிவந்திருந்தது. ஆர்யனின் உடலில் ஆசை அலைமோத அவன் அவள் கழுத்தில் முத்தமிடத் தொடங்கினான், அவளுடைய வெற்று தோலை லாவி காதல் தழும்புகளை பரிசாக  கொடுத்தான். அவனில் தொலைந்து போயிருந்த சஞ்சுவின் ஆசைகள் மேலோங்க அவளுடைய விரல்கள் அவனுடைய தாடையை வருடின, அவள் தீண்டலில் அவனுடைய உடம்பில் இருந்த ஒவ்வொரு அணுக்களையும் ஆசை தீக்கிரையாக்கின. சஞ்சு மெல்ல அவன் கண்களில் பின்னர் கன்னங்களில் முத்தமிட்டாள். ஒவ்வொரு நொடியும் அவர்களின் பகிரப்பட்ட தீண்டலும், முத்தமும் இருவரையும் உணர்ச்சி தீயில் ஆழமாக இழுத்தது.

ஆர்யன் தனது முழு கட்டுப்பாட்டை இழந்து அவளை தூக்கி கட்டிலுக்கு அழைத்துச் சென்றான். அவளை மெல்ல படுக்கையில் கிடத்தியவன் அவளை அனைத்து அவசரத்துடன் முத்தமிட ஆரம்பித்தான். அவனது உதடுகள் அவளது கழுத்தையும், தோள்களையும் லாவி காதல் கடிகளை விட்டுச் சென்றன. அவள் விரல்கள் அவன் தலைமுடியை இறுகப் பற்றின. சஞ்சு கண்களை மூடி முனங்கினாள். ஆர்யன் உருண்டு புரண்டு அவளைத் தன் மேல் அமர வைக்க, அவளும் அதே ஆவேசத்துடன் அவனை முத்தமிட்டாள்.

ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் கழித்து, ஆர்யன் மூச்சை இழுத்து விட்டு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

” நான் இப்போ நிறுத்தணும்னு நினைக்கிறேன், இல்லனா என்னால நிறுத்த முடியாது. நீ முழுசா தயாராகுற வர நான் எதுவும் செய்ய விரும்பல. இப்போ எனக்கு பச்ச தண்ணியில குளிக்கணும். நீ டிரஸ் பண்ணி ரெடியாகு” என்று சொல்லிவிட்டு ஆர்யன் வேகமாக படுக்கையில் இருந்து இறங்கி பாத்ரூமுக்குள் சென்றதும், சஞ்சுவுக்கு வெட்கம மட்டுமே மிஞ்சியது. அவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்த பொது அவளுடைய இதயம் இன்னும் வேகமாக கட்டுப்பாட்டை மீறி துடித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில், ஆர்யன் குளிர்ந்த நீரின் கீழ் நின்று, தனது சீற்றமான ஹார்மோன்களை அமைதிப்படுத்த முயன்றான்.

சஞ்சு உடைகளை அணிந்து கொண்டு ஆர்யனுக்காக காத்திருக்க கீழே சென்றாள். அவள் டிவி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆர்யன் அவள் அருகில் அமர்ந்து, ” சஞ்சு, டின்னர் சாப்பிட போலாமா ?” என்று கேட்டான்.

சஞ்சு சரி என்று சொன்னதும் இருவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட டைனிங் ஹாலுக்கு சென்று அமர்ந்தனர். இருவரும் மெதுவாக சாப்பிட ஆரம்பித்ததும், ” கௌசல்யா அம்மா, தோசையும் சட்னியும் ரொம்ப ருசியா இருக்கு” என்றாள் சஞ்சு.

” சஞ்சு, நம்ம காஸ்மெடிக் மார்க்கெட்ல பெரிய வெற்றி அடைஞ்சு இருக்கு அத கொண்டாட பார்ட்டி நடக்க போகுது “ என்று ஆர்யன் சொன்னதும், “ பார்ட்டி எப்போ ? “ என்று கேட்டாள் சஞ்சு. 

” அடுத்த பத்து நாள்ல இருக்கும். ரஞ்சித் கிட்ட சொல்லி  ஏற்பாடு எல்லாம் பார்த்துக்க சொல்லி இருக்கேன் ” என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும் சரி என்றால் சஞ்சு.  அவள் அமைதியாக இருப்பதை பார்த்த ஆர்யன், “ முக்கியமானவங்க நிறைய பேரு பார்ட்டிக்கு வருவாங்க, அவங்க எல்லாருக்கும் உன்ன அறிமுகம் பண்ணி வைக்குறேன் “ என்று கூறினான்.

ஆர்யன் சொன்னதை கேட்டதும் ஒரு நொடி அமைதியாக அவனை பார்த்தவள், ” உங்க பி.ஏ.வுக்கு அறிமுகம் தேவைனு நீங்க நினைக்குறீங்களா ?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

” என் பிஏ.வுக்கு அறிமுகம் தேவையில்ல ஆனா உனக்கு வேணும். நான் சொல்றது சரி தானே ? ” என்று ஆர்யன் கேட்டான் அதற்கு “ பார்க்கலாம் ” என்று மெல்லிய குரலில்  பதில் சொன்னாள். புருவத்தை உயர்த்தி பதில் சொன்னாள்.

“சஞ்சு, உனக்குப் பிடிச்ச குலாப் ஜாமூன் பண்ணி இருக்கேன்” என்று சமையலறையில் இருந்து கௌசல்யா மா சொன்னார். அதை கேட்டதும், “ ரொம்ப நன்றி மா, ப்ளீஸ் அதை எனக்கு ஒரு கிண்ணத்துல கொடுங்க. நான் அப்புறம் சாப்பிடுறேன் ” என்று சஞ்சு கூறினாள்.

” சரி அப்போ நான் உன் ரூம்ல வைக்குறேன் நீ மறக்காம அப்புறம் சாப்பிடு “ என்று சொன்ன கௌசல்யா பின்னர் ஆர்யனை பார்த்து, ” சார் உங்களுக்கு ஸ்வீட் கொண்டு வரட்டுமா ?” என்று கேட்டார்.

” இல்ல, இப்போ வேணாம், எனக்கும் ரூம்ல வெச்சுடுங்க “ என்று அவன்  பதிலளித்தான்.

கௌசல்யா இரண்டு கிண்ணங்களில் குலாப் ஜாமூன் கொண்டு சென்று அவர்களின் அறையில் வைத்தார்.

லிவிங் அறையில் டிவியில் செய்தியைப் பார்த்த பிறகு, ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் அறைக்குத் திரும்பி கிண்ணங்களைக் கவனித்தனர். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இருந்த ஜாமூனை சாப்பிட ஆரம்பித்த சஞ்சுவின் கண்கள் ஒளிர்ந்தன.

“ம்ம்ம்ம்ம், இது செம்ம சூப்பரா இருக்கு ” என்று சொல்லி சஞ்சு கண்களை மூடி மெதுவாக முனகினாள். அதை பார்த்து சிரித்த ஆர்யன்,  “என்ன ?” என்று கேட்டான். “ ரொம்ப சுவையா இருக்கு, நீங்களும் சாப்பிடுங்க “ என்று சொல்லி சஞ்சு அவனிடம் மற்றொரு கிண்ணத்தை கொடுத்தாள் ஆனால் ஆர்யன் மறுத்து தலை அசைத்தான்.  

” இல்ல பேபி, அது எனக்கு வேணாம். நீ சாப்பிட்டு என்ஜாய் பண்ணு” என்றவன் அவள் அருகில் அமர்ந்து அவள் அழகாக சாப்பிடுவதைப் பார்த்தான்.

சஞ்சு மீண்டும் ஜாமூனை ஒரு கடி கடித்த போது, அவன் சட்டென்று அவளை இழுத்து முத்தமிட்டான், முத்தத்தை ஆழப்படுத்துவதற்கு முன்பு அவள் உதடுகளை லாவி உறிஞ்சினான். அவனது நாவு அவளது வாயின் ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்து அந்த இனிப்பை சுவைத்தது. மனதின் ஆசை தீர முத்தமிட்ட பிறகு பின்வாங்கிய அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

” வாவ். என் வாழ்நாள்ல இப்படி ஒரு சுவையான ஜாமூன நான் சாப்பிட்டதே இல்ல, செம்ம ஸ்வீட்.” என்று ஆர்யன் முனங்க “ ஆர்யன், வரவர நீங்க ரொம்ப கேட்ட பையனா மாறிட்டு வரீங்க ” என்று அதிர்ச்சியில் மூச்சிரைத்து சொன்னவள் அவன் தோளில் லேசாக அடித்தாள், ஆனால் அவன் அவள் கைகளைப் பிடித்து அவளை உற்றுப் பார்த்தான். அவனது கந்தப் பார்வை அவளின் உயிருக்குள் ஊடுருவியது.

” நான் கெட்ட பையனா ? உண்மைய சொல்லு, என்ன மாதிரி ஒரு நல்ல பையனா யாரும் இருக்க மாட்டாங்க. இவ்ளோ நாள் ஆகியும் உன்ன ஒன்னும் பண்ணாம விட்டு வெச்சுருக்கேன் “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சுவின் கண்கள் விரிந்தன. பின்னர் முகத்தை சுளித்து, ” சரி, போதும், நீங்க கொஞ்சம் நல்லவர் தான் “ என்று முணுமுணுத்தாள்.

சஞ்சு சொன்ன பதிலை கேட்ட ஆர்யன் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு, ” என்னது கொஞ்சம் தானா ?” என்று கேட்டான். விளையாட்டாக அவன் கையை அடித்த சஞ்சு, ” சரி, நீங்க நல்லவர் தான், சந்தோஷமா?” என்று கேட்டாள் உடனே புன்னகைத்த ஆர்யன், ” நான் நல்லவன்னு இப்போ நீயே ஒத்துகிட்ட அதனால இந்த நல்லவனுக்கு ஏதாவது கொடுக்கலாமே “ என்று கண்களை சுருக்கி கெஞ்சுவது போல கேட்டான்.  

” எப்போவும் இத தானே பண்றேங்க அப்புறம் என்ன ? இப்போ எனக்கு களைப்பா இருக்கு அதனால என்ன தூங்க விடுங்க” என்று சஞ்சு சொன்னதும் எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல், ஆர்யன் உடனே அவளைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்து அவளை இழுத்துக் அனைத்து கொண்டு, “ குட் நைட் ஸ்வீட் ஹார்ட், இப்ப தூங்கு.” என்றான்.

அவனது குறும்புகளை பார்த்து புன்னகைத்த சஞ்சு அவனது இதமான அணைப்பில் உறங்கினாள்.

பின்னிரவில், மங்கலான வெளிச்சமுள்ள தனது அறையில் தனியாக அமர்ந்திருந்த மானசி ஒற்றை பயன்பாட்டுக்கு உபயோகித்த தனது ரகசிய மொபைல் போனை எடுத்து சற்றே நடுங்கும் விரல்களால் அதில் இருந்த ஒரே ஒரு எண்ணை டயல் செய்தாள். அழைப்பு பதில் அளிக்கப் பட்டதும், “ ஹலோ மேடம்,” என்றாள் மானசி. அவள் குரல் தாழ்ந்தும், முன் எச்சரிக்கையாகவும் இருந்தது.

” சொல்லு, என்ன செய்தி ?” என்று மறுமுனையில இருந்து குளிர்ந்த குரல் கேட்டதும், “சஞ்சனாவும், ஆர்யனும்… அவங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்க” என்றாள் மானசி.

மானசி சொன்னதை கேட்டதும், ” ரெண்டு பெரும் ஒன்னா இருக்காங்கனா அதுக்கு என்ன அர்த்தம் ? என்ன சொல்ல வர ? “ என்று மறுமுனையில் இருந்து அந்த பெண் கேட்டாள். 

” அந்த சஞ்சனா, ஆர்யன் சார் மடியில உட்கார்ந்துட்டு இருக்குறத இன்னைக்கு நான் பார்த்தேன். அவங்க ரெண்டு பெரும் மீட்டிங் ரூம்ல ரொம்ப நெருக்கமா இருந்தாங்க “ என்று மானசி சொன்னதும் மறுமுனையில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. ஏதோ சிதறும் சத்தம் அந்த அழைப்பினூடே எதிரொலித்தது. அதை கேட்டதும் மானசி பயத்தில் திடுக்கிட்டாள்.

” ஹலோ? மேடம் ?” என்று கேட்ட போது மானசியின் குரலில் இப்போது பயம் தொனித்தது.

” பரவாயில்ல இருக்கட்டும், நான் அவள பாத்துக்குறேன். அங்க என்ன நடக்குதுனு மட்டும் நீ எனக்கு தொடர்ந்து தகவல் சொல்லிட்டே இரு “ என்ற அந்தப் பெண் தன்னுடைய அமைதியை மீட்டுக்கொண்டாள்.

” சரி மேடம்” என்று சட்டென்று சொல்லி அழைப்பை துண்டித்தாள் மானசி. அவள் முகத்தில் ஒரு மெதுவான, குரூரமான புன்னகை பரவியது, “ஆர்யன், நீ செய்த காரியத்துக்காக நீ ரொம்ப கஷ்டப்படுவ” என்று சொல்லி சிரித்தாள்.

********************************************

முன்னோடோம் :

” நீ ஸ்வீட் சொல்லும் போது எனக்கு ஜமூன் தான் ஞாபகம் வருது. இப்போ எனக்கு சாப்பிடனும்னு ஆசையா இருக்கு “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!