ஆர்யன் ஏற்பாடு செய்ய சொல்லி இருந்த பார்ட்டி நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன. ஆர்யனும், சஞ்சுவும் அலுவலக வேலையில் சிக்கி பிஸியாக இருந்தனர். அப்போது ஆர்யன் சஞ்சுவை தன்அறைக்கு அழைத்தான்.
“சொல்லுங்க ஆர்யன் ? என்ன ஏன் கூப்பிட்டீங்க?” என்று சஞ்சு கேட்க, ” ஸ்வீட் ஹார்ட், ரம்யா இப்போ தான் போன் பண்ணாங்க. உன்னோட காஸ்ட்யூம் அவங்க ரெடி பண்ணிட்டாங்க. நாம ARC ஹோட்டல் ரூம்ல சந்திப்போம்னு சொல்லி இருக்கேன். நாம கிளம்பலாமா?” என்று ஆர்யன் பதிலுக்கு கேட்டான்.
” இல்ல, நீ இங்கேயே இரு ஆர்யன், நானே போய் செக் பண்றேன்.” என்று சஞ்சு சொன்னதும், “ஏன்?” என்று ஆர்யன் அதிர்ச்சியாக கேட்டான். அதற்கு அவனை பார்த்து புன்னகைத்த சஞ்சு, “ அது உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு நினைக்குறேன் அதனால நீ என்ன பார்ட்டியில மட்டும் தான் அந்த காஸ்ட்யூம் போட்டு பார்க்கலாம்.” என்று சொன்னாள்.
ஆர்யன் சிரித்துக் கொண்டே, ” ஹ்ம்ம்… சரி. அப்போ நான் வெயிட் பண்றேன் பேபி “ என்று கூறினான். அதன் பின்னர், “சரி, நான் இப்போ கிளம்பறேன்.” என்று சஞ்சு சொல்ல, ” ரஞ்சித் உன் கூட வருவான். இனி தனியா போக வேண்டாம்.” என்று ஆர்யன் உறுதியாக கூறினான்.
சஞ்சு சரி என்று சொன்னதும், ” நீ ரம்யாவ சந்திச்ச அப்புறம் வீட்டுக்கு போ, நான் உன்ன வீட்ல பாக்குறேன் “ என்று சொன்ன ஆர்யன், அவள் புறப்படுமுன் அவளுக்கு முத்தம் கொடுத்தான்.
சஞ்சுவும், ரஞ்சித்தும் ARC ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு ரம்யா தனி அறையில் அவர்களுக்காக காத்திருந்தார். சஞ்சுவும், ரம்யாவும் தனி அறையில் இருக்க ரஞ்சித் வெளியே காத்திருந்தான்.
” நீங்க இந்த டிரஸ் போட்டு பாருங்க சஞ்சனா, நான் ஃபிட்டிங் செக் பண்றேன்” என்று ரம்யா சொல்ல, சஞ்சு அந்த உடையுடன் மற்றொரு அறைக்கு சென்றாள். அந்த உடையை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து ரசித்தாள். பின்னர் அவள் வெளியே வந்ததும், ” வாவ், சஞ்சனா ” என்று ரம்யா அவளை ஆச்சரியமாக பார்த்தார். ” என் கண்கள என்னால நம்ப முடியல. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. ஆர்யன் சார் உங்க அழகுல மயங்கி விழ போறாரு, உங்கள தவிர அவர் கண்ணு வேற எங்கேயும் இருக்காது “ என்று ரம்யா மேலும் கூறினார்.
” ரொம்ப நன்றி ரம்யா ! இது அசாதாரணமா இருக்கு. எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று சஞ்சு அவரது வேலையை மிகவும் பாராட்டினாள். ” உங்களுக்கு டிசைன் பண்ண சந்தர்ப்பம் கெடச்சுதுல எனக்கு தான் ரொம்ப சந்தோஷம் “ என்று சொன்ன ரம்யா, “ சரி, நான் இந்த காஸ்ட்யூம் உங்க வீட்டுக்கு டெலிவரி பண்ணட்டுமா?” என்று கேட்டார்.
சஞ்சு உடனே, ” இல்ல, இங்கேயே இருக்கட்டும். எப்படியும் நான் இங்க இருந்து தான் ரெடி ஆகுவேன் “ என்று சொன்னாள்.
” அப்போ சரி, நான் இப்போ கிளம்பறேன்.” என்று ரம்யா சொன்னார் ஆனால் சஞ்சு அவரிடம், ” கண்டிப்பா கிளம்பலாம் ஆனா ஒரு காபி குடிச்ச அப்புறம் தான் ” என்று கூறினாள். சஞ்சுவின் அன்பை பார்த்து புன்னகைத்த ரம்யா, ” நன்றி சஞ்சனா ஆனா நான் இன்னொரு கஸ்டமர் சந்திக்கணும். அவங்க கொஞ்சம் தலைகனம் புடிச்சவங்க, நான் லேட்டா போனா பிரச்சன பண்ணுவாங்க அதனால நான் கிளம்புறேன், அப்புறம் பாக்கலாம்.” என்று புன்னகையோடு சொன்னார்.
அதற்கு மேல் சஞ்சு அவரை வற்புறுத்தவில்லை. ரஞ்சித், சஞ்சுவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, ரம்யா அவரது பேஷன் ஹவுஸுக்கு புறப்பட்டார்.
ரம்யா அவரது இடத்தை அடைந்ததும், மாயா ஏற்கனவே பொறுமையிழந்து கைகளைக் கட்டிக்கொண்டு காத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
ரம்யா ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு, பணிவான புன்னகையை உதிர்த்தபடி, ” நான் லேட்டா வரலன்னு நினைக்குறேன் “ என்று கூறினார் .அதற்கு மாயா அலட்சியமா, ” நான் சீக்கிரம் வந்துட்டேன். அது சரி, நாளைக்குள்ள என் காஸ்ட்யூம் எனக்கு வேணும்.” என்று சொன்னாள்.
ரம்யா தயங்கியபடி, ” உண்மைய சொல்லனும்னா ரொம்ப குறைவான நேரம் இது, இருந்தாலும் என்னால என்ன செய்ய முடியுதுன்னு பார்க்குறேன்.” என்று சொல்ல, மாயை முன்னால் குனிந்து, “நல்லது. உங்க அசிஸ்டன்ட் ஒரு டிசைன் காட்டினாங்க, எனக்கு அதே காஸ்ட்யூம் தான் வேணும் “ என்று கூறினாள்.
” ஒஹ் அப்படியா ? நீங்க செலக்ட் பண்ணினது எதுன்னு நான் பார்க்குறேன் ” என்று சொல்லி, ரம்யா உடனே தன் உதவியாளரை அழைத்து மாயா சுட்டிக் காட்டிய டிசைனை பார்த்தார். ஆனால் அதை பார்த்ததும் அவர் முகபாவம் உடனடியாக மாறியது, மாயா தேர்வு செய்த டிசைன் சஞ்சுவுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடை.
ரம்யா நிமிர்ந்து மாயாவை பார்த்து, ” என்ன மன்னிச்சிடுங்க மேடம். இந்த காஸ்ட்யூம என்னால டிசைன் பண்ண முடியாது.” என்று உறுதியான குரலில் சொல்ல, மாயை எரிச்சலுடன் புருவத்தை உயர்த்தி “என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள்.
” இந்த டிசைன் ஒரு தனித்துவமான டிசைன், விசேஷமா இத தயார் பண்ணி, இத செய்ய சொன்னவரு இதுக்கு காப்புரிமை வாங்கி இருக்காரு. வேற எந்த பொண்ணும் இத போடுறத அவர் விரும்பல. இது அவரோட லவர்க்கு பிரத்யேகமா தயாரிக்கப்பட்டது “ என்று வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து விளக்கினார் ரம்யா.
மாயா ஏளனமாகச் சிரித்து, ” நீங்க சொல்றது அபத்தமா இருக்கு, ஒரு காஸ்ட்யூம்க்கு காப்புரிமை யார் வாங்குவாங்க ?” என்று கேட்டாள். ஆனால் ரம்யா தனது தொழில்முறை திறமையை கடைபிடித்து, ” என்னோட டிசைன் எது வேணும்னாலும் நீங்க செலக்ட் பண்ணிக்கலாம் மேடம்.” என்று நிதானமாக கூறினார்.
மாயா மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், இறுதியில் வேறு ஒரு உடையைத் தேர்ந்தெடுத்தாள், ஆனால் அவளது மனம் அவள் முதலில் பார்த்த அதே டிசைன் மேல் நீடித்தது.
” சீக்கிரம் டிசைன் பண்ணி நாளைக்கே என் வீட்டுக்கு டெலிவரி பண்ணுங்க” என்று மாயா அலட்சியமாக கட்டளையிட்டதும், ரம்யா தலையசைத்து, “நிச்சயமா மேடம், என் அசிஸ்டன்ட் வந்து டெலிவரி பண்ணி, உங்களுக்கு ஃபிட்டிங்கையும் சரிபார்ப்பாங்க ” என்று சொன்னார்.
சரி என்று பதிலளித்த மாயா அறையை விட்டு வெளியேறினாள், அவளுடைய எண்ணங்கள் இன்னும் அவளுக்கு மறுக்கப்பட்ட பிரத்யேக உடையில் இருந்தன.
ஆர்யன் மேன்ஷனில், ஆர்யன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து சோபாவில் அமர்ந்த போது சஞ்சு பாத்ரூமில் இருந்தாள். சஞ்சு ஒரு அங்கியை அணிந்தபடி தலைமுடியை உலர்த்திக் கொண்டு வெளியே வந்தாள்.
ஆர்யன் அவளை நிமிர்ந்து பார்த்து குறும்பு புன்னகையுடன், ” ஹ்ம்ம், சரியான நேரத்துல தான் வந்துருக்கேன்போல ” என்று கூறினான்.
உடனே அவனை பார்த்த சஞ்சு புருவத்தை உயர்த்தி, ” போய் குளிச்சிட்டு வாங்க மிஸ்டர் ஆர்யன்.” என்று சொன்னாள், ஆனால் ஆர்யன் நேராக அவளருகில் சென்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
” என்னால இன்னைக்கு உன்ன அந்த காஸ்ட்யூம்ல பார்க்க முடியலனு கொஞ்சம் வருத்தமா தான் இருந்துச்சு ஆனா அதுக்கு பதிலா இப்படி ஒரு விருந்து காட்சி பார்க்க கிடைக்கும்னு தெரியாம போச்சு. நீ ரொம்ப ஹாட்டா இருக்க பேபி ” என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சு சிரித்தபடி, “ ஆர்யன், என்ன விடு. நான் டிரஸ் பண்ண போறேன் ” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
ஆர்யன் அவளை விட்டு விலகுவதற்கு பதிலாக அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டு, ” கொஞ்ச நேரம் இப்படியே இரு ப்ளீஸ்.” என்று சொன்ன போது அவன் குரல் ஆழ்ந்த கிசுகிசுப்பாக இருந்தது.
சஞ்சு அமைதியாக தலை அசைக்க, ஆர்யன் அவள் அணிந்திருந்த அங்கியை தோளில் சற்று விலக்கி முத்தங்கள் கொடுக்க ஆரம்பித்தான். உடனே சஞ்சுவின் கன்னங்கள் சிவப்பாக மாறியது. அவள் எதிர்வினையாற்றும் முன், ஆர்யன் அவளைத் தூக்கி படுக்கையில் மெல்ல படுக்க வைத்து அவள் உதடுகளை மெல்ல சுவைக்க ஆரம்பித்தான். அவளது கீழுதட்டைத் தன் பற்களுக்கிடையில் கவ்வி விளையாட்டாக இழுத்ததும், சஞ்சு முனக ஆரம்பித்தாள்.
ஆர்யன் முடித்த பிறகு, சஞ்சு அவனைப் பிடித்து ஆழமாக முத்தமிட்டு, அந்த தருணத்தில் ஆதிக்கம் செலுத்தினாள். இருவரின் உதடுகளும் ஒன்றையொன்று அவசரமாக விழுங்கிக்கொண்டு ஒத்திசைந்தன. பின்னர் ஆர்யன் அவள் கழுத்திலும் தாடையிலும் முத்தமிட்டான், அவளது ஆடையை விலக்கி அவளது கழுத்து எலும்பில் காதல் கடிகளை விட்டுச் சென்றான்.
அவனது காதல் இம்சையில் திளைத்திருன்தவள், பதிலுக்கு அவனது சட்டையின் முதல் இரண்டு பட்டங்களை அவிழ்த்து, அவன் மார்பில் இருந்த சிறிய மச்சத்தில் தன் உதடுகளை பதித்து, சமமான காமத்தின் காதல் கடி கொடுத்து அடையாளத்தை ஏற்படுத்தினாள்.
தனது வெற்றியில் புன்னகைத்த சஞ்சு புருவங்களை உயர்த்த, ஆர்யன் அவன் அணிந்திருந்த சட்டையை அவிழ்த்துவிட்டு, அவளது அங்கியை விலக்கி அவளது மென்மைகளுக்கும் விடுதலை கொடுத்து மெல்ல அவற்றை கசக்கினான். சஞ்சு கண்களை மூடி, விழுங்கியபடி முனக அவனது உதடுகள் அவள் சிகரங்களை சந்தித்தன.
சஞ்சு அவள் தலைமுடியை பிடித்து மேலும் அருகில் இழுக்க, ஆர்யன் அவள் வெற்று இடையை உள்ளங்கையால் பிடித்து இறுக்கினான். இன்பமும், வலியும் கலந்து சஞ்சு முனக ஆர்யன் அவளது நெஞ்சில் தன் உதட்டால் ஓவியங்களை தீட்டினான்.
இறுதியில், இருவரும் அருகருகே மூச்சிரைக்க படுத்திருந்த போது, ஆர்யன் அவளை இழுத்து தன் மார்பில் அனைத்துக் கொண்டான், அவன் விரல்கள் அவள் தலைமுடியை வருடியபடி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“சஞ்சு…” என்று ஆர்யன் மெல்ல அவளை அழைக்க, ” ஹ்ம்ம்?” என்று சஞ்சு மெதுவாக முணுமுணுத்தாள்.
” என்னால இதுக்கு மேல என்ன கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கு சஞ்சு. ஒவ்வொரு முறையும் நீ என் பக்கத்துல இருக்கும் போது, எனக்கு நீ இன்னும் அதிகமா வேணும்னு உடம்பும், மனசும் கேட்குதுடி, எனக்கு இன்னும் அதிகமா வேணும், நீ மொத்தமா வேணும்டி “ என்று ஆர்யன் தன் ஆசையை வெளிப்படுத்தியதை கேட்டதும், சஞ்சு அவன் தோலுக்கு எதிராக புன்னகைத்தாள்.
” எனக்கும் அப்படித் தான் இருக்கு ஆர்யன் ” என்று சஞ்சு சொன்னாள். அவள் வார்த்தையை கேட்ட ஆர்யன், ” சஞ்சு, எனக்கு நீ முழுசா வேணும்… எனக்காக, எனக்கு மட்டும், ரொம்ப கட்டுப்படுத்துறேன்டி, எவ்ளோ நாள் இப்படியே இருக்குறது ? ” என்று அவள் காதில் சாய்ந்து, ஹஸ்கி குரலில் கிசுகிசுத்தான்,
அவனை போலவே தன் ஆசையை கட்டுபடுத்திக் கொண்டிருந்த சஞ்சு, காத்திருப்பு முடிவுக்கு வரும் நாளுக்காக ஏங்கினாள். ” நான் உனக்கு தான் சொந்தம் ஆர்யன், எப்பவும் உனக்காக மட்டும் தான் “ என்று கூறினாள்.
சஞ்சுவின் வார்த்தை அவனுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. ஆர்யன் அவள் காது மடலில் முத்தமிட்டதும், அவனது சூடான மூச்சுக் காற்று அவளை கூச்சப்படுத்தியது.
” ஒரு விசேஷமான நாள் உன்ன முழுசா நான் சாப்பிடுவேன். அந்த நாள் ரொம்ப சீக்கிரம் வரும், அதுக்கு ரெடியா இரு.” என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சு வெட்கத்தில் தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள், அவள் கன்னங்கள் சிவப்பாக இருப்பதை பார்த்து ஆர்யன் சிரித்தான்.
” ப்ளீஸ் இப்படி வெட்கப்படுறத நிறுத்து ஸ்வீட் ஹார்ட் இல்ல அந்த விசேஷமான நாள் இன்னைக்கா மாறிடும் “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் மூச்சிரைத்தாள். ஆனால் ஆர்யன் மீண்டும் அவளை இழுத்து முத்தமிட ஆரம்பித்தான், அது மீண்டும் காம அலையை பற்றவைத்தது.
மீண்டும் சிறிது நேரம் ரொமான்ஸ் செய்த பிறகு, ” இப்போ நான் மறுபடியும் குளிக்கணும்” என்று சொல்லி சஞ்சு சிணுங்கினாள். அதை கேட்டு சிரித்த ஆர்யன், ” ஏதாவது உதவி வேணுமா பேபி ?” என்று கேட்டான்.
” நீ ஏற்கனவே பண்ணது போதும். இப்ப தள்ளி போ ” என்று விளையாட்டாக எச்சரித்து விட்டு அங்கியை சரி செய்து கொண்டு சஞ்சு பாத்ரூமுக்குள் சென்றாள்.
அவள் மீண்டும் குளித்து முடித்து உடை உடுத்தி வெளியே வந்ததும், அவனை குளிக்க சொல்லி பாத்ரூமுக்குள் தள்ளினாள்.
சஞ்சு சோபாவில் உட்கார்ந்து தன்னுடைய மொபைலை பார்த்துக் கொண்டிருந்த போது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டு உடனே கதவை திறந்தாள். அறைக்கு வெளியே ரஞ்சித் சற்றே டென்ஷனுடன் நின்று கொண்டிருந்தான்.
” ரஞ்சித் அண்ணா, என்ன ஆச்சு ? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, எதுவும் பிரச்சனையா ” என்று சஞ்சு கேட்டதும், ” சஞ்சு… மாயா இங்க வந்துருக்கா. உன்ன பார்க்கனும்னு சொல்றா “ என்று சொன்ன ரஞ்சித், மீண்டும் அவளை பார்த்து, “ ஆர்யன் சார் எங்க ? நான் அவர் கிட்ட சொல்றேன், அவர் அவள கையாள்வாரு” என்று கூறினான்.
ஆனால் சஞ்சு மறுத்து தலையை ஆட்டி, ” இல்ல அண்ணா, நான் அவள சந்திக்கிறேன்.” என்று கூறினாள். அவள் வார்த்தையை கேட்டதும் ரஞ்சித் கவலையுடன் பார்த்து, ” சஞ்சு, இது நல்ல யோசனையா இருக்காது. நாம சார் கிட்ட சொல்லலாம் ” என்றான்.
” கவலைப்படாதீங்க அண்ணா, அவள நான் பாத்துக்குறேன், வாங்க போகலாம்.” என்று சஞ்சு சொன்னதும், இருவரும் கீழே லிவிங் அறைக்கு சென்றனர். அங்கு மாயா ஏற்கனவே அமர்ந்திருந்தாள், அவளுடைய பார்வை கூர்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. சஞ்சு அவளை நெருங்கியதும், மாயாவின் கண்கள் வெறுப்புடன் சுருங்கின. சஞ்சு ரஞ்சித்தின் பக்கம் திரும்பி அவனை அங்கிருந்து போகும்படி கூறினாள். ரஞ்சித் சற்று அங்கிருந்து போகாமல் சற்று விலகி மட்டும் நின்றான். அதன் பின்னர், “ ஹலோ மாயா.” என்று சொல்லி சஞ்சு அவளுக்கு எதிரே அமர்ந்தாள்.
மாயா தன் இகழ்ச்சியை மறைக்க கொஞ்சமும் முயற்சிக்காமல், ” என்ன மேடம்னு சொல்லி கூப்பிடு, நீ ஆர்யனுக்கு ஒரு PA மட்டும் தான் “ என்று கடுமையாக பேசினாள்.
மாயாவின் வார்த்தையை கேட்டு மென்மையாக புன்னகைத்த சஞ்சு, ” எனக்கும் ஆர்யனுக்கும் இருக்க உறவு பத்தி உனக்கு புரிஞ்சி இருக்கும்னு எனக்கும் தெரியும் மாயா அதனால இந்த சம்பிரதாயம் எல்லாம் வேணாம், நாம நேரடியா பேசலாம், நீ எதுக்கு இங்க வந்தனு சொல்லு.” என்று சொன்ன போது சஞ்சுவின் குரல் அமைதியாக இருந்தது.
மாயா மெல்ல எழுந்து சஞ்சுவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து, ” ரொம்ப சிம்பிள், ஆர்யன் வாழ்க்கையில இந்து நீ போகணும், அதுக்கு உனக்கு எவ்ளோ பணம் வேணும் சொல்லு, நான் உனக்கு அத தரேன் “ என்று சொன்னாள்.
சஞ்சு சிறிதும் அசையாமல், கலங்காமல், ” ஸாரி மாயா, உன்னால அவர பணம் கொடுத்து வாங்க முடியாது ஏன்னா நான் ஏற்கனவே அவர சொந்தமா வச்சிருக்கேன்.” என்று கூறினாள். சஞ்சுவின் வார்த்தை கேட்டதும் கோவத்தில் மாயையின் தாடை இறுகியது. ” நீ என்ன ரொம்ப குறைவா மதிப்பிடுற. உனக்காக நான் ஒரு சர்ப்ரைஸ் வெச்சுறுக்கேன். முதல்ல அத பாரு, அதுக்கு அப்புறம் நீ ஆர்யன் வாழ்க்கையில இருக்கனுமானு முடிவு பண்ணு.” என்று சொல்லி தன் கைப்பைக்குள் இருந்து ஒரு சிறிய கவரை எடுத்து சஞ்சுவிடம் கொடுத்தாள்.
சஞ்சு அதைத் திறந்ததும், அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. உள்ளே இருந்த புகைப்படங்கள் பார்த்ததும் சஞ்சு அதிர்ச்சியில் சோபாவில் இருந்து எழுந்திருக்க போதுமானதாக இருந்தது. அவளது திகைப்பான பார்வை மாயாவை நோக்கி நிலைத்திருந்தது. மாயா உதடுகளில் ஒரு வஞ்சகமான புன்னகையுடன் விளையாடினாள்.
***************
முன்னோட்டம்:
“ நான் உன்ன பார்த்து நாலு மணி நேரம் ஆகுது, உன்ன பார்க்க இன்னும் அஞ்சு மணி நேரம் காத்திருக்கணும். என்ன செய்ற ஆர்யன் ? நீ இல்லாம கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாத அளவுக்கு நீ என்ன கெடுத்து வெச்சுருக்க”

1 comment
[…] Chapter 35 […]