Home FamilyChapter 46

Chapter 46

by Siragugal Novels
14 views

ஆர்யனும், சஞ்சுவும் தியேட்டரை விட்டு புறப்பட்டு வீட்டுக்கு  திரும்பியதும் அமைதியாக இரவு உணவை சாப்பிட்டனர். பின்னர், இருவரும் அறைக்கு திரும்பி இரவு ஆடைகளை மாற்றிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தனர்.

“சஞ்சு” என்று ஆர்யன் மென்மையாகக் கூப்பிட்டதும், “ஹ்ம்ம் சொல்லு பா ” என்று சொன்ன சஞ்சு அவனை நோக்கித் திரும்பினாள்.

” நான் நாளைக்கு ஒரு மீட்டிங் விஷயமா லண்டன் போறேன் “ என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சு சட்டென எழுந்து, “ என்ன இப்போ வந்து சொல்ற ? “ என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

” சந்திரசேகர் கூட பார்ட்னர்ஷிப் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி லண்டன் கிளைன்ட் சந்திச்சு டீல் பத்தி பேசி, அக்ரீமென்ட் கையெழுத்து போடணும் “ என்று ஆர்யன் விளக்கமளித்ததும், “ ஒஹ், எப்போ கிளம்பனும்?” என்று கேட்டாள் சஞ்சு.

” நாளைக்கு சாயங்காலம் ” என்று ஆர்யன் சொல்ல, “சரி… எப்போ திரும்பி வருவீங்க?” என்று அவள் கேட்டாள்.

” திங்கட்கிழமை நான் திரும்பி வருவேன். பார்ட்னர்ஷிப் பத்தி அதிகாரப்பூர்வமா அறிவிக்க நம்ம மேன்ஷன்ல ஒரு பார்ட்டி வைப்போம். அதுக்கான ஏற்பாடு செய்ய ரஞ்சித் கிட்ட சொல்லி இருக்கேன் “ என்று ஆர்யன் சொன்னதும், “திங்கட்கிழமையா ?” என்று சஞ்சு மெல்லிய குரலில் ஏக்கத்தோடு கேட்டாள்.

ஆம் என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சுவின் எண்ண அலைகள்  சுழல ஆரம்பித்தன. “ திங்கட்கிழமை என்ன நாள்னு இவரு மறந்துட்டாரா ?சரி, இப்போ எதுவும் சொல்லி அவர தொந்தரவு செய்ய வேணாம். ஏற்கனவே நிறைய டென்ஷன் அவருக்கு “ என்று மனதில் நினைத்தாள்.

அவர்களுக்கிடையேயான மௌனம் வழக்கத்தை விட அதிக நேரம் நீண்டிருக்க, சஞ்சுவின் முகபாவத்தில் ஏதோ மாற்றம் தெரிவதை அவனால் உணர முடிந்தது.

“என்ன யோசிக்குற ?” என்று கேட்டு அவள் கன்னத்தை மெல்ல தன் கட்டை விரல் கொண்டு வருடினான். அதற்கு சஞ்சு தயங்கியடி ஒரு சிறு புன்னகையோடு, “ ஒண்ணுமில்ல, நம்ம மேன்ஷன்ல பார்ட்டி வெச்சா, யாராச்சும் என்ன பார்த்துட்டா என்ன செய்றது ? “ என்று கேட்டாள். 

” அக்ரீமென்ட் படி, இந்த மாசம் முழுக்க நீ என்னோட PA தான் அதனால அத பத்தி நெனச்சு கவலைப்பட வேணாம் “ என்று அவளுக்கு உறுதியளித்த ஆர்யனின் குரல் அமைதியாக ஆனால் உறுதியாக, தெளிவாக இருந்தது.

ஆர்யன் சொன்னதை கேட்டதும், ” அப்படியா ? அப்போ நான் அதுவர ஆபீஸ் வரட்டுமா ? “ என்று உற்சாகமாக கேட்டாள் ஆனால் ஆர்யன்,  ” இல்ல ஸ்வீட் ஹார்ட், நான் லண்டன்ல இருந்து    திரும்பி வரவரைக்கும் வீட்லயே இரு. எங்கேயும் போக வேண்டாம். ஒருவேள உனக்கு வெளிய போக ஆசையா இருந்தா அப்போ நான் திரும்பி வரவரைக்கும் வெயிட் பண்ணு, நான் உன்ன கூட்டிட்டு போறேன் “ என்று சொல்லி அவள் கன்னத்தை கனிவுடன் கிள்ளினான்.  

சஞ்சு அவன் கண்களைப் பார்த்து, “ ஆர்யன் “ என்று அழைத்த போது அவள் குரல் கிசுகிசுப்பாக மென்மையாக இருந்தது.

” சொல்லு மா ” என்று அவள் காதுக்குப் பின்னால் தலைமுடியைக் கோதியபடி மென்மையாக கேட்டான் ஆர்யன். அதற்கு சஞ்சு, ” நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் “ என்று கவலயுடன் சொன்னாள்.

” நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ” என்று ஆர்யன் கூறினான்.

தன் பார்வையை விலக்கி குனிந்து பார்த்தவள். ” இன்னிக்கு ஒரு நாள் நீ ஆபீஸ் போனதுக்கு அப்புறம் நான் வீட்ல தனியா இருந்ததே ஒரு மாதிரி இருந்துச்சு. அஞ்சு நாள் நீ இல்லாம எப்படி இருப்பேன் ? “ என்று கண்கள் கலங்கியபடி சஞ்சு கேட்க, ஆர்யன் தன் நெற்றியை அவளது நெற்றியில் சாய்த்து பெருமூச்சு விட்டான். ” எனக்குத் தெரியும் ஆனா நான் நிச்சயம் போகனும் சஞ்சு, இத என்னால தவிர்க்க முடியாது ” என்று வருத்தத்துடன் கூறினான்.

“எனக்குப் புரியுது…ஆனா எனக்கு அடிக்கடி போன் பண்ணு ” என்று அவள் தைரியமாக பேச முயன்றாள், ஆனால் ஒரு கண்ணீர் துளி அவள் கன்னத்தில் உருண்டது. அந்தக் கண்ணீரைக் கண்டதும் அவன் மனம் உடைந்தது. உடனே அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டவன், கவனமாகவும் பாதுகாப்பாகவும் அவளைச் சுற்றி அணைத்துக் கொண்டான். மெதுவாக கட்டை விரலால் கண்ணீரைத் துடைத்தான்.

“நீ அழுதா என்னால நிம்மதியா போக முடியாது” என்று ஆர்யன் அவள் கூந்தலில் முணுமுணுத்தான். அதை கேட்ட சஞ்சு, “நான் அழல, நான் உனக்காக வெயிட் பண்ணுவேன் ” என்று அவனுடைய கதகதப்பில் சொன்னாள்.

ஆர்யன் அவள் முகத்தை நிமிர்த்த, அவன் கண்கள் பாசத்தால் மென்மையாக இருந்தன. “சரி, இந்த அஞ்சு நாளுக்கு தேவையான  நினைவுகள இப்போ நாம் உருவாக்கலாமா?” என்று கேட்டு புன்னகைக்க, சஞ்சு மெதுவாக சரி என்று தலையசைத்தாள்.

ஆர்யன் அவளை மெல்ல கட்டிலில் புரட்டி அவள் கழுத்தில் தன் உதடுகளை பதித்து அவளது வாசனையை முகர்ந்தான்.

” உன்னோட இந்த வாசனைய நான் மிஸ் பண்ணுவேன் ” என்று அவன் முணுமுணுத்தான்.

சஞ்சு அவன் முகத்தை நிமிர்த்தி தன் உதடுகளுக்கு அருகில் இழுத்து அவனை மென்மையாக முத்தமிட்டாள். ” உன்னோட அரவணைப்ப மிஸ் பண்ணுவேன் “ என்று சொன்னவளின் குரல் காற்று போல இருந்தது.

அவர்களின் முத்தம் ஆழமாக, அவசரமாக, ஏக்கம் நிறைந்திருந்தது. அவள் விரல்கள் அவன் தலைமுடியை பிடித்து அருகில் இழுத்தன. அவனது கைகள் அவளது ஆடைக்குள் நுழைந்தன, அவனது ஸ்பரிசம் அவளது எழுச்சி சிகரங்களை தொட்ட போது அவள் மூச்சிரைத்தாள்.

எழுந்து உட்கார்ந்து தனது சட்டையைக் கழற்றி எறிந்தவன், கவனமாக அவளது சட்டையையும் தலைக்கு மேல் கழட்டி தூக்கி எறிந்தான். பின்னர் பழகிய வேகத்தில் அவளது பிராவை அவிழ்த்தான். அவர்கள் முத்தமிட்ட போது அவர்களுடைய வெற்று உடம்புகள் ஒன்றோடொன்று அழுத்திக் கொண்டிருந்தன. அவளது நகங்கள் அவன் முதுகில் கீறியது. 

ஆசை அவர்களுக்கிடையில் துடித்து, அனைத்து தடைகளையும் அகற்றி, இருவரின் உடல்கள் பின்னிப்பிணைந்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் உச்சம் அடைந்த போது ஆனந்தத்தில் அவர்களின் உடல் நடுங்கியது.

ஐந்து நாட்கள் இடைவெளிக்கு நினைவுகளை உருவாக்க இரவு குறுகியதாக இருந்தது.

அடுத்த நாள் காலை ஆர்யன் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். மாலையில் அவன் புறப்படுவதற்கு முன் தனது வேலையை முடித்துக் கொள்ள தீர்மானித்தான். தட்டில் ப்ரேக்பாஸ்ட் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்த சஞ்சு சோபாவில் அமர்ந்து அவளருகில் இருந்த இடத்தைத் தட்டிக் கொடுத்து, “ஆர்யன், முதல்ல ப்ரேக்பாஸ்ட் சாப்பிடு அப்புறம் காலுல சக்கரம் கட்டிட்டு ஓடு “ என்று விளையாட்டுத்தனமான புன்னகையுடன் சொன்னாள்.

ஆரியன் அவள் அருகில் அமர்ந்து தட்டை வாங்கி முதலில் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்ததும் ஆர்யன் அவள் முகத்தை இறுக்கி நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தை வைத்தான்.

” சரி, நான் என் வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வரேன். நீ எனக்கு  பேக்கிங் மட்டும் கொஞ்சம் பண்ணிடு “ என்று ஆர்யன் சொல்ல, ” நான் பார்த்துக்க்குறேன், நீ உன் வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வா ” என்றாள் சஞ்சு மெல்லிய குரலில்.

இருவரும் சேர்ந்து கீழே இறங்கி சென்றதும் ஆர்யன் காரில் ஏறி ஜன்னல் வழியே அவளை பார்த்து கண்ணடித்து, இரண்டு விரல்களால் காற்றில் முத்தமிட்டான். சஞ்சுவின் கன்னங்கள் வெட்கத்தில் பிங்க் நிறமாக மாறியது. ஆர்யன் புன்னகைத்து கையசைத்த பின்னர் கார் புறப்பட்டு சென்றது.

அலுவலகத்தில், ஆர்யன் தனது வேலையில் மூழ்கி இருந்தான். அப்போது ரஞ்சித் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் காபியுடன் அறைக்குள் நுழைந்து அவனிடம் கொடுத்தான்.

” ரொம்ப நன்றி ரஞ்சித். எனக்கு இது இப்போ ரொம்ப தேவைப்பட்டுச்சு “ என்று சொல்லி ஆர்யன் ஒரு மிடறு குடித்தான். அதற்கு ரஞ்சித், ” ஒருவேளை உங்களுக்கு காபி வேணும்னு சஞ்சனாவுக்குத் தெரிஞ்சிருக்கும் போல அதனால தான் எனக்கு போன் பண்ணி உங்களுக்கு காபி கொடுக்க சொன்னா ” என்று புன்னகையுடன் சொன்னான்.

ஆர்யன் சிரித்துக் கொண்டே, ” அவளுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.” என்று கூறினான்.

“சார், சந்திரசேகர் சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. அவங்க  டாகுமென்ட் செக் பண்ணி எல்லாம் சரியா இருக்கு சொல்லிட்டாங்க. பார்ட்னர்ஷிப் அக்ரீமன்ட் ரெடி பண்ண சொல்லிட்டாங்க “ என்று ரஞ்சித் சொன்னதும், ” நல்லது. லாயர் கிட்ட சொல்லி தேவையான ஏற்பாடு எல்லாம் செஞ்சிடு. அப்புறம் சந்திரசேகர் கிட்ட தேதி சொல்லிடு, அவர குடும்பத்தோட வர சொல்லு. ARC அப்புறம் DC, ரெண்டு பக்கத்துல இருந்தும் முக்கியமான நிர்வாகிகள் மட்டும் பார்ட்டிக்கு வர இன்விடேஷன் அனுப்பு. அது மட்டும் இல்ல, அக்ரீமன்ட் கையெழுத்து போட்ட அப்புறம் தான் மீடியாவ சந்திச்சு அதிகாரப்பூர்வமா சொல்லுவோம்னு சந்திரசேகர் கிட்ட சொல்லிடு “ என்று ஆர்யன் சொன்னதையெல்லாம் கேட்ட ரஞ்சித், “கண்டிப்பா சார். நீங்க சொன்ன மாதிரி அவருக்கு தெரியப்படுத்துறேன் “ என்றான்.

“ரஞ்சித், நான் திரும்பி வரவரைக்கும் சஞ்சனாவ கவனிச்சுக்க. பவித்ராவ தவிர கண்டிப்பா வேற யாரும் சஞ்சுவ பார்க்கவும், அவ கூட பேசவும் கூடாது. எக்காரணம் கொண்டும் சந்திரசேகர் சஞ்சு கிட்ட பேசக்கூடாது. அப்புறம் சுரேந்தர், பிரதீப் ரெண்டு பேரையும் பார்ட்டிக்கு வர சொல்லு “ என்று ஆர்யன் உறுதியான குரலில் கூறினான்.

” சரிங்க சார். ஆனா, பார்ட்டி நடக்க போற நாள் தான் கண்டிப்பா திரும்பி வருவீங்களா ?” என்று ரஞ்சித் தயக்கத்துடன் கேட்டான் அதற்கு ஆர்யன், ” ஆமா, அன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஏற்பாடும் செய்ய வேண்டி இருக்கு “ என்று சொன்னதும் ரஞ்சித் உற்சாகமாக, “என்ன வேணும்னாலும் பண்றேன் சார் “ என்று சொல்லி ஒரு பேப்பரை கொடுத்து, “ பார்ட்னர்ஷிப் அப்புறம் யாரெல்லாம் நம்ம பக்கம் இருந்து வேலை செய்ய சரியா இருப்பாங்கனு லிஸ்ட் ரெடி பண்ணிட்டேன், இதுல அவங்கள பத்தி தகவல் இருக்கு “ என்று சொன்னான்.

ஆர்யன் அந்த பட்டியலைப் புரட்டியபடி. ” மானசி கிட்ட இருந்து ஏதாவது தகவல் இருக்கா ?” என்று கேட்டான். அதற்கு ரஞ்சித், ” இல்ல, ஆனா அவ ரொம்ப அமைதியா இருக்கா ” என்றான்.

” பார்ட்னர்ஷிப் கையெழுத்தான அப்புறம் அவ நிச்சயம் மாயா கூட சேர்ந்து வேலை செய்வா அதனால கண்காணி “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டு சரி என்று தலை அசைத்தான் ரஞ்சித்.

” நீ ஆபீஸ்ல இருக்கும் போது பாலா கிட்ட சொல்லி மேன்ஷன பார்த்துக்கச் சொல்லு. பாதுகாப்ப பலப்படுத்து. சஞ்சனாவ சுத்தி எப்பவும் எனக்கு 24×7 கண்காணிப்பு வேணும் “ என்று ஆர்யன் சொல்ல, “நான் ஏற்கனவே நம்ம ஆளுங்க கிட்ட சொல்லிட்டேன் சார். நீங்க கவலை இல்லாம நிம்மதியா போய்ட்டு வாங்க.    சஞ்சுவ நான் பார்த்துக்குறேன், அவ எனக்கு தங்கச்சி “ என்று சொன்னான் ரஞ்சித்.

” நீ பாத்துக்குவனு எனக்கு தெரியும் ரஞ்சித்” என்றான் ஆர்யன் அமைதியான நம்பிக்கையுடன்.

ரஞ்சித்தின் உதவியுடன், ஆர்யன் அந்த வாரத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்தான். முக்கிய பொறுப்புகளை ரஞ்சித்திடம் ஒப்படைத்துவிட்டு மதியம் அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

வீடு திரும்பிய போது, சஞ்சு கவனமாக அவனது ஆடைகளை பேக் செய்வதைக் கண்டான். அவளுக்குப் பின்னால் சென்று அவள் இடுப்பைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு அவள் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டு, “பேக்கிங் முடிஞ்சுதா?” என்று கேட்டான்.

” முடிஞ்சிடுச்சு பா, நீ ஒரு தடவை செக் பண்ணு.” என்று சஞ்சு சொல்ல, ” தேவை இல்ல. நீ எல்லாம் சரியா தான் செய்வ “ என்றான் ஆர்யன்.

சஞ்சு திரும்பி அவன் டையை மெதுவாக அவிழ்த்தாள். பின்னர் அவள் மெதுவாக அவன் சட்டை பட்டனை அவிழ்த்துக் கொண்டே, “ஆர்யன்… திங்கட்கிழமைக்கு முன்னாடி திரும்பி வர முடியாதா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

” பேபி, என்னால முடிஞ்சவர முயற்சி செய்றேன். ஆனா வாய்ப்புகள் குறைவு. நான் பொய்யா சத்தியம் பண்ணி உன்ன ஏமாத்த விரும்பல. நான் பார்ட்டிக்கு வருவேன்” என்றான் ஆர்யன்.

அவள் ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கினாள். ஆர்யன் சிரித்துக் கொண்டே அவள் உதட்டில் முத்தமிட்டு பின் அவள் மூக்கை லேசாக கிள்ளி, ” இப்படியெல்லாம் பண்ணாத மா, ப்ளீஸ் “ என்று ஆர்யன் வருத்தத்துடன் கேட்க, ” என்ன மன்னிச்சிடு. நீ கண்டிப்பா போகணும்னு எனக்கு புரியுது ஆனா ஒவ்வொரு நொடியும் உனக்காக காத்திருப்பேன், அது ஞாபகம் இருக்கட்டும் ” என்று கூறினாள் சஞ்சு. 

“அந்த நொடி எல்லாம் என்ன மிஸ் பண்ணு… நான் திரும்பி வந்ததும், நீ என்ன எவ்ளோ மிஸ் பண்ணணு தவறாம காட்டு. நீ எவ்ளோ கடிச்சாலும் அதுக்கு மருந்து சாப்பிடுறதுல எனக்கு ஆட்சேபண இல்ல.” என்று ஆர்யன் கிண்டல் செய்ய, சஞ்சுவும்  அவன் நெஞ்சில் சாய்ந்து, “அப்போ அதுக்கு ரெடியா வா ” என்று கிண்டலடித்தாள்.

“இப்போ, நான் கிளம்பறதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?” என்று ஆர்யன் கண்களில் குறும்பு மின்ன கேட்டான். அவள் பதில் சொல்வதற்குள் அவளை தூக்கி தோளில் சுமந்து பாத்ரூமை நோக்கி சென்றான். அவளது சிரிப்பு சிறிது நேரம் எதிரொலித்தது. அதன் பிறகு பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே எழுந்தன.

நீண்ட, சூடான குளியலுக்குப் பிறகு, இருவரும் வெளியே வந்தனர். சஞ்சு அவனுக்கு ஆடை அணிவிக்க உதவினாள், மெதுவாக அவன் தலைமுடியை சீவி, சட்டையை நேராக்கினாள், அவளுடைய விரல்கள் ஒவ்வொரு விவரத்தையும் மனப்பாடம் செய்ய முயற்சிப்பது போல் நீடித்தன.

ஆர்யன் உடையணிந்து அவளை நோக்கித் திரும்பினான். அவன் கண்கள் லேசான தீவிரத்துடன் சஞ்சுவின் மீது நிலைத்திருந்தன.

” ஸ்வீட் ஹார்ட், நான் திரும்பி வரவரைக்கும் வீட்லயே இரு. பவித்ராவ தவிர வேற யார் கிட்டயும் பேசாத. யார் வந்தாலும் அவங்கள நீ சந்திக்க வேணாம் “ என்று உறுதியாக சொன்னதும், “சரி ஆர்யன்” என்று சஞ்சு தலையசைத்து மறுவார்த்தை பேசாமல், அவள் அவனை இழுத்து ஆழமாகவும், உணர்ச்சிகரமாகவும் ஒரு முத்தமிட்டாள். இறுதியாக அவள் பின்வாங்கிய போது அவள் அவனது கன்னங்களிலும் நெற்றியிலும் மென்மையான முத்தங்களை விட்டுச் சென்றாள்.

” நான் உனக்கு அடிமையாயிட்டேன் சஞ்சு பேபி” என்று முத்தத்தில் மூச்சு வாங்க கிசுகிசுத்தான் ஆர்யன்.

” டேக் கேர். நேரத்துக்கு சாப்பிடு ” என்று அவனுக்கு நினைவூட்டியவள், அவன் தலைமுடியை கோதிவிட்டாள்.

“நீயும் ஜாக்கிரதையா இரு. நான் லண்டன் போனதும் உனக்கு போன் பண்றேன். அதுவரைக்கும் நீ சாப்பிட்டு, தூங்கு” என்று ஆர்யன் சொல்ல, “ சரி, வா கீழ போகலாம். ரஞ்சித் அண்ணா உனக்காக வெயிட் பண்ணுவாரு, லேட் ஆகுது ” என்று கூறினாள்.

இருவரும் கீழே சென்றதும் ரஞ்சித் வேகமாக ஓடி ஆர்யனின் லக்கேஜை வாங்கி காரின் டிரங்கில் வைத்து விட்டு ஆர்யனுக்காக கதவைத் திறந்தான். பின்னர் தம்பதிக்கு ஒரு கணம் தனிமை கொடுக்க அவன் அமைதியாக முன் இருக்கையில் அமர்ந்தான்.

ஆர்யன் தன் கட்டை விரலால் சஞ்சுவின் கன்னத்தை வருடி அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு மறுவார்த்தை பேசாமல், காரில் ஏறினான். கார் மேன்ஷனில் இருந்து புறப்பட்டு விமான நிலையத்தை நோக்கிச் சென்றது.

தனியார் ஜெட் ஏற்கனவே தயாராக இருந்தது, தாமதமின்றி, ஆர்யன் அதில் ஏறி லண்டன் புறப்பட்டான் .

அந்த இரவு சஞ்சுவுக்கு வழக்கத்திற்கு மாறாக நீண்டதாக இருந்தது. அவள் அவனை மிகவும் மிஸ் செய்தாள். அந்த வெறுமையை போக்க அவனது சட்டைகளில் ஒன்றை அணிந்து கொண்டாள் ஆனால் அது தூரத்தை மேலும் மோசமாக்கியது. பல மணி நேரம் புரண்டு புரண்டு புரண்ட பிறகு, ஒரு வழியாக விடியற்காலையில் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

DC இல்லத்தில் சந்திரசேகரும் மாயாவும் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

“ஆர்யன் இந்தியவுல இப்போ இல்ல” என்று சாதாரணமாகச் சொன்னார் சந்திரசேகர். அதை கேட்டதும், “எங்க போய் இருக்காரு ?” என்று மாயா ஆர்வத்துடன் கேட்டாள்.

” லண்டன்ல கிளைன்ட் சந்திக்க போய் இருக்கான் “ என்று சந்திரசேகர் சொன்னதும், “அப்பா… அவர் இல்லாத இந்த நேரத்த சாதகமாக்கி அவள எப்படியாவது ஒழிச்சு கட்டலாமா?” என்று மாயா ஆர்வத்துடன் கேட்டாள் ஆனால் உடனே நிமிர்ந்து பார்த்த சந்திரசேகர், “இல்ல, நீ எதுவும் செய்யாத. அந்த விஷயம் இயற்கையா நடக்கனும் இல்லனா ஆர்யன் இரக்கம் இல்லாதவனா மாறிவிடுவான் “ என்று சொன்னவரின் குரலில் தெளிவாக எச்சரிக்கை தெரிந்தது.

அப்போது அவரது செல்போன் ஒலித்ததும், ரஞ்சித்தின் பெயரை பார்த்து உடனே பதில் அளித்து சில நிமிடங்கள் பேசி பின்னர் அழைப்பை முடித்தார்.

” அவன் ஏன் போன் பண்ணான் ?” என்று மாயா கேட்டதும், “திங்கட்கிழமை ஆர்யன் மேன்ஷன்ல பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காங்க அதுக்கு நம்ம எல்லாரையும் வர சொல்லி இருக்கான். அன்னைக்கு அதிகாரப்பூர்வமா நீயும், ஆர்யனும் பார்ட்னர் ஆவிங்க. மீடியாவையும் வர சொல்லி இருக்காங்க “ என்று ரஞ்சித் கூறியதை சந்திரசேகர் சொன்னார்.

“ஆனா பார்ட்டி ஏன் மேன்ஷன்ல ஏற்பாடு பண்ணி இருக்காங்க ?” என்று மாயா குழப்பத்துடன் கேட்க, “சரியா தெரியல ஆனா  ஆர்யன் திங்கட்கிழமை தான் திரும்பி வருவான் அதனால வேற இடம் பயணம் விரும்பலன்னு ரஞ்சித் சொன்னான். மீடியா தவிர,  ARC, DCயோட முக்கிய நிர்வாகிகள் மட்டும் பார்ட்டியில கலந்துக்குவாங்க “ என்றார் சந்திரசேகர்.

” எல்லாம் நம்ம ப்ளான் படிதான் நடக்கணும்.” என்று மாயா சொல்ல, ” அப்படி தான் நடக்கும் மாயா. அது சரி நரேன் எங்க ? “ என்று அவளிடம் கேட்டு, அங்கிருந்த வேலைக்காரியை நரேனை அழைக்கும் படி கூறினார். நரேன் அங்கு வந்து மாயாவின் அருகில் அமர்ந்தான்.

“நரேன், மாயாவை சி.இ.ஓ.வா நியமிக்க முடிவு பண்ணி இருக்கேன். ஆர்யன் திங்கட்கிழமை அவனோட மேன்ஷன்ல பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கான். அன்னைக்கு பார்ட்னர்ஷிப் கையெழுத்து போட்ட அப்புறம் அதிகாரப்பூர்வமா அறிவிப்போம். இதுல உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுனு நம்பறேன்.” என்று சந்திரசேகர் கேட்க, ” இது முழுக்க முழுக்க பிசினஸ் காரணாம எடுத்த முடிவா இருந்தா எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல ஆனா இது எதுவும் பிசினஸ் சம்மந்தமா நடக்குற மாதிரி எனக்கு தெரியல “ என்று நரேன் மெதுவாகச் சொன்னான், ஆனால் அவன் குரல் இறுக்கமாக இருந்தது.

“நரேன், பார்ட்டி முடிஞ்சதும் நீ கனடாவுக்குத் திரும்பி நம்ம பிசினஸ் பார்த்துக்க “ என்று சந்திரசேகர் சொன்னதும், “பார்ட்டி வரை ஏன் வெயிட் பண்ணனும் ? நான் உடனே கிளம்பறேன்.” என்று நரேன் எரிச்சலுடன் சொன்னான். அவன் வார்த்தையை கேட்ட மாயா, ” அண்ணா, நீ ஏன் எப்பவும் பிரச்சின பண்ணிட்டு இருக்க ? என்று கேட்டாள். அதற்கு நரேன் உடனே, “வாய மூடு, மாயா, இந்த திட்டத்தால் ஏற்படக்கூடிய சேதம் பத்தி உங்களுக்கு கொஞ்சம் கூட யோசன இருக்க மாதிரி எனக்கு தெரியல “ என்று நரேன் உறுமினான்.

” நீ வாய மூடிக்கிட்டு இருந்தா எதுவும் தப்பா நடக்காது” என்று சந்திரசேகர் திட்டவட்டமாகச் சொன்னார்.

“பார்ட்டி முடிஞ்சதும் நான் கிளம்பறது தான் நல்லது. உங்க தப்பான எண்ணத்துக்கு என்னால ஆதரவா இருக்க முடியாது அதே சமயம் என் நண்பனுக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு மாயாவை முறைத்து பார்த்தபடி நரேன் எழுந்து சென்றான்.

” நான் என் friends கூட வெளியே போறேன், திரும்பி வர லேட் ஆகும் “ என்று சொல்லி மாயா புறப்பட்டு சென்றாள்.  .

நரேன் வெளியேறிய கதவின் மீதே சந்திரசேகரின் பார்வை  நிலைத்திருந்தன.

***************************************

முன்னோட்டம்:

“ நான் திரும்பி வந்து உன் கூட இருக்கும் போது அந்த சட்டைய போட மறக்காத. அதுல நீ செக்ஸியா இருக்க ஸ்வீட் ஹார்ட் “ 

 

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!