லண்டன் சென்றடைந்த ஆர்யன், ஹோட்டலுக்கு சென்று அங்கு ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்த ஒரு நேர்த்தியான பிசினஸ் கிளாஸ் அறைக்கு சென்றான். அந்த ஹோட்டல் மற்றும் அவன் தங்கி இருந்த அறை பலத்த பாதுகாப்புடன் இருந்தது. அவன் அறைக்குள் சென்றதும் சஞ்சுவுக்கு வீடியோ கால் செய்தான். சஞ்சுவும் முதல் ரிங்கிலேயே பதில் சொன்னாள்.
” ஸ்வீட் ஹார்ட், நீ முதல் ரிங்குல பதில் சொல்லி இருக்க “ என்று அவன் சொன்ன போது அவனது உதடுகளில் ஒரு புன்னகை விளையாடியது.
” நீங்க போன் பண்ணுவீங்கனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் மிஸ்டர் ஆர்யன்” என்றாள் சஞ்சு மென்மையான குரலில்.
கண்களில் கவலை மின்ன, ஒரு கணம் அவளது முகபாவத்தை ஆராய்ந்தவன், “நீ தூங்கலையா?” என்று கேட்டான் அதற்கு சஞ்சு, ” நான் தூங்கினேன், கொஞ்ச நேரம் முன்னாடி தான் எழுந்தேன் “ என்று பதில் சொன்னாள் ஆனால் அவள் முகத்தில் இருந்த சோர்வு அவளைக் காட்டிக் கொடுத்தது.
“பொய் சொல்லாத சஞ்சு., நல்லா தூங்கு, சரியா? உன் கண்களுக்குக் கீழே கருவளையம் இருக்குறத பார்க்க நான் விரும்பல. உன்னோட கண்ணுல எனக்கு அந்த பளபளப்பு எப்பவும் வேணும் ” என்று சொன்ன போது அவன் குரல் மெல்லத் தாழ்ந்தது.
“ஹ்ம்ம் சரி” என்றவள் அவனது கவலையால் நெகிழ்ந்து போனாள்.
“சரி மா, எனக்கு ரொம்ப தூக்கம் வருது, ஜெட்ல வந்தது ரொம்ப களைப்பா இருக்கு. நீ தூங்கு நாளைக்கு நான் மீட்டிங் போறதுக்கு முன்னாடி போன் பண்றேன்.” என்று ஆர்யன் சொன்னதும், “ஹ்ம்ம்… சாப்பிட்ட அப்புறம் தூங்கு” என்றவளின் குரல் மென்மையாக இருந்தது.
” ஐ லவ் யூ “ என்று அவன் கிசுகிசுத்தான். அதற்கு சஞ்சுவும், “ நானும் ஐ லவ் யூ “ என்றாள்.
ஆர்யன் அழைப்பை துண்டிக்க எத்தனிக்கையில், கண்களில் ஒரு கிண்டல் மின்னலுடன் திரையைப் பார்த்து, “ஏய், நில்லு… நீ என்ன டிரஸ் போட்டு இருக்க ?” என்று கேட்டான்.
சஞ்சு உடனடியாக தனது ஆடையை மறைக்க கேமராவை உயர்த்தி, ” நான் என்னோட சட்ட போட்டு இருக்கேன் ” என்று வேகமாக. பதில் சொன்னாள் ஆனால் ஆர்யன், ” பொய் சொல்லாத பேபி, நீ என்ன டிரஸ் போட்டு இருக்கனு காட்டு.” என்றான் ஆர்வத்துடன் குனிந்தபடி. அப்போது அவள் கன்னங்களில் ஒரு வெட்கம் தவழ்ந்தது. ஒரு தயக்கமான புன்னகையுடன் கேமராவை மெதுவாக கீழே இறக்கிய அவள் முழங்கால்களுக்கு சற்று மேலே வரை மட்டும் இருந்த சட்டையை காட்டினாள்.
ஆர்யனின் கண்கள் விரிந்து, அதிர்ச்சியடைந்தது போல் பாவனை செய்து வாயில் கையை வைத்துக் கொண்டு, ” என்னடி இதெல்லாம் ? “ என்று கேட்டான்.
“என்ன? உன்னோட சட்டைய தான் போட்டு இருக்கேன், அதுக்கு என்ன இப்போ ? உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் அதனால இத போட்டுகிட்டேன் ” என்று சொல்லி உதட்டை சுளித்தாள். அதற்கு ஆர்யன், “ சட்ட மட்டும் தான் போட்டு இருக்கியா ?” என்று கேட்டான். அப்போது அவன் குரல் தாழ்ந்து கிசுகிசுப்பாக இருந்தது.
“ஆமா, சட்டை மட்டும் தான்.” என்று சஞ்சு சொன்னதும், ஆர்யன் ஆழமாக மூச்சை இழுத்தான், அவன் கண்கள் காதலாலும், ஆசையாலும் இருண்டன. ““ நான் திரும்பி வந்து உன் கூட இருக்கும் போது அந்த சட்டைய போட மறக்காத. அதுல நீ செக்ஸியா இருக்க ஸ்வீட் ஹார்ட் “ என்று சொல்லி திரை வழியாக அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
” போடா, அதெல்லாம் போட முடியாது “ என்று சஞ்சு சொன்னதை கேட்ட ஆர்யன், “ நீ போடுவ ஸ்வீட் ஹார்ட். நான் இங்க வந்து ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஷாக் கொடுக்குற ? மிச்சம் இருக்க நாள் நான் எப்படி இங்க தனியா இருப்பேன் ? “ என்று கேட்டு அவன் கிண்டலடித்தான்.
” அப்போ சீக்கிரம் வா “ என்று சஞ்சு சொல்ல, “ வரேன் , அதுவர என்ன மிஸ் பண்ணு “ என்று சொன்னான் ஆர்யன்.
அழைப்பை துண்டிப்பதற்கு முன்னர் இருவரும் திரை வழியாக மெய்நிகர் முத்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
சஞ்சு ஒரு கணம் வெற்றுத் திரையை வெறித்துப் பார்த்தாள். பின்னர், கண்ணாடியை நோக்கி நடந்தாள், அவனது சட்டையின் துணி அவளது தோலில் உரசும்போது தன்னை அணைத்துக் கொண்டாள். அது இன்னும் அவனது வாசனையை சுமந்து கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டு அவனது நினைவுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அவனைக் காணாமல் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
மாயா பலரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உடை அணிந்து கொண்டு ஒரு இரவு விடுதிக்கு சென்றாள். அந்த விடுதியின் விளக்குகள் தாள வடிவங்களில் மினுங்கின, இசை காற்றில் எதிரொலித்தது. அவளுடைய தோழிகள் எல்லோருமே அவள் கனடாவிலிருந்து திரும்பியதிலிருந்தே அவளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அவள் கனடா புறப்படுவதற்கு முன்பு, அதே இரவு விடுதி அவர்களுக்கு அடிக்கடி கூடும் இடமாக இருந்தது. உரத்த சிரிப்பு மற்றும் முடிவற்ற பார்ட்டியின் நினைவுகளால் அந்த விடுதி நிரம்பியிருந்தது.
மாயா உள்ளே நுழைந்ததும், அவளுடைய தோழிகள் அவளிடம் விரைந்து வந்து, அவளை ஒரு குழுவாக அணைத்துக் கொண்டனர்.
“ஏய் மாயா! எவ்ளோ வருஷம் ஆச்சு உன்ன பார்த்து ? எங்கள நீ மறந்துட்டனு நினைச்சோம் ” என்று அவள் தோழி ரியா கேலியான வேதனையுடன் கூச்சலிட்டாள். மாயா விளையாட்டாக கண்களை உருட்டி, ” ஏய், லூசு மாதிரி பேசிட்டு இருக்காத. நான் ஏன் உங்கள மறக்க போறேன் ? “ என்று கேட்டாள்.
” வாழ்க்கை எப்படி போகுது ?” என்று கேட்ட லேக்கா, விடுதியை ரகசியமாக நோட்டமிட்டபடி, ” விவான் இங்க தான் இருக்கான் மாயா. அவன் உன்ன பார்த்துட்டு இருக்கான் “ என்று மெல்லிய குரலில் கூறினாள்.
லேக்காவின் வார்த்தையை கேட்டதும் மாயாவின் முகபாவம் இறுகியது. “வாயை மூடு லேக்கா. நாங்க பிரிஞ்சிட்டோம். அது உனக்கு நல்லா தெரியும். நான் இப்போ ஆர்யன் கூட சேரத் தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் “ என்று கூறினாள்.
ரியா புருவத்தை உயர்த்தி, ” இன்னுமா நீ அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க ? “ என்று கேட்டாள். அதற்கு லேகா குறுக்கிட்டு, “ஏன் மாயா, உன் நேரத்த அவன் பின்னாடி சுத்தி வீணடிக்குற ? எங்கள பாரு, வாழ்க்கைய எப்படி அனுபவிச்சு என்ஜாய் பண்றோம். நீ ஏற்கனவே உன்னோட நேரத்த அவருக்கு அதிகமா கொடுத்துட்டனு தோணலையா ? “ என்று கேட்டாள்.
“இல்ல, ஆர்யனுக்காக எவ்ளோ வருஷம் வேணும்னாலும் காத்திருக்கலாம். நான் அவர அடையுற வர ஓயமாட்டேன் “ என்றாள் மாயா உறுதியாக.
ரியா மெல்லிய சிரிப்புடன் தலையை ஆட்டி, “கடவுளே, மாயா… என்னால இப்படியெல்லாம் நினைக்கவே முடியாது. நேரத்தை வீணடிக்க வேணாம். வா, டிரிங்க்ஸ் பண்ணிட்டு டான்ஸ் ஆடலாம்” என்று சொல்லி அவர்களை பாரை (bar ) நோக்கி இழுத்துச் சென்றாள் லேக்கா.
பார்டெண்டர் விரைவாக அவர்களுக்கு ஒரு சுற்று மது ஊற்றினார். ஒரு சுற்று மூன்றாக மாறியது, பின்னர் ஐந்து என ஒவ்வொரு கோப்பையும் காலியானதும் அவர்களுடைய சிரிப்பு சத்தம் அதிகரித்தது.
“வாங்க டேன்ஸ் ஆடலாம் ” என்று அவர்கள் நடன தளத்தை நோக்கிச் சென்றனர். மூவரும் சேர்ந்து காட்டுத்தனமாக நடனமாடினர். ஆனால் சற்று அதிகமாக குடித்திருந்த காரணத்தால் மாயா சற்று தடுமாறினாள். அவள் இடுப்பைச் சுற்றி ஒரு பிடி இறுகுவதை உணர்ந்து அவள் நிமிர்ந்து பார்த்த போது, விவான் அவளைப் பிடித்திருப்பதைக் கண்டாள்.
அவள் லேசாக அசைந்தபோது அவளை நிதானப்படுத்தியபடி, “நல்லா இருக்கியா மாயா?” என்று விவான் கேட்டான்.
“நான் நல்லா இருக்கேன். என்ன விடு” என்று முணுமுணுத்தவளின் குரலில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவன் கையை விலக்கினாள்.
“நிஜமாவே எப்படி இருக்க?” என்று விவான் மீண்டும் கேட்டதும், “நான் நல்லா இருக்கேன்,” என்றாள் சட்டென்று அவன் கண்களைத் தவிர்த்தபடி.
அவன் தயங்கித் தயங்கி பின் மெல்லிய குரலில், “மாயா… நாம் ஏன் நண்பர்களா இருக்கக் கூடாது?” என்று கேட்டான். அவள் பதில் சொல்வதற்குள் சில அடி தூரத்தில் நடனமாடிக் கொண்டிருந்த ரியா “ஏய் விவான்! எங்க கூட டேன்ஸ் ஆட வா “ என்று அழைத்தாள்.
அவன் லேசாகத் திரும்பி பணிவான புன்னகையுடன் ” இல்ல ரியா, நீ ஆடு, நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.” என்று பணிவுடன் சொல்லி மறுத்துவிட்டான்.
எப்போதும் தலையிடும் ரியா, மாயாவிடம் சென்று, ஹே மாயா, நீங்க நண்பர்களா இருக்குறதுல எந்த தப்பும் இல்லனு நினைக்குறேன் “ என்று சொன்னாள். அவள் வார்த்தையை கேட்ட மாயா நீண்ட பெருமூச்சு விட்டு தயக்கத்துடன் தலையசைத்து, “ஹ்ம்ம்… சரி. Friends ” என்று கூறினாள். உடனே விவானின் முகத்தில் நிம்மதிப் புன்னகை மலர்ந்தது. ” நம்ம பிரண்ட்ஷிப் கொண்டாட ஒரு கிளாஸ் குடிக்கலாமா ? “ என்று கேட்டான்.
மாயா முனகியபடி நெற்றிப் பொட்டைத் தேய்த்து, ” நான் ஏற்கனவே அஞ்சு ஷாட் குடிச்சிட்டேன். இன்னும் ஒன்னு குடிச்சா நிதானம் இழந்துடுவேன் “ என்று கூறினாள் ஆனால் விவான், ” வா மாயா, இன்னும் ஒரே ஒரு ஷாட் மட்டும் தான்” என்று கிண்டலடித்தபடி அவளை லேசாக இடித்தான்.
மாயா வாதிடுவதற்குள் லேக்கா சத்தமாக சிரித்தபடி அங்கே வந்து, ” ஏய், friends இந்த புது நட்புக்காக எங்களுக்கும் ட்ரீட் கொடுங்க “ என்று கேட்டாள். அதற்கு விவான், ” தாராளமா எல்லாரும் வாங்க “ என்று உற்சாகமாக சொன்னான்.
அவர்களைச் சுற்றி சிரிப்பொலி எதிரொலிக்க, அவர்கள் மீண்டும் மது அருந்த சென்றனர். விவான் இன்னொரு ரவுண்டு ஷாட் அடிக்க உத்தரவிட்டான், ஒரு விளையாட்டுத்தனமான புன்னகையுடன் தனது கோப்பையை உயர்த்தி, ” நம்ம புது தொடக்கத்துக்கு “ என்று அவன் கூறினான். அவர்கள் மேலும் மூன்று ஷாட் குடித்த பின்னர் சுயநினைவை இழந்தனர். லேக்கா மட்டும் அரைகுறை விழிப்புடன் இருந்தாள். விவான் தன் நண்பர்களின் உதவியோடு அவர்கள் மூவரை தனது காரில் அழைத்துச் சென்று மூவரையும் லேக்காவின் வீட்டில் பத்திரமாக இறக்கிவிட்டு பின்னர் வீட்டிற்குச் சென்றான்.
மறுநாள் காலை ஆர்யனின் மேன்ஷனில், சூரிய ஒளியின் சூடான கதிர்களில் சஞ்சு கண் விழித்தாள். அவள் திரும்பி கட்டிலில் தனக்கு அருகில் இருந்த வெற்று இடத்தைப் பார்த்தாள். ஆர்யனின் தலையணையைப் பிடித்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “மிஸ் யூ… சீக்கிரம் வா” என்று மெல்ல முணுமுணுத்தவள் அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
குளித்து தயாராகி கீழே டைனிங் ஹாலை அடைந்ததும் புதிய காபியின் நறுமணம் காற்றில் பரவியது, ரஞ்சித் ஒரு கையில் செய்தித்தாளுடனும் மற்றொரு கையில் ஆவி பறக்கும் கோப்பையுடனும் டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
“குட் மார்னிங் அண்ணா ” என்று மென்மையான புன்னகையுடன் சஞ்சு அவனை வரவேற்றாள்.
“குட் மார்னிங் சஞ்சு” என்றபடி ரஞ்சித் காபியை ஒரு மிடறு குடித்தான்.
“ஆபீஸ் போறதுக்கு ரெடியா இருக்கீங்களா?” என்று சஞ்சு கேட்டதும், “ஹ்ம்ம், ஆமா மா, உனக்கு ஏதாவது தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணு இல்ல பாலா கிட்ட சொல்லு. நான் மதியம் வந்துடுவேன் “ என்று ரஞ்சித் கூறினான்.
“கவலைப்படாதீங்க அண்ணா. நீங்க ஆபீஸ்ல இருக்க வேலைய பாருங்க. நான் வீட்ல பாதுகாப்பக இருப்பேன். நீங்க ஏற்கனவே போதுமான பாதுகாப்பு ஏற்பாடு பண்ணி இருக்கீங்க “ என்று சஞ்சு அவன் கவலைப்படாமல் இருக்க சொன்னாள்.
” சரி மா, ஆனா எனக்கு வேலை கொஞ்சம் தான் இருக்கு அதனால நான் சீக்கிரம் வந்துடுவேன் “ என்று சொல்லி எழுந்து நின்று அவள் தலையை தட்டினான்.
இதற்கிடையில், லேக்காவின் வீட்டில், மாயா சோபாவில் எழுந்து உட்கார்ந்து, வலியில் தலையை பிடித்து முனகினாள். அதிகாலை வெளிச்சம் அவள் கண்களுக்கு மிகவும் கூர்மையாக இருந்தது, முந்தைய இரவிலிருந்து அவள் உடல் வலித்தது.
அப்போது, பணிப்பெண் ஒரு தட்டில் எலுமிச்சை பானங்கள் மற்றும் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள்.
மாயா ஒரு டம்ளரை எடுத்து ஜாக்கிரதையாக ஒரு மிடறு குடித்தாள். புளிப்பான பானம் அவளது புலன்களை உலுக்கி, அவள் மயக்க நிலையை சற்று மெதுவாக தளர்த்தியது.
“நாம எப்படி இங்க வந்தோம்?” என்று கேட்ட மாயா, முந்தைய இரவு என்ன நடந்தது என்று நினைவுப்படுத்த முயன்றாள்.
“விவான் நம்மள இங்க கூட்டிட்டு வந்து விட்டு போய் இருக்கான். நாம பாதுக்காப்பா இருக்குறத உறுதி பண்ண அப்புறம் அவன் கிளம்பி இருக்கான் ” என்று லேகா கண்களைக் கசக்கிக் கொண்டே சொன்னாள்.
ரியா கைகளை நீட்டி கொட்டாவி விட்டபடி, “ரொம்ப நல்ல பையன் “ என்றாள்.
“உண்மைய சொல்லணும்னா அவனோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, நேத்து நைட்டு நம்ம சுயநினைவு இல்லாத சந்தர்பத்த அவனுக்கு சாதகமா பயன்படுத்தி இருப்பான் “ என்றாள் லேகா.
” உனக்கு தான் நன்றி சொல்லணும் மாயா. நீ அவன் கூட சமாதானம் ஆனதால நாம பாதுகாப்பாக வீட்டுக்கு வந்துட்டோம். நாம அவன நம்பி வெளிய தாராளமா போகலாம் ” என்று ரியா சோர்வான புன்னகையுடன் சோபாவில் சாய்ந்தாள்.
மாயா எழுந்து நின்று பர்ஸை எடுத்தாதுக் கொண்டு, “ நான் இப்போ கிளம்பனும், உங்கள அப்புறம் பார்க்குறேன் “ என்று சொல்லி அவள் கதவை நோக்கிச் செல்லும் போதே அழைப்பு மணி ஒலித்தது. அவள் கதவை திறந்த போது விவான் சாதாரணமாக புன்னகையுடன் உள்ளே நுழைந்தான். அவன் பார்வை நேராக மாயாவை நோக்கி சென்றது.
” ஹாய் மாயா, நல்லா இருக்கியா ?” என்று அவன் கேட்டதும், ” ஹ்ம்ம், நான் நல்லா இருக்கேன் ” என்று பதில் சொன்னவளின் பார்வை வேறு பக்கம் திரும்பியது. அப்போது வெளியே வந்த ரியா ” விவான், ரொம்ப நன்றி,” என்று சொல்லி புன்னகைத்தாள்.
மெல்லிய புன்னகையை உதிர்த்த விவான், “பரவாயில்ல. இப்போ நீங்க என் friends. உங்கள பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு “ என்று சொன்னான்.
மாயை தயங்கித் தயங்கி பின் மெல்ல “ நன்றி விவான்.” என்று முனுமுனுத்தாள். அதற்கு அவன் மென்மையான முகபாவத்துடன் பார்த்து, “இப்ப கிளம்பறியா ? ” என்று கேட்டான்.
“ஆமா ” என்று பதில் சொல்லி மாயா பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
“உங்க காரை கிளப்ல இருந்து எடுத்துட்டு வந்துட்டேன், உன்னால ஒட்டிட்டு போக முடியுமா இல்ல நான் கூட்டிட்டு போகட்டுமா ? ” என்று விவான் கேட்க, அவள் மறுத்து தலையை அசைத்து, “இல்ல, என்னால சமாளிக்க முடியும்.” என்றாள்.
“அப்போ சரி, பார்த்து போ ” என்று சொல்லிவிட்டு அவளை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை நோக்கித் திரும்பி ” bye ரியா, bye லேக்கா ” என்றான்.
அவன் கதவின் கைப்பிடியை எட்டியபோது, ரியா அவனை அழைத்து ” விவான், மாயா ரெண்டு பேரும் சனிக்கிழம கிளப்புல எங்கள மீட் பண்ணுங்க “ என்று சொன்னாள். விவான் திரும்பி வசீகரப் புன்னகையை உதிர்த்து, “நிச்சயமா” என்றான். ஆனால் மாயா தயங்கியபடி, “நான் முயற்சி பண்றேன்…” என்றாள்.
” இந்த முயற்சி பண்றது எல்லாம் வேணாம். நீயும் கண்டிப்பா வரணும் “ என்று லேக்கா உறுதியாக சொன்னாள்.
மாயா சரி என்று தலை அசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.
*****************************************
முன்னோட்டம்:
“ ஆர்யன் என்னோட favorite நைட் டிரஸ் காணும் தெரியுமா ? “
“ எப்படி காணாம போகும் ? நீ நல்லா தேடி பாரு “
குறிப்பு: இன்னும் ஒரு அத்தியாயத்தில் ஆர்யன் லண்டனில் இருந்து திரும்பி விடுவான்.

1 comment
[…] Chapter 47 […]