Home FamilyChapter 48

Chapter 48

by Siragugal Novels
15 views

ஆர்யன் மீட்டிங் முடிந்து அறைக்கு திரும்பியதும் சஞ்சுவை அழைத்தான். அவன் பெயரைப் பார்த்ததும், முதல் ரிங்கில் சஞ்சு பதில் சொன்னாள்.

“ ஆர்யன், எப்படி இருக்க? சாப்பிட்டியா ? உன்னோட மீட்டிங் எப்படி போச்சு ? அங்க கிளைமேட் எப்படி இருக்கு ? உனக்கு இன்னும் களைப்பா இருக்கா ? நல்லா தூங்கினியா ? ஆர்யன், நான் கேட்டுட்டே இருக்கேன், பதில் சொல்லு ” என்று சஞ்சு அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டதும் ஆர்யன் சிரித்தபடி, “ அடியே ! இவ்ளோ கேள்வி கேட்டா நான் எப்படி பதில் சொல்வேன் ? ஒவ்வொன்னா கேளு பதில் சொல்றேன். நான் நல்லா இருக்கேன் ஸ்வீட் ஹார்ட், இனிமே தான் சாப்பிட போகணும். இங்க கிளைமேட் நல்லா இருக்கு. மீட்டிங் நல்லா போச்சு. நான் நல்லா தூங்கினேன் அதனால இப்போ களைப்பா இல்ல “ என்று ஆர்யன் பதில் சொல்லிவிட்டு மூச்சிரத்தான். அதை பார்த்த சஞ்சு, “என்ன கிண்டல் பண்றீங்களா?” என்று கேட்டு அவனை முறைத்தாள். 

“நிச்சயமா இல்ல ஸ்வீட் ஹார்ட், என்ன பார்த்ததும் நீ இப்படி உற்சாகமா இருக்குறத பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ என்ன எவ்ளோ மிஸ் பண்றனு எனக்கு நல்லா புரியுது “ என்று ஆர்யன் சொன்னான். அப்போது, “நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் ஆர்யன் “ என்று சஞ்சு மெல்ல கிசுகிசுத்தாள்.

” ஐ லவ் யூ டி ஸ்வீட் ஹார்ட், சரி இப்போ சொல்லு, இன்னைக்கு என்ன பண்ண ? “ என்று ஆர்யன் கேட்டதும், “ஒண்ணுமில்ல… நீ இல்லாம ரொம்ப போரடிக்குது. நான் தோட்டத்துல கொஞ்ச நேரம் இருந்தேன், கொஞ்ச நேரம் புக் படிச்சேன் ஆனா எதுலையும் கவனம் போக மாட்டேங்குது “ என்று சஞ்சு வருத்தத்துடன் கூறினாள்.

” இன்னும் கொஞ்ச நாள் தான் மா, நான் சீக்கிரம் திரும்பி வந்துடுவேன் அதுக்கு அப்புறம் உனக்கு கொஞ்சம் கூட போரடிக்காது “ என்றான் ஆர்யன். ஆனால் அவன் வார்த்தையை கேட்ட சஞ்சு, “திரும்பி வந்தா மட்டும் என்ன ? நீ ஆபீஸ் கிளம்பி போயிடுவ, என்னால ஆபீஸ் கூட வர முடியாது அதனால எப்படியும் எனக்கு போரடிக்கும் “ என்று சொல்லி உதட்டை சுளித்தாள்.

” அப்போ நான் வேணும்னா பகல் முழுக்க உன் கூட இருக்கேன் அப்புறம் நைட்டு நீ தூங்கும் போது ஆபீஸ் வேலை பார்க்குறேன் “என்று ஆர்யன் சொல்ல, சஞ்சு புருவத்தை உயர்த்தி, “எப்போ தூங்குவீங்க?” என்று கேட்டாள்.

” நாம பகல் நேரத்த நைட்டாவும், நைட்டு நேரத்த பகலாவும் மாத்திடுவோம் “ என்று சொல்லி ஆர்யன் கண்ணடித்ததும், சஞ்சு தன் வெட்கத்தை மறைக்க கன்னத்தின் உட்புறத்தை கடித்துக் கொண்டு அவனை பார்த்து, “ ஆர்யன், என்னோட favorite நைட் சட்டைய காணும் பா “ என்று சஞ்சு சொன்னதை கேட்ட ஆர்யன், “ அது எப்படி காணாம போகும் ? நீ நல்லா தேடி பாரு “ என்று சொன்னான்.       

” நான் அலமாரி முழுக்க கலைச்சு போட்டு தேடிட்டேன் ஆனா அத மட்டும் காணும் “ என்று சஞ்சு கவலையோடு சொல்ல, ” கவலைப்படாத பேபி, நான் திரும்பி வந்ததும், நாம ஷாப்பிங் போகலாம். உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வாங்கலாம் “ என்று அவளை சமாதாப்படுத்தினான்.

“ஆனா அது எனக்கு ரொம்ப புடிச்சது “ என்று சஞ்சு கூறியதும், “ சரி உனக்கு என்ன வேணும் சொல்லு, நான் வரும் போது வாங்கிட்டு வரேன் “ என்றான் ஆர்யன். அதற்கு சஞ்சு, ” எனக்கு ஆர்யன் மட்டும் தான் வேணும்” என்று கிசுகிசுத்தாள்.

சஞ்சுவின் பதிலை கேட்ட ஆர்யனின் புன்னகை விரிந்தது. ” ஸ்வீட் ஹார்ட், திங்கட்கிழம வரை வெயிட் பண்ணு அதுக்கு அப்புறம் முழுக்க முழுக்க நான் உனக்கு மட்டும் தான் “ என்று பதில் அளித்தான்.

“திங்கட்கிழம வர வெயிட் பண்ணனும் “ என்று சொல்லி அவள் நாடகத்தனமாக பெருமூச்சு விட்டு உதட்டை குவித்தாள். அதை பார்த்த ஆர்யன், “ஏய், அப்படி பண்ணாத, அந்த அழகான குட்டி உதட்டை என்னால இப்போ கடிக்க கூட முடியாது” என்றான் விளையாட்டாக.

” கண்டிப்பா திங்கட்கிழம தான் திரும்பி வருவியா ?” என்று சஞ்சு ஏக்கத்துடன் கேட்க, “ஆமா பேபி, சரி இப்போ போய் தூங்கு. நாளைக்கு போன் பண்றேன். குட் நைட் – ஆர்யன் ட்ரீம்ஸ் “ என்றான் ஆர்யன், அதற்கு சஞ்சு, “குட் நைட் – சஞ்சு ட்ரீம்ஸ் “ என்று சொல்லி அவன் சட்டையை இறுகக் கட்டிக்கொண்டு தூங்க சென்றாள்.

சஞ்சுவிடம் பேசிய பிறகு ஆர்யன் ரஞ்சித்தை அழைத்து, “ரஞ்சித், ஏதாவது நியூஸ் இருக்கா ?” என்று கேட்டான். ரஞ்சித் அதற்கு, “ஆமா, இருக்குங்க சார். நேத்து நைட்டு மாயா ஒரு கிளம்புக்கு போய் இருந்தா. அங்க அவளோட முன்னால் லவர் விவான் இருந்தான். ரெண்டு பேரும் சந்திச்சாங்க. மாயா அவளோட friends கூட சேர்ந்து குடிச்சிட்டு போதையில இருந்த அப்போ அவன் தான் அவங்கள வீட்டுக்கு கார்ல கூட்டிட்டு போனான். அவன் மறுபடியும் மாயா கூட சேர முயற்சி பண்றான். அவங்களோட போட்டோ என்கிட்ட இருக்கு “ என்று சொன்னான். அதை கேட்ட ஆர்யன், “ நல்லது ரஞ்சித், அவங்கள கண்காணிச்சிட்டே இரு. வேற ஏதாவது நியூஸ் இருக்கா ? “ என்று கேட்டான்.

” நம்ம ஆளுங்க அவங்கள தொடர்ந்து கண்காணிக்குறாங்க சார். இப்போ வேற எந்த தகவலும் இல்ல “ என்றான் ரஞ்சித். சரி என்று சொல்லி ஆர்யன் அழைப்பை துண்டித்தான்.

இதற்கிடையில், விவானின் அபார்ட்மெண்டில், அவன் கையில் ஒரு கிளாஸ் விஸ்கியுடன் சோபாவில் அமர்ந்திருந்தான். அவனது நண்பர்கள் சிலர் அவனுடன் இருந்தனர்.

“ விவான், நீ மறுபடியும் மாயா கூட சேர முயற்சி பண்றியா ? “ என்று அவன் நண்பன் ஒருவன் கேட்டதும், விவான் ஏளனமாகச் சிரித்தான், “அப்படியெல்லாம் இல்ல. இப்போ நாங்க வெறும் friends மட்டும் தான் “ என்று சொன்னான்.

“ திடீர்னு ஏன் இந்த முயற்சி ? “ என்று அவன் நண்பன் மீண்டும் கேட்க, விவானின் பார்வை இருண்டது. ” எனக்கு அவள பழிவாங்கணும். என்ன விட அதிகமா பணம் இருக்க ஒருத்தன பார்த்த உடனே என்ன கழட்டி விட்டு போனவள நான் பழி வாங்குவேன் “ என்று சொன்னான்.

விவானின் வார்த்தையை கேட்ட அவனது மற்றொரு நண்பன் புருவத்தை உயர்த்தி, ” சரி என்ன திட்டம் ? என்ன செய்ய போற ? ” என்று கேட்டான்.

” நான் இன்னும் முடிவு பண்ணல ஆனா எதுவும் செய்றதுக்கு முன்னாடி, முதல் படியா அவளோட நம்பிக்கைய ஜெயிக்கணும் “ என்று விவான் சொன்னதும், “அப்போ இந்த நல்லவனா இனிக்க இனிக்க பேசுறது எல்லாம் நடிப்பு தானே ? “ என்று அவன் நண்பன் கேட்டான்.

விவான் ஆம் என்று சொல்ல, “ என்னவோ பண்ணு ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இரு, அவ ரொம்ப மோசமானவ “ என்று அவன் நண்பன் அறிவுரை கூறினான்.  விவான் தலை அசைத்து, “ அத நான் பாத்துக்குறேன், இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் “ என்று கூறிய விவான், “ மாயா, ரெடியா இருடி என்னோட முன்னால் காதலி. என்ன ஏமாத்தி, கழட்டிவிட்டு பெரிய தப்பு பண்ணிட்ட, அதுக்கு நீ அனுபவிச்சே ஆகணும் “ என்று மனதில் வஞ்சகமாக நினைத்தான்.

ஆர்யன் தங்கள் லண்டன் கிளைன்ட் உடன் தொடர்ச்சியான மீடிங்கில் மூழ்கி இருந்தான். இருப்பினும் அவன் மனம் அடிக்கடி சஞ்சுவை பற்றியே நினைத்தது. வேலைக்கு இடையே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறு இடைவேளையோ, மதிய உணவு இடைவேளையோ, விவாதங்களுக்கிடையேயான இடைவெளியோ அவளிடம் பேசுவதை உறுதி செய்தான்.

இந்த உடல் ரீதியாக இருவருக்கும் இடையே இருந்த பிரிவு அவர்களின் உணர்ச்சி ரீதியான தொடர்பை இன்னும் தீவிரப்படுத்தியது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் வாடி தவித்தனர். சிறு இடைவெளியின் போது அழைப்புகளில் பரிமாறிக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு “மிஸ் யூ” மற்றும் “லவ் யூ” அவர்களின் ஏக்கத்தை இன்னும் தாங்க முடியாததாக ஆக்கியது.

சஞ்சுவைப் பொறுத்தவரை, ஆர்யனிடம் இருந்து வந்த அழைப்புகள் ஒரு உயிர்நாடியாக இருந்தன, இருப்பினும் ஆர்யன் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை எதுவும் நிரப்பவில்லை. அவனது அக்கறை, அரவணைப்பு, அவன் அவளை அணைக்கும் விதம், முத்தமிட்டுவது, அவளைத் தொடும் விதம் என அனைத்தையும் நினைத்து ஏங்கினாள். அவனது காட்டுத்தனமான ரொமான்ஸ், அவர்களின் கிசுகிசுப்பான ரொமான்ஸ் பேச்சுக்கள், அவர்கள் ஒன்றாக அணைத்தபடி பார்த்த திரைப்படங்கள், தோட்டத்தில் நடப்பது, பால்கனியில் காலை காபி, ஒன்றாக குளிப்பது, அவன் மீது படுத்து அவள் தூங்கும் விதம், அவன் சட்டையைப் பிடித்து, நெற்றியில் முத்தமிடுவது என ஒவ்வொரு விவரமும் அவளை மனதை வாட்டியது. அவனது அதீத காதல் அவளைக் கெடுத்து, சோம்பேறியாக்கி, அவளை அவனுக்கு முற்றிலும் அடிமையாக்கி விட்டது.

அவர்களின் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவர்களின் பகிரப்பட்ட நினைவுகள் எதிரொலித்தன. அவனது சட்டையைப் பிடித்து அழுது கொண்டே அடிக்கடி அவனது இருப்பை அவள் உணர்ந்தாள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு வருடம் போல உணர்ந்தாள்.

சனிக்கிழமை காலை அவள் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள் ஆனால் அவளுடைய மனம் வேறெங்கோ இருந்தது. அவள் காலை உணவு கூட சாப்பிடவில்லை.

அறைக்குள் நுழைந்த ரஞ்சித்தின் பார்வை சஞ்சுவின் மீது விழுந்தது.

“சஞ்சு” என்று அவன் மெதுவாக அழைத்ததும், தனது எண்ண அலைகளில் இருந்து விடுபட்டு, “ சொல்லுங்க அண்ணா “ என்றாள் சஞ்சு.

” நீ ஏன் இன்னும் காலையில சாப்பிடாம இருக்க ? “ என்று ரஞ்சித் கேட்க, “ எனக்கு பசிக்கல அண்ணா “ என்று கவலையால் சோர்ந்து பதில் சொன்னாள் சஞ்சு.

“சஞ்சு, நீ இப்படி சாப்பிடாம இருந்தா, சார் திரும்பி வந்ததும் என்ன தான் சத்தம் போடுவாரு. நான் உன்ன சரியா பாத்துக்கலனு என்ன திட்டுவாரு. அது மட்டும் இல்ல திங்கட்கிழம பார்ட்டியில நீ தெம்பா, உற்சாகமா இருக்கனும். இப்படி சரியா சாப்பிடாம இருந்தா நீ மட்டும் தான் பலவீனமா இருப்ப “ என்று சொல்லி ரஞ்சித் பெருமூச்சு விட்டான்.

அவன் வார்த்தையை கேட்ட சஞ்சு, “ காலையில எவ்ளோ அட்வைஸ் பண்றீங்க. உங்க சார் டேப் ரெகார்டர் உங்க கிட்ட கொடுத்துட்டு போயிட்டாரா ? “ என்று கேட்டு சஞ்சு கிண்டல் செய்தாள் அதற்கு ரஞ்சித் அவளிடம், “ நான் அட்வைஸ் பண்ணல மா. சார் சொன்னதால இல்ல எனக்கு உன் மேல அக்கறை இருக்கு அதனால தான் சொல்றேன் “ என்று கூறினான்.

அவள் உதட்டில் மெல்லிய புன்னகையுடன் அவனை நோக்கித் திரும்பி. “தெரியும் அண்ணா, நீங்க சாப்பிட்டீங்களா? வாங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடலாம் “ என்று அவனை அழைத்தாள்.

இருவரும் சேர்ந்து டைனிங் ஹாலை அடைந்து சாப்பிட அமர்ந்தனர்.

” பார்ட்டி ஏற்பாடு எல்லாம் எப்படி போகுது ? “ என்று கேட்டு சஞ்சு இருவருக்கும் பரிமாறினாள்.

” நான் இன்னிக்கு ஆபீஸ் போக மாட்டேன். ஈவென்ட் மேனேஜர வர சொல்லி இருக்கேன். டெகரேஷன் பத்தி பேச வேண்டி இருக்கு “ என்று பதில் சொன்னான் ரஞ்சித். அதற்கு சஞ்சு அவனிடம், “நான் ஏதாவது உதவி செய்யட்டுமா?” என்று கேட்க, “ இல்ல சஞ்சு. நான் கிட்டத்தட்ட எல்லாத்தையும் முடிச்சிட்டேன்  ஆனா உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு, நான் செய்றேன் ” என்று ரஞ்சித் சொன்னதும், அவள் ஒரு நொடி தயங்கி, பிறகு அவனிடம், “அண்ணா, எனக்கு கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டி இருக்கு ஆனா ஆர்யன் என்ன வீட்ட விட்டுவெளிய போக கூடாதுனு கண்டிப்பா சொல்லி இருக்காரு அதனால நீங்க எனக்காக அதெல்லாம் வாங்கிட்டு வரீங்களா ? “ என்று கேட்டாள்.

” சொல்லுமா கண்டிப்பா வாங்கிட்டு வரேன் “ என்று ரஞ்சித் சொல்ல, “ ஆனா உங்க சாருக்கு தெரிய கூடாது “ என்றாள் சஞ்சு.

அவள் என்ன திட்டம் போடுகிறாள் என்று புரிந்து கொண்ட ரஞ்சித், “ சரி மா, நீ சொல்லு, நான் சாயங்காலம் வாங்கிட்டு வரேன் “ என்று கூறினான்.

அவள் கண்களில் நன்றியுடன் அவனைப் பார்த்தாள். அன்று காலையில் முதன்முறையாக அவள் நெஞ்சின் கனம் லேசானது.

இதற்கிடையில் மாயா வேறு ஒரு உலகத்தில் இருந்தாள். அவளது தோழிகள் அவளை ஷாப்பிங் செய்ய அழைத்திருந்தனர், அதைத் தொடர்ந்து கிளப்பில் ஒரு பார்ட்டியும் ஏற்பாடு செய்திருந்தனர். அவள் லேக்காவின் வீட்டிற்கு சென்றதும், மூவரும் சேர்ந்து மாலுக்குச் சென்றனர்.

பல மணி நேர இலக்கற்ற ஷாப்பிங்கிற்குப் பிறகு, அவர்கள் ஒரு நட்சத்திர உணவகத்தில் உணவருந்திவிட்டு ஓய்வெடுக்க லேகாவின் வீட்டிற்குத் திரும்பினர்.

” ஹே, இன்னைக்கு நைட்டு கண்டிப்பா பார்ட்டிக்கு போகனுமா ? “ என்று மாயா சோபாவில் கால்களை நீட்டியபடி கேட்டாள்.

” ஆமா நிச்சயமா போறோம் மாயா, நாளைக்கு ஞாயிற்றுக்கிழம, நாம நல்லா தூங்கலாம் “ என்று பதில் சொன்னாள் லேக்கா.

” அத விடு, ஆர்யன சம்மதிக்க வைக்குறதுல எந்த அளவுக்கு ஜெயிச்சு இருக்க ? “ என்று ரியா கேட்டதும், “சீக்கிரமே நாங்க பிசினஸ் பார்ட்னர் ஆகப் போறோம். அதுக்கு அப்புறம் அவர என் பக்கம் இழுக்க தேவையான நேரம் எனக்கு கிடைக்கும் “ என்றாள் மாயா.

” ஆனா அவர் ஏன் உன்ன பார்க்க கூட மாட்டேங்குறாரு ? “ என்று ரியா குழப்பத்துடன் கேட்க, ” அந்த லோ கிளாஸ் பொண்ணு ஒருத்தி இருக்கா. ஆர்யன் அவ மேல பைத்தியமா இருக்காரு அதனால தான் என்ன பார்க்க கூட மாட்டேங்குறாரு “ என்று எரிச்சலுடன் சொன்னாள் மாயா.

“யாரு அது ?” என்று லேக்கா கேட்டதும், “ அவரோட பி.ஏ. “ என்று ” என்று மாயா உமிழ்ந்தாள்.

“ அவ எப்பவும் அவர் கூடவே இருக்கும் போது நீ எப்படி அவர் கூட இருக்க முடியும் ? “ என்று லேக்கா கேட்க, “அப்பா ஏற்கனவே ஆர்யன் கிட்ட பேசி இருக்காரு. நாங்க பார்ட்னர்ஷிப் கையெழுத்து போட்ட அப்புறம் அவ அவர்கிட்ட வேலை செய்ய மாட்டா “ என்று மாயா கூறினாள். ” அப்போ, நீ எப்போ வேணும்னாலும், எங்க வேணும்னாலும் ஆர்யன் கூட இருக்கலாம் “ என்று சொல்லி  சிரித்த லேக்கா, “ஜாக்கிரதை மாயா, போன  முறை நீ அவருக்கு போதை மருந்து கொடுக்க முயற்சி பண்ணி அது பெரிய பிரச்சன ஆயிடுச்சு “ என்று எச்சரித்தாள்.

“இந்த முறை எதுவும் என்ன தடுக்காது, எந்த தப்பும் நடக்காது. எனக்கும், ஆர்யனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறதா அப்பா சத்தியம் பண்ணி இருக்காரு “ என்று சொன்னவள் இருக்கையில் இருந்து எழுந்து, “சரி, வாங்க இன்னிக்கு நைட்டு போட டிரஸ் முடிவு பண்ணலாம்” என்று உற்சாகமாக சொன்னாள்.

அவர்கள் கிளப்புக்கு ஏற்றது போல குட்டையான ஆடைகளை அணிந்து கிளப்புக்கு சென்றனர், அங்கு ஏற்கனவே காத்திருந்த விவான் அவர்களை உற்சாகமாக வரவேற்றான்.

லேசான இரவு உணவிற்குப் பிறகு, அவர்கள் மதுபான விடுதிக்குச் சென்றனர், கையில் பானங்களுடன் விளையாட்டுத்தனமான கேலிகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் நடனம் ஆட தொடங்கினர். ரியாவும், லேக்காவும் நடன தளத்தில் இருந்த ஆண்களுடன் நடனம் ஆட தொடங்கினர்.

மாயா நடனமாடும் போது, வேண்டுமென்றே யாரோ அவளை உரசுவதை உணர்ந்தாள். அவள் திரும்பிப் பார்த்த போது சந்தேகப்படும்படி யாரும் இல்லை. அவள் மது அருந்தி இருந்தது தான் காரணம் என்று நினைத்து அவள் அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர், அவள் பாத்ரூமுக்கு சென்ற போது, நான்கு பேர் கொண்ட ஒரு குழு அவளை தடுத்து நிறுத்தினர்.

“ஏய், நீங்க யாரு ? எனக்கு வழி விடுங்க ” என்று மாயா கோவமாக சொன்னாள் ஆனால் அவர்களுள் ஒருவன், “ ஹாய், அழகி, இன்னைக்கு நைட்டு எங்க கூட வரியா ? “ என்று அவளை கேட்டான். அவன் வார்த்தையை கேட்டு கோவமடைந்த மாயா, “முட்டாள், என் கிட்ட பிரச்சன பண்ணாத, நான் யாருனு தெரியுமா ? “ என்று சீறினாள்.

” நீ யாருனு ரூம்ல தெரிஞ்சுக்கலாம், டார்லிங் ” என்றான் இன்னொருவன்.

அவள் எதிர்வினையாற்றுவதற்குள், அவர்கள் அவளைப் பிடித்தனர். ஒருவான் அவள் ஆடையை இழுத்து ஆடையின் கையை கிழித்ததும், மாயா அலறினாள்.

விவான் அங்கு விரைந்து அவர்களை தாக்க ஆரம்பித்தான். அவனும் அடி வாங்கி மூக்கில் ரத்தம் வடிந்ததும் இருப்பினும் அவர்களை விரட்டியடித்தான். தரையில் அழுது கொண்டிருந்த மாயாவைப் பார்த்து மெதுவாக எழுந்திருக்க உதவினான்.

“மாயா, வா. எழுந்திரு. இங்கிருந்து கிளம்பலாம்.” என்று மெல்லிய குரலில் சொன்ன விவான், அவன் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டைக் கழற்றி அவளது கிழிந்த ஆடைக்கு மேல் போர்த்தினான்.

“விவான்…” என்று மாயா சிணுங்கினாள், அவள் குரல் நடுங்கியது. அதற்கு அவன், “ஷ்ஷ்ஷ்ஷ் ஒண்ணும் ஆகல, சரியா? வா இங்க இருந்து போகலாம் ” என்று முணுமுணுத்தபடி அவளை அருகில் இழுத்தான்.

ஒரு நொடியையும் வீணாக்காமல் அவன் லேக்காவையும்,  ரியாவையும் அழைத்தான். அவர்கள் மூவரும் கூட்டத்தினூடே நகர்ந்து மாயாவைப் பாதுகாத்துக் கொண்டு கிளப்பை விட்டு விரைவாக வெளியேறினர்.

லேகாவின் வீட்டிற்குத் திரும்பியதும், மாயா இன்னும் நடுங்கியபடியே சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள். விவான் அவளருகில் அமர்ந்து ஒரு டம்ளர் தண்ணீரை நீட்டினான்.

“நீ யாருனு அவங்களுக்கு தெரியாது போல அதனால இப்படி பண்ணி இருக்காங்க. நீ கொஞ்சம் அமைதியா தூங்கு “ என்று விவான் சொன்னான்.  

“இப்ப நீ பத்திரமா இருக்க, நீ தைரியசாலி மாயா. இப்படி உடைஞ்சு இருக்காதா ” என்று அவளை அணைத்துக் கொண்டாள் லேகா.

மாயா கண்கள் பனிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். “தேங்க்யூ விவான்.” என்று முனுமுனுத்தாள் அதற்கு விவான் அவளிடம், “நீ என் friend மாயா. நமக்குள்ள நன்றி எல்லாம் சொல்லக் கூடாது. நீ தைரியமா சிரிக்குறத பார்த்தா நான் சந்தோஷப்படுவேன் “ என்று விவான் சொன்னதும், அவள் மெல்லிய புன்னகையை உதிர்த்து, “நான் இப்போ நல்லா இருக்கேன் விவான். ” என்று சொன்னாள்.

“நல்லது.” என்று சொல்லி விவான் எழுந்து நின்று, ” அப்போ நான் கிளம்பறேன். நீங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க ” என்று சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றான்.

அவன் சென்ற பிறகு, பெண்கள் தங்கள் இரவு ஆடைகளை மாற்றிக்கொண்டு படுக்கைக்கு சென்றனர்.

“விவான் ரொம்ப நல்லவன் ” என்று லேக்கா தலைமுடியைக் கோதியபடியே சொன்னாள். அதற்கு ரியா, “ஆமா, அவன் சரியான நேரத்துக்கு வந்ததுக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் “ என்று சொன்னாள்.

” நான் அப்பா கிட்ட சொல்லி அவனுங்கள கண்டுபுடிக்க சொல்றேன். அவனுங்கள சும்மா விட மாட்டேன் “ என்று மாயா முஷ்டியை மடக்கிக் கொண்டாள். அவள் சொன்னதை கேட்டு, “உனக்குப் பைத்தியமா?” என்று லேக்கா திடுக்கிட்டு அவளை நோக்கித் திரும்பி,  “திங்கட்கிழமை நீ ஆர்யன் கூட பார்ட்னர் ஆக போற. இப்போ இதுனால எதாவது பிரச்சன வந்தா என்ன செய்றது ? “ என்று கேட்டாள்.

” லேக்கா சொல்றது சரி தான் மாயா. இத இப்படியே மறந்துடு. உன்னோட வாழ்க்கையில முக்கியமான நாள் திங்கட்கிழம, அதுல கவனம் செலுத்து “ என்று ரியா எச்சரித்தாள்.

மாயா பெருமூச்சு விட்டு, ” ஹ்ம்ம், நீங்க சொல்றது சரி தான் “ என்றாள்.

****************************************

முன்னோட்டம்:

“ஹாய் ஸ்வீட் ஹார்ட்,  என் பரிசு உனக்கு புடிச்சு இருக்கும்னு நம்புறேன். அந்த புடவை நான் செலெக்ட் பண்ணேன், அந்த நகை எல்லாம் என் அம்மாவோடது. என் வாழ்க்கையில வர போற பொண்ணுக்கு அத அவங்க கொடுக்க ஆசைப்பட்டாங்க. சஞ்சு, நீ என் வாழ்க்கையில மட்டும் வரல, என் மனசுலயும், உயிர்லையும் வந்து கலந்துட்ட அதனால உனக்கு சொந்தமானது உன்கிட்ட வந்து சேர்ந்துடுச்சு “

 

 

 

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!