Home FamilyChapter 52

Chapter 52

by Siragugal Novels
12 views

அறைக்குள் நுழைந்த ஆர்யன் தான் கண்ட காட்சியால் வாயடைத்துப் போய் நின்றான். மெழுகுவர்த்திகளின் கதகதப்பான வெளிச்சத்தில் அறை பிரகாசித்தது. புதிய மலர்களால் காற்றில் நறுமணம் வீசியது. ஆனால் உண்மையிலேயே அவனுடைய கவனத்தை ஈர்த்தது அவர்களுடைய படுக்கைக்கு நேர் எதிரே சுவரில் மாட்டி இருந்த அவர்களுடைய திருமண போட்டோ தான். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்கள் எழுந்திருக்கும் போது முதலில் இருவரும் அந்த போட்டோவை பார்க்கும்படி இருந்தது.

சஞ்சு கதவை மெதுவாக சாத்திவிட்டு பின்னாலிருந்து அவனை அணைத்து, “ சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா என் ஆச புருஷா ?” என்று மெல்லிய குரலில் புன்னகையுடன் கேட்டாள்.

ஆர்யன் மெதுவாக அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பி அவள் கைகளைப் பற்றி, அவளது விரல்களை தன் உதடுகளுக்கு உயர்த்தி முத்தமிட்டான்.

” ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு, பெஸ்ட் பரிசு பொண்டாட்டி, ஐ லவ் யூ.” என்று சொல்லி ஆர்யன் அவளை தன் முன்னால் இழுத்து இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். சஞ்சு உடனே அவன் மார்பில் மென்மையாக முத்தமிட்டாள். அவளை தன்னுடன் அழைத்துச் சென்று, சஞ்சுவை மடியில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து அவள் கழுத்தில் ஒரு முத்தத்தை வைத்தான்.

” நேத்து தான் நடந்த மாதிரி இருந்துச்சு ஆனா நாம ஒரு வருஷம் கடந்து வந்துட்டோம் பேபி “ என்று ஆர்யன் முணுமுணுத்ததும், “இது முழுமையான பேரின்பம்” என்று சஞ்சு அவன் தோளில் தலை சாய்த்தாள்.

“இனி தாலிய நீ மறைக்க வேண்டிய அவசியம் இல்ல. ஸாரி மா, உன்ன ஒரு வருஷம் வெயிட் பண்ண வெச்சுட்டேன், ஆனா நான் உனக்கு ஒரு அந்நியனா இருந்த அப்போ உன்ன என் மனைவினு அறிமுகம் பண்ணி இருந்தா இவ்ளோ சந்தோஷம் இருந்திருக்காது ஆனா இப்போ, நீ என்ன லவ் பண்ற, நாம சந்தோஷமா இருக்கோம். நீ எவ்ளோ சந்தோஷமா இருக்கனு உன் கண்ணு சொல்லுது “ என்று மெல்ல சொன்னான் ஆர்யன்.

” நீ சொன்னது நிஜம் தான், நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எல்லாரும் இப்போ என்ன ஆர்யானோட மனைவியா பார்க்க போறாங்க, நான் மிசஸ் ஆர்யன் சைதன்யா “ என்று சொல்லி சஞ்சு தனது தாலியை வெளியே எடுத்து பெருமையுடன் முத்தமிட்டாள்.

“நீ எப்பவும் போல அழகா இருக்க ” என்று ஆர்யன் சொல்ல, “ கடலைப்போடுறத நிறுத்துங்க மிஸ்டர், நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா ? நான் தி கிரேட் ( the great ) ஆர்யன் சைதன்யாவோட மனைவி.” என்று சஞ்சு கூறினாள். அவள் பெருமை பேசுவதை பார்த்து, ” ஒஹ்ஹ அப்படியா ? அப்போ எனக்கு கொஞ்சம் சிபாரிசு பண்ண முடியுமா மிஸஸ் ஆர்யன்?” என்று கேட்டு ஆர்யன் புன்னகைத்தான்.

” என்ன வேணும் சொல்லுங்க. நான் முயற்சி செய்றேன்.” என்று சஞ்சு சொன்னதும், “நான் என் பொண்டாட்டிய முழுசா பார்த்து, ஆராதன பண்ணி ஒரு வாரம் ஆகுது, அவ்ளோ ஆசைய அடக்கி வெச்சுருக்கேன் அதனால அவள எனக்கு கொஞ்சம் தனிப்பட்ட நேரம் கொடுக்க சொல்ல முடியுமா?” என்று ஹஸ்கி குரலில் கேட்டான். அதற்கு சஞ்சு, “அவ ஏற்கனவே உங்களுக்கு நேரத்த ஒதுக்கி தயாரா இருக்கானு நினைக்கிறேன், மிஸ்டர் ஆர்யன்.” என்று சொல்லி அவன் கன்னத்தை விரல் கொண்டு வருடினாள்.

அவள் பதிலை கேட்ட உடனேயே அவளை சோபாவில் புரட்டி போட்டு, அவள் உதடுகளை பசியுடன் முத்தமிட்டான். இருவருக்கும் மூச்சு வாங்கிய பிறகே அவன் பின்வாங்கி அவளது சிவந்த முகத்தைப் பார்த்து, அவள் கழுத்து வளைவில் தன் முகம் புதைத்து அவள் வாசனையை முகர்ந்தான்.

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன், உன்னோட வாசனைய ரொம்ப மிஸ் பண்ணேன் “ என்று கிசுகிசுத்தவன், அவள் கழுத்தின் தோலை மென்மையாக கடித்து, ஒரு அடையாளத்தை விட்டு பிறகு அதை மென்மையாக முத்தமிட்டு வலியை தனித்தான்.

“ஹேப்பி பர்த்டே ஸ்வீட் ஹார்ட், இந்த அடையாளம் உன் பிறந்த நாளுக்கு நான் கொடுத்த பரிசு. இப்போ, ரெண்டாவது பரிசுக்கான நேரம், என் கூட வா” என்று சொல்லி அவளை தன் இரு கைகளில் தூக்கி கண்ணாடி முன் நிற்க வைத்து விட்டு, அவன் அணிந்திருந்த டையை அவிழ்த்து அவள் கண்களைக் கட்டினான். பின்னர், அவள் அணிந்திருந்த நகை ஒவ்வொன்றாக கழற்றினான்.

சில நொடிகளில், அவள் கழுத்தில் குளிர்ச்சியாக ஏதோ ஒன்று நழுவுவதை உணர்ந்து, “ஆர்யன், இது சில்லுனு இருக்கு, என்ன இது ? “ என்று அவள் கேட்டதும், அவன் டையைக் கழற்றினான், சஞ்சு கண்கள் திறந்த போது, அவள் கழுத்தில் “AS” என்ற எழுத்துகளுடன் கூடிய ஒரு பிளாட்டினம் செயின் இருப்பதை பார்த்து ஆச்சரியத்தில் அவனை கட்டி அனைத்துக் கொண்டாள்.

“ஆர்யன், ஐ லவ் யூ, ரொம்ப தேங்க்ஸ்.” என்று அவள் சொல்லும் போது அவளது மகிழ்ச்சி அறையை நிறைத்தது, அவளது பிரகாசமான முகத்தைப் பார்த்து ஆர்யன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அப்போது சஞ்சு அணைப்பில் இருந்து பின்வாங்கி, ” இப்போ என்னோட பரிசுக்கான நேரம்,” என்று சொல்லி, அவளும் அவன் கண்களைக் கட்டினாள். சில நொடிகளில் அவன் தனது மணிக்கட்டில் குளிர்ச்சியான ஸ்பரிசத்தை உணர்ந்து அவனது முகத்தில் ஒரு தெரிந்த புன்னகை தவழ்ந்தது. டை கழற்றப்பட்டதும், அவன் ஆச்சரியத்துடன் தன் மணிக்கட்டில் இருந்த “AS” முதலெழுத்துக்கள் கொண்ட ஒரு பிளாட்டினம் பிரேஸ்லெட்டை பார்த்து, “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, பொண்டாட்டி, இத எப்படி செலக்ட் பண்ண ? அதாவது நான் செலக்ட் பண்ணின மாதிரியே இருக்கு.” என்று ஆர்யன் கூறினான்.

” இது நாம ஒரே மாதிரி நினைக்குறோம்னு அர்த்தம், மிஸ்டர் ஹஸ்பண்ட்.” என்று சஞ்சு சொன்னதும் ஆர்யன் புன்னகைத்து, “இன்னைக்கு நம்ம கல்யாண நாள், அதனால நாம கொண்டாடாம விட்ட முதல் இரவ இப்போ ஆரம்பிக்கணும்னு நினைக்குறேன் “ என்று சொல்லி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு தன் உடையை மாற்ற அலமாரி இருக்கும் அறைக்கு சென்றான்.

ஆர்யன் இரவு உடை அணிந்து  வெளியே வந்த போது, சஞ்சு பால்கனியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொள்ள, அவள் திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள்.

ஒன்றாக, இருவரும் அறைக்கு திரும்பியதும், ஆர்யன் குனிந்து அவள் கன்னங்கள், மூக்கு, கண் மற்றும் உதட்டின் ஓரத்தில்  மென்மையாக முத்தமிட்டான். பிறகு அவளது உதடுகளில் தன் உதடுகளை மென்மையாக வருடியபடி மென்மையாக முத்தமிட்டான்.

சஞ்சு அவனுடைய தலைமுடியைப் பிடித்து அவனை நெருக்கமாக இழுத்து ஆழமான, உணர்ச்சிகரமான முத்தத்துடன் பதிலளித்தாள். முத்தத்தின் நடுவே அவன் மகிழ்ச்சியுடன் மெல்லிய முனகல் ஒன்றை வெளியிட்டான். அவளுடைய வெற்று இடுப்பை அவன்  கிள்ளியதும் அவள் மூச்சிரைத்தாள். அந்த சந்தர்பத்தை பயன்ப்படுத்தி ஆர்யன் முத்தத்தை ஆழப்படுத்தினான். அவனது விரல்கள் அவளது வெற்று இடுப்பில் வட்டங்களை வருடின.

நுரையீரல் காற்றுக்காக தவித்த போது தான் அவர்களின் உதடுகள் பிரிந்தன. ஆர்யன் சஞ்சுவின் கன்னங்களிலும், தாடை வழியாகவும், கழுத்து வரையிலும் ஈர முத்தங்களை பதித்தான். அவன் மெதுவாக அவள் காது மடலை கவ்வி லாவி அவளை நடுங்க வைத்தான், அவன் விரல்கள் மேலே சென்று அவளது சேலையின் முந்தானையை விடுவித்ததும் அது உடனடியாக கீழே நழுவியது.

ஒன்றும் பேசாமல் ஆர்யன் அவளைத் தூக்கி மலர்களால்  அலங்கரித்த படுக்கையில் மெல்லப் படுக்க வைத்தான். ஒரே வேகத்தில் தன் டி-ஷர்ட்டை கழற்றி எறிந்தவன், மீண்டும் அவள் உதடுகளை ஆழமாக முத்தமிட்டான். மெல்ல மெல்ல அவனது முத்தங்கள் கீழ்நோக்கி அலைந்தன, முதலில் அவள் தொண்டையில் துடிக்கும் நாடித்துடிப்பு, பின்னர் அவளது மார்பு மற்றும் அவளது பிளவு. அவன் உதடுகள் அவளது நாபியை வரை சென்றன.

அப்போது தான் சஞ்சு தன் இடுப்பைச் சுற்றி ஒரு குளிர்ச்சியை உணர்ந்தாள். ஆர்வத்துடன் தலையை நிமிர்த்தியவள் ஒரு மெல்லிய, நேர்த்தியான தங்க செயின் அவளுடைய இடுப்பில் இருப்பதை கண்டாள். ஒரு சிறிய ஹார்ட் டாலர் ஒன்றும் தொங்கிக் கொண்டிருந்தது, ஆர்யனின் உதடுகள் அவளது இடுப்பில் இருந்த செயினை முத்தமிடுவதை பார்த்தாள் சஞ்சு.

” இது என்னோட ரொம்ப நாள் ஆசை, உன்னோட இந்த அழகான இடுப்ப பார்க்குற அப்போலாம் ஒரு செயின் போட்டு பார்க்க ஆச. இது உன் இடுப்ப இன்னும் கவர்ச்சியா காட்டுது. என்னோட கல்யாண நாள் பரிசு புடிச்சுருக்கா ? “ என்று ஆர்யன் கேட்டதும், அவள் அவனை நெருங்கி அவன் நெற்றியில் இருந்த கலைந்த முடியை ஒதுக்கிவிட்டு, முத்தமிட்டாள், அதைத் தொடர்ந்து அவன் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டு, ” ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று கிசுகிசுத்தாள்.

அவன் புன்னகைத்தபடி அவள் கால்களுக்கு நகர்ந்து அவள் தொடைகளிலும், கணுக்கால்களிலும் முத்தங்களை பதித்தான். பின்னர் அவள் கால்களைச் சுற்றி ஒரு ஜோடி தங்கக் கொலுசுகளை அணிவித்து அவளை மேலும் ஆச்சரியப்படுத்தினான். ஆர்யன் அதோடு மட்டும் முடிக்கவில்லை, அவளது கால்விரல்களை மென்மையாக முத்தமிட்டான், பின்னர் கால் விரலில் மெட்டி அணிவித்து அவற்றில் மற்றொரு முத்தத்தை பதித்தான்.

” ஐ லவ் யூ பொண்டாட்டி “ என்று சொன்ன போது அவனது குரல் தாழ்ந்ததாகவும், காதல் நிறைந்ததாகவும் இருந்தது.

சஞ்சு அவனை இழுத்து தன் மார்போடு அனைத்து அவன் முகத்திலும், வெற்று உடலிலும் முத்த மழையை பொழிந்து, “ ஐ லவ் யூ ஆர்யன் “ என்று சொன்னாள்.

“நீ நடக்கும் போது உன் கொலுசுல இருந்து வர சத்தம் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று ஆர்யன் ஒரு அன்பான புன்னகையுடன் சொல்லி, அவளை மெதுவாக அவள் வயிற்றில் புரட்டி அவள் முதுகில் முத்தமிட ஆரம்பித்தான், ஒவ்வொரு முத்தமும் ஈரமாகவும் சூடாகவும் இருந்தது. அவள் தலைமுடியை ஒதுக்கி அவள் கழுத்தின் பின்புறத்தை வருடினான். அவளை மீண்டும் தன் முகத்துக்கு நேருக்கு நேர் திருப்பி, அவன் கைகள் அவளது ரவிக்கை மற்றும் ப்ராவின் கொக்கிகளை மெதுவாக அவிழ்த்து அவற்றுக்கு விடுதலை அளித்தான்.

அவனது ஸ்பரிசம் தீவிரமாக, அவன் முத்தமிட்டு அவளது தோலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆராய்ந்தான், அவளுடைய நகங்கள் அவன் தோள்களில் பதிந்து அவளது காதலை அவனுக்கு அடையாளப்படுத்தின.

வெளியே, மழை பெய்யத் தொடங்கியது, ஆனால் அறைக்குள், அவர்களுக்கு இடையிலான வெப்பம் அதிகரித்தது. ஆடைகள் மறைந்தன, மூச்சுகள் ஆழமாயின, முனகல்கள் காற்றை நிரப்பின. புயல் வீசிய அந்த இரவில் அவன் அவளது உடலை ஆராதனை செய்த அவனது கைகளும் உதடுகளும் அவள் உடலில் ஒரு அங்குலம் கூட தீண்டாமல் விடவில்லை. அவளுடைய விரல்கள் அவனுடைய லேசான ரோமங்கள் நிறைந்த தோலின் மீது தடவி, அவனுக்குள் நடுக்கத்தை அனுப்பின.

அவர்களின் உடல்கள் காம அலைகளில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து கச்சிதமான ஒத்திசைவில் அசைந்தன. ஒவ்வொரு முறையும் அவள் இன்பத்தில் அவன் பெயரை உச்சரிக்கும்போது, அவன் அவளை மேலும் விரும்பினான்.

வியர்வையில் நனைந்த அவர்களுடைய உடல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு, மென்மையான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பளபளத்தன. முடிவில்லாத முத்தங்களினால் வெளிறிப் போய் வீங்கியிருந்த அவளுடைய உதடுகள் ஒவ்வொரு மூச்சுக்கும் நடுங்கின. அவனது முதுகில் அவளது நகங்களிலிருந்து கீறல்கள் தெரிந்தன, அவை அவளது நடுங்கும் விடுதலையின் அத்தாட்சியாக இருந்தன, அதே நேரத்தில் அவனது மார்பும் கழுத்தும் அவளுடைய காதலின் ஆழமான சிவப்பு அடையாளங்களாக, அவளது காதல் கடிகளால் அலங்கரித்தன,

பல மணி நேர இடைவிடாத இன்ப இரவுக்கு பிறகு, சஞ்சு இறுதியாக சோர்வில் சரிந்தாள், அவளுடைய உடல் களைத்துப் போனது. ஆர்யன் பாத்ரூமுக்குள் நுழைந்து, தொட்டியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அவளை கவனமாக தன் கைகளில் சுமக்க திரும்பி வந்தான்.

அவளை மெதுவாக தொட்டியில் அமர வைத்து வலியை குறைக்க அவள் உடலை மென்மையான தடவல்களால் கழுவினான். பிறகு அவளை ஒரு துண்டால் துடைத்து, அவளைத் தூக்கிச் சென்று படுக்கைக்கு அழைத்துச் சென்று, அன்புடன் படுக்க வைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவளருகில் சாய்ந்த ஆர்யன் அவளை இழுத்து அணைத்து உறங்க வைக்க ஆரம்பித்தான், அவனது மௌன ஸ்பரிசத்தில் கதகதப்பைத் தவிர வேறு எதுவும் முணுமுணுக்கவில்லை.

அந்த இரவு அவர்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் அச்சுறுத்தல்கள் மற்றும் அச்சம் காரணமாக அதை உலகிற்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர். ஆனால் இப்போது, திரை விலக்கப்பட்டது – அவர்கள் இறுதியாக விடுவிக்கப்பட்டனர். அன்பு செலுத்தவும், வாழவும், பயமின்றி பறக்கவும் சுதந்திரமடைந்தனர்.

எதிரிகள் பதுங்கியிருக்கலாம், அவர்களைக் கிழிக்கக் காத்திருக்கலாம். ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அவர்களை பிரிக்கவும், எதிர்க்கவும் நினைப்பவர்கள் ஆர்யன் சைதன்யாவை அல்ல, அவனது தேவதையான சஞ்சனாவைக் காவல் காக்கும் இரக்கமற்ற அரக்கனை எதிர்கொள்வார்கள்.

வாழ்நாள் முழுவதும் அவளுடையவளாக இருப்பதாக அவன் வாக்குறுதி அளித்திருந்தான். ஆர்யன் சைதன்யா, ஒரு செயல்வீரன்.

**********************************

முன்னோட்டம்:

” நாம இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கோம் பொண்டாட்டி, எந்த தொந்தரவும் இல்லாம, யாரும் இல்லாம நம்ம ரெண்டு பேரு மட்டும் சரியா கொண்டாடனும். இந்த உலகத்துல எங்க வேணும்னாலும் சொல்லு நாம அங்க ஹனிமூன் போகலாம் “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!