மாயா தனது குழந்தைக்கு ஆர்யன் தான் அப்பா என்று சொன்னதை கேட்டு உறைந்து நின்றார் சந்திரசேகர். கடந்த சில நாட்களாக வேதனைக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் அவரின் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு, பூமி பிளந்திருந்தால் சந்திரசேகர் சந்தோஷமாக ஆறடி ஆழத்தில் புதைந்து போக தயாராக இருந்துருப்பார்.
சந்திரசேகர் தன் மகள் மீது அவர் வைத்திருந்த அன்பு, அவளது மகிழ்ச்சிக்காக அவர் கொட்டிய கண்மூடித்தனமான நம்பிக்கை மற்றும் பாசம் அனைத்தும் அவர்களின் வணிக வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு பெரிய இழப்பை மட்டும் கொடுத்தது. இப்போது, அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தி அவரை முற்றிலும் நிலை குலைய செய்தது.
கண்ணீரோடு நின்ற மாயாவை பார்த்தவர், “மாயா, நீ என்ன சொல்ற ? ஆர்யன நீ எப்போ சந்திச்ச ? எனக்குத் தெரிஞ்சவர அவன் உன்கிட்ட பேசுனது கூட இல்ல. அப்புறம் எப்படி நீ அவன சந்திச்ச ?” என்று கேட்ட அவரின் குரலில் ஒவ்வொரு வார்த்தையிலும் அவநம்பிக்கை தொனித்தது.
” ப்ளீஸ் என்ன நம்புங்க அப்பா, நான் என் ப்ரெண்ட்ஸ் கூட ஊட்டிக்கு போய் இருந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? அங்க தான் நான் அவர சந்திச்சேன். சீக்கிரம் என்ன அவர் வாழ்க்கையில ஏத்துகுறதா சொன்னாரு “ என்று கண்கள் கலங்க சொன்னாள் மாயா.
” நீ நிஜமா தான் சொல்றியா மாயா ? இது உண்மையா இருந்தா, நீ அவன சந்திச்ச விஷயத்த ஏன் இத்தன நாளா என்கிட்ட சொல்லல?” என்று சந்திரசேகர் கேட்க அதற்கு மாயா பதில் சொல்வதற்கு முன், ராஜேஷ் குறுக்கிட்டு அவர் கவனத்தை ஈர்த்தான். “சார், குறுக்க பேசுறதுக்கு என்ன மன்னிச்சிடுங்க. மாயா மேடம் ஊட்டியில இருந்த அன்னைக்கு எனக்கு போன் பண்ணி ஆர்யன் சார் எங்க இருக்காருனு விசாரிக்க சொன்னாங்க. நான் விசாரிச்சதுல ஆர்யன் சார் சென்னையில அவரோட வீட்ல தான் இருந்தாரு. நானே நேரடியா விசாரிச்சு மேடம் கிட்ட அந்த தகவல சொன்னேன் “ என்று கூறினான்.
அவன் வார்த்தையை கேட்டதும், “இல்ல பா” என்று மாயா ராஜேஷை முறைத்தாள். “ஏதோ தப்பா புரிஞ்சி சொல்றான் ராஜேஷ், அன்னைக்கு ஆர்யன் ஊட்டியில என்கூட இருந்தாரு, என்ன நம்புங்க ” என்று கெஞ்சி அழுதாள்.
“சார், ஆர்யன் சார் அன்னிக்கு ஆஸ்பத்திரியில இருந்தாரு. நான் ஏற்கனவே உங்களுக்கு அந்த தகவல் சொல்லி இருக்கேன் “ என்று ராஜேஷ் சொன்னதும், “ நீ என்ன சொல்ற ? “ என்று சந்திரசேகர் அதிர்ச்சியோடு கேட்டார், அதற்கு ராஜேஷ், “ ஆமாங்க சார், அதே காரணம் தான் “ என்று சொல்ல, அதன் அர்த்தம் புரிந்து கொண்டு சந்திரசேகர் அதிர்ச்சியில் உறைந்தார்.
எல்லாவற்றையும் யோசித்த சந்திரசேகர் தன் உள்ளத்தில் பொங்கிய கோபத்தை அடக்க முயன்று மகளை நோக்கித் திரும்பி, “மாயா, நான் சொல்றத கேளு, ஆர்யன் இப்படி ஒரு காரியத்த செய்யவே மாட்டான். அவன எனக்கு பல வருஷமா தெரியும். அவன் ரொம்ப செண்டிமெண்ட் பார்க்குற ஆளு. இப்படி ஒரு காரியம் பண்ணி அவன் சஞ்சனாவுக்கு துரோகம் செய்ய மாட்டான். இப்போ கொஞ்சா அமைதியா சொல்லு, ஊட்டியில ஆர்யனை எப்படி சந்திச்ச ?” என்று அவளிடம் கேட்டார்.
மாயா தயங்கியபடி அவரை பார்த்து, “நாங்க அங்க இருக்க ஒரு பப்புக்கு போயிருந்தோம். அங்க தான் அவர சந்திச்சேன், அவர் என்கிட்ட நல்லா பேசினாரு, அன்னினக்கு நைட்டு அங்க இருந்த ஒரு ரூம்ல நாங்க ஒன்னா தங்கி இருந்தோம். சீக்கிரம் அவர் வாழ்க்கையில என்ன ஏத்துகுறதா எனக்கு சத்தியம் பண்ணாரு, சஞ்சனாவ அவர் வாழ்க்கையில் இருந்து விரட்டுறதா கூட சொன்னாரு “ என்று அனைத்தையும் கூறினாள்.
” உன் நண்பர்கள் அவன பார்த்தாங்களா, மாயா?” என்று சந்திரசேகர் கேட்டதும், “இல்ல, அவங்க யாரும் பார்க்கல “ என்று மாயா பதில் சொன்னாள்.
அவள் சொன்ன அனைத்தையும் கேட்ட சந்திரசேகர் பொறுமை இழந்து, “நீ அவ்ளோ முட்டாளா இல்ல உன் புத்தி கெட்டு போச்சா மாயா ? உன்னால எப்படி இது மாதிரி ஒரு காரியத்த செய்ய முடிஞ்சுது ? யாருமே அவன பார்க்கல ஆனா நீ மட்டும் எப்படி அவன அங்க பார்த்த ?” என்று கேட்டார்.
“நம்பினாலும் நம்பலனாலும், அவர் என்ன அங்க சந்திக்க வந்தாரு. நான் அவர்கிட்ட பேசறேன். நான் கர்ப்பமா இருக்குறது தெரிஞ்சா நிச்சயம் அவர் என்ன கல்யாணம் பண்ணிக்குவாரு “ என்று மாயா சொன்னதும், “இல்ல, மாயா. நீ எங்கேயும் போக கூடாது. வீட்ல இரு.” என்றார் சந்திரசேகர். ஆனால் மாயா அவரிடம், “போதும் பா, நான் கர்ப்பமா இருக்கேன்னு ஏன் அவர்கிட்ட சொல்ல கூடாது ? “ என்று அலறினாள்.
அவர் அவளைத் தடுப்பதற்குள் மாயா வீட்டை விட்டு வெளியேறி நேராக ஆர்யனைச் சந்திக்க ஏ.ஆர்.சி டவர்ஸுக்குச் காரை ஒட்டி சென்றாள்.
சந்திரசேகரின் இதயம் படபடக்க ராஜேஷைப் பார்த்து, “ராஜேஷ், என்ன தான் நடக்குது ?” என்று கேட்டார்.
“சார், மாயா மேடம் ஊட்டியில இருந்த அதே நாள் தான் ஆர்யன் சார் சஞ்சனாவோட ஹாஸ்பிடல்ல இருந்தாரு. அவங்க மட்டும் இல்ல, அவரோட நண்பர்கள் எல்லாரும் அங்க தான் இருந்தாங்க. அன்னைக்கு தான் டாகடர் சஞ்சனா கர்ப்பமா இருக்குறத உறுதி பண்ணாங்க. ஆர்யன் சார் ஊட்டியில இருந்திருக்க வாய்ப்பே இல்ல, வேற ஏதோ தப்பு நடந்திருக்கு “ என்று ராஜேஷ் கூறினான்.
சந்திரசேகர் அவளுக்கு போன் செய்தார் ஆனால் அவள் மொபைல் வீட்டில் இருந்த மேஜை மேல் ஒலித்தது.
“அவள தடுத்து நிறுத்தனும், வா போகலாம் “ என்று உறுமினார் சந்திரசேகர்.
உடனடியாக மாயாவின் காரில் இருந்த ஜி.பி.எஸ்ஸை கண்காணித்து அவளை பின்தொடர்ந்தனர். இதற்கிடையில், மாயா ஏ.ஆர்.சி டவர்ஸை அடைந்து ஆர்யனை சந்திக்க வேண்டும் என்று கோரினாள் ஆனால் ஆர்யன் அலுவலகத்தில் இல்லை என்று ரிசப்ஷனிஸ்ட் அவளிடம் தெரிவித்தார். வெறுத்துப் போன மாயா மீண்டும் காரில் ஏறி ஆர்யன் மேன்ஷனுக்குச் சென்றாள்.
ஆர்யன் மேன்ஷனில் பிரதீப், கீர்த்தி மற்றும் பவித்ரா மகிழ்ச்சியான தருணங்களை செலவிட்ட பின்னர் புறப்பட்டு சென்றதும். ஆர்யனும் சஞ்சுவும் மாடியில் உள்ள தங்கள் அறைக்கு சென்றனர்.
“ஆர்யன், இந்த வளையல் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு தானே ? “ என்று அவற்றை ரசித்தபடி சஞ்சு புன்னகைத்து கேட்க, ” ஆமா, ரொம்ப அழகா இருக்கு. என் செல்ல பொண்டாட்டி அழகா ஜொலிக்குறா. என்னால உன்ன ரசிக்காம இருக்க முடியல ” என்று சொல்லி ஆர்யன் செல்லமாக அவள் நெற்றியில் முத்தமிட்டடான்.
” நம்ம குழந்த பிறந்ததும் என் கையாள தூக்கி கொஞ்ச காத்துட்டு இருக்கேன் “ என்று கிசுகிசுத்தவன் கீழே நகர்ந்து அவளுடைய வயிற்றில் குழந்தைக்கும் முத்தமிட்டான்.
“ ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு ஆர்யன்.” என்று சஞ்சு பெருமூச்சு விட்டதும், “ என்னமா ? ஒண்ணுமில்ல டா, ரிலாக்ஸ். நான் உன்கூட தான் இருக்கேன். நீ ஏன் கவலைப்படுற ? “ என்று ஆர்யன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். உடனே சஞ்சு அவன் மார்பில் சாய்ந்து, “ எனக்குத் தெரியல, நாம விலகி போற மாதிரி ஒரு உணர்வு தோணுது ஆர்யன் “ என்று சஞ்சு மெல்லிய குரலில் கூறினாள்.
அவள் வார்த்தையை கேட்டதும் கோவமடைந்த ஆர்யன், ” பைத்தியமாடி உனக்கு ? ஏன் இப்படியெல்லாம் யோசிக்குற ? நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்கு தெரியும் தானே ? நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன் ? பைத்தியக்காரத்தனமா எதுவும் யோசிக்காத “ என்று கண்டிப்புடன் சொன்னான்.
“ ஒருவேள ஏதாவது நடந்தா ? “ என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் ஆர்யன் தன் உதடுகளை அவள் உதடுகளில் பதித்து பசியுடன் முத்தமிட்டான், அவள் மூச்சு விட சிரமப்பட்ட போது மட்டுமே பின்வாங்கினான்.
“சஞ்சுவும் ஆர்யனும் பிரிக்க முடியாதவங்க “ என்று ஆவேசமாக சொன்ன ஆர்யன், “ உன்னையும், நம்ம குழந்தையையும் நான் பாதுகாப்பேன். யாராவது உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சாலும் கூட, நான் உன்ன கண்டுபிடிக்குற வரை ஓயமாட்டேன், இது நான் உனக்கு செய்ற சத்தியம். ஒருவேள நான் உன்ன கண்டுபுடிக்கலனா அப்போ நான் செத்துப் போயிருப்பேன். ஆனா நீ பாதுகாப்பாக இருக்குறத உறுதி செய்வதற்கு முன்னாடி சாக மாட்டேன். உன் ஹார்மோன் தான் உன்ன இப்படியெல்லாம் யோசிக்க வைக்குது பேபி, ரொம்ப யோசிக்காத, ப்ளீஸ் ” என்று ஆர்யன் சாந்தமாக கூறினான்.
“என்ன மன்னிச்சிடு, ஐ லவ் யூ” என்று சஞ்சு கிசுகிசுத்தாள்.
“ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் “ என்று சொல்லி ஆர்யன், அவள் தலைமுடியை கோதி, நெற்றியில் முத்தமிட்டான்.
அதே நேரம் மாயா, மேன்ஷனுக்குள் புகுந்து ஆர்யனின் பெயரைக் கத்தினாள். ரஞ்சித்தும், பாலாவும் அவளை தடுக்க முயன்றனர், ஆனால் அவள் அவர்களைத் தள்ளிவிட்டு மீண்டும் ஆர்யன் பெயரை கத்தி அழைத்தாள்.
“ரஞ்சித், ஆர்யன கூப்பிடு, அவர் என்னைச் சந்திப்பாரு ” என்று மாயா கத்தினாள் அதற்கு ரஞ்சித் அவளிடம், “ப்ளீஸ் மேடம், கொஞ்சம் நாகரிகமா, கண்ணியத்தோட நடந்துக்கோங்க. நீங்க அவர இங்க சந்திக்க முடியாது. என்ன விஷயமா இருந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு அவரோட ஆபீஸ்ல போய் பாருங்க ” என்று அமைதியா கூறி அவளை அங்கிருந்து அனுப்ப நினைத்தான் ஆனால் அவள் பொறுமை இழந்து, “வாய மூடு ரஞ்சித், போய் உடனே அவர வர சொல்லு ” என்று அலறினாள்.
ரஞ்சித் பெருமூச்சு விட்டபடி ஆர்யனின் அறைக்கு சென்றான். மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட லிவிங் அறையை கண்டு மாயா குழப்பமடைந்தாள். “ இன்னைக்கு என்ன விசேஷம் ? ஏன் இப்படி அலங்காரம் பண்ணி இருக்கு ? “ என்று மாயா யோசித்தபடி நின்றாள்.
மாடியில் ரஞ்சித் கதவைத் தட்டியதும் ஆர்யன் கதவை திறந்து, “என்ன ஆச்சு ரஞ்சித்?” என்று ஆர்யன் கேட்க, ” சார், மாயா வந்திருக்கா. நிச்சயம் ஏதோ பெரிய பிரச்சன பண்ண தான் வந்துருக்கா, எவ்ளோ சொன்னாலும் போக மாட்டேங்குறா “ என்று ரஞ்சித் கவலையுடன் கூறினான்.
ஆர்யன் முகம் சுளித்து, ” அவ ஏன் இங்க வந்துருக்கா ? எல்லாம் செட்டில் ஆகிடுச்சுன்னு நினைச்சேன். அவ இந்நேரம் நாட்ட விட்டு போய் இருக்கணுமே ?” என்று கேட்டான்.
“ஆமா சார். நான் அவ கிட்ட காரணம் கேட்டேன் ஆனா அவ சொல்ல மாட்டேங்குறா “ என்று ரஞ்சித் சொன்னதை சஞ்சுவும் கேட்டு, “இப்ப என்ன பிரச்சனைய உருவாக்க வந்துருக்கா ? “ என்று கவலையோடு கேட்டாள்.
“நான் போய் என்னனு பார்க்குறேன், நீ இங்கேயே இரு ” என்றான் ஆர்யன். ஆனால் சஞ்சு அவனிடம், “இல்ல, நானும் வரேன். எனக்கு அவ மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல அதனால நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்.” என்று சொல்லி அவன் கையை பிடித்து முடிவாக சொன்னாள்.
“சரி போகலாம் ஆனா உனக்கு அவள பத்தி நல்லா தெரியும் அதனால அவ சொல்ற எதையும் சீரியஸா எடுத்துக் கூடாது, நீயும், நம்ம குழந்தையும் ஆரோக்கியமா இருக்கணும், எனக்கு அது தான் முக்கியம், சரியா?” என்று ஆர்யன் கேட்டதும் சஞ்சு சரி என்று தலையசைத்தாள். ஆர்யன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, அறையை விட்டு வெளியேறி லிப்டில் ஏறியதும் அவர்கள் கைகளைப் பிடித்தனர்.
இருவரும் லிவிங் அறையை அடைந்து மாயாவைப் பார்த்தார்கள். மாயவும் காலடி சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் ஆனால் சஞ்சுவின் வயிற்றை பார்த்ததும் அவள் முகம் அதிர்ச்சியில் சுருங்கியது.
“ஆர்யன்… இவ கர்ப்பமாக இருக்குறாளா?” என்று அதிர்ச்சியில் மாயா மூச்சிரைத்தாள். அவளை அலட்சியமாக பார்த்த ஆர்யன், ” இது உனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம், இங்க எதுக்கு வந்த ?” என்று கேட்டான்.
“அவ எப்படி உன் குழந்தையை சுமக்க முடியும்?” என்று மாயா கோவத்தில் கதறினாள்.
“மாயா, உன் எல்லைக்குள் இரு. சஞ்சு என் மனைவி. என் குழந்தையை அவ இல்லனா வேற யார் சுமப்பாங்க ? நீ எதுக்கு இங்க வந்தனு மட்டும் சொல்லு, எங்களுக்கு வேல இருக்கு ” என்று ஆர்யன் சீறினான்.
“நான் கர்ப்பமா இருக்கேன் ஆர்யன்” என்று மாயா சொன்னதும், ஆர்யனும், சஞ்சுவும் படிக்க முடியாத முகத்துடன் ஒரு பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
” உன் தனிப்பட்ட வாழ்க்கை எங்களுக்கு தேவையில்லாத விஷயம் இருந்தாலும் வாழ்த்துக்கள்.” என்று ஆர்யன் குளிர்ச்சியாக பதிலளித்தான்.
“ என் தனிப்பட்ட வாழ்க்கையா ? அப்படி சொன்னா என்ன அர்த்தம் ? நீ தான் என் குழந்தையோட அப்பா “ என்று மாயா கத்தினாள்.
அவள் சொன்னதை கேட்டதும், ஆர்யனின் கோபம் வெடித்தது, பக்கவாட்டு மேஜையை எட்டி உதைத்து அனைவரையும் திடுக்கிட வைத்தான்.
” இது என்ன புது நாடகம்? நான் பொறுமை இழக்கறதுக்கு முன்னாடி வெளியே போங்க மிஸ் மாயா” என்று முஷ்டியை மடக்கி ஆர்யன் கர்ஜித்தான்.
” என்ன கல்யாணம் பண்ணிக்கறனு சத்தியம் பண்ணி, இந்த நாய உங்க வாழ்க்கையில இந்து துரத்துறதா சத்தியம் பண்ணது எல்லாம் மறந்துட்டீங்களா ?” என்று மாயா சொன்னதும், ஆர்யன் அவளை எதுவும் செய்வதற்கு முன் சஞ்சு முன்னால் சென்று, ” வாய மூடு, வார்த்தையை பார்த்து பேசு ஜாக்கிரத. உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, என் வீட்டுக்குள் வந்து யாரோ ஒருத்தரோட குழதைக்கு என் ஆர்யன உரிமை கொண்டாடுவ ? மரியாதையா இப்போவே வெளியே போ” என்று கத்தினாள்.
” நாங்க ஊட்டியில சந்திச்சோம், அவர் எனக்கு சத்தியம் பண்ணாரு, நாங்க ஒன்னா இருந்தோம், நீ தான் இங்க இருந்து கிளம்பனும் “ என்று மாயா சொன்னதும், ” ரஞ்சித், இந்த அசிங்கம் புடிச்சவளோட அப்பாவ கூப்பிடு, நான் இவள கொல்றதுக்கு முன்னாடி வந்து கூட்டிட்டு போக சொல்லு ” என்று ஆர்யன் கட்டளையிட்டான்.
“நான் கர்ப்பமா இருக்கேன்னு டாக்டர் சொன்னதுல இருந்து ஆர்யன் ஆபீஸ் கூட போகல. எல்லா நேரமும் என்கூடவே தான் இருந்தாரு. அவர நீ எப்படி ஊட்டியில சந்திச்சு இருக்க முடியும்? உன் குழந்தையோட உண்மையான அப்பாவ கண்டுபிடிச்சு இப்போவாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ.” என்று சொன்ன போது சஞ்சுவின் குரல் அமைதியாக ஆனால் ஆக்ரோஷமாக இருந்தது.
வெறுத்துப்போய் ஆர்யனும், சஞ்சுவும் தங்கள் அறைக்கு செல்ல திரும்பி நடந்தார்கள்.
“ஆர்யன், உன்னால என்ன ஏமாத்த முடியாது, இது உன் குழந்தைனு ஏத்துக்கோ இல்ல உன் வாழ்க்கைய நரகமாக்கிடுவேன். என்னையும் என் குழந்தையையும் விட்டு போக நினைக்காத “ என்று மாயா கத்தி கூச்சலிட்டாள்.
“வாய மூடிட்டு வெளிய போ ” என்று ஆர்யன் திரும்பிப் பார்க்காமல் கத்தினான்.
” உன்ன என்கிட்ட வரச் செய்வேன் ஆர்யன், நீ என்ன கல்யாணம் பண்ணிக்க தான் போறே. ஆர்யனும், மாயாவும் தான் ஒன்னா இருப்போம், அதுக்காக சஞ்சனாவ கொல்ல கூட தயங்க மாட்டேன். நம்ம குழந்தைக்கு எல்லாத்தையும் கொடுப்பேன் – நீ உட்பட” என்று மாயா கத்தினாள் ஆனால் ஆர்யனும், சஞ்சுவும் கதவை அறைந்து சாத்திக் கொண்டு மாடிக்குச் சென்றனர். ஆத்திரத்தால் பீடிக்கப்பட்ட மாயா, மேன்ஷனை விட்டு வெளியேறி பொறுப்பற்ற முறையில் காரை வேகமாக ஓட்டிச் சென்றாள்.
அப்போது தான் ரஞ்சித் சந்திரசேகரை அழைத்து, “சார், உங்க பொண்ணு இங்க மேன்ஷனுக்கு வந்து ஒரு பெரிய நாடகம் போட்டு முடிச்சிட்டு இப்ப தான் கிளம்பியிருக்காங்க. ஆர்யன் சார் நீங்க அவளை கன்ட்ரோல் பண்ணி அவளோட மலிவான செயல்களை நிறுத்தணும்னு சொல்ல சொன்னாரு. உங்க கிட்ட ஏற்கனவே சொன்ன கண்டிஷன் ஞாபகம் பண்ண சொன்னாரு “ என்று கூறினான்.
” ரெண்டாவது குழந்தைக்கு நான் வாழ்த்து சொன்னதா ஆர்யன் கிட்ட சொல்லிடு. இனி நான் செய்ய வேண்டியத செய்றேன், என் ஷோவுக்காக வெயிட் பண்ணுங்க.” என்று சொன்ன சந்திரசேகர், ரஞ்சித் பதில் சொல்வதற்குள் அழைப்பை துண்டித்தார்.
சந்திரசேகர் மாயா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து காரை ஓட்டினார்.
மாயா தன் கோபத்தால் கண்மூடித்தனமாக, சாலையின் கூர்மையான குறுக்குவெட்டை அறியாமல் அபாயகரமான வேகத்தில் ஓட்டினாள். வலதுபுறத்தில் இருந்து வந்த ஒரு லாரி திடீரென பலத்த சத்தத்துடன் கார் மீது மோதியதும், மாயாவின் கார் இரண்டு முறை உருண்டு தலைகீழாக நின்றது.
*************************
முன்னோட்டம்:
“சார், மாயா மேடம் உயிர காபாத்திட்டோம் ஆனா… அவங்க இப்போ கோமா நிலையில இருக்காங்க “

1 comment
[…] Chapter 74 […]