Home FamilyChapter 39

Chapter 39

by Siragugal Novels
24 views

முப்பது நிமிட பயணத்திற்குப் பிறகு, ஆர்யனும், சஞ்சுவும் அவர்களின் கடற்கரை வீட்டை அடைந்தனர். அங்கு ரஞ்சித் சில காவலர்களுடன் வாசலில் காத்திருந்தான். ஆர்யனின் கார் உள்ளே நுழைந்ததும், ரஞ்சித் அவர்களை வரவேற்றான் அதன் பின்னர் பாதுகாவலர்களை அந்தப் பகுதி முழுவதும் பாதுகாக்க விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

ஆர்யனும், சஞ்சுவும் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் கதவை பூட்டுவதை பார்த்த சஞ்சு, ” இப்ப சொல்லு, நாம எதுக்கு இங்க வந்தோம்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

” சொல்றேன். நம்ம ரூம்ல போய் வெயிட் பண்ணு, நான் அவசரமா ஒரு போன் பேசணும், அத முடிச்சிட்டு வரேன் “ என்று ஆர்யன் சொன்னான்.

“ சரி “ என்று உரக்க சொன்ன சஞ்சு, பின்னர் “ சிடுமூஞ்சி “ என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள் ஆனால் அதை கேட்ட ஆர்யன், “ எனக்கு நல்லாவே கேட்டுச்சு ஸ்வீட் ஹார்ட் “ என்றான்.

சஞ்சு முதல் மாடிக்குச் சென்று தங்கள் அறைக் கதவைத் திறந்து உறைந்து போனாள். அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன, அவள் கைகள் இயல்பாகவே பறந்து அவள் வாயை மூடிக்கொண்டன. அவர்களின் படுக்கை அறை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூக்கள் தரையிலும் படுக்கையிலும் நிரம்பி இருந்தன, மெழுகுவர்த்தி வெளிச்சம் அறையை ஒரு மாயாஜால பிரகாசத்தில் குளிப்பாட்டியது. இதயம் படபடக்க அந்த இடத்திலேயே சஞ்சு வேரூன்றி நின்றாள். பின்னர் மெல்ல உள்ளே சென்றவள் அந்த மயக்கத்தில் சிக்கி பிரமித்து நின்றாள்.

திடீரென்று அவளுக்குப் பின்னால் இருந்து “ சஞ்சு “ என்று ஆர்யனின் ஹஸ்கியான குரல் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்த போது அவள் மூச்சு தொண்டையில் சிக்கிக்கொண்டது போல இருந்தது.

ஆர்யன் ஒற்றை காலில் அவள் முன் மண்டியிட்டு, கையில் மோதிரத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். காதல்  நிறைந்த கண்களுடன் ஆர்யன் மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்தான். உடனே கண்ணீர் பெருகி அவள் கன்னங்களில் கட்டுப்பாடு இல்லாமல் உருண்டது.

” சஞ்சு,” என்று ஆர்யன் மெல்ல அழைத்த போது அவனது குரல் மென்மையாக அதே சமயம் உறுதியானது இருந்தது. ” சஞ்சு ஸ்வீட் ஹார்ட், இத உன் கிட்ட சொல்ல சரியான நேரத்துக்காக சுமார் ஒரு வருஷத்துக்கு மேல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது. நம்ம வாழ்க்கையில ஒரே இடத்த நாம அடைஞ்சு இருக்கோம். சஞ்சனா…ஐ லவ் யூ. என் கடைசி மூச்சு இருக்க வரை நீ என் காதலா, என் உயிரா இருக்கனும்னு நான் விரும்புறேன். நீ என்ன லவ் பண்ணுவியா ? எப்பவும் என்னோட சஞ்சனாவா இருக்க உனக்கு சம்மதமா ? ஐ லவ் யூ பேபி ” என்று ஆர்யன் அவன் மனதில் இருந்த காதலை சொல்லி முடித்ததும், ஒரு நொடியும் தாமதிக்காமல், சற்றும் தயங்காமல் சஞ்சு மண்டியிட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

” ஐ லவ் யூ ஆர்யன், நானும் உன்ன அவ்ளோ லவ் பண்றேன். ஐ லவ் யூ “ என்று சொல்லி அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீருடன் காதலை சொன்னாள்.

அவளின் காதலை கேட்ட உடனே ஆர்யன் மகிழ்ச்சியில் அவளைத் தூக்கி அறையைச் சுற்றி சுழற்றினான், அவர்களின் சிரிப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்தன. அவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்க, அவள் மகிழ்ச்சியில் பதிலுக்கு அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள்.

அவளை மெல்ல நிற்க வைத்த ஆர்யன் அவள் கையை பிடித்து  மோதிரத்தை அவள் விரலில் அணிவித்து முத்தமிட்டான். அப்போது சஞ்சு பின்வாங்கினாள், அவள் கண்கள் பளபளத்தன.

“ஒரு நிமிஷம்.” என்று அவனிடம் சொன்ன சஞ்சு தன் பர்ஸில் (purse ) இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து அவனிடம் கொடுத்தாள். ஆர்யன் அதைத் திறந்ததும் அதில் ஒரு பிளாட்டினம் மோதிரம் இருப்பதை பார்த்து ஆச்சரியத்தில் அவளை பார்த்தான்.

” இன்னிக்கு உன்கிட்ட நான் என் லவ் சொல்லணும்னு இருந்தேன்” என்று சஞ்சு மெல்லிய புன்னகையுடன் சொன்னதும், ஆர்யன் மெல்ல புன்னகைத்தான். “ ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்குறோம் “ என்று அவன் சொன்ன போது அவன் இதயம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.

சஞ்சு மோதிரத்தை ஆர்யனின் விரலில் அணிவித்து அவனை முத்தமிட்டு பின்னர் அவள் முகத்தை அவன் மார்பில் சாய்த்து வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“ஆர்யன்…” என்று அவள் மெல்ல அழைத்ததும், “ சொல்லுமா “ என்றான் ஆர்யன்.

” நான் உனக்காக ஒரு பாட்டு பாட விரும்புறேன், பாடட்டுமா ? “ என்று சஞ்சு மெல்ல கேட்க, “ கேட்க நான் காத்துட்டு இருக்கேன் பேபி “ என்றான் ஆர்யன். 

சஞ்சு அவன் கண்களைப் பார்த்து, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, பாடத் தொடங்கினாள்.

முழுசா உனக்கென நான் வாழுறேன்…
புதுசா தினம் தினம் என பாக்குறேன்…
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்…
அளவில்லாம ஆசை வெக்குறேன்…

ஏனோ தானோ என்று போன நாளும்…
எல்லாம் நீயே என்று மாறுதே…

யாரும் இல்லா நேரம் வந்த பின்னும்…
உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே…

ஆர்யன் கண்களில் காதல் ததும்ப புன்னகைத்தான். ” ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட், நீ பாடுனது எனக்கு ரொம்ப புடிச்சுது “ என்று சொன்னவன் பின்னர் ஒரு புன்னகையுடன், “இப்போ, நான் உனக்கு ஒன்னு காட்டா விரும்புறேன். ” என்று கூறினான். அதை கேட்ட சஞ்சு, “ என்ன அது ? “ என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

ஆர்யன் அவன் மொபைலை எடுத்து ஒரு வீடியோவை அவளுக்கு காட்டினான். முதல் முறை அவளை சந்தித்த போது அவன் பதிவு செய்த அந்த வீடியோவில் அதே பாடலை அவள் பாடுவதை பார்த்த சஞ்சுவின் கண்கள் வியப்பில் விரிந்தன.

” நான் உன்ன முதல் முறை பார்த்த அப்போ எடுத்த வீடியோ இது. உன்ன அப்போ பார்க்கும் போது ஒரு மாதிரி புதுசா இருந்துச்சு, அது என்னனு எனக்கு தெரியல ஆனா எனக்கு புடிச்சு இருந்துச்சு. நீ பாடுனது எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு. எனக்காக நீ பாடுறத கேட்க இவ்ளோ மாசம் வெயிட் பண்ணேன். ஒருவழியா இன்னைக்கு கேட்டுட்டேன், ரொம்ப நன்றி “ என்று சொன்ன ஆர்யன், கடந்த காலத்தில் அவன் எடுத்த வீடியோக்களை ஒவ்வொன்றாக அவளிடம் காட்டினான். அவன் மௌனமாக, பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த தருணங்களை அவளிடம் காட்டி, அப்போது அவன் உணர்ந்த ஒவ்வொரு நினைவும், ஒவ்வொரு உணர்ச்சியும், அவளுடன் பகிர்ந்துகொண்டான்.

” உங்க அப்பா கூப்பிட்ட அப்போ நான் உங்க வீட்டுக்கு வந்தேன். உன் அப்பா என்கிட்ட நிறைய கேள்வி கேட்டாரு. நான் நேர்மையா அவருக்கு பதில் சொல்லி, நான் உன்ன லவ் பண்றேன்னு அவர் கிட்ட சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உன்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு நான் அவர் கிட்ட சொன்னேன். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவர் இறந்துட்டாரு, ஆனா உன்ன பார்த்துக்க சொல்லி என்கிட்ட சத்தியம் வாங்கினாரு. நான் என்னோட சாத்தியத்த காப்பாத்திட்டேன் “ என்று ஆர்யன் சொல்லி முடித்ததும், சஞ்சுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ” இதையெல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல ?” என்று அவனிடம் கேட்டாள்.

” ஆரம்பத்துல எனக்கு உன் மேல இருந்த உணர்வுகள் பத்தி நான் தெளிவா இல்ல ஆனா அப்போ கூட என்னால உன்ன விட்டு இருக்க முடியல. எனக்கு உன் மேல இருக்க லவ் உறுதியா புரிஞ்ச அப்புறம்  சூழ்நிலை சரியா இல்ல. எல்லாத்துக்கும் மேல நீயும் என்ன லவ் பண்ணனும்னு விரும்பினேன். நான் உன்ன லவ் பண்ற காரணத்துக்காக நீ சரி சொல்றத நான் விரும்பல. உனக்கு தெரியாத ஒருத்தனா உன் கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்றத விட நம்ம ரெண்டு பேருக்குள்ள எல்லாமே பரஸ்பரமா இருக்கணும் நெனச்சேன் “ என்று ஆர்யன் அன்பாக கூறி அவள் நெற்றியில் முத்தம் பதித்தான். 

ஆர்யன் அவள் கைகளை மென்மையாக தன் கைகளில் எடுத்துக்கொண்டு, “ இப்போ, நீ என் லவ், என் வாழ்க்க, என் உயிர் , என் ஆன்மா … என் எல்லாமே நீ தான் சஞ்சு ” என்று கூறினான். சஞ்சு கண்ணீரின் ஊடே புன்னகைத்தாள். ” தேங்க்யூ ஆர்யன். உன்ன மாதிரி என்ன காதலிக்க யாராலும் முடியாது. நீ என் வாழ்க்கையில கெடச்சதுக்கு நான் உண்மையிலேயே பாக்கியசாலி. ஐ லவ் யூ.” என்று அவன் கண்களை பார்த்து கூறினாள்.

” ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் “ என்று ஆர்யன் சொல்ல “ சஞ்சு அவனை கவலையோடு பார்த்து, “ஆனா சந்திரசேகர் சார் என்ன பண்ணுவாரு ?” என்று கேட்டாள்.

ஆர்யன் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி, “ கவலைப்படாத,  நான் பார்த்துக்குறேன், இந்த வாழ்க்கை மட்டும் இல்ல இனி எல்லா ஜென்மத்துலையும் நாம ஒன்னா தான் இருப்போம்” என்று சொன்னவன் பின்னர் அவள் உதடுகளை தன் விரலால் வருடியபடி, “ சரி, நாம ரெண்டு பேரும் இன்னும் பார்ட்டி கொண்டாடவே இல்லையே அதனால இப்போ கொண்டாடலாமா ? நம்ம ARCயோட  வெற்றிக்கும், நம்ம காதலோட வெற்றிக்கும் ? “ என்று ஆர்யன் மெல்லிய குரலில் கிச்கிசுக்க, சஞ்சு சரி என்று தலையசைத்து, “ கொண்டாடுவோம், ஆனா எப்படி கொண்டாடுறது ? “ என்று கேட்டாள்.

ஆர்யன் ஒரு மென்மையான காதல் ராகத்தை இசைத்து, “ என் கூட டேன்ஸ் ஆடுறியா ஸ்வீட் ஹார்ட் ? “ என்று கேட்டு தன் உள்ளங்கையை காட்ட, “கண்டிப்பா டார்லிங்.” என்று சொல்லி சஞ்சு தன் கையை ஆன் உள்ளங்கையில் வைத்தாள். 

அவளது வலது கை அவன் தோளில் இருக்க, ஆர்யனின் தன் இடது கை கொண்டு அவள் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்தான். அவர்களின் மற்ற கைகள் ஒன்றோடொன்று இறுகப் பற்றிக் கொள்ள, இருவரும் இசைக்கு ஏற்ப அசைந்தாடத் தொடங்கினர். ஒவ்வொரு சுழலும் அவளை நெருக்கமாக்கியது, இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று மென்மையாக அழுத்தின.

ஆர்யன் மெல்ல குனிந்து அவள் காது மடலில் ஒரு மெல்லிய முத்தம் பதித்தான். ” ஸ்வீட் ஹார்ட், நீ எவ்ளோ அழகா, செக்ஸியா இருக்க தெரியுமா ? உன்னோட இந்த உடம்பு, நீ எல்லார்கிட்டயும் நடந்துக்குற உன்னோட அணுகுமுறை, உன்னோட அமைதி, உன்   கோபம், உன் மனசு, உன் ஆன்மா, அப்புறம் நீ என் மேல வெச்சுருக்க இந்த லவ், இது எல்லாத்தையும் சேர்த்து உன்ன மொத்தமா நான் லவ் பண்றேன். ஐ லவ் யூ “ என்று அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான்.

அவன் பார்வை அவளது கண்களை விட்டு அகலவில்லை. ” பேபி, உன்னோட இந்த கண்ணு எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா ? எப்பவும் உன்னோட இந்த வசீகரமான கண்கள நான் பாத்துட்டே அதுல தொலைஞ்சு போக விரும்புறேன். உன்னோட இந்த கண்கள் என்ன பார்க்குற ஒவ்வொரு நொடியும் அதுல அவ்ளோ லவ் தெரியுது. உன் கண்கள் தான் உன் இதயத்துக்கு என்ன கொண்டு சேர்த்த என் வழி.” என்று சொல்லி அவள் கண்களில் மென்மையாக முத்தமிட்டான்.

” என் மேல கோபம் வந்தா உன் மூக்கு எப்படி சிவக்கும் தெரியுமா?” என்றான் மெல்லிய சிரிப்புடன். ” எனக்கு அத பார்க்க ரொம்பப் பிடிக்கும். நீ கோவமா இருக்கும் போது இன்னும் அழகா இருப்ப. அந்த அழக பார்த்து என்னால சிரிக்காம இருக்க முடியாது ” என்று சொன்னவன், மெல்ல அவள் மூக்கில் முத்தமிட்டு அவள் மூக்கை விளையாட்டாக தேய்த்தான்.

அவனது விரல்களை கொண்டு அவள் கன்னத்தை மெல்ல வருடியவன், ” உன்னோட இந்த கன்னம் நீ வெட்கப்படும் போது  இளஞ்சிவப்பு நிறத்துல இருக்கும். அந்த வெட்கத்துக்கு நான் தான் காரணம் நினைக்கும் போது எனக்கு அவ்ளோ பெருமையா இருக்கும், எனக்கு அப்படியே கடிக்க தோணும் “ என்று சொல்லி குனிந்து அவள் கன்னங்களை மெதுவாக கடித்து பின்னர் மெதுவாக முத்தமிட்டான்.

சஞ்சு ஏற்கனவே மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள், அவள் வார்த்தைகள் எல்லாம் தொண்டையில் சிக்கி இறந்து போனது,  அவளுடைய முழங்கால்கள் பலவீனமடைந்தன. இருவரும் இப்போது நடனமாடவில்லை என்பதை கூட அவள் உணரவில்லை. ஆர்யன் அவள் இடுப்பை பிடித்து அவளை தாங்கி பிடித்து அவள் கால்கள் அவன் கால்கள் மேல் ஊன்றி இருந்தன.

” உன்னோட இந்த மென்மையான உதடுகள்,” என்று ஆர்யன் முணுமுணுத்த போது அவன் குரல் கரகரத்தது, ” இது எனக்கு சொந்தமானது சஞ்சு, எனக்கு மட்டும். நீ இப்போ செய்ற மாதிரி, உன்னோட பற்களுக்கு இடையே இந்த உதட்ட கடிக்கும் போது எனக்கு அப்படியே நாள் முழுக்க உன்ன கிஸ் பண்ணனும்னு தோணும் “ என்று சொல்லி தன் விரல்களை கொண்டு அவள் உதடுகளை அவளது கடியிலிருந்து விடுவித்து, குனிந்து அவளது கீழுதட்டைக் கவ்வி மென்மையாக ஒரு முத்தமிட்டான்.

சஞ்சு கண்களை மூடி அவன் தொடுதலுக்கு அடிபணிந்தாள். ஆர்யன் அவள் உதடுகளை முழுவதுமாக உணர்ச்சி பொங்க முத்தமிட்டான். அவன் கைகள் அவளை இறுக அணைத்துக் கொண்டன.  இருவரின் நுரையீரல்கள் காற்றுக்காக கெஞ்சும் வரை அவர்கள் பிரியவில்லை, அவர்களின் இதயங்கள் ஒருமித்த குரலில் துடித்து காதலில் தொலைந்தன.

பெருமூச்சு விட்டுக் கொண்டும் மூச்சிரைக்க இருவரும் முத்தத்தில் இருந்து பின்வாங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ ஐ லவ் யூ “ என்று சஞ்சு சொன்னதும், “ ஐ லவ் யூ, நான் கேட்ட அந்த விசேஷ நாள் இன்னைக்கு இருக்க முடியுமா? “ என்று ஆர்யன் கேட்டான்.

சஞ்சு வெட்கத்தில் பேச முடியாமல், சரி என்று தலையசைத்து பார்வையை தரையை நோக்கி திருப்பினாள். ஆர்யன் அவள் தாடையை பிடித்து அவனை பார்க்க செய்து, “ உன்னோட பதில நான் கேட்க விரும்புறேன் பேபி “ என்று சொன்னான். அதற்கு சஞ்சு, “ சரி “ என்று மெல்லிய குரலில் கூறினாள்.

ஆர்யன் அவளை திருப்பி அவள் கூந்தலை முன்புறமாக தள்ளி அவளது வெற்று தோள்களில் முத்தமிட்டு மென்மையாக கடித்தான்,  அதே நேரத்தில் அவன் கைகள் அவளது கூந்தலில் இருந்த வைர ப்ரூச்சையும், அவளது கழுத்தில் இருந்த நெக்லஸ் இரண்டையும் ஒவ்வொன்றாக அகற்றுவதில் மும்முரமாக இருந்தன. அவள் காதுகளில் மென்மையாக முத்தமிட்டு அவளது காதணியை அகற்றினான். அவளது தோளிலிருந்து மணிக்கட்டு வரை விரல்களை தடவி, அவளது வளையலை கழற்றினான்.

சட்டென அவளைத் திருப்பி அவள் உதடுகளைக் கவ்வி ஆழமாக முத்தமிட்டான், உலோகம் சறுக்கும் சத்தம் அவளுக்குக் கேட்க, அவன் அவளது கவுனின் ஜிப்பை அவிழ்த்து தோளில் இருந்து தள்ளிவிட்டு அவளது ஆடை அவளது காலடியில் குவிந்தது. சஞ்சு  வெட்கத்தால் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.

ஆர்யன் அவளைத் கட்டிலுக்கு தூக்கிச் சென்று படுக்க வைத்து  அவளது தாடை எலும்பு வரை முத்தங்களை பொழியத் தொடங்கினான், அதே நேரம் அவனது கை அவனது ஆடைகளை அவிழ்ப்பதில் மும்முரமாக இருந்தது. அவனது கைகள் அவளது வளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தன.

அவன் கைகள் அவளது மென்மைகளை தொட்டதும் சஞ்சு இன்பத்தில் திளைத்தாள். அவர்களின் ஆசையின் வெப்பம் அதிகரிக்க, அவர்கள் உடைகள் முற்றிலுமாக தீர்ந்து போக, அவனது கைகளும் வாயும் அவளது உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆராதனை செய்தன.

காதலோடு அவர்களின் உடலும் இணைந்தன, அவளது வலியின் முனகல்கள் அனைத்தும் அவன் முத்தத்தில் காணாமல்போனது. அவர்களின் முனகல்களும், உடல் அசைவின் சத்தமும் அந்த அறையை நிறைத்தன. ஓரிரு முறையோடு அவர்கள் நிற்கவில்லை, சஞ்சு களைப்படைந்து இருவரின் குரலும் கரகரப்பாக மாறி இடைவிடாத முனகலாக மாறும் வரையில் அவர்கள் தொடர்ந்து இன்பத்தில் மூழ்கி இருந்தனர். அதன் பின்னர் ஆர்யன் அவள் அருகில் படுத்து அவளை இழுத்து நெற்றியில் முத்தமிட்டான்.

“ ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட், நீ இப்போ பார்க்க எவ்ளோ அழகா இருக்க தெரியுமா ? உன்னோட இந்த சோர்வான முகத்துல தெரியுற அழகு எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று ஆர்யன் சொல்ல, “ ஐ லவ் யூ ஆர்யன் “ என்றாள் சஞ்சு மெதுவான குரலில்.

“ நீ ரொம்ப களைச்சு போயிருக்க அதனால இப்போ தூங்கு பேபி “ என்று சொல்லி அவன் அவள் தலைமுடியை வருடினான். சிறிது நேரத்தில் இருவரும் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

********************

முன்னோட்டம்:

” எனக்குப் பசிக்குது. நான் முதல்ல குளிக்கப் போறேன். நீ இப்படியே  நிர்வாண சாமியார் மாதிரி சுத்திட்டு இரு “

அடுத்த அத்தியாயம்

1 comment

Leave a Comment

You may also like

error: Content is protected !!
notification icon

We want to send you notifications for the newest news and updates.