Home Familyஇறுதியுரை  

இறுதியுரை  

by Siragugal Novels
9 views

5 ஆண்டுகளுக்குப் பிறகு:

கேஷவின் கே.எம் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நாட்டில் 5 கிளைகளுடன் வெற்றிகரமான நிறுவனமாக வளர்ந்துள்ளது. லயாவின் அகாடமி பல கிளைகள் மற்றும் உரிமையாளர்களுடன் மாநிலத்தின் சிறந்த அகாடமியாக மாறியது. கேஷவ், மைரா மற்றும் நைனா ஆகியோர் பிரபலங்களாகிவிட்டனர், மேலும் மைரா மற்றும் நைனா பல விருதுகளைப் பெற்றனர்.

கேஷவ் ஒரு யூடியூபர் மட்டுமல்ல, இசைத் துறையில் ஒரு பாடகரும் கூட. பிரபல ஜோடி மைரா மற்றும் கேஷவ் பல்வேறு பாடல் நிகழ்ச்சிகள், நிகழ்வுகளில் விருந்தினராகவும் நீதிபதிகளாகவும் அழைக்கப்பட்டனர்.

லயாவுக்கு இப்போது எட்டு வயது, அவர்களின் மகன் வியானுக்கு ஐந்து வயது. க்ரிஷ் மற்றும் நைனாவின் மகன் அத்விக்கிற்கு எட்டு  வயது, இளைய மகன் ரிதானுக்கு நான்கு வயது.

குழந்தைகள் கோடை விடுமுறையில் இருந்ததால், கேஷவ் ஒன்றாக நேரம் செலவிட விடுமுறைக்கு திட்டமிட்டிருந்தான், தற்போது தம்பதிகள் தங்கள் குழந்தைகளுடன் டிஸ்னி லேண்ட் சென்று அங்கு அலைந்து கொண்டிருந்தனர்.

கேஷவ் லயாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான், வியான் அவன் கழுத்தில் கால்களை இருபுறமும் தொங்கவிட்டபடி உட்கார்ந்திருந்தான். க்ரிஷ் ரிதானை தூக்கிக்கொண்டு ஆத்விக்கின்  கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். மைரா அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே அவர்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தாள். கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தொடர்பான பொம்மைகளை விற்கும் ஒரு கடையைப் பார்த்ததும், அனைத்து குழந்தைகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தனர். அதற்குள் வியான் கீழே தொங்கிக் கொண்டிருக்க, லயா கேஷவின் பிடியில் இருந்து கையை பிடுங்க முயன்று கொண்டிருந்தாள். ஆத்விக் மற்றும் ரிதான் விஷயத்திலும் இதுதான் நடந்தது. கடைசியில் குழந்தைகளை விடுவித்ததும் அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடினார்கள்.

மூன்று மணி நேரம் கழித்து க்ரிஷும், கேஷவும் அனைவரையும் உணவு சாப்பிட இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக உணவளித்தனர்.

“ அப்பா, ஹோட்டலுக்கு போனதும் என்ன வரவேற்க எல்சாவ புக் பண்ணி இருக்கீங்களா ? “ என்று லயா கேட்டாள். அதற்கு ஆத்விக் உடனே, “ இல்ல, ஸ்பைடர்மேன் தான் நம்ம எல்லாரையும்  வரவேற்பாரு “ என்றான். அப்போது குறுக்கிட்ட வியான், கேஷவிடம் திரும்பி, “  அப்பா, சிம்பா ப்ளீஸ் “ என்று கெஞ்சினான்.

“ நல்ல குழந்தைங்களுக்கு அவங்களுக்கு புடிச்ச் ஆளுங்க வரவேற்பாங்க அதனால இன்னைக்கு யாரெல்லாம் நல்ல பசங்களா இருக்கீங்கனு பார்ப்போம் “ என்று கேஷவ் அவர்களுக்கு பதில் அளித்தான்.

“ நீங்க இதுவரை நல்ல பசங்களா இல்லாம இருந்திருந்தா இனி நாள் முழுக்க நல்ல பசங்களா இருக்க முயற்சி பண்ணுங்க “ என்று க்ரிஷும் கூறினான்.

“ க்ரிஷ் அவங்க ரசிச்சு சந்தோஷமா இருக்கட்டும், அவங்க பின்னால போடுறதுல உனக்கு சோர்வா இருக்குறதால அவங்கள தடுக்க வேண்டாம் “ என்று நைனா சொல்ல, “ அவங்க பின்னால ஓடுறது பத்தி பிரச்சன இல்ல, நீயும் மைராவும் அவங்க கூட சேர்ந்து ஓடுறீங்க. நீங்க ரெண்டு பேரும் வளர்ந்துட்டீங்கனு நெனச்சேன் ஆனா உண்மையா நான் உங்கள தப்பா புரிஞ்சிகிட்டேன் “ என்றான் க்ரிஷ்.

“ எவ்ளோ தைரியம் இருந்தா எங்கள குழந்தைங்கன்னு சொல்லுவ ? கெட்சப் எனக்காக அவன் கூட சண்ட போடுங்க “ என்றாள் மைரா.

கேஷவ் எதுவும் சொல்வதற்குள் குறுக்கிட்ட லயா, “ பரவாயில்ல அம்மு, நீ என்ஜாய் பண்ணு “ என்று தன் தந்தையை போல பேசினாள்.

அவள் வார்த்தைகளைக் கேட்டு மைரா அவளைத் துரத்தத் தொடங்கினாள். கேஷவ் மைராவைத் தாண்டி ஓடிச்சென்று லயாவைத் தோளில் தூக்கிக் கொண்டான். மைரா கைகளைக் கட்டிக்கொண்டு கேஷவைப் பார்த்தாள், ஆனால் அவன் அவள் கன்னங்களில் முத்தமிட்டு அவள் இடுப்பைப் பிடித்து இழுத்தான்.

மாலையில் டிஸ்னிலேண்ட் ஹோட்டலில் தங்க குழந்தைகள் உற்சாகமாக காரில் இருந்து இறங்கினர். அவர்கள் நுழைவாயிலுக்கு ஓடத் தயாராக இருந்தனர், ஆனால் கேஷவ் அவர்களைத் தடுத்தான்.

“ நீங்க எல்லாரும் இங்கேயே வெயிட் பண்ணுங்க, நான் முதல்ல போய் உங்கள வீடியோ எடுக்க ரெடியா இருக்கேன். நான் போன் பண்ண உடனே உள்ள வாங்க “ என்று சொல்லி குழந்தைகளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கேஷவ் ஹோட்டலுக்குள் நுழைந்து ரிசப்ஷனில் மேனேஜரிடம் பேசினான். அனைவரையும் உள்ளே வருமாறு க்ரிஷுக்கு தகவல் சொல்லிவிட்டு அவன் வீடியோ பதிவு செய்ய கேமராவுடன் தயாராக இருந்தான்.

குழந்தைகள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர், ஆனால் உடனடியாக கைகளை விடுவித்து, எல்சா, ஸ்பைடர்மேன், சிம்பாவைப் பார்த்ததும் உற்சாகத்தில் கத்த தொடங்கினர்.

லயா எல்சாவின் கைகளில் ஓடி செல்ல, ஆத்விக்  ஸ்பைடர்மேனுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். வியானும், ரிதானும் தரையில் அமர்ந்து சிம்பாவின் பிடரியுடன் விளையாடுவதைப் பார்த்து கேஷவ் சத்தமாக சிரித்தான். புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த பிறகு அவர்கள் அறைகளை அடைந்தனர். அந்த ராயல் அறையை பார்த்து குழந்தைகள் பிரமித்துப் போனார்கள்.

குழந்தைகள் கேஷவ் மற்றும் மைராவின் அறைக்குள் நுழைந்து டிஸ்னி கதையின் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர், அவை முடிந்ததும் அவர்கள் க்ரிஷ் மற்றும் நைனாவின் அறைக்குச் செல்ல வற்புறுத்தினர். கேஷவ் அவர்களை அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்று தன் அறைக்குத் திரும்பினான். மைரா அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள். கேஷவ் அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து அவள் கழுத்தில் முத்தமிட்டான்.

“ இந்த இடத்துக்கு வரும் போது உன்னையும், நம்ம  குழந்தைங்களையும் சேர்த்து புடிக்குறது வேடிக்கையா இருக்கும்னு நான் தான் சொன்னேன்ல ? நாம இப்போ சாப்பிட போனா அவங்க சாப்பிடுவாங்கனு கூட எனக்கு தோணல “ என்று கேஷவ் சொல்ல, “  அவங்க இப்படி சந்தோஷத்துல ஓடுறத பார்க்க அழகா இருக்கு தானே ? “ என்றாள் மைரா.

“ அவங்க ரொம்ப அழகா இருக்காங்க, என் பொண்டாட்டி செம்ம அழகா கவர்ச்சியா இருக்கா. நாம் பாரிஸ் விட்டுப் போறதுக்கு முன்னாடி நமக்கு கொஞ்சம் ஸ்பெஷல் டைம் கிடைக்கும்னு நினைக்கிறியா ? “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் கேட்க, “ எனக்குத் தெரியாது, ஆனா இன்னைக்கு நைட்டு பசங்க எல்லாரையும் நம்ம கூட இருக்க சொல்லலாம் அப்புறம் நாளைக்கு நைட்டு அவங்கள க்ரிஷ், நைனா கூட இருக்க சொல்லலாம். என்ன சரியா ? “ என்று மைரா யோசனை சொன்னாள்.

“ அப்போ நாம ரொமான்ஸ் பண்ண போறோம்னு ரொம்ப தெளிவா புரியாதா அவங்களுக்கு ? பசங்க தூங்கின அப்புறம் நாம பாத்ரூமுக்கு போகலாம். அவங்க எப்படியும் ரொம்ப சோர்வா இருப்பாங்க, அவ்ளோ சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டாங்க. நாம சிக்காம இருக்க நீ கொஞ்சம் அமைதியா இருக்கணும் “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க மென்மையா இருந்தா நான் அமைதியா இருப்பேன் “ என்றாள் மைரா.

“ சரி பார்க்கலாம், இப்போ அவங்க நம்ம ரூமுக்கு வர்றதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கிஸ் கொடு “ என்று சொல்லி கேஷவ் அவளை திருப்பி முத்தமிட ஆரம்பித்தான். கதவு அழைப்பு மணி சத்தம் கேட்டு அவர்கள் விலக, கேஷவ் தன் தலைமுடியை விரல்களால் கோதிவிட்டு கதவை திறக்க விரைந்தான். மைரா உடைகளை சரி செய்து கொண்டு லயாவையும் வியனையும் பார்த்து புன்னகைத்தாள்.

“ அம்மா, க்ரிஷ் அப்பா ரூம்ல Rapunzel கதை பெயிண்ட் பண்ணி இருக்காங்க. அவளோட தலைமுடி போட்டோவுல ரொம்ப அழகா இருந்துச்சு “ என்று லயா சொல்ல, “ ஆனா எங்க லயாவோட தலைமுடி அத விட அழகா இருக்கு. உன் தலையில இருக்க ப்ரூச் பாரு, அம்மா உனக்காக சூப்பரா செலெக்ட் பண்ணி இருக்காங்க. அப்புறம் உன்னோட டிரஸ் எல்லாத்துக்கும் மேட்சிங் ப்ரூச், ஹேர் கிளிப் இன்னும் நிறைய வாங்கலாமா ? “ என்று கேஷவ் கேட்டதும் உற்சாகமான லயா, “ வாவ், ஐ லவ் யூ பா “ என்று சொல்லி கேஷவைக் கட்டிப்பிடிக்க, வியான் அவர்களைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி நின்றான். கேஷவ் அவனைப் பார்த்து கண்ணடித்ததும் அவன் கண்கள் சட்டென ஒளிர்ந்தன, அவன் அவர்கள் மீது தாவினான். கேஷவ் தரையில விழ குழந்தைகள் அவன் மீது இருந்தனர்.

“ அப்பா, எனக்கு சிம்பா தொப்பி, ஸ்பைடர்மேன் gloves, மாஸ்க் வேணும் “ என்று வியான் கேட்க, “ கண்டிப்பா என் குட்டி சிம்பா “ என்றான் கேஷவ்.

ஒரு மணி நேரத்தில் அனைவரும் தயாராகி உணவு சாப்பிட சென்றுதும் மிக்கி மௌஸ் குடும்பம் தங்களுக்கு பரிமாற வருவதை பார்த்து குழந்தைகள் அவர்கள் மீண்டும் திகைத்துப் போனார்கள்.

“ பசங்களா, அவங்க நமக்கு பரிமாறிட்டு போயிடுவாங்க. உங்க தட்டுல இருக்குறத காலி பண்ண அப்புறம் தான் நாம அவங்கள மறுபடியும் கூப்பிட முடியும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு அவர்கள் தலையை அசைத்து, தங்கள் தட்டில் இருந்த உணவை  விரைவாக முடித்து, மிக்கியையும் மின்னியையும் அழைத்து அடுத்த ஆர்டரை சொன்னார்கள். ஆத்விக் தன் தட்டில் இருந்ததை  க்ரிஷிடம் கொடுத்து கண்களால் கெஞ்ச, வியானும் கேஷவுடன் அவ்வாறே செய்தான். இரவு உணவை உண்டு முடித்துவிட்டு அவர்கள் தங்கள் அறைகளுக்குத் திரும்பினர்.

லயாவும் வியானும் கட்டிலில் படுக்க, கேஷவ் லயாவுக்குப் பக்கத்திலும், மைரா வியானின் பக்கத்திலும் படுத்துக் கொண்டார்கள்.

“ அப்பா, உங்கள மாதிரி எனக்கு கிட்டார் வாசிக்கக் கத்து கொடுப்பீங்களா, நான் அம்மா மாதிரி பாட விரும்புறேன் “ என்று லயா சொல்ல, “ நிச்சயமா ப்ரின்சஸ் “ என்றான் கேஷவ்.

தன் மேல் கை, கால் போட்டு உறங்க தயாராக இருந்த தன் மகளை பார்த்து புன்னகையுடன் அவள் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தான். குழந்தைகள் தூங்கியதும் மைராவைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான். அவர்கள் சிறிது நேரம் காத்திருந்த பின்னர் கேஷவ் லயாவுக்கும் வியானுக்கும் அருகில் தலையணைகளை வைத்துவிட்டு அவன் மைராவை தனது கைகளில் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

“ கெட்சப், அவங்க எழுந்து நம்ம ரெண்டு பேரையும் தேடினா என்ன செய்றது? “ என்று மைரா கேட்க, “ நம்ம வீட்ல நாம இப்படி பண்ணது இல்லையா என்ன ? இப்போ அவங்க நாள் முழுக்க  ஓடி, நடந்து, கத்தி விளையாடி சோர்வா இருக்காங்க அதனால அவங்க இப்போ எழுந்திருக்க மாட்டாங்க. அது மட்டும் இல்ல நமக்கு கொஞ்சம் மறக்க முடியாத நினைவுகள் வேண்டாமா ? என்று சொல்லி அவர்களின் ஆடைகளை களைந்து அவளை கவுண்டரில் உட்கார வைத்து முத்தமிட தொடங்கினான். 30 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் ரொமான்ஸ் முடிந்த பின்னர் குளித்து உடைகளை அணிந்து கொண்டு அறைக்குத் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பக்கவாட்டில் படுத்துக் கொண்டனர்.

கேஷவ் தனது பி.ஏ.விடமிருந்து அழைப்பு வந்த போது அதிகாலையில் எழுந்தான். அழைப்பை துண்டித்து பால்கனியின் திரைச்சீலைகளைத் திறந்து தன் முன்னால் நடந்த காட்சியைப் பார்த்து புன்னகைத்து உடனே மைராவை எழுப்பி பால்கனிக்கு அழைத்துச் சென்று பனிப்பொழிவைப் பார்த்தான். அதீத குளிரை உணர்ந்த மைரா நடுங்க, கேஷவ் ஒரு போர்வையை எடுத்து அவளை தன்னோடு சேர்த்து போர்த்தினான்.

“ போன தடவை நாம இங்க வந்த அப்போ பனிப்பொழிவை பார்க்க முடியல, ஆனா இப்ப நம்ம பசங்க இத பார்த்து சந்தோஷமா இருப்பாங்க “ என்று கேஷவ் சொல்ல, “ நாம போய் அவங்கள எழுப்புவோம், இத காட்சியை ரசிச்ச அப்புறம் அவங்க தூங்கட்டும் “ என்றாள் மைரா.

“ ஒரு நிமிஷம் இரு, முதல்ல இந்த ரொமான்டிக் காட்சிய நாம கொஞ்சம் ரசிப்போம் “ என்று சொல்லி அவன் அவளை தன் அணைப்பில் கசக்க, இருவரும் ஒருவரை ஒருவர் அனைத்து கொண்டனர். சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் குழந்தைகளை எழுப்பி பால்கனிக்கு தூக்கிச் சென்றனர், மேலும் க்ரிஷை அழைத்து பனிப்பொழிவு பற்றி தெரிவித்தனர்.

லயாவும் வியானும் தூக்கத்தை இழந்து பனியை ரசிக்கத் தொடங்கினர். இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு ஒருவழியாக கதவை சாத்திவிட்டு படுக்கைக்குத் திரும்பியபோது லயாவுக்கும், வியானுக்கும் பற்கள் தாளம் போடா ஆரம்பித்தன. கேஷவ் போர்வையால் அவர்களை போர்த்தி உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களையும் தேய்த்தான். குழந்தைகள் புதிய அனுபவத்தை உணர்ந்து சிரித்து அரவணைப்புக்காக பெற்றோரை அரவணைத்தனர்.

ஒரு வாரம் கழித்து அவர்கள் வீடு திரும்பியபோது, ஷிஷிமாரு அவர்களை வரவேற்றான். லயா பாரிஸில் இருந்து வாங்கிய ஷிஷிமாருவின் தலையில் ஒரு குல்லாவை கட்டினாள். குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிக்கு வாங்கிய பரிசுகளை பேக் செய்து மாலையில் குடும்ப வீட்டிற்கு சென்றனர்.

அர்ச்சனா, மதன், வசுந்தரா, ராஜன் ஆகியோர் அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டு வரவேற்றனர்.

“ மைரா ஸ்கூல் மறுபடியும் திறக்க இன்னும் 10 நாள் இருக்கு அதனால பசங்க கொஞ்ச நாள் எங்க கூட இருக்கட்டும் “ என்று வசுந்தரா சொன்னதும், “ அப்பா அப்பா அப்பா… ப்ளீஸ் நான் பாட்டி கூட இருக்கேன் “ என்றாள் லயா.

“ ப்ரின்சஸ் அப்பா, அம்மா இல்லாம இருப்பியா ? என்ன மிஸ் பண்ண மாட்டியா ? “ என்று கேஷவ் கேட்க, “ நான் உங்களுக்கு வீடியோ கால் செய்றேன், நீங்க சாயங்காலம் நேரம் எங்கள வந்து பாருங்க “ என்றாள் லயா.

“ அப்பாவோட அரவணைப்ப மிஸ் பண்ண மாட்டியா ? “ என்று கேஷவ் மீண்டும் கேட்க, “ அப்பா ப்ளீஸ் “ என்றான் வியான்.

“ சாம்பியன், அப்பா கூட நீச்சல் அடிக்க வேணாமா ? “ என்று கேஷவ் கேட்க, அப்போது குறுக்கிட்ட மைரா, “ லயா, வியான் நீங்க நைட்டு எங்கள கேட்டு அழுவீங்க அதனால நீங்க தாத்தா, பாட்டி கூட விளையாடுங்க அப்புறம் நாம இங்க நம்ம ரூம்ல தூங்குவோம் “ என்று சொன்னாள்.

“ நாங்க அழ மாட்டோம் மா, நான் இப்போ பெரிய பொண்ணு “ என்று லயா சொல்ல, “ மைரா அவங்க இங்கேயே இருக்கட்டும், அவங்க அழுதாலும் ஆத்விக்கும், ரிதானும் அவங்களோட விளையாட வந்துடுவாங்க, இல்லன்னா நீங்க ரெண்டு பேரும் ராத்திரி தங்கிக்கலாம். பிரச்சனை தீர்ந்துடுச்சு “ என்றார் வசுந்தரா.

“ ப்ளீஸ் கெட்சப். “ என்று லயா சொல்ல, “ லயா “ என்று மைரா அதிர்ச்சியாக கூப்பிட அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

கேஷவ் லயாவின் கைகளைப் பிடித்து மண்டியிட்டு அவள் விரல்களில் முத்தமிட்டான்.

“ சரி நானும் அம்மாவும் ராத்திரி இங்கேயே தங்குவோம், தூங்க முடியலைன்னா நீங்க எங்க கிட்ட வரலாம். சரியா வியான் ? “ என்று கேஷவ் கேட்டதும், “ ஓகே கெட்சப்..” என்று வியான் பதில் சொன்னான்.

கேஷவ் அவன் மூக்கைக் கிள்ள, வசுந்தராவும் ராஜனும் அவர்களை தூக்கிக்கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றனர். கேஷவும் மைராவும் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கள் பழைய அறைக்குத் திரும்பி படுக்கையில் படுத்து சுவரில் மாட்டியிருந்த தங்கள் திருமண புகைப்படத்தைப் பார்த்தனர்.

“ நேத்து தான் நான் உன்ன பால்கனியில இருந்து பார்த்த மாதிரி இருந்துச்சு ஆனா இப்போ நமக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. இன்னைக்கு அவங்க என்ன கெட்சப் சொல்லி கூப்பிடும் போது நீ என்ன கெட்சப் சொல்லி கூப்பிட்டதும் ஞாபகம் வந்துச்சு “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ ஆனா அவங்க உங்கள கெட்சப் சொல்லி கூப்பிட கூடாதுனு சொல்லுங்க. நான் மட்டும் தான் உங்கள அப்படி கூப்பிடுவேன் “ என்று மைரா சொன்னாள்.

“ கண்டிப்பா அம்மு. சரி சொல்லு, இத்தனை வருஷம் கழிச்சு நீ உனக்கு எப்படி இருக்கு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ உங்களுக்கு  வயசாயிடுச்சு, நான் உங்கள அங்கிள்னு கூப்பிடணும்னு தோணுது “ என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து தப்பிக்க மைரா உருண்டு சென்றாள், ஆனால் கேஷவ் அவளைப் பிடித்துவிட்டான்.

“ நான் எவ்ளோ நிரூபிச்சாலும் உனக்கு இன்னும் சந்தேகம் இருக்கு தானே அம்மு ? உனக்கு நான் யார் ? “ என்று கேட்டு கேஷவ் அவளது நாடித் துடிப்பில் முத்தமிட்ட போது மைரா விழுங்கினாள்.

“ சொல்லு நான் யாரு? “ என்று கேஷவ் மீண்டும் கேட்க, “ என் அழகான, செக்ஸியான புருஷன் “ என்ற மைரா பதில் சொன்னதும் கேஷவ் அவளை முத்தமிடத் தொடங்கினான்.

காலையில் கேஷவ் மற்றும் மைரா வசுந்த்ராவின் வீட்டிற்குள் நுழைந்த போது குழந்தைகள் இன்னும் எழுந்திருக்காததால் மைரா சமையலறையில் காபி தயாரிக்க சென்றாள், கேஷவ் சோபாவில் அமர்ந்தான். சில நிமிடங்கள் கழித்து லயா வசுந்த்ராவின் அறையை விட்டு வெளியே வந்து கேஷவின் மார்பில் சாய்ந்தாள். கேஷவ் புன்னகையுடன் அவள் தலையில் முத்தமிட்டான்.

“ நல்லா தூங்கினியா லயா? “ என்று கேஷவ் கேட்க, “ மிஸ் யூ பா “ என்றாள் லயா.

வியான் கண் விழித்த போது அருகில் யாரையும் காணாததால் அழுதுகொண்டே வெளியே வந்ததும் கேஷவ் விரைந்து சென்று  அவனைத் தூக்கிக் கொண்டான். வியான் அவன் கழுத்தில் முகம் புதைத்து கொள்ள, மைரா அவனது விசும்பல் சத்தம் கேட்டு சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.

சோபாவில் உட்கார்ந்து வியானை தன் மடியில் அமர்த்திக் கொண்டு துப்பட்டாவால் அவன் கண்ணீரைத் துடைத்தாள்.

வசுந்தரா அவனை சமாதானப்படுத்தி காலையில் குளிக்க அழைத்துச் சென்றார். கேஷவும் மைராவும் தங்கள் வேலைக்கு கிளம்புவதற்கு முன்பு அவர்கள் ஒன்றாக காலை உணவை சாப்பிட்டனர்.

கேஷவ் காரை அகாடமிக்கு முன்னால் நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினான்.

“ நீ என் கூட டேட்டிங் வரியா அம்மு ? ரொம்ப நாளாச்சு அதனால இத உனக்கு ஸ்பெஷலா செய்ய விரும்புறேன். என்ன சொல்ற ? “ என்று கேஷவ் கேட்டதும், “ கெட்சப் உங்க கூட ஒவ்வொரு நாளும் எனக்கு ஸ்பெஷல் தான். இதுவரை நீங்க எனக்கு என்ன செய்யாம இருந்துருக்கீங்க ? பெரிய ஸ்டார் ஹோட்டல் போக வேணாம், நம்ம வீட்ல உங்க கையாள எனக்கு ஊட்டி விடுங்க, அது தான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் “ என்று மைரா பதில் சொன்னாள்.

அவள் பதிலை கேட்டு புன்னகைத்த கேஷவ் அவள் முகத்தை இறுக்கி அணைக்க, இருவரும் முத்தமிட்டனர். அவள் நெற்றியால் தன் நெற்றியை அவள் நெற்றியோடு அழுத்தி கண்களை மூடிக்கொண்டான்.

“ ஐ லவ் யூ அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “ ஐ லவ் யூ கெட்சப் “ என்றாள் மைரா.

******************************************

 கேஷவ் மற்றும் மைராவின் கதை பயணம் இத்துடன் முடிவடைகிறது. உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். விருப்பம் இருந்தாள் ஊக்குவியுங்கள்.

உங்கள் அன்பு, ஆதரவுக்கு மிக்க நன்றி

உங்கள்

தேவி சுப்ரமணியன் 

  

 

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!