Home Family41. எப்படி காயம் ஆச்சு ?

41. எப்படி காயம் ஆச்சு ?

by Siragugal Novels
21 views

கேஷவுடன் சண்டை போட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு சென்ற மைரா அவன் காயப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியானாள். 

“ அய்யோ கடவுளே! கெட்சப், உங்களுக்கு என்ன ஆச்சு ? உங்களுக்கு எப்படி காயம் பட்டுச்சு ? “ என்று பதற்றத்துடன் கேட்டு, அவனருகில் அமர்ந்து அவன் கையைப் பிடித்து கீறலையும் வலது மணிக்கட்டைச் சுற்றியிருந்த எலாஸ்டிக் பேண்டேஜையும் பார்த்தாள். அவன் வலியில் துடித்ததை கண்டு அவள் கண்கள் ஈரமாகி, கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.

“ வாங்க ஹாஸ்பிடல் போகலாம். நான் அப்பாவ கூப்பிடுறேன், அவர் கார் ஓட்டுவாரு “ என்று மைரா சொல்ல, கேஷவ் அவளை நிறுத்தி அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

“ ஒரு நாளும் இப்படி கண்ணீர் சிந்தாத அம்மு. என்னால எதையும் தாங்க முடியும் ஆனா நீ அழுதா என்னால தாங்க முடியாது. அப்புறம் நான் நல்லா இருக்கேன். நான் ஏற்கனவே வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போயிட்டு தான் வந்தேன். டாக்டர் வலி குறைய ஊசி போட்டாரு “ என்று கூறி கேஷவ் அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

“ சரி, ஆனா எப்படி காயம் ஆச்சு ? “ என்று மைரா கவலையுடன் கேட்டாள்.

“ நான் பிரெண்ட் கூட மதியம் லஞ்ச் சாப்பிட பைக்ல போனேன் அப்போ ஒரு நாய் குறுக்க வந்துடுச்சு. நாங்க ரெண்டு பேரும் கீழ விழுந்துட்டோம். நான் அதிகமா அடிப்படாம இருக்க என் வலது கையாள தாங்கிட்டேன் அதனால் ஒரு சுளுக்கு பரிசா கெடச்சுது “ என்று சொல்லி சிரித்தான். அதை கேட்டதும், “ நீங்க ஏன் கார் எடுத்துட்டு போகல ? “ என்றாள் மைரா.

 

“ ஏன் உனக்கு பைக் ரைடு பிடிக்காதா ? நீயும் நானும் நைட்டு ஒரு ரவுண்டு போனா எப்படி இருக்கும் ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நிச்சயமா எனக்கு புடிக்கும் ஆனா நீங்க காயப்படுறத பார்த்த அப்புறம் எனக்கு போக வேணாம் “ என்று கூறிவிட்டாள்.

“ நான் பைக் ஒட்டல அம்மு, அதுவும் இல்லாம நீ என் பின்னால உட்கார்ந்திருக்கும் போது நான் அஜாக்கிறதையா இருப்பேன்னு நெனச்சியா ? “ என்று கேஷவ் கேட்டான். ஆனால் மைரா மறுத்து தலை அசைத்து,   கெட்சப், தயவு செஞ்சு இந்த நேரத்துல இத பத்தி விவாதம் பண்ண வேணாம் “ என்று சொன்னாள்.

அவள் கண்களில் கண்ணீர் ததும்புவதை பார்த்த கேஷவ் அந்த விஷயத்தை பேசுவதை விட்டுவிட்டான். அவன் தனது சட்டை பட்டன்களை அவிழ்க்க முயன்றான் ஆனால் சட்டென வலியால் துடித்ததும் உடனே மைரா அவனை நோக்கி விரைந்து சென்று அவனை முறைத்தாள்.

“ நான் இன்னும் இங்க தான் இருக்கேன், நீங்க இத செய்ய என்கிட்ட கேட்டிருக்கலாம் “ என்று சொல்லி முறைத்தாள்.

அவளது வார்த்தைகளில் இருந்த கோபத்தையும் அந்த கோபத்தின் பின்னணியில் இருந்த அக்கறையையும் கேஷவ் உணர்ந்தான். மைரா அவன் சட்டை பட்டன்களை அவிழ்த்து அவன் கண்களை சந்திக்காமல் சட்டையை கழற்றினாள்.

“ என்ன மன்னிச்சிடு அம்மு, ப்ளீஸ் வருத்தப்படாத. இனிமே நான் ரொம்ப கவனமாக இருப்பேன். ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? எனக்கு அடிப்பட்டது கூட எனக்கு சந்தோஷம் தான். என் மேல உனக்கு இருக்க அக்கறை, அன்பு பார்க்க அவ்ளோ சந்தோஷமா இருக்கு “ என்று கேஷவ் சொன்னதும் மைரா மேலும் கண்ணீர் சிந்தி அறையை விட்டு வெளியேற முயன்றாள் ஆனால் கேஷவ் அவளை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான்.

“ ப்ளீஸ் மைரா “ என்று சொல்லி கேஷவ் அவளைத் தன் பக்கம் திருப்பி கண்ணீரைத் துடைத்தான். மைரா அவனது உடலை அணைத்துக் கொண்டதும், அவன் அவள் தலைமுடியை வருடினான்.

“ எனக்காக கவனமா இருங்க. நீங்க இப்படி காயப்பட்டு கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது கேஷவ் “ என்று மைரா மென்மையான வார்த்தைகளால் சொன்னதும், கேஷவ் அவன் மார்பில் இருந்து அவள் தலையை உயர்த்தி அவள் உதடுகளை முத்தமிட்டான்.

“ ஒரு நாளுல எனக்கு சரி ஆயிடும் அம்மு. இப்போ ப்ளீஸ் கொஞ்சம் சிரி. உன்னோட சிரிப்ப பார்க்க நாள் முழுக்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டதும், மைரா புன்னகைத்தாள். அவன் அவள் நெற்றியை முத்தமிட்டதும், மைரா அவர்களுக்காக இரவு உணவை சமைத்துவிட்டு கேஷவுக்கு  இரவு உணவுடன் அறைக்குள் நுழைந்தாள்.

“ அம்மு, எனக்கு ஹெல்ப் பண்ணு. என் கைய பாரு, நான் இன்னும் வலியில தான் இருக்கேன் “ என்று அப்பாவியாக சொன்னான். மைரா தோசை சாம்பாரில் தொட்டதும் கேஷவ் அவள் ஊட்ட வாயை திறந்து அவள் விரலை தன் உதடுகளால் கவ்வி சாப்பிட்டான். மைரா தன் விரல்களில் அவன் உதடுகளை உணர்ந்து தன் கால் விரல்களை வளைத்தாள். கேஷவ் முனகியபடி அவள் கையால் சாப்பிடுவதை தொடர்ந்தான்.

“ என்ன அம்மு, இன்னைக்கு தோசையும் சாம்பாரும் இவ்ளோ ருசியா இருக்கு ? எனக்கு இன்னும் ரெண்டு தோசை கொண்டு வா “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அறையை விட்டு வெளியேறினாள். கேஷவ் கண்ணாடி முன் நின்று தன் தலைமுடியை விரல்களால் கோதினான்.

“ உன் கையாள சாப்பிடுறதுக்கு எனக்கு தினமும் அடிப்பட்டா கூட எனக்கு சம்மதம் தான் அம்மு. கடவுளே, எனக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு போல “ என்று சொன்னவன், காலடிச் சத்தம் கேட்டு கட்டிலுக்குத் திரும்பி சென்று அமைதியாக அமர்ந்தான். மைரா மீண்டும் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள், அவன் அவள் கையால் சாப்பிடுவதை ரசித்து முனகினான். அவன் சாப்பிட்டு முடித்ததும் மைரா கிளம்ப எத்தனிக்க, அவன் அவளை தடுத்து அவள் விரலில் இருந்த சாம்பாரை லாவினான்.

“ சாம்பார் இன்னைக்கு ரொம்ப சுவையா இருந்துச்சு அம்மு “ என்று சாதாரணமாக சொன்னான் ஆனால் அவனது செயலுக்கு அடிவயிற்றில் ஏதோ முறுக்கேறி விழுவதை உணர்ந்த மைரா அவனைப் பார்த்து திகைத்து நின்றாள். கேஷவ் அப்பாவியாக கொஞ்சம் தண்ணீரை குடித்து அவளை தன் ஓரப்பார்வையில்  பார்த்து புன்னகையை அடக்கிக் கொண்டான்.

“ நீயும் சாப்பிட்டு முடிச்சிட்டு வா அம்மு, நாம தூங்கலாம், எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா வெறுமனே தலையசைத்துவிட்டு சமையலறைக்குத் திரும்பினாள். அவனது ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்த தன் மனதையும் உடலையும் அமைதிப்படுத்த அவள் பிடித்திருந்த மூச்சை விடுவித்து தண்ணீரை வேகமாக குடித்தாள். பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. கேஷவ் சட்டையில்லாமல் படுக்கையில் கிடந்தான்.

“ இந்த மனுஷன் நிச்சயமா என்ன காலி பண்ண தான் இப்படி பிளான் பண்ணி இருக்காரு. இப்போ நான் என்ன செய்வேன்? “ என்று யோசித்துக் கொண்டே மைரா நின்றாள். அதே நேரம் கேஷவும், “ உன்னோட அதிர்ஷ்டத்த இன்னைக்கு முயற்சி பண்ணி பாரு டா கேஷவ், வாழ்த்துக்கள் “ என்று மனதில் சொல்லிக் கொண்டு அவளை பார்த்தான்.

“ அம்மு, எனக்கு சட்ட போட கஷ்டமா இருக்கு அதனால நான் வேணும்னா சோபாவுல தூங்குறேன் “ என்று அப்பாவியாக சொன்னான்.

அவன் புன்னகையைக் கட்டுப்படுத்துவதைக் கண்ட மைரா, அவன் தன்னுடன் விளையாடுகிறான் என்பதை அறிந்தாள், எனவே அவனுக்கு எதிராக விளையாட முடிவு செய்தாள்.

“ சரி, உங்களுக்கு இன்னும் ரெண்டு தலையணை வேணுமா ? இல்லனா நான் சோபாவுல தூங்குறேன், நீங்க படுக்கையில வசதியா  தூங்கலாம் “ என்று மைரா கூறினாள். அதை கேட்டதும் கேஷவ்  அதிர்ச்சியடைந்து பதில் எதுவும் சொல்லாமல் அவளைப் பார்த்தான். மைரா அவனைத் தவிர வேறு எங்கும் பார்த்து அவனது பதிலுக்காக காத்திருந்து நகைகளை கழற்றத் தொடங்கினாள்.

“ ஆனா எனக்கு நைட்டு வலி அதிகம் ஆனா என்ன செய்றது ?   எனக்கு தண்ணி, இல்ல வலி நிவாரணி தேவைப்பட்டா என்ன செய்றது ? “ என்று கேஷவ் வருத்தமுடன் கேட்டதும், “ கெட்சப் நான் அடுத்த ரூம்ல தூங்க போற மாதிரி பேசுறீங்க. நான் இங்க பக்கத்துல சோபாவுல தானே இருக்க போறேன். உங்களுக்கு என்ன தேவையா இருந்தாலும் உடனே உதவி செய்வேன் “ என்று சொன்னாள்.

கேஷவ் படுக்கையில் இருந்து இறங்கி அவள் பின்னால் நின்று அடிப்படாத அவன் இன்னொரு கையை கொண்டு அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.

“ எனக்கு வேற ஏதாவது தேவைப்பட்டா என்ன செய்றது மைரா? “ என்று அவன் கேட்க, “ எதுவும் தேவைப்பட்டா நீங்க என்கிட்ட கேட்ட போதும் கேஷவ் “ என்று மைரா பதிலளித்தாள். 

கேஷவ் அவளை தன் பக்கம் திருப்பி அவளை முத்தமிட்டான். பின்னர் அவர்கள் முத்தத்தை முறித்தபோது லேசாக வீங்கிய அவளது உதடுகளைத் தொட்டான்.

“ உன்ன கட்டிப்புடிச்சு தூங்கி எனக்கு பழகிடுச்சு அம்மு அதனால நாம வழக்கம் போல தூங்குவோம். இல்ல உனக்கு அசௌகரியமா இருந்தா எனக்கு சட்ட போட உதவி செய் ஆனா நீ என் பக்கத்துல வேணும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டதும், “ நீங்க இப்பவும் சட்டையில்லாம தான் இருக்கீங்க. கடந்த 10 நிமிஷமா நாம கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணிட்டு தான் இருந்தோம். நான் அசௌகரியமா இல்ல சங்கடமா இருக்கேன்னு நீங்க நினைக்குறீங்களா ? “ என்று கேட்டாள். 

கேஷவ் புன்னகைத்தபடி படுக்கையில் படுத்து மைராவை எதிர்பார்த்து காத்திருந்தான். மைரா கூந்தலை கொண்டையாகக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் தலை சாய்த்து படுக்கையில் படுத்தாள். நெஞ்சு லேசாக விம்மி, மைரா தன் கையை அவன் அடிவயிற்றில் வைக்க, அவளது விரல்கள் அவனது திடமான தசைகளை தானாகவே தடவத் தொடங்கின.

கேஷவ் உள்ளுக்குள் முனகியபடி அவள் கையின் மீது தன் உள்ளங்கையை வைத்து அவளை ஆசைகளை தூண்டிவிட விடாமல் தடுத்தான். அவள் உறங்கும் வரை அவள் விரல்களை வருடினான்.

காலையில் கேஷவ் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்து கட்டிலில் அமர்ந்து காயம்பட்ட மணிக்கட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த மைரா, “ என்ன நடந்துச்சு ? மறுபடியும் வலிக்குதா? “ என்று கவலையுடன் கேட்டாள். 

“ இல்ல, நான் என் தலைமுடிய துடைக்கணும் ஆனா என் கை வலியில என்னால செய்ய முடியல. எனக்கு உதவி செய்றியா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா அலமாரியிலிருந்து மற்றொரு துண்டை எடுத்து அவன் தலைமுடியை உலர்த்தத் தொடங்கினாள். அவள் சேலை அணிந்திருந்ததாள், அவளது வெற்று இடுப்பு அவன் கண்களுக்கு விருந்தாக இருந்தது. அவன் விரல்கள் தொட வேண்டுமென்று துடித்தன, ஆனால் அவன் அப்படி செய்யாமல் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“ இப்படி புடவை கட்டி, உன்னோட இந்த அழகான இடுப்ப காட்டி இப்படி என் பொறுமையா சோதிக்குறது ரொம்ப மோசம் அம்மு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா மூச்சிரைக்க முந்தானையை இழுத்து இடுப்பை மறைத்து கொண்டு அவள் அவன் கையை அறைந்ததும் அவன் சிரித்துக் கொண்டே அவள் கையை தலையில் வைத்து தலைமுடியை உலர்த்த சொன்னான்.

“கெட்சப், வீட்லயே இருங்க, நான் இன்னைக்கு என் கார் ஓட்டி போறேன். நைனா ஷாப்பிங் போகணும்னு சொன்னா அதனால அவ கூட போயிட்டு வரேன். இன்னிக்கு கொஞ்சம் லேட்டா வருவேன்.  உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணுங்க “ என்று மைரா சொன்னதை கேட்ட கேஷவ், “ நீ அகாடமிக்குப் போறதுக்கு முன்னாடி எனக்குத் தேவையானதைக் கொடுத்தா நான் உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன் “ என்று குறும்பு சிரிப்புடன் சொன்னான்.

மைரா தன் செயல்களை நிறுத்தி, அவன் வார்த்தைகளை யோசித்து, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை உணர்ந்தவள், மீண்டும் அவன் தோளில் அறைந்தாள்.

“ என் உதட்ட பார்த்து நாம என்ன செய்றோம்னு யாரும் கண்டுபுடிக்க நான் விரும்பல அதனால அடுத்த 24 மணி நேரத்துக்கு என் பெயர சொல்லி கூப்பிடாதீங்க “ என்று உறுதியாக சொன்னாள் ஆனால் கேஷவ் அதற்கு, “ நான் மென்மையா கிஸ் பண்றேன் மைரா “ என்று கெஞ்சினான்.

மைரா தலையை ஆட்டிவிட்டு அவன் உதடுகளை லேசாக முத்தமிட்டு ஈடுகட்டி, பின்னர் அவனுக்கு சட்டை அணிவிக்க உதவினாள். அவர்கள் ஹாலை அடைந்த போது அர்ச்சனாவும் மதனும் தங்கள் சொந்த ஊரிலிருந்து திரும்பி வந்திருந்தனர். கேஷவ் காயமடைந்ததைக் கண்டு அர்ச்சனா கவலைப்பட்டார், ஆனால் மைரா அவன் நன்றாக இருப்பதாக விளக்கினாள். பின்னர் அவள் அகாடமிக்கு சென்றாள், கேஷவ் வீட்டிலேயே இருந்தான்.

மைராவும், நைனாவும் அகாடமியிலிருந்து சீக்கிரமே கிளம்பி கேஷவுக்கு பரிசுகள் வாங்க ஒரு மாலை அடைந்தனர். மைரா ஒவ்வொரு கடையாக சென்று அவனுக்கு பரிசுகள் வாங்கினாள். பின்னர் அவள் தனது தந்தையை அழைத்து கேஷவை நள்ளிரவு வரை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தாள்.

அர்ச்சனாவின் வீட்டிற்குள் நுழைந்த ராஜன், மதன் டிவி பார்ப்பதைப் பார்த்தார். தன் அறையில் இருந்து வெளியே வந்த கேஷவை பார்த்து, “ கேஷவ் எனக்கு ஒரு வேலையில உன்னோட உதவி தேவைப்படுது, ப்ளீஸ் என்கூட வர முடியுமா? “ என்று கேட்டார்.

கேஷவ் உடனே சரி என்று சொல்லி மைராவிடம் தகவல் சொல்லிவிட்டு ராஜனுடன் புறப்பட்டான். ராஜன் காரை ஓட்ட இருவரும் பொதுவாக பேசிக் கொண்டே இருந்தனர். அவர்கள் நகரத்திலிருந்து வெகு தொலைவில் வந்துவிட்டதையும், அவர்கள் வீடு திரும்ப நேரம் தாமதமாகிவிடும் என்றும் கேஷவ் உணர்ந்தான்.

“ மாமா, நாம ரொம்ப தூரம் வந்துட்டோம், எங்க போறோம் ? “ என்று கேஷவ் கேட்க, “ இன்னும் ஒரு மணி நேரம் ஆகும், நாம போக வேண்டிய இடத்துக்கு போயிடலாம் கேஷவ் “ என்று ராஜன் பதிலளித்தார்.

“ இன்னும் ஒரு மணி நேரமா? கடவுளே, மைரா எப்போ வேணும்னாலும் வீட்டுக்கு வருவா, என்னால அவ கூட டின்னர் சாப்பிட முடியாதே. நாங்க வீட்டுக்கு திரும்பி போகும் போது அவ தூங்கிடுவா. அப்புறம் அவ கூட பேசுறது, கிஸ் பண்றது, கட்டி புடிச்சு தூங்குறது எல்லாமே மிஸ் பண்ணிடுவேனே. இன்னைக்கு இந்த நேரத்துல இவருக்கு என்ன வேலை? அதைப்பத்தி இவரு சொல்லவும் இல்ல. கடவுளே ! என்ன என் அம்மு கிட்ட கூட்டிட்டு போ “ என்று மனதில் புலம்பி கொண்டிருந்தான். அப்போது அவன் தோளில் யாரோ தட்டுவதை உணர்ந்து, ராஜன் தன்னையே பார்ப்பதைப் பார்த்தான்.

“ என்ன ஆச்சு கேஷவ் ? நான் உன்ன  ரொம்ப நேரமா கூப்பிடுறேன் ஆனா நீ ஏதோ ஆழ்ந்த யோசனையில இருக்க “ என்று ராஜன் கேட்க, “ ஒண்ணுமில்ல மாமா, ஆபீஸ் வேலை தான். நாம என்ன  வேலையா போறோம்னு நீங்க சொல்லவெ இல்லையே “ என்று கேட்டான்.

“ நாம அங்க போன உடனே உனக்கே தெரியும் “ என்று ராஜன் பதில் சொல்லி புன்னகைத்தார். கேஷவ் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டான், அவனது எண்ணமெல்லாம் தன் மனைவியின் மீதே இருந்தது. ராஜன் காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தியதும் அவர்கள் காரிலிருந்து இறங்கினர்.

“ இங்க ரோடு, வீடுங்க, மனுஷங்க நடமாட்டம் எதுவும் இல்லையே. நாம ஏன் இங்க வந்தோம் ? “ என்று கேஷவ் குழப்பத்துடன் கேட்டான்.

“ மைரா பிறந்த அப்போ நான் இந்த இடத்த வாங்கினேன், இப்போ இத விற்க பிளான் பண்றேன். இப்போ இந்த இடத்த விற்கலாமா இல்ல வீடு கட்டி வாடகைக்கு விடலாமான்னு உன்னோட அபிப்பிராயம் சொல்லு கேஷவ். அப்புறம் இந்த இடம் ரொம்ப அமைதியா இருக்கு தானே ? “ என்று ராஜன் கேட்டார்.

அவர் வார்த்தையை கேட்டதும் அதிர்ச்சியான கேஷவ், “ என்ன கொடுமை இது ? இவர் என் அபிப்பிராயம் தெரிஞ்சிக்க தான் நாங்க இங்க இவ்ளோ தூரம் வந்தோமா ? “ என்று மனதில் நினைத்து நொந்து போனான்.

“ மாமா நாம வீட்டுக்குப் போகலாம், நான் இந்த ஏரியா விபரம் பார்த்துட்டு அப்புறம் நீங்க இத விக்கலாமா இல்ல வீடு கட்டலாமானு முடிவு செய்வோம். வாங்க வீட்டுக்குப் போகலாம் “ என்று சொல்லி கேஷவ் கிளம்ப எத்தனித்த போது ராஜன் அவனைத் தடுத்து நிறுத்தினார்.

“ கேஷவ், நீ சொல்றது சரி தான். ஆனா இப்போ நாம இங்கு வந்துட்டோம் அதனால வசுந்தராவுக்கும், அர்ச்சனாவுக்கும் கொஞ்சம்  மாங்காய் பறிச்சிட்டு போகலாம். கொஞ்சம் இருட்டா இருக்கு ஆனா மொபைல் டார்ச் ஆன் பண்ணி பறிக்கலாம் “ என்று ராஜன் சொன்னதும் கேஷவ் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உள்ளுக்குள் முனகினான்.

“ இவருக்கு என்ன ஆச்சு ? நான் என் பொண்டாட்டி கூட இருக்க துடிச்சிட்டு இருக்கேன் ஆனா இவரு மரத்துல இருந்து மாங்கா பறிக்கலாம் சொல்றாரு ? இந்த இருட்டுல நான் எங்க இருந்து மாங்காய கண்டுபுடிப்பேன் “ என்று மீண்டும் மனதில் புலம்பினான்.

“ மாமா, வீட்டுக்குப் போற வழியில கடையில மாங்கா வாங்கிட்டு போலாமா ? இந்த நேரத்துல மரத்துல இருந்து மாங்கா பறிக்குறது ரொம்ப ஆபத்துனு நான் நினைக்கிறேன். புதர்ல பாம்பு அப்புறம்  விஷப் பூச்சி இருக்கலாம் “ என்று கேஷவ் சொன்னதும், “ அய்யோ, அப்போ சரி திரும்பிப் போகலாம். ஆனா இந்த நிலத்த பத்தி உன் அபிப்பிராயத்த கண்டிப்பா சொல்லு “ என்றார் ராஜன்.

“ கண்டிப்பா மாமா. நாம போகலாம், நான் கார் ஓட்டுறேன், அப்போ தான் நாம சீக்கிரமா வீட்டுக்கு போக முடியும் “ என்று கேஷவ் சொன்னான் ஆனால் ராஜன் மறுத்து, “ நான் உன்ன கார் ஓட்ட விட்டா மைரா என்ன கொன்னுடுவா. நீ அமைதியா உட்கார்ந்து ரெஸ்ட் எடு, நானே ஓட்டுறேன் “ என்று கூறினார்.

கேஷவ் சிரித்தபடி பயணிகள் இருக்கையில் அமர்ந்ததும், ராஜன் காரை ஓட்ட ஆரம்பித்தார். கேஷவ் அவர்களை முந்திச் செல்லும் வாகனங்களைப் பார்த்து அழத் தயாராக இருந்தான். அவர்கள் தாமதமாக வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதை மறைமுகமாக தெரிவிக்க அவன் தொடர்ந்து தனது வாட்சை சரிபார்த்தான், ஆனால் ராஜன் பாடல்களை மாற்றிக்கொண்டு தன்னால் முடிந்தவரை மெதுவாக ஓட்டினார்.

ராஜன் சட்டென பிரேக்கை இழுக்க, கேஷவ், “ இப்ப என்ன ஆச்சு? “ என்று கேட்டான்.

“ எனக்கு ரொம்ப பசிக்குது, நீயும் பசியா இருப்ப, அதுவும் இல்லாம ரொம்ப லேட் ஆயிடுச்சு, அதனால டின்னர் முடிச்சிட்டு போகலாம்  இல்லேன்னா அப்புறம் எந்த ரெஸ்டாரண்டும் இருக்காது “ என்று ராஜன் கூறினார் ஆனால் கேஷவ் அவரிடம், “ இல்ல, நாம வீட்டுல சாப்பிடுவோம் மாமா.” என்று சொல்லி சமாதானம் செய்தான். 

“ இல்ல பா, எனக்கு வயசாயிடுச்சு, பசியில வண்டி ஓட்ட முடியாது.” என்று சொல்லி ராஜன் இறங்க, கேஷவ் அவரை பின்தொடர்ந்தான். சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதற்காக கேஷவ் ஒரு ஜூஸ் மட்டும் ஆர்டர் செய்தான், ஆனால் ராஜன் தன் நேரத்தை எடுத்துக்கொண்டு உணவுகளை ஒவ்வொன்றாக ஆர்டர் செய்து அதன் சுவைக்கு ஒவ்வொருவரையும் பாராட்டி முனகினார்.

கேஷவ் மைராவை அழைக்க வெளியே சென்றான் ஆனால் அவள் அழைப்புக்கு பதில் சொல்லவில்லை.

“ அவ ஏற்கனவே தூங்கிட்டா போல, மிஸ் யூ அம்மு “ என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு, ராஜனிடம் திரும்பி சென்றவன்  அவர் இன்னும் மும்முரமாக சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தான். அவர் சாப்பிடும் விதத்தைப் பார்த்து புன்னகைத்த கேஷவ் அவருடன் சேர்ந்து சாப்பிட அவனும் உணவை ஆர்டர் செய்தான். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே உணவை பொறுமையாக சாப்பிட்டு முடித்தனர். அதன் பின்னர் ராஜன் மீண்டும் காரை ஒட்டினார்.

மறுபுறம் மைரா வீட்டின் ஹால் மாறும் அவர்களின் படுக்கை அறை முழுவதையும் பலூன்கள், பூக்கள், நட்சத்திரங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரித்திருந்தாள். அர்ச்சனா, மதன், கிரிஷ் ஆகியோர் வேலையை முடிக்க உதவினார்கள், அவள் ஆர்டர் செய்த கேக் டெலிவரி செய்யப்பட்டது.

மைரா அவர்களின் அறைக்குள் நுழைந்து படுக்கையில் சில பரிசுகளையும் மற்ற எல்லா பரிசுகளுக்கும் மேலாக இரண்டு சிறப்பு பரிசுகளையும் வைத்தாள்.

“ கெட்சப், இந்த பரிசு எல்லாம் உங்களுக்கு புடிக்கும்னு நம்புறேன். சந்தோஷத்துல நீங்க சிரிக்கும் போது உங்க கன்னத்துல குழி விழுறத பார்க்க விரும்பறேன் என் ஆச புருஷா “ என்று சொல்லி புன்னகைத்தாள்.

****************************************

முன்னோட்டம்:

“ இங்க என்ன நடக்குது அம்மு ? நீ முதல் இரவுக்கு இன்னும் ரெடியா இல்லனு தானே நான் நெனச்சேன் “ 

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:52 pm

[…] 41.எப்படி காயம் ஆச்சு ? […]

Leave a Comment

error: Content is protected !!