Home Family42. ஹனிமூன் போகலாமா மைரா?

42. ஹனிமூன் போகலாமா மைரா?

by Siragugal Novels
18 views

ராஜன் காரை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு தன் வாட்சில் நேரம் 11.55 என்று பார்த்து 3 நிமிடம் முன்னதாக வந்ததற்காக தன்னைத்தானே சபித்துக் கொண்டார். இன்னும் இரண்டு நிமிடங்கள் கேஷவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

“ கேஷவ் உன்ன கேட்க மறந்துட்டேன். உன் வேலை எப்படி போகுது ? “ என்று ராஜன் கேட்டதும், கேஷவ் அவரை வேற்றுக்கிரகவாசி போல பார்த்தான். ராஜன் அப்பாவித்தனமாக புன்னகைத்து அவன் பதிலுக்காக காத்திருந்தார்.

“ என்னோட வேலை பத்தி உங்களுக்கு தெரியுமா மாமா ? “ என்று கேஷவ் குழப்பத்துடன் கேட்டதும், “ இல்ல, ஆனா நீ என்ன வேலை செய்றியோ அது நல்லா நடக்குதான்னு தெரிஞ்சிக்க விரும்பினேன் “ என்றார் ராஜன்.

“ ஆமா, நல்லா தான் போகுது மாமா “ என்று கேஷவ் பதில் சொன்னதும், “ சரி வா, இப்போ இறங்கு. நாம சரியான நேரத்துக்கு வந்துருக்கோம் “ என்று ராஜன் சொல்ல, “ நாம சரியான நேரத்துக்கு வந்துட்டோமா ? நாம லேட்டா வந்துருக்கோம், வீட்டுக்கு வர நேரம் இது இல்ல மாமா, கிட்டத்தட்ட 12 மணி ஆக போகுது “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

கேஷவ் பேசி நேரத்தை வீணாக்குவதால், “ சரி, இப்போ கீழ இறங்கு, நான் கார நிறுத்தனும். வசுந்தரா எனக்காக காத்திருப்பா. நீயும் சீக்கிரம் தூங்க போ, குட்நைட் “ என்று அவசரமாக சொன்னவர், “ இரு என்கிட்ட இன்னொரு சாவி இருக்கு, நீ கதவு திறந்து உள்ள போ “ என்று சொல்லி அவனிடம் சாவியை கொடுத்தார்.

“ உங்ககிட்ட சாவி இருக்கா? “ என்று கேஷவ் குழப்பத்துடன் கேட்க, “ அய்யோ கேள்வி கேட்காம வீட்டுக்குப் போ கேஷவ். நீ லேட் பண்ற “ என்று பதற்றமாக சொன்னார்.

கேஷவ் வேடிக்கையாகப் பார்த்துவிட்டு காரிலிருந்து இறங்கினான். சாவியைப் பயன்படுத்தி அவன் கதவைத் திறந்து விளக்கைப் போட்டான் ஆனால் உடனடியாக ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டு  வண்ணமயமான காகிதங்கள் அவன் மீது விழுந்தன.

மைரா உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பதையும் அலறுவதையும் அவன் கண்டான்.

“ பிறந்தநாள் வாழ்த்துக்கள் கெட்சப். “ என்று மைரா சொன்னதும், அவளைத் தொடர்ந்து அனைவரும் அவனை வாழ்த்த, ராஜன் பின்னாலிருந்து வருவதை கேஷவ் பார்த்தான். மைரா மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கேக்கை எடுத்து கத்தியை அவனிடம் நீட்டினாள். கேஷவ் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அவள் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் சேர்ந்து கேக் வெட்டினார்கள். முதல் துண்டை மைராவுக்கும், ரோஷினியைத் தவிர மற்ற அனைவருக்கும் ஊட்டினான்.

“ ஸாரி கேஷவ், மைரா உன்ன சர்ப்ரைஸ் பண்ண தான் உன்ன வெளிய கூட்டிட்டு போக சொல்லி ஆர்டர் போட்டா அதனால தான் உன்ன இவ்ளோ நேரம் வெளிய வெச்சுருந்தேன் “ என்று ராஜன் சொன்னதும், கேஷவ் மைராவைப் பார்க்க, அவள் தோள்களைக் குலுக்கினாள்.

“ இப்ப அப்படி பார்க்காதீங்க. உங்கள சர்ப்ரைஸ் பண்ணி பிறந்த நாள கொண்டாடணும்னு நினைச்சேன், வீட்ல உங்கள வச்சுகிட்டு நான் எப்படி சர்ப்ரைஸ் பிளான் பண்ண முடியும் ? அதனால அப்பாகிட்ட உதவி கேட்டேன். உங்களுக்கு சர்ப்ரைஸ் புடிச்சுதா ? “ என்று மைரா உற்சாகமாக கேட்டாள்.

“ ரொம்ப புடிச்சுது அம்மு “ என்று கேஷவ் அதற்கு பதில் சொன்னான்.

“ வெறும் கேக் மட்டும் தான் சர்ப்ரைஸா மைரா? அவனுக்கு பரிசு வாங்கிட்டு வந்தியா ? “ என்று வசுந்தரா கேட்க, “ உங்களுக்கு என்ன பரிசு வேணும் கெட்சப் ? என்று மைரா அவனிடம் கேட்டாள்.

“ எனக்கு பரிசு மேல எல்லாம் அவ்ளோ விருப்பம் இல்லனு உனக்கு தெரியாதா மைரா ? “ என்று கேஷவ் ஒரு புன்னகையுடன் அவள் பெயரை அழுத்தமாக சொன்னதும், மைரா வெறும் வாயில் விழுங்கினாள். மற்றவர்கள் அவன் மைராவை அவளுடைய பெயருடன் அழைத்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

“ கேஷவ், நீ அவள பெயர் சொல்லி கூப்பிட்டியா ? என்ன அதிசயம்? “ என்று அர்ச்சனா கேட்க, “ நான் அவள பெயர் சொல்லி கூப்பிட்டா அவளுக்கு ரொம்ப புடிக்கும், சரி தானே மைரா ? “ என்று அவன் மீண்டும் அவள் பெயரை சொன்னான்.

“ ஆனா மைராவோட பரிசு எப்படி உனக்கு பிடிக்காம இருக்கும் ? “ என்று மதன் கேட்டார்.

“ உங்களுக்கு தான் தெரியல பா. அவர் என்கிட்ட பரிச கேட்டுட்டாரு. இப்போ நாங்க செய்ய வேண்டியது எங்க ரூமுக்கு போறது தான். நான் அவருக்காக வெச்சுருக்க பரிசு எல்லாத்தையும் பிரிச்சு பார்க்குற வர வெயிட் பண்ணுவாரா தெரியல ? “ என்று மைரா மனதில் நினைத்தாள்.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்த கேஷவ், “ என்ன யோசிக்குற மைரா? “ என்று கேட்டான். அவனுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என்று, “ ஒண்ணுமில்ல கேஷவ், உங்களுக்காக ஒரு பரிசு பத்தி யோசிக்குறேன் “ என்றாள் மைரா.

அவள் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வசுந்தரா, “ ஏய், நீ அவன பெயர் சொல்லி கூப்பிடுறியா ? அவன வேற ஏதாவது சொல்லி கூப்பிடு “ என்று மிரட்டினார்.

“ அப்போ நான் அவர எப்படி தான் கூப்பிடுறது ? “ என்று மைரா சிணுங்க, “ நீ அவன அங்கிள் சொல்லி கூப்பிடுற தானே ? அத அப்படியே தமிழ்ல மாத்திடு. அவன மாமா சொல்லி கூப்பிடு “ என்று அர்ச்சனா யோசனை சொன்னார்.

நடப்பதையெல்லாம் பார்த்து கேஷவ் தன் புன்னகையை முஷ்டியால் மறைத்துக் கொண்டிருக்க, மைரா அவனை ஒரு ஏளனச் சிரிப்புடன் பார்த்தாள்.

“ இப்போ கொண்டாட்டம் முடிஞ்சுடுச்சு, தூங்கப் போவோமா மாமா ? “ என்று மைரா ராகமாக, கவர்ச்சியாக கேட்க, கேஷவ் முனகினான் ஆனால் அதை மறைக்க சட்டென லேசாக ஒரு இருமலால் மறைத்தான்.

“ எனக்கு களைப்பா இருக்கு, தூங்கப் போகலாம் “ என்று சொல்லிவிட்டு அவர்களின் படுக்கையறைக்குச் சென்றான். மைரா அவனை பின்தொடர்ந்து, அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவன் உறைந்து போய் நிற்பதை பார்த்தாள்.

“ இங்க என்ன நடக்குது அம்மு ? நீ முதல் இரவுக்கு இன்னும் ரெடியா இல்லனு தானே நான் நெனச்சேன் “ என்று கேஷவ் கேட்க, அவனை அதிரிசியுடன் பார்த்த மைரா, “ என்ன ? கெட்சப், உங்க பிறந்தநாளுக்கு நான் இந்த அலங்காரம் பண்ணேன். இப்போ கதவ மூடிட்டு கொண்டாட்டத்த தொடரலாம் “ என்று கூறினாள்.

“ நான் எப்பவும் ரெடி தான் மைரா “ என்று சொல்லி கதவை உதைத்து பின்னங்காலால் மூடியவன், அவளை இழுத்து முத்தமிட்டான். அவளின் நுரையீரல் காற்றுக்காக அலறியபோது மைரா அவன் மார்பில் அடித்தாள்.

“ என்ன மாமா கூட அனுப்புனது உன் ப்ளான்னு தெரியாம உன்ன மிஸ் பண்ணேன். அவரும் இன்னைக்கு என் பொறுமையா நல்லாவே சோதிச்சாரு. என்ன உன்கிட்ட கூட்டிட்டு போக சொல்லி நான் அழுதுருப்பேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ கொஞ்ச நேரம் தானே கெட்சப், இப்போ வாங்க நான் உங்களுக்கு வாங்கி இருக்க பரிசுகள பாருங்க. மேல இருக்க ரெண்டும் ரொம்ப ஸ்பெஷல்  இந்த ஜிஃப்களைப் பாருங்க. மடக்கில் மூடப்பட்டிருக்கும் பரிசு அதனால அத கடைசியா திறந்து பாருங்க “ என்று கூறினாள்.

கேஷவ் அவளை இழுத்ததும் இருவரும் கட்டிலில் எதிரெதிரே அமர்ந்தனர். மைரா சிறப்பு பரிசை ஒதுக்கி வைக்க, கேஷவ் மீதமுள்ள பரிசுகளை திறக்கத் தொடங்கினான். முதலாவது ஒரு  பேன்ட் மற்றும் சட்டை, அடுத்து ஒரு வாட்ச், perfume, பெல்ட், பர்ஸ், ஒரு தங்க செயின், ஒரு ப்ரூச், கூலிங் கிளாஸ், அவர்களின் செல்ஃபியின் புகைப்பட சட்டம் என அனைத்தையும் திறந்தான்.

“ இது எல்லாமே அருமையா இருக்கு அம்மு “ என்று சொல்லி கேஷவ் புன்னகையுடன் போட்டோவில் அவள் கன்னத்தைத் தொட்டான். மைரா போட்டோவை வாங்கி கட்டில் அருகே இருந்த நைட் ஸ்டாண்டில் வைத்தாள்.

“ அதுக்கான இடம் அதுதான். இப்போ ஸ்பெஷல் பரிசுகள திறந்து பாருங்க “ என்று மைரா சொல்ல, கேஷவ் முதல் பரிசை திறந்தான். அவன் அவள் கழுத்தில் தாலி கட்டும் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் படி இருந்த திருமண புகைப்படத்தை பார்த்ததும்  அவனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“ உங்களுக்கு பிடிச்சிருக்கா கேஷவ் ? “ என்று மைரா கேட்டதும், கேஷவ் அந்த போட்டோவை படுக்கையில் வைத்துவிட்டு மைராவை இழுத்து அவள் கழுத்தை பிடித்து உதட்டில் முத்தமிட்டான்.

“ பெஸ்ட் பரிசு மைரா. இத்தன வருஷத்துல நான் என் பிறந்த நாள கொண்டாடினதே இல்ல, இன்னைக்கு நீ ரொம்ப ஸ்பெஷலா மாத்திட்ட. என்னோட பெஸ்ட் பிறந்த நாள் “ என்று கேஷவ் உணர்சிப்பொங்க சொன்னதும், மைரா அவன் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவன் நெற்றியையும், கன்னத்தையும் முத்தமிட்டாள்.

“ பிறந்தநாள் வாழ்த்துக்கள் கெட்சப். எல்லா பிறந்த நாளையும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டாடுவோம். இப்போ அடுத்த பரிசு” என்று மைரா சொன்னதும், கேஷவ் கொஞ்சம் பெரிய பெட்டியைப் பார்த்து புன்னகையுடன் அதைத் திறந்தான். அதைக் கண்டதும் புருவத்தைச் சொறிந்தவன், மீண்டும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“ அழகான காட்டேஜ் அம்மு, நீ செய்தியா ? “ என்று அவன் கேட்டதும், “ உங்களுக்கு இத பத்தி தெரியாதா? கெட்சப், இது என் ஸ்கூல் கண்காட்சிக்கு பண்ண ப்ராஜெக்ட். நான் என் பொருட்கள சுத்தம் செய்ய அம்மாவுக்கு உதவி செய்யும் போது இத கண்டுபிடிச்சேன். நீங்க எனக்காக இத செய்தீங்கன்னு நெனச்சு, உங்கள கிஸ் பண்ண விரும்பினேன் ஆனா பரவாயில்ல, இத யார் செய்தாங்கன்னு கண்டுபுடிச்சு அவங்கள கிஸ் பண்றேன் “ என்று சொல்லி அவனை சீண்டினாள் மைரா.

அவள் சொன்னதை கேட்டதும், கேஷவ் அதிர்ச்சியில், “ என்ன ????? “ என்று கேட்டான்.

“ என்ன ? இது எவ்ளோ அழகா இருக்குனு பாருங்க. இத செஞ்சவருக்கு நான் ஒரு பரிசு கொடுக்க வேணாமா ? இப்போ அத என்கிட்ட திருப்பிக் கொடுங்க, நான் அப்புறம் அந்த ஆள் யாருனு கண்டுபுடிக்குறேன் “ என்று சொன்னாள்.

அதை கேட்ட பிறகு வேறு வழியின்றி, “ சரி, நான் தான் உனக்காக இத செஞ்சேன். இப்போ எனக்கு முத்தம் கொடு “ என்று கேட்டான்.

“ உங்களுக்கு முத்தம் கிடைக்கும் ஆனா இப்போ எனக்கு பதில் சொல்லுங்க. இத நீங்க தான் செஞ்சதா ஏன் என்கிட்ட சொல்லல ? “ என்று கேட்டாள்.

“ ஏன்னா, நான் தூங்கிட்டு இருக்கும் போது க்ரிஷ் தான் இத செஞ்சதா நெனச்சு நீ இத எடுத்துட்டு போயிட்ட. எனக்கு அது பெருசா பிரச்சன இல்ல, அதுவும் இல்லாம நான் எந்த பலனும் எதிர்ப்பார்த்து செய்யல. நீ சந்தோஷமா சிரிக்கணும், எனக்கு அது மட்டும் தான் வேணும் அதனால இத செஞ்சேன் “ என்று கேஷவ் விளக்கம் சொன்னான்.

“ உங்கள என்னால புரிஞ்சிக்கவே முடியல கெட்சப் “ என்று மைரா சொல்ல, “ நீ புரிஞ்சிக்குவ இல்ல நான் சொல்ற எல்லாத்தையும் ஏத்துக்க தயாரா இருக்கும் போது நான் உனக்கு புரிய வைப்பேன் அம்மு “ என்று கேஷவ் மெல்ல கூறினான்.

“ இதுக்கு என்ன அர்த்தம்? “ என்று மைரா கேட்க, “ அதுக்கு அர்த்தம் நீ இப்போ என்னோட பரிசு கொடுக்கணும், நான் அதுக்காக வெயிட் பண்றேன் “ என்றான் தன் உதட்டை காட்டி. ஆனால் மைரா மறுத்து, “ நான் இன்னும் முடிக்கல. ஊட்டியில இருக்குற காட்டேஜ் இது மாதிரியே எப்படி இருக்கு ? “ என்று கேட்டாள்.

“ ஏன்னா, அந்த காட்டேஜ் எனக்கு சொந்தமானது. எனக்கு சொந்தமா ஒரு காட்டேஜ் இருக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்த ப்ராஜெக்ட்டும், ஊட்டியில இருக்க காட்டேஜும் என்னோட அந்த ஆசையோட விளைவு தான் “ என்றான் கேஷவ். 

“ அது உங்களுக்கு சொந்தமானதா ? “ என்று மைரா ஆச்சரியத்துடன் கேட்க, “ அது எனக்குச் சொந்தமானது, ஆனா இப்போ அது நமக்கு  சொந்தமானது. எனக்கு சொந்தமான எல்லாமே இனி உனக்கு சொந்தம். இப்போ உன்னோட கேள்வியெல்லாம் முடிஞ்சுதா ? “ என்று அவசரமாக கேட்டான்.

மைரா புன்னகைத்தபடி கீழே இறங்க முயன்றாள், ஆனால் கேஷவ் அவள் கையை பிடித்து அவன் உதட்டை சுட்டிக்காட்டினான். மைரா வெட்கப்பட்டு அவனை முத்தமிட குனிந்தாள், ஆனால் கேஷவ்  அவளை கட்டிலில் புரட்டி அவள் உதட்டில் முத்தமிட்டான்.

“ ஹனிமூன் போகலாமா மைரா? “ என்று கேஷவ் தனது ஹஸ்கி குரலில் கேட்டதும், “ நாம் சும்மா டூர் போக தான் பிளான் பண்ணி இருக்கோம்னு நான் நெனச்சேன் “ என்று குறும்பு சிரிப்புடன் சொன்னாள்.

“ நம்ம உறவுல நாம போற வேகத்துல டூர் சொல்றத விட ஹனிமூன் சொல்றது தான் சரியா இருக்கும்னு நான் நினைக்குறேன். என்ன சொல்ற ? “ என்று கேஷவ் கேட்டான்.

“ நீங்க நாம போக செலெக்ட் பண்ணி இருக்க இடத்த பொறுத்து ஹனிமூன் சொல்லனுமான்னு நான் முடிவு பண்றேன். புத்திசாலித்தனமா நடந்து எனக்கு புடிச்ச மாதிரி ஒரு இடம் செலெக்ட் பண்ணுங்க கேஷவ் “ என்று மைரா குறும்பாக சொன்னாள்.

“ அப்போ நான் ஜெயிச்சுட்டேன்னு நினைச்சு நம்ம ஹனிமூனுக்கு ரெடியா இரு “ என்று கேஷவ் உறுதியாக கூறினான்.

அவர்கள் அனைத்து பரிசுகளை சோபாவில் வைத்த பின்னர் தூங்க சென்றனர்.

“ உங்களுக்காக நான் இன்னும் ஒரு பரிசு வெச்சுருக்கேன் “ என்று மைரா சொன்னதும், “ நீ ஏற்கனவே நிறைய கொடுத்துருக்க அம்மு. இன்னும் வேற என்ன வாங்கி இருக்க ? “ என்று கேஷவ் கேட்டான்.

“ அத நீங்க நாளைக்கு பார்ப்பீங்க. அதுவும் சர்ப்ரைஸ் தான். இப்போ தூங்குங்க “ என்று மைரா சொன்னதும், கேஷவ் அவள் நெற்றியில் முத்தமிட, இருவரும் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

*********************************************

முன்னோட்டம்:

“ நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இந்த வேலையெல்லாம் எப்படி செஞ்சீங்க ? நீங்க ஒரு வேலையும் செய்றது இல்ல, எல்லாத்தையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. ஒரே நேரத்துல எத்தன வேலைய தான் நான் செய்வேன்? இப்போ ரெடியாகி என்ன அகாடமியில இறக்கிவிட முடியுமா இல்ல நானே கார் ஒட்டி போகட்டுமா ? “

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 12:51 pm

[…] ஹனிமூன் போகலாமா மைரா? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!