Home Family9. ஏய் அம்மு நீ நல்லா இருக்கியா?

9. ஏய் அம்மு நீ நல்லா இருக்கியா?

by Siragugal Novels
41 views

அர்ச்சனா மதனின் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த போது க்ரிஷ் அவரின் கையைப் பிடித்து மண்டியிட்டு அவள் விரல்களில் முத்தமிட்டான். அர்ச்சனா கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டு விழுங்கினார். மைரா தனது காதலை மறைக்க விரும்பினால், அது அவளை குணப்படுத்த உதவும் என்றால், அதற்கு ஆதரவாக இருக்க முடிவு செய்த அர்ச்சனா, உதட்டில் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையுடன் க்ரிஷைப் பார்த்தார். மைராவின் உடைந்த இதயத்தையும் ஆன்மாவையும் அந்த வலிமிகுந்த புன்னகைக்குப் பின்னால் மறைத்து விட்டுச் சென்ற தான் பெற்றெடுக்காத மகளுக்காக அவர் இதயம் இரத்தம் சிந்தியது.

“ அம்மா, இப்ப நான் என்ன செய்யணும்? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு, நீயும் உன்னோட வேலைய பாரு. எல்லாம் சரியான நேரத்துல நடக்கும் “ என்று அர்ச்சனா சொல்ல அதற்கு க்ரிஷ் உடனே, “ என்ன மன்னிச்சிட்டீங்க தானே ? “ என்று எதிர்பார்ப்புடன் கேட்டான்.

“ உனக்கு என்ன வேணும் க்ரிஷ்? எதுவுமே நடக்காத மாதிரி தேதி குறிச்சு கல்யாணம் செய்யணுமா ? நாங்க உன்ன மன்னிக்குறோம் ஆனா நாங்க இதுல இருந்து மீண்டு வர, மத்த விஷயம் எல்லாம் பேச எங்களுக்கு அவகாசம் கொடு “ என்று அர்ச்சனா கூறினார்.

” மீண்டு வரணுமா ? எதுல இருந்து மா ? “ என்று க்ரிஷ் மீண்டும் கேள்வி கேட்க, “ க்ரிஷ் உனக்கு புரியாது அதனால கேள்வி கேட்குறத நிறுத்து, நீ உன் வேலைக்கு போறது தான் நல்லது இல்ல பெங்களூர் போய் எவ்ளோ நாள் வேணும்னாலும் அங்கேயே இரு. நீ அங்க தங்குறது ஒன்னும் முதல் தடவ இல்லையே. நான் உன்ன குத்தி காட்டல, கிண்டல் செய்யல ஆனா உண்மைய சொல்றேன் “ என்றார் அர்ச்சனா வேதைனையுடன் சொன்னார்.

“ உன் அம்மா சொல்றது சரிதான். எங்களுக்கு கொஞ்சம் நேரம் தருவனு நம்புறோம் “ என்று மதனும் சொல்ல, க்ரிஷ் தலையை ஆட்டி விட்டு ரோஷினியிடம் எல்லாவற்றையும் சொல்ல தன் அறைக்கு சென்றான்.

அர்ச்சனாவும் மதனும் தங்கள் அறைக்குச் செல்ல, அவர் தரையில் விழுந்து அழுதார், மதன் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு ஜன்னல் அருகே நின்றார்.

மைரா தன் அறையில் பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள், காய்ந்த பூக்களின் எச்சங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது . வசுந்தரா கையில் ஒரு தட்டுடன் உள்ளே நுழைந்து மைராவின் அருகில் அமர்ந்து, “ மைரா, நேத்து நைட்ல இருந்து நீ எதுவும் சாப்பிடல, இப்போ கொஞ்சம் சாப்பிடு, நான் உனக்கு ஊட்டி விடுறேன் “ என்று மெல்ல சொன்னார்.

“ எனக்கு பசி இல்ல மா, தயவு செஞ்சு என்ன தனியா விடுங்க “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ மைரா, பட்டினியா இருக்குறது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. என்னை மன்னிச்சிடு மைரா. ஒரு அம்மாவா உன்ன காப்பாத்தாம நான் தோற்று போயிட்டேன். நான் அவன ஜாக்கிரதையா கவனிச்சு இருக்கணும் ஆனா குருடா இருந்துட்டேன். இன்னைக்கு நீ எங்களால கஷ்டப்படுற, குறைந்த பட்சம் நான் உங்கள கிண்டல் செய்யவோ இல்ல ஊக்குவிக்காம இருந்துருக்கணும். இது எல்லாமே என்னோட தப்பு தான் “ என்று  சொல்லி வசுந்தரா கதறி அழுதார்.

தன் அம்மாவின் கண்ணீரை துடைத்துவிட்டு, “ இல்ல மா, இது உங்க தப்பு இல்ல. நீங்க தான் பெஸ்ட் அப்பா அம்மா. நான் லவ் பண்ணனும்னு நீங்க ஆசைப்படல. நான் தான் எல்லாத்தையும் பண்ணேன். நான் லவ் பண்றதா சொன்னதும் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணீங்க. என்னோட விதி நான் இப்படி கஷ்டப்படுறேன், இதுல யாரையும் குறை சொல்ல முடியாது “ என்று சமாதானம் சொன்னாள் மைரா.

“ தயவு செஞ்சு இந்த பரிசு எல்லாத்தையும் தூக்கி எறி மைரா. இதையெல்லாம் பார்த்துட்டே இருந்தா உன்னால இதுல இருந்து மீள முடியாது “ என்று வசுந்தரா சொன்னதும், “ இந்த பரிசு, கிரீட்டிங் கார்டு, பூக்கள் எல்லாம் எனக்கு உண்மையான லவ் தான் காட்டுச்சு. ஒரு நாள் வாய்ப்பு கிடைச்சா நான் அவன் கிட்ட கேள்வி கேட்பேன். அவனுக்கு என் மேல லவ் இல்லனா ஏன் இதையெல்லாம் எனக்கு கொடுத்தான்னு கேட்பேன். என் மேல லவ் இல்லனா ஏன் என்ன காப்பாத்தினான் ? எதுக்காக என்கிட்ட தப்பா நடந்துகிட்ட பசங்கள அடிச்சான் ? இந்த சாக்லேட் கவர் எல்லாத்துலையும் எனக்கு அவனோட லவ் தெரிஞ்சுது மா அப்புறம் ஏன் அவன் என்ன லவ் பண்ணல ? இப்போ தான் புரியுது, நான் டயட்ல இருந்து என்னோட உருவத்தை மெயின்டெய்ன் பண்ணி இருக்கணும். ஒருவேளை நான் ரோஷினி மாதிரி அழகா இருந்திருந்தா அவன் என்னை லவ் பண்ணியிருப்பான். எல்லாத்துக்கும் மேல அவனும் சாதாரண ஆம்பளைங்க மாதிரி தானே, தன்னோட மனைவி அழகா இருக்கணும்னு நெனச்சு இருப்பான். அப்போ தானே மத்தவங்க கிட்ட பெருமையா சொல்ல முடியும். என்ன மாதிரி குண்டான ஒருத்திய மனைவினு சொல்ல முடியுமா ? நான் லவ் பண்றதுக்கு தகுதியில்லாதவ மா “ என்று மைரா உடைந்து, தன்னையே தாழ்வாக நினைத்து பேசினாள்.

“ மைரா, நீ எங்க தேவத. நீ அவ்ளோ அழகா இருக்க. முட்டாளுங்க தான் வெளிப்புற அழக பார்த்து லவ், கல்யாணம் எல்லாம் செய்வாங்க, ஆனா அது எல்லாம் ரொம்ப வருஷம் நீடிக்காது “ என்று வசுந்தரா சொன்னதும், “ அம்மா, சபிக்காதீங்க ப்ளீஸ் “ என்று மைரா பதறினாள்.

“ நான் க்ரிஷ சபிக்கல, உண்மைய சொல்றேன் மைரா. மனசையும், குணத்தையும் பார்த்து லவ் பண்றவங்க, கல்யாணம் பண்றவங்க வாழ்க்கையில எவ்ளோ கஷ்டம் வந்தாலும் ஒன்னா இருப்பாங்க, அவ்ளோ சுலபமா விட்டுக்கொடுக்க மாட்டாங்க. எல்லா சந்தோஷங்களையும், கவலைகளையும் ஒன்னா பகிர்ந்துக்குவாங்க.. உலகமே எதிர்த்தாலும் ஒருத்தர ஒருத்த கைவிட மாட்டாங்க. சொல்லாமலேயே வலிய புரிஞ்சிக்குவாங்க, அவங்களுக்கு வார்த்தையோ, விளக்கமோ தேவையில்ல “ என்று வசுந்தரா கூறினார்.

“ ஆனா இந்த விஷயங்கள எல்லாம் என்கூட பகிர்ந்துக்க நெனச்ச ஆள நான் இழந்துட்டேன் மா “ என்று சொல்லி மைரா அழுத போது, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜன் உள்ளே நுழைந்து மைராவின் கையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்தார்.

“ இது சொல்ல தவறான நேரமா இருக்கலாம், ஆனா சரியான நேரமும் இது தான் மைரா. சில நேரத்துல நமக்கு ரொம்ப பெரிய  நல்லது கிடைக்க ஒரு தோல்விய தீவிர வலியோட அனுபவிக்க வேண்டி விதி இருக்கும். பாலைவனத்துல போகும் போது நிறைய கானல் நீரை பார்த்து நாம ஏமாந்து போகலாம் ஆனா அதுக்கு அப்புறம் உண்மையான ஒரு சோலைய, தண்ணீர  பார்க்கும்போது அந்த சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. உன் லவ் உண்மையானது மைரா ஆனா நீ தேர்ந்தெடுத்த ஆள் தான் தப்பு “ என்று அவளுக்கு புரிய வைத்தார்.

“ ஒருவேள அவன் சரியா ஆளா இருந்து, ரோஷினி மாதிரி சரியான நேரத்துல என் மனசுல இருக்குறத சொல்லாதது என் தப்பா இருந்தா என்ன செய்றது ? “ என்று மைரா கேட்டதும், “ உன் பேச்சுப்படியே வரேன். நீ அவன ப்ரொபோஸ் பண்ண அப்புறம் அவனுக்கு ரோஷினி மேல ஈர்ப்பு இல்ல லவ் வந்துருக்காது நினைக்குறியா? இத்தன வருஷமா உன் கூட இருந்த அப்றமும் உன் மேல அவனுக்கு வராத லவ் நீ அவனுக்கு ப்ரொபோஸ் பண்ண அப்புறம் மட்டும் வந்துருக்குமா ? ஒருவேள அவன் உனக்கு சம்மதம் சொல்லி இருந்தா கூட பாதியில ரோஷினிய தான் லவ் பண்றேன்னு சொல்லி உன்ன விட்டு போய் இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம் ? உன்னால அந்த துரோகத்த தாங்க முடியுமா ? “ என்று கேட்டார் ராஜன்.

தன் அப்பா சொன்னதை எல்லாம் கேட்ட மைரா, “ அப்பா, அவன் ஒன்னும் கெட்டவன் இல்ல “ என்றாள்.

“ க்ரிஷ் கெட்டவன்னு நான் சொல்லல. அவன் உனக்கு சரியான ஆள் இல்லனு சொல்றேன் மைரா. அவன் உனக்கு நல்ல ப்ரெண்டா மட்டும் தான் இருக்க முடியும். இதை நாம தான் உணராம விட்டுட்டோம் ஆனா இப்போவும் தாமதமாகல. நீ உடைஞ்சு போய் இருக்கனு எங்களுக்கு தெரியும், இந்த வலிய ஒன்னு இல்ல ரெண்டு நாள்ல குணப்படுத்த முடியாது தான் ஆனா நான் உன் கிட்ட கேட்குறது இதுல இருந்து வெளிய வர முயற்சி செய். ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் விட அதிகமா முயற்சி செய் “ என்று ராஜன் அன்பாக கேட்டுக் கொண்டார்.

“ நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உனக்கு எல்லாமே நல்லது மட்டும் தான் நடக்கும். கடவுள் உனக்கு ஒரு விஷயம் தர மறுத்தா அப்போ அத விட சிறந்தத உனக்கு கொடுக்க முடிவு பண்ணி இருப்பாரு “ என்று வசுந்தரா சொன்னதும், “ ப்ளீஸ் மாமா, என்னால தாங்க முடியல “ என்று மைரா அழுதாள்.

“ எனக்கு தெரியும் மைரா, இதுவும் கடந்து போகும், நாங்க உன் கூட இருக்கோம். நீ இந்த இடத்த விட்டு போக விரும்பி, நாங்க அத சந்தோஷமா செய்வோம். இதுல இருந்து நீ மீண்டு வர நாங்க எதையும் செய்வோம் “ என்று வசுந்தரா சொன்னதை கேட்டு, “ நான் இந்த இடத்த விட்டு போக விரும்பல மா. இந்த வலி உட்பட பல அழகான நினைவுகளும் இங்க தான் இருக்கு. நடந்த எல்லாத்துக்கும்  அர்ச்சனா அத்தையும், மதன் மாமாவும் அவங்க தான் காரணம்னு ரொம்ப கஷ்டப்படுறாங்க. நான் அவங்கள இன்னும் கஷ்டப்படுத்தி குற்ற உணர்வுல மூழ்கடிக்க விரும்பல “என்றாள் மைரா.

விம்மி அழுது கொண்டிருந்த மைராவை ராஜன் அணைத்துக் கொண்டு, மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, சட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, வசுந்த்ரா தன் வாயை உள்ளங்கைகளால் மூடி விம்மி விம்மி அழுதார். ஒருவரையொருவர் இறுகப் பற்றிக்கொண்டு வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ற துயரத்தை எண்ணி அழுது கொண்டிருந்த அந்த மெய்மறந்த தருணம் இடைவிடாத கதவு மணியால் உடைக்கப்பட்டது.

“ நைனா வந்துருப்பா, நான் அவள ரெண்டு நாள் இங்க தங்க வர சொல்லி இருந்தேன் “ என்று வசுந்தரா சொன்னதும், “ நான் போய் அவள கூட்டிட்டு வரேன், நீ இரு “ என்று எழுந்து சென்ற ராஜன் வாசலில் நைனாவை எதிர்பார்த்து கதவைத் திறந்தார், ஆனால் கேஷவ் முகத்தில் புன்னகையுடன் நிற்பதைக் கண்டு அவர் குழப்பமடைந்தார்.

ராஜனின் கவலையான முகத்தை பார்த்ததும், “ நல்லா இருக்கீங்களா மாமா ? நீங்க அழுதீங்களா ? ஏதாவது பிரச்சனையா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ கேஷவ் நீயா ? நான் நல்லா இருக்கேன். ஒரு பிரச்சனையும் இல்ல. வெங்காயம் நறுக்கிட்டு இருந்தேன். அது சரி, நீ நேத்து உன் தம்பியோட பர்த்டே பார்ட்டிக்கு ஏன் வரல ? “ என்று சாதாரணமாக கேட்டார் ராஜன்.

“ கடைசி நிமிஷம் ஒரு மீட்டிங் வந்துடுச்சு அதனால இன்னைக்கு தான் வர முடிஞ்சுது. வந்ததும் உங்கள பார்க்க நேரா இங்க வந்துட்டேன் “ என்று சொன்ன கேஷவ் அறை முழுவதும் மைராவை தேடிவிட்டு, “ மைராவுக்காக நான் ஒன்னும் கொண்டு வந்துருக்கேன். எங்க அவ ? “ என்று கேட்டான்.

ராஜன் நடந்தவற்றை சொல்ல முடியாமல் புன்னகையுடன் அவனை உள்ளே வரவேற்று, “ அவ ரூம்ல இருக்கா, நீ என்ன கொண்டு வந்துருக்க கேஷவ் “ என்று ராஜன் அவனிடம் கேட்டார்.

“ அவளுக்கு மியூசிக் மேல பைத்தியம்னு எனக்கு தெரியும். அவளுக்கு புடிச்ச பாடகரோட இசை நிகழ்ச்சிக்கு என் கம்பெனி டிக்கெட் கொடுத்தாங்க. நான் அத மைராவுக்கு கொடுக்கனும்னு நெனச்சேன். இந்த நிகழ்ச்சி நாளைக்கு நடக்க போகுது “ என்று கேஷவ் விளக்கம் அளித்தான்.

கேஷவ் சொன்னதை கேட்டு, “ அழுதுட்டே இருக்க மைராவுக்கு இது கொஞ்சம் ஆறுதலா இருக்கும். என் பொண்ணு மேல அந்த கடவுள் கொஞ்ச கருணை காட்டுனதுக்கு நன்றி சொல்லணும் “ என்று மனதில் நினைத்தபடி, கேஷவை பார்த்து, “ நான் அவள கூட்டிட்டு வரேன் கேஷவ், நீ உட்காரு. ப்ரிட்ஜுல ஜூஸ் இருக்கு எடுத்துக்க இல்ல கொஞ்சம் இரு உன் அத்தைய வந்து டீ போட சொல்றேன் “ என்று கூறினார்.

கேஷவ் தலையசைக்க, ராஜன் மாடிப்படிகளில் ஏறி மைராவின் அறைக்குச் சென்று மைராவிடமும் வசுந்தராவிடமும் எல்லாவற்றையும் சொன்னார். மைரா முகம் கழுவிவிட்டு பெற்றோருடன் ஹாலை அடைந்து, “ ஹலோ கெட்ச்அப், நீங்க ஏன் நேத்து வரல? “ என்று வழக்கம் போல அவனிடம் பேசினாள். ஆனால் கேஷவ் அவளை ஆச்சரியமாக பார்த்து, “ ஏய் அம்மு நீ நல்லா இருக்கியா? உடம்பு சரியில்லையா ? “ என்று கேட்டான்.

“ நான் நல்லா இருக்கேன் கெட்சப், பர்த்டே பார்ட்டிக்கு நீங்க சீக்கிரம் வந்துட்ட மாதிரி தெரியுது “ என்று மைரா கிண்டல் செய்ய அதற்கு அவன், “ பார்ட்டிக்கு வராம இருந்ததுக்கு ஈடு செய்ய அவனுக்கு பரிசு கொண்டு வந்துருக்கேன் ஆனா என்ன அங்கிள் சொல்லி கூப்பிடாம கெட்சப் சொல்லி நீ கூப்பிடுறத பார்த்தா உனக்கு தான் உடம்பு சரி இல்லனு நினைக்குறேன் ஆனா இனிமே நீ என்ன அங்கிள் சொல்லி கூப்பிட மாட்டணு நம்புறேன் ஏன்னா நான் உனக்கு புடிச்ச பாடகரோட மியூசிக் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிட்டு வந்துருக்கேன் “ என்று கேஷவ் கூறினான்.

“ உங்கள பார்த்தா பாவமா இருந்துச்சு அதனால கெட்சப் சொல்லி கூப்பிட்டேன் ஆனா நீங்க கவலைப்படுறதால உங்கள அங்கிள் சொல்லியே கூப்பிடுறேன். அப்புறம் நீங்க எனக்கு டிக்கெட் கொடுத்து தான் ஆகணும் “ என்று அவனை வம்பிழுத்தாள்.

கேஷவ் புன்னகையோடு அவளிடம் டிக்கெட்டுகளை நீட்ட, அதில் தனக்கு பிடித்த நட்சத்திரங்களின் பெயரைப் பார்த்து மைரா மென்மையாக புன்னகைத்தாள்.

“ என் பிரெண்ட் ஒருத்தன் ஸ்கூல் பிரின்சிபாலா இருக்கான். இந்த வருஷம் ஆண்டு விழாவுக்கு பசங்களுக்கு பாட்டு சொல்லி கொடுக்க ஒரு டீச்சர் வேணும்னு கேட்டான். நான் உன் பெயர சொல்லி இருக்கேன் ஆனா உன்கிட்ட கேட்டுட்டு உறுதியா சொல்றேன்னு சொல்லி இருக்கேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ பசங்களுக்கு  பயிற்சி கொடுக்கவா ? “ என்று மைரா அதிர்ச்சியானாள்.

“ ஆமா, ஸ்கூல் ஊட்டியில இருக்கு. நீ ஒரு மாசம் அங்க தங்கி பசங்களுக்கு ட்ரைனிங் தரனும். நீ தங்க இடம் அவங்களே ஏற்பாடு செய்வாங்க, அத்தை, மாமாவையும் கூட கூட்டிட்டு போகலாம் “ என்று கேஷவ் சொன்ன தகவலை கேட்டு, “ மைரா, சம்மதம் சொல்லு, இப்போ உனக்கு இந்த மாற்றம் வேணும் “ என்று வசுந்தரா  சொல்லும் போது மைரா சட்டென அவர் பேசுவதை குறுக்கிட்டு, “ அம்மா ப்ளீஸ். நான் பேசறேன் “ என்று சொன்னாள். அப்போது தான் தான் உளறி இருக்க கூடும் என்று வசுந்தரா உணர்ந்தார்.

அவர் எதிர்வினையாற்றிய விதத்திலிருந்து கேஷவ் ஆர்வத்துடன் அவர்களுக்கிடையில் பார்ப்பதைக் கண்டு தன் உணர்சிகளை மறைத்து அவனைப் பார்த்து புன்னகைத்து, “ நான் உனக்கு காபி கொண்டு வரேன் கேஷவ் “ என்று சொல்லிவிட்டு சென்றார்.

ராஜன் மைராவின் கையைப் பிடித்து அழுத்தி அவளை தைரியமாக இருக்க உறுதி செய்ததும், மைரா பெருமூச்சு விட்டபடி கேஷவுக்கு  எதிரே அமர்ந்தாள்.

“ நீ நல்லா இருக்கியா மைரா? என்ன விஷயம் ஏதாவது நடந்துச்சா ? “ என்று கேஷவ் அவளை கேட்க, “ கேஷவ் ஒரு பிரச்சனையும் இல்ல, உனக்கு ஒரு முக்கியாமான விஷயம் இன்னும் தெரியல ஆனா வீட்டுக்கு போனதும் உன் அப்பா, அம்மா அத சொல்லுவாங்க. இப்போ மைராவோட முடிவு என்னனு கேட்போம் “ என்று சொல்லி திசைத்திருப்பினார் ராஜன்.

“ நான் ட்ரைனிங் கொடுக்குற அளவுக்கு இன்னும் வளரல கெட்சப் இன்னும். இப்போ அசிஸ்டன்ட் வேலை தான் செய்றேன், அது அவங்களுக்கு சம்மதமா ? “ என்று மைரா சந்தேகமாக கேட்டதும், “ யாரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறது இல்ல அம்மு. வாய்ப்பு கிடைக்குற வரை எல்லோரும் ஃப்ரெஷ்ஷர் (fresher ) தான். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டியதில்ல, பிரின்சிபால் என்னோட நண்பன் தான். உனக்கு அங்க எல்லா வசதியும் ஏற்பாடு செய்வான். நீ தனியா வளர்ந்து வர இந்த வாய்ப்பு உனக்கு உதவியா இருக்கும். உன்னோட வேலை அவங்களுக்கு புடிச்சா இன்னும் நிறைய ஸ்கூளுக்கு உன்ன அவன் ரெகமன்ட் பண்ணுவான் “ என்று கேஷவ் அவளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினான்.

“ மைரா, இதுல உன்ன நம்பு, உனக்கு இருக்க ஆர்வன் நிச்சயம் உனக்கு ஒரு அடையாளத்த உருவாக்க இந்த வாய்ப்பு உதவியா இருக்கும்னு நான் நம்புறேன். வாய்ப்பு கதவைத் தட்டும் போது அத பயன்ப்படுத்து ” என்று ராஜனும் தன் மகளுக்கு எடுத்து சொன்னார்.

அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்ட மைரா, “ எனக்கு இன்னொரு வேண்டுகோள் இருக்கு, என் friend நைனாவ என்கூட கூட்டிட்டு போலாமா ? நாங்க ஒன்னா தான் கிளாஸ் எடுக்குறோம், அவ எனக்கு உதவிரா இருப்பா “ என்று கேஷவிடம் கேட்டாள்.

“ நோ ப்ராப்ளம், நான் அவன் கிட்ட பேசறேன், நீ அவங்களையும்  கூட்டிட்டு போ. நான் உன்னோட மொபைல் நம்பர் அவனுக்கு அனுப்புறேன். அவன் உன்கிட்ட பேசுவான். இப்போ நாளைக்கு மியூசிக் ஷோவுக்கு ஷாப்பிங் போ” என்று கேஷவ் சொல்ல, “ ஏன் ஷாப்பிங் போகணும் ? என்கிட்ட நிறைய டிரஸ் இருக்கே “ என்றாள் மைரா குழப்பத்துடன்.

“ இது வெறும் இசை நிகழ்ச்சியா இருந்தா உனக்கு புது டிரஸ் தேவையில்ல ஆனா நான் உனக்கு கொடுத்தது விவிஐபி டிக்கெட், அதனால உனக்கு புடிச்ச பாடகர்கள நீ சந்திக்க போறனு சொன்னா என்ன செய்வ ? “ என்று கேஷவ் சொன்னதும் அப்போது தான் டிக்கெட்டுகள் வி.வி.ஐ.பி. என்பதை பார்த்து மைரா உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டு, தோள்களை விளையாட்டாக குலுக்கிய கேஷவைப் பார்த்தாள். ராஜன் மைராவை கட்டிப்பிடித்து, தனது மகளை வேதனையில் இருந்து தற்காலிகமாக மீட்க சரியான நேரத்தில் வந்ததற்காக கேஷவுக்கு தன் மனதில் நன்றி சொன்னார்.

“ நான் கிளம்பறேன் மாமா. நேத்து வராததுக்கு அம்மா, அப்பா என் மேல மறுபடியும் கோவமா இருப்பாங்க “ என்று கேஷவ் சொன்னதும், “ இரு கேஷவ், டீ குடிச்சிட்டு போ “ என்றார் ராஜன்.

“ பரவாயில்ல. நான் சாயங்காலம் திரும்பவும் கிளம்பனும் அதனால அவங்க கூட கொஞ்ச நேரம் தான் இருக்க முடியும் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

ராஜன் சரி என்று தலையை அசைக்க, கேஷவ் புறப்பட்டு சென்றான். ராஜனைப் பார்த்த மைரா மீண்டும் அவரை அணைத்துக் கொண்டு அவள் கண்களில் வழிந்த விலையுயர்ந்த கண்ணீர்  அவள் கன்னங்களை அலங்கரிக்க அனுமதித்தாள். ராஜனின் சட்டையை பிடித்திருந்த அவளது முஷ்டி, அவள் உடைந்து போவதை உறுதி செய்தது. தன் மகளில் தலைமுடியை அவர் மெல்ல வருடினார்.

************************************

முன்னோட்டம்:

“ நீ நல்லா இருக்கியா அம்மு? வீட்ல இருந்து  கிளம்பின நேரத்துல  இருந்து நீ ஒரு வார்த்தை கூட பேசல. இது எனக்கு தெரிஞ்ச அம்மு இல்ல. நீ  ரொம்ப தைரியசாலி  எதுக்காகவும்,  யாருக்காகவும் உன்னோட அடையாளத்தை  மறந்துடாத. நான் இன்னைக்கு கிளம்புறேன் ஆனா உனக்கு என்ன வேணும்னாலும் எனக்கு போன் பண்ணு “

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 11:46 am

[…] ஏய் அம்மு நீ நல்லா இருக்கியா? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!