Home Family72. ஏன் என்ன கிஸ் பண்ணீங்க ?

72. ஏன் என்ன கிஸ் பண்ணீங்க ?

by Siragugal Novels
16 views

தான் நைனாவிடம் பேச வேண்டும் என்று மைரா சொன்னதும், தோழிகளை விட்டுவிட்டு எல்லோரும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர். மைரா நைனாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ மைரா “ என்று நைனா அழைத்ததும், “ வேணாம், என்ன அப்படி பெயர் சொல்லி கூப்பிடாத. நீ ஏன் இப்படி பண்ண ? நீ என்கிட்ட பேசியிருக்கலாம். “ என்று மைரா வருத்தத்தோடு கூறினாள்.

“ என் அம்மா என்ன கட்டாயப்படுத்தினாங்க, நீ நினைக்குறது  சரி தான். இந்த கல்யாணம் நாங்க லவ் பண்ணதால நடக்கல. அவன்  உனக்கு என்ன பண்ணான்னு எனக்குத் தெரியும், ஆனா என்ன நம்பு, அவனுக்கு உன் மேல எந்த கெட்ட நோக்கமும் இல்ல “ என்று நைனா கூறினாள். 

“ ஆஹா, என் நட்புக்கு அவன் கொடுத்த மரியாதைய, அவனோட அண்ணன் பொண்டாட்டிக்கு அவன் கொடுத்த மரியாதைய  பத்தி உன்கிட்ட சொன்னானா ? அவன் எனக்கு பதில் சொல்ல ஆயத்தமாகுற வரை என் முன்னாடி வர வேணாம்னு சொல்லு “ என்று மைரா கோவமாக கூறினாள்.

“ அவன் ஒரு முட்டாள், அவன் செய்தது எல்லாம் முட்டாள்தனம். அவன் அத சரி செய்ய முயற்சி பண்றான், அதுல நான் அவனுக்கு உதவியா இருக்கேன். உனக்கு என் மேல நம்பிக்க இருந்தா அப்போ அவனையும் நம்பு “ என்று நைனா சொன்னதும், “ நம்பிக்கைய  ஒருத்தர் சம்பாதிக்கனும். கொஞ்ச நாளா என் வாழ்க்க அவ்ளோ மோசமான நிலமையில இருக்கு அதுக்கு அவன் முக்கியமான காரணம் அதுக்கு என் சார்பா அவனுக்கு நன்றி சொல்லிடு “ என்று கூறிவிட்டு மைரா தன் அறைக்கு சென்றாள்.

நைனா அறைக்குள் நுழைந்ததும், க்ரிஷ் அவளை இழுத்து அருகில் உட்கார வைத்து அவளிடம் ஒரு மொபைலை கொடுத்தான்.

“ எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டியா ? “ என்று நைனா கேட்டதும், “ டெலீட் செய்ய இதுல எதுவும் இல்ல. அவ போட்டோ, வீடியோ எல்லாத்தையும் லேப்டாப்புல வெச்சுருக்கா நினைக்குறேன் அதனால அவ ஏதாவது செய்றதுக்கு முன்னாடி நாம அவளோட லேப்டாப் கண்டுபிடிக்கனும் “ என்று க்ரிஷ் பதில் சொன்னான்.

“ இப்ப இந்த மொபைல என்ன செய்யறது? “ என்று நைனா கேட்க, “ இது நம்மகிட்டயே இருக்கட்டும், இந்த மொபைல திருட அவ உன்ன கன்னத்துல அறைஞ்சத தாங்க வேண்டி இருந்துச்சு. இப்பவே கிளம்பலாம், அவளோட லேப்டாப் மாமா வீட்ல இருக்கும்னு நினைக்குறேன் இல்லன்னா நாம தீர்ந்தோம் “ என்றான் க்ரிஷ்.

“ மைரா நம்ம மேல செம்ம கோவமா இருக்கா “ என்று நைனா வருத்தமாக சொல்ல, “ லேப்டாப் கிடைச்சதும் எல்லாத்தையும் விளக்கி சொல்லலாம், இப்ப கிளம்பலாம் “ என்று க்ரிஷ் சொன்னதும், நைனா எழுந்து உடை மாற்ற ஒரு சாதாரண உடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

க்ரிஷ் தனது பொருட்களை பேக் செய்ய, நைனா தயாராகி வெளியே வந்தாள்.

“ நன்றி நைனா, நீ செய்ற எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி “ என்று க்ரிஷ் கூறியதை கேட்டு, “ க்ரிஷ், நீ அந்த சூனியக்காரி கிட்ட இருந்து தப்பிக்க நெனச்ச, என் அம்மா அவங்க அண்ணன் பையன கல்யாணம் செய்றதுல இருந்து தப்பிக்க நான் நெனச்சேன் ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருந்துச்சு, அது மைராவையும் உன் அண்ணனையும் அந்த சூனியக்காரி கிட்ட இருந்து காப்பாத்துறது. இது நாம விரும்பி பண்ணிக்கிட்ட கல்யாணம் இல்ல அதனால நன்றி சொல்லாத “ என்று நைனா அவனிடம் சொன்னாள்.

“ நான் உண்மையா மைராவ என் பெஸ்ட் ப்ரெண்டா நெனச்சேன், நான் இப்பவும் அப்படி தான் நினைக்குறேன் ஆனா அவளுக்கு என் அண்ணன் மேல இருந்த பிணைப்பு எங்க நட்புல பொறமையோட எல்லைய நான் நிர்ணயிக்க தவறிட்டேன். நான் பண்ண எல்லாத்துக்கும் இப்போ வருந்துறேன் ஆனா ரொம்ப லேட் ஆயிடுச்சு. நான் என் பெஸ்ட் ப்ரெண்ட இழந்துட்டேன் “ என்று க்ரிஷ் வருந்தி அழுதான். 

“ இல்ல, நாம அவளுக்கு புரிய வைப்போம், அவ புரிஞ்சிக்குவா “ என்று நைனா அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

“ அப்போ என் அண்ணா ? அவர் ஏற்கனவே என்ன வெறுக்குறாரு “ என்று க்ரிஷ் சொல்ல, “ நாம சரியான நேரத்துக்கு பெங்களூர் போய் சேர்ந்தா மட்டும் தான் இதையெல்லாம் சரி செய்ய முடியும் “ என்றாள் நைனா. 

அவள் சொன்னதை கேட்டு க்ரிஷ் தலையை ஆட்ட, இருவரும் கிளம்பி விமான நிலையத்தை அடைய ஒரு காரில் புறப்பட்டனர்.

மைரா புத்துணர்ச்சி பெற்று படுக்கையில் படுத்த பிறகு கேஷவ் தனது லேப்டாப்பை திறந்து நைனாவின் மொபைலை ஹேக் செய்யத் தொடங்கினான். அவளது அழைப்புகள், மெசேஜ் மற்றும் அவளுக்கும், க்ரிஷுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட மெசேஜ் அனைத்தையும் சரிபார்த்தான் ஆனால் அவனுக்கு ஆச்சரியமாக முந்தைய நாள் வரை அவர்களிடையே எந்த ஒரு அழைப்பு அல்லது செய்திகள் எதுவும் பரிமாறாப்படவில்லை.

“ அவங்க ஒரு நாளும் தொடர்புலையே இல்ல அப்போ ஏன் லவ் பண்றதா பொய் சொன்னாங்க ? இப்போ ஏன் ரெண்டு பேரும் அவசரமா கல்யாணம் பண்ணாங்க ? “ என்று கேஷவ் மனதில் யோசிக்க ஆரம்பித்தான்.

க்ரிஷும், நைனாவும் நள்ளிரவில் அவனது மாமா வீட்டிற்கு சென்றனர். ரோஷினியின் அப்பாவும், அம்மாவும் க்ரிஷை திட்டும் விளிம்பில் இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு தங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த ஜோடியை அமைதியாக பார்த்தனர்.

“ மாமா நீங்க என் மேல கோவமா இருப்பீங்கனு எனக்கு தெரியும் அதனால தான் உங்கள நேர்ல சந்திச்சு பேச வந்துருக்கேன் ஆனா இப்போ ரொம்ப லேட் ஆயிடுச்சு அதனால ரெஸ்ட் எடுத்துட்டு காலையில பேசலாமா? “ என்று க்ரிஷ் மெல்ல அவரிடம் கேட்டான். 

“ நாங்க இங்க தங்குறது உங்களுக்கு புடிக்கலனா நைட்டு நாங்க ஏதாவது ஹோட்டலுக்கு தங்க போறோம் “ என்று நைனா சொன்னதும், ரோஷினியின் அப்பா ஒரு அறையை சுட்டிக்காட்டி, “ அந்த ரூம்ல தங்குங்க “ என்று சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் தன் அறைக்குச் சென்றார்.

க்ரிஷ் முன்பு தங்கியிருந்த விருந்தினர் அறைக்குள் க்ரிஷும்,  நைனாவும் நுழைந்தனர். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் இருவரும் அமைதியாக ரோஷினியின் அறைக்குள் நுழைந்தனர். நைனா கதவை மூடிய பிறகு மொபைல் டார்ச் உதவியுடன் அவர்கள் அந்த அறையைத் தேடத் தொடங்கினர்.

ஒவ்வொரு நிமிடமும் லேப்டாப்பை கண்டுபிடிக்க முடியாமல் பொறுமை இழந்து கொண்டிருந்தான் க்ரிஷ். நைனா அலமாரியைத் திறந்து எல்லா இடங்களிலும் சோதித்தாள் ஆனால் அவர்களுக்கு லேப்டாப் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் இருவரும்  அவர்களுக்கு கொடுத்த அறைக்குத் திரும்ப, க்ரிஷ் தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டு தரையில் விழுந்தான்.

“ நான் மறுபடியும் தோற்று போயிட்டேன். அவ லேப்டாப் இங்க இல்லனா ஏற எங்க இருக்கும், ஒருவேள அவளோட friends கிட்ட கொடுத்து வெச்சுருப்பா. இனி நாம அத எப்படி கண்டுபிடிக்குறது ? அந்த போட்டோ, வீடியோவ அவ வெளிய கசியவிட்டா என்ன செய்றது? மைரா அவ வாழ்நாள்ல என்ன எப்பவும் வெறுப்பா. நான் அவள நிரந்தரமா இழந்துடுவேன் “ என்று சொல்லி தன்னைத்தானே கன்னத்தில் அறைந்து கண்ணீர் விட்டான்.

“ நான் பண்ணதுக்கு என் குடும்பம் கஷ்டப்படுறத பார்க்குறத விட நான் சாகுறதே மேல் “ என்று க்ரிஷ் அழுததும், நைனா குனிந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

“ வாயை மூடு க்ரிஷ், இது உணர்ச்சிவசப்படுறதுக்கான நேரம் இல்ல. அவளோட friends பத்தி நாம கண்டுபுடிக்கணும் “ என்று நைனா சொல்ல, “ இல்ல, அவங்க அட்ரஸ் இருந்தாலும் அவளோட லேப்டாப் எப்படி கிடைக்கும்? அவ ஒரு சைக்கோ, அவ பழிவாங்க எந்த எல்லைக்கும் போவா “ என்றான் க்ரிஷ்.

“ அவ ஒண்ணும் பண்ண மாட்டா க்ரிஷ். நமக்கு அவ லேப்டாப் கிடைக்கலனா அவளோட அப்பா, அம்மாவ அவளுக்கு எதிரா பயன்படுத்துவோம் “ என்று நைனா சொன்னதை கேட்ட க்ரிஷ், “  அவ அவங்களோட பொண்ணு நைனா, அவங்க ஏன் நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்க ? நாம லேப்டாப் கண்டுபுடிக்க தான் வந்தோம் ஆனா இப்போ இந்த பிரச்சனையில இருந்து வெளிய வர நமக்கு எந்த நம்பிக்கையும் இல்ல. அவளோட சுயரூபம் தெரியாம அளவுக்கு நான் ஏன் முட்டாளாக இருந்தேன்? “ என்று க்ரிஷ் புலம்பினான்.

“ ஆமா நீ முட்டாள் தான் இல்லனா நீ ஏன் அவள லவ் பண்ணி இருக்க போற ? “ என்று நைனா சொல்ல, க்ரிஷ் அணைப்பிலிருந்து பின்வாங்கியதும் நைனா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ வா க்ரிஷ், நடந்தது நடந்து போச்சு. அத நெனச்சு அழறதால உனக்கு எந்த நல்லதும் கிடைக்காது. மைரா அவள பத்தி உன்ன எச்சரிக்க பண்ணா ஆனா உனக்கு அந்த கேக் மூஞ்சி மேல அப்படி ஒரு காதல் இருந்துச்சு “ என்று நைனா கிண்டல் செய்தாள்.

“ அது லவ் இல்ல, அத நான் ரொம்ப மாசத்துக்கு முன்னாடியே புரிஞ்சிகிட்டேன். நான் இந்த பிரச்சனையில இருந்து வெளிய வர விரும்புறேன் நைனா “ என்று க்ரிஷ் மெல்ல கூறினான்.

“ நீ போய் தூங்கு, காலையில இத பத்தி யோசிப்போம். ஒரே விஷயத்தை திரும்ப, திரும்ப பேசுனா நமக்கு எந்த தீர்வும் கிடைக்காது. நான் பெட்ல தூங்குறேன், நீ சோபாவுல படுத்து தூங்கு. நாம இன்னும் என் அப்பா, அம்மாவ வேற சந்திக்கல “ என்று நைனா கவலையில் பெருமூச்சுவிட்டாள்.

“ ஆமா, நாளைக்கு போய் சந்திப்போம். காணாம போன மொபைல் பத்தி அவளுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு, “ கொஞ்ச நேரம் அவளுக்குப் பைத்தியம் பிடிக்கட்டும். இப்போ நாம கொஞ்சம் நிம்மதியா தூங்கலாம். எனக்கு கண்ணுக்கு கீழ கருவளைம் இருந்தா புடிக்காது “ என்று நைனா சொன்னாள்.

க்ரிஷ் அவள் வார்த்தைகளை கேட்டு சிரித்தான்.

சென்னையில் கண் விழித்த கேஷவ் மைரா விழித்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான்.

“ என்ன யோசிக்குற அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ இன்னைக்கு எனக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கும்னு யூகிக்க முயற்சி செய்றேன் “ என்றாள் மைரா.

“ நான் ஒரு முட்டாளா இருந்தேன், தப்பு பண்ணிட்டேன்னு ஒத்துக்குறேன். கடந்த மூணு நாளா நடந்த எல்லாத்தையும் நெனச்சு நீ அதிர்ச்சியா, வருத்தமா இருக்கனு புரியுது ஆனா நான் உன்ன லவ் பண்றேன் அம்மு, உண்மையா லவ் பண்றேன் “ என்று கேஷவ் மனமுடைந்து வேதனையோடு கூறினான்.

கேஷ்வ் கிளம்புவதற்காக படுக்கையில் இருந்து இறங்க, மைரா அவனது மணிக்கட்டைப் பிடித்து அவனைத் தடுத்தாள்.

“ உங்க லவ் எனக்கு புரியாம இருந்திருந்தா இங்க ஒரே படுக்கையில நான் உங்க கூட இருந்துருக்க மாட்டேன் கேஷவ். நீங்க என்ன லவ் பண்ற அளவுக்கு இல்லனாலும் நானும் உங்கள லவ் பண்றேன்னு நீங்க மறந்துட்டீங்க போல. நீங்க முட்டாள் தான் ஆனா இதுல சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா ? நானும் உங்கள மாதிரி முட்டாள் தான் அதனால நமக்குள்ள எல்லாமே பரஸ்பரம் “ என்று மைரா சொன்னதை கேட்டதும் கேஷவ் அவள் அருகில் அமர்ந்து இருவரின் நெற்றியை ஒன்றாக அழுத்தி கண்களை மூடினான்.

“ உன்கிட்ட சொல்ல என்கிட்ட வேற எதுவும் இல்ல மைரா ஆனா உன் முகத்துல சிரிப்ப கொண்டு வர மாதிரி காட்ட நான் ஒன்னு வெச்சுருக்கேன். அது நம்ம வீட்ல இருக்கு “ என்று கேஷவ் சொன்னதும், “ இது நம்ம வீடு இல்லையா? “ என்று மைரா கேட்டாள்.

“ இதுவும் நம்ம வீடு தான் அம்மு ஆனா இது அம்மாவுக்காக அப்பா கட்டின வீடு. அவங்க ரெண்டு பேரும் அவங்க வாழ்க்கையோட நினைவுகள இதுல நிரப்பி வச்சிருக்காங்க, அதே மாதிரி உனக்காக, நமக்காக நானும் ஒரு வீடு கட்டி இருக்கேன். நான் அத தான் நம்ம வீடுனு சொல்ல விரும்புறேன். எதிர்காலத்துல நம்ம  குழந்தைங்க கூட பகிர்ந்துக்க நாம நிறைய நினைவுகள உருவாக்குவோம் “ என்றான் கேஷவ்.

“ எல்லா விஷயத்துலயும் அதுல இருக்க எல்லா அம்சத்தையும் நீங்க எப்படி யோசிக்குறீங்க ? “ என்று மைரா ஆச்சரியமாக கேட்டாள்.

“ நான் அப்படியெல்லாம் யோசிக்க மாட்டேன். உன் முகத்துல சிரிப்ப கொண்டுவர வழிய தான் நான் கண்டுபிடிப்பேன் “ என்று கேஷவ் பதில் சொன்னதும், மைரா படுக்கையில் மண்டியிட்டு கேஷவை அனைத்து கொண்டு அவன் மார்பில் தலை சாய்த்தாள்.

“ ஐ லவ் யூ கேஷவ் “ என்று மைரா மெல்ல சொன்னதும், கேஷவ் மகிழ்ச்சியில் அவளை படுக்கையில் இருந்து இழுத்து தூக்கி சுழற்றினான்.

“ மறுபடியும் சொல்லு அம்மு “ என்று அவன் கேட்க, “ ஐ லவ் யூ கேஷவ், எல்லா தண்டனையில இருந்தும் உங்கள விடுவிக்குறேன் “ என்று மைரா அவன் காதில் கிசுகிசுத்ததும், அவன் அவளை சுழற்றுவதை நிறுத்தி அவள் உதடுகளை வெறித்தனமாக முத்தமிட்டான்.

மைரா அவனது முத்தத்தின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க முயன்றாள், ஆனால் எல்லா உற்சாகத்திலும் அவனது அதீத உணர்வுகளில்  மோசமாக தோல்வியடைந்தாள். அவள் அவனை அடிக்க ஆரம்பித்த பிறகே அவன் அவள் உதடுகளை விடுவித்தான். மைரா ஒரு மாரத்தானை ஓடி முடித்தது போல் மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள், ஆனால் கேஷவ் புன்னகைத்து அவள் முகம் முழுவதும் முத்தங்களைப் பொழிந்தான்.

“ நீ ‘ஐ லவ் யூ ‘ சொல்லும் போது இந்த உலகத்துலையே சந்தோஷமான மனுஷனா என்ன மாத்துற, எனக்கு தண்டனையில இருந்து விடுதல கொடுத்ததுக்கும் ரொம்ப நன்றி “ என்று கேஷவ் கூறினான் ஆனால் மைரா அவனை முறைத்து, “ நீங்க ஏன் என்ன கிஸ் பண்ணீங்க ? நாம இன்னும் பல் துலக்கல” என்று கூறினாள்.

“ ஐயோ மன்னிச்சிடு, சரி அப்ப நான் கொடுத்த முத்தத்த திரும்ப வாங்கிக்கறேன் “ என்று சொல்லி கேஷவ் மீண்டும் அவளை முத்தமிட ஆரம்பித்தான், ஆனால் இம்முறை மெதுவான வேகத்தில் அவளை அவனுக்கு ஈடுகொடுக்க அனுமதித்தான்.

“ 74 மணி நேரத்துக்கு அப்புறம் நாம கிஸ் பண்ணி இருக்கோம்.  இது நம்ம வாழ்க்கையில இன்னொரு முறை வேணாம். நான் உன்னோட முத்தத்துக்கு அடிமையாகிட்டேன், அதெல்லாம் என் எனெர்ஜிய அதிகப்படுத்தும் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா புன்னகைத்தபடி அலமாரியை நோக்கி நகர்ந்து தயாராக ஒரு ஆடையை எடுக்க கேஷவ் அவளுக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தான்.

“ மைரா…” என்று அவன் மெல்ல அழைக்க, “ சொல்லுங்க கேஷவ் “ என்றாள் மைரா.

“ ஐ லவ் யூ “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் சொல்ல, அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மைரா உறைந்து போய், உற்சாகத்தில் தன் இதயம் படபடப்பதை உணர்ந்தாள். கேஷவ் அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து அவள் கழுத்தை முத்தமிட்டான்.

“ ஐ லவ் யூ மைரா, நான் சொல்றத உன்னால உணர முடியுதா ? “ என்று கேஷவ் கேட்க, மைரா ஆம் என்று தலையை அசைத்து அவன் மார்பில் சாய்ந்தாள்.

“ நான் மனசு உடைஞ்சு இருந்த அப்போ உங்க பாட்டு தான் எனக்கு ஆறுதலா இருந்துச்சு, உடைஞ்சு போய் இருந்த ஆத்மாவ நீங்க மறுபடியும் உயிர் கொடுத்தீங்க, நீங்க என்ன ஒரு நல்ல மனுஷியா மாத்தினீங்க. நான் என்ன பார்க்குற விதத்த நீங்க மாத்துனீங்க, நான் உங்க கூட முழுமையா உணர்றேன். உங்க அரவனைப்புல நான் பாதுகாப்பா உணர்றேன், நீங்க என் கெட்சப் “ என்று மைரா மெல்லிய குரலில் சொன்னதை கேட்டு, கேஷவ் அவளது காது மடல்களை முத்தமிட்டான். அவளை அவன் கைகளில் வைத்திருப்பதிலும், அவள் அவனுக்காக தனது உணர்வுகளை ஒப்புக்கொள்வதைக் கேட்பதிலும் திருப்தி அடைந்தான்.

“ சரி கீழ போய் நமக்காக என்ன காத்திருக்குனு பார்ப்போம் “ என்று மைரா சொன்ன பிறகு அவர்கள் தயாராகி ஹாலுக்கு சென்றனர். ரோஷினி தன் அறைக்கும் ஹாலுக்கும் முன்னும் பின்னுமாக ஓடிக்கொண்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

“ அம்மா அவ என்ன தேடுறா? “ என்று மைரா கேட்டதும், “ அவ மொபைல தேடுறா. அவ தேடுறது இது நான்காவது முறை “ என்று அர்ச்சனா சொன்னதும், கேஷவ் தன் அறைக்கு விரைந்தான். அவன் அவசரமாக ஓடுவதை பார்த்து மைரா அவனைப் பின்தொடர்ந்தாள்.

**********************************************

முன்னோட்டம்:

“ உன்ன எதிர்த்து நான் ஜெயிக்க நினைக்குற அளவுக்கு முதல்ல நீ யாரு ? என் சந்தோஷமான வாழ்க்கையில நீ ஒருநாளும்  இருந்தது இல்ல. நான் உனக்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்றேன், உன்னோட பொருட்கள பேக் பண்ணிட்டு நீ வந்த இடத்துக்கே  ஓடி போ “

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:55 pm

[…] 72. ஏன் என்ன கிஸ் பண்ணீங்க ? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!