Home Family73. இன்னிக்கு அவள கொன்னுடுறேன்

73. இன்னிக்கு அவள கொன்னுடுறேன்

by Siragugal Novels
17 views

கேஷவை பின்தொடர்ந்த மைரா, லேப்டாப்பில் அவன் செய்வதை பார்த்துக் கொண்டே அவன் அருகில் உட்கார்ந்தாள்.

“ இது மாதிரி படத்துல பார்த்துருக்கேன். எதையாவது ட்ராக் பண்றீங்களா? “ என்று மைரா கேட்க, “ ஆமா அம்மு, நான் அவளோட மொபைலை கண்டுபிடிக்க ட்ரை பண்றேன் “ என்றான் கேஷவ். 

சில நிமிடங்கள் கழித்து அவன் சட்டென இருக்கையில் கையை ஓங்கி அடிக்க, மைரா திடுக்கிட்டாள்.

“ நான் உன்ன பயமுறுத்தியிருந்தா ஸாரி அம்மு. அவளோட மொபைல கண்டுபிடிச்சுட்டேன், அது இப்போ பெங்களூர்ல இருக்கு “ என்று கேஷவ் சொன்னதும், “ பெங்களூரா ? “ என்று மைரா அதிர்ச்சியானாள்.

“ க்ரிஷும், நைனாவும் அங்க போகும் போது அத கொண்டு போய் இருக்கணும். க்ரிஷ பிளாக்மெயில் செய்ய அவனுக்கு எதிரா ஏதோ ஒன்னு அவ கிட்ட இருக்குனு நான் நம்புறேன், அதனால நாங்க அவங்க பேசுறத எல்லாம் ஒட்டுக்கேட்கத் தொடங்கினோம், அப்புறம் அவங்க மொபைல்கள ஹேக் பண்ணோம். உன் ஃப்ரெண்ட் அவளும் க்ரிஷும் தினமும் பேசிட்டு இருந்ததா சொன்னா ஆனா நேத்து ராத்திரி செக் பண்ணி பார்த்ததுல கல்யாணத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர அவங்க ஒரு முறை கூட பேசுனதே இல்ல “ என்று கேஷவ் விளக்கம் கொடுத்தான்.

“ அவங்க லவ் பண்ணலன்னு எனக்கு தெரியும் ஆனா அவங்க கல்யாணம் பண்ணதுக்கு என்ன காரணமா இருக்கும் ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.

“ க்ரிஷ் நம்ம கிட்ட இருந்து மறைக்குற ஏதோ ஒன்னு நைனாவுக்குத் தெரிஞ்சு இருக்கு. அவங்க ஏதோ செய்றாங்க. ஆதாரம் கிடைக்குதானு பார்க்க நான் அவளோட மொபைல முழுசா ஹேக் செய்ய போறேன் “ என்று கேஷவ் சொல்ல, மைரா சரி என்று முணுமுணுத்தாள். அவன் தனது வேலையைத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் கதவைப் பூட்டினார்கள்.

பெங்களூரில், க்ரிஷும், நைனாவும் தயாராகி ரோஷினியின் பெற்றோர் அவர்களுக்காகக் காத்திருந்த அறைக்குள் நுழைந்தனர்.

“ ஸாரி ரொம்ப நேரம் தூங்கிட்டோம். மாமா, நாங்க இன்னும் நைனாவோட அப்பா, அம்மாவ சந்திக்கல, ஆனா எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்க முதல்ல உங்கள பார்த்தா தான் சரியா  இருக்கும்னு நெனச்சேன். ரோஷினி உங்க பொண்ணு ஆனா நானும் உங்க தங்கச்சி மகன் தானே, நீங்க என்ன உங்க மகன மாதிரி  நடத்துனீங்க அதனால என்னோட நிலமைய நீங்க புரிஞ்சிக்குவீங்கனு நம்புறேன்.” என்று க்ரிஷ் அவர்களிடம் கூறினான்.

“ நீ என்ன நியாயம் சொன்னாலும் எங்க பொண்ணு இப்போ அனுபவிக்குற வலிய சமாதானம் செய்ய முடியாது “ என்று ரோஷினியின் அம்மா கோவமாக பேசினார்.

“ அத்தை, எங்க உறவ காப்பாத்த நிறைய முயற்சி பண்ணிட்டேன். எங்க நிச்சயதார்த்தத்துக்கு அப்புறம் வேற ஒரு ரோஷினிய தான் நான் பார்த்தேன். அவளோட எதிர்பார்ப்புகள என்னால ஈடு செய்யவே முடியல, அவ எப்பவும் அடுத்தவங்க பத்தியே தான் பேசி பொறாமையில இருந்தா குறிப்பா மைரா அப்புறம் என் அண்ணன். அவங்க எது பண்ணாலும் அதுல குற்றம் கண்டுப்புடிக்க ஆரம்பிச்சு,  அவங்கள கிண்டல் செய்றத முழு வேலையா செய்ய ஆரம்பிச்சா. நான் அவள திசைதிருப்ப முயற்சி பண்ணேன், என் நேரத்தை அவளோட இருக்க மாதிரி பார்த்துகிட்டேன், என் குடும்பமே  அவள கவனிச்சு பார்த்துகிட்டாங்க ஆனா அவ சந்தோஷமா இல்ல.

அவ தினமும் என்கூட சண்ட மட்டுமே போட ஆரம்பிச்சு நான்  சோர்வடைய ஆரம்பிச்சுட்டேன். ஒரு கட்டத்துல எங்களுக்கு நடுவுல இருந்தது லவ் இல்லனு நான் உணர்ந்தேன், இருந்தாலும் நான் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாரா இருந்தேன், ஆனா என்னையும் என் குடும்பத்தையும் காயப்படுத்த அவ எல்லாத்தையும் செய்ய ஆர்மபிச்சுட்டா. அதுக்கு மேல என்னால முடியல, பிரிஞ்சி போக முடிவு பண்ணேன் ஆனா அவ அதுக்கும் தயாரா இல்ல “ என்று க்ரிஷ் மிகுந்த வருத்தம் மற்றும் வேதனையோடு கூறினான்.

“ நீ எங்ககிட்ட வந்து சொல்லி இருக்கணும், நான் அவகிட்ட  பேசியிருப்பேன் “ என்று ரோஷினியின் அப்பா சொல்ல, “ நான் முயற்சி பண்ணேன் ஆனா அவ என் அம்மா கூட இருக்க உங்க உறவ சொல்லி என்ன பிளாக்மெயில் செய்ய ஆரம்பிச்சா. நான் அவ கூட ரெண்டு முறை அந்த உறவுல இருந்து பிரிஞ்சு போனேன் ஆனா அவ என்ன விட தயாரா இல்ல, அதனால நான் என் வாழ்க்கையோட ரொம்ப மோசமான நிலையில இருந்த அப்போ எனக்கு சப்போர்ட் பண்ண நைனாவ கல்யாணம் செய்றத தவிர எனக்கு வேற வழியில்ல “ என்று க்ரிஷ் விளக்கம் அளித்தான்.

“ நீ எல்லா சாக்குப்போக்கும் சொல்லு, க்ரிஷ், ஆனா எங்க  பொண்ணுக்கு இப்போ என்ன ஆகும். உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு “ என்று ரோஷினியின் அம்மா கண்ணீர் வடித்தார்.

“ நாங்க ஒன்னா எடுத்த போட்டோ, வீடியோ வெச்சு அவ என்ன பிளாக்மெயில் பண்ணா. சில போட்டோவுல நாங்க நெருக்கமா இருந்தோம் ஆனா என்ன நம்புங்க, நான் என் வரம்ப மீறல “ என்று க்ரிஷ் சத்தியம் செய்தான்.

“ தயவு செஞ்சு எங்கள மன்னிச்சு, ரோஷினி கிட்ட பேசி இதுல இருந்து எங்கள காப்பாத்துங்க “ என்று நைனா சொன்னதை கேட்டு, “ நான் அவள மறுபடியும் இங்க கூட்டிட்டு வரேன் “ என்று ரோஷினியின் அப்பா உறுதியளித்தார்.

“ ரொம்ப நன்றி மாமா, நாங்க இப்பவே கிளம்புறோம். எங்கள புரிஞ்சிகிட்டதுக்கு ரொம்ப நன்றி “ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட க்ரிஷும், நைனாவும் விமானம் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்தனர்.

நைனாவின் மொபைலை ஹேக் செய்த பின்னர் கேஷவ் மற்றும் மைரா ஆகியோர் அவளது வீட்டிற்கு சென்றனர். நைனாவின் அம்மா கதவைத் திறந்து அவர்களை உள்ளே வரவேற்றார்.

“ அவளுக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு உனக்குத் தெரியுமா? அவ லவ் பண்றதா ஏன் எங்ககிட்ட சொல்லல? “ என்று நைனாவின் அம்மா கேட்டதும், “ எனக்கும் ஒன்னும் தெரியாது. இதெல்லாம் நடந்த அப்போ நான் ஊர்ல இல்ல. அவ என் புருஷன் கேஷவோட தம்பி க்ரிஷ தான் கல்யாணம் பண்ணி இருக்கா “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ இவரோட தம்பியா ? அவ உன் புருஷனோட தம்பிய லவ் பண்றது உனக்கு எப்படி தெரியாம போச்சு ? “ என்று நைனாவின் அப்பா கேட்க, மைரா பதில் சொல்வதற்குள் கேஷவ் குறுக்கிட்டான்.

“ சார், நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அவங்க கல்யாணத்த பத்தி தெரிஞ்ச அப்போ நீங்க எவ்ளோ அதிர்ச்சியா உணர்ந்தீங்களோ அதே அளவுக்கு நாங்களும் அதிர்சியானோம். ஆனா இப்போ நடந்தத நாம மாத்த முடியாது, அதனால அவங்க சார்பா பேச நான் இங்க வந்துருக்கேன். நீங்க அவளோட அப்பா, அம்மா. அவ பண்ண காரியத்துக்கு கவலைப்படவும் கோவப்படவும் உரிமை இருக்கு ஆனா நீங்க என் தம்பியையும், என் குடும்பத்தையும் நம்பலாம். உங்க பொண்ணு எங்க வீட்ல சந்தோஷமா இருப்பா, அவ எங்க வீட்டு மகளா நடத்துவோம் “ என்று கேஷவ் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான்.

“ அவள என் அண்ணன் பையனுக்கு கல்யாணம் செய்ய ஆசைப்பட்டேன் “ என்று நைனாவின் அம்மா சொன்னதும், “ அம்மா, அவளுக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்ல, அவள கட்டாயப்படுத்துனது கூட அவங்க திடீர் கல்யாணம் செய்ய ஒரு காரணமா இருக்கலாம். அவ உங்க ஒரே பொண்ணு, உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும். ப்ளீஸ் அவள மன்னிச்சிடுங்க. அவ ஒரு வேகத்துல முடிவு எடுக்குற ஆள் இல்ல. அவ தன்னோட வாழ்க்கைய தீர்மானிக்குற அளவுக்கு பக்குவம் இருக்கு “ என்று மைரா சமாதானம் செய்ய முயன்றாள்.

“ நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை தான், அத கோவப்பட்டு, வருத்தப்பட்டு வீணாக்க வேணாம். தயவு செஞ்சு அவங்கள மன்னிச்சுடுங்க. நீங்க அவங்கள மன்னிக்க தயாரா இருந்தா எனக்கு போன் பண்ணுங்க, அவங்களுக்கு ஒரு ரிசப்ஷன் ஏற்பாடு செய்ய நான் என் அப்பா, அம்மாவோட பேச வரேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் மைராவுக்கு சைகை காட்ட, கேஷவின் பிசினஸ் கார்டை மேஜை மீது வைத்துவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

மாலையில் வீடு திரும்பிய க்ரிஷும், நைனாவும் அவளின் பெற்றோர் மதன் மற்றும் அர்ச்சனாவுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ரோஷினியைத் தேடி சுற்றிலும் பார்த்தனர், ஆனால் அவள் இல்லை என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“ அம்மா, அப்பா.. நான்.. நான் என்ன மன்னிச்சிடுங்க “ என்று நைனா சொல்ல, “ நீ பண்ண காரியத்துக்கு உன் மேல நாங்க கோவமா இருக்கோம் நைனா. நாங்க உனக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுத்தோம், பதிலுக்கு நீ என்ன பண்ணி இருக்க ? உன் அம்மா அவளோட அண்ணன் பையன கல்யாணம் பண்ணிக்க வற்புறுத்துனத ஒத்துக்கறேன், ஆனா நீ லவ் பண்றத பத்தி என்கிட்ட சொல்லி இருக்கலாம் “ என்று நைனாவின் அப்பா வருத்தத்துடன் கூறினார்.

“ தயவு செஞ்சு நைனா மேல வருத்தப்படாதீங்க, இது என் முடிவு, அவளும் அதுக்கும் சம்மதிச்சா “ என்று க்ரிஷ் நைனாவுக்கு ஆதரவாக நின்றான். 

“ என் அண்ணன் பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் உன்ன கட்டாயப்படுத்துனது என் தப்பு தான் ஆனா அதுக்காக நான் உன்ன பத்தி கவலைப்படலனு அர்த்தம் இல்ல. நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க தான் நான் விரும்பினோம் “ என்று நைனாவின் அம்மா சொன்னார்.

“ அம்மா, அத பத்தி இப்போ பேச வேணாம், உங்க எல்லாரோட முடிவையும் அவங்களுக்கு சொல்லுங்க “ என்றாள் மைரா.

“ க்ரிஷ், நைனா, நீங்க ரெண்டு பேரும் எங்க எல்லாரையும் காயப்படுத்தி இருக்கீங்க ஆனா நாங்க உங்கள மன்னிக்குறோம், இன்னைல இருந்து ஒரு வாரத்துல உங்க கல்யாண ரிசப்ஷன் நடத்த நாங்க எல்லாரும் முடிவு பண்ணி இருக்கோம். நாளையில இருந்து ஏற்பாடுகள தொடங்குவோம்.” என்று மதன் மகிழ்ச்சியோடு கூறினார்.

குடும்பத்தின் முடிவைக் கேட்டு க்ரிஷும், நைனாவும் அதிர்ச்சியடைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது காலடி ஓசையைக் கேட்டு இருவரும் தங்கள் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தனர். ரோஷினி நுழைவதைக் கண்டு அவர்கள் திரும்பி முகம் சுளித்தனர், ஆனால் நைனா மட்டும் அவள் வெறுங்கையுடன் நடப்பதை கவனித்தாள்.

“ உங்க முடிவுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், இவ்ளோ சீக்கிரம் எங்கள மன்னிச்சதுக்கு ரொம்ப நன்றி “ என்று சொல்லி நைனா க்ரிஷின் கையைப் பிடித்து அவனையும் நடிக்கும்படி கண்ணடித்தாள். க்ரிஷ் புன்னகையுடன் தன் விரல்களை அவளுடன் இணைத்து அனைவரையும் பார்த்து புன்னகைத்தான்.

“ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், எல்லாரும் ஒன்னா ஷாப்பிங் போகலாம். எல்லா ஏற்பாடையும் ஒன்னா பகிர்ந்து செய்யலாம். என்னால நைனாவுக்கு ஆடம்பரமான கல்யாண ஏற்பாடு கொடுக்க முடியல ஆனா எங்க ரிசப்ஷன் நல்லா ஸ்பெஷலா இருக்கணும்னு விரும்புறேன் “ என்று க்ரிஷ் புன்னகையோடு கூறினான்.

“ அது சரி இதெல்லாம் எப்படி நடந்துச்சு ? “ என்று நைனா கேட்டதும், “ மைராவும், கேஷவும் உன் அப்பா, அம்மாவ சந்திச்சு அவங்கள சமாதானப்படுத்தினாங்க “ என்று அர்ச்சனா கூறினார்.

“  வாவ், கல்யாண ரிசப்ஷனா ? நீங்க ராக்கெட் வேகத்துல வேலை செய்றீங்க போல ? “ என்று ரோஷினி சொன்னதும், “ இவங்க யாரு ? “ என்று நைனாவின் அம்மா கேட்டார். 

“ என்ன பத்தி க்ரிஷ் கிட்ட கேளுங்க “ என்று ரோஷினி சொல்ல, யாரும் மேலும் எதுவும் பேசுவதற்குள் அர்ச்சனா குறுக்கிட்டு, “ அவ என் அண்ணன் பொண்ணு அப்புறம் க்ரிஷுக்கு சின்ன வயசுல இருந்து பிரெண்ட். இவனோட கல்யாண விஷயம் தெரிஞ்சதும்  பெங்களூர்ல இருந்து வந்துருக்கா “ என்று சொல்லி நிலைமையை சமாளித்தார். பின்னர் அவர் ரோஷினியின் கையைப் பிடித்து அவள் எதுவும் உளறுவதற்குள் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றார். நைனா மைராவைப் பார்த்தாள், ஆனால் அவள் ஏறெடுத்தும் பார்க்காமல் நின்றாள்.

“ இவளுக்கு என்ன ஆச்சு ? நேத்து நாங்க கிளம்பி போகும் போது நல்லா தானே இருந்தா ? நான் இவகிட்ட அப்புறம் பேசுறேன் ஆனா இப்போ வேற ஒரு முக்கியமான விஷயத்த கவனிக்கணும் “ என்று மனதில் நினைத்த நைனா, க்ரிஷைக் கிள்ளி அறைக்கு இழுத்துச் சென்றாள். அவள் கதவைப் பூட்டிவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“ ரோஷினிய கவனிச்சியா ? அவ வெறுங்கையோட வீட்டுக்கு திரும்பி வந்துருக்கா அப்போ அவ லேப்டாப் தேடி போகல “ என்று நைனா சொன்னதும், “ அவ கிட்ட அது இருந்தும் அவ இங்க கொண்டு வராம இருந்தா என்ன செய்றது ? “ என்று க்ரிஷ் பதிலுக்கு கேட்டான்.

“ நம்பிக்கையோட இரு, லேப்டாப் அவ கிட்ட இருந்தா, அவ வேற யாரையும் நம்புறத விட அவகிட்டயே பாதுகாப்பா இருக்கணும்னு தான் நினைப்பா. அது மட்டும் இல்ல, இந்நேரம் உன்ன மிரட்டுற மாதிரி ஏதாவது பண்ணி இருப்பா அதனால அவ வேலைய விட்டு அனுப்பும் போது அந்த கம்பெனி அவளோட லேப்டாப்பையும் திரும்ப வாங்கி இருப்பாங்க நினைக்குறேன் “ என்று நைனா சொன்னாள்.

“ அடக் கடவுளே! அப்போ எனக்கு எதிரா அவ கிட்ட இப்போ எதுவும் இல்லையா ? “ என்று க்ரிஷ் உற்சாகமாக கேட்க, “ அப்படியும் இருக்கலாம், ஆனா நாம அத உறுதிப்படுத்தனும். அவளோட லேப்டாப் நம்மகிட்ட இருக்குனு சொல்லி மிரட்டி பார்க்கலாம் அப்போ தெரிஞ்சிடும் “ என்று நைனா யோசனை சொன்னதை கேட்டு, “ எப்படி இப்படியெல்லாம் ஐடியா பண்ற ? “ என்று க்ரிஷ் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ எல்லோரும் உன்ன மாதிரி முட்டாளா இருக்க மாட்டாங்க “ என்று நைனா சொன்னதும், க்ரிஷ் வெட்கத்தில் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள, நைனா தன் நெற்றியில் அறைந்து கொண்டாள்.

“ க்ரிஷ், அது கசப்பான உண்மையா இருந்தாலும் நான் சும்மா கிண்டல் பண்ணிட்டு தான் இருந்தேன். நான் என் மனசுல பட்டத பேசுவேன்னு உனக்கே தெரியும் அதனால ப்ளீஸ் பெருசா எடுத்துக்காத. இப்போ நாம ரொம்ப நேரம் ரூம்ல தனியா இருக்குறத எல்லாரும் தப்பா நினைக்க போறாங்க அதனால வா வெளிய போகலாம் “ என்று நைனா சொன்னதும் அவர்கள் குடும்பத்துடன் சேர வெளியே சென்றனர்.

நைனாவின் பெற்றோர் இரவு உணவுக்குப் பிறகு தங்களின் வீட்டுக்கு சென்றனர். நைனா அர்ச்சனாவுக்கும் மைராவுக்கும் சமையலறையில் உதவிக்கொண்டிருந்தாள் ஆனால் மைரா அப்போதும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நைனா தன் அறைக் கதவைத் திறக்க எத்தனித்தபோது ரோஷினி அவளை தடுத்து நைனாவின் மணிக்கட்டில் தன் நகங்களை அழுத்தினாள்.

“ உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? அவன கல்யாணம் பண்ணிக்கிட்டதால ஜெயிச்சுட்டேன்னு நினைச்சியா ? “ என்று ரோஷினி கேட்க, தன் கையை அவள் பிடியில் இருந்து விலக்கி நைனா கைகளை மார்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்.

“ உன்ன எதிர்த்து நான் ஜெயிக்க நினைக்குற அளவுக்கு முதல்ல நீ யாரு ? என் சந்தோஷமான வாழ்க்கையில நீ ஒருநாளும்  இருந்தது இல்ல. நான் உனக்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்றேன், உன்னோட பொருட்கள பேக் பண்ணிட்டு நீ வந்த இடத்துக்கே  ஓடி போ “ என்று நைனா ரோஷினியை மிரட்டினாள்.

“ நீ என்ன குறைச்சு மதிப்பு போடுற. நீ கல்யாணம் பண்ணி இருக்க அந்த கோழைய வெச்சே உன்ன என்ன செய்றேன் பாரு “ என்று ரோஷினி சொல்ல, “ அப்படியா ? சரி அதுக்கு உனக்கு என்னோட வாழ்த்துக்கள். இப்போ தள்ளி போ, என் புருஷன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான். நாங்க புதுசா கல்யாணம் ஆனவங்கனு உனக்கே தெரியும். அவன் அகராதியில பொறுமையே இல்ல. நான் எப்படி இருக்கேன்னு சொல்லு ? நல்லா புது பொண்ணு மாதிரி இருக்கேனா ? “ என்று கேட்டு நைனா கண்ணடித்துவிட்டு ரோஷினியின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தாள்.

அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிவிட்டு மணிக்கட்டைப் பார்த்தபடி சீறினாள். லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த க்ரிஷ் அவளிடம் ஓடிச்சென்று அவள் கையைப் பிடித்து சரி பார்த்தான்.

“ இது எப்படி ஆச்சு நைனா? “ என்று அவன் கேட்க, “ உன் முன்னாள் காதலி எனக்கு இத பரிசா கொடுத்தா “ என்று நைனா எரிச்சலுடன் கூறினாள்.

“ இன்னிக்கு அவள கொன்னுடுறேன் “ என்று சொல்லி க்ரிஷ் கதவைத் திறந்து செல்ல நைனா அவனை பின்தொடர்ந்தாள். அவர்கள் ரோஷினியின் அறைக்கு சென்ற போது அவள் கைகளில் கிரீம் தடவிக் கொண்டிருந்தாள், ஆனால் க்ரிஷை பார்த்ததும் புன்னகைத்தாள்.

“ எவ்ளோ தைரியம் இருந்தா என் மனைவிய காயப்படுத்துவ ? மரியாதையா எங்க வீட்ட விட்டு போ “ என்று க்ரிஷ் கத்தினான்.

நைனா க்ரிஷின் கையைப் பிடித்து அவன் தோளில் தலை சாய்த்து கண்ணீர் விட்டாள்.

“ விடு க்ரிஷ், நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு பொறாமையில இப்படி பண்ணிட்டா போல, அவ மனசுக்கு அமைதி கிடைக்க என்ன காயப்படுத்திட்டா. எனக்காக அவள வெளிய தள்ளிடாத “ என்று நைனா கண்களை சிமிட்டி கவலையான குரலில் சொன்னாள்.

தன்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த நைனாவைப் பார்த்து ரோஷினி கோபப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“ இல்ல நைனா, இவ இங்க இருக்க கூடாது “ என்று க்ரிஷ் கத்தினான்.

“ உனக்கு அம்னீஷியா இருக்குனு நினைக்குறேன் க்ரிஷ். என்னால என்ன செய்ய முடியும்னு ஒரு ட்ரைலர் காட்டுறேன். இப்போ உன்  குடும்பத்தோட சேர்த்து உன்னோட பொண்டாட்டிய கூட இந்த பிரச்சனையில இழுத்துட்ட “ என்று ரோஷினி அவனை மிரட்டினாள்.

“ நைனா பேபி, நீ எனக்காக நம்ம ரூம்ல வெயிட் பண்ணு, நான் சீக்கிரம் திரும்பி வரேன் “ என்று க்ரிஷ் நைனாவை பார்த்து அன்பாக சொல்லி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான், நைனா அவன் மார்பில் செல்லமாக அடித்துக் கொண்டு வெட்கப்பட்டாள்.

“ என்ன ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்காத, இல்லனா நீ சோபாவுல தான் தூங்கனும் “ என்று நைனா சொன்னதை கேட்டு, க்ரிஷ் புன்னகைக்க, நைனா வெளியே வந்ததும் க்ரிஷ் ரோஷினியை நோக்கி பல்லைக் கடித்துக் கொண்டான்.

“ நீ வீடியோவ பத்தி தானே பேசுற ? சரி தாராளமா செய் “ என்று க்ரிஷ் சவால் விடுவது போல சொன்னான், அதற்கு ரோஷினி, “ நான் செய்ய மாட்டேன்னு நினைக்குறியா ? “ என்று சீறினாள்.

 உன்னால அத செய்ய முடியாதுனு எனக்கு தெரியும் ஏன்னா இப்போ உன்னோட மொபைல், லேப்டாப் ரெண்டுமே உன்கிட்ட இல்ல. அது ரெண்டுமே என்கிட்ட இருக்கு. துன்புறுத்தல், பாலியல் அச்சுறுத்தல் அப்புறம் ப்ளாக்மெயில் பண்ணதா உனக்கு எதிரா வலுவான ஆதாரம் என்கிட்ட இருக்கு “ என்று க்ரிஷ் சொன்ன அடுத்த கணம் அவள் கண்களில் தெரிந்த பீதியை அவன் பார்த்து மனதிற்குள் நைனாவுக்கு நன்றி சொன்னான்.

“ இனி உன் விளையாட்டுல நான் பகடைக்காய் இல்ல. என் வாழ்க்கையில இருந்தும், என் குடும்பத்துல இருந்தும் விலகி இரு. நீ என் வீட்ல இருக்குறத எனக்கு புடிக்கல. காலையில நான் நான் உன்ன இங்க பார்க்க கூடாது “ என்று அவளை க்ரிஷ் எச்சரித்தான்.

“ நான் போகலைனா என்ன செய்வ ? “ என்று ரோஷினி கேட்க, “  அந்த வேலைய என் பொண்டாட்டி கிட்ட கொடுத்துடுவேன், அவ என்ன விட செம்ம திறமையானவ “ என்று சொல்லிவிட்டு அறைக்கு திரும்பி நைனாவின் கைகளைப் பிடித்து அவளை சுழற்றினான்.

“ நைனா, நீ அற்புதமானவ. நீ சொன்னது சரி தான், அவகிட்ட இப்போ லேப்டாப் இல்ல “ என்று க்ரிஷ் சொல்ல, “ இது நல்ல விஷயம் ஆனா அவகிட்ட லேப்டாப் இல்லனா அது எங்க இருக்கும்? அது அவளோட friends கிட்டயும் இல்லனு நாம உறுதிப்படுத்தனும் “ என்று நைனா கூறினாள்.

க்ரிஷும் நைனாவும் தரையில் உட்கார்ந்து ரோஷினியின் லேப்டாப்பைக் கண்டுபிடிக்க வழி யோசிக்கத் தொடங்கினர்.

******************************************

முன்னோட்டம்:

“ எனக்குத் தெரியும், நான் ஒரு சிபிஐ அதிகாரியோட பொண்டாட்டி, அதனால இந்த மாதிரி கேஸ்ல வேலை செய்றத பத்து நீங்க எனக்கு ஞாபகம் செய்ய வேண்டியதில்ல “

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:54 am

[…] 73. இன்னிக்கு அவள கொன்னுடுறேன் […]

Leave a Comment

error: Content is protected !!