Home Family75. நான் உங்கள சுவாசிக்க விரும்புறேன்

75. நான் உங்கள சுவாசிக்க விரும்புறேன்

by Siragugal Novels
15 views

சலசலப்பு கேட்டு க்ரிஷும், நைனாவும் ஹாலுக்கு வந்த போது  ரோஷினியின் பெற்றோர் வந்திருந்தனர். ரோஷினி தன் தாயின் அணைப்பில் அழுது கொண்டிருந்தாள்.

“ ஹலோ மாமா உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் “ என்று க்ரிஷ் சொன்ன போது, “ ரோஷினிய எங்க கூட கூட்டிட்டு போக வந்துருக்கோம் “ என்று ரோஷினியின் அப்பா எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் சொன்னார்.

“ அண்ணா, நீங்க இப்ப தான் வந்துருக்கீங்க, தயவு செஞ்சு இருங்க, நாம பேசிக்கலாம் “ என்று அர்ச்சனா சொல்ல, “ நாங்க உடனே கிளம்புறது தான் நல்லது, இனி நமக்குள்ள பேச எதுவும் இல்ல “ என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்.

அவரது எதிர்வினையை பார்த்த கேஷவ், “ நேர்மையா பதில் சொல்லுங்க, அவங்க பிரிஞ்சு போவாங்கனு நீங்க எதிர்பார்க்கவே இல்லையா? “ என்று கேட்டான். 

“ ஆமா நான் எதிர்ப்பார்த்தேன் ஆனா அவங்க எத பத்தியும் சொல்லாத காரணத்தால அவங்க நல்லா இருக்காங்கனு நெனச்சேன் “ என்று ரோஷினியின் அப்பா சொன்னதை கேட்டு, “ எங்க கூட இருக்க உறவை முறிச்சிட்டு போறீங்களா ? “ என்று கேட்டார்.

“ எதையும் முடிவு செய்ற மனநிலையில நான் இல்ல. என் பொண்ணுக்கு இப்போ என்னோட சப்போர்ட் வேணும், அது மட்டும் தான் எனக்கு இப்போ முக்கியம் “ என்று ரோஷினியின் அப்பா ஒருவரின் முகத்தையும் பார்க்காமல் சொன்னார்.

“ க்ரிஷும் உங்க தங்கச்சி பையன் தான் அண்ணா, அவன்   செஞ்சதுக்காக நாங்க அவன தலைமுழுக நினைக்கிறீங்களா? அவனும் கஷ்டப்பட்டு இருக்கான் அண்னா. இப்போ அவனுக்குனு ஒரு வாழ்க்கைய தேர்ந்தெடுத்து இருக்கான் “ என்று அர்ச்சனா வருத்ததோடு சொன்னதும், “ நாங்க என்ன செய்யனும்னு நினைக்குறீங்க ? “ என்று ரோஷினியின் அம்மா கோவமாக கேட்டார்.

“ க்ரிஷும், ரோஷினியும் ஒன்னா இல்லாம இருக்குறது நல்லதுனு புரிஞ்சிக்கோங்க. அவங்க எப்பவும் சண்ட மட்டும் தான் போட்டுட்டு இருந்தாங்க. இப்போ ரோஷினிக்கும் ஒரு நல்ல வாழ்க்கைய கொடுக்கலாம். தயவு செஞ்சு க்ரிஷ மன்னிச்சுடுங்க. நாங்க க்ரிஷுக்கு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணி இருக்கோம், உங்கள அதுல கலந்துக்க சொல்லி கேட்க மாட்டேன் ஆனா அவங்கள ஆசீர்வாதம் பண்ண முயற்சி பண்ணுங்க “ என்று அர்ச்சனா கேட்டுக்கொண்டார்.

“ அவங்களுக்கு என் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும் ஆனா நாங்க கிளம்பனும். நாங்க திரும்பி போக விமான டிக்கெட் முன்பதிவு பண்ணி இருக்கேன் “ என்று ரோஷினியின் அப்பா சொல்ல, “ அப்பா, ப்ளீஸ், என்னால இப்போ உங்க கூட வர முடியாது. “ என்றாள் ரோஷினி.

“ ஏன்? “ என்று உடனே கேஷவ் கேட்டதும், “ உனக்கு எப்பவும் எங்க பொண்ணு மேல வெறுப்பு தான் இருக்கும் இப்போ அவள வீட்ட விட்டு தள்ள தயாரா இருக்க மாதிரி பேசுற ? “ என்று ரோஷினியின் அம்மா சீறினார்.

“ அவ இங்க தங்க நினைக்குறதுக்கு காரணத்த நான் தெரிஞ்சிக்க விரும்பினா அதுல என்ன தப்பு ? க்ரிஷுக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சு, இப்போ இவ இங்க இருந்தா அது அவனுக்கும், அவனோட மனைவி அப்புறம் உங்க பொண்ணுக்கும் தான் கஷ்டமாவும், சங்கடமாவும் இருக்கும். அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறது அவளுக்கு வருத்தமா இருக்கலாம், அதனால ஒரு விதத்துல உங்க பொண்ணுக்கு நல்லது தான் நான் நினைக்குறேன் “ என்று கேஷவ் விளக்கம் சொன்னான்.

“ கண்டிப்பா நீங்க எனக்கு நல்லது தான் நினைப்பீங்க அதனால கம்பெனியில என்னோட விசாரணை முடியற வரைக்கும் நான் இங்கேயே இருக்கலாமா ? நான் சென்னையில தங்கி இருக்கணும்னு சொல்லி இருக்காங்க இல்லனா என் மேல கேஸ் போடுவாங்கனு என்ன கடுமையா எச்சரிக்க பண்ணி இருக்காங்க “ என்று ரோஷினி பதில் கூறினாள்.

நைனா சமையலறைக்குள் நுழைந்து எல்லா வளையல்களையும் கழற்றிவிட்டு அனைவருக்கும் காபி கொண்டு வந்தாள்.

“ நைனா, உன் வளையல் எங்க, உன் மணிக்கட்டில் என்ன காயம் இது ? “ என்று அர்ச்சனா கேட்க, “ ஒண்ணுமில்ல அத்தை, சமைக்கும் போது எனக்கு காயம் பட்டுச்சு “ என்றாள் நைனா. ஆனால் அப்போது குறுக்கிட்ட க்ரிஷ், “ ஏன் பொய் சொல்ற நைனா? நேத்து நைட்டு ரோஷினி உன்ன காயப்படுத்துனத எல்லாருக்கும் சொல்லு “ என்று சொல்லி அவன் நைனாவின் கையை எடுத்து காயத்தின் அடையாளங்களை அனைவருக்கும் காட்டினான். மைரா நைனாவிடம் சென்று அந்த அடையாளங்களைத் தொட்டாள். பல்லைக் கடித்துக் கொண்டு ரோஷினியின் பெற்றோரை நோக்கித் திரும்பினாள்.

“ நல்ல ஆரோக்கியமான மன நிலையில இருக்கவங்க இத எப்படி செய்ய முடியும்னு நினைக்குறீங்க ? ரோஷினி வருத்தமா இருக்கா ஒத்துக்குறேன் ஆனா நைனாவ காயப்படுத்த அவளுக்கு யார் உரிமை கொடுத்தது? விசாரணைக்கு அவ சென்னையில தங்க வேண்டியிருந்தா அப்போ அவளோட friends வீட்ல இல்ல லேடீஸ் ஹாஸ்டல் பார்த்து தங்குறது தான் நல்லது “ என்று முடிவாக கூறினாள்.

“ அவங்க பக்கத்துலையே இருந்தா பிரச்சினை இன்னும் அதிகமா தான் ஆகும் “ என்று கேஷவும் கூறினான்.

“ ரோஷினி, அவங்க நம்ம எல்லாரையும் வெளிய தள்ளுறதுக்கு முன்னாடி நாம கிளம்புவோம் “ என்று ரோஷினியின் அம்மா விரத்தியோடு சொல்ல, “ எங்கள இவ்ளோ கொடூரமானவங்களா சித்தரிக்க வேணாம். நாங்க இவ்ளோ மாசமா ரோஷினிய பார்த்துக்கிட்டோம், அவளுக்கு ஆதரவா இருந்தோம் ஆனா பதிலுக்கு அவ என்ன செய்தா ? இவ்ளோ நடந்த அப்புறம் கூட நாங்க இன்னும் அவளோட நல்லதுக்காக தான் பேசுறோம் “ என்றார் அர்ச்சனா.

“ நான் இங்க தங்க கூடாதுனு சொன்னா அப்போ கேஷவ் கட்டி இருக்க இன்னொரு வீட்ல நான் தங்கலாமா? “ என்று ரோஷினி கேட்ட அடுத்த நொடி, க்ரிஷ் மற்றும் நைனா, “ கூடாது “ என்று ஒரே நேரத்தில் உரக்க கத்தினர்.

ரோஷினியின் வார்த்தைகளைக் கேட்டு கேஷவ் மற்றும் மைரா அதிர்ச்சியடைந்தனர், ஆனால் க்ரிஷ் மற்றும் நைனா கூடாது என்று கத்துவதைக் கேட்டு அவர்கள் இன்னும் ஆச்சரியப்பட்டனர்.

“ நானும் என் மனைவியும் ஒன்னா தனியா இருக்க அந்த வீட்ட கட்டினேன். உன்ன திரும்ப கூட்டிட்டு போக உன் அப்பா வந்துருக்காரு அதனால இப்போ நீ அவர் கூட திரும்பிப் போ இல்ல  வேற எங்கேயாச்சும் இடம் பாரு, அது உன்னோட விருப்பம் “ என்று கேஷவ் உறுதியாக சொன்னான்.

“ ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சன நடக்குது. ஒரு நாள் கூட நிம்மதியா வாழ முடியல “ என்று மைரா விரக்தியோடு சொல்லிவிட்டு செல்ல, கேஷவ் அவளைப் பின்தொடர்ந்தான்.

க்ரிஷும் நைனாவும் தங்கள் அறைக்குத் திரும்பினர்.

ரோஷினியின் அம்மா அவளது பொருட்களை பேக் செய்து கொண்டிருந்தார், ஆனால் ரோஷினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

“ அம்மா, என் லேப்டாப் கொண்டு வந்திங்களா? “ என்று ரோஷினி கேட்டதும், “ நான் உன் ரூம் முழுக்க தேடினேன், ஆனா லேப்டாப் வீட்ல இல்ல “ என்று அவள் அம்மா பதில் கூறினார்.

“ நான் போன தடவ வீட்டுக்கு வந்தப்ப என் லேப்டாப்பை என் ரூம்ல வெச்சேன். அதுல சில முக்கியமான தகவல் எல்லாம் இருந்துச்சு. அது எனக்குத் தேவை. அது எப்படி காணாம போகும்? ஒரு நிமிஷம் இருங்க, க்ரிஷ் உங்கள சந்திக்க வந்த அப்போ அவன் என் ரூமுக்கு போனானா ? “ என்று ரோஷினி சந்தேகத்துடன் கேட்டதும், “ அவங்க வேற ரூம்ல தான் தங்கியிருந்தாங்க, அவன் கிளம்பி போகும் போது அவன் எடுத்து வந்த ஒரு பை தவிர வேற எதுவும் அவன் கையில இல்ல “ என்று அவள் அப்பா கூறினார்.

“ அவன ஏன் வீட்ல தங்க விட்டீங்க ? நீங்க என்ன முட்டாளா ? அவன் தான் லேப்டாப் எடுத்துட்டு போய் இருப்பான். அவன் எனக்கு திரும்ப கிடைக்க இருந்த வழி எல்லாமே இப்போ போச்சு “ என்று ரோஷினி எரிச்சலுடன் சொன்னதும், “ வாயை மூடு, அவன் பின்னால போறத பத்தி யோசிக்கக் கூட செய்யாத. நாம வீட்டுக்கு போறோம், இந்த முறை நீ நாங்க சொல்றத கேளு “ என்று ரோஷினியின் அம்மா அவளை கடுமையாக முறைத்தார்.

“ நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க, நான் இங்க என் ஃப்ரெண்ட் வீட்டுல தங்கிக்கறேன், இத பத்தி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல “ என்று ரோஷினி மீண்டும் சொன்னாள் ஆனால் அவள் அப்பா, “ இல்ல, நீ எங்க கூட வர, இதுல எந்த மாற்றமும் இல்ல “ என்று அவளிடம் உறுதியாக சொன்னார்.

மதனின் வீட்டில் இருந்து கிளம்பிய ரோஷினி, விமான நிலையத்தை அடைந்ததும், ஆட்டோவில் ஏறி தப்பித்து சென்று அவளது பெற்றோரை கவலையில் ஆழ்த்தினாள்.

“ அவள என்ன செய்றது ? இனி அவளை எங்க தேடுவேன்? “ என்று ரோஷினியின் அப்பா கோவத்தில புலம்ப, “ ஏதாவது ஹோட்டலுல தங்கி அவ ஏதாவது பிரச்சனை பண்றதுக்கு முன்னாடி அவள கண்டுபிடிப்போம் “ என்று அவள் அம்மா அவரிடம் கூறினார்.

நைனா, கிரிஷ் மற்றும் அவர்களது அம்மாக்கள் அனைவருக்கும் ஆடைகளை வாங்க ஒரு கடைக்கு சென்றனர். கேஷவ், மதன் மற்றும் நைனாவின் தந்தை மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்கள். திட்டமிட்ட மீட்டிங்கிற்காக வீடு திரும்பிய கேஷவ் பிஸியாக இருந்தான். மீட்டிங் முடிந்து மாலையாகி விட்டதால் மைராவை அழைத்தான்.

அவன் அழைப்புக்கு பதில் சொன்ன மைரா, “ யாரோ ரொம்ப பிஸியா இருக்காங்க போல. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு ஞாபகப்படுத்தணுமா ? “ என்று அவனிடம் கேட்டாள்.

“ ஏதாவது ஸ்பெஷலா கொடுத்து ஞாபகம் பண்ணா நிச்சயம் சந்தோஷப்படுவேன் “ என்று கேஷவ் பதில் சொன்னதை கேட்டு, “  உங்க நாள் எப்படி இருந்துச்சு ? “ என்று கேட்டாள்.

“ கொடுமையா இருந்துச்சு அம்மு. கல்யாண ரிசப்ஷன் வேல எல்லாம் முடிஞ்சுது. என்னோட மீட்டிங் எல்லாம் முடிஞ்சுது. நான் இன்னும் கீழ போகல அதனால எல்லாரும் ஷாப்பிங் முடிஞ்சு திரும்பி வந்துட்டாங்களா தெரியல. நீ கிளம்ப ரெடியா இருக்கியானு கேட்க உடனே உனக்கு போன் பண்ணேன் “ என்று கேஷவ் பதில் சொன்னதும், “ நான் அகாடமிக்கு பக்கத்துல இருக்க மால் வந்துருக்கேன். ஸ்டுடென்ட்ஸுக்கு தேவையான சில பொருட்கள வாங்க வேண்டி இருந்துச்சு அதனால என்ன இங்க இருந்து கூட்டிட்டு போக முடியுமா ? “ என்று மைரா கேட்டாள்.

“ சந்தோஷமா வரேன் அம்மு “ என்று சொல்லி அழைப்பை துண்டித்த கேஷவ் குளித்து முடித்து தயாராகி மாலுக்கு சென்றான். காரை நிறுத்திவிட்டு மைராவை அழைத்து தன் வருகையைத் தெரிவித்தான்.

“ அம்மு நான் வந்துட்டேன். நீ ஷாப்பிங் முடிச்சிட்டியா இல்ல நான் உள்ள வரட்டுமா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ ஸாரி கெட்சப், என் டிரஸ் மேல காபி கொட்டிடுச்சு அதனால நான் ஆட்டோ புடிச்சு  நம்ம வீட்டுக்கு வந்துட்டேன். செக்யூரிட்டி என்ன உள்ள விட மாட்டாருன்னு நெனச்சேன் ஆனா அவர் என்ன மரியாதையோட உள்ள விட்டாரு “ என்று புன்னகையோடு சொன்னாள் மைரா.

“ வீட்டு உரிமையாளர ஏன் உள்ள அனுமதிக்க மாட்டாரு ? சரி  நான் கிளம்பிட்டேன், நீ அங்கேயே இரு நான் சீக்கிரம் வரேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் உதட்டில் புன்னகையுடன் அவர்கள் இருப்பிடத்தை நோக்கிச் சென்றான்.

அவன் காரை நிறுத்தி கதவு மணியை அழுத்தினான் ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றதும் அவன் கதவைத் தட்டினான், ஆனால் கதவு திறந்திருப்பதைக் கண்டான். அவன் உள்ளே நுழைந்து பார்த்தபோது டைனிங் டேபிளில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததையும், நிறைய உணவுகள் வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். முதல் மாடிக்குச் செல்லும் ஒவ்வொரு படிகளிலும் மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருந்தன.

“ என் பொண்டாட்டி இன்னைக்கு விருந்து ஏற்பாடு பண்ணி இருக்க மாதிரி தெரியுது “ என்று மனதில் நினைத்து கொண்டு, கழுத்தை தேய்த்துக் கொண்டே மாஸ்டர் பெட் ரூமுக்கு ஓடினான். அவன்  கதவைத் திறந்ததும் அவனுக்கு முன்னால் இருந்த காட்சி அவனது இதயத்தை ஒரு துடிப்பை நிறுத்தியது. அவனது எண்ணங்களும் உடலும் அலைந்து சுவற்றில் சாய்ந்து தன் மார்பை தட்டி அதன் படபடப்பை அமைதிப்படுத்தினான்.

மைரா ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கேஷவ் வேரூன்றி நின்றான். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவளுடைய பிறந்த நாளுக்கு அவன் பரிசளித்த ஊதா நிற சேலையை அவள் அணிந்திருந்தாள். அவனுடைய கண்கள் வெட்கமில்லாமல் அவளுடைய வெற்று முதுகிலும் கைகளிலும் சுற்றித் திரிந்தன.

“ ப்ளௌஸ் போடலையா ? “ என்று மனதில் குழப்பத்துடன் நினைத்துக் கொண்டு நின்றான்.

மைரா அவனை நோக்கித் திரும்பி உதட்டை குவித்து தீக்குச்சியை ஊதினாள். வாய் வழியாக மூச்சு வாங்கிய போது அவனது மார்பு உயர்ந்தது. மைரா நிமிர்ந்து நின்று இடுப்பில் செருகியிருந்த முந்தானையை விடுவித்தாள். அவனது பார்வை அவளது வெற்று இடுப்பின் மீதும் அவள் முதுகில் இருந்த ஒரு முடிச்சின் மீதும் விழுந்தது. அவள் இடுப்புக்கு மேலே பார்க்க அவன் தலையை சற்று சாய்த்ததும் அவள் ரவிக்கைக்கு பதிலாக தனது பொக்கிஷங்களை மறைக்க ஒரு துணியைக் கட்டியிருப்பதை உணர்ந்தான்.

காலணிகளைக் கழற்றிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டவனின் கண்கள் தன் மனைவியின் மீதே பதிந்திருந்தன. பூக்களை தாண்டி மைராவை நோக்கி நடந்தான்.

“ பரவாயில்ல, ஒருவழியா நீங்க ரூம் உள்ள வரலாம்னு முடிவு பண்ணிட்டீங்க “ என்று மைரா சொல்லி தனக்கு முன்னால் இருந்த தலைமுடியை பின்னால் போட, கேஷவ் தன் விரலில் ஒரு இழையை சுழற்றி அவள் கண்களை பார்த்தான்.

“ உன்னோட 20வது பிறந்த நாளுக்கு இந்த புடவைய வாங்கினேன். இந்த புடவையை செலெக்ட் பண்ண எனக்கு நாலு மணி நேரம் ஆச்சு ஆனா என் நேரம் வீண் போகல “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் சொன்னான்.

“ உங்களுக்கு புடிச்சு இருக்க புருஷா ? “ என்று மைரா கேட்டதும், “ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா, வசீகரமா, செக்ஸியா “ என்று கேஷவ் சொல்லும் போதே மைரா தன் உள்ளங்கையை அவன் வாயின் மேல் வைத்து தடுக்க, கேஷவ் சிரித்துக் கொண்டே அவள் உள்ளங்கையை விலக்கி அவள் விரலில் முத்தமிட்டு  அவளை சுழற்றி மார்போடு சேர்த்து இழுத்து அவள் வெற்று இடுப்பை பிடித்தான். அவனது விரல்கள் அவளது வெற்றுத் தோலில் வட்டமிட்டபடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையைப் பார்த்தன.

“ என்ன பிளான் அம்மு ? “ என்று கேஷவ் கேட்க, “ ரூம் உள்ளேயும், வெளியேயும் விருந்துக்கு சம்மதமா ? “ என்று கேட்டாள் மைரா.

“ ரொம்ப கச்சிதமான பிளான் மைரா “ என்று புன்னகையோடு சொன்னான் கேஷவ்.

மைரா தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அவன் உதட்டின் ஓரத்தில் முத்தமிட்டாள். பின்னர் அவள் பின்னால் நகர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். கேஷவ் அவளைத் தடுக்க முயன்றான், ஆனால் அவள் தலையை அசைத்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ எனக்கு உங்கள மாதிரி வாரத்தை ஜாலம் எல்லாம் தெரியாது ஆனா நான் இப்போ சொல்ல போறது எல்லாமே என் மனசுல இருந்து உண்மையா சொல்றேன். ஒரு பொண்ணுக்கு அவள ஒரு குழந்த மாதிரி பார்த்துகிட்டு, ஒரு ராணி மாதிரி நடத்தி, இந்த உலகத்துல அவ மட்டும் தான் ஒரே பொண்ணு மாதிரி லவ் பண்ற   புருஷன் கிடச்சா அவ ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஆனா எல்லா பொண்ணுக்கும் இப்படி ஒட்டுமொத்தமா இந்த குணத்தோட ஒரு மனுஷன் அவங்க வாழ்க்கையில கிடைக்குறது இல்ல ஆனா நான் அதிர்ஷ்டசாலி. ஏன் தெரியுமா ? என் வாழ்க்கையில நீங்க இருக்கீங்க. நீங்க என்ன உங்க உலகமா நடத்துறீங்க, நான் என் அப்பா, அம்மா கூட எப்படி இருந்தேனோ அதே மாதிரி உங்க கூட பாதுக்காப்பா உணர்றேன். எனக்கு நிறைய தாழ்வுமனப்பான்மை இருந்துச்சு ஆனா நீங்க எல்லாத்தையும் உடைச்சு எனக்குள்ள இருக்க திறமையை வெளிய கொண்டுவந்தீங்க. நீங்க உங்க வாழ்நாள் முழுக்க என்ன சுவாசிச்சு வாழ்ந்தீங்க இப்போ நானும் அதையே செய்ய விரும்புறேன். நான் உங்கள சுவாசிக்க விரும்புறேன், என் வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் உங்க கூட வாழ விரும்புறேன், நாம ஒன்னா இருக்குற ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசிக்க விரும்புறேன். நீங்க ஏற்கனவே உங்க லவ் சொல்லிட்டீங்க அதனால என்ன லவ் பண்ணுங்கனு கேட்க மாட்டேன் ஆனா என் வாழ்நாள் முழுக்க உங்கள லவ் பண்ணுவேன்னு சத்தியம் பண்றேன். ஐ லவ் யூ, ஐ லவ் யூ கேஷவ் “ என்று மைரா மிகவும் உணர்வுப்பூர்வமாக கூறினாள்.

அவளது காதலை கேட்டு கேஷவ் உணர்ச்சிவசப்பட்டு அவளை நிற்க வைத்தான். அவள் முகத்தை வருடியவன், கட்டை விரலால் அவள் கன்னத்தை வருடினான்.

“ ஐ லவ் யூ மைரா. நான் இப்போ எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க நீ என்னோட இதயம் எப்படி துடிக்குதுனு சரி பார்க்கணும். நான் அவ்ளோ சந்தோஷமா இருக்கேன் மைரா “ என்று கேஷவ் கூறினான்.

**************************************

முன்னோட்டம்:

“ எனக்கு மோதிரமும் புடிச்சு இருக்கு, நீ அத எனக்குக் கொடுத்த விதமும் புடிச்சு இருந்துச்சு மைரா. ப்ரொபோஸ் பண்ணியாச்சு அதனால  இப்போ கொண்டாட வேண்டிய நேரம் “

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:27 pm

[…] 75. நான் உங்கள சுவாசிக்க விரும்புறேன் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!