மைரா தன் காதலை சொன்னதை கேட்டு கேஷவ் உணர்ச்சிவசப்பட்டு அவளை நிற்க வைத்தான். அவள் முகத்தை வருடியவன், கட்டை விரலால் அவள் கன்னத்தை வருடினான்.
“ ஐ லவ் யூ மைரா. நான் இப்போ எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க நீ என்னோட இதயம் எப்படி துடிக்குதுனு சரி பார்க்கணும். நான் அவ்ளோ சந்தோஷமா இருக்கேன் மைரா “ என்று கேஷவ் சொல்ல, “ இந்த தருணத்த கொண்டாட நான் ஸ்பெஷல் சாக்லேட் வாங்கி இருக்கேன் “ என்று சொல்லி மைரா கிண்ணத்தில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து அவனுக்கு ஊட்ட முற்பட்டாள். அதை சாப்பிட கேஷவ் வாயைத் திறந்தான், ஆனால் மைரா சாக்லேட்டை தன் வாயில் திணித்து கொண்டு அவனை சீண்டினாள்.
கேஷவ் அவள் தாடையை பிடித்து அவளை முத்தமிட ஆரம்பித்தான். சாக்லேட்டுக்காக போராடி அதில் வெற்றி பெற்றான். அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன், சாக்லேட்டின் சுவைக்கு முனகினான், ஆனால் பற்களுக்கிடையில் ஏதோ கடினமாக இருப்பதை உணர்ந்ததும் சட்டென்று நிறுத்தினான்.
கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் அதை வெளியே இழுத்து மோதிரத்தைப் பார்த்து புன்னகைத்தான். மைரா அவன் கையிலிருந்த மோதிரத்தை வாங்கினாள். அதை டிஷ்யூ பேப்பரால் துடைத்து அவன் விரலில் அணிவித்தாள்.
“ உங்களுக்கு பிடிச்சிருக்கா? “ என்று மைரா கேட்க, “ எனக்கு மோதிரமும் புடிச்சு இருக்கு, நீ அத எனக்குக் கொடுத்த விதமும் புடிச்சு இருந்துச்சு மைரா. ப்ரொபோஸ் பண்ணியாச்சு அதனால இப்போ கொண்டாட வேண்டிய நேரம் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா தன் ஆள்காட்டி விரலால் அவன் சட்டையின் முதல் பட்டனை தொட்டு மெதுவாக ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினாள்.
“ நீ ப்ளௌஸ் போடலன்னு நெனச்சேன் “ என்று கேஷவ் கேட்டதற்கு, “ எனக்கு ப்ளௌஸ் இல்லாம புடவை கட்ட தெரியாது அதனால இந்த ஸ்ட்ராப்லெஸ் ப்ளவுஸ் ஐடியா யூஸ் பண்ணிட்டேன் “ என்று மைரா பதில் கூறினாள்.
கேஷவ் அவள் காதருகே சாய்ந்ததும் அவனது சூடான மூச்சுக்காற்று அவளது காது மடலை விசிறியது.
“ பொதுவா இந்த முடிச்சுகளை அவிழ்க்குறதுல எனக்கு பெருசா விருப்பம், ஆர்வம் இருந்தது இல்ல ஆனா இப்போ உன்னோட முதுகுல இருக்க முடிச்ச அவிழ்க்க நான் ரொம்ப உற்சாகமா இருக்கேன் “ என்று கேஷவ் சொல்ல, மைரா அவன் முதுகுக்கு நகர்ந்து அவன் சட்டையை கழட்டினாள்.
கேஷவ் வெறும் பேண்ட்டில் நின்றான், அவனது நிறமான வயிற்றைப் பார்த்ததும் மைரா தனது கன்னங்கள் சூடாக இருப்பதை உணர்ந்தாள். கேஷவ் அவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தினான். கட்டிலின் காலடியில் நின்று கொண்டு அவன் பெல்ட்டை கழட்டியதும் மைரா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
மைராவின் நெற்றியில் முத்தமிட்ட கேஷவ், “ இன்னைக்கு என்னோட ஆசைக்கு இணங்க நீ தயாரா அம்மு ? “ என்று அவளிடம் கேட்டான்.
மைரா சரி என்று தலையை அசைத்ததும் அவன் புன்னகையுடன் அவள் கைகள் இரண்டையும் பிடித்து தன் பெல்ட்டால் அவள் தலைக்கு மேல் சேர்த்து பூட்டினான். தன் விரல்களால் அவள் முகத்தை வருடியபடி அவள் கழுத்தில் நின்றான். அவன் அவள் முகத்தை வருடி அவள் கழுத்து எலும்பை தடவினான்.
அவன் உதடுகள் தன் மீது பதிவதை உணர்ந்த மைரா கண்களை மூடி மூச்சிரைத்தாள்.
“ நான் இப்ப தான் மைரா ஆரம்பிச்சு இருக்கேன் உனக்கு அதுக்குள்ள மூச்சு வாங்குதா ? இன்னைக்கு நைட்டு உனக்கு தூக்கம் கிடைக்காது “ என்று அவன் சொல்ல, அவனது உதடுகள் அவளது உதடுகளுடன் சந்தித்தன, அவை மெதுவாக முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
மைராவின் நெஞ்சு அவன் தொடுதலுக்கு விம்மிக் கொண்டிருந்தது.
“ அவ்ளோ அழகா இருக்க, என்ன அப்படி மயக்குற அம்மு “ என்று சொன்னவன் அவளது பிளவு, இடுப்பு மற்றும் அடிவயிற்றில் முத்தங்களை பொழிந்தான். அவளது ஹார்மோன்களின் வேகத்தை உணர்ந்து மைரா அவன் பெயரை முனகினாள்.
அவன் அவளிடமிருந்து விலகிச் சென்ற போது தான் அவளது உடைகள் தரையில் குவிந்திருப்பதை அவள் உணர்ந்தாள், குளிர்ந்த காற்று அவள் உடலை உரசியது.
கேஷவ் அவள் கணுக்காலைப் பிடித்து கட்டிலின் விளிம்புக்கு இழுத்தான். அவள் கையை விடுவிக்க பெல்ட்டை கழற்றி அவள் மணிக்கட்டு சிவந்திருப்பதை பார்த்து முத்தமிட்டான்.
“ ரொம்ப வலிக்குதா? “ என்று கேஷவ் கேட்க, “ நீங்க அத பார்க்குற வரை அது சிவப்பா மாறி இருந்தது கூட எனக்குத் தெரியல. எல்லாத்தையும் மறக்குற அளவுக்கு என்ன பார்த்துகிட்டீங்க “ என்று மைரா பதில் சொன்னாள்.
கேஷவ் சிரித்துக்கொண்டே கட்டிலின் அடிப்பகுதிக்கு சென்று அவள் கணுக்கால் முதல் முத்தங்களை பொழியத் தொடங்கினான். மைரா அவன் பெயரை முனகியபடி கால் விரல்களை வளைத்தாள்.
அவளை இன்ப வெள்ளத்தில் திளைக்க செய்தவன், அவளது முனகல்களால் ஈர்க்கப்பட்டான். அவள் தனது உச்சத்தை அடைந்ததும், கேஷவ் வெற்றிப் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான், அவள் அருகில் படுத்து அவள் தலைமுடியைக் கோதி அவள் உடல் இயல்பு நிலைக்குத் திரும்புவதைப் பார்த்தான்.
“ அடுத்த ரவுண்டுக்கு போறதுக்கு முன்னாடி உனக்கு தெம்பு வேணும் அதனால கொஞ்சம் சாப்பிடலாம் “ என்று சொல்லி அவன் தன் சட்டையை எடுத்து அவளை அணிவித்து டைனிங் அறைக்கு தூக்கி சென்றான். அவளை மேஜை மீது உட்கார வைத்து உணவு பாத்திரங்களை திறந்தான்.
“ என்னால முடிஞ்ச வர ருசியா சமைக்க முயற்சி பண்ணி இருக்கேன். உங்களுக்கு புடிச்சு இருக்கா சொல்லுங்க “ என்று மைரா சொல்ல, “ அம்மு நான் இப்போ தான் செம்ம ருசியான சாப்பாடு சாப்பிட்டேன் “ என்றான் கேஷவ்.
மைரா உடனே அவனை அடிக்க அவன் சிரித்துக் கொண்டே, புலாவ் மற்றும் பன்னீர் 65ஐ ஒரு தட்டில் பரிமாறி ஒரு ஸ்பூன் கொண்டு அவளுக்கு ஊட்டினான். இரவு உணவு முடிந்ததும், அவளை மீண்டும் அறைக்கு தூக்கி சென்று சோபாவில் உட்கார வைத்தான். அலமாரிக்குள் நுழைந்து ஒரு நிமிடம் கழித்து திரும்பி வந்து படுக்கையில் அமர்ந்தான்.
அவன் அவளைத் தன்னருகே வரும்படி சைகை செய்ய, மைரா அவன் கால்களுக்கிடையில் நின்றாள்.
கேஷவ் கட்டிலில் சாய்ந்து புரண்டு மைராவை இழுத்தான். அவன் கன்னத்தைத் தொட்ட அவளது உள்ளங்கைகளில் கேஷவ் முத்தமிட்டான்.
“ என் சட்டை மட்டும் போட்டு, இப்படி தலை முடி கலைஞ்சு கொண்டையா கட்டி இப்போ பார்க்க சூப்பர் செக்ஸியா இருக்க “ என்று கேஷவ் சொன்னதும் மைரா அவன் பக்கம் குனிந்து அவன் உதடுகளை முத்தமிட்டாள்.
அவளது உள்ளங்கைகள் அவனது வயிற்றை கவர்ச்சியாக தடவிக் கொண்டிருந்தன, அவள் அவனது உடற்பகுதியை முத்தமிடத் தொடங்கியபோது அவன் முனகினான்.
அவள் நிமிர்ந்து அமர்ந்ததும் அவன் சட்டையைக் கிழித்து அவர்களின் ஆடைக்கு விடுதலை கொடுத்தான்.
“ கழுத்துல இந்த தாலி செயின் மட்டும் இருக்க இந்த நிலையில பார்க்க அம்சமா இருக்க. அப்புறம் நாம இப்படி இருக்கோம் போது உன் கால் கொலுசுல வர சத்தம் கேட்க அவ்ளோ இனிமையா இருக்கு “ என்று கேஷவ் கூறினான்.
அவன் அவளுக்கு கொடுத்த அதே அளவு இன்பத்தை அவளும் அவனுக்கு கொடுக்க தீர்மானித்தாள். அவன் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஆர்மபித்ததை முடிக்கும் போது, “ ஐ லவ் யூ மைரா “ என்றான் கேஷவ். அதற்கு மைராவும், “ ஐ லவ் யூ கேஷவ் “ என்றாள்.
இருவரும் குளித்து முடித்து படுக்கையில் படுத்ததும் கேஷவ் அவள் நெற்றியில் முத்தமிட்டான். கேஷவ் மைராவின் தலையை மார்பில் வைத்து அவனது கையை அவளைச் சுற்றி வளைத்திருந்தது.
“ இன்னைக்கு அந்த புடவைய செலெக்ட் பண்ணதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா ? “ என்று கேஷவ் மெல்ல கேட்டதும், “ ஆமா, ஒரு விசேஷமான காரணம். என்ன ப்ரபோஸ் பண்ண நீங்க நான் கொடுத்த சட்டைய பத்திரப்படுத்தி வெச்சுருந்த மாதிரி நானும் ப்ரொபோஸ் பண்ணும் போது கட்ட இந்த புடவைய அப்படியே வெச்சுருந்தேன். நீங்க நம்ம கல்யாணத்துக்கு அந்த சட்டைய போட்டீங்க, நான் உங்கள ப்ரொபோஸ் பண்ண இந்த புடவைய கட்ட நெனச்சேன் ஆனா எல்லாம் வேற மாதிரி நடந்துடுச்சு இருந்தாலும் உங்களுக்காக ஸ்பெஷலா செய்ய விரும்பினேன், அதனால் இன்னைக்கு செய்ய பிளான் போட்டேன் “ என்று மைரா விளக்கம் கொடுத்தாள்.
“ உண்மையில நாம ஒரே மாதிரியா தான் யோசிக்குறோம், ஏன்னா நாம ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தவங்க அது மட்டும் இல்ல, நான் உன்னையும், நீ என்னையும் எப்பவும் முன்வைக்குறோம் “ என்று கேஷவ் மெல்லா கூறினான்.
“ உண்ம தான். கெட்சப் “ என்று சொன்ன மைரா, “ காலைல வீட்டுக்கு போயிட்டு கல்யாண ரிசப்ஷன் முடிஞ்சதும் இங்க வந்து கொஞ்ச நாள் இருக்கலாம். இந்த நேரத்துல நாம வீட்ல இல்லாம போனா அம்மாவும் அப்பாவும் வருத்தப்படுவாங்க. நான் நைனா மேல வருத்தமா இருந்தாலும் அவளுக்காக எல்லாமே செய்ய நினைக்குறேன். அவளுக்காக ஷாப்பிங் போகாம இருந்ததே கஷ்டமா இருக்கு “ என்று மைரா சொன்னாள்.
“ ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு மறுபடியும் எழுந்து ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன் “ என்று கேஷவ் சொல்ல, “ இன்னைக்கு இது போதும் ஆல்பா (alpha ). நாம கொஞ்ச நாள் இங்க தாங்கும் போது அத பிளான் செய்வோம் “ என்றாள் மைரா.
“ நம்ம வீட்ட சுத்தி பார்த்தியா ? “ என்று அவன் கேட்க, “ இல்ல, நான் உங்க கூட சேர்ந்து பார்க்கனும்னு கிட்சன் அப்புறம் நம்ம பெட்ரூம் மட்டும் தான் அலங்காரம் பண்ணேன் “ என்று மைரா பதில் சொன்னாள்.
“ சரி உன் விருப்பப்படி செய்யலாம் அம்மு. எனக்கு வேலை இருக்கு அதனால உன்ன வீட்ல டிராப் பண்ணிட்டு இங்க வந்துடுவேன். வருண் இங்க வருவான் “ என்று கேஷவ் சொல்ல மைரா சரி என்று முனகியபடி அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
மதனின் வீட்டில், க்ரிஷும், நைனாவும் ஷாப்பிங் முடிந்து ஒரு சோர்வான நாளுக்கு பிறகு அறையில் இருந்தனர். க்ரிஷ் தன் லேப்டாப்பை நைனாவின் முன் வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான்.
“ இது ரோஷினியோட friends வீட்டு அட்ரெஸ். நல்லவேள அவளுக்கு நாலு பேரு மட்டும் தான் இருக்காங்க. இப்போ அவளோட லேப்டாப் இவங்க யார் கிட்டயாச்சும் இருக்கானு கண்டுபுடிக்க ஒரு வழிய யோசிக்கணும். அவளோட friends அவள மாதிரியே இருந்தா நாம மாட்டிக்குவோம் இல்ல அவங்க நல்லவங்களா இருந்தா நாம ஜெயிச்சுடுவோம். ரோஷினி கடைசியா எப்போ அவங்கள பார்க்க வந்தானு அவங்களோட அம்மாவ சந்திச்சு கேட்டு தெரிஞ்சுக்கலாமா ? “ என்று க்ரிஷ் யோசனை சொன்னான்.
“ நல்ல யோசனை, காலையில காலேஜ், ஆபீஸ்ல இருந்து நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கு இன்விடேஷன் கொடுக்க போறோம்னு சாக்கு சொல்லிட்டு கிளம்புவோம் “ என்றாள் நைனா.
க்ரிஷ் சரி என்று முணுமுணுக்க, அடுத்த நாள் லேப்டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருவரும் உறங்கச் சென்றனர்.
காலையில் பாத்ரூமில் இருந்து வெளியே வந்த நைனா கதவு விரிப்பில் தடுமாறி விழுந்தாள். க்ரிஷ் விரைந்து சென்று அவளை கட்டிலில் உட்கார வைத்து அவள் முன் மண்டியிட்டு அவள் காலை பிடித்து பரிசோதித்தான்.
“ க்ரிஷ், என் காலை விடு “ என்று நைனா சொல்ல, “ ஒரு நிமிஷம் நைனா “ என்றான் க்ரிஷ்.
நைட் ஸ்டாண்டின் டிராவைத் திறந்து ஒரு ஜெல்லை எடுத்து அவள் கணுக்காலில் தடவினான். பின்னர் அவன் அறையை விட்டு வெளியேறி ஐஸ் பேக்குடன் திரும்பி வந்து மெதுவாக மசாஜ் செய்தான்.
“ ரோஷினியோட ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு நான் வரணும்னு சொல்றதால இப்படி பண்றியா ?” என்று நைனா கேட்டதும், “ இல்ல, நான் இப்போ சுயநலவாதி, முட்டாள் க்ரிஷ் இல்ல. நமக்கு கல்யாணம் ஆனதுல இருந்து நீ என்னோட பொறுப்பு, நான் தான் உன்ன பார்த்துக்கணும். உனக்கு முடியலனா நாம எங்கேயும் போக வேணாம். வீட்ல இருக்கலாம். நாளைக்கோ இல்ல உனக்கு சரி ஆனதுக்கு அப்புறம் வேலைய செய்வோம். என்ன நம்பறது ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் ஆனா உங்க எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னு நான் விரும்பறேன் நைனா “என்று க்ரிஷ் உண்மையாக சொன்னான்.
“ நான் உன்ன நம்புறேன், ஆனா ரோஷினி ஏதாவது பண்ணிட்டா என்ன செய்றது? நாம நேரத்த வீணடிக்க முடியாது, அதனால சீக்கிரம் ரெடியாகு, நாம உன் கார்ல தான் போக போறோம் அதனால ஒன்னும் பிரச்சன இல்ல “ என்று நைனா சொன்னதை கேட்டு, “ நீ உறுதியா இருந்தா, நாம போகலாம் “ என்று சொல்லி க்ரிஷ் தயாராக பாத்ரூமுக்குள் நுழைய, நைனா அறைக்குள் தயாரானாள், அர்ச்சனாவுக்கு உதவ சமையலறைக்குள் நுழைந்தவள். திருமண வரவேற்புக்கு அழைக்க க்ரிஷுடன் தனது நண்பர்களை சந்திக்க போவதாக அவரிடம் தெரிவித்தாள். பின்னர் நைனாவும் க்ரிஷும் அவனது காரில் புறப்பட்டனர்.
கேஷவும் மைராவும் தங்கள் காலை நேர காதல் முடிந்து பாத்ரூமை விட்டு வெளியேறினர். அவர்கள் தயாரானதும் கேஷவ் அவளை மாஸ்டர் படுக்கை அறைக்கு அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றான், அதில் அலமாரிகள் மட்டுமே இருப்பதைக் கண்டு மைரா குழப்பமடைந்தாள்.
கேஷவ் அலமாரிகளின் கதவைத் திறந்தான், அவை ஆடைகள், நகைகள் மற்றும் பலவற்றால் நிரம்பியிருப்பதைக் கண்டு மைரா திகைத்துப் போனாள்.
“ இதெல்லாம் உனக்காகத்தான் வாங்கினேன். சிலது எல்லாம் உன்னோட 20வது பிறந்த நாள்ல இருந்து சேகரிச்சது ஆனா பெரும்பாலான பொருட்கள் எல்லாம் நான் உன்ன ஊட்டியில ஆண்டு விழாவுல சந்திச்ச அப்புறம் வாங்குனது. அது மட்டும் இல்ல லேஸ், சாட்டின், பட்டு நைட் டிரஸ் எல்லாம் தனி அலமாரியில இருக்கு. நான் எத்தன வேணும்னாலும் கிழிக்க முடியும் “ என்று சொல்லி கேஷவ் கண்ணாடிக்க, “ அழுக்கு மனுஷா “ என்று மைரா அவனை முறைத்தாள்..
மைரா புடவைகள், சல்வார்கள், பொருத்தமான நகைகள் ஆகியவற்றைத் தொட்டு பார்த்தாள், அவளை சிறப்பாக உணர வைக்க அவன் எடுக்கும் முயற்சிகளைக் கண்டு அவள் ஆச்சரியப்பட்டாள்.
“ முக்கியமான இடத்துக்கு போகலாம் “ என்று சொல்லி அவன் தன் விரல்களை அவளுடன் இணைத்து அவளை உள்ளரங்க நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றான். மைரா உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அவனைக் கட்டிப்பிடித்தாள்.
“ என் புருஷன தவிர முதல் மாடியில நீச்சல் குளம் வைக்கனும்னு யோசன வேற யாருக்கும் வரும் ? அய்யோ கடவுளே! கெட்சப் ரொம்ப ரொம்ப நன்றி, ஐ லவ் யூ “ என்று அவள் உற்சாகமடைவதை பார்த்து கேஷவ் அவள் கன்னத்தில் ஒரு வலுவான முத்தத்தை வைத்தான்.
பிறகு அவர்கள் மொட்டை மாடியை அடைந்த போது அங்கே உட்கார ஒரு ஊஞ்சலும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவளை ஊஞ்சலில் உட்கார வைத்து சில நிமிடங்கள் தள்ளினான்.
அவர்கள் தரை தளத்தை அடைந்து, அவன் தனது ஆபீஸ் ரூம், இரண்டு படுக்கை அறைகள் மற்றும் ஒரு ஹோம் தியேட்டரை அவளுக்குக் காட்டினான்.
“ நீங்க செலெக்ட் பண்ற எல்லாத்துலையும் உங்களுக்கு ஒரு ரசனை இருக்கு கெட்சப். எல்லாத்தையும் சூப்பரா பிளான் பண்ற விதம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. நம்ம வீடு எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று சொல்லி மைரா அவனை நோக்கி திரும்பிய போது கேஷவ் கையில் ஒரு பெட்டியுடன் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தான்.
“ நமக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்ன ப்ரொபோஸ் பண்ணும் போது என்னால உனக்கு மோதிரம் கொடுக்க முடியல. அப்புறம் என்னோட லவ் உன்கிட்ட சொல்லி ப்ரொபோஸ் பண்ணும் போதும் இந்த மோதிரத்த உனக்கு கொடுக்க முடியல. நாம நாம் வீட்ல இப்போ நம்ம வாழ்க்க பயணத்த தொடங்கி இருக்கோம், இத விட ஒரு நல்ல நாள் இருக்க முடியாது. ஐ லவ் அம்மு. மோதிரத்த போடட்டுமா ? “ என்று கேஷவ் கேட்டான்.
“ நீங்க மோதிரங்கள வாங்கி கொடுத்துட்டே இருக்கீங்க, இப்போ அதையெல்லாம் போட எனக்கு இன்னும் விரல்கள் தேவ “ என்று சொல்லி மைரா புன்னகைத்தபடி தன் கையை நீட்ட, கேஷவ் தங்கள் திருமணத்தை நிறைவு செய்ததன் நினைவாக அவளுக்கு பரிசளித்த மோதிரத்தை கழற்றி அந்த விரலில் புதிய மோதிரத்தை அணிவித்தான்.
பட்டாம்பூச்சி சிறகுகளில் வைரம் இருந்த மோதிரத்தை பார்த்து மைரா வாவ் என்று முணுமுணுத்தாள், இப்போது அவள் முன் நின்று கொண்டிருந்த கேஷவைப் பார்த்து, “ இந்த மோதிரம் ? “ என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.
“ இது தான் நான் உன்ன ப்ரபோஸ் செய்ய வாங்கின மோதிரம், ஒருவழியா இன்னைக்கு உனக்கு கொடுக்க முடிஞ்சுது “ என்று சொன்னான். பின்னர் அவளை பார்த்து, “ நம்ம வீட்ல ஏதாவது மாத்தணும்னு ஆசையா இருக்கா ? “ என்று அவளிடம் கேட்டான்.
“ இல்ல, இது என் கெட்சப் மாதிரி எல்லாமே சரியா இருக்கு. நீங்க செலெக்ட் பண்ணி இருக்க எல்லாமே எனக்கு புடிச்சு இருக்கு “ என்றாள் மைரா.
“ இப்ப கொல்லைப்புறம் போகலாம் “ என்று கேஷவ் சொல்ல, அவர்கள் கொல்லைப்புறத்தை அடைந்தனர், மைரா அங்கு இருந்த ரோஜா தோட்டத்தைப் பார்த்து வியந்து போனால். அதோடு அங்கு ஒரு கொட்டில் இருப்பதை பார்த்து அதை நோக்கி நடந்தாள்.
ஷிஷிமாரு என்ற பெயரைக் கண்டு புன்னகைத்தவள், குனிந்து கொட்டிலைப் பார்த்தாள். ஒரு அழகான நாய்க்குட்டி ஒரு கூடையில் சுருண்டு கிடந்தது. தன் அருகில் குனிந்து நின்ற கேஷவைப் பார்த்தாள் மைரா. நாய்க்குட்டியைத் தூக்கி அவள் கைகளில் வைத்தான். மைரா அதன் தலையைத் தடவியபடி புன்னகையுடன் கேஷவைப் பார்த்தாள்.
“ உன்னையும் க்ரிஷையும் நாய் துரத்தின நாள் உனக்கு ஞாபகம் இருக்கா ? அன்னைக்கு நீ ஒரு நாய்க்குட்டிய எடுத்து அதுக்கு ஷிஷிமாருனு பெயர் வைக்கலாமானு கேட்ட. அன்னைக்கு என்னால உனக்கு கொடுக்க முடியல ஆனா இனி நீ என்ன கேட்டாலும் என்னால வாங்கித் தர முடியும் “ என்று கேஷவ் சொன்னதும், “ என்ன கிஸ் பண்ணுங்க கேஷவ் “ என்றாள் மைரா.
கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி முத்தமிட ஆரம்பித்தான். நாய்க்குட்டி குரைப்பதைக் கேட்டதும் அவர்கள் முத்தமிடுவதை நிறுத்தினர்.
“ ஷிஷிமாரு, நான் மைரா, உன்னோட ப்ரெண்ட. நீயும் எனக்கு ப்ரெண்டா இருப்பியா ? “ என்று மைரா கேட்க, ஷிஷிமாரு குரைத்துக் கொண்டே வாலை ஆட்டியது. கேஷவ் ஷிஷிமாருவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தான்.
“ நாம் இல்லாத நேரத்துல செக்யூரிட்டி இவனுக்கு சாப்பாடு கொடுப்பாரு, தோட்ட வேலை செய்றவரு வாக்கிங் கூட்டிட்டு போவாரு “ என்று கேஷவ் கூறினான்.
“ எனக்கு இப்போ உங்க மேல பொறாமையா இருக்கு. நான் உங்கள லவ் பண்றத விட நீங்க எப்படி என்ன அதிகமா லவ் பண்ணலாம் ? உங்கள மாதிரி நானும் உங்கள லவ் பண்ண விரும்புறேன் “ என்று மைரா சொல்ல கேஷவ் சிரித்தான்.
“ லவ் பண்ணும் போது அதுல அளவு எதுவும் இல்ல அம்மு. நான் உன் கூட இருக்கும் போது என் இதயம் எப்படி சந்தோஷத்துல படபடக்குதோ அதே மாதிரி உனக்கும் இருக்கும் அதனால நாம எல்லாத்துலையும் சமமா தான் இருக்கோம் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.
மைரா ஷிஷிமாருவை மீண்டும் அதன் கூடையில் வைத்த பிறகு இருவரும் மீண்டும் வீட்டுக்குள் சென்றனர்.
“ என்கிட்ட ஒரு சாவி இருக்கு, இன்னொரு சாவி நீ வெச்சுக்கோ. தோட்டத்த பராமரிக்க ஒரு தோட்டக்காரர், வீட்ட சுத்தம் செய்ய ஒரு வேலை ஆள் இருக்காங்க. மத்த வீட்டு வேலை செய்ய இன்னொரு ஆள் வேணும்னா வேலைக்கு வைக்கலாம் “ என்று கேஷவ் சொல்ல, “ தேவையில்ல. அத நாம பார்த்துக்கலாம். எனக்கு இங்கேயே தங்கனும் போல இருக்கு ஆனா நாம வீட்டுக்கு போய் ஏற்பாடுகள பார்ப்போம் “ என்றாள் மைரா.
கேஷவ் சரி என்று சொல்லி அவளை வீட்டில் விடும் முன் காலை உணவை சாப்பிட ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றான்.
******************************************
முன்னோட்டம்:
அண்ணா எனக்கு போன் பண்ணி வீட்டுல யாருக்கும் தெரியாம உடனே சந்திக்கணும்னு சொன்னாரு. அவர் ரொம்ப கோவமா பேசினாரு. ஏதோ மோசமான விஷயம் நடந்த மாதிரி தெரியுது. நீ சீக்கிரம் கிளம்பு நான் கார் வெளிய எடுக்குறேன்

1 comment
[…] […]