Home Family91. ஐ லவ் யூ நைனா

91. ஐ லவ் யூ நைனா

by Siragugal Novels
8 views

கதவைத் திறந்த மைரா நைனா கவலையுடன் நிற்பதைக் கண்டாள். நைனா உள்ளே நுழைந்து மைராவை இழுத்து கட்டிலில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்தாள்.

“ என்ன ஆச்சு நைனா ? எதுவும் பிரச்சனையா ? “ என்று மைரா கேட்டதும், “ மைரா ஒரு பிரச்சன வந்துடுச்சு. அந்த மர்ம பாடகர்… அவர் தான் பிரச்சினை. உன்னோட உணர்ச்சிகள் அவர் கூட  பொருத்தமா இருக்குனு நீ சொன்ன அப்போ நான் உன்ன நம்பல, ஆனா இப்போ நான் உன்ன நம்புறேன் மைரா. நேத்து நைட்டு நீ ஒரு பாட்டு போட்ட அப்புறம் இப்போ அவர் ஒரு கவர் சாங் போட்டு இருக்காரு, நீ அத உடனே பாரு “ என்று சொல்லி நைனா கதவை மூடினாள்.

மைரா தனது மொபைலில் கேஷவிடம் இருந்து கவர் பாடல்  அறிவிப்பைப் பார்த்து, “ “ இந்த பாட்டு போட அவர் எப்போ எழுந்தாரு ? “ என்று மனதில் நினைத்தபடி பாடலை கேட்க தொடங்கினாள்.

கேசவ்:

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…

வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட…
ஜீவன் உன்னை சேர்ந்திடும்…

தேனிலவு நான் வாழ
ஏன் இந்த சோதனை…

வான் நிலவை நீ கேளு
கூறும் என் வேதனை…

என்னைத்தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ

மைரா தன் உதடுகள் புன்னகையில் வளைவதைத் தடுக்க உதட்டைக் கடித்துக் கொண்டு அதிர்ச்சியுடன் நைனாவைப் பார்த்தாள்.

“ உனக்கும் அதிர்ச்சியா இருக்கு தானே ? பாரு, நான் எழுந்த உடனே அவரோட பாட்டு கேட்டு இப்படி தான் அதிர்ச்சியானேன். மைரா, இந்த மனுஷன பத்தி உன் புருஷன் கிட்ட சொல்றது தான் நல்லது. அவர் உண்மையிலேயே உன்ன follow பண்றதா இருந்தா என்ன செய்றது ? “ என்று நைனா சொன்னாள்.

“ நீ சொல்றது சரி தான் நைனா, நான் உடனே கெட்சப் கிட்ட பேசுறேன். நீ போய் ரெடியாகு, நான் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வரேன் “ என்று என்று மைரா கூறியதும், நைனா அறையை விட்டு வெளியேறினாள்.

மைரா அறையைச் சுற்றி சுழன்று நடனமாடி கேஷவை அழைத்தாள். அவன் காலை காபியை உறிஞ்சியபடி பதிலளித்தான்.

“ ஐ லவ் யூ கெட்சப். நீங்க காலையிலேயே சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க. இப்போ சொல்லுங்க இப்போ எப்படி இருக்கீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ நீ சிரிக்குறத பார்த்த அப்புறம் நல்லா இருக்கேன் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

“ உங்க பாட்டு என்னோட பாட்டுக்கு ஒத்து போறத பார்த்துட்டு நைனா ஷாக் ஆயிட்டா. மர்ம பாடகர பத்தி நான் உங்ககிட்ட புகார் செய்யனும்னு அவ விரும்புறா “ என்று மைரா சொல்ல, “ புகார் ஏத்துக்கிட்டேன், அவனை நான் எப்படி தண்டிக்கணும் ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.

“ அவர நான் தண்டிக்குறேன், என்கிட்டே கூட்டிட்டு வாங்க “ என்று சொல்லி மைரா கண்ணடித்ததும் கேஷவ் கழுத்தை தடவிக் கொண்டு புன்னகைத்தான். அவர்கள் அழைப்பை துண்டித்து தங்கள் வேலைகளைத் தொடரும் முன் சில நிமிடங்கள் பேசினர். தான் நைனாவுடன் ஷாப்பிங் செல்லத் திட்டமிட்டிருப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பிவிட்டு அன்றைய நாளுக்குத் தயாரானாள்.

கேஷவ் தனது மீட்டிங் மற்றும் வேலைகளால் பிஸியாக இருந்தாலும் மைரா தன்னை அழைக்கும் வரை காத்திருந்தான். மதியம் அவள் களைத்த குரலில் அவனை அழைத்தாள்.

“ உன் குரல் ஏன் ரொம்ப டயர்டா இருக்கு அம்மு, வீடியோ கால் ஆன் பண்ணு “ என்று கேஷவ் சொன்னதும், “ நான் சோர்வா இருக்கேன் கெட்சப். என்ன தூங்க விடுங்க, நேரத்துக்கு சாப்பாடு சாப்பிடுங்கன்னு சொல்ல கூப்பிட்டேன், நான் எழுந்ததும் அப்புறம் கூப்பிடறேன் “ என்று மைரா சொன்னதும், “ நீ சீக்கிரம் திரும்பி வந்துருக்கணும் அம்மு, ஏன் இவ்ளோ களைப்பா இருக்க ? சரி இப்போ ரெஸ்ட் எடு, நீ எழுந்ததும் எனக்கு போன் பண்ணு “ என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு தனது பணியை தொடர்ந்தான்.

மீதமுள்ள நாள் அவனுக்கு பரபரப்பாக இருந்தது, அதனுடன் சேர்த்து அவன் மைராவுடன் பேச முடியவில்லை என்பதால் அவனது நாளை ஏற்கனவே இருந்ததை விட மோசமாக்கியது. அவளது அழைப்பிற்காகவோ, மெசேஜுக்காகவோ மொபைலை பார்த்துக் கொண்டே வீட்டுக்கு சென்றான். அவன் அவளை அழைக்க விரும்பினான் ஆனால் அந்த யோசனைக்கு எதிராக முடிவு செய்து வீட்டை அடைந்தான். செக்யூரிட்டி அவனுக்கு சல்யூட் அடித்துவிட்டு புன்னகையுடன் முன்னால் வந்தார்.

“ சார், சமையல்காரருக்கு உடம்பு சரியில்ல, அதனால அவர் ஹாஸ்பிடல் போய் இருக்காரு. அவரோட தங்கச்சி காலையில அவர சந்திக்க வந்திருந்தாங்க. அவங்க உங்களுக்காக சமைச்சு இருக்காங்க. அவர் ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடுவாரு “ என்று செக்யூரிட்டி சொன்னதை கேட்டதும், “ அவர் தங்கச்சி எனக்கு சமைக்க நீங்க அனுமதி கொடுத்தீங்களா ? என்னால எனக்கு சமைக்க முடியும். அவர் இங்க வந்த உடனே அவங்கள கூட்டிட்டு போக சொல்லுங்க “ என்று கேஷவ் கோவமாக சொன்னான்.

செக்யூரிட்டி சரி என்று முணுமுணுக்க, கேஷவ் உள்ளே நுழைந்தான். கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட காக்ரா சோளி அணிந்து மற்றும் முகத்தை மறைக்கும் முக்காடு கொண்ட ஒரு பெண்ணை அவனது கண்கள் கண்டன. அவனுக்கு டீப்பாயில் தண்ணீர் வைத்துவிட்டு அந்த பெண் சமையலறைக்கு நடந்தாள். அவள் சமையலறையிலிருந்து வெளியே வந்து உணவை மேஜை மீது வைத்தாள், அப்போது அவள் கையில் இருந்த உலோக வளையல்கள் அவளது செயல்களுக்கு கிரீச்சிட்டன.

அவள் தரையில் விழுந்த முள்கரண்டியை எடுக்க குனிந்தபோது அவள் இடுப்பில் இருந்த மடிப்பைப் பார்த்து கேஷவ் விழுங்கினான். அவன் கையைக் கழுவிவிட்டு இரவு உணவு சாப்பிட உட்கார்ந்தான், ஆனால் அவன் கண்கள் அவளது ஒவ்வொரு செயலையும் கவனித்தன. அந்த பெண் அவன் அருகில் நின்று சப்பாத்தி மற்றும் குருமாவை அவனது தட்டில் பரிமாறினாள்.

கேஷவ் தன் அருகில் இருந்த தட்டில் இருந்த ஸ்பூனை எடுக்க கையை நீட்ட, அவனது விரல்கள் அவள் அடிவயிற்றை உரசியது. உடனே அந்த பெண் ஒரு அடி பின்னால் நகர்ந்து கேஷவ் அவனுக்காக தண்ணீர் ஊற்றுவதைப் பார்த்தாள். இரவு உணவின் சுவைக்கு ஏற்ப முனகியபடி அவன் மெதுவாக சாப்பிட்டு, விரல்களை லாவினான்.

ஒருவழியாக அவன் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெண் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவன் அவளைக் கடந்து சென்ற போது அவனது கை அவளை பின்னால் உரசியதும் அவள் மூச்சிரைத்தாள். கேஷவ் துண்டால் கைகளைத் துடைத்துக் கொண்டு அவள் முன் நின்றான்.

“ உங்க கையில ஏதோ மேஜிக் இருக்கு. என் மனைவி அவங்க friend கூட ஷாப்பிங் போனதுல சோர்வா இருந்தாங்க அதனால என்னால அவங்க கூட நாள் முழுக்க பேச முடியலனு நான் வருத்தப்பட்டேன், ஆனா இப்போ நீங்க சமைச்சத சாப்பிட்ட அப்புறம் நான் சொர்க்கத்துல இருக்க மாதிரி உணர்றேன். ரொம்ப நன்றி. இந்த சமையலுக்கு உங்களுக்கு நிச்சயமா ஏதாவது பரிசு கொடுக்கணும். என்ன நம்புங்க, நான் உண்மையான டின்னர் சாப்பிடும் போது உங்களுக்கு உண்மையான சொர்கத்த காட்டுவேன் “ என்று கேஷவ் சொன்னதும் அந்த பெண் அவள் பாவாடையை கசக்கி பிடித்துக் கொண்டாள்.

அப்போது சமையல்காரர் வீடு திரும்பி, “ ஸாரி சார், எனக்கு உடம்பு சரியில்லாததால நான் போக வேண்டியதா போச்சு “ என்று அவர் சொல்ல, “ பரவாயில்ல, உங்க தங்கச்சி சமைச்ச சாப்பாடு எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு. சொல்ல போனா, அவங்க சமையலுக்காக அவங்கள நான் கல்யாணம் பண்ணலாம் நினைக்குறேன். அதனால நீங்க கிளம்புங்க, என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்க தங்கச்சி கிட்ட நான் கேட்டுக்குறேன் “என்று கேஷவ் கூறினான்.

சமையல்காரர் அதிர்ச்சியடைந்து, “ ஆனா சார்? “ என்று சொல்ல, அவரை மேலும் பேச விடாமல் கேஷவ் அவரை வெளியே அனுப்பி கதவைத் தாழ்ப்பாள் போட்டான். அவன் சமையலறைக்குச் சென்று ஒரு கிண்ணத்தில் ஐஸ்கிரீமை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் முன் மண்டியிட்டான்.

“ என்னால உனக்கு மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ண முடியல ஆனா உனக்கு இந்த ஐஸ்கிரீம் புடிக்கும்னு நம்புறேன். என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா ? “ என்று கேஷவ் கேட்டதும் அந்தப் பெண்ணின் நெஞ்சு விம்மியது. கேஷவ் புன்னகையை அடக்க உதட்டை கடித்துக் கொண்டு கிண்ணத்தை மேஜை மீது வைத்துவிட்டு அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான். அவள் அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றாள், ஆனால் அவன் அவளைச் சுற்றி தனது பிடியை இறுக்கினான்.

“ நீ உடனே என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பனு நெனச்சேன் “ என்று சொல்லி முகத்திரையை விலக்கி அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பினான். மைராவுக்கு கோபம் வர, கேஷவ் அவள் உதட்டின் ஓரத்தில் முத்தமிட்டான்.

“ நான் தான்னு அடையாளம் தெரிஞ்சு தான் என்ன கிண்டல் பண்ணீங்களா ? “ என்று மைரா கேட்க கேஷவ் அவள் உதட்டில் விரலை வைத்து அவள் இடுப்பை பிடித்து இழுத்து சிரித்தான்.

“ உன்ன பார்த்த உடனேயே அது நீ தான்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு.  உன் உயரம், உடம்பு, உன் இடுப்பு மடிப்பு எனக்குத் தெரியாதுனு நெனச்சியா ? உன் உயரம், எடை, இந்த அழகான கைகள், இந்த விரல்கள்ல இருக்க மோதிரம், இந்த வயிறு, அப்புறம்  லட்சக்கணக்கான பொண்ணுங்க நடுவுல நீ இருந்தா கூட என் இதயம் உன்ன அடையாளம் கண்டுபுடிக்கும். வேற யாரோனு நெனச்சு உன்ன தொட்டேன்னு நினைச்சியா ? “ என்று கேஷவ் சொன்னதும், “ இல்ல, உங்கள எனக்கு நல்லா தெரியும். உங்களுக்கு  35 வயசு இருக்கும் போது கூட என்ன தவிர வேற ஒரு பொண்ண உங்களால பார்க்க முடியல, அதனால எப்படி உங்கள நம்பாம இருக்க முடியும்” என்றாள் மைரா.

“ அப்போ நான் உன்ன கிண்டல் பண்ண ஆரம்பிச்ச உடனே ஏன் உன் முகத்த காட்டல ? “ என்று கேஷவ் கேட்க, “ நீங்க எவ்ளோ தூரம் என்ன கிண்டல் பண்றீங்கனு பார்க்க வெயிட் பண்ணேன். நீங்க ரொம்ப மோசம்.” என்று சொல்லி மைரா வெளியேற முயன்றாள், ஆனால் கேஷவ் அவளை உட்கார வைத்து இரவு உணவை பரிமாறினான்.

“ நீ நடிக்குறத நிறுத்திட்டு என் மடியில உட்கார்ந்து சாப்பிட வருவனு நான் ரொம்ப பொறுமையா சாப்பிட்டேன் ஆனா நீயும் பிடிவாதமா இருந்த “ என்று கேஷவ் கூறினான்.

மைரா வாயைத் திறக்க கேஷவ் அவளுக்கு உணவளிக்கத் தொடங்கினான். அவள் சாப்பிட்டு முடித்ததும் அவளைத் தூக்கிக்கொண்டு போய் மடியில் வைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.

“ நீ எப்படி இங்க வந்த ? தனியா வந்தியா ? “ என்று கேஷவ் கேட்க, “ யாராவது என் கூட துணைக்கு கூட்டிட்டு வர நான் ஒன்னும் குழந்த இல்ல கெட்சப். நீங்க ரொம்ப டென்ஷனா இருந்தீங்க,  உங்களுக்கு நான் தேவைனு தெரியும் அதனால நான் வருண் கிட்ட  சொல்லி ஏர்போர்ட்ல இருந்து என்ன இங்க கூட்டிட்டு வர சொன்னேன். நான் உங்கள சர்ப்ரைஸ் பண்ண நெனச்சேன் அதனால இந்த ரகசியத்த உங்க கிட்ட சொல்ல வேணாம்னு அவர் கிட்ட சொன்னேன். இந்த திட்டத்துல அவர் தான் எனக்கு உதவி பண்ணாரு “ என்று மைரா பதில் கூறினாள்.

அவள் வார்த்தைகளை கேட்டு, “ உண்மையிலேயே இது ஒரு இன்ப அதிர்ச்சி தான். எனக்கு சர்ப்ரைஸ் ரொம்ப புடிச்சு இருக்கு பொண்டாட்டி “ என்று சொல்லி புன்னகைத்த கேஷவின் விரல் அவள் அணிந்திருந்த ப்லௌசின் மார்பின் மேலே இருந்த கண்ணாடியை தடவ, மைரா அவனை முறைத்தபடி அவன் கையை தள்ளினாள்.

“ என்ன ? நான் கண்ணாடிய பார்த்துட்டு இருந்தேன், அது நல்லா இருக்கு “என்று கேஷவ் சொல்ல, “ நான் போட்டு இருக்க டிரஸ் முழுக்க கண்ணாடி இருக்கு ஆனா உங்க கண்ணு அங்க இருக்க  கண்ணாடிய மட்டும் தான் பார்த்துச்சா ? “ என்று மைரா கேட்க, “ அது என் முகத்துக்கு நேரா இருந்துச்சு அம்மு, நீ ரொம்ப அழகா என்ன மயக்குற “ என்று ஹஸ்கி குரலில் கூறினான்.

அவன் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் செல்லும் போது அவளுடைய வெற்று வயிற்றில் உதடுகளை பதித்து ஊதினான்.

“ நான் நேரத்த வீணடிக்க விரும்பல, அதனால் பூட்டி இருந்த அலமாரி ரூம் தவிர வீட்ட சுத்தி பார்த்துட்டேன் “ என்று மைரா சொல்ல, “ நான் யாரையும் அலமாரி இருக்க ரூமுக்குள்ள விடமாட்டேன் அதனால எப்பவும் பூட்டி வைப்பேன் “ என்று சொன்னான்.

சாவியால் அலமாரி இருந்த அறை கதவை திறந்து இருவரும் உள்ளே நுழைந்தார்கள். அவன் அலமாரியைத் திறந்ததும் மைரா அதன் உள்ளே தனது உருவப்படத்தைத் தொட்டாள்.

“ உன்ன பத்தி யாருக்கும் தெரியக் கூடாதுனு நெனச்சேன் அதனால நான் யாரையும் இங்க அனுமதிக்க மாட்டேன் “ என்று கேஷவ் கூறினான்.

அவர்கள் படுக்கையில் படுத்ததும் அவன் இல்லாத நேரத்தில் நடந்த எல்லாவற்றையும் பற்றி அவள் உளறுவதைக் கேட்டான். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் போல ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தனர். அந்த அறை முழுவதும் அவர்களின் முனகல் மட்டுமே நிரப்பியது. மைரா வார இறுதி நாட்களை கேஷவுடன் சுற்றிப் பார்ப்பதிலும் ஷாப்பிங் செய்வதிலும் கழித்தாள். ஞாயிற்றுக்கிழமை மாலை கேஷவ் அவளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ததும் மைரா அன்றிரவு சென்னை திரும்பினாள்.

நைனாவும் மைராவும், மைராவின் டெல்லி பயணத்தைப் பற்றி இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தனர்.

நைனாவும் க்ரிஷும் டாக்டரைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் இருந்ததால் அடுத்த நாள் மைரா தனியாக அகாடமிக்கு காரில் சென்றாள். பிற்பகலில் நைனா ஒரு விபத்தில் சிக்கியதாக அர்ச்சனாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்ததும் அவள் மருத்துவமனைக்குச் சென்று அவர்களின் பெற்றோர்கள் அனைவரும் அவசர அறைக்கு வெளியே காத்திருப்பதைக் கண்டாள். க்ரிஷ் உறைந்து போய் நின்று கொண்டிருந்தான். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நைனாவின் தாயை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னாள்.

“ அவ நல்லா இருப்பா அம்மா தைரியமா இருங்க “ என்று சொன்னாள்.

க்ரிஷைப் பார்த்ததும் மைராவுக்கு வருத்தமாக இருந்தது. அவள் அவன் தோளைத் தொட்டதும் க்ரிஷ் மைராவைப் பார்த்தான், ஆனால் எதுவும் பேசவில்லை.

“ அவளுக்கு ஒன்னும் ஆகாது க்ரிஷ் “ என்று மைரா மெல்ல சொன்னாள் ஆனால் அவன் ஒன்றும் சொல்லவில்லை, எந்த எதிர்வினையும் செய்யவில்லை. மைரா அர்ச்சனாவிடம் சென்று டாக்டர் வேலயே வர காத்திருந்தாள். கதவு திறந்ததும் க்ரிஷ் டாக்டரிடம் விரைந்து, “ என் மனைவி எப்படி இருக்காங்க? “ என்று என்று பதற்றத்துடன் கேட்டான்.

“ வலது முன்கையில் எலும்பு முறிவு அப்புறம் நெத்தியில சின்ன  காயம் தவிர அவங்க நல்லா இருக்காங்க. அவங்களுக்கு நிறைய ரெஸ்ட் வேணும். அவங்களுக்கு சுயநினைவு திரும்பியதும்  வார்டுக்கு மாத்துவோம் “ என்று டாக்டர் கூறினார்.

க்ரிஷ் அவசர அறைக்குள் செல்ல மற்றவர்கள் அவனை பின்தொடர்ந்தனர். அவர்கள் நைனா மயக்க நிலையில் இருப்பதை கண்டனர். க்ரிஷை அவளுடன் இருக்குமாறு விட்டுவிட்டு அனைவரும் கிளம்பினர். நைனா கண்விழித்த போது அவள் வார்டுக்கு மாற்றப்பட்டு இருந்தாள், எல்லோரும் உடனே அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

“ இது எப்படி நடந்துச்சு நைனா? “ என்று அர்ச்சனா கேட்க, “ க்ரிஷ் எனக்காக ஐஸ்கிரீம் வாங்க போனான் ஆனா என்னால பொறுமையா இருக்க முடியல, அதனால அவன் கிட்ட போக ரோடு கிராஸ் பண்ணேன். ஒரு பைக் என் மேல மோதிடுச்சு ஆனா அது என் தப்பு தான், நான் திடீர்னு கிராஸ் பண்ணுவேன்னு அவர் எதிர்பார்க்கல “ என்று நைனா பதில் சொன்னாள்.

“ முட்டாள், நீ வீட்டுக்கு போன அப்புறம் ஆர்டர் பண்ணி இருக்க வேண்டியது தானே இல்ல எனக்கு போன் பண்ணி இருந்தா நான் வரும் போது வாங்கிட்டு வந்துருப்பேன் “ என்று மைரா கோவத்தில் திட்டினாள்.

“ அது விபத்து மைரா, இது நடக்கும்னு எனக்கு எப்படித் தெரியும்? “ என்று நைனா சொன்னதும் க்ரிஷ் வெளியேற, க்ரிஷிடம் பேச விரும்புவதால் அனைவரையும் வெளியே அனுப்புமாறு நைனா மைராவிடம் சைகை செய்து கெஞ்சினாள்.

“ அம்மா, நான் இங்க இருந்து இவள பார்த்துக்குறேன். நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் நைட்டு தங்க ட்ரெஸ் எடுத்துட்டு வாங்க அப்புறம் சாப்பாடும் கொண்டு வாங்க “ என்று மைரா சொன்னதும் எல்லோரும் கிளம்ப, அவள் நைனாவின் அருகில் அமர்ந்து அவள் தலைமுடியை வருடினாள்.

“ இனிமே கவனமா இரு நைனா, ப்ளீஸ் “ என்று மைரா கவலையுடன் சொல்ல, “ ஹ்ம்ம் சரி, க்ரிஷ் எப்படி இருக்கான்? அவன் ஏன் என்ன பார்க்க வரல? “ என்று நைனா கேட்டாள்.

“ அவன் பித்து புடிச்ச மாதிரி இருந்தான், அவன ஆறுதல்படுத்த நான் அவன் கிட்ட பேசினேன், ஆனா அவன் பதில் எதுவும் பேசவே இல்ல. நான் போய் அவனை உள்ள அனுப்பி வைக்குறேன் “ என்று  சொல்லி மைரா வெளியே சென்று பார்த்த போது க்ருஷ் இன்னும் அதே நிலையில் இருந்தான்.

“ க்ரிஷ், நைனா உன்ன பார்க்க விரும்புறா. நான் இங்கேயே வெயிட் பண்றேன், நீ போய் அவ கிட்ட பேசு “ என்று மைரா சொன்னதை கேட்டு அவன் தலையை அசைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். நைனா அவனைப் பார்த்து புன்னகைத்தாள், அவன் அவள் படுக்கைக்கு அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்து அவள் கையைப் பிடித்தான்.

“ நீ சோகமா இருக்க, ஆனா கண்ணீர் இருந்த மாதிரி அடையாளம் எதுவும் இல்ல, அப்போ நீ எனக்காக அழலையா? இப்போ நீ என்ன உன் ப்ரெண்டா நினைப்பனு நெனச்சேன் ஆனா நான் தப்பா யோசிச்சிட்டேன் போல. எந்த பிரச்சனையும் இல்ல, நான் உனக்கு  முக்கியமானவனு நீ நினைக்குற வரை நான் பின்வாங்க மாட்டேன், வெயிட் பண்ணிட்டு தான் இருப்பேன் “ என்று நைனா சொன்னதும்  க்ரிஷ் கட்டிலுக்கு நகர்ந்து அவளுக்கு எதிரே உட்கார்ந்து அவள் காதுக்கு பின்னால் ஒரு முடி கற்றையை நகர்த்தினான். அசைத்தான்.

“ இதே சம்பவம் இதுக்கு முன்னாடி நடந்தது உனக்கு ஞாபகம் இருக்கா ? அன்னைக்கு மைராவோட 16வது பிறந்த நாள், நாம  மூணு பேரும் ஐஸ்கிரீம் பார்லர் போனோம். ஒரு பைக் அவ மேல மோதிடுச்சு. நான் அன்னைக்கு ரொம்ப அழுதேன், ஏன்னா நான் அவள இழக்க விரும்பல, அவளுக்கு எதுவும் நடக்கக்கூடாதுனு  கடவுள் கிட்ட பிரார்த்தன பண்ணேன். இன்னைக்கும் அது தான் நடந்துச்சு ஆனா நீ மைராவோட இடத்துல இருந்த. என்னால அழ முடியல, ஏன்னா நீ நல்லா இருப்ப, எனக்காக தைரியமா மீண்டு வருவனு எனக்குத் தெரியும், நீ எப்பவும் என் பக்கத்துல இருப்பனு சத்தியம் பண்ணி இருக்க. நீ என்ன மறுபடியும் தனியா விட மாட்டனு எனக்குத் தெரியும் “ என்று க்ரிஷ் சொல்ல, அவனது வார்த்தைகளைக் கேட்டு நைனாவின் கண்கள் பனித்தன, அவள் நிமிர்ந்து உட்கார்ந்து தன் உள்ளங்கையால் அவன் கன்னத்தைத் தொட்டாள்.

“ அந்த நேரம் உனக்கு என்ன தோணுச்சு ? என்ன உணர்ந்த ? எனக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன செய்றது ? நான் உனக்கு முக்கியமா? “ என்று நைனா மெல்ல அவனிடம் கேட்டாள்.

“ அந்த உணர்வ எப்படி சொல்றதுனு எனக்குத் தெரியல ஆனா உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் உயிரோட இருக்க எந்த காரணமும் இல்ல. நீ தான் எனக்கு வாழ நம்பிக்கைய கொடுத்த, என் வாழ்க்கைய சந்தோஷமா மாத்துன, நீ எனக்கு ரொம்ப  முக்கியமானவ, நீ இல்லாமல நான் செத்துருப்பேன். முதல் முறையா ஒருத்தர் இல்லாம என்னால வாழ முடியாதுனு உணர்ந்தேன், அது நீ தான் நைனா. எனக்கு பயமா இருந்துச்சு.. நீ கண் விழிக்குற வரை பயமா இருந்துச்சு “ என்று சொல்லி அவன் அவளைக் கட்டிப்பிடித்து தன் மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டினான். நைனா அணைப்பிலிருந்து பின்வாங்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“ ஐ லவ் யூ க்ரிஷ் “ என்று சொல்லி நைனா தன் உதடுகளை அவன் உதடுகளில் பதித்து முத்தமிட்டாள். க்ரிஷ் அதிர்ச்சியில் உறைந்து போனவன் போல இருந்தான் ஆனால் அதிலிருந்து வெளியே வந்து அவனும் அவளை முத்தமிட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்தபோது அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மூச்சு விட முடியாமல் இருவரும் முத்தமிடுவதை நிறுத்த, க்ருஷ் தன் நெற்றியை அவளது நெற்றியால் அழுத்தினான்.

“ ஐ லவ் யூ நைனா, நான் சொல்றத நம்ப கஷ்டமா இருக்கலாம், ஆனா நான் உன் நம்பிக்கைய ஜெயிப்பேன், என் லவ் உண்மைனு நிரூபிப்பேன். காதலையும், ஈர்ப்பையும் வேறுபடுத்திப் பார்க்குற அளவுக்கு எனக்கு பக்குவம் இருக்கு. நான் உன்ன லவ் பண்றேன், ப்ளீஸ் என்ன நம்பு, என்ன தனியா விடாத “ என்று க்ரிஷ் அழுதான்.

“ நான் உன்ன நம்புறேன் க்ரிஷ், நான் உன்ன ஒருநாளும் தனியா விட மாட்டேன். இந்த ஆக்ஸிடென்ட் ஒரு வகையில நமக்கு நல்லது தான் பண்ணி இருக்கு. நாம லவ் பண்றத மனசு விட்டு சொல்லிட்டோம், மைரா உன் கிட்ட பேசிட்டா “ என்று நைனா புன்னகையோடு சொல்ல, க்ரிஷ் சிரித்துக்கொண்டே அவளை தன் மார்போடு அணைத்து அவள் தலை முடியில் முத்தமிட்டான்.

*******************

முன்னோட்டம்:

“ நீ இங்க இருந்து போக நான் உதவி செய்றேன் ஆனா நீ ஒரு நாள்ல திரும்பி வரனும். என்னால ஒரு நாள் மட்டும் தான் சமாளிக்க முடியும் ரோஷினி “

                      அடுத்த அத்தியாயம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!